April 24, 2009

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள்....!!!

காலம் காலமா நம்ம தமிழ் சினிமாவில் மாறாத சில விஷயங்கள் இருக்கு. அந்தக் காலத்து எம்ஜியார்ல ஆரம்பிச்சு இன்னைக்கு இருக்கிற தனுஷ் வரைக்கும் கண்டிப்பா எல்லார் படத்துலயும் இந்த விஷயங்கள் இருக்கும். அதுல எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள் பத்தித் தான் இந்தப் பதிவு.. இதே மாதிரி விஷயங்கள் உங்களுக்கும் தோணுனா அதப்பத்தி பின்னூட்டத்துல சொல்லுங்க நண்பர்களே..
---> கதாநாயகனோட அறிமுகம்.. கை, கால், மூக்கு, நாக்குன்னு எல்லாத்தையும் காமிப்பாங்க ஆனா மூஞ்ச மட்டும் உடனே காட்ட மாட்டாங்க.. யாராவது ஒரு பெரிசு வந்து ஹீரோவைப் பத்தி நாலு நல்ல விஷயம் சொன்ன உடனே ஸ்லோமோஷன்லதான் நம்ம கதாவோட முகத்தை காட்டணும் என்கிறதுதான் விதி..
---> கதாநாயகி கண்டிப்பா வில்லனோட தங்கச்சியாவோ, மகளாவோத்தான் இருப்பா. முதல் தடவை பார்க்கும்போது நாயகனோட மோதல் வரும்.. அப்புறமா அவளோட மானத்தை நம்ம கதா காப்பாத்துன உடனே காதல் வந்திரும்..
---> நாயகனும் நாயகியும் இருக்குறது கொட்டாம்பட்டியா இருந்தாலும், காதல் வந்த உடனே டூயட் பாட ச்விட்சர்லாந்தோ, நியுசிலாந்தோ போய்டுவாங்க.. அங்கே பனி மழை மாதிரி பெய்யும்.. நம்ம கதா கையுறை, காலுறை, ஆணுறை உட்பட்ட எல்லா உறைகளும் போட்டுக்கிட்டு ஆடுவாரு.. ஆனா நம்ம நாயகிக்கு ரெண்டே பீசுதான்.. அந்த அம்மா குளிர்ல நடுங்குரதுதான் டான்சு..
---> கதாநாயகனுக்கு தங்கச்சி இருந்தா அவ வில்லனை காதலிச்சு ஏமாந்து இருப்பா.. அதே மாதிரி வில்லனுக்கு நாயகனை பழி வாங்கணும்னா தெரிஞ்ச ஒரே வழி கதாவோட தங்கச்சிய கற்பழிக்கிரதுதான்.. அப்போ சுவத்துல இருக்குர புலி மானை வேட்டையாடுற போட்டோவைக் காட்டுறது ரொம்ப முக்கியம்..
---> படத்துல ரெண்டாவது கதாநாயகி கதாவை ஒருதலையா காதலிப்பா.. கடைசி சீன்ல வில்லன் நம்ம கதாவை கொல்ல முயற்சி பண்ணும்போது நடுவுல விழுந்து செத்துப் போவா.. அப்போ கதாவோட கைய நாயகியோட சேர்த்து வைக்கிறதுதான் அவளோட முக்கிய கடமை..
---> குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..
---> கதாநாயகி கோவிச்சுக்கிட்டு வேற ஊருக்கு போறதுக்காக எர்போர்ட்டுக்கோ, ரெயில்வே ஸ்டேஷனுக்கோ போவா.. அவ வரதுக்காகவே நாயகியோட பிரென்ட் காத்துக்கிட்டு இருப்பா.. ஹீரோ எவ்ளோ நல்லவன்னு சொல்லிட்டு வந்த வேலை முடிஞ்சதுன்னு கிளம்பிடுவா..
---> குடும்பப் படம்னா கடைசி ஒரே சீன்ல வில்லன் நல்லவனா மாறி மன்னிப்பு கேட்டுருவாரு.. உடனே குடும்பத்துல எல்லாரும் அவரை மன்னிச்சு ஏததுக்கிடுவான்க..
---> கதா வாழ்க்கைல முன்னேறனும்னா ஒரே ஒரு பாட்டு போதும்.. அந்த பாட்டு இப்போ விக்ரமன் சார்கிட்ட ஸ்டாக்ல இருக்கறதா பேசிக்கிறாங்க..

---> கடைசியா, கதா எத்தனை பேரைக் கொன்னாலும், வில்லன் என்ன அட்டூழியம் பண்ணினாலும் கண்டுக்காம இருந்துட்டு, படம் முடிய அஞ்சு நிமிஷமே இருக்குரப்பதான் போலிஸ் வரும்..
அவ்வ்வ்வ்வ்வ்... இந்த மாதிரி நெறைய இருக்கு.. இப்போதைக்கு இது போதும்..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

62 comments:

லோகு said...

நாந்தா முதல்ல..

படிச்சுட்டு வர்றேன்

லோகு said...

உங்கள் பதிவில் பொருட்பிழை இருக்கிறது..


//---> குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..//


இடியே விழுந்தாலும் சாகாத நம்ம கதாநாயகர்கள் குண்டடி பட்டு சாவறதா.. நடக்கவே நடக்காது, அந்த குண்டு அவர் மேல பட்டு திரும்பி போய் சுட்டவனையே கொன்னுடும்..

வேத்தியன் said...

குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..//

அப்பிடி சாவுறா மாதிரி காட்டினாலும் பரவாயில்லை...
அதுவும் சில நேரத்தில் நாட்கணக்கில் கதா குண்டோட இருந்து உயிர்புழைக்கிற மாதிரியும் காட்டுவாங்கல்ல...

நாமெல்லாம் எத்தனை சினமா பார்த்திருப்போம்???
:-)

வேத்தியன் said...

லோகு said...
உங்கள் பதிவில் பொருட்பிழை இருக்கிறது..


//---> குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..//


இடியே விழுந்தாலும் சாகாத நம்ம கதாநாயகர்கள் குண்டடி பட்டு சாவறதா.. நடக்கவே நடக்காது, அந்த குண்டு அவர் மேல பட்டு திரும்பி போய் சுட்டவனையே கொன்னுடும்..//

ஆஹா லோகு...
நீங்க ஏதோ ஒரு விஜயகாந்த் படத்த மட்டும் சொல்லவே இல்ல தானே???
:-)))

வேத்தியன் said...

அப்போ சுவத்துல இருக்குர புலி மானை வேட்டையாடுற போட்டோவைக் காட்டுறது ரொம்ப முக்கியம்.//

ஹிஹிஹி...
எத்தனை தடவை தான் இப்பிடியே காட்டி சமாளிப்பாங்க...

எதைக் காட்டினாலும் பாக்குறதுக்கு நம்மள மாதிரி _________ (கீறிட்ட இடம் நிரப்புக... :-D ) இருக்குற வரைக்கும் அவங்களுக்கு கவலையே இல்ல...
பணத்தை செலவழிச்சு பாக்குறோமேன்னு நாம தான் கவலைப்படனும்...
:-)

Sasirekha Ramachandran said...

இந்த trend அவ்ளோ சீக்ரமா மாறிடுமா என்ன???

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
இடியே விழுந்தாலும் சாகாத நம்ம கதாநாயகர்கள் குண்டடி பட்டு சாவறதா.. நடக்கவே நடக்காது, அந்த குண்டு அவர் மேல பட்டு திரும்பி போய் சுட்டவனையே கொன்னுடும்..//

வருகைக்கு நன்றி நண்பா.. தமிழ் சினிமாவில சில விஷயங்களை கேள்வி கேக்காம ஒத்துக்கிடனும்.. எல்லாம் நம்ம தலைஎழுத்து..

shabi said...

அயன் படத்தில் இதை கொஞ்சம் மாற்ற முயற்சி செய்திருப்பார்கள்

shabi said...

அயன் படத்தில் இதை கொஞ்சம் மாற்ற முயற்சி செய்திருப்பார்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
எதைக் காட்டினாலும் பாக்குறதுக்கு நம்மள மாதிரி _________ (கீறிட்ட இடம் நிரப்புக... :-D ) இருக்குற வரைக்கும் அவங்களுக்கு கவலையே இல்ல...பணத்தை செலவழிச்சு பாக்குறோமேன்னு நாம தான் கவலைப்படனும்...:-)//

நான் சொல்ல மாட்டேன்.. அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்ப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sasirekha Ramachandran said...
இந்த trend அவ்ளோ சீக்ரமா மாறிடுமா என்ன???//

மாறுனா சந்தோஷம்.. வாங்க தோழி.. நீங்க சிவகாசி தானே.. வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//shabi said...
அயன் படத்தில் இதை கொஞ்சம் மாற்ற முயற்சி செய்திருப்பார்கள்//

ஆமா நண்பா.. அயன் எனக்கும் பிடிச்ச படம்தான்.. கொஞ்சம் வித்தியாசமா எடுக்கு முயற்சி பண்ணி இருந்தாங்க..

பீர் | Peer said...

//நம்ம கதா கையுறை, காலுறை, ஆணுறை உட்பட்ட எல்லா உறைகளும் போட்டுக்கிட்டு ஆடுவாரு.. //

இத படிக்கும் போது ஒண்ணு ஞாபகம் வருது, நம்ம கைப்புள்ள பஸ்ல தம் அடிச்சுக்கிட்டே இருந்தாப்டி, அப்ப நடத்துநர் சொன்னாராம், 'ஏய்.. கைப்புள்ள, பேருந்தினுள் புகை பிடிக்காதீர் னு போர்டு போட்டிருக்கு பார்க்கலையா?' அதுக்கு நம்ம கைப்புள்ள சொன்னாப்டியாம், 'எப்போதும் ஆணுறை உபயோகிப்பீர்' ன்னு கூடத்தான் போர்டு போட்டிருக்கு அதுக்காக?'
போலாம்.. ரைட்.. ரைட்...

கார்த்திகைப் பாண்டியன் said...

அடப்பாவிகளா.. இவ்வளவு பெரிய பதிவுல நம்ம ஊரு ஆளுக்கு எது மட்டும் கண்ணுக்குத் தெரியுது பாரு? வருகைக்கு நன்றி நண்பா

ஆ.சுதா said...

//நாயகனும் நாயகியும் இருக்குறது கொட்டாம்பட்டியா இருந்தாலும், காதல் வந்த உடனே டூயட் பாட ச்விட்சர்லாந்தோ, நியுசிலாந்தோ போய்டுவாங்க.. அங்கே பனி மழை மாதிரி பெய்யும்.. நம்ம கதா கையுறை, காலுறை, ஆணுறை உட்பட்ட எல்லா உறைகளும் போட்டுக்கிட்டு ஆடுவாரு.. ஆனா நம்ம நாயகிக்கு ரெண்டே பீசுதான்.. அந்த அம்மா குளிர்ல நடுங்குரதுதான் டான்சு.. //

கார்த்திகை பாண்டியன் நகைசுவையும் நல்லா வருதே இத படிக்க படிக்க சிப்புதாங்கல!!!

இன்னொன்ன விட்டுடீங்கள
நம்ம கதா என்னதான் தன்னி அடிச்சாலும் தம்மடிச்சி தருதலையா சுத்தினாலும் கடையில பெரிய தியாகியா (அ) திருந்தி நாட்டுக்கு நல்லது சொல்லிருவாரு.

இந்த பழைய பஞ்சமிர்தம்லா மாறனும்னு எதிர்ப்போர்போம்...!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி நண்பா.. ரொம்ப சீரியசா எழுதிக்கிட்டு இருக்குற மாதிரி தோணுனா அப்பப்போ இந்த மாதிரி ரிலாக்ஸ் பண்ணிகிரதுதான்..

Bleachingpowder said...

காதலனை மறந்து விடுன்னு கதாநாயகியின் தந்தை மிரட்டியவுடன், பெட்ரூமிற்கு ஓடி போய் மெத்தையில் குப்புற விழுந்து அழுவது.

நாயகனின் தந்தை, நான் எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்தேன், என்னை மன்னிச்சிருப்பான்னு கண் கலங்குவது

விடிஞ்சிருச்சுன்னு காமிக்கறதுக்கு, சுப்பிரபாதம் பாட்டை ஓட விடுவது.

படத்தோட நாயகனுக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கும் ஆனா பொண்ணு விசியத்துல மட்டும் ஸ்ரீராம சந்திரமூர்த்தியா இருப்பாரு.

அதே மாதிரி ஹீரோயின் விதவையா இருந்து அவளை ஹீரோ கல்யாணம் பண்ணுற மாதிரி கதை இருந்தா, ஹீரோயினோட முதல் கல்யாணத்துல முதலிரவு நடந்திருக்கவே நடந்திருக்காது.

கெடுதவனுக்கே அந்த பொண்ணை கட்டி கொடுக்குறது.

கிராமத்துல பொறந்து வளந்த ஹீரோ, கிளைமேச்சில் ரெண்டு கையில ரெண்டு மெசின் கண் வச்சிட்டு வில்லனையும் அவன் கும்பலையும் சுடுவது.

இப்படி நிறைய இருக்குங்க

தீப்பெட்டி said...
This comment has been removed by the author.
தீப்பெட்டி said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

என்னோட அடுத்த தமிழ் படத்தோட திரைகதையை நீங்க இப்படி பதிவா போட்டுட்டீங்க..

தமிழீன தலைவருக்கு தந்தி அனுப்பபோறேன்.

பி.கு :-)) இந்த பின்னூட்டத்தில் எழுத்து பிழை இல்லை என தெரிவித்துகொள்கிறேன் ;-))

Anonymous said...

முதல்முதலா உங்க பதிவ பார்த்து படிக்க வந்தா சினிமா பாணிய போட்டு ..........its ok அடுத்த பதிவில் அசத்துங்க......

விக்னேஷ்வரி said...

கதாநாயகனோட அறிமுகம்.. கை, கால், மூக்கு, நாக்குன்னு எல்லாத்தையும் காமிப்பாங்க ஆனா மூஞ்ச மட்டும் உடனே காட்ட மாட்டாங்க.. //

அவருக்கு போட்டிருக்குற மேக்கப் எல்லோருக்கும் தெரிய வேணாமா ;)

நாயகனும் நாயகியும் இருக்குறது கொட்டாம்பட்டியா இருந்தாலும், காதல் வந்த உடனே டூயட் பாட ச்விட்சர்லாந்தோ, நியுசிலாந்தோ போய்டுவாங்க.. //

அது இல்லாம நடிக்க எந்த ஹீரோ ஒத்துக்குவாரு.

ஆனா நம்ம நாயகிக்கு ரெண்டே பீசுதான்.. அந்த அம்மா குளிர்ல நடுங்குரதுதான் டான்சு.. //

இதுக்கு பேரு தான் மானங்கெட்ட பொழப்பு.

அப்போ சுவத்துல இருக்குர புலி மானை வேட்டையாடுற போட்டோவைக் காட்டுறது ரொம்ப முக்கியம்.. ///

:))))))))

நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு.. //

அவரு சாவறதுக்கு முன்னாடி காசு குடுத்து படம் பார்க்கப் போன நம்மளையும் சாகடிக்க வேணாமா....

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ்வ்வ் திரைப்படத்தை அலசியிருக்கிங்க நண்பரே.....

Kannan said...

summa natchunu irukuvoi ungal padaippu. keep it up!!!

Vishnu - விஷ்ணு said...

என்ன பாஸ் நம்ம இயக்குனர்கள் எல்லாம் எவ்வளவு பாடுபட்டு மக்களுக்காக message சொல்லுராங்க அத போய் கிண்டல் பண்ணுறீங்களே.

//படத்துல ரெண்டாவது கதாநாயகி கதாவை ஒருதலையா காதலிப்பா.. கடைசி சீன்ல வில்லன் நம்ம கதாவை கொல்ல முயற்சி பண்ணும்போது நடுவுல விழுந்து செத்துப் போவா.. அப்போ கதாவோட கைய நாயகியோட சேர்த்து வைக்கிறதுதான் அவளோட முக்கிய கடமை..//

சுயநலம் இல்லாதவங்களும் இந்த உலகத்தில இருக்காங்கனு சொல்லராங்க நம்ம ஊர் டயருடக்கரு.

//கதாநாயகி கோவிச்சுக்கிட்டு வேற ஊருக்கு போறதுக்காக எர்போர்ட்டுக்கோ, ரெயில்வே ஸ்டேஷனுக்கோ போவா.. அவ வரதுக்காகவே நாயகியோட பிரென்ட் காத்துக்கிட்டு இருப்பா.. ஹீரோ எவ்ளோ நல்லவன்னு சொல்லிட்டு வந்த வேலை முடிஞ்சதுன்னு கிளம்பிடுவா..//

பிரன்ஷிப் எவ்வளவு முக்கியம்கிரத சொல்லவரங்கப்பா.

// குடும்பப் படம்னா கடைசி ஒரே சீன்ல வில்லன் நல்லவனா மாறி மன்னிப்பு கேட்டுருவாரு.. உடனே குடும்பத்துல எல்லாரும் அவரை மன்னிச்சு ஏததுக்கிடுவான்க.

மாற்றம் என்ற சொல் மட்டும் தான் உலகத்தில மாறாததுனு சொல்லவர்றங்கன்னு நினைகிறேன்.


//கடைசியா, கதா எத்தனை பேரைக் கொன்னாலும், வில்லன் என்ன அட்டூழியம் பண்ணினாலும் கண்டுக்காம இருந்துட்டு, படம் முடிய அஞ்சு நிமிஷமே இருக்குரப்பதான் போலிஸ் வரும்.. //

மக்கள் பிரச்சனையை மக்களே தீர்த்துக்கனும்மு சொல்லுராங்கப்பு. நாமக்கு நாமே திட்டத்தை மூணு மனிநேரம் விளம்பர படுத்துராங்க.


// கதா வாழ்க்கைல முன்னேறனும்னா ஒரே ஒரு பாட்டு போதும்.. அந்த பாட்டு இப்போ விக்ரமன் சார்கிட்ட ஸ்டாக்ல இருக்கறதா பேசிக்கிறாங்க..

மனுச வாழ்க்கை கொஞ்ச நாள் தான் அதானல வேகமா முன்னேறனும்மு சொல்லுராங்க. விக்ரமன் சார் whole salesல இத வாங்கிட்டாரு.

// குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..

steel பாடினா அப்படிதான் அரை மணி நேரம் என்ன ஆறு வருசம் கூட தாங்கும் எங்கள் கதாவுக்கு.


// கதாநாயகனுக்கு தங்கச்சி இருந்தா அவ வில்லனை காதலிச்சு ஏமாந்து இருப்பா.. அதே மாதிரி வில்லனுக்கு நாயகனை பழி வாங்கணும்னா தெரிஞ்ச ஒரே வழி கதாவோட தங்கச்சிய கற்பழிக்கிரதுதான்.. அப்போ சுவத்துல இருக்குர புலி மானை வேட்டையாடுற போட்டோவைக் காட்டுறது ரொம்ப முக்கியம்..//

குடும்பத்தோட வர்ராங்கள அப்புரம் எப்படி ஆபாசம் காட்டுறது.சின்ன புள்ளைங்க கெட்டுபோயிட கூடாதுங்கிற நல்ல என்னம் பாஸ்.

// கதாநாயகனோட அறிமுகம்.. கை, கால், மூக்கு, நாக்குன்னு எல்லாத்தையும் காமிப்பாங்க ஆனா மூஞ்ச மட்டும் உடனே காட்ட மாட்டாங்க.. யாராவது ஒரு பெரிசு வந்து ஹீரோவைப் பத்தி நாலு நல்ல விஷயம் சொன்ன உடனே ஸ்லோமோஷன்லதான் நம்ம கதாவோட முகத்தை காட்டணும் என்கிறதுதான் விதி //

உடனே காமிச்ச குழந்தைகள் எல்லாம் பயந்துருமில்ல அதனால கொஞ்சம் தைரியத்தை வரவழைக்க நம்ம இயக்குனர்களோட தொலைநோக்கு பார்வை இது.

// அந்த அம்மா குளிர்ல நடுங்குரதுதான் டான்சு.

presemce of mind

Unknown said...

இப்படியெல்லாம் இருந்தா தான் அத தமிழ் சினிமான்னு சிலபேர் நம்புறாங்க..


//..

தமிழீன தலைவருக்கு தந்தி அனுப்பபோறேன்.

பி.கு :-)) இந்த பின்னூட்டத்தில் எழுத்து பிழை இல்லை என தெரிவித்துகொள்கிறேன் ;-))

..//

எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க பாஸ்..

அத்திரி said...

இப்பவெல்லாம் தமிழ்படத்துல நீங்க சொன்ன காட்சிகளை தவிர்க்கிறாங்களே.... ஒரு சில உப்புமா நடிகர்களை தவிர
...நக்கலுக்கு குறைவில்லாத பதிவு

வால்பையன் said...

ஒரு தமிழ் படம் எடுக்க முழு தகுதியும் உங்களுக்கு இருக்கு!

சொல்லரசன் said...

ஆக இயக்குனர் ஆவதற்கு எல்லாதகுதியும் உங்ககிட்ட இருக்கு,
எப்ப படம் இயக்கபோகிறீர்கள்

ராம்.CM said...

ஹாய் கார்த்திகைப்பாண்டியன் ! எப்படியிருக்கீங்க? 10 நாட்களாக ஒரே பிஸி.(எலக்ஸன் வந்தாலே இப்படிதாங்க... நம்மள நிம்மதியா சோறு திங்க விடமாட்டானுக...)
தங்கள் சினிமா பத்தின கருத்து அப்பட்டமான உண்மை.

" ஹீரோ மேல உள்ள கோபத்துல தனது அடியாட்களை கொல்லும் வில்லன்"

" கிளைமாக்ஸில் இரயிலில் கிளம்பிவிட்ட ஹீரோவுடன் சேரமுடியாமல் ப்ளாட்பாரத்தில் சோகமாக நிற்கும் ஹீரோயின் முகத்தில் சந்தோசம். இரயிலின் மறுபக்கம் ஹீரோ காத்திருப்பது."

" போலீஸாக இருக்கும் ஹீரோவிற்காக சிகரெட் துணுக்குகள், பஸ் டிக்கெட்டுகள் போன்றவற்றை விட்டுசெல்லும் கொலைகார வில்லன்."

" முக்கிய தலைவர்களை கொலை செய்வதற்காகவே மும்பையிலிருந்து அழைக்கப்படும் முஸ்லீம் பெயர் கொண்ட வில்லன்".
‍‍‍
இது போதுமா? இன்னும் வேணுமா?...

Vishnu - விஷ்ணு said...

15 வயசுல காதலிச்ச பொண்ணு திரும்ப வருவான்னு நினைச்சு 60 வயசுலயும் காதல் பாட்டு பாடுறது

ஆதவா said...

ஹாஹா..... ரிலாக்ஸ் பதிவா.

நிறைய இருக்குங்க.. எழுத நேரமில்லை!!! நேரில் பார்க்கும் பொழுது பொழுதுபோகாட்டி பேசுவோம்!!!!!

♫சோம்பேறி♫ said...

/*குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..*/

அட.. கதா செத்துடுறாரா? எந்த கிரகத்தில் இருக்கீங்க நீங்க?

ச.பிரேம்குமார் said...

//அங்கே பனி மழை மாதிரி பெய்யும்.. நம்ம கதா கையுறை, காலுறை, ஆணுறை உட்பட்ட எல்லா உறைகளும் போட்டுக்கிட்டு ஆடுவாரு.. ஆனா நம்ம நாயகிக்கு ரெண்டே பீசுதான்.. அந்த அம்மா குளிர்ல நடுங்குரதுதான் டான்சு.. //

ஆகா பேராசிரியர் ஒரு மார்க்கமாத்தான்யா அலையுறாரு !!!

Prabhu said...

அப்புறம் கிராம்த்து கதைன்னா, மதுரய காட்டுறது. மதுரக்காரன் எல்லாருமே பட்டிக்காட்டுப் பயல மாதிரியே பேச விடுறது.

Anonymous said...

அப்பா! படம் பார்த்து முடிச்ச எஃபெக்ட் பா....

பின்னிட்ட போ!

Raju said...

\\shabi said..
அயன் படத்தில் இதை கொஞ்சம் மாற்ற முயற்சி செய்திருப்பார்கள்\\
அதுக்குத்தான் கே.வி.ஆனந்த கண்டிச்சாச்சு...!

Raju said...

*பொண்ணு பாக்கப் போறப்ப. "இப்டியே ஒக்காந்துருந்தா எப்டி"னு ஒரு பெருசு சொல்லும்...
* மருத்துவர் ( அவரு இல்லீங்கோ!) கண்ணாடிய கழட்டிடு பேசுற டயலாக் எங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

//bleaching powder..//

ஆகா.. இதெல்லாம் தொகுத்து பார்ட் டூ கூட போடலாம் போலியே.. ரொம்ப நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said.. //
தமிழீனத் தலைவரா? ஏன் இப்படி? அப்புறம், பிழை இல்லாம டைப் அடிச்ச நண்பர் வாழ்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழரசி said..
முதல்முதலா உங்க பதிவ பார்த்து படிக்க வந்தா சினிமா பாணிய போட்டு ..........its ok அடுத்த பதிவில் அசத்துங்க......//

ஊருக்கு போறப்போ கடை காலியா இருக்க வேணாமேன்னு எழுதுனது தோழி.. நேரம் கிடைச்சா மற்ற பதிவுகளை படியுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//விக்னேஷ்வரி..//

முதல் வருகைக்கும் ஆழ்ந்த கருத்துகளுக்கும் நன்றிங்க.. :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
வாவ்வ்வ்வ்வ் திரைப்படத்தை அலசியிருக்கிங்க நண்பரே.....//

எல்லாம் ஒரு பொழுதுபோக்குதான் நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//Kannan said..
summa natchunu irukuvoi ungal padaippu. keep it up!!!//

thanks boss.. keep coming

கார்த்திகைப் பாண்டியன் said...

//விஷ்ணு.. //

நன்றி நண்பா.. நல்ல அலசல்.. ஆனா எப்படி கூசாம மக்களுக்கு மெசேஜ் சொல்றாங்க பாருங்க.. உங்க பாசிடிவ் அப்ரோச் தூள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டிக்காட்டான் said..
இப்படியெல்லாம் இருந்தா தான் அத தமிழ் சினிமான்னு சிலபேர் நம்புறாங்க..//

எல்லாம் நம்ம நேரம்தான நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
இப்பவெல்லாம் தமிழ்படத்துல நீங்க சொன்ன காட்சிகளை தவிர்க்கிறாங்களே.... ஒரு சில உப்புமா நடிகர்களை தவிர
...நக்கலுக்கு குறைவில்லாத பதிவு//

இப்ப குறஞ்சிருக்கறது உண்மைதான் நண்பா.. அதுதான் காலம் காலமான்னு முதலிலேயே பிட்ட போட்டுட்டோம்ல

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said..
ஒரு தமிழ் படம் எடுக்க முழு தகுதியும் உங்களுக்கு இருக்கு!//

வாலோட வாழ்த்துக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
ஆக இயக்குனர் ஆவதற்கு எல்லாதகுதியும் உங்ககிட்ட இருக்கு,
எப்ப படம் இயக்கபோகிறீர்கள்//

உங்க ஆசிதான் நண்பா.. பணத்த ரெடி பண்ணுங்க தயாரிப்பாளரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
எப்படியிருக்கீங்க? 10 நாட்களாக ஒரே பிஸி.(எலக்ஸன் வந்தாலே இப்படிதாங்க... நம்மள நிம்மதியா சோறு திங்க விடமாட்டானுக...)
தங்கள் சினிமா பத்தின கருத்து அப்பட்டமான உண்மை.//

வாங்க ராம்.. உங்களுடைய பிசி நேரத்திலும் நம்ம மக்களுக்காக நேரம் ஒதுக்கி வரதுக்கு நன்றி.. உங்க பாயின்ட்சும் தூள்.. take care while roaming around for election duties ram

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
நிறைய இருக்குங்க.. எழுத நேரமில்லை!!! நேரில் பார்க்கும் பொழுது பொழுதுபோகாட்டி பேசுவோம்!!!!!//

சீக்கிரம் பார்க்கலாம் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//சோம்பேறி said..
அட.. கதா செத்துடுறாரா? எந்த கிரகத்தில் இருக்கீங்க நீங்க?//

நம்ம வலையுலக தாதா டீயார் படங்களை பாருங்க.. அவர் சாகாம இருந்தாத்தான் அதிசயம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
ஆகா பேராசிரியர் ஒரு மார்க்கமாத்தான்யா அலையுறாரு !!!//

அப்பப்போ கொஞ்சம் நட்டு கழண்டிடும் நண்பா.. கண்டுக்காதீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Pappu said..
அப்புறம் கிராம்த்து கதைன்னா, மதுரய காட்டுறது. மதுரக்காரன் எல்லாருமே பட்டிக்காட்டுப் பயல மாதிரியே பேச விடுறது.//

நம்ம ஊரை தப்பா காமிக்கிறாய்ங்கன்னு பப்பு பயபுள்ளைக்கு எவ்ளோ கோபம் பாரு.. நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷீ-நிசி said..
அப்பா! படம் பார்த்து முடிச்ச எஃபெக்ட் பா....பின்னிட்ட போ!//

வாங்க ஷீ.. நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
*பொண்ணு பாக்கப் போறப்ப. "இப்டியே ஒக்காந்துருந்தா எப்டி"னு ஒரு பெருசு சொல்லும்...
* மருத்துவர் ( அவரு இல்லீங்கோ!) கண்ணாடிய கழட்டிடு பேசுற டயலாக் எங்க?//

ஆகா நம்ம டக்கும் ரெண்டு மூணு ஐட்டத்தை அவுத்து விட்டுருக்கே.. நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

நண்பரே.. திரைக்கதையின் இதுபோன்ற முக அமைப்பை உடைக்கவேண்டெமென்றால் உங்களைப் போன்றவர்கள்தான் இயக்குநர்களாக வேண்டும். :-)
நீங்கள் சொல்வதும் சரிதான்.. ஆனாலும் சமீபகாலத் திரைப்படங்களில், நடிகர் விஜய் படத்தைத் தவிர, (வில்லு பார்த்த பாதிப்பு.. விஜய் ரசிகர்கள் மன்னிக்கனும்) ஏனையோர் படங்களில் பெரும்பாலும் மாறியுள்ளன என்றே சொல்லலாம். சரி விடுங்க.. சமூகப் பொறுப்பில்லாத மிகப் பெரிய பணக்கார ஊடகமான சினிமாவைப் பற்றி பேசுவதே கால விரயம்தான்..

Karthik said...

ஹீரோ ஹீரோயினை காதலிக்கும் சம்பவங்களே சிரிப்பா இருக்கும்.. அவன் ஊர் உலகத்திற்கு நல்லது செய்வான், அவ உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வாள்... இல்ல மழைல நனஞ்சாப்புல, அங்கங்களை காட்டும் ஒரு கிளு கிளு சாங்க்... சும்மா கிடந்த நாய தூக்கி கொஞ்சுனா லவ்வு.. இது தான் நாய்க்காதல்.. இல்லாட்டி வில்லன் கற்பழிக்க வரும் போது, ஹீரோ காப்பாத்துனா, லவ்வு... இந்த வில்லன் இருக்கானே, ஹீரோவோட தங்கச்சிய மட்டும் சீக்கிரமா ரேப் பண்ணிடுவான்.. ஹீரோ வீட்டு வெளியே, சாகவாசமா, டீ குடிப்பாரு.. ஹீரோயின் பல சமயம் வில்லனோட தங்கச்சி, பொண்ணா இருக்கும்.. சொந்த பந்தம் இல்லனா, வில்லன் கொஞ்ச நேரம் கபடி விளையாடி, சரியா புடவையை உருவும் போது, பல மைல் அப்பால உள்ள ஹீரோ சட்டுனு கண்ணாடிய உடச்சி உள்ள புகுந்து வில்லன் மூஞ்சில ஒரு குத்து... ஹீரோயின் கிட்ட, என் கடமைய தானே செஞ்சேன்னு ஒரு பிட்டு.. இதுவே மொக்க ஃபிகரா இருந்தா, நீ என் தங்கச்சி மாதிரினு பிட்டு... அப்றோம் இவர் ஹீரோயின கூட்டிட்டு போய், குஜால் பண்ணுவாரு.. டேய்.. வில்லனும் அதே தான் பண்ண போறான்.. அப்ப உனக்கும், வில்லனுக்கும் என்ன வித்தியாசம்?



idhaiye naan oru padhiba pothullen.. adhula irundu eduths bit thaan idhu ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

//உழவன்.. ///

நாம என்ன நண்பா பண்ண முடியும்.. இருந்தாலும் இன்னைக்கு கொஞ்ச விஷயங்கள் மாறிட்டு வரத்து சந்தோஷம் தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthick said...
idhaiye naan oru padhiba pothullen.. adhula irundu eduths bit thaan idhu ;)//

thanks boss

Karthik Lollu said...

Idhukku edukku boss thanks?? neenga en blog vandu unga votea kuthunga!!

குமரை நிலாவன் said...

அவ்வ்வ்வ்வ்வ்... இந்த மாதிரி நெறைய இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க நண்பா..