May 5, 2009

ஓட்டுப் பொறுக்கும் பச்சோந்திகள்..!!!

"என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்த கேவலமான அரசியல்வாதி(வியாதி)களோட எங்கள கம்பேர் பண்ணி எழுதுவ..." அப்படின்னு பச்சோந்திகள் எல்லாம் என்னோட வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்கோம்னு அடம் பிடிக்காம இருந்தா சரி.. ஏன்னா இது உண்ணாவிரத சீசன் பாருங்க.. தேர்தல் வந்தாலும் வந்துச்சு .. இவங்களோட அலும்பு தாங்க முடியல.. நேரத்துக்கு ஒரு பேச்சு, நிமிஷத்துக்கு ஒரு பல்டி.. அடங்கப்பா,,, இது உலக நடிப்புடா சாமின்னு ஆளாளுக்கு பிச்சு உதறுராய்ங்க.. இந்த தேர்தல்ல யாருக்குத்தான் ஓட்டு போடுறது? மண்டை காயுது.. எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு செலக்ட் பண்ண வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்..
கலைஞர்: இருக்குறதிலேயே பாவப்பட்ட ஜீவன்.. புலிவால் பிடிச்ச நாயர் கதை தான்.. காங்கிரசை விட்டு விலகுனா ஆட்சி போய்டும்.. இயற்கையா இருக்குற புலி பாசத்தையும் விட முடியாம.. படுற பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல. கழகமே குடும்பம்னு இருந்த காலம் போய் என்னைக்கு குடும்பமே கழகம்னு கலைஞர் நினைக்க ஆரம்பிச்சாரோ, அன்னைக்கு பிடிச்சது சனி. முத்துக்குமார் மரணம் இளைஞர்கள் மத்தியில ஒரு எழுச்சிய உண்டு பண்ணினப்ப காலேஜ் எல்லாம் லீவு விட்டு அடக்குனாரு.. காலைல பேரணில சீமானைப் பார்த்து கைய அசைச்சுட்டு சாயங்காலமே அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளினாறு.. பிராபாகரனை கைது பண்ணினா ஒழுங்கா நடத்தனும்.. இது முதல் நாள் அறிக்கை.. அவரு என்னோட பெஸ்ட் ப்ரெண்டு.. இது அடுத்த நாள் காமெடி.. எல்லாமே முன்னுக்கு முரண்.. இந்த தள்ளாத வயசுல கலைஞருக்கு இது தேவையா? எல்லாம் முடிஞ்ச பிறகு வர போலீஸ மாதிரி.. ஒரு ஆறு மணி நேர உண்ணாவிரதம் வேற.. தயவு செஞ்சு கலைஞர் டிவில வர அந்த கட்டுமரம் விளம்பரத்த நிப்பாட்டுங்கப்பா.. அதைப் பார்த்தா கடுப்புதான் வருது.. தமிழினத் தலைவர் தமிழீனத் தலைவரா மாறிப் போனாரு..
ஜெயலலிதா: இந்த அம்மாவாலேயே இவங்களை ஜட்ஜ் பண்ண முடியாது.. நாம அடுத்து என்ன செய்யப் போரோம்கிறது அவங்களுக்கே தெரியாது. இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் காதல் மாதிரி இவங்களுக்கு இப்போ வந்து இருக்குறது இலங்கைத் தமிழர்கள் மீதான இன்ஸ்டன்ட் பாசம். மார்ச் மாசம் இவங்க சொன்னது.. போர்னு வந்தா மக்கள் சாகுறது சகஜம் தானே.. ஆனா இன்னைக்கு சொல்றது.. நான் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் அமைக்க பாடுபடுவேன்.. அது எப்படிப்பா ஒரே மாசத்துல புத்தி மாறுச்சு? வீடியோ பார்த்தாங்களாம்.. மனசு மாறுச்சாம்.. அப்போ இதுக்கு முன்னாடி வந்த படங்கள எல்லாம் இந்த அம்மா பார்க்கவே இல்லையா? என்னாங்கடா கதை விடுறீங்க? யாரையுமே மதிக்கறதும் கிடையாது.. இந்த லட்சணத்துல பிரதமர் பதவியப் பத்தி வேற பேசுறாங்க.. நினச்சாலே கண்ண கட்டுதுடா சாமி..
ராமதாஸ்: இவரைப் பத்தி நான் இனிமேலும் என்ன சொல்ல? அந்த அம்மா என்னோட வேட்டிய உருவப் பார்த்துச்சு, தானைத் தலைவர் கலைஞர்தான் என் மானத்தைக் காப்பத்தினாறு.. ஈனம், மானம் ரோஷம் இருக்குறவன் அந்த அம்மா கூட இனிமேல் கூட்டணி பத்தி பேச மாட்டான். இதெல்லாம் டாக்டர் ஐயாவோட தத்துவ முத்துக்கள். தமிழ்நாடுலையே இவர் அளவுக்கு கூட்டணி மாறி யாருமே சாதனை பண்ணி இருக்க மாட்டாங்க.. என் குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் என்னை சாட்டையால் அடிங்கள்.. அப்படின்னு சொன்னவரு.. இப்போ சாட்டைய எங்கயோ மறந்து வச்சுட்டாரு போல.. ஜாதி பலம ஒன்னை மட்டுமே நம்பி அரசியல் பண்ற இவங்களை வளர்த்து விட்டது திராவிட கட்சிகளோட தப்பு..
வைகோ: இன்னைய தேதிக்கு தமிழக அரசியலின் காமெடி பீஸ். கிட்டத்தட்ட அ.தி.மு.க வோட கொள்கை பரப்பு செயலாளர் ரேஞ்சுக்கு இருந்த மனுஷன தொகுதிப் பங்கீட்டுல ஜெயா படுத்துன பாடு.. செம காமெடி. விடுதலைப் புலிகள் பிரச்சினை மட்டும் வரலைன்னா ஆள் இந்நேரத்துக்கு அட்ரஸ் இல்லாம போய் இருப்பாரு. ஜெயாவோட உண்ணாவிரத டிராமால கடைசியா பழரசம் கொடுத்து இவர் முடிச்சு வச்சப்போ, கேவலமா இருந்தது. எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிட்டாரு?
தேர்தல்ல ஓட்டு போட போகும்போது மட்டும்தான் மற்ற கட்சிக்காரன் கும்பிடுவான். ஆனா கம்யூனிஸ்ட் ஒருத்தன்தான் திரும்பி வரப்பவும் கும்பிட்டு நன்றி சொல்லுவான். அது அந்தக் காலம். இன்னைக்கு அவங்களுக்கும் பதவி ஆசைதான் முக்கியமாப் போச்சு. காங்கிரஸ் இன்னைக்கு தமிழ்நாட்டுல காலி பெருங்காய டப்பா. ஆ ஊன்னு குதிச்ச திருமா காங்கிரஸ் கூடவே கூட்டணி வச்சு இருக்காரு. விஜயகாந்தோ பணம் வாங்கிகிட்டு தனியா நிக்குறதா சொல்றாங்க. நாங்களும் கட்சி வச்சு இருக்கோம்னு சொல்லத்தான் சரத் பி. ஜெ. பி கூட கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்கிராரு.
இதுல யாருக்கு ஓட்டு போட? இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு.. தன்னோட அம்மாவாகவே இருந்தாலும், விதிய மீறி போட்ட தண்ணிக்குழாய எடுக்க சொன்ன கர்மவீரர் காமராசர் எங்கே.. ஓட்டுக்காக ...யக் கூட தின்கிற இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஒத்தப் பைசா கூட இல்லாம செத்துப்போன கக்கன், ஜீவா போன்ற பல தலைவர்கள் இருந்த அரசியல் எல்லாம் இன்னைக்கு நாசமாப் போச்சு. இன்னைக்கு பாக்கி இருக்குறது பொறுக்கித் தின்னுற சந்தர்ப்பவாதிக தான். அதனால் நான் இந்த தடவை யாருக்கும் ஓட்டே போடப் போறதில்ல. "O" போடலாம்னா அதை பகிரங்கமாத்தான் செய்யணும். அது பிரச்சினை. உன்னோட ஜனநாயகக் கடமைய புறக்கணிக்க கூடாதுன்னு சொல்றவங்களுக்கு.. தப்பான ஒருத்தனுக்கு ஓட்டு போடுறதும் குற்றம்தான். இந்த நிலைமை மாறனும்னு வேண்டுரதைத் தவிர்த்து நான் செய்யக் கூடியது வேற ஒண்ணுமில்லை..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

63 comments:

பீர் | Peer said...

//இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு..//

நிஜம்.

லோகு said...

பேராசிரியரே.. ஏன் இவ்ளோ கோபம்.. உங்க தொகுதி சுயேட்சைகள் யாருக்காவது போடலாம்ல..

Raju said...

தன்மானத்தலைவர்கள் கார்த்திக்,சரத்துகொமாரு, விசயகாந்து, டி.ஆரு இவர்களை லிஸ்ட்டில் சேர்க்காததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!

வினோத் கெளதம் said...

//பேராசிரியரே.. ஏன் இவ்ளோ கோபம்.. உங்க தொகுதி சுயேட்சைகள் யாருக்காவது போடலாம்ல..//

Athey taan naanum solren..

Suresh said...

மச்சான் சரி சூப்பர் பதிவு ;) இரு இன்னும் சொல்லுறேன்

Suresh said...

மச்சான் எங்க ஊருல இப்போ கரண்ட் கட்டே இல்ல மச்சி, :-(

எல்லாம் தேர்தல் மாயம்

இருந்தாலும் இப்படி பச்சோந்திய அசிங்க படுத்திருக்க கூடாது ;)

சரி சுயேட்சைக்கு போடு மச்சி

Karthik said...

நானும் இதே நிலையில் தான் இருக்கேன். ஆனா ஓட்டு போட வேண்டியதில்லை. :)

புதியவன் said...

//தன்னோட அம்மாவாகவே இருந்தாலும், விதிய மீறி போட்ட தண்ணிக்குழாய எடுக்க சொன்ன கர்மவீரர் காமராசர் எங்கே..//

அது ஒரு அழகிய அரசியல் காலம்...

Rajeswari said...

சித்திரை வெயிலில் சூடான இடுக்கை...

அருமை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-Peer said...
//இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு..//நிஜம்.//

எனது ஆதங்கமும் அதுதான் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said...
பேராசிரியரே.. ஏன் இவ்ளோ கோபம்.. உங்க தொகுதி சுயேட்சைகள் யாருக்காவது போடலாம்ல..//

எல்லாமே போங்கு நண்பா.. ஓட்டு வேச்டாத்தான் போகும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
தன்மானத்தலைவர்கள் கார்த்திக்,சரத்துகொமாரு, விசயகாந்து, டி.ஆரு இவர்களை லிஸ்ட்டில் சேர்க்காததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!//

உன்னைய மாதிரியே காமெடி பீஸ்தான இதெல்லாம்.. அதுதான் மாப்பு கண்டுக்கல

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
//பேராசிரியரே.. ஏன் இவ்ளோ கோபம்.. உங்க தொகுதி சுயேட்சைகள் யாருக்காவது போடலாம்ல..//Athey taan naanum solren..//

நொந்து போய் இருக்கேன் வினோத்.. அதனாலத்தான் இந்த முடிவு

கார்த்திகைப் பாண்டியன் said...

// Suresh said...
மச்சான் எங்க ஊருல இப்போ கரண்ட் கட்டே இல்ல மச்சி, :-(எல்லாம் தேர்தல் மாயம்.இருந்தாலும் இப்படி பச்சோந்திய அசிங்க படுத்திருக்க கூடாது ;)//

தேர்தல் படுத்தும் பாடு.. எல்லாம் பிரம்மை

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
நானும் இதே நிலையில் தான் இருக்கேன். ஆனா ஓட்டு போட வேண்டியதில்லை. :)//

நமக்கு இன்னும் ஓட்டே வரலையா? குட்டிப்பையா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
//தன்னோட அம்மாவாகவே இருந்தாலும், விதிய மீறி போட்ட தண்ணிக்குழாய எடுக்க சொன்ன கர்மவீரர் காமராசர் எங்கே..//
அது ஒரு அழகிய அரசியல் காலம்..//

அப்படி யாராவது வர மாட்டாங்களான்னு மனசு அடிச்சுக்குது நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// Rajeswari said...
சித்திரை வெயிலில் சூடான இடுக்கை...அருமை..//

நன்றி தோழி..

குடந்தை அன்புமணி said...

49 ஓ(o) போடவிருப்பம் இல்லைன்னா... சுயட்சைக்காவது போடணும். இல்லேன்னா சுட்டுருவானுங்க ஓட்டை!

Anonymous said...

what about the great Thiruma?

தீப்பெட்டி said...

//லோகு said...

பேராசிரியரே.. ஏன் இவ்ளோ கோபம்.. உங்க தொகுதி சுயேட்சைகள் யாருக்காவது போடலாம்ல//

அதான...

எதுக்கும் நம்ம அழகிரி அங்கிள்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிட்டு பண்ணுங்க...

;-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said...
49 ஓ(o) போடவிருப்பம் இல்லைன்னா... சுயட்சைக்காவது போடணும். இல்லேன்னா சுட்டுருவானுங்க ஓட்டை!//

யோசிக்கிறேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
what about the great Thiruma?//


ஆ ஊன்னு குதிச்ச திருமா காங்கிரஸ் கூடவே கூட்டணி வச்சு இருக்காரு.. பதிவுலையே சொல்லி இருக்கேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
எதுக்கும் நம்ம அழகிரி அங்கிள்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிட்டு பண்ணுங்க...;-)//

நான் நல்லா இருக்குறது உங்க கண்ண உறுத்துது?

நையாண்டி நைனா said...

கொஞ்ச நாளா நம்மை படுத்தி எடுத்துட்டாங்க. அதனாலே கொஞ்சம் உங்களை எல்லாம் கவனிக்க முடியாமே போயிட்டு, அதாவது பின்னூட்டம் மூலமா. மற்றபடி பதிவை படிச்சிருவேன்.

I am back.

ஆ.சுதா said...

நம்ம விஜயகாந்தை பற்றி ஒரு பத்தி போட்டுருக்கலாம தல... விட்டுடீங்கல.!!

//இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு..//

உண்மையான வாரத்தை.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
கொஞ்ச நாளா நம்மை படுத்தி எடுத்துட்டாங்க. அதனாலே கொஞ்சம் உங்களை எல்லாம் கவனிக்க முடியாமே போயிட்டு, அதாவது பின்னூட்டம் மூலமா. மற்றபடி பதிவை படிச்சிருவேன்.I am back.//

Welcome back nainaa..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நம்ம விஜயகாந்தை பற்றி ஒரு பத்தி போட்டுருக்கலாம தல... விட்டுடீங்கல.!!
//இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு..//
உண்மையான வாரத்தை.//

நன்றி நண்பா.. பதிவோட நீளம் கருதி கொஞ்சம் சுருக்கிட்டேன்..

Karthik lollu said...

adhukku thaan enna maadhiri endrum 16aah irukanum.. vote poda venaam le..

குமரை நிலாவன் said...

எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு செலக்ட் பண்ண வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்..

உண்மை தான் நண்பா ...

சுந்தர் said...

தென்சென்னை சரத் மாதிரி நம்ம ஊர்ல யாரும் நிக்காதது, ஒரு பெரும் குறையே .

Unknown said...

அண்ணே நல்லா இருக்கு.

Prabhu said...

ஓ போடுறதுக்கு பதிலா, 49 'o' form வாங்கி போட்டாலாவது புண்ணியம்.

அத்திரி said...

அசத்தல் பதிவு......

//vinoth gowtham said...
//பேராசிரியரே.. ஏன் இவ்ளோ கோபம்.. உங்க தொகுதி சுயேட்சைகள் யாருக்காவது போடலாம்ல..//Athey taan naanum solren..//


நண்பா மதுரையில இருந்துட்டு சுயேச்சைக்கு ஓட்டு போட போறியா..........இரு இரு சொல்றேன்

We The People said...

//இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு.. தன்னோட அம்மாவாகவே இருந்தாலும், விதிய மீறி போட்ட தண்ணிக்குழாய எடுக்க சொன்ன கர்மவீரர் காமராசர் எங்கே.. ஓட்டுக்காக ...யக் கூட தின்கிற இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஒத்தப் பைசா கூட இல்லாம செத்துப்போன கக்கன், ஜீவா போன்ற பல தலைவர்கள் இருந்த அரசியல் எல்லாம் இன்னைக்கு நாசமாப் போச்சு. இன்னைக்கு பாக்கி இருக்குறது பொறுக்கித் தின்னுற சந்தர்ப்பவாதிக தான்.//

நெத்தியடி!! 100% உண்மை!! ரிப்பீட்டு!!

வேத்தியன் said...

அருமையா எழுதியிருக்கீங்க தல...

இன்னைக்கு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு விட்டுத் தள்ள வேண்டியது தான்...

:-)

செந்தில்குமார் said...

நல்ல பதிவு. உங்க கோவமும் ஆதங்கமும் தெளிவா புரியுது..

ஆனா சுந்தர் சொன்னதுபோல 'சரத்பாபு' மாதிரி ஒரு ஆள் மதுரை-ல போட்டியிட்டிருந்தா உங்க வோட்டே அவருக்காவது போட்டிருக்கலாம் (அது என்னோட எண்ணம் !). ஆனா சரத்பாபு மதுரை-ல இருந்திருந்தா சுயேட்சையா போட்டியிட்டிருக்க முடியுமா ? அண்ணன் அஞ்சாநெஞ்சன் விட்டிருப்பாரா ?? சரி.. அந்த சர்ச்சைய கேலப்புவானேன் ??

சொல்லரசன் said...

//இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.//
சனநாயகம் செத்து பணநாயகம் நடைபெறும் காலம் கா.பா.இதில் கொள்கையாவது கோட்பாடுவாது?

நசரேயன் said...

காய்ச்சி எடுத்துடீங்க

ஆதவா said...

இப்படி வாங்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை!!! எனிவே... மே 13 ல் ஒருவேளை மீட்டிங் நடந்தா என்னாலும் ஓட்டு போட முடியாது!!

அடுத்தமுறை திருப்பூர் தொகுதிக்கு நான் நிக்கறேன்.. யாராச்சும் ஓட்டு போடுங்க!!! ?ஹி ஹி

ச.பிரேம்குமார் said...

பாண்டியா, கலக்கிட்ட ராசா :-)

ச.பிரேம்குமார் said...

அரசியல் பத்தி உங்க மாணவர்கள் கிட்ட பேசியிருக்கீங்களா? அவுங்க எல்லாம் என்ன நினைக்கிறாங்க?

அகநாழிகை said...

கார்த்தி,
ஒவ்வொரு சராசரி மனிதனின் நேர்மையான மனோநிலையும், கருத்துக்களும்தான் உங்கள் பதிவு. வாசிப்பு சுவாரசியத்துடன் நன்றாக உள்ளது.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik lollu said...
adhukku thaan enna maadhiri endrum 16aah irukanum.. vote poda venaam le..//

மகனே.. இன்னும் எத்தனை வருஷம் நீங்க பதினாருன்னே சொல்றீங்கன்னு பார்ப்போம்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு செலக்ட் பண்ண வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்..உண்மை தான் நண்பா ...//

வருத்தப்பட வேண்டிய விஷயம் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//sundar said...
தென்சென்னை சரத் மாதிரி நம்ம ஊர்ல யாரும் நிக்காதது, ஒரு பெரும் குறையே .//

நம்ம ஊரான்னே நீங்க? வாங்க.. வணக்கம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கே.ரவிஷங்கர் said...
அண்ணே நல்லா இருக்கு.//

நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
ஓ போடுறதுக்கு பதிலா, 49 'o' form வாங்கி போட்டாலாவது புண்ணியம்.//

அட.. அதத்தான்ப்பா நானும் பிரச்சினைன்னு சொல்றேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
அசத்தல் பதிவு...... //

டாங்க்ஸ் தலைவா

கார்த்திகைப் பாண்டியன் said...

//We The People said...
நெத்தியடி!! 100% உண்மை!! ரிப்பீட்டு!!//

ரொம்ப நன்றி தோழர்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
அருமையா எழுதியிருக்கீங்க தல...
இன்னைக்கு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு விட்டுத் தள்ள வேண்டியது தான்...:-)//

அப்படி விட முடியலையே நண்பா.. நாசமாப் போறது நாடும் நாமளும்தானே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//செந்தில்குமார் said...
நல்ல பதிவு. உங்க கோவமும் ஆதங்கமும் தெளிவா புரியுது..
ஆனா சுந்தர் ன்னதுபோல 'சரத்பாபு' மாதிரி ஒரு ஆள் மதுரை-ல போட்டியிட்டிருந்தா உங்க வோட்டே அவருக்காவது போட்டிருக்கலாம் (அது என்னோட எண்ணம் !). ஆனா சரத்பாபு மதுரை-ல இருந்திருந்தா சுயேட்சையா போட்டியிட்டிருக்க முடியுமா ? அண்ணன் அஞ்சாநெஞ்சன் விட்டிருப்பாரா ?? சரி.. அந்த சர்ச்சைய கேலப்புவானேன் ??//

உண்மைதான் நண்பா.. மதுரைல சொல்லிக்கிற மாதிரி யாரும் நிக்கல.. அப்படி நல்லவங்களா இருந்தா நிக்க விடுவாங்களான்னும் தெரியல

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
சனநாயகம் செத்து பணநாயகம் நடைபெறும் காலம் கா.பா.இதில் கொள்கையாவது கோட்பாடுவாது?//

வருத்தப்பட வேண்டிய விஷயம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
காய்ச்சி எடுத்துடீங்க//

எல்லாம் ஒரு கோபம்தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
இப்படி வாங்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை!!! எனிவே... மே 13 ல் ஒருவேளை மீட்டிங் நடந்தா என்னாலும் ஓட்டு போட முடியாது!!//

ஒரு வேளையா? ஹலோ.. கன்பார்ம்.. சந்திப்பு உண்டு நண்பா

//அடுத்தமுறை திருப்பூர் தொகுதிக்கு நான் நிக்கறேன்.. யாராச்சும் ஓட்டு போடுங்க!!! ?ஹி ஹி//

ஹி ஹி..எல்லாம் பிரம்மை

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.பிரேம்குமார் said...
பாண்டியா, கலக்கிட்ட ராசா :-)//

நன்றி.. என்னாச்சு பிரேம்.. நிறைய பேர் வந்துட்டாங்கன்னு பேர் மாற்றமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.பிரேம்குமார் said...
அரசியல் பத்தி உங்க மாணவர்கள் கிட்ட பேசியிருக்கீங்களா? அவுங்க எல்லாம் என்ன நினைக்கிறாங்க?//

உண்மையச் சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு பிரேம்.. இன்றைய மாணவர்கள் இதைப் பற்றி எல்லாம் சிந்திப்பதே இல்லை..நாம பேசினாலும் அவ்வளவாக கண்டு கொள்வது கிடையாது.. நான், என்னோட.. இதுக்குத்தான் முக்கியத்துவம் தராங்க.. நாளைப்பின்ன என்ன நடக்கும்னு புரியல

கார்த்திகைப் பாண்டியன் said...

//"அகநாழிகை" said...
கார்த்தி,ஒவ்வொரு சராசரி மனிதனின் நேர்மையான மனோநிலையும், கருத்துக்களும்தான் உங்கள் பதிவு. வாசிப்பு சுவாரசியத்துடன் நன்றாக உள்ளது.//

நன்றி வாசு.. எழுதனும்னு தோணினத அப்படியே எழுதி இருக்கேன்

ச.பிரேம்குமார் said...

பெயர் மாற்றமா? ராசா, என் முதலெழுத்தை சேர்த்திருக்கிறேன்... அம்புட்டுத்தேன் :)

ச.பிரேம்குமார் said...

//உண்மையச் சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு பிரேம்.. இன்றைய மாணவர்கள் இதைப் பற்றி எல்லாம் சிந்திப்பதே இல்லை..நாம பேசினாலும் அவ்வளவாக கண்டு கொள்வது கிடையாது.. நான், என்னோட.. இதுக்குத்தான் முக்கியத்துவம் தராங்க.. நாளைப்பின்ன என்ன நடக்கும்னு புரியல//

ம்ம், அறிவேன்... Competitive Worldன்னு சொல்லி சொல்லி நாம தான் அவுங்கள் ரொம்ப சுயநலவாதிகளா மாத்திட்டோம் :(

Sukumar said...

அருமையான பதிவு...

Unknown said...

ஒரு மாத இடைவேளைக்கு பிறகு மீண்டும் நான் ..

நல்ல பதிவு..
முடிவு என்ன..??

நல்லவேளை என்னோட பெயர 7 வருசமா வாக்காளர் பட்டியல்ல சேர்க்கவே மாட்டிங்குறாங்க..

Dhavappudhalvan said...

"ஓட்டுப் பொறுக்கும் பச்சோந்திகள்..!"
தலைப்பிலேயே சூடு பறக்குதுங்க.

"கலைஞர்: இருக்குறதிலேயே பாவப்பட்ட ஜீவன்.."
தப்பா சொல்றிங்க.

கழகமே குடும்பம்னு இருந்த காலம் போய் என்னைக்கு குடும்பமே கழகம்னு கலைஞர் நினைக்க ஆரம்பிச்சாரோ, """"அன்னைக்கு பிடிச்சது சனி."""
இதுலயெல்லாம் நம்பிக்கையில்லைங்க, திராவிட பரம்பரையிலே.

"இந்த தள்ளாத வயசுல கலைஞருக்கு இது தேவையா?"
இல்லன்னா மதிக்க மாட்டாங்களே.

"ஜெயலலிதா: இந்த அம்மாவாலேயே இவங்களை ஜட்ஜ் பண்ண முடியாது.."
ஆதாயத்துக்காக அரசியல்(வியா)வாதிகள், இவர் கால புடிச்சப்பவே ஆரம்பமாயிடுச்சி.

"நினச்சாலே கண்ண கட்டுதுடா சாமி.."
கண்ணு மட்டுமா கட்டும், ஹார்ட் அட்டாக்கே வந்துடும்.

"ராமதாஸ்:இவங்களை வளர்த்து விட்டது திராவிட கட்சிகளோட தப்பு"
அரசியல் வியாபாரிகளுக்கு லாபம் மட்டுமே குறி.நாய் வித்த காசு குலைக்குமா என்ன?

" தன்னோட அம்மாவாகவே இருந்தாலும், விதிய மீறி போட்ட தண்ணிக்குழாய எடுக்க சொன்ன கர்மவீரர் காமராசர் எங்கே.. ஓட்டுக்காக ...யக் கூட தின்கிற இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஒத்தப் பைசா கூட இல்லாம செத்துப்போன கக்கன், ஜீவா போன்ற பல தலைவர்கள் இருந்த அரசியல் எல்லாம் இன்னைக்கு நாசமாப் போச்சு"
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்!

"வைகோ: இன்னைய தேதிக்கு தமிழக அரசியலின் காமெடி பீஸ்."

"தேர்தல்ல ஓட்டு போட போகும்போது மட்டும்தான் மற்ற கட்சிக்காரன் கும்பிடுவான். ஆனா கம்யூனிஸ்ட் ஒருத்தன்தான் திரும்பி வரப்பவும் கும்பிட்டு நன்றி சொல்லுவான். அது அந்தக் காலம்."

உண்மை தான் என்ன செய்ய. பதிவிலே இருக்கிற ஒவ்வொரு வரிக்கும் கருத்து எழுதலாம், அவ்வளவு அருமை. பிச்சிருக்கிங்க, பிச்சிற போறாங்க ஜாக்கிரதை. ஆனா தவறாம யாருக்காவது ஓட்டை அழுத்திட்டு வாங்க.

"உழவன்" "Uzhavan" said...

என்ன தலைவா.. இப்படி எல்லரையும் ஒட்டு மொத்தமா போட்டு புரட்டி எடுத்திட்டீங்க.. அப்ப ஒட்டுப் போடப் போறதில்ல??
தேர்தல் அன்று பதிவர் வட்டம் வைக்க இதுதான் காரணமோ? ஒரு பயலையும் தேர்தல் பூத் பக்கமே போகவிடக் கூடாதுனு முடிவு பண்ணிட்டீங்க..