December 7, 2009

இடைவெளி..!!!

தொலைத்ததாய் நம்பிக் கொண்டிருந்த உறவொன்று
மீண்டு(ம்) என்முன்னே வந்து நிற்க
ஆசிர்வதிக்கப்பட்டதாய் மாறிப்போகிறது இந்த தினம்

ஆணும் பெண்ணும் நண்பர்களாய் மட்டும் இருக்க முடியும்
என்னும் அடிப்படையில் தோன்றியது
உனக்கும் எனக்குமான உறவின் அடையாளம்

கால நேரம் மறந்த கட்டற்ற பறவைகளாய்
நாம் சுற்றித் திரிந்த பொழுதுகளை
சுப்பிரமணியபுரத்தின் கல்லு சந்துகளும் குட்டிச் சுவர்களும்
இன்றும் கூட கதை கதையாய் பேசிக் கொண்டிருக்கக் கூடும்

உன்னோடு ஆடிய வளையலாட்டமும்
விடுமுறைகளின் போது மட்டும் வந்து சேரும் காய்ச்சலும்
பையனாக பிறந்ததற்காக நீ என் மீது கொள்ளும் செல்லக் கோபங்களும்

ஓர் மழை நாளின் நள்ளிரவில்
உன்னோடு சேர்ந்து காணாமல் போயின

"வாங்க வீட்டுக்கு போய் பேசுவோம்"

எப்பொழுதும் டா போட்டுப் பேசும் உன்னிடம்
எங்கிருந்து வந்தது இந்த மரியாதை?

கைகோர்த்து நடந்த பாதையில்
நீ மட்டும் வெகுதூரம் முன்னே சென்றிருக்க
நான் பால்யத்திலேயே தேங்கி விட்டேனா?

வீட்டை அடைந்து சாவகசாமாய் பேசியபடி
படிகளில் ஏறிய நீ தடுமாற
தாங்க வந்த என்னை சுவாதீனமாய் தடுத்து
விலகிய முந்தானையை சரி செய்த தருணத்தில்

காலத்தின் கொடிய கரங்களால்
சிதைக்கப்பட்டது
நம் நட்பும்
என் பால்யத்தின் வீதியெங்கும்
பாதசுவடுகளாய் பதிந்து இருந்த
உன் நினைவுகளும்..

23 comments:

Raju said...

சிரமப்படுத்தாத வரிகள்..!

அவங்க படிப்பாங்களா..?

Rajan said...

//சுப்பிரமணியபுரத்தின் கல்லு சந்துகளும்//


அய்யய்யோ ! மாவட்ட செயலாளர் பொண்ணா !

ஆரூரன் விசுவநாதன் said...

//ஓர் மழை நாளின் நள்ளிரவில்
உன்னோடு சேர்ந்து காணாமல் போயின


சரியான வரிகள்

பாலகுமார் said...

//நீ மட்டும் வெகுதூரம் முன்னே சென்றிருக்க
நான் பால்யத்திலேயே தேங்கி விட்டேனா?//

நீங்களும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க, கார்த்தி :)

Prabhu said...

எப்படி இதெல்லாம்?

ஹேமா said...

கவிதையா உங்கள் உள்ளுணர்வா கார்த்திக்.வார்த்தைகள் வசப்பட்டிருக்கு.

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க கார்த்தி.

நாடோடி இலக்கியன் said...

//வீட்டை அடைந்து சாவகசாமாய் பேசியபடி
படிகளில் ஏறிய நீ தடுமாற
தாங்க வந்த என்னை சுவாதீனமாய் தடுத்து
விலகிய முந்தானையை சரி செய்த தருணத்தில்

காலத்தின் கொடிய கரங்களால்
சிதைக்கப்பட்டது
நம் நட்பும்
என் பால்யத்தின் வீதியெங்கும்
பாதசுவடுகளாய் பதிந்து இருந்த
உன் நினைவுகளும்..
//

ரசித்தேன்.நல்லாயிருக்கு நன்பா.

Anonymous said...

க‌விதை அருமை

Anonymous said...

nice. ரொம்ப நல்லா இருக்கு.

அன்பேசிவம் said...

கைகோர்த்து நடந்த பாதையில்
நீ மட்டும் வெகுதூரம் முன்னே சென்றிருக்க
நான் பால்யத்திலேயே தேங்கி விட்டேனா?//

பாண்டியன், எளிமையான வரிகள். தண்ணீருக்கடியில் உறங்கும் கல்லின், மௌனம். எழுப்பிவிட்ட நீர் வளையங்கள் மட்டும் இன்னும் அடங்கவில்லை., கிட்டதட்ட இதேபோல எழுதிய என் கிறுக்கலை நேரமிருப்பின் வாசித்து போங்க..

சொல்லரசன் said...

//கைகோர்த்து நடந்த பாதையில்
நீ மட்டும் வெகுதூரம் முன்னே சென்றிருக்க
நான் பால்யத்திலேயே தேங்கி விட்டேனா?//

இதனால்தான் க‌ல்யாண‌சிந்த‌னை இல்லாம‌ல் ப‌ள்ளிசிறுவ‌ன்போல் ஊர்சுற்றிவ‌ருகிறீர்க‌ளா?

மேவி... said...

அவங்க .... MCA LECTURER தானே ??????



veetil thaan ok sollitangale...piragu yen

Karthik said...

எப்படி இப்படில்லாம்? :)

வினோத் கெளதம் said...

என்னமோ நடக்குது உலகத்துல..

ப்ரியமுடன் வசந்த் said...

அசால்ட்டு...

அழகா சொல்லியிருக்கீங்க கார்த்தி

malarvizhi said...

ஒவ்வொரு வரியும் ரசித்து எழுதி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.

Prabu M said...

காதலைக் கொண்டாடும் ஆயிரம் கவிதைகளுக்கு இடையில் பால்யத்தைப் பாதுகாக்கும் கவிதை...
ரொம்ப சுத்தமான சிந்தனை... தூள் பாஸ்!!

ஆ.ஞானசேகரன் said...

//காலத்தின் கொடிய கரங்களால்
சிதைக்கப்பட்டது
நம் நட்பும்
என் பால்யத்தின் வீதியெங்கும்
பாதசுவடுகளாய் பதிந்து இருந்த
உன் நினைவுகளும்..//

அனைத்தும் செதுக்கியுள்ளீர்கள் நண்பா,...

குமரை நிலாவன் said...

க‌விதை அருமை

kavya said...

ரொம்ப நல்ல இருக்கு சார் !

தாரணி பிரியா said...

200 க்கு வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்க கார்த்திகை பாண்டியன்