September 2, 2009

உக்கார்ந்து யோசிச்சது - சினிமா ஸ்பெஷல் (02-09-09)..!!!

ஒரு சினிமா போஸ்டர்னால உங்க எதிர்கால வாழ்க்கையே நாசமாப் போக வாய்ப்பிருக்குன்னு சொன்னா நம்புவீங்களா? ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு நடந்த சம்பவம் இது. இரவு எட்டு மணி. நானும் என்னோட நண்பனும் அரசரடி ரோட்டுல பேசிக்கிட்டே சாலையோட இடது ஓரம் நடந்துக்கிட்டு இருந்தோம். திடீர்னு எங்க இருந்து வந்தான்னே தெரியாம, ஒரு பனிரெண்டு வயசு பையன், சைக்கிள கொண்டு வந்து என் காலுக்கு ஊடால விட்டான். எனக்கு நல்ல அடி.


கோபத்தோட அவன பார்த்தா, கீழ விழுந்தும் விடாம சுவத்துல இருந்த போஸ்டர பார்த்துக்கிட்டு இருக்கான். அப்படி என்ன படம்னு பார்த்தா, அது நமீதா நடிச்ச இந்திரா விழா படத்தோட போஸ்டர். மூணு போஸ்டர்கள் - வெவ்வேறு கோணங்கள்ள கலை அம்சத்தோட இருந்துச்சு. அதப் பார்த்துக்கிட்டு வந்து எம்மேல வண்டிய ஏத்திருக்கு பக்கி. கொஞ்சம் மிஸ் ஆனதால தப்பிச்சேன். இல்லன்னா? வருங்கால இந்தியாவின் தூண்கள நினச்சா...


ஷ்ஷ்ஷ்ஷ்.. இப்பவே கண்ணக் கட்டுதே..!!!


***************


மதுரைல இருக்கிற மக்களுக்கு இந்த விஷயம் நல்லாத் தெரியும். ரோட்டுல ஒட்டி இருக்கிற எல்லா சினிமா போஸ்டர்லையும் "கடவுள் முரளி வாழ்க"ன்னு கிறுக்கி இருக்கும். அதை கிறுக்குற ரசிகர் ஒரு புரோட்டா மாஸ்டர். வருஷத்துல ஆறு மாசம் வேலை பார்ப்பாராம். மீதி ஆறு மாசம் இப்படி ஊரு ஊரா சுத்தி கண்ணுல படுற போஸ்டர்ல எல்லாத்துலையும் கிறுக்கி முரளியோட புகழைப் பரப்புரதுதான் அவரோட கடமையாம். இப்போ சமீபத்துல கூடவே இன்னொரு வாசகமும் தென்படுது. "சின்னக் கடவுள் அதர்வா வாழ்க". யார்னு பார்த்தா அது முரளியோட மகன் பேராம். அவரும் நடிக்க வந்துட்டாராம். இன்னும் ஒரு படம் கூட வெளிவரலை. அதுக்குள்ள சின்னக் கடவுளா?


வெளங்கிடும்..!!!


***************


ஆதவன் பாட்டு எல்லாமே அம்சமா இருக்குன்னு நண்பர்கள் சொன்னாங்க. "அஞ்சனா" பாட்டோட டிரைலரை பார்த்தவுடனே எனக்கு ஞாபகம் வந்தது கஜினில ஆமிர்கானோட (behka) கெட்டப் தான். அப்படியே காப்பி. பாட்டும் "முதல் முதலாக பரவசமாக" பாட்டோட சாயல். ரைட்டு, ஹாரிஸ்னா அப்படித்தான் இருக்கும்னு மனசத் தேத்திக்கிட்டேன். சூர்யா பத்து வயசு பையனா வேற நடிச்சு இருக்காராம். ரவிக்குமார் கலக்கி இருப்பாருன்னு நம்பலாம். தீபாவளி ரேஸ்ல கண்டிப்பா ஆதவன் மத்த படங்கள வேட்டையாடிடுவான்னு நினைக்கிறேன். எல்லாம் ஓகே. ஆனா நயன்தாரவத்தான் கண் கொண்டு பார்க்க முடியல. மூக்குத்தியோட ஒரு க்ளோசப் ஷாட் காமிச்சாங்க பாருங்க டிரைலர்ல..


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!


***************


தினசரி வாழ்க்கை என்கிற பெயரில் பதிவு எழுதி வருபவர் நண்பர் Mayvee காசி விஸ்வநாத். இளைஞர். மொக்கை மன்னர். வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர். பாசமான மனிதர். தமிழ் தாய் மொழி கிடையாது என்றபோதும் விரும்பி கற்றுக்கொண்டு தமிழில் எழுதி வருகிறார். எல்லாவற்றையும் மீறி இவருடைய தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் உடல் ரீதியாக, மன ரீதியாக பெரிதும் கஷ்டப்பட்டாலும், அத்தனையையும் வாழ்க்கையில் முன்னுறேவதற்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டவர். சமீபத்தில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்காக சில புத்தகங்களை வாங்கி வந்திருந்தார். அவை..

-- கி.மு, கி.பி

-- மகா அலெக்சாண்டர்

-- one night at the call centre

அவருடைய அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி..!!! சினிமா பதிவுல இவர் இங்க இருந்துயா வந்தார்னு கேக்குறவங்களுக்கு..

போங்க பாஸ்.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..?!!!


***************


ஈரம் படத்தோட டிரைலர் அசத்தல். குறிப்பா பின்னணி இசை. தமன் கலக்கி இருக்காரு. ஏற்கனவே சிந்தனை செய் பாடல்கள் பின்னி எடுத்துச்சு. பார்ப்போம். ஆனா அதே நேரத்துல ஒரு ட்ரைலரை காமிச்சே மனுஷன டெரராக்க முடியுமா? மதுரை சம்பவம் டிரைலரை பாருங்க. "வடக்குல திண்டுக்கல்லு, தெற்குல..." அப்படின்னு ஹரிகுமார் பேசுற தமிழும், அவரோட டயலாக்கும்.. மூஞ்சில முள்ள விட்டுச் சாத்த..!! காதல் படம் வந்த நாள் முதலா எல்லாப் பயலும் மதுர,மதுரைன்னு நம்ம உசிர வாங்குராய்ங்க.. யப்பா இயக்குனர்களா, தயவு செஞ்சு மதுரைய விட்டுறுங்கப்பா.


முடியல..!!!


***************


கந்தசாமி குழந்தைகளுக்கான படமாம் - விக்ரம் சொல்றாரு. கோடி கொடியா கொட்டுதாம் - சுசி சொல்றாரு. அப்போ தாணு..?!!!


உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறீங்க..!!!


***************


சினிமா ஜோக்ஸ்னா.. வேற யாரு.. அவரேதான்..


ஜோக் 1

கடவுள்: உனக்கு பிடித்த வரம் கேளப்பா..

மனிதன்: எங்க வீட்டுல இருந்து சொர்க்கத்துக்கு ரோடு போட்டுக் கொடுங்க சாமி..

கடவுள்: அது கஷ்டமப்பா.. வேற ஏதாவது கேளு..

மனிதன்: வேட்டைக்காரன் படம் ஹிட்டாகணும்..

கடவுள்: சொல்லு, உனக்கு சிமிண்ட் ரோடு வேணுமா, தார் ரோடு வேணுமா...


ஜோக் 2


அஜித்: செஸ் விளையாட வரீங்களா..

விஜய்: நீங்க கிரவுண்டுக்கு போங்க.. நான் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு வரேன்..


எப்பூடி.. ரைட்டு.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்..:-)))


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

37 comments:

Anonymous said...

//சின்னக் கடவுள் அதர்வா வாழ்க". யார்னு பார்த்தா அது முரளியோட மகன் பேராம்.//

என்ன கொடுமை இது சரவணா !!

மேவி... said...

"போங்க பாஸ்.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..?!!!"


ha ha ha

Raju said...

\\வருங்கால இந்தியாவின் தூண்கள நினச்சா...\\

நீங்க வாத்தியாரா இருக்குறதுனாலயா..?
:)

\\இன்னும் ஒரு படம் கூட வெளிவரலை. அதுக்குள்ள சின்னக் கடவுளா?\\

பெரிய நான்கடவுள் பார்ட்டியா இருப்பாரோ..!

\\அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!\\!

ஸேம் பிளட் அண்ட் பிளேடு.

\\யப்பா இயக்குனர்களா, தயவு செஞ்சு மதுரைய விட்டுறுங்கப்பா.\\

அத வுட அவரு "மதுரக்காரய்ங்க பாக்கத்தான் ஒரு மாதிரீருப்போம்..ஆனா உசுரையும் குடுப்போம்"ன்னு
சொ(கொ)ல்லும்போது..... ங்கொய்யால,மூஞ்சில மொளகா அரைச்சு அப்புனமாதிரி இருக்கும்.

வரோம்ல..செம்ப்டம்பர் நாலு.

ஜோக்குக்கு வேற யாராவது கமெண்ட் சொல்லுவாங்க..
மி த எஸ்கேப்பு.

சிவக்குமரன் said...

/// மூஞ்சில முள்ள விட்டுச் சாத்த..!!///

ஹா ஹா ஹா ...

///அது நமீதா நடிச்ச இந்திரா விழா படத்தோட போஸ்டர். மூணு போஸ்டர்கள் - வெவ்வேறு கோணங்கள்ள கலை அம்சத்தோட இருந்துச்சு. அதப் பார்த்துக்கிட்டு வந்து எம்மேல வண்டிய ஏத்திருக்கு பக்கி.///

பாவங்க, பச்ச புள்ளைய திட்டாதீங்க!!

க.பாலாசி said...

//வெவ்வேறு கோணங்கள்ள கலை அம்சத்தோட இருந்துச்சு. அதப் பார்த்துக்கிட்டு வந்து எம்மேல வண்டிய ஏத்திருக்கு பக்கி.//

அதான் கலையம்சத்தோட இருந்துச்சுல்ல...

// கொஞ்சம் மிஸ் ஆனதால தப்பிச்சேன். இல்லன்னா?//

ஆகா...just miss.

முதல் ஜோக் அருமை அன்பரே...

வால்பையன் said...

//ஒரு சினிமா போஸ்டர்னால உங்க எதிர்கால வாழ்க்கையே நாசமாப் போக வாய்ப்பிருக்குன்னு சொன்னா நம்புவீங்களா?//


//சைக்கிள கொண்டு வந்து என் காலுக்கு ஊடால விட்டான்.//

இப்ப நம்புறேன்!

வால்பையன் said...

ஏன் இப்படி கார்க்கிய பகைச்சுகிறிங்க!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

super.

Prabu M said...

"கடவுள்" முரளி படம் வெளிவராத தீபாவளி எங்களுக்கு கருப்பு தீபாவளி" ன்னு ஒவ்வொரு தீபாவளிக்கும் விளக்குத்தூண் ஏரியா பக்கத்துல நோட்டீஸ் அடிப்பாரே அவரத்தானே சொல்றீங்க?? ஐயோ சாமீ இன்னும் இவனுங்க அடங்கலையா!!!

Joe said...

//
திடீர்னு எங்க இருந்து வந்தான்னே தெரியாம, ஒரு பனிரெண்டு வயசு பையன், சைக்கிள கொண்டு வந்து என் காலுக்கு ஊடால விட்டான். எனக்கு நல்ல அடி.
//
Get well soon Karthick!

ஈரோடு கதிர் said...

//கொஞ்சம் மிஸ் ஆனதால தப்பிச்சேன்//

ஓ தப்பிச்சிட்டீங்களா!!!???

அட ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சு

// மூஞ்சில முள்ள விட்டுச் சாத்த..!! //

கொஞ்சம் பெரிய முள்ளாப் போட்டு சாத்துங்க.... முடியவேயில்ல ராசா

//உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)//
ஓட்டக் குத்தலனாத்தான் கருத்துப் போடனுமா?

கார்த்திக் பிரபு said...

arumaiya padhivu pudichiruku

Sarav said...

Appadi Enanga Vijay Mela Ungaluku Ethana Kovam? Intha Thaaku Thaakaringa!!

தேவன் மாயம் said...

"போங்க பாஸ்.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..?!!!///

தொழில் நடந்தாச் சரிதான்!

சொல்லரசன் said...

முடியல.......................

ப்ரியமுடன் வசந்த் said...

//
ஜோக் 1

கடவுள்: உனக்கு பிடித்த வரம் கேளப்பா..

மனிதன்: எங்க வீட்டுல இருந்து சொர்க்கத்துக்கு ரோடு போட்டுக் கொடுங்க சாமி..

கடவுள்: அது கஷ்டமப்பா.. வேற ஏதாவது கேளு..

மனிதன்: வேட்டைக்காரன் படம் ஹிட்டாகணும்..

கடவுள்: சொல்லு, உனக்கு சிமிண்ட் ரோடு வேணுமா, தார் ரோடு வேணுமா...//

தலைவா இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களாயா உங்க லீலைகள ம்ம்ம்ம்ம்ம்ம்.....

அ.மு.செய்யது said...

கடைசி ரெண்டு ஜோக் தாறுமாறு..இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்..ஹா ஹா...

Unknown said...

//.. போங்க பாஸ்.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..?!!!..//

ரசித்தேன்..

ஜோக்..!!
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரு..!!

//.. tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com ..//

மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்களேன்..??!!

ஆ.ஞானசேகரன் said...

உக்கார்ந்து நல்லாதான் யோசிக்கிரீங்க....

யோசித்தது நீங்க மட்டும்தானா?

வழிப்போக்கன் said...

ரைட்டு, ஹாரிஸ்னா அப்படித்தான் இருக்கும்னு மனசத் தேத்திக்கிட்டேன்.//

:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
ஏன் இப்படி கார்க்கிய பகைச்சுகிறிங்க!//

"போங்க பாஸ்.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா..?!!!"

கார்த்திகைப் பாண்டியன் said...

// Joe said...
Get well soon Karthick!//

thanks boss.. am ok now..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

// கதிர் - ஈரோடு said...
ஓ தப்பிச்சிட்டீங்களா!!!???
அட ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சு//

அப்படி என்னப்பா கோபம் என் மேல...

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
தலைவா இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களாயா உங்க லீலைகள ம்ம்ம்ம்ம்ம்ம்.....//

ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு ஜாலி தான நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டிக்காட்டான்.. said...
//.. tataindiaxenon said...
கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com ..//
மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்களேன்..??!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!

குடந்தை அன்புமணி said...

//தீபாவளி ரேஸ்ல கண்டிப்பா ஆதவன் மத்த படங்கள வேட்டையாடிடுவான்னு நினைக்கிறேன்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!

குடந்தை அன்புமணி said...

ஒவ்வொரு செய்திகளுக்கும் கீழே நீங்களே கிருத்துக்களை போட்டுட்டா நாங்க என்ன பண்றது?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!

Jackiesekar said...

எல்லா செய்திகளும் அருமை

Unknown said...

சினிமா ஜோக்கெல்லாம் அவருக்கே குத்தகைக்குக் குடுத்துட்டீங்களா... அடாப்பாவிகளா

குமரை நிலாவன் said...

ஷ்ஷ்ஷ்ஷ்.. இப்பவே கண்ணக் கட்டுதே..!!!

வெளங்கிடும்..!!!


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!

அவருடைய அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி..!!!



முடியல..!!!


உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறீங்க..!!!

உண்மை
அஜித்: செஸ் விளையாட வரீங்களா..

விஜய்: நீங்க கிரவுண்டுக்கு போங்க.. நான் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு வரேன்..

என்ன கொடுமை இது

Sen22 said...

Pathivu arumai nanbare..

அத்திரி said...

விஜய பற்றி எதும் சொல்லலைனா தூக்கம் வராதா>>>... அப்புறம் முதல் ஜோக்குக்கு ராயல்டி எதுவும் கிடையாதா

"உழவன்" "Uzhavan" said...

நல்லாத்தான்யா பழரசம் போடுறீங்க :-)

பாலகுமார் said...

//கோபத்தோட அவன பார்த்தா, கீழ விழுந்தும் விடாம சுவத்துல இருந்த போஸ்டர பார்த்துக்கிட்டு இருக்கான். //

நீங்க தான் போஸ்ட்டரைப் பார்த்துட்டே வந்து அவனை கீழே தள்ளி விட்டதாத்தானே கேள்விப்பட்டேன். :)

ரூம் போட்டு உக்கார்ந்து யோசிப்பீங்களோ....
நல்லா இருக்கு !

(Mis)Chief Editor said...

தலைவரே!

நகைச்சுவை உணர்வுகள் இருந்தாலும்
எழுத்தில் வடிப்பது அரிது!

தங்களைக் கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!

அது சரி உங்களுக்கு(ம்) 'இளைய தளபதி'யைப் பிடிக்காதோ?!

நாஞ்சில் நாதம் said...

சூப்பர்

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க.... பதிவு....

ஆதவன் படத்தோட ஸ்பெஷல்....

படத்தோட பெயர், டைரக்டர் பெயர், நடிகரோட பெயர்,... மூணுமே ஒருபொருளைத்தான் குறிக்கும்... (காதைக் கொடுங்க... அந்த மூணுபேருமே என்னோட பட்டப்பெயர்கள்!!!)

ஆனாலும், விஜயை இப்படி கிண்டல் பண்ணப்படாது!!!