November 12, 2009

உக்கார்ந்து யோசிச்சது (12-11-09)..!!!

சமீபத்தில் எங்கள் கல்லூரி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்கு, நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும்படி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள். (உன்னையப் போயான்னு எல்லாம் சிரிக்கக் கூடாது..!!) சரி, ஆட்டம் பாட்டம்னா நமக்கும் கொண்டாட்டம் தானேன்னு ஒத்துக்கிட்டேன். அங்கே போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க நடனம்னு சொன்னது பரதநாட்டியப் போட்டின்னு. நமக்கு பார்த்து ரசிக்க வேணும்னா தெரியுமே ஒழிய, பரதநாட்டியம் பத்தி வேற ஒண்ணுமே தெரியாது.

இதை போட்டி அமைப்பாளர்களான பள்ளி ஆசிரியர்கள்கிட்ட சொன்னா, அவங்க சிரிச்சுக்கிட்டே, " இந்தப் போட்டிக்கு நடுவரா வந்திருக்கிற எல்லோருமே அப்படித்தான் சார்.. நீங்க சும்மா வாங்க"ன்னு சொல்றாங்க. ஆனாலும் நமக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல்ல. "இல்லைங்க..நான் இந்த ஆட்டத்துக்கு வரலை"ன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டேன். இன்னொரு ஆசிரியரை (என்னை மாதிரியே எதுவும் தெரியாதவர்) வச்சு போட்டியை நடத்தினாங்க. நம்ம நண்பன்கிட்ட பீல் பண்ணி சொன்னா "போடா போக்கத்தவனே.. அநியாயமா ஒரு கிப்டு வீணாப் போச்சே"ன்னு திட்டிட்டுப் போய்ட்டான்.

தங்கள் திறமையை நிரூபிக்கும் கனவோடு எத்தனை குழந்தைகள்..? உயிரைக் கொடுத்து பயிற்சி செய்திருப்பார்கள் இல்லையா? எல்லாப் பள்ளிகளிலும் இதேபோலத்தான் நடக்கிறதா? இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் பள்ளி நிர்வாகத்தினர் கொஞ்சம் சிரமம் எடுத்து விஷயம் தெரிந்தவர்களை நடுவர்களாகக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமே?சிந்திப்பார்களா?

***************

நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வரும் 27 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. அவருடைய பதிவுகளை நான் இதுவரை படித்தது கிடையாது. ஆனால் மற்ற நண்பர்களின் பதிவுகளில் பத்தி பத்தியாக பிரித்து மேய்ந்திருக்கும் அவருடைய பின்னூட்டங்களை மட்டுமே பார்த்து இருக்கிறேன். போன வாரம் போன் செய்து இருந்தார். நம்பரை எங்கிருந்து பிடித்தார் என்று தெரியவில்லை (வாலு?). "கல்யாணம், வந்திடுறீங்க" என்று உரிமையோடு கட்டளையும் இட்டார். மறுக்க முடியுமா? ஆகவே நாமும் ஆஜர் ஆகிறோம். ஒரு இனிய பதிவர் சந்திப்பாகவும் இந்த விழா அமையும் என்று நம்புகிறேன். வந்திருங்க மக்கா, கலக்கிருவோம்.

***************

ராமாயணம் நடந்த காலம் கிமு பத்தாயிரம் என்று கணக்கிட்டு இருக்கிறார்களாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தசரதனின் அரசவையில் சோழ மன்னர்கள் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறதாம். அதேபோல மகாபாரத யுத்தத்தின் போது பாண்டவர், கௌரவர் இரு தரப்பினருக்கும் சேர மன்னன் உணவு வசதிகள் செய்து தந்ததாக குறிப்புகள் இருக்கின்றனவாம். இந்த இரண்டு தகவல்களையும் கலைமகள் தீபாவளி மலரில் இருக்கும் ஒரு கட்டுரையில் படித்தேன். இது உண்மைதானா? தமிழ் அத்தனை பழமையான மொழி என்பது இருக்கட்டும். அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா? வரலாறு தெரிஞ்சவுங்க யாராவது கொஞ்சம் விளக்கம் தாங்கப்பா..

***************

வேட்டைக்காரனில் வரும் "என் உச்சி மண்டையில" என்ற பாட்டை சமீபத்தில் கேட்க முடிந்தது. விஜய் ஆண்டனி பொளந்து கட்டி இருக்கிறார். ஆனால் பாட்டு ஏற்கனவே "அ ஆ இ ஈ" படத்தில் வந்த மேனாமினுக்கி பாட்டின் உல்டா. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. பாட்டை எப்படி படம் பிடித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்க வைக்கிறது. அதே போல தற்போது டிவியில் விரும்பி பார்க்கும் பாடல் - நினைத்தாலே இனிக்கும் படத்தின் "பனாரஸ் பட்டு கட்டி". விஜய் ஆண்டனியின் இசையும், ப்ரித்விராஜும் பிரியாமணியும் பாடலை என்ஜாய் செய்து ஆடும் விதமும், ரசிக்க வைக்கும் நடன அமைப்பும் என்று பாட்டு களை கட்டுகிறது.

***************

லா.ச.ராமாமிர்தம் அவர்களுடைய "புத்ர" என்னும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் வாசிக்கும் அவருடைய முதல் நாவல் இது. ஒரே வார்த்தையில் சொல்வதானால் - அட்டகாசம். ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப் போராட்டம் தான் கதை. ஒரு வரிக் கதைதான். ஆனால் அதை சொல்லியிருக்கும் விதத்தில் மனிதர் அசரடிக்கிறார். வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கும் விதம் கொள்ளை அழகு. முடிவுமட்டுமகொஞ்சம் சட்டென்று முடிந்ததுபோலத் தோன்றியது. இருந்தாலும், மொழியின் வளமைக்காகவே வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

***************

ஒரு கவிதை முயற்சி..

கடவுள்

இருக்கலாம்..
இல்லாமலும் இருக்கலாம்..
இருப்பின்,
அவன்
அவள்
அது
இதில் எதுவாக
இருக்கும்? Justify Full

நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))))))))))


39 comments:

மேவி... said...

super irungA

மேவி... said...

"அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா?"


அந்த கதை எல்லாம் நடந்தது உண்மை தான். ஆனால் தெய்வ தன்மை பின்னர் சேர்க்க பட்டது

மேவி... said...

pesama chemistry, biology, maths sarillai nnu sollittu vanthu irukkalam

he he he he

மேவி... said...

லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்....... புது மாப்பிள்ளையின் பின்னோட்டங்களை இனிமேல் பார்க்க முடியாது போல் இருக்கே

ஸ்ரீ.கிருஷ்ணா said...

லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்

அத்திரி said...

கவிதை நல்லா இருக்கு.....
வாழ்த்துக்கள் லவ்டேல் மேடிக்கு

ஹேமா said...

கார்த்திக்,உட்கார்ந்து யோசிச்சதில முதலும் கடைசியும் பிடிச்சிருக்கு.

க.பாலாசி said...

//ஒரு இனிய பதிவர் சந்திப்பாகவும் இந்த விழா அமையும் என்று நம்புகிறேன்//

சரிதான். நம்பிக்கை பலிக்கும் என்று நானும் நம்புகிறேன்.

கடைசி கவிதையில் எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.

விநாயக முருகன் said...

//அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா? வரலாறு தெரிஞ்சவுங்க யாராவது கொஞ்சம் விளக்கம் தாங்கப்பா..


வால்காவிலிருந்து கங்கை வரை படித்தால் அனைத்தும் புரியும்.

விநாயக முருகன் said...

//அதேபோல மகாபாரத யுத்தத்தின் போது பாண்டவர், கௌரவர் இரு தரப்பினருக்கும் சேர மன்னன் உணவு வசதிகள் செய்து தந்ததாக குறிப்புகள் இருக்கின்றனவாம்.

பாண்டவர் பூமி படம் எடுத்தது சேரன் - வாரமலர் நியூஸ்

ஐநூறு வருடம் கழித்து எங்காவது தினமலர் துண்டு பேப்பரை பூமியில் கண்டுபிடிப்பார்கள். அப்போது இப்படி சொல்வார்கள்.

பாண்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி வாங்கி தந்தது சேரமன்னன்

vasu balaji said...

நல்லாத்தான் யோசிசிருக்கீங்க. முதல் ரொம்ப நேர்மையான வருத்தம். கவிதை யோசிக்க வைக்கிறது.

முரளிகண்ணன் said...

வழக் கலக்

கிருஷ்ண மூர்த்தி S said...

/கடவுள்....
இருக்கலாம்..
இல்லாமலும் இருக்கலாம்..
இருப்பின்,
அவன்
அவள்
அது
இதில் எதுவாக
இருக்கும்?/

அவன், அவள் அது இதுவென
அனைத்தும் கடந்து போய்
தனக்குள் தன்னையே உள்ளது
உள்ளபடி காணும் விதமே கடவுள்!

velji said...

உக்காந்து யோசிச்சது எல்லாம் நல்லாத்தான் இருக்கு.தொடருங்கள்.

சிவக்குமரன் said...

உள்ளேன் அய்யா!

RAMYA said...

//
நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும்படி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள்
//

வாழ்த்துக்கள் சகோ!

. //
(உன்னையப் போயான்னு எல்லாம் சிரிக்கக் கூடாது..!!)
//

ச்சேச்சே! அப்படி எல்லாம் நினைப்பாங்களா என்ன:)

RAMYA said...

நல்லாவே உக்காந்து யோசிச்சு செதுக்கி இருக்கீங்க!

நல்லவேளை உக்காந்து யோசிக்க நேரம் கிடைச்சுதே! அதுக்கு சந்தோஷம் என்ன தம்பி சரிதானே நான் சொல்றது :)

Unknown said...

லவ் டேல் மேடி பிசியா இருப்பார் போல, பின்னூட்டங்களையே பார்க்க முடியல.. :-)

//.. அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா? ..//

என்னுடைய தமிழ் ஆசிரியர் கூறியது " புராணம் என்பது புளுகுமூட்டை, அதில் உள்ள சொட்சுவையை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பொருட்சுவையை எடுத்துக்கொள்ள கூடாது".

cheena (சீனா) said...

அன்பின் காபா

உக்காந்தா நல்லா யொச்னை வரும் போலெ இருக்கே !! சபாஷ் சபாஷ்

நடுவர் அனுபவம் எனக்கும் உண்டு - தவிர்க்க வேண்டும் - தவிர்த்தமை நன்று

லவ்டேல்மேடி அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பினார். திடீரென் ஒரு நாள் முன்னிஅர்வில் அலைபேசி - எடுத்தவுடன் நல்லா இருகீங்களா - யாரெனத் தெரியா விட்டாலும் சொல்லுங்க என்றேன் - நல்லாருக்கிங்களா சொல்லுங்க என்றார் - யாரெனக் கேட்டேன் - ஈரோடு லவ்டேல்மேட் என்றார் - அழைப்பு வந்தது - வருகிறேன் என்றேன் - மொதல்ல நல்லாருக்கிங்களா சொல்லுங்க என்றார் - நல்லாருகேன் என்றேன் - கண்டிப்பா வரணும் - ரூம் போட்டுடறேன் - அவசியம் வரணும் - என்றார்

கண்டிப்பான உரிமை கலந்த குரல் - கலகல என்று சிரிப்புடன் கூடிய குரல் - முகம் தெரியாத - பதிவின் பக்கமே வராத நண்பரை ( ?? ) அழைக்கும் அன்புக் குரல் - அவசியம் வரேன் என்று கூறினேன்

அலைபேசி எண் உபயம் : வால் - கார்த்தி

நல்வாழ்த்துகள் மணமக்களுக்கு - 27ம் நாள் ஈரோட்டில் மணவிழாக் காணும் இனிய நண்பருக்கு

ஆமா - இது பின்னூட்டமா இடுகையா

cheena (சீனா) said...

இறுதிக்கவிதை

அவனுக்கு அவள்
அவளுக்கு அவன்
அவர்களுக்கு அது

இதுதான் கடவுள்

ஜெட்லி... said...

வேட்டைக்காரன் பாட்டை
பத்தி கரெக்ட்ஆ சொன்னிங்க ஜி

Prabhu said...

அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா? வரலாறு தெரிஞ்சவுங்க யாராவது கொஞ்சம் விளக்கம் தாங்கப்பா..//////

கொஞ்சம் காம்ப்ளக்ஸான விஷயம். சில விஷயங்கள ரொம்ப யோசிக்காம இருக்கிறது நல்லது.

சரி என் பங்குக்கு உங்கள் குழப்பிட்டு போறேன். ராமர் மற்றூ அவர் முன்னோர்களே இந்தியா கிடையாது. அவங்க வெளிய இருந்து வந்த நிஜ ராஜாக்கள் என சொல்வது உண்டு. மிடில் ஈஸ்ட்ல இருந்த ஜார்கனோட(சாகரன்?!) வழிவந்தவங்கன்னு ஒரு தியரி இருக்கு. இதத்தான் ஹேராம்ல முஸ்லிம் ஃப்ரண்ட் ஷாருக் பாத்து கைபர் கணவாய்(இமயத்தில் உண்டு.இஸ்லாம் வந்த வழி) வழியா வந்தவனேன்னு சொல்லும் போது பதிலுக்கு ஷாரூக், 'உங்க ராமசாமியே கைபர் கணவாய் வந்தவர் என சொல்றாங்களேன்னு' கேப்பார்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஏதோ ஒரு பாட்டோட உல்டான்னு சொன்ன பிறகும் பாட்டு பிடிச்சுருக்குன்னு சொன்ன உங்க நேர்மை பிடிச்சுருக்கு நண்பா....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

super.

பாலகுமார் said...

நல்லா யோசிக்கிறீங்க, கார்த்தி !

Anbu said...

:-))

இராகவன் நைஜிரியா said...

பிரபல மற்றும் ஃபேமஸ் பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள். புரியலையா... இரண்டு மைனஸ் ஓட்டு தமிழ் மணத்தில் வாங்கிட்டீங்களே..

லவ் டேல் மேடிக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும். எல்லாம் வல்ல ஆண்டவன் தம்பதியருக்கு எல்லா வளமும், நலமும் அருளுவாராக.

// நமக்கு பார்த்து ரசிக்க வேணும்னா தெரியுமே ஒழிய, பரதநாட்டியம் பத்தி வேற ஒண்ணுமே தெரியாது.//

நல்ல ஆசிரியர். தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொண்டீரே, அதற்காகவே உம்மை பாராட்டணும்.

Anonymous said...

லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்.......

ctsasikumar said...

இது என்னுடைய முதல் பதிவு சகோ

என்னமா யோசிகிரங்க்பா

இராகவன் நைஜிரியா said...

பிரபல மற்றும் ஃபேமஸ் பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள். புரியலையா... இரண்டு மைனஸ் ஓட்டு தமிழ் மணத்தில் வாங்கிட்டீங்களே..

லவ் டேல் மேடிக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும். எல்லாம் வல்ல ஆண்டவன் தம்பதியருக்கு எல்லா வளமும், நலமும் அருளுவாராக.

// நமக்கு பார்த்து ரசிக்க வேணும்னா தெரியுமே ஒழிய, பரதநாட்டியம் பத்தி வேற ஒண்ணுமே தெரியாது.//

நல்ல ஆசிரியர். தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொண்டீரே, அதற்காகவே உம்மை பாராட்டணும்.

வால்பையன் said...

சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் 4000-5000 வருடங்கள் பழமையானது, அதற்கு நிகரான நாகரீகம் ஆசியாவில் கண்டுபிடிக்கபடவில்லை,

நமது கதைகள் போலவே அட்லாண்டிஸ் என்ற ஒரு நாகரீகம் இருந்ததாகவும், அது முழுவதும் கடலுக்குள் அழிழ்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு, ஆனால் அதற்கு ஆதாரங்கள் இல்லை!

கம்பர் நினைத்திருந்தால் எதை வேண்டுமானாலும் ராமாயணத்தில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் அவர் வாழ்ந்தது சோழர் காலத்தில், சோழ, பாண்டிய மன்னர்கள் இருக்கும் போது ஏன் ராமன் வானர படையை உதவிக்கு தேர்ந்தெடுத்தான் என்று கொஞ்சம்!? இருக்கும் மூளையை பயன்படுத்தினால் அந்த புனைவின் அர்த்ததை புரிந்து கொள்ளலாம்!

வினோத் கெளதம் said...

நானும் அந்த பனராஸ் பட்டு கட்டி பாட்டை திரும்பி திரும்பி கேக்கிறேன் ..பாட்டு பட்டய கிளப்புது.

Anonymous said...

/அவனுக்கு அவள்
அவளுக்கு அவன்
அவர்களுக்கு அது/

சீனா ஐயா,
அதுகளுக்கு எது?

Dhavappudhalvan said...

லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்.
நல்கவிதை நல்கவிதை நல்கவிதை

நசரேயன் said...

நல்லா யோசிக்கிறீங்க

சென்ஷி said...

//கம்பர் நினைத்திருந்தால் எதை வேண்டுமானாலும் ராமாயணத்தில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் அவர் வாழ்ந்தது சோழர் காலத்தில், சோழ, பாண்டிய மன்னர்கள் இருக்கும் போது ஏன் ராமன் வானர படையை உதவிக்கு தேர்ந்தெடுத்தான் என்று கொஞ்சம்!? இருக்கும் மூளையை பயன்படுத்தினால் அந்த புனைவின் அர்த்ததை புரிந்து கொள்ளலாம்!//

கம்பரு ஏனுங்க வானரப்படையை உபயோகப்படுத்தினாரு. வெளக்கமா சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவோம்..

இவண்
மூளையில்லாதவன் :)

ஆ.ஞானசேகரன் said...

//பள்ளி நிர்வாகத்தினர் கொஞ்சம் சிரமம் எடுத்து விஷயம் தெரிந்தவர்களை நடுவர்களாகக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமே?சிந்திப்பார்களா?//

அட நீங்க வேர! விஷயம் தெரிந்தவர்கள் கூட பொருப்பா எல்லாம் செய்யுரதில்லைங்க

ஆ.ஞானசேகரன் said...

//நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வரும் 27 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. //

என்னுடைய வாழ்த்துகளை சொல்லிடுங்க கார்த்திகைப் பாண்டியன்

shaan said...

சோழர்களின் வரலாற்றைக் கூறும் செப்பேட்டின்படி சோழர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள். அதாவது "சூரிய வம்சத்தில் வந்த மனு மாந்தாதா, அவனுடைய வம்சத்தில் வந்த சிபிச் சக்கரவர்த்தி, அவனுடைய வம்சத்தில் வந்த மனுநீதிச் சோழன், அவனுடைய வம்சத்தில் வந்த இளம்சேட்சென்னி , இளம்சேட்சென்னியின் மகன் கரிகாலன்..." என்று கூறிக்கொண்டே போகிறது. தசரதரும் சூரிய வம்சத்தில் பிறந்தவர் தான். சேர சோழ பாண்டியர்கள் பாரதப்போரில் பாண்டவர்களோடு சேர்ந்து போரிட்டனர் என்று மகாபாரதம் கூறுகிறது. உதியன் சேரலாதன் இரு படையினருக்கும் உணவு அளித்ததாகக் புறநானூறு கூறினாலும் அந்த பாட்டில் வரும் நூற்றுவர் சதவாஹனர்கள் (சத-100) என்று ஒரு கருத்து உள்ளது.