May 16, 2009

ராஜாதி ராஜா - திரை விமர்சனம்...!!!


நீங்க: இதெல்லாம் ஒரு படம்னு ஏண்டா போய் பாக்குற?


நான்: வேற என்னண்ணே பண்ண.. நமக்கு சினிமா தான ஒரே பொழுதுபோக்கு..பசங்க சர்வம் நல்லா இல்லன்னு சொன்னாங்களேன்னு இதுக்கு போனேன்..எல்லாம் ஏன் தலைஎழுத்து..


நீங்க: பார்த்தது தான் பார்த்து தொலைச்ச.. சரி.. அதை ஏன் பதிவா போட்டு எங்க உசிர வாங்குற?


நான்: யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்..இது உங்க தலைஎழுத்து.. ஹி ஹி ஹி..:-)


***************


"லோ கிளாஸ் கிங்" அப்படிங்குற கேப்ஷனோட படம் எடுத்து இருக்காங்க. இதுக்கு மேல கீழ்த்தரமா யாராலையும் எடுக்க முடியாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்க. பசங்க மாதிரி நல்ல படம் தமிழ்ல வர அதே நேரத்துல இப்படி ஒரு படம். கருமம்டா சாமி. எணபதுகள்ல வந்த கேவலமான மசாலா படம் கூட இதை விட நல்லா இருக்கும். இண்டெர்வல் வரைக்கும் நாம பாக்குறது தமிழ் படமா இல்ல மலையாள சீன் படமானு தெரியல. ஷக்தி சிதம்பரம் படம் சிரிப்பா இருக்கும்னு நம்பி போன மக்களுக்கு செருப்படி.


லாரன்சோட அப்பா அரசாங்க அதிகாரிகளின் தப்பால அவமானப்பட்டு சாகுராறு. சாகுறப்போ தன்னோட மொத மூணு பையன்களை நல்ல டாக்டரா, வக்கீலா, போலீசா கொண்டு வரணும்னு கடைசி பையனான லாரன்ஸ் கிட்ட சத்தியம் வாங்கிட்டு செத்துப் போறாரு. தான் படிக்காம கஷ்டப்பட்டு அண்ணன்களை படிக்க வைக்குறாரு லாரன்ஸ். ஆனா அவங்க பெரிய ஆள் ஆனதும் மக்களுக்கு சேவை செய்யாம, தப்பான அரசியல்வாதியான மும்தாஜ் கூட சேர்ந்துக்கிட்டு அநியாயம் பண்ணுறாங்க. இதுல லாரன்சோட கூடப் பொறக்காத தங்கச்சியும், எடுத்து வளர்த்த பாட்டியும் செத்துப் போறாங்க. அண்ணன்கள் கூட இருந்தே அவங்களை லாரன்ஸ் பழிவாங்குறதுதான் கதை.


லாரன்ஸ் நல்லா ஆடுறார். ஸ்டைல் பண்றார். பறந்து பறந்து சண்டை போடுறார். காமெடியும் நல்ல வருது. ஆனா காட்சிக்கு காட்சி ரஜினியை காப்பி அடிக்கிறார். வசனம் பேசுறது அப்படியே ரஜினி ஸ்டைல். ஏற்கனவே பாண்டின்னு ஒரு படம் நடிச்சு அது ஓடி வேற தொலைச்சிடுச்சு. இந்த மாதிரி படமா நடிச்சாத்தான் மாஸ் ஹீரோவா வர முடியும்னு யாரோ அவர்கிட்ட தப்ப சொல்லி இருக்காங்க. அண்ணன்களா போஸ் வெங்கட், யுகேந்திரன், இன்னொரு டிவி ஆர்டிஸ்ட். நல்ல நடிகர்களை எல்லாம் குப்பை கேரக்டர் கொடுத்து வேஸ்ட் பண்ணி இருக்காங்க. கருணாஸ் அப்பப்போ சிரிக்க வைக்கிறார்.


"நீ காலேஜ், நான் ட்ரைநேஜ்.." என்று வசனம் பேசும் வில்லியாக மும்தாஜ். ஆனா ஊன்னா சேலைக் கழற்றி வீசி விடுகிறார். சொந்தக் குரலில் பேசி தமிழின் மீது புல்டோசரை விட்டு ஏத்துகிறார். தப்பான தொழில் செய்யும் அரசியல்வாதி. கடைசியில் லாரன்சிடம் குத்து பட்டு சாகிறார். "அவுத்துப் போட்டு அலைவதே என் தொழில்" என்று நடித்து இருக்கிறார் மீனாட்சி. குற்றாலத்தில் மசாஜ் செய்யும் பெண்ணாக வந்து லாரன்சை ஒருதலையாக காதலிக்கிறார். நேரடியாக மலையாள பிட் படங்களில் நடிக்க முயற்சி செய்யலாம். அவ்வளவு கேவலமாக நடித்து உள்ளார். மும்தாஜின் தங்கையாக ஸ்னிக்தா. முதல் பாட்டுக்கு ஆடி விட்டு காணாமல் போய் இரண்டாம் பாதியில் லாரன்சின் காதலி ஆகிறார். காம்னாவுக்கு ஒரு பாட்டும், ரெண்டு சீனும். அட்டர் வேஸ்ட்.


பாட்டுகளை எல்லாம் எழுதி இருப்பவர்.. தானைத் தலைவர் பேரரசு. இசை அறிமுகம் - கருணாஸ். "யாரோ.." என்னும் ஒரு மெலடி மட்டும் தேறுகிறது. டீயார் வேறு ஒரு பாட்டு பாடி இருக்கார். படத்தில் ஓரளவு பார்க்குற மாதிரி இருக்கிறது.. கனல் கண்ணனின் சண்டைகளும், சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவும் தான். ஜெய் ஷங்கரின் எடிட்டிங் பயங்கர குழப்பம். ஸ்நிக்தாவுக்கும் லாரன்சுக்கும் குற்றாலத்தில் என்ன நடந்ததுன்னு எதுவுமே படத்துல இல்ல.


இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கதையை விட கதாநாயகிகளின் சதையை ரொம்ப நம்பி இருக்கார். வசனம் எல்லாமே ரெட்டை அர்த்தம்தான். ஒரு காமெடி - ஒரு சீன் பாட்டு - ஒரு சண்டை.. இதுதான் படம்னு எடுத்து இருக்கார். பாட்ஷா, தர்மதுரை போன்ற ரஜினி படங்களின் கதையை சுட்டு, ரஜினி பட பேரையே தலைப்பா வச்சா மட்டும் போதாது தலைவா. கொஞ்சம் உருப்புடியா யோசிங்க.


ராஜாதி ராஜா - வெத்து கூஜா...

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

54 comments:

வினோத் கெளதம் said...

லாரன்ஸ் படம்னாலே இப்படி தான் இருக்கும்னு ஆகிபோச்சு..

சக்தி சிதம்பரம் பேருக்கு முன்னாடி வேற எதோ பேர் பாத்த மாதிரி ஒரு நியாபகம்...
சார்லி சாப்ளின் நல்லா பண்ணி இருந்தாரு..அதுக்கு அப்புறம் மகா நடிகன்..
இங்கிலிஷ்க்கரன் கூட சுமாரான ஒரு படம் தான்..

மீனாக்ஷி கொஞ்சம் பூஜா மாதிரி இல்ல..

வேத்தியன் said...

me the second...

வேத்தியன் said...

படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் said...

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கதையை விட கதாநாயகிகளின் சதையை ரொம்ப நம்பி இருக்கார்//

ஆஹா இது சூப்பர்ண்ணே...

வேத்தியன் said...

ராஜாதி ராஜா - வெத்து கூஜா...//

ரைமிங்ல பின்னுறீங்களே...

வேத்தியன் said...

முதல்ல உங்களை சொல்லனுமண்ணே...

எதுக்கு இந்தப் படத்துக்கெல்லாம் போறீங்க??
இதுக்கு நீங்க சர்வமே போயிருக்கலாம்...
அது பெட்டர்...

வேத்தியன் said...

சர்வம் திரைவிமர்சனம் எழுதியிருக்கேன்...

http://jsprasu.blogspot.com/2009/05/blog-post_15.html#

முடிந்தால் வந்து பார்க்கவும்...

மேவி... said...

அந்த கொடுமையை என்னன்னு சொல்ல .......

சர்வம் ....
ராஜாதி ராஜா .....

இரண்டு படத்தையும் evening show , night show ன்னு பார்த்தேன்.....

எல்லாம் நண்பர்கள் தந்த இம்சை .....
சர்வம் அவது பரவல ....
இந்த படத்தை சாமி சத்யமா பார்க்க முடியல ......

600 ரூபாய் தண்ட செலவு

மேவி... said...

சர்வம் தான் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லைன்னு

ஷக்தி சிதம்பரம் தை நம்பி காமெடி இருக்கும் என்று எதிர்பார்த்து போனோம்.....

ராஜாதி ராஜா படம் சர்வம் படத்தை ரொம்ப நல்ல படம் ன்னு ஆகிருச்சு

"லோ கிளாஸ் கிங்" ன்னு பார்த்த போதே உஷார் அகிருக்குனும்.....
என்ன செய்ய விதி வலியது

மேவி... said...

என்ன ஒன்னு மும்தாஜ் க்கு குத்து பாட்டு வைத்து இருந்தால் நல்ல இருந்துருக்கும் ...


கண்ணை முடி மும்தாஜ் வாய்ஸ் யை மட்டும் கேட்டால்...
ஒரு horror படம் effect வருதுங்க

ஆர்வா said...

பசங்க மாதிரி படம் வர்ற இந்த கால கட்டத்துல,
இப்படிப்பட்ட ஒரு படம் எடுக்கிறவங்கள
.......................................... பண்ணனும்...

Anonymous said...

அப்போ.. சொ.செ.சூ மா??

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
லாரன்ஸ் படம்னாலே இப்படி தான் இருக்கும்னு ஆகிபோச்சு..//

நல்ல திறமையான மனுஷன வீனடிக்கிராங்களே நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
ஆஹா இது சூப்பர்ண்ணே...//

நான் நொந்து பொய் எழுதுனா உங்களுக்கு சூப்பரா?

//சர்வம் திரைவிமர்சனம் எழுதியிருக்கேன்...http://jsprasu.blogspot.com/2009/05/blog-post_15.html#முடிந்தால் வந்து பார்க்கவும்.//

அடி வாங்கப் போறீங்க வேத்தியன்.. நான் நேத்தே பார்த்து கமென்ட் போட்டு ஓட்டும் போட்டாச்சு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//MayVee said...
அந்த கொடுமையை என்னன்னு சொல்ல .......சர்வம் ....
ராஜாதி ராஜா .....இரண்டு படத்தையும் evening show , night show ன்னு பார்த்தேன்.....//

எனக்கு துணைக்கு ஆள் இருக்கா? ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் ராசா.. ரெண்டு ஷோவும் பார்த்தீங்களா? உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவிதை காதலன் said...
பசங்க மாதிரி படம் வர்ற இந்த கால கட்டத்துல,இப்படிப்பட்ட ஒரு படம் எடுக்கிறவங்கள .....................................பண்ணனும்...//

முதல் வருகைக்கு நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said...
அப்போ.. சொ.செ.சூ மா??//

ஆமா கவின்.. நானே வச்சுக்கிட்ட சூனியம்

மேவி... said...

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)


49o வசதி இருக்கா சார் ......
இந்த படத்திற்கு நோ vote

ஆதவா said...

முதல்ல என்னைச் சொல்லணும்ங்க... இந்த விமர்சனத்தை மெனக்கெட்டு படிச்சேன் பாருங்க...

படத்தோட ட்ரைய்லரைப் பார்த்ததுமே தெரிஞ்சுபோச்சு. (ட்ரைய்லர் பார்த்ததே பெரிய விஷயம்) இந்த படம் அட்ர வேஸ்ட்டுன்னு!!

படத்தை திட்டி எழுதிட்டதால தப்பிச்சீங்க..

சொல்லரசன் said...

ஆதவா said...
முதல்ல என்னைச் சொல்லணும்ங்க... இந்த விமர்சனத்தை மெனக்கெட்டு படிச்சேன் பாருங்க...இதை வழிமொழிகிறேன்

வழிப்போக்கன் said...

ராஜாதி ராஜா - வெத்து கூஜா...//

நீங்களே நல்லா ரைமிங்க தானே வசனம் எழுதுறீங்க..பேசாம உங்களயே வசனம் எழுத விட்டிருக்கலா...
:)))

வழிப்போக்கன் said...

லாரன்ஸ் பேசாம டான்ஸ் மாஸ்டராவே இருந்திருக்கலாம்ல???
பாவம் அவர் ...
விதி யார விட்டுச்சு???
:)))

Suresh said...

/தமிழின் மீது புல்டோசரை விட்டு ஏத்துகிறார்.//

ஹா ஹா மச்சான் உன் விமர்சனம் அருமை தலைவா

Suresh said...

சக்தி நமிதா நம்புவாரு இப்போ மும்தாஜ் ;)

Suresh said...

//ராஜாதி ராஜா - வெத்து கூஜா...///

எங்க தலைவர் படம் பெயர வச்சு கேவல படுத்துராங்க மக்கா...

என்ன செய்ய நாயகன் அருமையான டைடிலும் இந்த சினி உலகம் விட்டு வைக்கல

ஆ.சுதா said...

நண்பா... நான் கொஞ்சம் தாமதம்.
எங்க ஏரியாவுல நேற்று இரவு ஏழு மணிக்கு போன் கரன்ட் இன்னைக்கு ஏழு மணிக்குதான் வந்துச்சுபா!!!
_

நான்: யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்..இது உங்க தலைஎழுத்து.. ஹி ஹி ஹி..:-)

ஏன் இந்த கொலை வெறி!!!

பாட்டுகளை எல்லாம் எழுதி இருப்பவர்.. தானைத் தலைவர் பேரரசு.
இவரும் உண்டா!!!! முடியல!!

சொந்தக் குரலில் பேசி தமிழின் மீது புல்டோசரை விட்டு ஏத்துகிறார்.

ஹி.. ஹி.. (நச் காமன்டஸ்)

"அவுத்துப் போட்டு அலைவதே என் தொழில்" என்று நடித்து இருக்கிறார் மீனாட்சி. நேரடியாக மலையாள பிட் படங்களில் நடிக்க முயற்சி செய்யலாம்.

நம்ம கசாமிகுதாரர் பட மீனாட்சியா!!
இப்படி நம்ப... முடியலியே!!!


லாரன்ஸ் நல்லா ஆட்டக்காரருதான
அப்புறம் ஏன் இப்படி நடிக்கிறே வெடிக்கிறேன்னு வீனா போறாரு.
இப்படிதான் எஸ.ஜே.சூரியா, சேரன் இவுங்கல்லா தல்ல திறமையான இயக்குடர்தான.. அவுங்களுக்கு வர்ரத செய்ய வேண்டியதுதான.

ப்ரியமுடன் வசந்த் said...

என்னோட பின்னூட்டம் தவறா?
கார்த்திகைபாண்டியன்........

தவறயிருந்தால் மன்னிக்கவும்

நான் அதை நீக்கிவிட்டேன்

Karthik Lollu said...

Ponganne.. anda meenakshi sulukedukara scene vera censor cut pannitaanga... IDELBRAIN la stillse 1o mins odudu!! idhula jus 10 sec

ஆ.ஞானசேகரன் said...

//நான்: யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்..இது உங்க தலைஎழுத்து.. ஹி ஹி ஹி..:-)//

என்னா பெரிய மனசு உங்களுக்கு?????? ஏன்சார் நீங்கள் இப்படிபட்ட படத்துக்குதான் போவீங்களா? இல்லை நீங்கள் போனதால் அப்படியா????

கார்த்திகைப் பாண்டியன் said...

//MayVee said...
49o வசதி இருக்கா சார் ......
இந்த படத்திற்கு நோ vote//

பரவாயில்லை நண்பா.. அடுத்த பதிவுக்கு சேர்த்து ஓட்டு போடுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
முதல்ல என்னைச் சொல்லணும்ங்க... இந்த விமர்சனத்தை மெனக்கெட்டு படிச்சேன் பாருங்க..படத்தோட ட்ரைய்லரைப் பார்த்ததுமே தெரிஞ்சுபோச்சு. (ட்ரைய்லர் பார்த்ததே பெரிய விஷயம்) இந்த படம் அட்ர வேஸ்ட்டுன்னு!!
படத்தை திட்டி எழுதிட்டதால தப்பிச்சீங்க..//

நீங்க திட்டுவீங்கன்னுதானே ஆதவா முதலிலேயே என்னை நான் திட்டிக்கிட்டேன்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
ஆதவா said...
முதல்ல என்னைச் சொல்லணும்ங்க... இந்த விமர்சனத்தை மெனக்கெட்டு படிச்சேன் பாருங்க...இதை வழிமொழிகிறேன்//

எல்லாரும் கூட்டு சேர்ந்து திட்டாதீங்கப்பா.. நான் அழுதுடுவேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழிப்போக்கன் said...
நீங்களே நல்லா ரைமிங்க தானே வசனம் எழுதுறீங்க..பேசாம உங்களயே வசனம் எழுத விட்டிருக்கலா...
:)))//

அவதிப்பட நீங்க ரெடின்னா எழுத நானும் ரெடி பிரவீன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// Suresh said...
எங்க தலைவர் படம் பெயர வச்சு கேவல படுத்துராங்க மக்கா...//

அதுதான் மாப்பு எனக்கும் கடுப்பு.. தலைவரு பட டைட்டில அநியாயத்துக்கு அசிங்கப்படுத்தி இருக்காங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நண்பா... நான் கொஞ்சம் தாமதம்.
எங்க ஏரியாவுல நேற்று இரவு ஏழு மணிக்கு போன் கரன்ட் இன்னைக்கு ஏழு மணிக்குதான் வந்துச்சுபா!!! //

உங்களை விமர்சனம் படிக்க விடக் கூடாதுன்னு எதிர் நாட்டு சதி நண்பா

//லாரன்ஸ் நல்லா ஆட்டக்காரருதான
அப்புறம் ஏன் இப்படி நடிக்கிறே வெடிக்கிறேன்னு வீனா போறாரு.
இப்படிதான் எஸ.ஜே.சூரியா, சேரன் இவுங்கல்லா தல்ல திறமையான இயக்குடர்தான.. அவுங்களுக்கு வர்ரத செய்ய வேண்டியதுதான.//

சரியாச் சொன்னீங்க போங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்.......வசந்த் said...
என்னோட பின்னூட்டம் தவறா?
கார்த்திகைபாண்டியன்........
தவறயிருந்தால் மன்னிக்கவும்
நான் அதை நீக்கிவிட்டேன்//

ஐயோ நண்பா.. நான் ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் உங்கள் பின்னோட்டத்தை கவனிக்க வில்லை.. நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கூட எனக்குத் தெரியாது.. கண்டிப்பாக புண்படுத்தும் வரிகள் ஏதும் இருக்க போவதும் கிடையாது.. அப்புறம் எதற்கு மன்னிப்பு எல்லாம்.. எப்பவும் போல வந்து போங்கள் வசந்த்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik Lollu said...
Ponganne.. anda meenakshi sulukedukara scene vera censor cut pannitaanga... IDELBRAIN la stillse 1o mins odudu!! idhula jus 10 sec//

ஆகா.. எவ்வளவு முக்கியமான கவலை..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆ.ஞானசேகரன் said...
என்னா பெரிய மனசு உங்களுக்கு?????? ஏன்சார் நீங்கள் இப்படிபட்ட படத்துக்குதான் போவீங்களா? இல்லை நீங்கள் போனதால் அப்படியா????//

ரொம்ப புகழாதீங்க நண்பா.. நம்ம நேரத்துக்கு மொக்கை படமா வருது.. என்ன பண்ண?

லோகு said...

ஒரு படம் விடாம பிரிச்சு மேயறீங்க..

விரைவில் எதிர் பாருங்கள்..

கதை,
திரைக்கதை,
வசனம்,
இயக்கம்

- "மதுரையை மீட்ட கார்த்திகை பாண்டியன்..."

கார்த்திகைப் பாண்டியன் said...

நமக்கு பாக்குறதே போதும் லோகு.:-)

Joe said...

பாண்டியன்,
பணம் நெறைய வைச்சிருந்தீங்கன்னா, ஏழைப்பசங்களுக்கு துணி வாங்கி கொடுங்க.

இந்த படத்தையெல்லாம் ட்ரைலர் பாத்தவுடனேயே, படத்தை திருட்டு விசிடி-லே கூட பாக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட வேண்டாமா?

Revathyrkrishnan said...

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கதையை விட கதாநாயகிகளின் சதையை ரொம்ப நம்பி இருக்கார்//

வருத்தத்திற்குரிய விஷயம் இல்லையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

// Joe said...
பாண்டியன்,பணம் நெறைய வைச்சிருந்தீங்கன்னா, ஏழைப்பசங்களுக்கு துணி வாங்கி கொடுங்க.இந்த படத்தையெல்லாம் ட்ரைலர் பாத்தவுடனேயே, படத்தை திருட்டு விசிடி-லே கூட பாக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட வேண்டாமா?//

மக்களுக்கு என்னாலான உதவிகளைத் தனியா செய்றேன் நண்பா.. கொஞ்சம் பொழுது போகுமேன்னு போய் உக்கார்ந்தா இப்படி மாட்டிக்கிறேன்.. என்ன பண்ண..:-(

கார்த்திகைப் பாண்டியன் said...

// reena said...
வருத்தத்திற்குரிய விஷயம் இல்லையா?//

நிஜமாவே கேவலமான விஷயம் தான்.. முதல் வருகைக்கு நன்றி..

"உழவன்" "Uzhavan" said...

//ஆனா ஊன்னா சேலைக் கழற்றி வீசி விடுகிறார்//

மும்தாஜ் சேலை கட்டி வர்றாங்களா?? அடிக்கிற இந்த வெயிலுக்கு சேலையோடவே எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும்?
ம்ம்ம்.. குடுத்த காசுக்கு கொறையில்லாம நல்லா சீன் பார்த்திட்டு வந்திட்டு, குறை வேற சொல்லுறீங்க :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

அடப் பாவிகளா.. முடிவே கட்டிட்டீங்களா.. நான் நல்லவன் நல்லவன்.. நல்லவன்.. நம்புங்க சாமிகளா..

பட்டாம்பூச்சி said...

இது சூப்பர்ண்ணே!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி பட்டாம்பூச்சி..

சுந்தர் said...

நீங்கள் இம்மாதிரி படங்களை விமர்சிப்பதை விட, ஏதாவது ஆங்கில அல்லது பிற மொழி நல்ல படங்கள் பார்த்து , அதை என்னை போன்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் , இது என் அன்பான விண்ணப்பம் மட்டுமே.

குமரை நிலாவன் said...

நீங்கள் இம்மாதிரி படங்களை விமர்சிப்பதை விட, ஏதாவது ஆங்கில அல்லது பிற மொழி நல்ல படங்கள் பார்த்து , அதை என்னை போன்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் , இது என் அன்பான விண்ணப்பம் மட்டுமே.


நான் திரும்பவும் சொல்லிக்கிறேனுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேனீ - சுந்தர் said...
நீங்கள் இம்மாதிரி படங்களை விமர்சிப்பதை விட, ஏதாவது ஆங்கில அல்லது பிற மொழி நல்ல படங்கள் பார்த்து , அதை என்னை போன்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் , இது என் அன்பான விண்ணப்பம் மட்டுமே.//

நல்ல யோசனைதான் நண்பா.. கண்டிப்பா செய்யுறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
நான் திரும்பவும் சொல்லிக்கிறேனுங்க//

நீங்க சொல்றதும் சரிதான் நண்பா.. பார்த்து செய்யலாம்

அத்திரி said...

உங்க மனது தைரியம் தெரிகிறது........ நாங்க எல்லாம் இந்த மாதிரி மொக்கை படங்களை பாக்க்க்கூடாது அப்படிங்கிற உங்க நல்ல மனசு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னைய ஒழுங்கா புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆளு நீங்கதான் நண்பா..