April 9, 2009

பிரியமான தோழிக்கு...!!!



என்னவென்று விவரிக்க இயலாத
ஏதோ ஒரு கணத்தில் எனக்கும்
உனக்குமான உறவு உருப்பெற்றது..!!

நாம் காதலர்கள் அல்ல..
இருந்தும்.. நம்
நட்பைக் காதலிக்கிறோம்..!!

எனக்குள் இருக்கும் உன்னை
உனக்குத் தெரியும்..
உனக்குள் இருக்கும் என்னை
எனக்குப் புரியும்..!!

வானம் அழுது தீர்த்த
ஒரு மாலை நேரத்தில்..
குடை மறந்த எனக்காய்
நீ நனைந்த நினைவுகளும்..

உன் சந்தோஷமும் துக்கமும்
என்னுடனாய் - பகிர்ந்து
கொண்ட சந்தர்ப்பங்களும்..

உன் அம்மா உன்னை
திட்டிய தினத்தன்று - என்
தோள் சாய்ந்து அழுத பொழுதுகளும்..

என் எல்லாப் பிறந்த நாளுக்கும்
முதல் மனுசியாய் நீ
சொன்ன வாழ்த்துக்களும்..

நான் அழுத போதெல்லாம்
கை படாமல் துடைத்த பாங்கும்..

தோழி..

நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..

நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..

ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!

(இந்தக் கவிதையின் கரு என்னுடையது அல்ல... எப்போதோ படித்த கவிதை ஒன்றின் வரிகள் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. அத்துடன் என்னுடைய வார்த்தைகளையும் கோர்த்து எழுதி இருக்கிறேன்...)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

76 comments:

நையாண்டி நைனா said...

mee the firstu

நையாண்டி நைனா said...

நல்லா இருக்கு.

புதியவன் said...

//நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..
நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..
ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!//

ஆண் பெண் நட்பின் இடையூறுகளை அழகாக
வார்த்தைகளில் கொண்டுவந்திருக்கிறீகள்...
முடித்திருக்கும் விதம் அருமை நண்பரே..

ராம்.CM said...

நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..


நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..


ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!! ///

என் மன‌திற்குள்ளும் ஓடும் வ‌ரிக‌ள்... ( ம‌ல‌ரும் நினைவுக‌ள் )

அழ‌கு....

*இயற்கை ராஜி* said...

நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..
நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..
ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!//

solla vaarthai illai...aaallgoo alagu

நையாண்டி நைனா said...

நம்ம பிளாக்குக்கு போங்க.... உங்களோட முந்திய பதிவு, இந்த பதிவு என்று எல்லாத்தையும்...."பாராட்டி" எழுதி இருக்கேன்.

குடந்தை அன்புமணி said...

ஆண்,பெண் நட்பை அங்கீகரிக்காத இந்த உலகத்தை நினைத்து அழும் உங்களை போலவே ஓராயிரம் பேர் இங்கு உண்டு. நான் உட்பட...! நன்றாக இருக்கிறது நண்பா!

லோகு said...

Nice Thala..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
நல்லா இருக்கு.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said..
ஆண் பெண் நட்பின் இடையூறுகளை அழகாக வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீகள்...முடித்திருக்கும் விதம் அருமை நண்பரே..//

கவிஞர் நீங்க வாழ்த்தும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா.. நன்றி..

Anonymous said...

ஜதார்த்தமான வரிகள் பாஸ்

அகநாழிகை said...

கார்த்தி,
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.

//என் எல்லாப் பிறந்த நாளுக்கும் முதல் மனுசியாய் நீ சொன்ன வாழ்த்துக்களும்.. //


அது சரி...
இது எப்படி முடியும்...

- பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
என் மன‌திற்குள்ளும் ஓடும் வ‌ரிக‌ள்... ( ம‌ல‌ரும் நினைவுக‌ள் )
அழ‌கு....//

வாங்க ராம்.. எல்லாருக்கும் இப்படி ஒரு நட்பு இருக்கும் என நம்புகிறேன்.. நன்றி

Anonymous said...

குடந்தைஅன்புமணி said...
ஆண்,பெண் நட்பை அங்கீகரிக்காத இந்த உலகத்தை நினைத்து அழும் உங்களை போலவே ஓராயிரம் பேர் இங்கு உண்டு. நான் உட்பட...! நன்றாக இருக்கிறது நண்பா!
///////
உலகத்திலா??? இல்லை எங்க சமூகத்திலா???

Anonymous said...

முடித்திருக்கும் விதம் கலக்கல்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
solla vaarthai illai..aaallgoo alagu//

நன்றி தோழி

Raju said...

ஆண், பெண் உறவு என்றாலே காதல் என முடிவு கட்டும் இச்சமூகத்தில் இதைப் போல நல்ல நட்புள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன...!

அழுதது அருமை பாண்டி அண்ணே...

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
நம்ம பிளாக்குக்கு போங்க.... உங்களோட முந்திய பதிவு, இந்த பதிவு என்று எல்லாத்தையும். "பாராட்டி" எழுதி இருக்கேன்.//

படிச்சுட்டேன் நண்பா .. நம்மள மதிச்சு எதிர்ப்பதிவு எல்லாம் போட்டிருக்கீங்க.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி..
ஆண்,பெண் நட்பை அங்கீகரிக்காத இந்த உலகத்தை நினைத்து அழும் உங்களை போலவே ஓராயிரம் பேர் இங்கு உண்டு. நான் உட்பட...! நன்றாக இருக்கிறது நண்பா!//

உணர்வுகள் பொதுவானவை நண்பா.. நாம் எல்லாருமே இந்த கஷ்டத்தை சந்தித்து இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் எழுதினேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
Nice Thala..//

நன்றி தோழரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
ஜதார்த்தமான வரிகள் பாஸ்//

யதார்த்தம்.. சரியா?..நன்றி கவின்..

பொன்.பாரதிராஜா said...

// வானம் அழுது தீர்த்த
ஒரு மாலை நேரத்தில்..
குடை மறந்த எனக்காய்
நீ நனைந்த நினைவுகளும்.. //

மழையில் (கவிதை) நனைந்ததைப் போல உணர்ந்தேன்...


// நான் அழுத போதெல்லாம்
கை படாமல் துடைத்த பாங்கும்..//

மீண்டும் நனைந்தேன்.


//நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..

நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..

ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!! //

அவள் ஆணாகவோ நீங்கள் பெண்ணாகவோ இருந்திருந்தால் இந்த நட்பு இருந்திருக்குமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
கார்த்தி, நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
//என் எல்லாப் பிறந்த நாளுக்கும் முதல் மனுசியாய் நீ சொன்ன வாழ்த்துக்களும்.. //
அது சரி...
இது எப்படி முடியும்...//

நன்றி நண்பா.. கவிஞர் கரெக்டா தப்பை கண்டு பிடிச்சுட்டீங்களே.. ஒரு ப்ளோல வந்திருச்சு.. விவரம் தெரிந்த நாள் முதலாய்னு மாத்திரலாமா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
உலகத்திலா??? இல்லை எங்க சமூகத்திலா??? முடித்திருக்கும் விதம் கலக்கல்!//

நம்ம சமூகத்தில் குறிப்பாக இந்த பிரச்சினை உண்டு நண்பா.. வாழ்த்துக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
ஆண், பெண் உறவு என்றாலே காதல் என முடிவு கட்டும் இச்சமூகத்தில் இதைப் போல நல்ல நட்புள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன...!
அழுதது அருமை பாண்டி அண்ணே.//

உண்மை நண்பா.. இதில் சமூகத்தின் தப்பும் உள்ளது.. நல்ல விஷயத்துக்குதானே அழுதோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// பொன். பாரதிராஜா said..
மழையில் (கவிதை) நனைந்ததைப் போல உணர்ந்தேன்...அவள் ஆணாகவோ நீங்கள் பெண்ணாகவோ இருந்திருந்தால் இந்த நட்பு இருந்திருக்குமா?//

வா பாரதி... நனைந்ததற்கு நன்றி.. நிச்சயம் நட்பிருக்கும்.. இப்போ பிரச்சினையே ரெண்டு பெரும் ஒரு பாலினத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதானே..

சொல்லரசன் said...

//அத்துடன் என்னுடைய வார்த்தைகளையும் கோர்த்து எழுதி இருக்கிறேன்//

வார்த்தையை மட்டுமா? இல்லை நாளை பிரியபோகும் நட்பையுமா?
உங்கள் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதையாக தோன்றுகிறது.

வினோத் கெளதம் said...

ஆண் பெண் நட்பின் சிக்கலை அழகாய் கவிதையாய் கொடுத்து இருக்கிறிர்கள் நண்பா.

ஆ.சுதா said...

கவிதை ஆனாகவும் வரிகள் பென்னாகவும் இரண்டும் நட்பாகவும்
உள்ளது. அருமை.
//தோழி..


நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..


நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..


ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!! //

கடைசிவரிகள் அற்த்தம் ததும்புகின்றன.

ஆதவா said...

நான் படிக்கும் உங்களின் முதல் கவிதை இது! நல்ல முயற்சி. நன்றாக இருக்கிறது.

சிலசமயம் ஆண் நண்பர்களுக்கும் இப்படி நிகழ்ந்துவிடுவது உண்டு!!! நாம் சந்திக்கும் பொழுது இது குறித்து பேசிக்கொண்டது நினைவிருக்கிறதா கார்த்திகைப் பாண்டியன்....

ஆணாய் பிறப்பதற்கு நீங்கள் அழவேண்டாம்.. பெண்ணாய் பிறந்திருந்தால் அழுது கொண்டிருப்பீர்கள்.....

வாழ்த்துக்கள்!!!!

தமிழ். சரவணன் said...

//ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!//

உண்மைதான் நானும் இதுபோல் இன்னமும் அழதுகொண்டிருக்கின்றேன்...
ஆணாய் பிறந்த பாவத்திற்காக...

Raju said...

\\உண்மை நண்பா.. இதில் சமூகத்தின் தப்பும் உள்ளது.. நல்ல விஷயத்துக்குதானே அழுதோம்..\\
அங்கேயும் பாருங்கள் ஆண்தான் அழுகிறான்..
இதைத்தான் ஆணாதிக்கம் என்கின்றனரோ...!
சும்மா டமாசுக்காக :‍-)

Anbu said...

அண்ணா ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது....
மிகவும் ரசித்தேன் அனைத்து வரிகளையும்..

Suresh said...

மச்சான் கார்த்தி பிண்ணிட்டே :-) சூப்பர்

//வானம் அழுது தீர்த்த ஒரு மாலை நேரத்தில்.. குடை மறந்த எனக்காய் நீ நனைந்த நினைவுகளும்..
உன் சந்தோஷமும் துக்கமும் என்னுடனாய் - பகிர்ந்து கொண்ட சந்தர்ப்பங்களும்//

:-) அருமையாய்

///நீ பெண்ணென்ற போர்வைக்குள் இருப்பதால்..
நம் நட்பென்னும் முகம் காட்ட இயலாதபோது..
ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!! /

ஒரு ஆணின் வலியை நச்சுனு சொல்லி இருக்கிங்க

spi said...

i have a real friend like this., really feeling very bad after reading this poetry., i miss my true friend a lot.,

குமரை நிலாவன் said...

நல்ல முயற்சி
கவிதை அருமை நண்பா .

//நீ பெண்ணென்ற போர்வைக்குள் இருப்பதால்..
நம் நட்பென்னும் முகம் காட்ட இயலாதபோது..
ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!! //

ஆண் பெண் நட்பில் இருக்கும்
சிக்கலை அழகாக
வார்த்தைகளில் சொல்லி இருக்கீங்க

Anonymous said...

நல்லா இருக்கு டா பாண்டிய.
நான் எதிர்பார்ததுல கொஞ்சம் காணோமே.
இது இருக்குமா இருக்காத என்ற ஐயம்
தெரிகிறது.

Anonymous said...

நல்லா இருக்கு டா பாண்டிய.
நான் எதிர்பார்ததுல கொஞ்சம் காணோமே.
இது இருக்குமா இருக்காத என்ற ஐயம்
தெரிகிறது.

Anonymous said...

//"நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..
நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..
ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!//

solla vaarthai illai...aaallgoo alagu"//

repeat

ஆ.ஞானசேகரன் said...

//எனக்குள் இருக்கும் உன்னை
உனக்குத் தெரியும்..
உனக்குள் இருக்கும் என்னை
எனக்குப் புரியும்..!!//

மாத்தி யோசி... எனபது போல மாற்று போட்டு எழிமையாக உள்ளது நண்பரே

இளமாயா said...

//நாம் காதலர்கள் அல்ல..
இருந்தும்.. நம்
நட்பைக் காதலிக்கிறோம்..!!//
அருமையான வரிகள்..

கயல் said...

//
எனக்குள் இருக்கும் உன்னை
உனக்குத் தெரியும்..
உனக்குள் இருக்கும் என்னை
எனக்குப் புரியும்..!!
//

ப‌ர‌ஸ்ப‌ர‌ம் புரித‌ல் அழகான‌ வ‌ரிக‌ளில்.....

ச.பிரேம்குமார் said...

நட்பு என்று வந்த பின் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இருக்கிறதா? அந்த காலம் எல்லாம் மறைந்து போய்விட்டதென்றது நினைத்துக்கொண்டிருந்தேனே....

யாழினி said...

நல்லதொரு நட்புக் கவிதை

//பிரியமான தோழிக்கு...!!! //
"பிரிய"மான‌ தோழி என்ற‌ ப‌டியால் தானோ பிரிய‌ வேண்டியிருக்கிறதோ?

//நாம் காதலர்கள் அல்ல..
இருந்தும்.. நம்
நட்பைக் காதலிக்கிறோம்..!!//

அழ‌கான‌ வ‌ரிக‌ள்!


//தோழி..


நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..


நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..


ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!! //

க‌விதை ய‌தார்த்த‌ம் க‌ல‌ந்த‌ அழ‌கு, ந‌ன்றாக‌ உள்ள‌து.

Karthik said...

enna thaan palaya maavula suthada irundaalum dhosa inippavum arumaiyavum irukku!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
வார்த்தையை மட்டுமா? இல்லை நாளை பிரியபோகும் நட்பையுமா?
உங்கள் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதையாக தோன்றுகிறது.//

நண்பருக்கு எல்லாம் தெரியும்தானே.. இந்தக் கவிதை என் நட்பின் வலிதான்.. ஒரு பயத்தின் வெளிப்பாடும் கூட..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
ஆண் பெண் நட்பின் சிக்கலை அழகாய் கவிதையாய் கொடுத்து இருக்கிறிர்கள் நண்பா.//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. முத்துராமலிங்கம் said..
கவிதை ஆனாகவும் வரிகள் பென்னாகவும் இரண்டும் நட்பாகவும்
உள்ளது. அருமை.//

முதலில் நான் இதை ஒரு பெண்ணின் பார்வையில்தான் யோசித்தேன் நண்பா.. பிறகுதான் மாற்றினேன்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
நான் படிக்கும் உங்களின் முதல் கவிதை இது! நல்ல முயற்சி. நன்றாக இருக்கிறது.//

அடி வாங்க போறீங்க.. ஒவ்வொரு தடவை நான் கவிதை போடும்போதும் இதுதான் நான் படிக்கும் உங்கள் முதல் கவிதைனு சொல்ல வேண்டியது..? என்ன.. சேட்டையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
ஆணாய் பிறப்பதற்கு நீங்கள் அழவேண்டாம்.. பெண்ணாய் பிறந்திருந்தால் அழுது கொண்டிருப்பீர்கள்.....
வாழ்த்துக்கள்!!!!//

ஆணை விட பெண்ணுக்கு வலி அதிகம்.. உண்மைதான் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

///தமிழ்.சரவணன் said..
உண்மைதான் நானும் இதுபோல் இன்னமும் அழது கொண்டிருக்கின்றேன்...
ஆணாய் பிறந்த பாவத்திற்காக...//

சில நேரங்களில் நாம் சமூகத்துக்கு பயந்துதான் வாழ வேண்டி இருக்கிறது நண்பா.. கவலை வேண்டாம் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
அங்கேயும் பாருங்கள் ஆண்தான் அழுகிறான்..இதைத்தான் ஆணாதிக்கம் என்கின்றனரோ.சும்மா டமாசுக்காக :‍-)//

ஏய்.. இங்க சீரியசா பேசிட்டு இருக்கைல யாரது காமெடி பண்ணிக்கிட்டு.. சைலன்ஸ்.. :-) (யப்பா.. இதுவும் தமாசு தானப்பா.. )

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
அண்ணா ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது....மிகவும் ரசித்தேன் அனைத்து வரிகளையும்..//

ரொம்ப நன்றி அன்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//suresh said..
மச்சான் கார்த்தி பிண்ணிட்டே :-) சூப்பர்//

வா மாப்ள.. கவிதை உனக்கு பிடிச்சு இருக்குல்ல.. சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// spi said...
i have a real friend like this., really feeling very bad after reading this poetry., i miss my true friend a lot.,//

hi friend, i wrote this as a tribute to true friends.. not to hurt anyone.. u be confident in life that we can maintain this relationship properly.. all the best..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமாரை நிலாவன் said..
ஆண் பெண் நட்பில் இருக்கும்
சிக்கலை அழகாக
வார்த்தைகளில் சொல்லி இருக்கீங்க//

ரொம்ப நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said..
நல்லா இருக்கு டா பாண்டிய.
நான் எதிர்பார்ததுல கொஞ்சம் காணோமே.இது இருக்குமா இருக்காத என்ற ஐயம் தெரிகிறது.//

முகம் தெரியா தோழமைக்கு நன்றி.. எல்லா உணர்வுகளையும் கவிதையில் வெளிப்படுத்த முடியாது.. பயம் உண்டு.. ஆனாலும் என் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளும் வலிமையும் நம்நிக்கையும் எனக்கு உண்டு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
solla vaarthai illai...aaallgoo alagu repeattu..//

ரொம்ப நன்றி சகோதரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
மாத்தி யோசி... எனபது போல மாற்று போட்டு எழிமையாக உள்ளது நண்பரே//

ஏதோ நமக்குத் தெரிஞ்சத வச்சு முயற்சி பண்ணி இருக்கேன் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இளமாயா said..
அருமையான வரிகள்..//

நன்றிங்க.. என்னைப் பின்தொடர்வதற்கும் நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கயல் said..
ப‌ர‌ஸ்ப‌ர‌ம் புரித‌ல் அழகான‌ வ‌ரிக‌ளில்.....//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said...
நட்பு என்று வந்த பின் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இருக்கிறதா? அந்த காலம் எல்லாம் மறைந்து போய்விட்டதென்றது நினைத்துக் கொண்டிருந்தேனே....//

இல்லை நண்பா.. இன்னும் நம் சமூகத்தில் சில விஷயங்கள் மாறாமல்தான் இருக்கின்றன..

கார்த்திகைப் பாண்டியன் said...

//யாழினி said..
நல்லதொரு நட்புக் கவிதை//

நல்லா ரசிச்சு படிச்சு இருக்கீங்க தோழி.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik said..
enna thaan palaya maavula suthada irundaalum dhosa inippavum arumaiyavum irukku!!//

thosai ungalukku pidicchathe sandhosham nanbaa.. nammakitta irukkura maavulathaana thosai suda mudiyum.. appuram thodarndhu vandhu karutthu solrathukku nandri..

பட்டாம்பூச்சி said...

கவிதை நல்லா இருக்கு.

வேத்தியன் said...

சூப்பர்ங்கோவ்...
கலக்கல்...

Anonymous said...

ரொம்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும் நண்பா. கொஞ்சம் வேலை. கவிதையும் கவிதையின் கருவும் அருமை. ரொம்ப நல்லாயிருக்கு நண்பா. அழகான வரியில் பாசத்தின் வெளிப்பாடு ரசித்தேன்.

அத்திரி said...

//ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!! //


அருமையான வரிகள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டாம்பூச்சி said..
கவிதை நல்லா இருக்கு../

ரொம்ப நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
சூப்பர்ங்கோவ்...
கலக்கல்...//

என்ன நண்பர ஆளவே காணோமேன்னு பார்த்தேன்.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
ரொம்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும் நண்பா. கொஞ்சம் வேலை. கவிதையும் கவிதையின் கருவும் அருமை. ரொம்ப நல்லாயிருக்கு நண்பா. அழகான வரியில் பாசத்தின் வெளிப்பாடு ரசித்தேன்.//

அதனால என்ன நண்பா.. வந்துட்டீங்கள்ல.. அது போதும்.. ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
அருமையான வரிகள் நண்பா//

வாங்க நண்பா.. என்ன ஆச்சு.. கொஞ்ச நாளா சத்தத்தையே காணோம்?

ஹேமா said...

நட்பை இது உண்மை நட்பு என்று உறுதிப்படச் சொல்ல அருமையான ஒரு கவிதை.வரிகளின் வரிசை நிதானம்.வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி தோழி.. இது என் உண்மையான நட்பின் பதிவு..

Anonymous said...

வாவ்! சூப்பர்!

நல்லாருக்கு கார்த்தி! தொடர்ந்து எழுதவேண்டும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி ஷீ.. கவிஞர் வாழ்த்த நான் கொடுத்து வச்சிருக்கணும்..