September 19, 2009

அவன், அவள், அது - அவனும் அவளும் (7)..!!!

இரவு பதினோரு மணி. அந்த பேருந்து நிறுத்தத்தில், இரவின் கருமையை மட்டும் துணையாகக் கொண்டவனாய், அவன் நின்று கொண்டிருந்தான். ஆள் அரவமே இல்லாத அந்த சாலையும், அந்த சூழ்நிலையுமே அச்சம் தருவதாக இருந்தது. ஆனால் அவன் கவலை ஏதும் அற்றவனாக ஒரு பாட்டை சீட்டி அடித்துக் கொண்டு பஸ்சுக்கு காத்து இருந்தான்.

"டக்.. டக்.. டக்.."

யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு திரும்பினான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அழகான பெண்ணொருத்தி அவனருகில் வந்து நின்றாள்.

அவளைப் பார்க்கும் யாருக்கும் மறுமுறை பார்க்கும் ஆசை தோன்றும். பார்த்தான்.

வட்ட முகம். வில்லாய் வளைந்த அடர்த்தியான புருவங்கள். அதன் ஊடாக குட்டிப் பாம்பொன்று நெளிந்து கொண்டிருப்பதை போல பொட்டு. கருணை நிறைந்த கண்கள். சட்டென்று நீண்ட நாசி. செதுக்கியதைப் போல உதடுகள். உடம்பில் கருநீல நிறத்தில் இறுக்கமாக சுடிதார் அணிந்து இருந்தாள். அவள் உடம்பின் வளைவுகள் அவனை சூடாக்கின.

மீண்டும் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திகைத்துப் போய் முகத்தை திருப்பிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து தைரியம் வரப் பெற்றவனாய் மீண்டும் அவளைப் பார்த்தான். அவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சிரித்த மாதிரி அவனுக்குத் தோன்றியது.

"இவள் ரூட்டாக இருப்பாளோ?"அவள் கண்களில் ஒரு அழைப்பு இருந்தது.

அவள் திரும்பி நடக்கத் தொடங்கினாள். ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்பட்டவன் போல அவனும் அவளை பின்தொடர்ந்தான். செல்லும் வழியில் திரும்பிப் பார்த்து அவன் வருவதை உறுதி செய்து கொண்டாள். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அவனும் தொடர்ந்தான்.

ரொம்ப தூரம் நடந்து ஒரு பாழடைந்த பங்களாவின் முன்பாக அவள் நின்றாள். அவனும் நின்றான். சுற்றி முற்றி பார்த்தான். ஏதோ ஒரு சுடுகாட்டுக்குள் வந்ததைப் போல உணர்ந்தான். முதல் முறையாக நெஞ்சுக்குள் பயம் எட்டிப் பார்த்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அழைத்தான்.

"என்னங்க.. என்னங்க.."

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவனுக்கு முதுகைக் காட்டியவளாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவன் வயிற்றுக்குள் ஒரு பயப்பந்து உருளத் தொடங்கியது.

" இவ பொண்ணுதானா? தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டோமா? ஒருவேளை இது மோகினிப் பிசாசா இருக்குமோ? நாம இங்க இருந்து உசிரோடத் திரும்ப முடியுமா?"

திடீரென அவள்.. இல்லை .. அது.. திரும்பியது. கருணை நிறைந்த கண்களாக அவனுக்கு தோன்றிய இடத்தில் இப்போது வெறும் குழிகள் மட்டுமே இருந்தன. கையில் ஒரு நீளமான கத்தி. கால்கள் தரையில் பாவாமல் இவனை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது.

அவன் அதிர்ச்சியில் உறைந்தவனாக நின்று கொண்டிருந்தான். இதயம் பயங்கர வேகமாக துடித்தது. ஓவெனக் கத்த எண்ணி வாயைத் திறந்தான். சத்தமே வரவில்லை. நாக்கு மேலன்னத்தோடு ஒட்டிக் கொண்டது.

வியர்த்துக் கொட்டியது. எதற்கோ ஆசைப்பட்டு வந்து கடைசியில் இப்படி மாட்டிக் கொண்டோமே என தன்னைத் தானே நொந்தான் . என்ன செய்வதெனத் தெரியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து அவன் கண்களை திறந்தபோது அது அவன் முன்னே அமைதியாக நின்று கொண்டிருந்தது. தன்னை அது ஏன் கொல்லவில்லை என்று குழம்பியவனாக அதைப் பார்த்தான். அது முதல் முறையாக வாயைத் திறந்து பேசியது.

"மன்னிக்க வேண்டும். இது உங்கள் கனவு. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.."

அவன் சட்டென விழித்துக் கொண்டான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

16 comments:

ஈரோடு கதிர் said...

ஆஹா... நச்

அருமை பாண்டியன்

ரசித்தேன்

சம்பத் said...

கதை நடை நல்ல இருந்துச்சுங்க...

ஆனா நம் கனவில் நடப்பதை நாம் தீர்மானிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்... ;-)

மேவி... said...

sema suspense thala


bloggers meet kku valthukkal

மேவி... said...

tales from the crypt vasanai adikkuthu thala

மேவி... said...

" சம்பத் said...


ஆனா நம் கனவில் நடப்பதை நாம் தீர்மானிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்... ;-)"


or alavukku mudiyum boss

Raju said...

சரியில்லை..தேவையில்லாத நீண்ண்ண்ண்ண்ண்ட வர்ணனைகள்..!
சில இடங்களில் வரிகளும்.
வழக்கம் போல மோகம்-கனவு-பேய்...?!?!?
எனக்கு பிடிக்கவில்லை.
:-(

vasu balaji said...

நல்ல நடை. பாராட்டுக்கள்

க.பாலாசி said...

அந்த பெண்ணை வர்ணித்த விதம் அழகு...

கதையில் நல்ல வேகம் சுவாரசியம்...முக்கியமாக முடிவு எதிர்பார்த்ததுபோலவே இருந்தது. ஆயினும் அந்த உருவமே கனவிலும் பதில் சொல்வதுபோல் அமைத்தது புதுமை...

ஹேமா said...

கனவா....
எழுதும் கோர்வை நல்லாயிருக்கு.

thiyaa said...

நல்ல கதை
தலைப்பு பிடிச்சிருக்கு

அ.மு.செய்யது said...

நல்ல எழுத்து நடை...சுவாரஸியம் !!!

Prabhu said...

ஓகே தாங்க! பட் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. இந்த சரக்க வேற எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணிருக்கலாம்!

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு பாஸ்..

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல முடிவு...அண்ணா

இப்னு அப்துல் ரஜாக் said...

சுவாரஸியம்

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

இது என்ன தொடர் இடுகையா - இதை மட்டும் தான் படித்தேன் - கனவு முடிந்ததெனக் கனவில் வந்த பெண்ணே கூறுவது புதுமை

அழகாக ஒரு பெண்ணை வர்ணிக்கும் வயது - தூள் கெளப்புறீங்க