April 14, 2009

என்ன கொடுமை சார் இது...?

சனிக்கிழமை எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா என்பதால் வேலை ஜாஸ்தி. ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டரை மாணவ நண்பர்களுடன் கோவையில் கொண்டாட முடிவாகி இருந்தது. மறுநாள் இறுதியாண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா. எனவே மூணு நாலு நாளைக்கு பதிவுகள் பக்கம் சுத்தமா வர முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. சரி.. அதுவரைக்கும் நம்ம கடை காலியா இருக்க வேணாமேன்னு ஏழெட்டு படத்த டவுன்லோட் பண்ணி.. ஒரு மொக்கை பதிவு போட்டேன். சும்மா நண்பர்களை ஓட்டுவது மட்டுமே எனது எண்ணம். எனக்குள் இருக்கும் ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுத்தான் அது. ஒரு சில நண்பர்கள் அதை ரசித்து இருந்தனர். ஆனால் சில நண்பர்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதை பின்னூட்டத்திலும் அலைபேசியிலும் சொன்னார்கள். கார்த்தி எழுதுனா கொஞ்சம் உருப்புடியா இருக்கும்னு என்னை இன்னும் நம்பிக்கிட்டு இருக்கிற அந்த உள்ளங்களுக்கு நன்றி. அவங்ககிட்ட என் வருத்தத்த தெரிவிச்சுக்கிறேன். (கவனிங்க.. தலைவர் ஸ்டைல்.. வருத்தம்தான்.. )

இதுல ஒரு நொம்பலம் என்னன்னா.. நான் எழுதுனதுலே அதிகமான ஹிட்ஸ் இந்தப் பதிவுக்குத்தான் வந்திருக்கு.. 2000 ஹிட்ஸ்.. மனுஷன் உக்கார்ந்து யோசிச்சு நல்ல விஷயங்களா எழுதுனா அதை படிக்குற மக்கள் கம்மியாத்தான் இருக்காங்க.. ஆனா சும்மா எதையாவது எழுதி அதுக்கு தலைப்பு மட்டும் காமாசோமான்னு வச்சா.. (குறிப்பா இந்த 18 +).. கூட்டம் அள்ளுது.. என்ன கொடுமை சார் இது?

***************

மாணவ நண்பர்களுடன் அடிக்கடி ப்ளாகுகள் பற்றி பேசுவது உண்டு. போன வாரம் இதேபோல் பேசிக்கொண்டு இருக்கும்போது.. எஸ்ராவைப் பற்றி நான் எழுதியதையும் பின்பு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன். உடனே கேட்டுக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சொன்னான்..

"சார், நீங்க சொல்ற மாதிரி நடக்கும்னா நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சார்..".

எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பரவா இல்லையே.. நாம பேசி ஒரு பையனுக்குள்ள ஆர்வத்த தூண்டிட்டோமேன்னு நினைச்சுக்கிட்டு அவன்கிட்ட கேட்டேன்..

" சொல்லுடா.. எதப்பத்தி எழுதப் போற.."

அதுக்கு அவன் சொன்னான்.. "சார்.. என் வாழ்க்கையின் லட்சியமே நமீதாவை சந்திக்கிறதுதான்.. அதனால நான் ப்ளாக்ல அவங்களைப் பத்தி எழுதி.. அவங்கள போய் பாக்கலாம்னு இருக்கேன்.."

நான் அதுக்கப்பறம் அவன்கிட்ட என்னத்தப் பேச..? ஆணியே புடுங்க வேண்டாம்னு பேச்ச நிப்பாட்டிட்டேன்.. என்ன கொடுமை சார் இது..?

***************

கிளாஸ்ல பாடம் நடத்துறது போக, அப்பப்போ மத்த விஷயங்களையும் டிஸ்கஸ் பண்ணுவது உண்டு. பொது அறிவு, முக்கியமான நிகழ்வுகள்.. இந்த மாதிரி. அப்படித்தான் ஒருநாள் மாணவர்கள் தங்களுடைய தொடர்பு கொள்ளும் திறனை (communication skills) வளர்த்துக் கொள்வது பற்றியும், ஆங்கிலத்தில் தப்பில்லாமல் பேசுவது பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.."சும்மா சொல்லாதீங்க சார்.. ஆங்கிலம் ஒன்னும் ரொம்ப நல்ல மொழி எல்லாம் கிடையாது.. அதுல நிறைய தப்பெல்லாம் இருக்கு.. எக்கச்சக்கமான உச்சரிப்பு பிராப்ளம் உண்டு.. தெரியுமா.."

"எப்படிடா சொல்ற..." - நான்.

அவன் போர்டுக்கு வந்து எழுதத் தொடங்கினான்.

"ma - இது என்ன சார்?"

"ம..."

"chi - இது என்ன சார்?"

"சி..."

"ne - இது என்ன சார்?" "நி.."

"இப்போ எல்லாத்தையும் சேர்த்து வாசிங்க... ma chi ne - மச்சினி தான.. அப்புறம் என் மெஷின்னு சொல்றாங்க? "

எனக்கு வாயடைச்சுப் போச்சு. உக்கார்ந்து யோசிப்பாங்களோ? அவன் அத்தோடு நிறுத்தவில்லை.

"on - இது ஆன் தான் சார்.. e - ஈ.. அப்போ சேர்த்து எழுதுனா one - ஆணின்னு தான சொல்லணும்.. ஏன் ஒன் அப்படின்னு சொல்றாங்க..."

தெய்வமே என்ன விட்டுடுன்னு கெஞ்சாத குறையா ஓடி வந்தேன். இந்த பயபுள்ளைகள கட்டி மேய்க்கிறதுக்கு உள்ள.. நாம நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம் போல.. எ. கொ. சா. இ..?

***************

கடைசியாக.. ஒரு மாணவன் எனக்கு அனுப்பிய S.M.S...

"உலகின் எல்லா தலைசிறந்த இசைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கக்கூடிய மென்மையான பாடல்கள் கூட.. எங்கள் ஆசிரியரின் தாலாட்டின் முன் தோற்றுப்போகும்.. "

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இந்த விரோதி ஆண்டு நண்பனாக அமைய.. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

77 comments:

பொன்.பாரதிராஜா said...

//சார்.. என் வாழ்க்கையின் லட்சியமே நமீதாவை சந்திக்கிறதுதான்.. அதனால நான் ப்ளாக்ல அவங்களைப் பத்தி எழுதி.. அவங்கள போய் பாக்கலாம்னு இருக்கேன்.."

உங்ககிட்ட படிக்கிற பையன் வேற எப்படி இருப்பான்?

//"இப்போ எல்லாத்தையும் சேர்த்து வாசிங்க... ma chi ne - மச்சினி தான.. அப்புறம் என் மெஷின்னு சொல்றாங்க? "

உ.ப.பை.வே.

//"உலகின் எல்லா தலைசிறந்த இசைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கக்கூடிய மென்மையான பாடல்கள் கூட.. எங்கள் ஆசிரியரின் தாலாட்டின் முன் தோற்றுப்போகும்.. "

அது உண்மைதான?உங்க பதிவ படிக்கும் போதே தூக்கம் வருதே?அப்புறம் அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்?

பொன்.பாரதிராஜா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா!!!

Anonymous said...

வாத்தியராய்யா பதிவு அருமை. வெளுத்து காட்டியிருக்கீங்க. மாணவர்களுடன் தோழரா பழகி வாரீங்க போல. வாழ்த்துக்கள். இப்படி தான் இருக்கனும்.

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல.

Raju said...

மாணவர்களை நண்பர்கள்னு சொல்லி தன்னையும் ஒரு யூத்துனு காமிச்சுக்கிட்ட பேராசிரியருக்கு ஒரு ஓ.... போடுங்கப்பா!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தல....

Suresh said...

Machan super a iruku

என்ன கொடுமை சார் இது?

ha ha

vottum pottachu both in tamilmanam and tamilish

Tamil puthandu valthukkal machan

நிகழ்காலத்தில்... said...

ma chi ne

on e

சூப்பர்..

வாழ்த்துக்கள்..

ALIF AHAMED said...

என்ன கொடுமை சார் இது?


:)
::)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன். பாரதிராஜா said..
உங்ககிட்ட படிக்கிற பையன் வேற எப்படி இருப்பான்?அது உண்மைதான?உங்க பதிவ படிக்கும் போதே தூக்கம் வருதே?அப்புறம் அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்?//

நீயும்தான் என் பிரெண்டு.. இப்ப என்ன கெட்டு ஒழிஞ்சு போயட்டியாம்? உனக்கு பதிவப் படிச்சா தூக்கம் வருதா.. மகனே.. ஹைதைக்கு ட்ரைன்ல வந்து உதைப்பேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
வாத்தியராய்யா பதிவு அருமை. வெளுத்து காட்டியிருக்கீங்க. மாணவர்களுடன் தோழரா பழகி வாரீங்க போல. வாழ்த்துக்கள். இப்படி தான் இருக்கனும்.//

நன்றி நண்பா.. என்னுடைய மாணவர்கள் என்று சொல்வதை விட அவர்கள் உண்மையில் என் நண்பர்கள்தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பாரதி மற்றும் ஆனந்த்..//

புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said...
மாணவர்களை நண்பர்கள்னு சொல்லி தன்னையும் ஒரு யூத்துனு காமிச்சுக்கிட்ட பேராசிரியருக்கு ஒரு ஓ.... போடுங்கப்பா!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தல..//

அடப்பாவிகளா.. நானும் உண்மையிலேயே யூத்து தான்யா.. நம்புங்க.. புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said..
Machan super a iruku..Tamil puthandu valthukkal machan..//

வாங்க மாப்பு.. நன்றி.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அறிவே தெய்வம் said..
ma chi ne
on e
சூப்பர்..
வாழ்த்துக்கள்..//

நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மின்னுது மின்னல் said..
என்ன கொடுமை சார் இது?
:)
::)))//

வருகைக்கும் ரசிச்சு சிரிச்சதுக்கும்.. ரொம்ப நன்றிங்க..

manjoorraja said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே


என்ன கொடுமை சார் இதுன்னு சொல்லிகிட்டிருந்தா மட்டும் பத்தாது.


பசங்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் மாணவர்களின் குறும்பை ரசிக்கவே செய்கிறேன் நண்பா.. அவர்களுடன் இருக்கும் தருணங்கள் இனிமையானவை..

சொல்லரசன் said...

//நான் எழுதுனதுலே அதிகமான ஹிட்ஸ் இந்தப் பதிவுக்குத்தான் வந்திருக்கு.. 2000 ஹிட்ஸ்.. மனுஷன் உக்கார்ந்து யோசிச்சு நல்ல விஷயங்களா எழுதுனா அதை படிக்குற மக்கள் கம்மியாத்தான் இருக்காங்க..//

இதானுங்க உண்மை.இப்போது புரிந்துஇருக்கும் உங்களுக்கு என்னுடைய‌ கோபம்.

சொல்லரசன் said...

//இப்போ எல்லாத்தையும் சேர்த்து வாசிங்க... ma chi ne - மச்சினி தான.. அப்புறம் என் மெஷின்னு சொல்றாங்க//

"தல"யை போல வால்.

Anonymous said...

சூப்பர் பதிவு!
எல்லாமே நல்ல இருந்துது!
கலக்கல் தல

Anonymous said...

டக்ளஸ்....... said...
மாணவர்களை நண்பர்கள்னு சொல்லி தன்னையும் ஒரு யூத்துனு காமிச்சுக்கிட்ட பேராசிரியருக்கு ஒரு ஓ.... போடுங்கப்பா!
////////////////
அதே! அதே!

Anonymous said...

//டக்ளஸ் said...
மாணவர்களை நண்பர்கள்னு சொல்லி தன்னையும் ஒரு யூத்துனு காமிச்சுக்கிட்ட பேராசிரியருக்கு ஒரு ஓ.... போடுங்கப்பா!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தல..//

அடப்பாவிகளா.. நானும் உண்மையிலேயே யூத்து தான்யா.. நம்புங்க.. புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா..

////////////
இதை நாங்க நம்பனும்!
வாழ்துக்கள் தல

Karthik said...

neenga vaathiyaara?? idhu theriyaama namba blog la vaathiyara pothu kalasiten.. poda kuraikku neenga engineering vaathiyaar vera?? :( Kotha maathikitene....

nalla vela.. neenga enakku paadam edhukala.. :) aprom en lollayums erthu posta pothu irupeenga... :P aana pasanag enna vida sema lolla thaan irukaanya!!

Karthik said...

AJITH fan veraya neenga?? aiyago ena adutha post AJITH pathi thaan.. :( aanalum blog pakkam vara marukkadeenga!!

சென்ஷி said...

:-))


பதிவு செம்ம கலக்கல்!!!!

மாணவர்களோட சந்தேகத்தை தீர்த்து வைங்க ஆசிரியரே. இப்படி எங்ககிட்ட வந்து புலம்புனா எப்படி?

நையாண்டி நைனா said...

/*கார்த்தி எழுதுனா கொஞ்சம் உருப்புடியா இருக்கும்னு*/

சும்மா ஒரு இதுக்கு சொன்னேன்.
ஹ...ஹ.... ஹ.... பயபுள்ளே அப்படியே நம்பிட்டாண்டா...

மாமே வரட்டுமா.... இப்படி அப்பிராணியா இருக்காதே மாமே...

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு நண்பரே...

மாணவர்களின் சந்தேகங்களை.. நல்லா தீர்வு கொடுங்கசார்... அத விட்டுட்டு என்ன கொடுமைனா எப்படி?

ஆ.ஞானசேகரன் said...

புத்தாண்டா? இல்லை சித்திரை திங்கள் வாழ்த்தா முடிவு பன்னிடிங்களா?......

நையாண்டி நைனா said...

/*எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தோழரே.. வந்தது வந்துட்டீங்க.. ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்க..*/

கடலை புண்ணாக்கு பத்து கிலோ.
எள்ளு புண்ணாக்கு ஏழு கிலோ.
வாழை தாறு பதினஞ்சி.

வேத்தியன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

ஹேமா said...

//"உலகின் எல்லா தலைசிறந்த இசைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கக்கூடிய மென்மையான பாடல்கள் கூட.. எங்கள் ஆசிரியரின் தாலாட்டின் முன் தோற்றுப்போகும்.. " //

பாண்டியன் விரோதி ஆண்டின் வாழ்த்துக்கள்.ஆண்டு பேரே சரில்ல.உங்க பையன்கள் கிட்ட இன்னும் கவனமா இருங்க வாத்தியாரே.

எங்களுக்கும் ஒரு தாலாட்டுப் பாடிக் காட்டக்கூடாதா !உங்கள் அனுபவம் கொஞ்சம் வருஷம் பிறந்த இந்த நாளில சிரிக்க வைச்சுது.(சுண்டெலிக்கு வலி.பூனைக்குக் கொண்டாட்டமாம்.)

ஆ.சுதா said...

//இதுல ஒரு நொம்பலம் என்னன்னா.. நான் எழுதுனதுலே அதிகமான ஹிட்ஸ் இந்தப் பதிவுக்குத்தான் வந்திருக்கு..//

அப்பவே ஆதவன் சொன்னார் நீங்கதான் நம்பல... :)

புத்தாண்டு வாழ்த்துகள்.
நகைச்சுவையான பதிவு.

Anbu said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா ...

Anbu said...

என்ன கொடுமை சார் இது?

மேவி... said...

எல்லாம் சரி ....
மொத்தமா எவ்வளவுக்கு பல்பு கிடைத்தது ?????

Prabhu said...

ma chi ne - மச்சினி தான.. அப்புறம் என் மெஷின்னு சொல்றாங்க? "//////////////////

அப்போ அது மச்சினி இல்லயா.

வாத்தியாரே,
என்ன கொடும சார் இது!

அத்திரி said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

:-)))))))))))

ஆதவா said...

அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க... ஹிட்ஸ் வந்தாலும் தப்பு, வராட்டியும் தப்புங்கற மாதிரி இப்ப ஓடிகிட்டு இருக்கு. எனக்கும் அப்படித்தான் ஒரு கதி ஆச்சு! விடுங்க சார்...
-------------------

நான் கூட, தமன்னாவுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமோன்னு யோசிக்கிறேன்... என்னங்கறீங்க??? :D

------------------------

ஜோக்ஸ் பட்டையக் கிளப்புது!!! பாவங்க நீங்க..

ஆதவா said...

அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க... ஹிட்ஸ் வந்தாலும் தப்பு, வராட்டியும் தப்புங்கற மாதிரி இப்ப ஓடிகிட்டு இருக்கு. எனக்கும் அப்படித்தான் ஒரு கதி ஆச்சு! விடுங்க சார்...
-------------------

நான் கூட, தமன்னாவுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமோன்னு யோசிக்கிறேன்... என்னங்கறீங்க??? :D

------------------------

ஜோக்ஸ் பட்டையக் கிளப்புது!!! பாவங்க நீங்க..
----------------------------------

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
இதானுங்க உண்மை.இப்போது புரிந்துஇருக்கும் உங்களுக்கு என்னுடைய‌ கோபம்.//

என்ன நண்பா பண்ண.. உங்கள் கோபம் நியாயமானதே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
சூப்பர் பதிவு!
எல்லாமே நல்ல இருந்துது!
கலக்கல் தல//

நன்றி நண்பா.. உங்களுக்கு ஏன் இனிய தமிழ் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said..
neenga vaathiyaara?? idhu theriyaama namba blog la vaathiyara pothu kalasiten.. poda kuraikku neenga engineering vaathiyaar vera?? :( Kotha maathikitene.... nalla vela.. neenga enakku paadam edhukala.. :) aprom en lollayums erthu posta pothu irupeenga... :P aana pasanag enna vida sema lolla thaan irukaanya!!//

நன்றி கார்த்தி.. நீங்க இறுதியாண்டு மாணவரா.. எந்தத் துறை? எல்லாம் முடிச்சாச்சா.. நேரம் கிடைச்சா மெயில் பண்ணுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said..
AJITH fan veraya neenga?? aiyago ena adutha post AJITH pathi thaan.. :( aanalum blog pakkam vara marukkadeenga!!//

கண்டிப்பா வந்து பாக்குறேன் நண்பா..

குமரை நிலாவன் said...

ஆணியே புடுங்க வேண்டாம்னு பேச்ச நிப்பாட்டிட்டேன்.. என்ன கொடுமை சார் இது..? ***************

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//சென்ஷி said..
:-))பதிவு செம்ம கலக்கல்!!!!
மாணவர்களோட சந்தேகத்தை தீர்த்து வைங்க ஆசிரியரே. இப்படி எங்ககிட்ட வந்து புலம்புனா எப்படி?//

அதுதானே தலைவா நம்ம வேலை.. ஆனா பதிலே இல்லாத கேள்வி கேட்டா நான் என்ன பண்ணுவேன்.. அதுதான் உங்ககிட்ட சொல்ல்ல்ல்ல்ல்லி... மனசத் தேத்திக்குறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
சும்மா ஒரு இதுக்கு சொன்னேன்.
ஹ...ஹ.... ஹ.... பயபுள்ளே அப்படியே நம்பிட்டாண்டா...மாமே வரட்டுமா.... இப்படி அப்பிராணியா இருக்காதே மாமே...//

அடப்பாவிகளா... அப்ப எல்லாம் சும்மா ஊத்தி விடுரதுதானா.. நம்பி மோசம் போய்ட்டேனே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
நல்லா இருக்கு நண்பரே...
மாணவர்களின் சந்தேகங்களை.. நல்லா தீர்வு கொடுங்கசார்... அத விட்டுட்டு என்ன கொடுமைனா எப்படி?//

நம்மளால முடிஞ்சத செஞ்சிக்கிட்டுத்தான் நண்பா இருக்கேன்.. ஆனா இந்தக் கேள்விகளுக்கு நீங்க விடை சொல்ல முடியுமா.. இதெல்லாம் உண்மையிலேயே கொடுமைதான் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

////ஆ. ஞானசேகரன் said.. புத்தாண்டா? இல்லை சித்திரை திங்கள் வாழ்த்தா முடிவு பன்னிடிங்களா?......//

கொஞ்சம் குழப்பம்தான்.. ஆனா வாழ்த்துக்கள் கண்டிப்பா உண்டு..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
கடலை புண்ணாக்கு பத்து கிலோ.
எள்ளு புண்ணாக்கு ஏழு கிலோ.
வாழை தாறு பதினஞ்சி.//

லொள்ளு..? வர வர எகத்தாளம் ஜாஸ்தி ஆகிகிட்டே போகுது.. என்சாய்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...//

வாழ்த்துக்கள் நண்பா.. கொஞ்சம் வேலை பிசியோ.. ஆள் சத்தத்தையே காணோம்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
எங்களுக்கும் ஒரு தாலாட்டுப் பாடிக் காட்டக்கூடாதா !உங்கள் அனுபவம் கொஞ்சம் வருஷம் பிறந்த இந்த நாளில சிரிக்க வைச்சுது.(சுண்டெலிக்கு வலி.பூனைக்குக் கொண்டாட்டமாம்.)//

கண்டிப்பா தோழி.. உங்ககிட்ட பேசனும்னு ஆசையாத்தான் இருக்கு.. பார்க்கலாம்.. அத்தோட சைக்கிள் கப்பில நம்மள சுண்டேலின்னு வேற ஓட்டுறீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said.. அப்பவே ஆதவன் சொன்னார் நீங்கதான் நம்பல... :)
புத்தாண்டு வாழ்த்துகள்.
நகைச்சுவையான பதிவு.//

எல்லாம் நேரக்கொடுமை நண்பா.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா ...//

புத்தாண்டு வாழ்த்துக்கள் anbu..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mayvee said..
எல்லாம் சரி ....மொத்தமா எவ்வளவுக்கு பல்பு கிடைத்தது ?????//

கணக்கே கிடையாது நண்பா.. உங்க ஊருல பல்புன்னு சொல்றீங்க.. இங்க பசங்க அதை பன்னுன்னு சொல்றாங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
அப்போ அது மச்சினி இல்லயா.
வாத்தியாரே,என்ன கொடும சார் இது!//

ஆகா.. அவனா நீயி.. அந்த க்ரூப்பா? ஆள விடுங்குடா சாமிகளா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கள் தோழா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச்சின்னப் பையன் said..
:-)))))))))))//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க... ஹிட்ஸ் வந்தாலும் தப்பு, வராட்டியும் தப்புங்கற மாதிரி இப்ப ஓடிகிட்டு இருக்கு. எனக்கும் அப்படித்தான் ஒரு கதி ஆச்சு! விடுங்க சார்... //

எல்லாம் நேரம்தான் நண்பா.. புலம்பி ஒன்னும் ஆகப் போறதில்லை..

//நான் கூட, தமன்னாவுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமோன்னு யோசிக்கிறேன்... என்னங்கறீங்க??? :D//

ஆரம்பிங்க.. முதல் உறுப்பினரா அண்ணன் சொல்லரசன சேருவார்..

//ஜோக்ஸ் பட்டையக் கிளப்புது!!! பாவங்க நீங்க..//

விடுங்க பாஸ்.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா//

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நண்பா..

ராஜ நடராஜன் said...

//அப்போது ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.."சும்மா சொல்லாதீங்க சார்.. ஆங்கிலம் ஒன்னும் ரொம்ப நல்ல மொழி எல்லாம் கிடையாது.. அதுல நிறைய தப்பெல்லாம் இருக்கு.. எக்கச்சக்கமான உச்சரிப்பு பிராப்ளம் உண்டு.. தெரியுமா.."//

அசத்தல் வாத்தியும் மாணவர்களும்:)

ராஜ நடராஜன் said...

//மனுஷன் உக்கார்ந்து யோசிச்சு நல்ல விஷயங்களா எழுதுனா அதை படிக்குற மக்கள் கம்மியாத்தான் இருக்காங்க.. ஆனா சும்மா எதையாவது எழுதி அதுக்கு தலைப்பு மட்டும் காமாசோமான்னு வச்சா.. (குறிப்பா இந்த 18 +).. கூட்டம் அள்ளுது.. என்ன கொடுமை சார் இது?//

எனக்கெல்லாம் அப்படியில்லைங்க.பதிவுகள் எல்லாத்தையும் கலந்து கட்டி ஒரு பிடி பிடிச்சறது:)என்ன சில சமயம் ஏதாவது ஒரு பதிவுல மூழ்கிட்டா அங்கேயே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்வதால் நல்ல விசயங்கள் கண்ணுல படறதுக்குள்ள பதிவு காணாம போயிடும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களை மாதிரி எல்லாரும் இருந்துட்டா பிரச்சுனை இல்லையே நண்பா.. வருகைக்கு நன்றி

//அசத்தல் வாத்தியும் மாணவர்களும்:)//

ரொம்ப நன்றி...

ச.பிரேம்குமார் said...

என்ன கொடும பாண்டியன் சார் இது? ;-)))

Tech Shankar said...

தலைப்பை இப்படி வைச்சால் 6க்கும் ஒரு குறுகுறுப்பு வரத்தானே செய்யும்.

சுத்தமான அக்மார்க் உண்மைங்கோ

//2000 ஹிட்ஸ்.. மனுஷன் உக்கார்ந்து யோசிச்சு நல்ல விஷயங்களா எழுதுனா அதை படிக்குற மக்கள் கம்மியாத்தான் இருக்காங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
என்ன கொடும பாண்டியன் சார் இது? ;-)))//

இந்த பதில்தான் எனக்கு நீங்க முதல் முதலா கொடுத்த பின்னூட்டம் பிரேம்.. போன பதிவ நீங்க ரசிக்கலன்னு உங்க வார்த்தைகள்ல தெரிஞ்சுது.. அதனால் இந்தப் பதிவ நீங்க எப்படியாவது பார்கனுமேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. நல்ல வேளை.. பார்த்துட்டேங்க.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ்நெஞ்சம் said..
தலைப்பை இப்படி வைச்சால் 6க்கும் ஒரு குறுகுறுப்பு வரத்தானே செய்யும்.
சுத்தமான அக்மார்க் உண்மைங்கோ//

ஆக தலைப்புலதான் எல்லா சூதும் இருக்குன்னு சொல்ல வரீங்க.. பார்க்கலாம்.. அப்புறம்.. தமிழ்மணம் ஸ்டார் ஆக ஆனதுக்கு வாழ்த்துக்கள்..

சொல்லரசன் said...

//நான் கூட, தமன்னாவுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமோன்னு யோசிக்கிறேன்... என்னங்கறீங்க??? :D//

ஆரம்பிங்க.. முதல் உறுப்பினரா அண்ணன் சொல்லரசன சேருவார்..//

ஏனுங்க என்னை இழுக்கிறிங்க,நானா வயதுவந்தவர் பதிவை பார்த்து முதல் ஆளாக வந்து பின்னுட்டம் போட்டேன்.அவரையும்,பொய்ய பேசும் தமிழன்னையும் சேருங்கள் நம்மளை விடுங்கோ.

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மையில நீங்க யூத்துல நண்பா.. அதனாலத்தான் உங்களை இழுத்து விட்டேன்.. மத்தவங்க எல்லாம் தான சேருவாங்க.. ஆனா உங்களை நாங்க தான் கோர்த்து விடனும். அது நம்ம கடமை இல்லையா..

வினோத் கெளதம் said...

உண்மையில் மாணவர்களை வைத்து கொண்டு சமாளிப்பது கொடுமை தான்.

Tech Shankar said...

நன்றிங்க


//அப்புறம்.. தமிழ்மணம் ஸ்டார் ஆக ஆனதுக்கு வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
உண்மையில் மாணவர்களை வைத்து கொண்டு சமாளிப்பது கொடுமை தான்.//

அப்படி இல்லை.. அது ஒரு ஜாலியான அனுபவம் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ்நெஞ்சம் said..
நன்றிங்க//

பரவா இல்லைங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டுறது இன்னும் நல்ல எழுதறுதுக்கான ஊக்கம் தானே..

"உழவன்" "Uzhavan" said...

machine அ மச்சினி னு சொல்லுற டயலாக்குக்கு கிரேஸி மோகன்தான் சொந்தக்காரர்..

//.."சும்மா சொல்லாதீங்க சார்.. ஆங்கிலம் ஒன்னும் ரொம்ப நல்ல மொழி எல்லாம் கிடையாது..//

உண்மைதாங்க.. இப்ப நான் ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க..

Bolt & Nut இந்த இரண்டுலயும் உள்ள threadஅ எப்படி ஆங்கிலம் சொல்ல சொல்லுது? போல்ட் வந்து Male thread ஆம்.. Nut வந்து female thread ஆம்... கொஞ்சம் யோசித்து பாருங்க.. இப்ப தெரியுதா ஆங்கிலம் எவ்வளவு கீழ்த்தரமா பெயர் வைச்சிருக்குனு..
இதுக்கு தமிழ்ல நம்ம எவ்வளவு அருமையா உள்மறை, வெளிமறை னு பெயர் வைச்சிருக்கோம்..

அன்புடன்
உழவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி உழவன் சார்.. உங்களுடைய கருத்தும் நியாயமானதுதான்..

தீப்பெட்டி said...

சூப்பர் பாஸ்....

http://maidenpost.wordpress.com/ said...

மிக அருமை...

ma chi ne - மச்சினி ரூம் போட்டு யோசிச்சீங்களா?