May 22, 2009

ஹீரோ (HERO) - 2002..!!!


ஜெட்லி நடித்த சீன மொழி படங்கள் என்றாலே அடிதடி சண்டைக் காட்சிகளும், பறந்து பறந்து செய்யும் சாகசங்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றழைக்கப்படும் சண்டைப் படங்களைக் கூட ஒரு கலாப்பூர்வமான அனுபவமாக மாற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் "ஹீரோ"(Hero). சீனாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ஜாங் ஈமு(Zhang Yimou) இயக்கிய இந்தப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது.

கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்து சீனா. ஏழு தேசங்களாக பிரிந்து இருக்கிறது. கின் (QIN) என்ற நாட்டின் அரசன் எல்லா தேசங்களையும் வென்று ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஆசைப்படுகிறான். அவனைக் கொல்ல முயலும் மூன்று முக்கியமான சதிகாரர்கள்..ப்ரோகன் ஸ்வார்ட்(Broken sword)..பிளையிங் ஸ்னோ(Flying snow)..லாங் ஸ்கை(Long Sky). தன்னுடைய பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்பட்ட மாளிகையில் அரசன் வாழ்ந்து வருகிறான். யாரும் நூறு அடி தூரத்தில் இருந்துதான் அரசனிடம் பேச முடியும். சதிகாரர்களை கொல்லும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு தருவதாகவும் அரசன் அறிவிக்கிறான்.


இந்த சூழ்நிலையில் மூன்று சதிகாரர்களையும் தான் கொன்று விட்டதாக சொல்லிக் கொண்டு அரண்மனைக்கு வருகிறான் பெயரிலி(Nameless) ஒருவன். அவனை நன்றாக சோதனை செய்த பிறகு அரசனை சந்திக்க அனுமதிக்கிறார்கள். தான் கொன்றதாக சொல்லும் மூன்று பேரின் ஆயுதங்களையும் அவன் அரசனிடம் சமர்பிக்கிறான். பல பரிசுகள் பெறுவதோடு அரசனை நெருங்கி பத்தடி தூரத்தில் உட்காரும் வாய்ப்பும் கிடைக்கிறது. அவன் மூன்று பேரையும் எப்படி கொன்றான் என அரசன் கேட்க பெயரிலி தன் கதையை சொல்லத் துவங்குகிறான்.



செஸ் விளையாட்டுக்கூடம் ஒன்றில் ஸ்கையை நேரடியாக சந்திக்கிறான் பெயரிலி. அங்கே நடக்கும் ஆக்ரோஷமான சண்டையின் முடிவில் ஸ்கை சாகிறான். அவனுடையின் ஈட்டியின் முறிந்த முனையை எடுத்துக் கொண்டு ஜாவ் (Zhao) என்னும் நாட்டுக்கு பயணம் ஆகிறான் பெயரிலி. அங்கே ஒரு எழுத்துப்பயிற்சி பள்ளியில்தான் ஸ்நொவும் ஸ்வார்டும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் காதலர்கள். ஆனால் ஸ்கைக்கும் ஸ்நொவுக்கும் முன்னரே பழக்கம் உண்டு. இதை ஸ்வார்டிடம் தெரிவிக்கிறான் பெயரிலி. கோபம் கொள்ளும் ஸ்வார்ட் ஸ்னோவை பழி வாங்குவதற்காக அவள் கண்முன்னரே தன் பணிப்பெண்ணான மூனுடன் உறவு கொள்கிறான். வெறி கொள்ளும் ஸ்னோ ஸ்வார்டையும், மூனையும் குத்திக் கொல்கிறாள். மறுநாள் படைவீர்கள் முன்னால் பெயரிலியுடன் மோதும் ஸ்னோ ஆத்திரத்துடன் போராடி செத்துப்போகிறாள். இத்துடன் பெயரிலி சொல்லும் கதை முடிகிறது.



கதை கேட்கும் அரசன் பெயரிலி சொல்லும் கதையை நம்ப மறுக்கிறார். அவர்கள் சதிகாரர்கள் என்ற போதும் பண்பு நிறைந்தவர்கள் என்கிறார். உண்மையில் என்ன நடந்திருக்கும் என தான் நம்பும் கதையை சொல்லத் தொடங்குகிறார். உண்மையில் பெயரிலி அரசனைக் கொல்வதற்காக வந்தவன். அவனிடம் இருக்கும் விசேஷ சக்தியின் மூலம் பத்தடி தூரத்துக்குள் இருக்கும் யாரயும் அவனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கொல்ல முடியும். ஆனால் அரசனை நெருங்க வேண்டுமானால் மூன்று சதிகாரர்களையும் அவன் கொல்ல வேண்டும். ஸ்கை தன் உயிரைத் தியாகம் செய்கிறான். யார் தங்கள் உயிரை தியாகம் செய்வது என்று ஸ்நொவுக்கும் ஸ்வார்டுக்கும் போட்டி வேறுகிறது. கடைசியில் ஸ்வார்டைக் காயப்படுத்தி விட்டு ஸ்னோ பெயரிலியுடன் மோதுகிறாள். செத்தும் போகிறாள். ஸ்வார்ட் தன்னுடைய வாளைக் கொடுத்து அனுப்புகிறான். இதன் மூலம் அரசனை நெருங்கி அவரைக் கொல்ல முடியும் என்பது தான் பெயரிலியின் திட்டம் என்று கதையை முடிக்கிறார் அரசன்.


கொலை செய்யத்தான் வந்தேன் என்று உண்மையை ஒப்புக் கொள்கிறான் பெயரிலி. ஆனா அரசர் ஒருவனை தப்பாக எடை போட்டு விட்டதாக சொல்கிறான். அது ஸ்வார்ட். மூன்று வருடங்களுக்கு முன்னரே மன்னரைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தாலும் அவரை கொல்லாதவன் அவன். நாட்டு மக்களின் நலனுக்காகத்தான் மன்னர் போர் செய்கிறார் என்று நம்புபவன். ஸ்கை மற்றும் ஸ்நொவைக் கொன்றதாக கிளம்பும் பெயரிலியிடம் ஸ்வார்ட் பேசுகிறான். மன்னரின் நல்ல உள்ளத்தைப் புரிய வைக்கிறான். எனவே மன்னரைக் கொல்லும் முயற்சியைக் கைவிடுவதாக அரசனிடம் சொல்கிறான் பெயரிலி.


உண்மையில் ஸ்கையும் ஸ்நொவும் சாகவில்லை. பெயரிலியின் வித்தை அவர்களை கொன்ற மாதிரி நாடகம் ஆட உதவுகிறது. அரசனை கொல்ல பெயரிலி தவறி விட்டான் எனத் தெரிந்து ஸ்னோ ஆத்திரம் அடைகிறாள். ஸ்வார்ட் தான் அவன் மனதை மாற்றி விட்டன் என்று ஆத்திரம் கொண்டு அவனை தாக்குகிறாள். எதிர்த்துப் போரிடும் ஸ்வார்ட் ஒரு தருணத்தில் ஸ்னோ தாக வரும்போது தன் வாளை தாழ்த்தி கத்தியை தன் மார்பில் வாங்கிக் கொள்கிறான். தன் காதலை நிரூபிக்க வேறு வழி தெரியவில்லை என்று சொல்லி சாகிறான். அதே வாளால் குத்திக்கொண்டு ஸ்நொவும் சாகிறாள்.


நாட்டு மக்கள் கூட தன்னை வெறுக்கும்போது தன்னுடைய உண்மையான எண்ணத்தை புரிந்து கொண்டவன் தன்னுடைய முக்கியமான எதிரி என அறிந்து அரசன் அதிர்ந்து போகிறார். தன்னைக் கொல்ல வந்த பெயரிலியையும் தப்ப விட முடியாது. அது தவறான பாடமாகும். எனவே மனதை கல்லாக்கிக் கொண்டு பெயரிலியைக் கொல்ல உத்தரவு தருகிறார். ஆயிரக்கணக்கான அம்புகளை எய்து வீரர்கள் பெயரிலியைக் கொல்கிறார்கள். ஒரு வீரனாக சகல மரியாதையுடன் அவனுடைய சவ அடக்கம் நடைபெறுகிறது. பிற்காலத்தில் ஏழு நாடுகளையும் வென்று அரசன் சீனாவின் முதல் பேரரசராக ஆகிறார்.


ஜாங் ஈமு வண்ணங்களைக் காதலிப்பவர். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு ஓவிய அணிவகுப்பு போலவே இருக்கும். பெயரிலி சொல்லும் முதல் கதை முழுவதும் சிகப்பு நிற உடைகளையும் மஞ்சள் நிறத்தையும் வெகுவாக பயன்படுத்தி இருப்பார். மன்னரின் கதை முழுதும் நீல நிறம் பெரிதும் நிறைந்திருக்கும். கடைசியில் பெயரிலி உண்மையை சொல்லும்போது எங்கும் பச்சை, வெள்ளை நிறத்தைக் காணலாம். ஒரு அகண்ட ஏரியின் மேல் பெயரிலியும், ஸ்வார்டும் மோதும் காட்சி இந்தப்படத்தின் மிகச்சிறப்பான ஒன்று. படத்தின் பிரதானமாக இசையும் இருக்கும். பாரம்பரிய வாத்தியம் இசைக்கப்பட நடக்கும் ச்கையின் சண்டைக்காட்சியும் வெகு நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கும்.


பெயரிலியாக நடித்த ஜெட்லி இந்த படத்துக்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டார். பல விருதுகளை வென்ற இந்தப்படம் 2003 ஆம் வருடம் ஆஸ்கார் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது. நடு இரவு பனிரெண்டு மணிக்கு வேர்ல்ட் மூவீஸ் சானலில் முதல் முறையாக இந்தப் படத்தை பார்த்தேன். அலாதியான அனுபவம். இதுவரை ஏழெட்டு முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது விஷயம் கண்ணுக்குத் தெரியும். நீங்களும் பாருங்கள்.. உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

41 comments:

வால்பையன் said...

சண்டைக்காட்சிக்காக மட்டுமல்லாமல் தேர்ந்த திரைக்கதைக்காக மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்!

சுந்தர் said...

நல்ல படத்துக்கு விமர்சனம் பண்ணதுக்கு நன்றி., ஓட்டிட்டேன்

தீப்பெட்டி said...

நல்லா விளக்கமா சொல்லியிருக்கிங்க கார்த்தி..

நானெல்லாம் இப்படி முழுகதையும் பக்கத்துல உக்காந்து சொன்னாத்தான் ஆங்கில படமெல்லாம் பாப்பேன்

இல்லாட்டி அந்த படத்துல .... சீச்சி அதெல்லாம் வேண்டாம்

நையாண்டி நைனா said...

அப்படியா???
இதுநாள் வரைக்கும் பெயரிலியாக வந்து பின்னூட்டம் போட்டது எல்லாம் நம்ம ஜெட்லி தானா?

எவ்வளவு பெரிய ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க....???? கண்டுக்காம விட்டுட்டேனே... ஆவ்வ்வ்வ்.......

Joe said...

அருமையாக திரை விமர்சனம் பண்ணிருக்கீங்க பாண்டியன்!

Prabhu said...

எனக்கு இப்படி எசகு பிசகான திரைக்கதை கொண்ட கதைகள் பிடிக்கும். இதையும்பாக்க வேண்டியதுதான். டோரண்டாய நமஹ!

வேத்தியன் said...

நல்ல விமர்சனம்...

தேவன் மாயம் said...

ஜெட் லீ யின் நிறைய படங்கள் பார்த்துள்ளேன்!! இந்தப்படம் பார்க்க வேண்டும்!!

ஆ.சுதா said...

|சீன மொழி படங்கள் என்றாலே அடிதடி சண்டைக் காட்சிகளும், பறந்து பறந்து செய்யும் சாகசங்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றழைக்கப்படும் சண்டைப் படங்களைக் கூட ஒரு கலாப்பூர்வமான அனுபவமாக மாற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் "ஹீரோ"(Hero). ?

இந்த படம் மட்டுமல்ல கார்த்திகைப் பாண்டியன் நிறையப் படங்கள் உள்ளன. நான் இந்தப் படம் இன்னும் பார்கவில்லை ஆனால் என்னிடம் இப்படம் DVDயில் உள்ளது. தற்காப்புகலை படங்களின் தீவிர விசிறி நான். இவருடைய மற்றப் படங்களான
Shaolin Temple
Shaolin Temple 2: Kids from Shaolin
Dragon Fight
The Master
Tai Ji Master,
Last Hero in China
Once Upon a Time in China
Fist of Legend
Fearless
இவைகளை பார்த்திருகின்றேன் ஆனால் இந்தப் படத்தை ஏனோ இன்னும் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் கண்டிபா இந்த வாரமே பார்க்க தூண்டி விட்டது ம்...பார்த்து விடுகின்றேன்.

ஆதவா said...

பிறகு வருகிறேன்....இப்போ ஓட்டு மட்டும்

ஆதவா said...

ஆ.முத்துராமலிங்கம்... நிறைய கலெஷன் உண்டா?? நானும் நிறைய ஆங்கிலப்படம் பார்ப்பேன்.. பிறிதொருநாள் இதைப்பற்றி பேசுவோம்.

புல்லட் said...

அந்த படத்துக்காக ஒரு ஓட்டு போட்டாச்சு... ஆனா மிக பழைய படம்... எப்போ பார்த்தது... ஜெட்லஜயை கொல்ல மழைபோல அம்புகள் பாய்வது மட்டும் ஞாபகம் வருகிறது.. :)

Subankan said...

நான் பார்த்த படம்தான். அருமையான விமர்சனம்.

Voted :-)

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விமர்சனம் நான் பார்க்கவில்லை முயற்சி செய்கின்றேன்..

ஆ.சுதா said...

ஆதவா said...
ஆ.முத்துராமலிங்கம்... நிறைய கலெஷன் உண்டா?? நானும் நிறைய ஆங்கிலப்படம் பார்ப்பேன்.. பிறிதொருநாள் இதைப்பற்றி பேசுவோம்.

நிரைய இல்லா விட்டாலும் சற்று அதிகமாகவே இருக்கின்றது ஆதவா..
நிச்சயம் பிறிதொருநாள் இதுபற்றி பேசுவோம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
சண்டைக்காட்சிக்காக மட்டுமல்லாமல் தேர்ந்த திரைக்கதைக்காக மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்!//

மூன்று வெவ்வேறு யுக்தியில் சொல்லப்படும் திரைக்கதை வெகு சுவாரசியம்.. இல்லையா நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேனீ - சுந்தர் said...
நல்ல படத்துக்கு விமர்சனம் பண்ணதுக்கு நன்றி., ஓட்டிட்டேன்//

நன்றி சுந்தர்

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
நல்லா விளக்கமா சொல்லியிருக்கிங்க கார்த்தி.. நானெல்லாம் இப்படி முழுகதையும் பக்கத்துல உக்காந்து சொன்னாத்தான் ஆங்கில படமெல்லாம் பாப்பேன்இல்லாட்டி அந்த படத்துல .... சீச்சி அதெல்லாம் வேண்டாம்//

ஆகா.. அவரா நீங்க? சப் டைட்டில் இருந்தா கொஞ்சம் எளிதாக புரிஞ்சுடும் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
அப்படியா???
இதுநாள் வரைக்கும் பெயரிலியாக வந்து பின்னூட்டம் போட்டது எல்லாம் நம்ம ஜெட்லி தானா?//

அட ராமா.. நாராயணா.. இந்த நைனா தொல்ல தாங்க முடியலப்பா.. எப்படின்னே இந்த சித்தாந்தம் எல்லாம் உங்களுக்கு மட்டும் தோனுது?

கார்த்திகைப் பாண்டியன் said...

//Joe said...
அருமையாக திரை விமர்சனம் பண்ணிருக்கீங்க பாண்டியன்!//

ரொம்ப நன்றிப்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
எனக்கு இப்படி எசகு பிசகான திரைக்கதை கொண்ட கதைகள் பிடிக்கும். இதையும்பாக்க வேண்டியதுதான். டோரண்டாய நமஹ!//

பாருங்க பப்பு.. சூப்பரா இருக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
நல்ல விமர்சனம்...//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//thevanmayam said...
ஜெட் லீ யின் நிறைய படங்கள் பார்த்துள்ளேன்!! இந்தப்படம் பார்க்க வேண்டும்!!//

பாருங்க டாக்டர்.. சூப்பர் படம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said... //

இத்தனை படம் இருக்கா தலைவா? இதுல ஒன்னு ரெண்டு நான் பார்த்தது கிடையாது? அடுத்து சென்னை பக்கம் வந்தா உங்ககிட்ட இருந்து புடுங்கிட்டு வந்து பார்க்க வேண்டியதுதான்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
பிறகு வருகிறேன்....இப்போ ஓட்டு மட்டும்//

பொறுமையா படிங்க நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி said...
அந்த படத்துக்காக ஒரு ஓட்டு போட்டாச்சு... ஆனா மிக பழைய படம்... எப்போ பார்த்தது... ஜெட்லஜயை கொல்ல மழைபோல அம்புகள் பாய்வது மட்டும் ஞாபகம் வருகிறது.. :)//

எனக்கு பிடிச்ச படம் நண்பா.. ரொம்ப நாளா விமர்சனம் பண்ணனும்னு ஆசை.. அதுதான்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

// Subankan said...
நான் பார்த்த படம்தான். அருமையான விமர்சனம்.
Voted :-)//

நன்றி தோழரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல விமர்சனம் நான் பார்க்கவில்லை முயற்சி செய்கின்றேன்..//

நல்ல படம் நண்பா..பாருங்க

ஆதவா said...


ரொம்ப சிறப்பான கதை.... நல்லா விளக்கமா சொல்லியிருக்கீங்க... நான் இன்னும் அப்படம் பார்க்கவில்லை.

வண்ணங்களைப் பற்றி சொன்னீர்கள்...
சிவப்பு என்பது ஏமாற்றின் குறியீடாக எடுத்துக் கொள்ளலாம்... மஞ்சளானது சிவப்பின் ஒரு பாதியாக இருப்பதால் அதை ஒரு தந்திரம் என்று குறியீட்டுக் கொள்ளலாம்.

நீலம்.. இயற்கையின் நீலம் எப்போதுமே போலியானவை... கடல், வானம்... போன்றவை... மன்னர் கதை சொல்லும் பொழுது போலியான கதையை உரித்து நிஜமாக்குகிறார்.

இறுதியில் உண்மைகள் தெரிந்துவிடுகிறது, மன்னர் மாறிவிடுகிறார்... அது பச்சை... நீங்கள் நன்கு கவனித்துப் பாருங்கள், பச்சை நிறம் மட்டும் எங்கும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. உண்மையின் நிறம் வெண்மை என்பதாலோ என்னவோ, பெயரிலி சொல்லும் பொழுது அந்நிறத்தை இயக்குனர் அமைத்திருக்கலாம்...

குடந்தை அன்புமணி said...

திரைப்படங்கள் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.... ஆனா, கார்த்தி ஒரு படம் விடுவதில்லை போலிருக்கு. ஜமாய்ங்க!

கடைக்குட்டி said...

கண்டிப்பா பாத்துடலாம்... :-)

கடைக்குட்டி said...

அடப் போங்கண்ணே.. உங்களால நானும் ஒரு உலக சினிமா பத்தி போட்டு இருக்கேன்..

பாத்துட்டு சொல்லுங்க!!!
http://kadaikutti.blogspot.com/2009/05/finding-nemo.html

அத்திரி said...

நானும் இந்த படம் பாத்திருக்கேனே

வினோத் கெளதம் said...

கார்த்தி நம்ம பக்கம் கொஞ்சம் வாருங்கள்..

Karthik lollu said...

Sema padam pa... Especially Stunts la chanceless...

உமா said...

வாழ்த்துகள்,விகடன் குட் blogs ல் இடம் பெற்றமைக்கு.

http://youthful.vikatan.com/youth/index.asp

சம்பத் said...

நண்பா...சில நாட்களாக (மாதங்களாக) அலுவலகத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக உள்ளதால் இணையத்தில் அதிகமாக உலவ முடியவில்லை...சீக்கிரம் வருகிறேன் நண்பா....

சம்பத் said...

நண்பா...சில நாட்களாக (மாதங்களாக) அலுவலகத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக உள்ளதால் இணையத்தில் அதிகமாக உலவ முடியவில்லை...சீக்கிரம் வருகிறேன் நண்பா....

மேவி... said...

innum parkka villai .....

dvd kidaithal parkkiren

மேவி... said...

nalla solli irukkinga

குமரை நிலாவன் said...

நல்ல விமர்சனம்...