July 29, 2009

வரலாறும் தமிழகத்தடங்களும்(பாகம் - 2)..!!!

(பாகம் - 1 படிக்க இங்கே க்ளிக்குங்கள்)
மதுரை என்றவுடன் மக்களின் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். உலக அதிசயங்களில் ஒன்று என்னும் ரேஞ்சுக்கு பேசப்படும் இடம். அதன் உள்ளே இருக்கும் ஆயிரம் கால் மண்டபமே ஒரு அதிசயம்தான். ஆனால் இன்று.. கேட்பாரற்றுக் கிடக்கும் பழங்காலச் சிற்பங்களும், ஒளி மங்கிக் கிடக்கும் ஓவியங்களுமாய் அதன் நிலையைப் பார்த்தால் மனிதனுக்கு ரத்தக்கண்ணீர் தான் வருகிறது. நம்முடைய பண்பாட்டுச் சின்னங்களான கோவில்களை அரசாங்கம் மிகுந்த அக்கறையோடு பாதுகாக்க வேண்டாமா? அது அரசினுடைய கடமைதானே..
மாறாக அரசாங்கம் இன்று என்ன செய்து கொண்டு இருக்கிறது? கோவில்களை மீண்டும் பொலிவாக்குகிறோம் என்னும் பெயரில் புராதானச் சின்னங்களை தானே அழித்து வருகிறது. சமீபத்தில் ஒரு ஆங்கில நாழிதளில் கூட இதைப் பற்றி எழுதி இருந்தார்கள். தென் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு கோவில்களில் சான்ட் ப்ளீச்சிங் (sand bleaching) என்னும் முறைப்படி கோவில் சுவர்களில் இருக்கும் பழங்கால சித்திரங்களை எல்லாம் அரசாங்கமே அழித்த முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டி இருந்தார்கள். நம்முடைய பாரம்பரியத்தை சொல்லும் கலைப் பொருட்களை அழிக்கிறோம் என்னும் பிரக்யையே அரசிடம் இல்லை என்பது வேதனை.
இன்னொரு சம்பவம். மதுரை அருகே இருக்கும் இடமான கரடிப்பட்டி பெருமாள் மலையில் சமணப்பள்ளிகளும், குகையில் வரையப்பட்ட ஓவியங்களும் இருக்கின்றன. ஆனால் மணல் திருடுபவர்களால் அந்த மலையே காணாமல் போகும் அபாயம் இருப்பதை பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டி இருந்தன. ஆனால் இன்று வரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. தவறு செய்வதை விட அதைத் தட்டிக் கேட்கும் பொறுப்பில் இருந்தும் சட்டை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம் அல்லவா?!!
அரசாங்கம் மட்டுமே தவறு செய்வது இல்லை. இந்தத் தவறினைச் செய்வதில் பெரும்பங்கு வகிப்பது நாம்தான். நம் சமூகம்தான். எழுத ஒரு கரித்துண்டு கிடைத்தால் உடனே காதல் வசனங்களாக, கெட்ட வார்த்தைகளாக கிறுக்கித் தள்ளுவது... ஏதேனும் கோவிலுக்கு செல்லும்போது, பாரம்பரியம் மிக்க இடங்களுக்கு போகும்போது அவற்றின் சுவற்றை உற்றுப் பாருங்கள். நம் நண்பர்களின் கைங்கரியம் தெரியும். இதை விடக் கேவலம் இருக்க முடியாது. போன இடுகையில் நண்பர் ஜோ இவ்வாறு பின்னூட்டம் போட்டு இருந்தார். "நம்மவர்களைப் போல வரலாற்று பிரக்யையற்றவர்களை வேறெங்கும் காண முடியாது". வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அக்கறை காட்டாத அரசாங்கம்.. பொறுப்பில்லாத பொதுமக்கள். என்னதான் செய்ய முடியும்? இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கம் தன்னிலை உணர்ந்து செயல்பட வேண்டும். நம் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்திட வழிமுறைகளைச் செய்ய வேண்டும். இது போன்ற சின்னங்களை சேதப்படுத்தும் மக்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு விதிக்க வேண்டும். குறிப்பாக பாடத்திட்டங்கள் எளிமையாக மாற்றப்பட வேண்டும். வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை சமூகத்திடம் தூண்டா விட்டால் எத்தனை பாடுபட்டும் பயனில்லாது போகும். எனவே அடுத்த தலைமுறைக்கு நம் வரலாற்றை எடுத்துச் சொல்லும் பணியை தெளிவாக முறைப்படுத்த வேண்டும்.
அப்படி ஒரு எளிய முறையில் தமிழர்களின் சமீப வரலாற்றை சுவாரசியமாக சொல்லி இருக்கும் புத்தகம்தான் மணாவின் "தமிழகத் தடங்கள்.."!!!
(தொடருவேன்..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

28 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...
This comment has been removed by the author.
91001103021 said...

இந்த மாதிரி விடயங்களையும் நமது மக்களுக்கு சினிமா ,சீரியல் (பெரிய நடிகர் ) மூலமாக மட்டுமே சொல்லமுடியும்.(நேரடிய சொன்ன அத புரிந்துகொள்ளும் மனபக்குவம் நம்ம மக்கள் கிட்ட இல்லை , )

அகநாழிகை said...

கார்த்தி,
இரண்டு பதிவையும் வாசித்தேன்.
தொடர்ந்து இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

சொல்லரசன் said...

//அரசாங்கம் மட்டுமே தவறு செய்வது இல்லை. இந்தத் தவறினைச் செய்வதில் பெரும்பங்கு வகிப்பது நாம்தான்.//

மக்கள் புரிந்து கொண்டால் சரி,

Anonymous said...

before govt, its our responsibility. more than govt, parents needs to take care of this!

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

மக்கள் திருந்த வேண்டும் - அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் - சிந்திக்கலாமே

ஆ.சுதா said...

அக்கரையான பதிவு.
வருத்தபடவேண்டி விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னும் தொடருங்கள்,

ஹேமா said...

கார்த்தி,தொடர் கட்டுரை இன்றைய தேவையோடு கூடி அருமையாய் எழுதுகிறீர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//அக்கறை காட்டாத அரசாங்கம்.. பொறுப்பில்லாத பொதுமக்கள். என்னதான் செய்ய முடியும்? //

நல்ல எழுத்து நடை தொடருங்கள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீ said...
ரெண்டும் பண்ணலேன்னா என்ன பண்ணுவீங்க?அதைச் சொல்லவே இல்லையே?//

அப்புறம் வீடு தேடி ஆட்டோ வரும் மாமேய்..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//STAR said...
இந்த மாதிரி விடயங்களையும் நமது மக்களுக்கு சினிமா ,சீரியல் (பெரிய நடிகர் ) மூலமாக மட்டுமே சொல்லமுடியும்.(நேரடிய சொன்ன அத புரிந்துகொள்ளும் மனபக்குவம் நம்ம மக்கள் கிட்ட இல்லை , )//

வேதனை தான்.. ஆனால் ஏதேனும் ஒரு வகையில் நம் பண்பாட்டு சின்னங்களை காப்பாற்ற முடிந்தால் சந்தோஷமே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//"அகநாழிகை" said...
கார்த்தி,
இரண்டு பதிவையும் வாசித்தேன்.
தொடர்ந்து இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//

நன்றி வாசு.. நல்ல இடுகைகளை மக்கள் ஆதரிப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் தான் எழுதுறேன்.. தொடர்ந்து இதே போல எழுத முயலுகிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
மக்கள் புரிந்து கொண்டால் சரி//

அரசாங்கம் புரிய வைக்க வேண்டும் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
before govt, its our responsibility. more than govt, parents needs to take care of this!//

exactly, thats what i want to stress upon boss..

கார்த்திகைப் பாண்டியன் said...

//cheena (சீனா) said...
அன்பின் கா.பா மக்கள் திருந்த வேண்டும் - அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் - சிந்திக்கலாமே//

கண்டிப்பாக ஐயா.. நம்மால் இயன்றதைச் செய்வோம்..இது பற்றி நான் சந்திக்கும் போது பேசலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அக்கரையான பதிவு.
வருத்தபடவேண்டி விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னும் தொடருங்கள்//

நன்றி நண்பா.. எல்லாம் ஒரு ஆதங்கம்தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...
கார்த்தி,தொடர் கட்டுரை இன்றைய தேவையோடு கூடி அருமையாய் எழுதுகிறீர்கள்.//

நன்றி தோழி

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல எழுத்து நடை தொடருங்கள் நண்பா//

உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஞானசேகரன்..

அ.மு.செய்யது said...

//தென் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு கோவில்களில் சான்ட் ப்ளீச்சிங் (sand bleaching) என்னும் முறைப்படி கோவில் சுவர்களில் இருக்கும் பழங்கால சித்திரங்களை எல்லாம் அரசாங்கமே அழித்த முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டி இருந்தார்கள்//

எனக்கு புதிய செய்தி...அதிர்ச்சி !!!

தொடரட்டும் உங்கள் சேவை கார்த்திக் !!! சம்பந்த பட்டவர்கள் பார்வைக்கு இப்பதிவு
செல்லுமாயின் நலம் பயக்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மையிலேயே அது பெரிய கொடுமை நண்பா.. உரிய முயற்சிகளால் இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது ஆசை..

நர்சிம் said...

//இன்னொரு சம்பவம். மதுரை அருகே இருக்கும் இடமான கரடிப்பட்டி பெருமாள் மலையில் சமணப்பள்ளிகளும், குகையில் வரையப்பட்ட ஓவியங்களும் இருக்கின்றன. ஆனால் மணல் திருடுபவர்களால் அந்த மலையே காணாமல் போகும் அபாயம் இருப்பதை பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டி இருந்தன. ஆனால் இன்று வரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. தவறு செய்வதை விட அதைத் தட்டிக் கேட்கும் பொறுப்பில் இருந்தும் சட்டை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம் அல்லவா?!!//

ப்ச்..

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா..தொடருங்கள்..தொடர்வோம்.

//ஸ்ரீ said...
//பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..//

ரெண்டும் பண்ணலேன்னா என்ன பண்ணுவீங்க?அதைச் சொல்லவே இல்லையே?
//

நண்பர் ஸ்ரீ..இதுபோன்ற பதிவுகளில் இவ்வகையான கமெண்ட்டுகள் பதிவின் தாக்கத்தை லேசாக குறைக்கிறது என்பது என்னுடைய எண்ணம் மட்டுமே..தவறாக சொல்லி இருந்தால் வருந்துகிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
ப்ச்..நல்லா எழுதி இருக்கீங்க நண்பா..தொடருங்கள்.. தொடர்வோம்//

உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தல..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//நண்பர் ஸ்ரீ..இதுபோன்ற பதிவுகளில் இவ்வகையான கமெண்ட்டுகள் பதிவின் தாக்கத்தை லேசாக குறைக்கிறது என்பது என்னுடைய எண்ணம் மட்டுமே..தவறாக சொல்லி இருந்தால் வருந்துகிறேன்.//

கரெக்டுதான்,சுட்டிக் காட்டியதற்கு நன்றி திரு நர்சிம்.தப்பை உடனே திருத்திக்கனும்,இப்போ பாருங்க திருத்திட்டேன்.சரியாதான் சொல்லீருக்கீங்க அதனால வருத்தம் வேண்டாம்.

சொல்லரசன் said...

//அரசாங்கம் மட்டுமே தவறு செய்வது இல்லை. இந்தத் தவறினைச் செய்வதில் பெரும்பங்கு வகிப்பது நாம்தான்.//


மக்கள் புரிந்து கொண்டால் சரி//

கார்த்திகைப் பாண்டியன்
அரசாங்கம் புரிய வைக்க வேண்டும் நண்பா


ஏனுங்க நீங்க ஒரு அழகான வீடுகட்டி அதில் கரிதுண்டுகளால் கிறுக்குவீர்களா?
எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறைகூறுவதை நிறுத்துங்கள்.

வால்பையன் said...

//கரடிப்பட்டி பெருமாள் மலையில் சமணப்பள்ளிகளும், குகையில் வரையப்பட்ட ஓவியங்களும் இருக்கின்றன. //

இது பற்றி எஸ்.ரா ஒருமுறை எழுதியிருந்தார்!

அத்திரி said...

//அக்கறை காட்டாத அரசாங்கம்.. பொறுப்பில்லாத பொதுமக்கள்.//

ஆமா நண்பா..............................

தொடரட்டும்

Prabhu said...

தப்பு பண்றவன அரசியல்வியாதி லாபி பண்ணினா அதை குறைக்க இயலும். தப்பு பண்றவனே அரசியல்வாதியா இருந்தா அது எல்லா துறைகளிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். நீங்கள் சொன்ன மணல் திருட்டு விஷய்த்திற்கும், sand bleaching இரண்டுக்கும் இது பொருந்தும். sand bleaching பண்ணி ஓவியத்த அழிக்கிறாங்கன்னு எனக்கு தெரியாதுன்னு அந்த கோவில் அதிகாரி பேட்டி கொடுக்கிறாரு. அப்புறம் யாரு அனுமதி கொடுத்திருப்பா, இல்ல அனுமதி குடுக்காம நடக்குதுன்னா அங்க அவரு என்ன பண்ணிகிட்டு இருக்காரு. வெக்கமே இல்லாம தெரியாதுன்னு பேட்டி வேற. பெரிய கோவில்ன்னா கூட பரவாயில்ல. சின்ன கோவில். எப்படி கவனிக்காம விட்டாங்க!
அத விடுங்க நம்ம மீனாட்சி அம்மன் கோவில்லயும் இந்த கொடும நடந்திருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

கடைசி நான்கைந்து வரிகளில் இடுகையின் நோக்கம் புரிகிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள் நண்பா