December 29, 2009

மௌனவெளிகள்..!!!




திரெதிரே இருந்தும்
வார்த்தைகள் அற்ற
கனமான மவுனத்தில்
கழிகின்றன பொழுதுகள்

எப்படி இருக்கீங்க
வீட்டுல எப்படி இருக்காங்க
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை
இப்போ கொஞ்சம் பரவாயில்லையா

எதைச் சொல்லி ஆரம்பிப்பது
தந்தையின் மரணத்துக்காக
ஊருக்குச் சென்று
திரும்பி இருக்கும் நண்பரிடம்..!!!

40 comments:

Raju said...

ச்சே...!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏ டக்கு.. இந்த ச்சே எதுக்கு? நல்லாயிருக்குன்னு அர்த்தமா இல்ல வெளங்கலையா?

na.jothi said...

சிரமம் தாங்க
எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும

sathishsangkavi.blogspot.com said...

வார்த்தையும் வராது., சிரிக்கவும் முடியாது......
ஒரு வேதனையான தருணம் அது

vasu balaji said...

ஆறுதல் சொல்லப் போய் கிண்டி விடுறமோன்னு தவிக்க விடுற சந்தர்ப்பம் இது. உணர்ச்சி பூர்வமா வந்திருக்கு.

Raju said...

நல்லாருக்குன்னுதாங்க சொன்னேன்.

கடைசி வரில, ”நண்பரிடம்”க்கு பதிலா ”நண்பனிடம்”ன்னு வந்திருந்தா நெருக்கம் கொஞ்சம் அதிகமானதா இருக்கும்ல..!
:-)

க.பாலாசி said...

நல்ல கவிதை...(யாக உணர்வாக பார்க்கிறேன்)

நர்சிம் said...

தலைப்பு தான் நண்பா பதில்.

சங்கர் said...

ரொம்ப நல்லாருக்கு

Anbu said...

:-((

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

ஆறுதலாய் கைப்பிடித்து
கனிவோடு தோள் சாய்த்து
பரிவோடு முதுகை வருடலாம்
ஆருயிர் நண்பராய்யிருந்தால்...!

ஹேமா said...

வாழ்வில் வரும் சில சங்கடமான நிலைகளைச் சமாளிப்பதென்பது கஸ்டம்தான்.ஆனால்...!

Balakumar Vijayaraman said...

//எதைச் சொல்லி ஆரம்பிப்பது//

மெளனமான கைபிடித்தலோ, முதுகு தட்டுதலோ ...

படமும் மென்சோகம் சுமந்து வருகிறது.

மேவி... said...

"ஹேமா said...
வாழ்வில் வரும் சில சங்கடமான நிலைகளைச் சமாளிப்பதென்பது கஸ்டம்தான்.ஆனால்...!"


repeatu.........


ennoda puthu blog kku vanga thala....

வால்பையன் said...

நர்சிம்மின் பின்னூட்டதை வழிமொழிகிறேன்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜோதி said...
சிரமம் தாங்க எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும//

//Sangkavi said...
வார்த்தையும் வராது., சிரிக்கவும் முடியாது......ஒரு வேதனையான தருணம் அது//

அதைத்தாங்க பதிவு பண்ண விரும்பினேன்.. நன்றி..

//வானம்பாடிகள் said...
ஆறுதல் சொல்லப் போய் கிண்டி விடுறமோன்னு தவிக்க விடுற சந்தர்ப்பம் இது. உணர்ச்சி பூர்வமா வந்திருக்கு.//

அது ஒரு தவிர்க்க முடியாத பயம் பாலா சார்.. நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
நல்லாருக்குன்னுதாங்க சொன்னேன்.//

அதுக்கு ஏன்யா மிரட்டுற?

//கடைசி வரில, ”நண்பரிடம்”க்கு பதிலா ”நண்பனிடம்”ன்னு வந்திருந்தா நெருக்கம் கொஞ்சம் அதிகமானதா இருக்கும்ல..!:-)//

அங்கதான இருக்கு சூது.. நெருக்கமானவங்க கிட்ட நமக்கு எந்தத் தயக்கம் இருக்காது டக்கு.. ஆனா.. அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை.. இருந்தாலும் நமக்குத் தெரிஞ்சவங்க.. அதுக்காக வேணும்னேதான் "நண்பரிடம்".. சரியா?

வால்பையன் said...

//நெருக்கமானவங்க கிட்ட நமக்கு எந்தத் தயக்கம் இருக்காது டக்கு.. ஆனா.. அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை.. இருந்தாலும் நமக்குத் தெரிஞ்சவங்க.. அதுக்காக வேணும்னேதான் "நண்பரிடம்".. சரியா?//

இதை வேறு ஒரு விசயமாக நானே சொல்லனும்னு நினைச்சேன்!

அதாங்க!

நண்பண்-வாடா-போடா
நண்பர்-வாங்க-போங்க!

நெருக்கம்-விளக்கம்!

கார்த்திகைப் பாண்டியன் said...

// க.பாலாசி said...
நல்ல கவிதை...(யாக உணர்வாக பார்க்கிறேன்)//

நன்றி பாலாஜி..

// நர்சிம் said...
தலைப்பு தான் நண்பா பதில்.//


//வால்பையன் said...
நர்சிம்மின் பின்னூட்டதை வழிமொழிகிறேன்!//

விடை தெரியாத நிலையில் மௌனத்தைப் போல சிறந்த பதில் வேறு எதுவும் இல்லை.. உண்மைதான் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சங்கர் said...
ரொம்ப நல்லாருக்கு//

நன்றிங்க

// Anbu said...
:-((//

புரியுது அன்பு.. சாரிப்பா

//தமிழ் வெங்கட் said...
ஆறுதலாய் கைப்பிடித்து
கனிவோடு தோள் சாய்த்து
பரிவோடு முதுகை வருடலாம்
ஆருயிர் நண்பராய்யிருந்தால்...!//

அவங்க நமக்கு எத்தன நெருக்கம் என்பதில்தான் நண்பா பிரச்சினையே..

//ஹேமா said...
வாழ்வில் வரும் சில சங்கடமான நிலைகளைச் சமாளிப்பதென்பது கஸ்டம்தான்.ஆனால்...!//

அதுதான் வாழ்வின் அடிநாதம்.. புரிகிறது தோழி

கார்த்திகைப் பாண்டியன் said...

// டம்பி மேவீ said...
repeatu.........//

எவ்வளவு கஷ்டமான பின்னூட்டம்.. இதுல புது பிளாகுக்கு வாங்கன்னு மார்க்கெட்டிங் வேற.. உன்னைய என்ன பண்றது?

//பாலகுமார் said...
மெளனமான கைபிடித்தலோ, முதுகு தட்டுதலோ ...படமும் மென்சோகம் சுமந்து வருகிறது.//

அதேதான்.. உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கு நன்றி பாலா...

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
இதை வேறு ஒரு விசயமாக நானே சொல்லனும்னு நினைச்சேன்! அதாங்க!
நண்பண்-வாடா-போடா
நண்பர்-வாங்க-போங்க!
நெருக்கம்-விளக்கம்!//

தல.. க க க போங்க.. அட்டகாசம்

சொல்லரசன் said...

அந்த நேரத்தில் பேச்சைவிட அவர்கள் கரங்களை பற்றி முதுகைதட்டி கொடுப்பது பல ஆறுதல் வார்த்தைக்கு சமம்.

சொல்லரசன் said...

ஆகா உடனுக்கு உடன் பின்னுட்டம் போடுகிறீர்கள்,பழைய நிலைக்கு திருப்பியாச்சா?

ப்ரியமுடன் வசந்த் said...

கட்டிப்பிடி கட்டிப்பிடா...!

கமல்வழிதான் சரியான வழி...

Sanjai Gandhi said...

குட் கவிதை

Prabhu said...

நண்பர்னா மௌனம் தப்பா போயிடுமே... நம்மிடம் பேசனும்னு எதிர்பார்க்கமாட்டாங்க?

டிலம்மாவ நல்லா எழுதிருக்கீங்க.

RAMYA said...

சங்கடமான தருணங்கள்:(

ச.பிரேம்குமார் said...

கட்டிபிடி வைத்தியம் தான் சரியான வழி!

Anonymous said...

நண்பருக்கு ஆறுதல் சொல்லிடுங்க எம் தரம்பிலும்...கவிதையாய் சொன்ன விதம் அருமை.....

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
அந்த நேரத்தில் பேச்சைவிட அவர்கள் கரங்களை பற்றி முதுகை தட்டி கொடுப்பது பல ஆறுதல் வார்த்தைக்கு சமம்.//

சரிண்ணே..

//ஆகா உடனுக்கு உடன் பின்னுட்டம் போடுகிறீர்கள்,பழைய நிலைக்கு திருப்பியாச்சா?//

ஆமாம்ண்ணே.. வீட்டுல நெட் எடுத்தாச்சு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
கட்டிப்பிடி கட்டிப்பிடா...!கமல் வழி தான் சரியான வழி...//

நல்ல ஐடியா :-))

//SanjaiGandhi™ said...
குட் கவிதை//

நன்றி பாசு..

// pappu said...
நண்பர்னா மௌனம் தப்பா போயிடுமே... நம்மிடம் பேசனும்னு எதிர்பார்க்கமாட்டாங்க?டிலம்மாவ நல்லா எழுதிருக்கீங்க.//

பிரச்சினையே அதுதானப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//RAMYA said...
சங்கடமான தருணங்கள்:(//

நிஜம்தான்க்கா..:-((

// ச.பிரேம்குமார் said...
கட்டிபிடி வைத்தியம் தான் சரியான வழி!//

சரியாப் போச்சு.. பிரேமுக்கும் இதுதான் தோணுதா?

//தமிழரசி said...
நண்பருக்கு ஆறுதல் சொல்லிடுங்க எம் தரம்பிலும்...கவிதையாய் சொன்ன விதம் அருமை...//

எது எழுதினாலும் நம்ம அனுபவமாத்தான் இருக்கணும்னு இல்லையே தமிழ்..இது கற்பனைதான்...:-)))

ச.முத்துவேல் said...

இதுதான், இதுதான் ! ரொம்ப நல்லாயிருக்கு காபா.

Anonymous said...

:-((

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.முத்துவேல் said...
இதுதான், இதுதான் ! ரொம்ப நல்லாயிருக்கு காபா.//

ரொம்ப நன்றி கவிஞரே

//MAHA said...
:-((//

சோகமான விஷயம்தான் தான் தோழி

மாதவராஜ் said...

நல்லா வந்திருக்கு. மௌன வெளி என்றிருந்தாலே போதும் எனத் தோன்றுகிறது.

ரிஷபன் said...

சரிதான்.. அப்படியே அந்த சிக்கலை படம் பிடிச்சுட்டீங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//மாதவராஜ் said...
நல்லா வந்திருக்கு. மௌன வெளி என்றிருந்தாலே போதும் எனத் தோன்றுகிறது.//

நன்றி தோழர்.. நீங்க சொல்ற மாதிரி தலைப்பை இன்னும் சுருக்கி இருக்கலாம்..

//ரிஷபன் said...
சரிதான்.. அப்படியே அந்த சிக்கலை படம் பிடிச்சுட்டீங்க//

நன்றிங்க..

Senthilkumar said...

எனக்கு மிகப்பிடித்திருக்கிறது இந்தக் கவிதை, நண்பரே!