December 16, 2009

ஒளகப்பட இயக்குனர்களின் சந்திப்பு..!!!

ஆபிசில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார் டமீர். உதவியாளர் உள்ளே ஓடி வருகிறார்.

"அண்ணே.. உங்களப் பார்க்க குப்ரமணிய கிவா வந்துக்கிட்டு இருக்காப்புல.. ஏதோ புதுசா கதை புடிச்சிருக்காப்புலையாம்"

டமீர்: அட நாசமாப் போறவனே.. ஒரு ரோகிக்கே வரவன் போறவனெல்லாம் என்ன பார்த்து காறித் துப்பிட்டுப்போறான்.. இதுல இன்னொரு கதையா? ஐயம் எஸ்கேப்பு...

தப்பித்த டமீர் நேராப் போய் லேண்ட் ஆகுற இடம் எதுன்னு பார்த்தா.... நாட்டரசுவோட வீடு.

டமீர்: ஆகா.. பூனைக்கு பயந்து புலியோட குகையில வந்து விழுந்துட்டேன் போலிருக்கே... செத்தேன்..

நாட்டரசு: வாங்கண்ணே.. நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சுதான் நம்ம நண்பர்கள் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. இந்தா வந்திருவாய்ங்க

"உருப்புடுவாய்ங்களா .. இவிங்க குடும்பம் எல்லாம் வெளங்காமத் தான் போகும்... தமிழன தமிழனாக் காட்ட விடாம சதி பண்றாங்க..." புலம்பியபடி உள்ளே வருகிறார் டிங்கர் மச்சான்.

டமீர்: என்னாண்ணே.. ஒரே பொலம்பல்? அளவாடிய விழுதுகள் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?

டிங்கர்: அத ஏன் தம்பி? ஆனா ஊனா இந்த கிரபுதேவா காணாமப் போயிடுறான்.. கேட்டா லயன் கிட்ட இருந்து போன்னு, கமலத் பஞ்சாயத்துன்னு அழுவுறான்.. சரி நாமளே ஒரு ரோலப் போடுவோம்னு சொன்னா தயாரிப்பாளரு டரியல் ஆவுராறு.. நேத்துக் கூட தம்பி.. இந்த பமன்னா புள்ளைக்கு போனப் போட்டு.. தாயி.. அருமையான ரோலு.. கண்டாங்கி கட்டிக்கிட்டு கட்டையில போற.. சீ சீ.. கட்டை வண்டியில போற மாதிரி பாட்டு எடுப்போம்னு சொன்னா, எனக்கு நாய்க்காய்ச்சல்னு நடுங்கிக்கிட்டே சொல்றா.. எப்புடியா உருப்புடும் தமிழ் சினிமா?

டமீர்: அதேதாண்ணே.. நானும் தமிழ் சினிமாவ உலக சினிமா ரேஞ்சுக்கே கொண்டு போகப் பாக்குறேன்.. ஒருத்தனும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாய்ங்க..

"ஏய்.. யார் இங்கே உலக சினிமா பத்தி பேசினது? அதெல்லாம் முடியாது.. நான் மட்டுந்தான் பேசுவேன்" என்று அலறிக் கொண்டே வருகிறார் பேரன்.

பேரன்: இப்போத்தான் துபாய்ல இருந்து வரேன்.. அடுத்த வாரம் அலாஸ்கா.. மூணாவது வாரம் நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியலயேப்பா.. ஒரே ஒளகப்பட விழவா போய்க்கிட்டு இருக்கேன்..

டமீர்: (உக்கும்.. இங்க உள்ளூர் செலாவாநிக்கே வக்கில்லையாமா..) வாங்கண்ணே.. ரோகி பார்த்தாச்சா?

பேரன்: நான் ஏற்கனவ சொத்சி பார்த்துட்டேன் தம்பி.. நீங்க டொக்கிஷம் பார்த்தீங்களா?

டமீர்: நான் கூட கிளாசிக் ஏற்கனவே பார்த்துட்டேன்னே...

பேரன்: சரி சரி.. கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளியில சொல்லாதப்பா..

டிங்கர்: ஏம்பா.. ரெண்டும் பேரும் என்னப்பா பேசுறீங்க.. ஒண்ணுமே புரியலையே..

டமீர்: போங்கண்ணே.. இதெல்லாம் கேட்டுக்கிட்டு.. வெளில மல்லாட்ட அவிச்சு விக்கிறாங்க.. போய் வாங்கிட்டு வாங்க.. கொரிச்சிக்கிடே பேசுவோம்..

"ஏய்.. வெளில விக்கிறாங்க கடலை..
நான் அவனை சும்மா விடலை..
ரோடு ரோடா போடுறது மேப்பு ..
ஒண்ணு சேர்ந்துட்டோம் - இனிமே நாமதான் டாப்பு.."

கொலைவெறியோடு ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தையும் வாங்கிக் கொண்டு நுழைகிறார் நாட்டரசு.

டிங்கர்: ஏங்க.. என்னங்க சொல்றீங்க..

நாட்டரசு: அண்ணே.. நாம் எல்லாருமே தனித்தனியா எடுத்து படம் போனியாகல.. ஏன் நாம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து நடிக்கக் கூடாது? இந்த கதாநாயகப் பயலுகளுக்கு எல்லாம் இனிமா கொடுத்த மாதிரி இருக்கும்ல..

பேரன்: ஆமாம்ப்பா.. நீ சொல்றதுதான் சரி.. தமிழ் ரசிகர்கள் எல்லாம் மண்ணு.. நல்ல படம் எடுத்தா அவங்களுக்குப் பிடிக்காது.. ஓட விட மாட்டாய்ங்க..பேசாம நீ சொல்ற மாதிரியே செஞ்சிடுவோம்..

டமீர்: (அடப்பாவிகளா.. முடிவே பண்ணிட்டிங்களா..) சரி.. அப்போ கதைய சொல்லுங்க..

நாட்டரசு: நீங்க எல்லோரும் கதானாயகன்களா நடிங்க.. எனக்கு கெஸ்ட்டு ரோலு.. அவ்வளவுதான்.. ஓப்பன் பண்ணினா ஒரு குப்பம். அங்கே இருக்குது கதாநாயகனோட வீடு.. டமீர்தான் ஹீரோ.. அவரோட பிரண்டு பேரன்.. ரெண்டும் பேரும் கடல்ல மீன் பிடிக்கப் போறாங்க.. போட்டு ஓட்டுரவருதான் டிங்கர்.. திடீர்னு ஒரு பெரிய சுறா போட்ட அட்டாக் பண்ணுது.. ஐயோ எங்களக் காப்பாத்துங்கன்னு எல்லோரும் கத்துறாங்க.. அப்ப நான் எண்ட்ரி கொடுக்குறேன்.. அப்போ ஒரு பாட்டு..

"நீ எந்த கடலு.. நான் எந்த கடலு.. வலை கூடத் தேவையில்லை"

சும்மா பாட்டக் கேட்டே சுறா மிரண்டு போகுது.. அதோட ஒரு அரை மணி நேரம் பைட் பண்ணி கொல்றேன்..

பேரன்:(நீ இப்படி நடிச்சு மக்கள கொலையாக் கொன்னுடவ போலயேப்பா.. அவ்வவ்..) அப்புறம்?

நாட்டரசு: மீன் பிடிச்சிட்டு பத்திரமா கரைக்கு வர உங்ககிட்ட வில்லனோட ஆளுங்க வம்பு பண்றாங்க.. அங்க ஒரு சண்ட.. அங்கயும் நான் வந்து காப்பாத்துறேன்.. வில்லனைப் பார்த்து பேசுற வசனத்துல பஞ்சு தெறிக்குது..

"டேய்.. நீ அரசியல்வாதிக்குத் தான் பினாமி..
ஆனா நான் ஆண்டவன் உன்ன அழிக்க அனுப்பின சுனாமி.."

எப்பூடி? கதைக்கு பேரு வந்து.. வந்து.. கடலூர்ன்னு வச்சுப்போமா? சொல்லுங்க.. எப்போ ஷூட்டிங் போகலாம்?

டிங்கர்: கதை நல்லாத்தாங்க இருக்கு.. ஆனா மண்ணுவாசம் வீசலியே..

நாட்டரசு: வேணும்னா படம் பார்க்க வர மக்களுக்கு ஆளுக்கு ஒரு கைப்பிடி மண்ண ப்ரீயாக் கொடுப்போம்.. நம்ம ப்ரீகாந்த் மேவாகிட்ட சொன்னா எல்லா வாசமும் வீசுற மாதிரி ம்யுசிக் ரெடி.. மண்ண மோர்ந்து பார்த்துக்கிட்டே படம் பார்த்தா சரியாப்போச்சு..

டிங்கர்: (அட வெளங்காதவனே..) இல்லைங்க.. இத விட அருமையான கதை ஒண்ணு என்கிட்டே இருக்கு.. அப்படியே உணர்ச்சிக் குழம்பா இருக்கும்..

நாட்டரசு: குழம்பு சரி.. அப்ப ரசம் யாருங்க ஊத்துவா?

டிங்கர்: அட சும்மா இருப்பா.. கதையைக் கேளுங்க.. பண்ரொட்டி கிராமம்.. அப்படியே பள்ளிக்கூடத்தக் காட்டுறோம்.. வாசல்ல விக்கிற நெல்லிக்காய வாங்கித் தின்னுரதுக்காக லைன்ல நிக்குதுங்க நாலு பசங்க.. அதுதான் நாம.. வளர்ந்தாலும் படிச்ச ஸ்கூல விட்டுப் பிரியாம அங்கேயே திரியுதுங்க பயபுள்ளைங்க.. இங்க ஒரு திருவிழாப்பாட்ட போடுறோம்..

டமீர்: போச்சுடா.. ஏங்க.. அப்படியே அங்க ஒரு காதல் ஜோடிய காட்டணுமே?

டிங்கர்: எப்படிங்க சரியாச் சொன்னீங்க? எனக்கும் கூட படிக்கிற பிள்ளைக்கும் சின்ன வயசுலேயே காதல்.. இந்த ரோலுக்கு பொய்ஸ்வர்யாவைக் கேக்கலாங்களா?

பேரன்: (நீ கூப்பிட்டா கறவை மினியம்மா கூட வராதுயா டுபுக்கு..) மேல சொல்லுங்க நண்பா

டிங்கர்: கெரகம் கதை அம்புட்டுத்தான்.. நீங்க எங்க காதலை எப்படி தியாகம் பண்ணி சேர்த்து வைக்கிறீங்கன்னு மக்களை பிழிய பிழிய அழ வச்சா முடிஞ்சு போச்சு.. நாலு பாட்டு சும்மா நச்சுன்னு பட்ஜெட்டுல எடுக்குறோம்.. மொதப் பாட்டு மொடக்குறிச்சி.. ரெண்டாவது பாட்டு ரெட்டியார்சத்திரம்..

நாட்டரசு: (ஆகா.. இந்தாளு நமக்கு போட்டியா வந்திருவான் போலிருக்கே..) மூணாவது பாட்டு மூனாறுளையும் நாலாவது பாட்டு நாட்டரசன் கோட்டைளையும் எடுக்கலாம்.. கரெக்டா..

டிங்கர்: சூப்பரு.. எப்படிங்க கரெக்டா சொன்னீங்க?

டமீர்: நாசமாப் போச்சு.. இதெல்லாம் பழைய கதைங்க.. ஏதாவது புதுசாப் பண்ணனும்.. இதுவரைக்கும் சொல்லாததா.. ரோகி மாதிரின்னு வைங்க..

நாட்டரசு: புதுசாவா? நான் நல்லா வஞ்சு புடுவேன்.. மானஸ்தன்யா.. என் படத்தையேதான் மறுபடி மறுபடி எடுத்துக்கிட்டு இருக்கேன்.. ஆப்பிரிக்கப் படத்த எடுத்து மறுபடி அவங்களுக்கே உலகப்பட விழாவுக்கு அனுப்புறதெல்லாம்.. யப்பா... இது உலக நடிப்புடா சாமி..

பேரன்: சரி சரி.. கூல் டவுன்.. நான் வேணும்னா ஒரு கதை சொல்லட்டுமா?

டமீர்: நீங்க மட்டும் ஏன் மிச்சம் வச்சிக்கிட்டு.. சொல்லுங்க.. சொல்லித் தொலைங்க..

பேரன்: காதல்.. சொல்லித் தீராதது.. நாலு பருவம்.. மொதல்ல புறா விடு தூது.. அப்புறமா லெட்டர்.. அதுக்கு அப்புறம் போன்.. கடைசியா மெயில்.. சும்மா சுத்தி சுத்தி லவ் பண்றேன்.. உங்க எல்லோருக்குமே வெயிட்டான ரோல்.. டமீர் போஸ்ட்மன்.. டிங்கர் என்னோட காதலுக்கு ஹெல்ப் பண்ற அண்ணன்.. நாட்டரசுக்கு என்ன தரலாம்?

நாட்டரசு: கொஞ்சம் வெஷம் வாங்கித் தரலாம்? ஏங்க நீங்க லவ் பண்ணி முதுக காட்டி அழுகுறதுக்கு நாங்க ஒக்கார்ந்து விசிறி வீசணுமா? போயா..

பேரன்: நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா.. ஒம்மூஞ்சிக்கு அவ்வளவுதாண்டி..

"வேண்டாம், வேண்டாம்.. நமக்குள்ள எதுக்குப்பா சண்ட.." என்று டமீரும் டிங்கரும் அமைதிப்படுத்தப் போக.. அவர்கள் இவர்களை திருப்பித் தாக்க..

"டாய்.. யாருடா அவன் நானில்லாம கூட்டம் போட்டது.. அரசியலுக்கு அண்ணன் பழகிரி.. தன்னம்பிக்கைக்கு நான்தாண்டா முகவரி.. ஹே டண்டணக்கா.. எம்மவன் கிம்பு.. என்கிட்ட வச்சுக்காத நீ வம்பு" என்றபடி கரடியார் பாய்ந்து வர.. மொத்த கூட்டமும் கலகலத்து காணாமல் போகிறது.

25 comments:

நையாண்டி நைனா said...

ha..ha...ha....

essoss mee maappu... en field ulle vaareenga... aavvvvvvvv

Prabhu said...

நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா.. ஒம்மூஞ்சிக்கு அவ்வளவுதாண்டி..///

இந்த டயாலாக்கு ரொம்ப பிடிக்குது. நம்ம ஊரு வாட இருக்கோ என்னவோ ஹி.. ஹி...

க.பாலாசி said...

//பேரன்: இப்போத்தான் துபாய்ல இருந்து வரேன்.. அடுத்த வாரம் அலாஸ்கா.. மூணாவது வாரம் நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியலயேப்பா.. ஒரே ஒளகப்பட விழவா போய்க்கிட்டு இருக்கேன்..//

இதுக்குப்பெயர்தான் மதுரக்குசும்போ...

நல்ல நகைச்சுவை.....

கலையரசன் said...

இதுக்கு நீங்க பேரை நேரடியாவே எழுதியிருக்கலாம் பாசு....

Anonymous said...

அருமையான கற்பனை ரசிக்க வைக்கிறது.

Raju said...

தல..சத்தியமா சொல்றேன்.
இதே மாதிரி நானும் ஒன்னு ரெடி பண்ணி வச்சுருந்தேன்.

Balakumar Vijayaraman said...

வாத்தியாரே, ஏன் இந்த கொலைவெறி.

//"ஏய்.. வெளில விக்கிறாங்க கடலை..
நான் அவனை சும்மா விடலை..
ரோடு ரோடா போடுறது மேப்பு ..
ஒண்ணு சேர்ந்துட்டோம் - இனிமே நாமதான் டாப்பு.."
//

இங்கயே குஜய.டி.காஜேந்தர் என்ட்ரீ கொடுத்துருவாரோன்னு பயந்தேன்... நல்ல வேளை. :)

vasu balaji said...

ஒளகப்பட சந்திப்ப பொகள வார்த்தையே வரலை பார்த்தி:))

Ganesan said...

பயங்கள்---ஹைக்கூ

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_15.html

குமரை நிலாவன் said...

ha..ha...ha....

அத்திரி said...

ஃபுல் பார்ம்ல இருக்கீங்க புரொபசர்....... போலாம் ரைட்டு

தேவன் மாயம் said...

எப்படி கார்த்தி இப்பிடி?

தேவன் மாயம் said...

செம காமெடி !!

சொல்லரசன் said...

எனக்கு நைனா பதிவு படிக்கற மாதிரியே இருக்குது

சம்பத் said...

ஆனந்த விகடன் "மொக்க ராசு" படித்தது போலவே இருந்தது...சூப்பர்..

ப்ரியமுடன் வசந்த் said...

//"நீ எந்த கடலு.. நான் எந்த கடலு.. வலை கூடத் தேவையில்லை"//

எப்டியெல்லாம் யோசிக்கிறீக கார்த்தி

சுறா கிறான்னு இப்போவே ஆரம்பிச்சுட்டீகளா தல ஏன் இப்டி?

:))))))

மேவி... said...

கார்த்தி ...நீங்க ஒரு காமெடி பீஸ் ன்னு இவ்வளவு கஷ்ட பட்ட தான் நீருபிக்க வேண்டுமா ............

செம கலக்கல் பாஸ்

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
ha..ha...ha..essoss mee maappu... en field ulle vaareenga... aavvvvvvvv//

நமக்குள்ள எல்லாம் கொடுத்து வாங்குறதுதானே தல..:-))

//pappu said...
இந்த டயாலாக்கு ரொம்ப பிடிக்குது. நம்ம ஊரு வாட இருக்கோ என்னவோ ஹி.. ஹி...//

அதுதான் நம்ம ஊருக்கார பயபுள்ளங்கிறது..

// க.பாலாசி said...
இதுக்குப்பெயர்தான் மதுரக்குசும்போ...
நல்ல நகைச்சுவை.....//

அப்பப்போ சேட்ட பண்ணணும்ல.. நன்றி பாலாசி..

// கலையரசன் said...
இதுக்கு நீங்க பேரை நேரடியாவே எழுதியிருக்கலாம் பாசு....//

ச்சே ச்சே.. நமக்கும் மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல்ல நண்பா.. ஹி ஹி ஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
அருமையான கற்பனை ரசிக்க வைக்கிறது.//

நன்றி தலைவரே

// ♠ ராஜு ♠ said...
தல..சத்தியமா சொல்றேன்.இதே மாதிரி நானும் ஒன்னு ரெடி பண்ணி வச்சுருந்தேன்.//

நான் முந்திக்கிட்டேனா? பரவாயில்லமா .. நீயும் போஸ்ட் பண்ணுப்பா..

//பாலகுமார் said...
வாத்தியாரே, ஏன் இந்த கொலைவெறி.இங்கயே குஜய.டி.காஜேந்தர் என்ட்ரீ கொடுத்துருவாரோன்னு பயந்தேன்... நல்ல வேளை. :)//

மிஸ் பண்ணிட்டேனோ? விடுங்க பாலா.. அடுத்த தடவ பொளந்து கட்டிருவோம்..

//வானம்பாடிகள் said...
ஒளகப்பட சந்திப்ப பொகள வார்த்தையே வரலை பார்த்தி:))//

எல்லாம் ஒங்க ஆசிர்வாதம் தான கானம்பாடிகள் அண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//KaveriGanesh said...
பயங்கள்---ஹைக்கூ http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_15.html//

படிச்சேன் நண்பா.. நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..

//குமரை நிலாவன் said...
ha..ha...ha....//

ஹி ஹி ஹி.. நாங்களும் சிரிப்போம்ல..:-)))

//அத்திரி said...
ஃபுல் பார்ம்ல இருக்கீங்க புரொபசர்....... போலாம் ரைட்டு//

ஒங்க டிரைனிங் தான தல..

//தேவன் மாயம் said...
எப்படி கார்த்தி இப்பிடி? செம காமெடி !!//

அப்பப்ப இப்படி உணர்ச்சி வசப்பட்டிருவேன் தேவா சார்.. கண்டுக்காதீங்க..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
எனக்கு நைனா பதிவு படிக்கற மாதிரியே இருக்குது//

எல்லாப் புகழும் நைனாவுக்கே..:-))

//சம்பத் said...
ஆனந்த விகடன் "மொக்க ராசு" படித்தது போலவே இருந்தது...சூப்பர்..//

அந்த பாதிப்பில் எழுதினதுதா நண்பா

//பிரியமுடன்...வசந்த் said...
ப்டியெல்லாம் யோசிக்கிறீக கார்த்தி சுறா கிறான்னு இப்போவே ஆரம்பிச்சுட்டீகளா தல ஏன் இப்டி?
:))))))//

சும்மா வெறும் டிரைலர்தான் தல.. சுறா சீசன் இன்னும் ஆரம்பிக்கல.. மொதல்ல வேட்டைக்காரண வேட்டையாடி முடிச்சுக்குறோம்..:-))

//டம்பி மேவீ said...
கார்த்தி ...நீங்க ஒரு காமெடி பீஸ் ன்னு இவ்வளவு கஷ்ட பட்ட தான் நீருபிக்க வேண்டுமா ............
செம கலக்கல் பாஸ்//

சுப்.. கம்பெனி சீக்ரட்டேல்லாம் வெளியில சொல்லக் கூடாது..

"உழவன்" "Uzhavan" said...

அட்டகாசம் :-))

Unknown said...

//.. டிங்கர் மச்சான் ..//

முடியல.. :-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

// " உழவன் " " Uzhavan " said...
அட்டகாசம் :-))//

//பட்டிக்காட்டான்.. said...
.. டிங்கர் மச்சான் ..

முடியல.. :-))))//

nandri nanbargale..

ஆ.ஞானசேகரன் said...

அருமை.... அட்டகாசம்...

பேரை மற்றியுள்ள துணுக்கம்தான் தெரியவில்லை (படிக்க கொஞ்சம் கடினமா இருந்துச்சு)