September 10, 2009

காற்றில் யாரோ நடக்கிறார்கள் (2)..!!!

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - கல்குதிரை, கணையாழி, தினமணி, விகடன், குமுதம், அட்சரம், எஸ்ராவின் வலைத்தளம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை இலக்கியம், கலை, திரைப்படம், அனுபவம், பொது என்று ஐந்து பிரிவுகளாக தொகுத்து இருக்கிறார்கள். புத்தகம் பற்றிய முதல் இடுகையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.


கலை
******


தமிழ்நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை என்பது மிக முக்கியாயமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இன்றைய சூழலில் நம் பாரம்பரிய இசை வடிவங்களில் பல காணாமல் போய் விட்டன. தலைமுறை தலைமுறையாக இசைக்கருவிகளை வாசித்து வந்தவர்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை. இது எத்தனை பெரிய வேதனை? வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆர்வத்தோடு வந்து இங்குள்ள கலைகளை கற்றுக் கொள்ளும் பொழுது நாம் ஏன் அவற்றை புறக்கணிக்கிறோம்? இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்புகிறது "ஹாங் இசை" என்னும் கட்டுரை. கண்டுபிடிக்கப்பட்டு வெறும் எட்டு வருடமே ஆன "ஹாங்" என்னும் இசைக்கருவி பற்றியும், அதை வாசிக்கப் பழகிக் கொண்ட ஜெர்மானிய இளைஞரின் ஆர்வம் பற்றியும் இந்தக் கட்டுரை விரிவாகப் பேசுகிறது. பாரி நாயனம் என்னும் தமிழ்நாட்டு பாரம்பரிய இசைக்கருவியை கற்ற ஜப்பானிய இளைஞர், அதனைப் பற்றி புத்தகம் ஒன்றும் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியம்.


ஒரு எழுத்தாளர் மிகச் சிறந்த ஓவியராக இருக்க முடியும் என்பதற்கு சான்று "டி.ஹெச்.லாரன்சின் ஓவியங்கள்". எது ஆபாசம் என்று எதிர்க்குரல் எழுப்பிய லாரன்சின் ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியையும், சிதறடிக்கப்பட தன்மையையும் பெரிதும் சிலாகிக்கிறார் எஸ்ரா.


புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருக்கும் "மூவர் கோவில்" மிகவும் முக்கியமான சரித்திரச் சான்றாகும. பூதி இருக்கு வேளிர் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோவில் சிற்பக்கலைக்கு அருமையான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆயிரம் வருடப் பழமை கொண்ட இந்தக் கோயிலின் இன்றைய நிலை என்ன? புதையுண்ட சுவர்களும் இடிபாடுகளுமே. நம் நாட்டின் வரலாற்றை நாம் ஏன் பாதுகாக்க முற்படுவதில்லை? சரித்திரப் புத்தகங்களுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும் என்று விசனப்படுகிறது இந்தக் கட்டுரை.


புகைப்படக்கலையில் முன்னோடிக் கலைஞரான பிரசான், இடைக்காட்டூரில் இருக்கும் புனித இருதயநாதரின் தேவாலயம், இசைக்கலைஞர் பகானினி, காமிக்ஸ் பற்றிய அறிமுகங்கள் என்று கலை உலகின் பல தளங்களையும் திறம்பட விவரிக்கின்றன எஸ்ராவின் மற்ற கட்டுரைகள்.


திரைப்படம்
*************


கஷ்டப்பட்டு ஐந்தாறு பக்க வசனங்கள் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை ஒரே காட்சியில் எளிதாகச் சொல்லி விடலாம். ஏனெனில் காட்சி ஊடகத்தின் வலிமை மிக அதிகம். ஆரம்ப காலங்களில் திரைப்படத்தின் மூலம் ஒரு தேசத்தின் கலாச்சாரத்தையும், புராணங்களையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும் பதிவு செய்து வந்தார்கள். திரைப்படத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. உணர்வு ரீதியாக ஒரு மனிதனை பாதிக்க முடிந்ததே நல்ல சினிமா. தமிழிலும், பிற மொழிகளிலும் வந்த நல்ல படங்கள், கலைஞர்கள் என்று பலரைப் பற்றி பேசுகிறார் எஸ்ரா.


தன் உடல் மொழியால் நகைச்சுவையில் புதிய சகாப்தம் படைத்தவர் சந்திரபாபு. அவர் இயக்கிய "தட்டுங்கள் திறக்கப்படும்" என்னும் படம் அவருக்குள் இருக்கும் இயக்குனரை அழகாக விளக்குகிறது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று அனைத்துத் துறைகளையும் ஒன்றாக கவனித்த முதல் தமிழ் கலைஞர் அவர்தான். தன் நிஜ வாழ்வின் வெளிப்படுத்த முடியாத துயரை தனது பாடல்கள் மூலமாக சொன்னவர் சந்திரபாபு. "ஆடிப் பாடித் திரிபவன்" என தனக்கான ஒரு பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டு, வாழ்வின் இருண்ட பக்கங்களை மூடி வைத்துக் கொண்டார். கடைசி வரை யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்து மறைந்தும் போனார் சந்திரபாபு.


தமிழ்த் திரையுலகில் பலரும் தொடத் தயங்கிய விஷயங்களை அனாயாசமாக தனது படங்களில் கையாண்டவர் கே.பாலச்சந்தர். விவாதங்களையும், எதிர்ப்புக் குரல்களையும் தனது படங்களில் பலமாக பதிவு செய்தவர். அவருடைய மிக முக்கியமான படமாக "அவள் ஒரு தொடர்கதை"யை சொல்லலாம். பார்வையாளனுக்கு நெருக்கமான, அவனுக்கு நன்கு அறிமுகமான யதார்த்தமான நடுத்தர மக்களை திரையில் காண்பித்த பெருமை பாலசந்தரையே சேரும் என்கிறார் எஸ்ரா.

திரையிலும் இலக்கியம் வெற்றி பெரும் என்பதை செய்து காட்டிய ஜெயகாந்தனின் திரைப்படங்களின் பிரதிகள் இன்று யாரிடமும் இல்லை. ஏன் தமிழில் திரைப்படக் காப்பகம் ஒன்றை உருவாக்க இயலவில்லை என்ற கேள்வி எழும்புகிறது. தமிழில் புதிய அனுபவங்களைத் தரும் கல்லூரி, ஹிந்தியில் வெளியான The blue umbrella, Taare Zameen Par, traffic siganal, Yatra, Johnny gaddhaar முதலிய படங்கள் இந்திய சினிமாவை வேறு தளங்களுக்கு கொண்டு போயிருப்பது மகிழ்ச்சியைத் தருவதையும் குறிப்பிடுகிறார்.


தேசத்தின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மங்கோலியாவில் எடுக்கப்பட்ட "the story of the weeping camel" என்னும் ஆவணப்படம் மனதின் உணர்வுகளை அமைதி கொள்ளச் செய்யும் இசையின் சக்தியை வியக்கிறது.


மலையாளத்தில் பல நல்ல படங்களை எடுத்த பத்மராஜன் தமிழில் ஒரு மூன்றாந்தர செக்ஸ் பட இயக்குனராக மட்டுமே அறியப்பட்டு இருந்தார் என்பது வேதனை. அவருடைய "ஓரிடத்தில் ஒரு பயில்வான்" என்னும் திரைப்படம், உடல் அளவில் வலிமையான, ஆனால் மனதளவில் மிகவும் முதிர்ச்சியற்ற ஒரு பயில்வானின் வாழ்கை பற்றி பேசுகிறது. காமத்தில் இச்சை கொள்ளாத அவன் எப்படி தன்னுடைய வாழ்க்கையை இழக்கிறான் என்பதையும், அவனுடைய மன உளைச்சல்களையும் அற்புதமாக பதிவு செய்து இருக்கிறார் பத்மராஜன்.


நீதிமன்ற விசாரணையை மையமாகக் கொண்டு வெளியான ஹாலிவுட் படமான "Judgement at Nuremberg", போலந்தின் புகழ் பெற்ற இயக்குனரான ஆந்த்ரே வாஜ்தா தன தந்தையின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய "Katyn" என்னும் போர் பற்றிய படங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் எஸ்ரா. இந்தியத் திரை உலகில் ஒரு புதிய எழுச்சியை உண்டு பண்ணிய "Shloey" எந்த எந்த படங்களின் சாயலைக் கொண்டது என்பது பற்றிய தகவல்களும் இருக்கின்றன.


இதை எல்லாம் படிக்கும்போது என் மனதில் வந்த கேள்விகள் இவைதான். தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன? ஜனரஞ்சகம் என்ற பெயரில் நாம் நம் அடையாளத்தை தொலைத்து நிற்கிறோம் இல்லையா? பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இன்று கலை பின்தங்கி விட்டதே, இந்த நிலை மாறுமா? பிற நாட்டு படங்களைப் பற்றி நாம் பெருமையாக படிப்பது போல நம் தமிழ்ப்படங்களைப் பற்றி வெளிநாட்டவர் படிக்கும் காலம் வருமா? விடைதெரியாக் கேள்விகள்..!!!


(தொடருவேன்..)


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

29 comments:

நையாண்டி நைனா said...

நடக்குறவரை சீக்கிரம் உக்கார சொல்லு ராசா..... குறிப்பா உக்காந்து யோசிக்க சொல்லு... டம்ம்ப்ப்ர்ரிரிரிய்

ஆரூரன் விசுவநாதன் said...

அவியல்......

அனைத்துயும் கலந்து கொடுத்திருக்கும் முறை அருமை...


வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

//சரித்திரப் புத்தகங்களுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும் என்று விசனப்படுகிறது இந்தக் கட்டுரை.//

புத்தகத்தை படித்துவிட்டு வாந்தியெடுத்தால் போதும் என்கிற நம் கல்வி முறையை மாற்றி இம்மாதிரியான வரலாற்று இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று மாணவர்களுக்கு வரலாற்றின் மேல் ஆர்வமூட்டக்கூடிய நடவடிக்கைகள் தேவை.

சுந்தர் said...

//பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இன்று கலை பின்தங்கி விட்டதே, இந்த நிலை மாறுமா? //
மாறும் ! மாற்றம் ஒன்று தானே மாறாதது !

ஹேமா said...

கார்த்திக்,நீங்களும் நிறைய யோசிக்கிறீங்க.எங்களையும் யோசிக்க வைக்கிறீங்க.சிந்திக்க வேண்டிய விசயங்கள்தான்.

ஈரோடு கதிர் said...

ஆழாமாக ஊடுருவி எழுதியிருக்கிறீர்கள்

பாராட்டுகள் நண்பா

thiyaa said...

எப்பவும் நீங்கள் வித்தியாசமாகத்தான் சிந்திப்பிங்களா?
வாழ்த்துக்கள்

வால்பையன் said...

இலக்கியம் தெறிக்குது!

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
நடக்குறவரை சீக்கிரம் உக்கார சொல்லு ராசா..... குறிப்பா உக்காந்து யோசிக்க சொல்லு... டம்ம்ப்ப்ர்ரிரிரிய்//

அதெப்படி.. இன்னும் ஒரு எட்டு, நடை பாக்கி இருக்கு ராசா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
அவியல்......அனைத்துயும் கலந்து கொடுத்திருக்கும் முறை அருமை... வாழ்த்துக்கள்//

அவ்வ்வ்வ்வ்வ்...

கார்த்திகைப் பாண்டியன் said...

// குடந்தை அன்புமணி said...
புத்தகத்தை படித்துவிட்டு வாந்தியெடுத்தால் போதும் என்கிற நம் கல்வி முறையை மாற்றி இம்மாதிரியான வரலாற்று இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று மாணவர்களுக்கு வரலாற்றின் மேல் ஆர்வமூட்டக்கூடிய நடவடிக்கைகள் தேவை.//

சத்தியமான வார்த்தைகள் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

// சுந்தர் said...
மாறும் ! மாற்றம் ஒன்று தானே மாறாதது !//

நம்புவோமாக..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...
கார்த்திக்,நீங்களும் நிறைய யோசிக்கிறீங்க.எங்களையும் யோசிக்க வைக்கிறீங்க.சிந்திக்க வேண்டிய விசயங்கள்தான்.//

நன்றி தோழி..

//கதிர் - ஈரோடு said...
ஆழாமாக ஊடுருவி எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுகள் நண்பா//

நன்றி கதிர்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தியாவின் பேனா said...
ப்பவும் நீங்கள் வித்தியாசமாகத்தான் சிந்திப்பிங்களா?வாழ்த்துக்கள்//

நான் படிச்ச நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன்.. வாழ்த்துக்கு நன்றி..

//வால்பையன் said...
இலக்கியம் தெறிக்குது!//

அய்யய்யோ தல.. அப்படி எல்லாம் சொல்லி என்ன ஒதுக்கிராதீங்க..

"உழவன்" "Uzhavan" said...

தொடருங்கள்.. காத்திருக்கிறோம் நண்பா

க.பாலாசி said...

நிறைய யோசிக்கிறீங்களா, நிறைய வாசிக்கிறீங்களான்னு தெரியல...

ஆனாலும் எங்களை சிந்திக்க வைக்கிறீங்க...(அதுதானே இடுகையின் நோக்கம்)

நல்லதொரு சிந்தனைப்பகிர்வு அன்பரே....

குமரை நிலாவன் said...

மனதில் வந்த கேள்விகள் இவைதான். தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன? ஜனரஞ்சகம் என்ற பெயரில் நாம் நம் அடையாளத்தை தொலைத்து நிற்கிறோம் இல்லையா? பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இன்று கலை பின்தங்கி விட்டதே, இந்த நிலை மாறுமா? பிற நாட்டு படங்களைப் பற்றி நாம் பெருமையாக படிப்பது போல நம் தமிழ்ப்படங்களைப் பற்றி வெளிநாட்டவர் படிக்கும் காலம் வருமா? விடைதெரியாக் கேள்விகள்..!!!

உண்மை தான் நண்பா
எனக்குள்ளும் இந்த கேள்விகள் எழுந்தது உண்டு

Jerry Eshananda said...

பல்சுவைவிருந்து கார்த்தி.

Karthik said...

முதல் பார்ட்டுக்கு சொன்னதேதான். டூ குட். :))

மாதவராஜ் said...

எஸ் ராவின் கட்டுரைகளை நானும் படித்தேன். பகிர்வு நன்று. நண்பரே! இறுதிப்பத்தியில் விடை தெரியாக் கேள்விகள் என முடித்திருக்கிறீர்களே... அதற்குன் பல விடைகளையும் சொல்லிவிட்டு....!

Unknown said...

நல்ல அலசல்..

//.. பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இன்று கலை பின்தங்கி விட்டதே ..//

கலை உணர்வுடன் கூடிய திரைப்படங்கள் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறீர்களா..??

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழ் சினிமாவிற்க்கான எதிர் காலம்

சங்கர் , மிஷ்கின் , பாலா ,இன்னும் நிறைய பேர் இவங்களால விரைவில் அனைவரும் திரும்பிப்பார்க்க வைக்கும் திரைப்படங்கள் தருவார்கள் என்று நம்புகிறேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

// " உழவன் " " Uzhavan " said...
தொடருங்கள்.. காத்திருக்கிறோம் நண்பா//

கண்டிப்பா நண்பா.. நன்றி

//க.பாலாஜி said...
நிறைய யோசிக்கிறீங்களா, நிறைய வாசிக்கிறீங்களான்னு தெரியல.. ஆனாலும் எங்களை சிந்திக்க வைக்கிறீங்க...(அதுதானே இடுகையின் நோக்கம்) நல்லதொரு சிந்தனைப்பகிர்வு அன்பரே....//

வாழ்த்துக்கு நன்றி பாலாஜி ..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
உண்மை தான் நண்பா
எனக்குள்ளும் இந்த கேள்விகள் எழுந்தது உண்டு//

இந்த ஆதங்கம் எல்லோருக்குமே இருக்கு நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெரி ஈசானந்தா said...
பல்சுவைவிருந்து கார்த்தி.//

நன்றி தலைவரே

//Karthik said...
முதல் பார்ட்டுக்கு சொன்னதேதான். டூ குட். :))//

thanks dude..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//மாதவராஜ் said...
எஸ் ராவின் கட்டுரைகளை நானும் படித்தேன். பகிர்வு நன்று. நண்பரே! இறுதிப்பத்தியில் விடை தெரியாக் கேள்விகள் என முடித்திருக்கிறீர்களே... அதற்குன் பல விடைகளையும் சொல்லிவிட்டு....!//

வருகைக்கு நன்றி தோழர்... விடைகள் இருப்பது உண்மைதான்.. ஆனால் அவற்றை நாம் உணரும் காலம் எப்போது என்பதுதான் கவலைப்பட வேண்டிய விஷயம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டிக்காட்டான்.. said...
பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இன்று கலை பின்தங்கி விட்டதே..கலை உணர்வுடன் கூடிய திரைப்படங்கள் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறீர்களா..??//

நண்பா.. நம்ம தமிழ்நாட்டுல வருஷத்துக்கு நூறு படம் வருது.. அதுல எத்தனை உண்மையா நல்ல படம்னு சொல்லுங்க பார்ப்போம்? அதுதான் என் ஆதங்கம்.. ஒண்ணு ரெண்டு அப்பப்ப வந்தாலும் அது மட்டும் போதாது இல்லையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
தமிழ் சினிமாவிற்க்கான எதிர் காலம்
சங்கர் , மிஷ்கின் , பாலா ,இன்னும் நிறைய பேர் இவங்களால விரைவில் அனைவரும் திரும்பிப்பார்க்க வைக்கும் திரைப்படங்கள் தருவார்கள் என்று நம்புகிறேன்....//

நம்பலாம் நண்பா.. வருகைக்கு நன்றிப்பா..

Anonymous said...

ஆழ்ந்த சிந்தனைகள் பேராசியரியருக்கே உரியது. அழகான வார்த்தை நடைகளுடன் விரிவாக எடுத்தாண்ட விதம் அழகு.