December 21, 2009

இனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்..!!!

டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் வாசகர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. பதிவுகளில் எழுத்துகளின் வாயிலாக மட்டுமே அறிந்த மனிதர்களை நேரில் பார்க்கும்போது ஏற்படக் கூடிய மகிழ்ச்சியையும் வியப்பையும் சொல்லி மாளாது. பதிவர் சந்திப்புகள் நட்பை வளர்க்கும் உறவுப்பாலங்களாக விளங்குகின்றன. எந்த ஊருக்குப் போய் இறங்கினாலும் கவலையேபடாமல் ஒரு போன் போட்டால் போதும், நமக்கு உதவிட நண்பர்கள் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கையையும் இந்தப் பதிவுலகம் தந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இப்படியொரு ஏற்பாட்டை செய்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கு நன்றியும் வாழ்த்துகளும்...

(நேற்று நடந்த நிகழ்வுகளை என் நினைவுகளில் இருந்து தொகுத்து இருக்கிறேன். ஏதேனும் சம்பவத்தையோ, நண்பர்கள் யாருடைய பெயரையோ தவற விட்டிருந்தால் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்..)

பதிவர் சந்திப்புக்கு மதுரையிலிருந்து நாங்கள் ஐந்து பேர் கிளம்பினோம். "வலைச்சரம்" சீனா ஐயா, "ஒருமை" ஜெர்ரி ஈஷானந்தா, "விட்டலன் கவிதைகள்" தேவராஜ் விடலன், ஸ்ரீதர் மற்றும் நான். நண்பர் விட்டலன் அஸ்ஸாமில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். பயணம் பதிப்பகத்தின் மூலமாக ஒரு கவிதை தொகுப்பும் வந்திருக்கிறது. உசிலம்பட்டி அருகே இருக்கும் ராமநாதபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். ஐந்து பேரும் மதுரை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி கிளம்பினோம். கவிதை, இலக்கியம், சினிமா, சமூகம் என்று பல தளங்களில் உரையாடிக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டரை மணி போல ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தோம். திருப்பூரில் இருந்து நண்பர் சொல்லரசன் போன் செய்தார். கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் மூன்று காரில் வண்டி கட்டி கிளம்பி வந்து கொண்டிருப்பதை உறுதி செய்தார்.

பேருந்து நிலையத்தின் அருகே மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோதே நண்பர் ஜாபர் வந்து சேர்ந்தார். ஜாபர் - பதிவுகளை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வாசித்து வருகிறார். இப்போதுதான் தனக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருக்கிறார். அவரோடு கிளம்பி பதிவர் நண்பர்கள் தங்கியிருந்த ராஜ ராஜேஸ்வரி லாட்ஜுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே நண்பர்கள் நாமக்கல் சிபி, ரம்யா அக்கா, கலையக்கா, சித்தர் சுரேஷ் ஆகியோரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினோம். லாட்ஜுக்கு வெளியில் நந்து F /O நிலா, நாகா, செந்தில்வேலன், உடுமலை.காமின் உரிமையாளர் (பெயர் நினைவிலில்லை..) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. எல்லோரும் பேசியவாறே நிகழ்ச்சி நடைபெறும் ஹாலை வந்தடைந்தோம். சூடான தேநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிறைய வாசகர்களும் வந்திருந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு தோழி முருக.கவியின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தலைமை தாங்கி நடத்தும்படி ஒருங்கிணைப்பாளர் கதிர் கேட்டுக் கொண்டார். பதிவுகளின் அவசியம் குறித்து தெளிவாகப் பேசினார் நண்பர் ஆரூரன். "கலிங்கராயன்" எப்படி "காளிங்கராயன்" எனவும் கால மாற்றத்தின் காரணமாக "காலிங்கரையான்" எனவும் திரிக்கப்பட்டது என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டவர், வரலாறு நேர்மையாக பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசினார். பின்பு சிறப்பு அழைப்பாளர்கள் பேச அழைக்கப்பட்டார்கள். இரா.வசந்த குமார் "சிறுகதைகள்" எழுதுவது பற்றிய தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார். வெண்பா எழுதப் பழகுவது சிறுகதைகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அடுத்ததாகப் பேசிய சீனா ஐயா "பதிவர்கள்-வாசகர்கள்" பற்றிய தன்னுடைய பார்வையை முன்வைத்தார். அழகு தமிழில் அட்சர சுத்தமாகப் பேசி மனிதர் கலக்கி விட்டார்.

மூன்றாவதாகப் பேசிய சகோதரி சுமஜ்லா வலைப்பூவில் பயன்படுத்தக் கூடிய டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பேசினார். அடிப்படி கணினி அறிவு, ஆர்வமும் இருந்தால் போதும், நம்முடைய வலைப்பூவை அழகாக மாற்றி விடலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார். தமிழ் வலைப்பூக்கள் பற்றி அவர் எழுதியிருக்கும் புத்தகம் விரைவில் கண்ணதாசன் பதிப்பகம் சார்பாக வெளிவருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையுன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வாழ்த்துகள். அடுத்ததாகப் பேசினார் நண்பர் செந்தில்வேலன். தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் தமிழ் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று வருத்தப்பட்டவர் இந்த நிலை மாற வேண்டும் என்றார். ஐந்தே நிமிடம் பேசினாலும் நண்பர் பழமைபேசி பட்டையைக் கிளப்பினார். அமெரிக்காவில் இருந்து கொண்டு இங்கே இந்தியாவில் இருக்கும் ஒரு நண்பருக்கு உதவக் கூடிய சூழல் ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தமிழர்களுக்கு இடையே நிலவி வந்த இடைவெளியை பதிவுலகம் வெகுவாகக் குறைத்திருக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்தார்.

"உலக சினிமா" பற்றிய கருத்துக்களை நண்பர் பட்டர்பிளை சூர்யாவும், "சமூகத்தில் பதிவர்களின் பங்கு' பற்றி ரம்யா அக்காவும் திறம்பட உரையாற்றினார்கள். "பதிவுலகில் அனைவருக்கும் எழுதவும் வாசிப்பதற்கான தளமும் கிடைக்கிறது" என்று குறிப்பிட்ட அகநாழிகை பொன்.வாசுதேவன் பதிவுகள் அச்சு ஊடகங்களில் வர வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசினார். தஞ்சை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர்.இராசு கொங்கு மண்ணின் சரித்திரம் பற்றியம் பதிவுகள் எழுதுபவர்கள் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும் பேசினார். கடைசியாக "தமிழ்மணம்" காசி வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்த நிகழ்வாகஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, புதுகை அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகைப் பாண்டியன் (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தான்..) ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கடைசியாக லதானந்த், வெயிலான், பழமைபேசி, புதுகை அப்துல்லா, கேபிள் ஷங்கர், ஸ்ரீதர் ஆகியோரின் முன்னிலையில் பதிவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. அனானி கமெண்டுகள் பற்றிய காரசார விவாதம், பதிவுகளில் எழுதப்படும் விஷயங்களில் இருக்க வேண்டிய கவனம் என்று பல வ்சிஹயங்கள் அலசப்பட்டன. பதிவர்கள் பற்றி எல்லோரும் அறியும் வண்ணம் உலகத் தமிழ் மாநாட்டில் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தையும் முன்வைத்தேன். (அப்துல்லா அண்ணே.. கொஞ்சம் கவனிங்க..). பதிவர் சந்திப்பு எல்லாம் ஓகே, அடுத்து நாம் என்ன செய்யலாம் என்ற என்னுடைய கேள்விக்கு கதிர் சொன்ன பதில்.."கார்த்திக்கு கல்யாணம் பண்ணலாம்".. என்ன ஒரு வில்லத்தனம்.. ஆனாலும்.. இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..

இரவு ஏழு மணி போல நிகழ்வு முடிந்தது. பின்னர் அருமையான இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒரு கட்டு கட்டி விட்டு, நண்பர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். நேற்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய ஈரோடு பதிவுலக நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றி. இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிய உதவிய தமிழ்மணம் உள்ளிட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி..!!

கலந்து கொண்ட அன்பர்கள்:

(சென்னையில் இருந்து)

கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, ரம்யா, வானம்பாடிகள்

( திருப்பூரில் இருந்து )

வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், பரிசல்காரன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்

( மதுரையில் இருந்து )

ஸ்ரீதர், சீனா, தேவராஜ் விட்டலன், ஜெர்ரி, கார்த்திகைப்பண்டியன்

(ஈரோட்டில் இருந்து)

ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி

(அமீரகத்தில் இருந்து)

செந்தில்வேலன், நாகா

(கோவையில் இருந்து)

லதானந்த், பழமைபேசி

கரூரில் இருந்து இளையகவி, முனைவர் இரா.குணசீலன் மற்றும் வாசகர்கள்..

(கல்லூரியில் இருக்கும் தொழில்நுட்ப வம்புகளின் காரணமாக என்னால் படங்களை வெளியிட முடியிவில்லை.. நிகழ்வு பற்றி புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே..)

26 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

உங்கள் வருகைக்கும், அன்பிற்கும் நன்றி கார்த்தி....

உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. உரையாட நேரமில்லாமல் போனது.

விரைவில் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்
ஆரூரன்

முனைவர் இரா.குணசீலன் said...

நண்பரே தங்களை நேரில் சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி..
நான் கரூர் இல்லை ஈரோடு அருகே திருச்செங்கோடு தான்.

ஈரோடு கதிர் said...

நன்றி கார்த்தி....

சொல்லரசன் said...

வால்பையன் பற்றியோ அவர்கூறிய அரிய பல கருத்துகளை பற்றி பதிவில் குறிப்பிடமறந்ததை கண்டிக்கிறேன்

க.பாலாசி said...

தாங்கள் வருகைதந்தமைக்கும், நிகழ்வுகளை இடுகையின் மூலம் பகிர்ந்துகொண்டமைக்கும் எனது நன்றிகளும்....

Karthik said...

roba nalla pathivu.. visit panna mathiri irunthathu.. :))

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

வரமுடியாததற்கு வருந்துகிறேன் நண்பா

ரோஸ்விக் said...

ச்சே இந்தியாவில இருந்தா போயிருக்கலாமோ??

சரி மக்களே. மதுரையில ஒன்னு நடத்துங்க. முடிஞ்சா கலந்துக்கிறேன். :-)

சிறப்பாக நடத்திக்காட்டிய பதிவர்களுக்கும், சிறப்பித்த பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

கலக்கிட்டீங்க.. மிக்க மகிழ்ச்சி நண்பர்களே.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

☼ வெயிலான் said...

நிறைவான பதிவு நண்பா!

தேவன் மாயம் said...

பதிவர் சந்திப்பு சிறப்புடன் நடந்ததை அறிந்து மகிழ்கிறேன்!

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

அருமையான இடுகை - பதிவர் சந்திப்பு நேரடியாகப் பார்ப்பது போலவே இருக்கிறது இடுகை.

நல்வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

நல்லதொரு விஷயம்..

இராகவன் நைஜிரியா said...

அருமையாக தொகுத்து வழங்கியிருக்கின்றீர்கள்.

வாழ்த்துகள்.

வால்பையன் said...

நீங்க ரொம்ப நல்லவரு!

Jerry Eshananda said...

கலக்கிட்ட "கார்த்தி."

vasu balaji said...

கலக்கல் கார்த்தி. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

parasuraman said...

ஐயா ஈரோட்டிலிருந்து வந்த என்னை விட்டு விட்டீர்களே...

RAMYA said...

கார்த்திக் அருமையா எழுதி இருக்கீங்க. உங்களின் இடுகையை படிக்கும்போது படிக்கின்றோம் என்ற உணர்வே வரவில்லை. நேரே பேசுவது போலவே தோன்றியது. நடந்தது அனைத்தையும் அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

விரைவில் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம்!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அன்பர் கார்த்திகைப் பாண்டியன், அதிக நேரம் பேச முடியாவிட்டாலும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!! நல்ல தொகுப்பு. உங்கள் இடுகையில் இருந்து கலந்து பதிவர்கள் பற்றிய தகவல்களை என் பதிவிற்காகச் சுட்டுக் கொள்கிறேன்.

Jackiesekar said...

சென்னையில் இருந்து நானும் கலந்து கொள்ள வேண்டியவன்..கொஞ்சம் பிசி என்ன செய்வது???

இருப்பினும் வாழ்த்துக்கள்..
கார்த்திகை பாண்டியன்.. மிக அழகாக தொகுத்து உள்ளீர்கள்...

மேவி... said...

super ah irukku

Anonymous said...

உங்கள் நகைச்சுவையை சுவைக்க முடியாமல் போனது வருத்தமே பாண்டியன்....

சங்கரின் பனித்துளி நினைவுகள் said...

என்னால் இந்த பதிவர்களின் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாவிட்டாலும் .இந்த படைப்பை படிக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

என்றும் அன்புடன்
சங்கரின் பனித்துளி நினைவுகள்
DUBAI

butterfly Surya said...

மிகவும் மகிழ்ச்சி.

நன்றியும் வாழ்த்தும்.

Karthik Lollu said...

Vaalpaiyan MASS MASS