January 2, 2010

குழப்பக் கவிதைகள் -1


அர்த்தங்கள்
ஏதுமற்ற
பெருவெளியில்

அது
அதுவாக
இருக்கும்வரை

இது
இதுவாகவே
இருந்தது...

இன்னதென்று
விளக்க முடியாத
ஒரு
அற்புத கணத்தில் **

அது
இதுவாக
மாறிப்
போனபோது

இது
எது
ஆவதெனத்
தெரியாமல்
குழம்பி நின்றது..!!!

** - மதுரையில் நடைபெற்ற கடவு நிகழ்ச்சியில் கவிஞர் விக்கிரமாதித்தனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொல்லிய சில வார்த்தைகளின் விளையாட்டில் தோன்றியதுதான் இந்தக்கவிதையின் கரு...

34 comments:

Raju said...

விக்ரமாதித்தன்னா “நான் கடவுள்” வெண்தாடிக் கிழவரா..?

Prabu M said...

அது... இது.. எது...?? :-)
இது ரொம்ப புசுசா இருக்கே... கலக்குங்க :)

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..

மேவி... said...

அருமையாய் இருக்கு தல .....

பிறகு உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து பாருங்க ....

*இயற்கை ராஜி* said...

இப்போ நீங்க எதுவாத் தான் இருக்கீங்க‌?

தமிழ் said...

:))

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
விக்ரமாதித்தன்னா “நான் கடவுள்” வெண்தாடிக் கிழவரா..?//

அவர்தான்.. அவரேதான் டக்கு..

//பிரபு . எம் said...
அது... இது.. எது...?? :-)
இது ரொம்ப புசுசா இருக்கே... கலக்குங்க :)//

அது.. நன்றி நண்பா

//முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றாகவுள்ளது நண்பரே..//

ரொம்ப நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
அருமையாய் இருக்கு தல ..... பிறகு உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து பாருங்க//

தம்பி.. அது தொடர்பதிவுன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததே நாங்கதான்..

//இய‌ற்கை said...
இப்போ நீங்க எதுவாத் தான் இருக்கீங்க‌?//

ஆஆஆஆஆ..... தெரியலையேம்மா.. (நாயகன் கமல் மாதிரி படிங்க தோழி..)

// திகழ் said...
:))//

நானும் :-)))))))

Balakumar Vijayaraman said...

அற்புத கணம், நிகழ்ந்து விட்டதா?

அது இதுவா மாறினப்பவே, இது அதுவா மாறி இருக்க வேண்டாமா.
என்னா வாத்யாரே, இன்னும் குழம்பிட்டு இருக்கீங்க !

குடந்தை அன்புமணி said...

கவிஞர் விக்கிரமாதித்தன் அவர்கள் கவிதை எழுதும்போது எப்படி இருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் அப்படி மாறிவிட் வேண்டாம்...
ஆனாலும் கவிதை நல்லாருக்கு....

RAMYA said...

எது எப்படி இருக்கோ நீங்க கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க :-)

வாழ்த்துக்கள்!

அ.மு.செய்யது said...

நல்லாத்தானே இருந்தீஹ..?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மொதல்ல இது இதுவாவும் அது அதுவாவும் இருந்திருக்கு.அப்புறம் அது இதுவாகி விட்டது, அப்ப இது பேசாம அதுவாகிட வேண்டியதுதான? எதுக்குக் குழம்பணும்.இல்லன்னா அது இது ஆனாலும் பரவாயில்லன்னுட்டு,இது இதுவாவே இருந்திடறதுதான் நல்லது. ஆனா ரெண்டு இது இருந்து ஒரு அது கூட இல்லன்னா குழப்பம் வரத்தான் செய்யும்.அதனால பேசாம இது அது ஆகறதுதான் நல்லதுன்னு தோணுது.நீங்க என்ன சொல்றீங்க?

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

அழகான கவிதை - வாழ்க கவிஞ

இன்னும் எழுதுக - தொடர்க கவிதைகளை

அது இதுவானால் - இது அதுவாக வேண்டுமா என்ன - இது எதுவாக வேண்டுமானாலும் மாறலாம் - அப்படி மாறும் போது ஒரு புதிய இது தோன்றும். அப்பொழுது பழைய இதுவாக மாறிய அதுவும் புதியதாகத் தோன்றிய இதுவும் சேர்ந்து இரு இதுக்கள் இருக்கும். இப்பொழுது இரு இதுக்கலும் எதுக்களாகவோ மாறினால் அது என்ன ஆகும்

நல்வாழ்த்துகள் கார்த்தி

vasu balaji said...

அய்யா. சாமி. பசங்க ராகிங் பண்ணிட்டாங்களா என்னா?

ப்ரியமுடன் வசந்த் said...

:))))

Nathimoolam said...

கார்த்தி,
நீங்க இப்ப யாரைக்குழப்ப விருப்பம்....
இருந்தாலும் நல்லாயிருக்கு,,,
புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஆதி

ஜெட்லி... said...

ரைட்...

சிங்கக்குட்டி said...

தெளிவா எழுதுனாவே எனக்கு புரியாது! இதுல குழப்பம் வேறயா! :-)

கவிதை அருமை வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//பாலகுமார் said...
அற்புத கணம், நிகழ்ந்து விட்டதா?
அது இதுவா மாறினப்பவே, இது அதுவா மாறி இருக்க வேண்டாமா. என்னா வாத்யாரே, இன்னும் குழம்பிட்டு இருக்கீங்க !//

அது நிகழத்தான் காத்திருக்கிறேன் பாலா.. நீங்க சொல்றதும் நல்ல ஐடியாவத்தான் இருக்கு..

// குடந்தை அன்புமணி said...
கவிஞர் விக்கிரமாதித்தன் அவர்கள் கவிதை எழுதும்போது எப்படி இருப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்களும் அப்படி மாறிவிட் வேண்டாம்... ஆனாலும் கவிதை நல்லாருக்கு....//

கவலை வேண்டாம் நண்பா.. நாம தெளிவாவே இருப்போம்

// RAMYA said...
எது எப்படி இருக்கோ நீங்க கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க :-)//

நன்றிக்கா ..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//அ.மு.செய்யது said...
நல்லாத்தானே இருந்தீஹ..?//

ஹி ஹி ஹி.. அப்பப்போ..

@ ஸ்ரீ

@ cheena (சீனா)

ஆகா.. ரெண்டு பேருமே ஒரு திட்டத்தோட இருக்கீங்க போல இருக்கே.. எங்களுக்கேவா? நடக்காதுல..

//வானம்பாடிகள் said...
அய்யா. சாமி. பசங்க ராகிங் பண்ணிட்டாங்களா என்னா?//

ச்சே ச்சே.. இது உங்களை எல்லாம் நான் ராகிங் பண்றது பாலா சார்..

// பிரியமுடன்...வசந்த் said...
:))))//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// Nathimoolam said...
கார்த்தி,நீங்க இப்ப யாரைக்குழப்ப விருப்பம்....இருந்தாலும் நல்லாயிருக்கு,,, புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஆதி//

நன்றி ஆதி சார்

//ஜெட்லி said...
ரைட்...//

சரி.. அப்போ நான் லெப்டு..:-))

//சிங்கக்குட்டி said...
தெளிவா எழுதுனாவே எனக்கு புரியாது! இதுல குழப்பம் வேறயா!:-)
கவிதை அருமை வாழ்த்துக்கள்.//

ஆகா.. எவ்ளோ அழகா கிண்டல் பண்றாங்கப்பா..:-)))

ஹேமா said...

கார்த்தி,இப்பிடியே எழுதுங்க.
இதுதான் கவிதை.நல்லாருக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ ஹேமா

தோழி.. ஓட்டுறீங்களா இல்ல பாரட்டுரீங்களான்னு புரியல.. அவ்வவ்...

hiuhiuw said...

எனது வலைப் பூவானது
கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்

தருமி said...

//அதனால பேசாம இது அது ஆகறதுதான் நல்லதுன்னு தோணுது.//

or atleast, அது இது ஆகறதுதான் நல்லதுன்னு தோணுது. :)

க.பாலாசி said...

மொத்தத்தில் கரு இதுதான் என்று புரிகிறது. ஆனால் அதுதானா இது என்றுதான் புரியவில்லை.

நசரேயன் said...

ரெம்பவே குழம்பிட்டேன் வாத்தியாரே

அன்பேசிவம் said...

நண்பா கலக்கலா இருக்கு, பட்டைய கிளப்புங்க

அன்பேசிவம் said...

"குழப்பக் கவிதைகள் -1"


சூப்பரு, தொடருங்கள், எனது வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//இது
எது
ஆவதெனத்
தெரியாமல்
குழம்பி நின்றது..!!!//


அதான் கவிதை ஆயிருச்சே!

Henry J said...
This comment has been removed by the author.
குமரை நிலாவன் said...

கவிதை அருமை நண்பா

Romeoboy said...

எது எதுவோ அது அதுவே ..
இது இதுவோ இது இதுவே

இது அது எது ..

நல்ல குழப்புரிங்க..