January 16, 2010

போர்க்களம் - திரைப்பார்வை..!!!

இந்தப் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படங்களில் டார்க் ஹார்ஸ் என்று "போர்க்களத்தை" சொல்லலாம். செமத்தியான ஆக்சன் படம். "பொல்லாதவன்" கிஷோர் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் இயக்குனர் பண்டி சரோஜ் குமார் இருபத்தைந்து வயது இளைஞராம். நம்ப முடியவில்லை. தாதாக்களால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் ஹீரோ என்கின்ற வெகு சாதாரணமான கதை. சொன்ன விதத்திலும், காட்சி அமைப்புகளிலும் அசத்தி இருக்கிறார்கள்.ஆந்திராவின் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் சிறு தமிழ் கிராமம். அங்கே ஊரையே அடக்கியாளும் தாதா சம்பத். அவருடைய எதிரி பொன்வண்ணன். சம்பத் கட்டாயமாக திருமணம் செய்ய நினைக்கும் பெண் ஸ்மிதா, அவரிடம் இருந்து தப்பி வந்து சென்னையில் இருக்கும் கிஷோரிடம் அடைக்கலம் புகுகிறார். ஸ்மிதாவுக்கு மெல்ல மெல்ல கிஷோரின் மேல் காதல் உருவாகுகிறது. இருந்தும் கிஷோர் ஸ்மிதாவை ஏற்க மறுத்து போலீசில் ஒப்படைக்கிறார். மறுபடியும் சம்பத்திடம் சிக்கிக் கொள்கிறார் ஸ்மிதா. மனம் மாறும் கிஷோர் ஸ்மிதாவை மீட்கப் புறப்படுகிறார். ஏன்முதலில் கிஷோர் ஸ்மிதாவை ஏற்க மறுத்தார்? கடைசியில் அவரால் ஸ்மிதாவைக் காப்பாற்ற முடிந்ததா என்பதை திரை அரங்கில் பாருங்கள்.தன்னம்பிக்கையோடு சமுதாயத்தை எதிர்கொள்ளும் நாயகனாக கிஷோர் அருமையாக நடித்து இருக்கிறார். அவரை, ஒரே அடியில் அத்தனை பேரையும் அடித்து நொறுக்குகிற சூப்பர் ஹீரோவாக காட்டி இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நாம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக பயிற்சி பெற்ற சமுராய், சவுண்ட் அனலைசிசில் டிகிரி என்றெல்லாம் முதலிலேயே தெளிவாக சொல்லி விடுகிறார்கள். வசன உச்சரிப்பில், உடல்மொழியில்.. கிஷோர் கிளாஸ். நாயகி ஸ்மிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. க்யூட்டாக இருக்கிறார். டாய் என்று ஊரதிரக் கத்தும் வழக்கமான வில்லனாக சம்பத்.

படத்தில் நம்மை சிரிக்க வைப்பவர் கிஷோரின் உதவியாளராக வரும் சத்யன். அவருடைய வசனங்களும், அதற்கு கிஷோர் சொல்லும் ஒரு வரி பதில்களும் அட்டகாசம். நாயகியைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழ் சினிமா மரபுப்படி வில்லன்களிடம் சிக்கி செத்துப் போகிறார். எல்லா இயக்குனரும் சத்யனைக் கொல்ல வேண்டும் என்றே ஸ்க்ரிப்ட் எழுதுவார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவரை ஒரு படத்திலாவது உசிரோட பொழச்சுப் போக விடுங்கப்பா.. படத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொருவர் போலிஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிஜூ மேனன். நியாய தர்மங்கள் பார்க்கும் கெட்ட போலிஸ்.. அசால்ட்டாக நடிக்கிறார் மனுஷன். பயமுறுத்தும் கெட்டப்போடு வில்லனின் குருவாக டினு ஆனந்தும் இருக்கிறார்.படத்தின் ஒளிப்பதிவாளர் மகேந்திரன். அத்தோடு ஷாட்ஸ் என்று பண்டி சரோஜ் குமார் பெயரையும் போடுகிறார்கள். கையைக் கொடுங்கள் சாமிகளே.. சும்மா அதகளம் பண்ணி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து அஞ்சாதேயில் கேமராவில் பல வித்தியாசமான கோணங்களை பயன்படுத்தி இருந்தார்கள். அதன் பிறகு இந்தப்படம்தான். காமிராவோடு நாமும் உடன் செல்வது போல நம்ப முடியாத கோணங்களில் படமாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஷாட்டும் ஒரு அற்புதம். அடுத்ததாக கலை இயக்கம் - ஆனந்தன். ரொம்பப் புதிதாக யோசித்து இருக்கிறார். வில்லனின் வீட்டின் முன் இருக்கும் கொடூரமான சிலை, பயங்கர ஆயுதங்கள், கடைசி சண்டை நடக்கும் போர்க்களம் என்று பார்த்து பார்த்து செய்து இருக்கிறார். அருமை. ரோஹித் குல்கர்னியின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பல ஹாலிவுட் படங்களில் ஏற்கனவே கேட்ட உணர்வைத் தருவது சிறிய குறை.கதையை படிக்கும்போதே புரிந்திருக்குமே? அதேதான். ராமாயணக் கதையேதான். படத்தில் நிறையவே இதைப் பற்றிய குறியீடுகள் இருக்கின்றன. கதை நிகழும் கிராமத்தின் பெயர் லங்கா. வில்லனை ஒரு காட்சியில் ராவணனின் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்கிறார்கள். படம் நெடுகிலும் கருப்பு நிறமும் கிஷோருக்கான ஒரு குறியீடாக வருகிறது. ஆனால் அவருடைய கதாபாத்திரத்தின் சஸ்பென்சை உடைக்க நான் விரும்பவில்லை. ஊர் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கும் மன நலம் இல்லாத மனிதன், கிஷோருக்கு தமிழ் சொல்லித்தரும் ராஜேஷ் என்று சின்ன சின்ன கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் கூட இயக்குனர் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். அலட்டிக் கொள்ளாத திரைக்கதை. படம் படு ஸ்டைலிஷாக இருக்கிறது.

முதல் பாதி போவதே தெரியவில்லை. இரண்டாம்பாதி கொஞ்சம் தொய்வு என்றாலும் கடைசி சண்டையில் களை கட்டுகிறது. ஆங்காங்கே செயற்கையாக இருக்கும் காட்சி அமைப்புகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டி இருக்கலாம். இயக்குனர் ஆந்திராவை சேர்ந்தவர். பேங்காக்கில் சினிமா பற்றி பயின்றவராம். நல்ல படத்தை மதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தன்னுடைய முதல் படத்தை தமிழில் எடுத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையை நம் மக்கள் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.

18 comments:

குசும்பன் said...

தருமி சார் போன பதிவில் நீங்க சொன்னமாதிரி விமர்சனத்தை ஸ்கிப் செஞ்சுட்டு பின்னூட்டம் வந்துட்டேன்:)

கார்த்திகைப் பாண்டியன் said...

குசும்பன் அண்ணே.. எல்லோரும் சொன்னீங்கன்னுதான் இந்த விமர்சனத்துல கதையோட ஒன்லைனர் மட்டும் சொல்லி இருக்கேன்..மேற்படி படத்துலயும் கதைன்னு பெரிசாஒண்ணும் இல்லைங்கிறது வேற விஷயம்..:-)))

டம்பி மேவீ said...

"இந்தப் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படங்களில் டார்க் ஹார்ஸ் என்று "போர்க்களத்தை" சொல்லலாம்"

கருப்பு குதுரை ன்னு சொல்லிருக்கலாம் ......இலக்கியவாதியான நீங்கள் இப்புடி சொல்லுவிங்க ன்னு நான் எதிர்பார்க்கல

டம்பி மேவீ said...

அண்ணே ....உங்களை மாதிரி ஒரு வாத்தியார் எனக்கு கிடைச்சு இருந்தார்ன்ன .........

ம்ம்ம்ம் அதுக்கு எல்லாம் குடுப்பினை வேணும்

டம்பி மேவீ said...

இது தான் விமர்சனம் .....தயவு செய்து இனிமேல் திரைப்பார்வை எல்லாம் எழுதாதிங்க .......

உங்களின் கருது என்னை படம் பார்க்க தூண்டுகிறது .........எப்படியோ என்னிடம் இந்த படத்திற்கான DEMAND யை CREATE பண்ணிடிங்க ..

நேரம் கிடைத்தால் பார்க்கிறேன் ....

இன்று என்ன படம் வாத்தியாரே ......

டம்பி மேவீ said...

நேற்று உங்களது அனுஷ்காவின் கவர்ச்சி குறித்தான இலக்கிய பேச்சு எனக்கு ரொம்பவும் உபயோகமாக இருந்தது.....

WEBSITE லிங்க் சொன்னதற்கு நன்றி ("அந்த" வெப்சைட்)

pappu said...

nallarukkumo..

தண்டோரா ...... said...

குட்மார்னிங் புரொபசர்

♠ ராஜு ♠ said...

\\திரைப்பார்வை\\

"திரை" இருந்தா எப்புடி பார்க்குறது..?

sarvan said...

Good review

Anonymous said...

எண்ட காளத்துளயும் நியெல்லாம் எளுதாளர் ஆவவே முடியாத்

ஜெட்லி said...

அண்ணே உண்மைய சொல்லுங்க அந்த இன்டெர்வல்
முன்னாடி ட்விஸ்ட்னு வருதே அதை நீங்க முதல்
காட்சியில்யே கண்டுபிடிக்கவில்லையா???

தருமி said...

// குசும்பன் said...

தருமி சார் போன பதிவில் நீங்க சொன்னமாதிரி விமர்சனத்தை ஸ்கிப் செஞ்சுட்டு பின்னூட்டம் வந்துட்டேன்:)//

நல்ல பிள்ளை ..!

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

டிரைலர் பார்க்கும்போது, படம் நல்ல ஸ்டைல் என்று தெரிகிறது. கதை சுமார் என்றாலும் - எடுக்கபட்ட விதம் அருமை.

ஹாலிவுட் பாலா said...

நேத்து பேராண்மை பார்த்து மண்டை காய்ஞ்சேன். அதுமாதிரி இதுவும் இருக்காதுங்களே தல??

டிவிடி வரட்டும். லிஸ்டில் போட்டுக்கறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ டம்பி மேவீ

கும்மி..? நீ நடத்து ராசா.. அனுஷ்கா பத்தின கம்பெனி சீக்ரட் எல்லாம் சொல்லக்கூடாது தம்பி..

// pappu said...
nallarukkumo..//

ஒரு தடவை பார்க்கலாம் பப்பு

//தண்டோரா ...... said...
குட்மார்னிங் புரொபசர்//

Attendance marked..:-))))

//♠ ராஜு ♠ said...
"திரை" இருந்தா எப்புடி பார்க்குறது..?//

மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுமோ?

கார்த்திகைப் பாண்டியன் said...

// sarvan said...
Good review//

thanks boss..

//Anonymous said...
எண்ட காளத்துளயும் நியெல்லாம் எளுதாளர் ஆவவே முடியாத்//

ஹி ஹி ஹி.. நான் எழுத்தாளர் ஆக ஆசைபடுறேன்னு உங்ககிட்ட சொல்லவே இல்லையே அனானி அண்ணே..

//ஜெட்லி said...
அண்ணே உண்மைய சொல்லுங்க அந்த இன்டெர்வல் முன்னாடி ட்விஸ்ட்னு வருதே அதை நீங்க முதல் காட்சியில்யே கண்டுபிடிக்கவில்லையா???//

விடுப்பா.. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..

//தருமி said...
நல்ல பிள்ளை ..!//

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்... சந்தோஷத்த பாரு..;-))))

//முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said... டிரைலர் பார்க்கும்போது, படம் நல்ல ஸ்டைல் என்று தெரிகிறது. கதை சுமார் என்றாலும் - எடுக்கபட்ட விதம் அருமை.//

அதேதான்.. நன்றிங்க..

//ஹாலிவுட் பாலா said...
நேத்து பேராண்மை பார்த்து மண்டை காய்ஞ்சேன். அதுமாதிரி இதுவும் இருக்காதுங்களே தல??டிவிடி வரட்டும். லிஸ்டில் போட்டுக்கறேன்.//

Shot arrangements அம்சம் தல... அதுக்காக பார்க்கலாம்..

Joe said...

நல்ல விமர்சனம், முடிந்தால் அடுத்த வாரம் பார்த்து விடுகிறேன்.

// அசால்ட்டாக நடிக்கிறார் மனுஷன். //
"அலட்சியமாக" என்று வந்திருக்க வேண்டும், மதுரை நண்பா!
"அசால்ட்" என்ற ஆங்கில வார்த்தைக்கு "தாக்குதல்" என்று பொருள்.