January 28, 2010

உக்கார்ந்து யோசிச்சது (28-01-10)..!!!

நாமும் உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாக பேசி வந்து, கடைசியாக ஒரு நல்ல விஷயத்தை செய்யும் போது இன்னொரு நல்ல விஷயமும் தானாக நடந்தேறினால்...? குழந்தைகள் மனநலம் பற்றி டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி ஞாயிறு (31-01-10) அன்று நடக்க இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதே சமயத்தில், வரும் வெள்ளிகிழமை (29-01-10) அன்று அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் மூலமாக நம் பதிவுலகம் பற்றிய ஒரு அறிமுகப் பயிலரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்து நாள் பசியோடு திரிந்தவனுக்கு கோழி பிரியாணியும், இருட்டுக்கடை அல்வாவும் (குவார்ட்டர் என்று அசைவப் பிரியர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. ஹி ஹி ஹி) கிடைத்தது போல இருக்கும் அல்லவா.. அப்படித்தான் உணர்கிறேன்.



இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை வைத்து மதுரையில் இருக்கும் மற்ற பல கலைக்கல்லூரிகளுக்கும் பதிவர் பட்டறை ஒன்றை நடத்தலாம் என்று யோசித்து வருகிறோம். பார்க்கலாம்.

***************

குடியரசு தினம் அன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தேன். கரிமேடு பகுதியை கடக்கும்போது, கிட்டத்தட்ட எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், கையில் தேசியக்கொடியை வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று நீட்டிக் கொண்டிருந்தார். அவசரத்தில் நிற்காமல் அவரை தாண்டிப் போய் விட்டேன். ஆனால் கல்லூரிக்கு போனபின்னும் அவருடைய முகம் கண்ணுக்குள்ளேயே இருந்தது. எந்தவித பிரதிபலனும் பாராமல் நாட்டுக்காக தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த அவரை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாகவும், அதனை மதிக்காமல் கடந்து வந்து விட்டோமே என என் மீதே கோபமாகவும் இருந்தது.

கல்லூரி நிகழ்ச்சி முடிந்ததும் இருப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகத்துடனேயே அவரைத் தேடி வந்த வழியே போனேன். மனிதர் அங்கேதான் இருந்தார். அவரிடம் போய்க் கேட்டு கொடியை வாங்கி சட்டையில் குத்திக் கொண்டபோது அவர் முகத்தில் வந்த சந்தோசம் இருக்கிறது பாருங்கள்.. வார்த்தைகளில் சொல்ல முடியாது. இதுபோன்று நாட்டை நேசிக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு கொஞ்சம் நெகிழ்வாக இருந்தது.

***************

அண்ணன் தண்டோராவின் புண்ணியத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜியுடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். இந்தப் படத்துக்காக தாங்கள் தேடி அலைந்த விஷயங்களைப் பற்றியும், பட்ட கஷ்டங்கள் பற்றியும் நிறையவே சொன்னார். அவர் சொன்னதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம்.. "நம் மூதாதையர்களின் சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை" என்பதும் "நம் மக்களின் வாழ்க்கை முறையின் பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய் விட்டன" என்பதுதான். "பழங்கால மன்னர்கள் எத்தனையோ நல்ல விஷயங்கள் செய்தும் அதை சரியாகப் பதிவு செய்யாத காரணத்தால் இன்று நமக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்றும் வருத்தப்பட்டார். படத்தில் எனக்கிருந்த குழப்பங்கள் பற்றியும், என்னுடைய கேள்விகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு பதில் சொன்னார். மனிதர் ரொம்பவே Down to Earth ஆக இருக்கிறார். நண்பர் தண்டோராவிற்கு நன்றி..!!!

***************

பதிவில் எழுதும் எல்லோருக்கும் ஒரு முறையாவது தங்கள் பெயரை அச்சில் பார்க்கும் ஆசை இருக்கும். கல்கியில் என்னைப் பற்றிய அறிமுகம் வந்தபோதே சந்தோசம் தாங்காமல் வீட்டில் இருப்பவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். இப்போது வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கும் பதிவர்களின் புத்தகத் தொகுப்பில் என்னுடைய பயண அனுபவமும் ( ரயில் - பெருவெளிச் சலனங்கள் ), கவிதையும் ( முடியாத கதை - கிளிஞ்சல்கள் பறக்கின்றன ) இடம் பெற்று இருப்பதில் எல்லோருக்கும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. குறிப்பாக அம்மா. வருவோர் போவோரிடம் எல்லாம் புத்தகத்தை எடுத்துக் காண்பித்து.. என் பையன் எழுதினது என்று சொல்லி... பார்க்கும்போது நெகிழ்ச்சியாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதை சாத்தியமாக்கிய தோழர் மாதவராஜுக்கும், புத்தகங்களை வாங்கியனுப்பிய நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கும் நன்றி.

***************

தலயின் "அசல்" டிரைலரே அசத்தலாக இருக்கிறது. மேக்கிங்கில் மிரட்டி இருப்பார்கள் போலத் தெரிகிறது. ஆனால் அதுவல்ல விஷயம். படத்துக்கு அசல் என்று பெயர் வைத்து விட்டு எக்கச்சக்கமான விஷயங்களை காப்பி அடித்திருக்கிறார்கள். முதலில் பாடல்கள். "இவன்தான்" பாட்டு அப்படியே ஜேம்ஸ் பாண்டின் "கோல்டன் ஐ" டைட்டில் பாட்டு. "ஹே துஷ்யந்தா" பாட்டை ஹிந்தி ஜப் வி மெட்டில் இருந்து உருவி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு புதிய பறவை ரீமிக்ஸ்...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.. டிரைலரின் பின்னணி இசையிலும் நிறையவே பாண்டின் தாக்கம். ஏன் பரத்வாஜ் ஏன்?

சரி பாட்டுத்தான் காப்பி என்றால்.. படத்தில் வரும் அஜித்தும், அமெரிக்க கறுப்பின வில்லனும் தங்கள் முன்னே இருக்கும் துப்பாக்கியை சரி செய்து சுட முயலும் காட்சி.. அப்படியே shoot 'em up யில் பார்த்த ஞாபகம். தல நடையாய் நடப்பது பில்லாவை ஞாபகப்படுத்துகிறது. சமீபத்தில் மோதி விளையாடிய சரண் இயக்கி இருப்பது வேறு வயித்தில் புளியைக் கரைக்கிறது. என்ன நடக்கப் போகுதோ? எல்லாம் வல்ல மகரநெடுங்குழைனாதன் தான் காப்பாற்ற வேண்டும்.

***************

புத்தகங்கள் பற்றி நண்பர் "தினசரி வாழ்க்கை" மேவீயும், சாலை பாதுகாப்பு பற்றி தோழி "இதயப்பூக்கள்" இயற்கையும் தொடர்பதிவு எழுத அழைத்து ஒரு மாதத்துக்கு மேலாகவே ஆகிவிட்டது. கல்லூரியில் ஆணி ஜாஸ்தி என்றெல்லாம் காரணம் தேட விரும்பவில்லை. தாமதத்துக்கு வருந்துகிறேன். கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன்.

***************

"அல்வா கொடுத்த பிரபல பதிவர்" அல்லது "சிங்கத்தை அதன் குகையில் சந்தித்தேன்.." இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். திருநெல்வேலியில் நண்பர் நையாண்டி நைனாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு மனிதர் ஒரு சிறந்த உதாரணம். உற்சாகமாக உரையாடி விட்டு அவர் அன்போடு வாங்கி தந்த இருட்டுக் கடை அல்வாவையும் ராவிக் கொண்டு வந்தேன். மும்பையில் மையம் கொண்டிருந்த சூறாவளி இப்போது சென்னைக்கு மாற்றல் ஆகி இருப்பதால் அமைதியாக இருக்கிறது. விரைவில் பதிவுலகில் மீண்டும் புகுந்து புறப்பட வாழ்த்துகள்.

***************

சமீபத்தில் ரசித்தது

தபு நடித்த "ஹவா" என்ற திகில்ப்படத்தை "ராசலீலை" என்ற பெயரில் சீன் படமாக இறக்குமதி செய்து இருக்கிறார்கள். அதன் விளம்பரம்.

"பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள். ஆனால் இவள் மீதோ பேயே இறங்கியது".

எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க..!!

இப்போதைக்கு அவ்வளவுதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்...:-)))))))))

27 comments:

ஆ.ஞானசேகரன் said...

//குழந்தைகள் மனநலம் பற்றி டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி ஞாயிறு (31-01-10) அன்று நடக்க இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதே சமயத்தில், வரும் வெள்ளிகிழமை (29-01-10) அன்று அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் மூலமாக நம் பதிவுலகம் பற்றிய ஒரு அறிமுகப் பயிலரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.//

நல்ல யோசனை பாராட்டுகள்

மேலும் நல்ல பகிர்வை கொடுத்தமைக்கு நன்றி தல

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

சம்பத் said...

அசல் பற்றிய நகல் விஷயங்கள் எனக்கு புதிது...ஆமாம் நீங்களே நம்ம தல படத்தை போய்...?????

Santhappanசாந்தப்பன் said...

கொடியை சட்டையில் குத்திக் கொள்வதை, பலர் என்னவோ வேடிக்கையாக பார்க்கிறார்கள்.... அல்லது ஏளனம் செய்கிறார்கள். வருத்தமாக உள்ளது. ஒரு முதியவரை மகிழ்வித்த புண்ணியத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..

"ஆயிரத்தில் ஒருவன்" பற்றி நீங்கள் என்ன கேட்டீர்கள்? அவர் என்ன பதில் சொன்னார்? அதையும் சொல்லலாமே?

Balakumar Vijayaraman said...

//பத்து நாள் பசியோடு திரிந்தவனுக்கு கோழி பிரியாணியும், இருட்டுக்கடை அல்வாவும் (குவார்ட்டர் என்று அசைவப் பிரியர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. ஹி ஹி ஹி) //

கோழி பிரியாணி - சைவம், சரக்கு - அசைவம் ..... எம் இனமா நீங்களும் :) வாழ்க.


//அவரிடம் போய்க் கேட்டு கொடியை வாங்கி சட்டையில் குத்திக் கொண்டபோது அவர் முகத்தில் வந்த சந்தோசம் இருக்கிறது பாருங்கள்.. வார்த்தைகளில் சொல்ல முடியாது. //

அண்ணே, நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே !

//பதிவில் எழுதும் எல்லோருக்கும் ஒரு முறையாவது தங்கள் பெயரை அச்சில் பார்க்கும் ஆசை இருக்கும். //

இது துவக்கம் தான், இன்னும் கலக்குவீங்க.

//தலயின் "அசல்"... //

நடுநிலைவாதி :)

//"அல்வா கொடுத்த பிரபல பதிவர்"... //

இருட்டுக் கடை அல்வா நல்லா இருந்தது ன்னு certificate தரனுமா என்ன ? எனவே, சேர்ந்து சாப்பிட்டவன் என்ற முறையில் "நைனா"விற்கு நன்றிகள். (அப்புறம், இது ரொம்ப நல்ல பழக்கம். தொடர்ந்து ஃபாலோ பண்ணனும் நைனா, சரியா ? )

Karthik said...

ராம்ஜியிடம் மறுபடி பேசினால் என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்ணா. மனுஷன் அட்டகாசப்படுத்தியிருந்தார்.

புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்ங்ணா. :)

அசல் ட்ரெய்லர் வயிற்றில் புளியக் கரைக்குது. பார்க்கலாம். :)

மேவி... said...

"உக்கார்ந்து யோசிச்சது (28-01-10)..!!!"



மத்த நாளெல்லாம் நின்னுகிட்டு யோசி பிங்களோ.....

மேவி... said...

மிக பெரிய எழுத்தாளராக வர என் வாழ்த்துக்கள் ....ஓட்ட சைக்கிள் ஒன்னு ரெடி ஆ இருக்கு

மேவி... said...

சிக்கிரம் தொடரை எழுதுங்க தல ...


அசல் பார்போம் மோதி விளையாடுக்கு பிறகு வருகிறது .....

மேவி... said...

tabu padathai naan parkkala..nambunga

ஜெட்லி... said...

//தல நடையாய் நடப்பது பில்லாவை ஞாபகப்படுத்துகிறது. சமீபத்தில் மோதி விளையாடிய சரண் இயக்கி இருப்பது வேறு வயித்தில் புளியைக் கரைக்கிறது. என்ன நடக்கப் போகுதோ?//


எனக்கும் தேறுமான்னு கொஞ்சம் டவுட் இருக்குணே.....

vasu balaji said...

:)

மாதவராஜ் said...

தொடர்ந்து எழுதுங்கள்... இன்னும் சிறப்புகள் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்.

புத்தகத்தில் அச்சேற்ற அனுமதித்த தங்களுக்கு என் நன்றி.

க.பாலாசி said...

நல்ல தொகுப்பு... தேசியக்கொடிய நீங்களும் வாங்குனதுல சந்தோஷம்.

அச்சில் ஏறிய தங்களின் படைப்புகளுக்காக, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

குழந்தைகள் மனநலம் பற்றிய நிகழ்வும், அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கான வலைப்பூ அறிமுகமும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
மதுரைக்காரர்கள் அசத்திக்கொண்டிருப்பது உண்மையிலேயே மிக மிக சந்தோஷமாக உள்ளது. ஊருக்கு வந்தா சந்திக்கலாம்ல?

Ganesan said...

மதுரை பதிவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது பாராட்டதக்கது.

அறிமுக பதிவர் பட்டறை பணி சிறக்க வாழ்த்துக்கள்.

உங்களின் எழுத்துக்கள் புத்தக வடிவில் வந்தற்கு வாழ்த்துக்கள், மென்மேலும் எழுதுங்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல யோசனை பாராட்டுகள் மேலும் நல்ல பகிர்வை கொடுத்தமைக்கு நன்றி தல//

வாழ்த்துக்கு நன்றி தலைவரே

//சம்பத் said...
அசல் பற்றிய நகல் விஷயங்கள் எனக்கு புதிது...ஆமாம் நீங்களே நம்ம தல படத்தை போய்...?????//

நம்ம தலங்குரதால தான் இந்த பயமே நண்பா

//பிள்ளையாண்டான் said...
கொடியை சட்டையில் குத்திக் கொள்வதை, பலர் என்னவோ வேடிக்கையாக பார்க்கிறார்கள்.... அல்லது ஏளனம் செய்கிறார்கள். வருத்தமாக உள்ளது.//

வருத்தம் தான் நண்பா.. நிலைமை மாற வேண்டும்..

//ஒரு முதியவரை மகிழ்வித்த புண்ணியத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..//

ஏதோ என்னால் முடிந்த சின்ன விஷயம்தான்..

//"ஆயிரத்தில் ஒருவன்" பற்றி நீங்கள் என்ன கேட்டீர்கள்? அவர் என்ன பதில் சொன்னார்? அதையும் சொல்லலாமே?//

அதற்கு தனியாக ரெண்டு பதிவு தேவைப்படும் தல.. அதுதான் மொத்தமா அவர் சொன்னது பத்தி சுருக்கமா எழுதிட்டேன்..:-))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ வி.பாலகுமார்

பிரிச்சு மேஞ்சதுக்கு நன்றி நண்பா

// Karthik said...
ராம்ஜியிடம் மறுபடி பேசினால் என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்ணா. மனுஷன் அட்டகாசப்படுத்தியிருந்தார்.//

கண்டிப்பா கார்த்தி

//புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்ங்ணா:)//

நன்றிப்பா

//அசல் ட்ரெய்லர் வயிற்றில் புளியக் கரைக்குது. பார்க்கலாம். :)//

why blood? same blood..

@ டம்பி மேவீ

ஒனக்கு இருக்குடி..:-)))))

Joe said...

சரணிடம் அசலை எதிர்பார்த்தது உங்கள் தவறு!

அவர் முதல் படம் எடுக்க ஆரம்பித்தலிருந்து, இன்று வரை ஒரு படமும் காப்பியடிக்காமல் இருந்தது இல்லை.

SK said...

மதுரை நிகழ்ச்சிகள், வாழ்த்துக்கள் + கலக்குங்கப்பு ..

குடியரசு தினம் .. ம்ம்ம்

அசல், :)

புத்தகம், வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
எனக்கும் தேறுமான்னு கொஞ்சம் டவுட் இருக்குணே.....//

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது தம்பி.. நம்பிக்கை தானே வாழ்க்கை..:-)))

//வானம்பாடிகள் said...
:)//

:-))))))))

//மாதவராஜ் said...
தொடர்ந்து எழுதுங்கள்... இன்னும் சிறப்புகள் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள். புத்தகத்தில் அச்சேற்ற அனுமதித்த தங்களுக்கு என் நன்றி.//

ரொம்ப நன்றி தோழர்

கார்த்திகைப் பாண்டியன் said...

//க.பாலாசி said...
நல்ல தொகுப்பு... தேசியக்கொடிய நீங்களும் வாங்குனதுல சந்தோஷம். அச்சில் ஏறிய தங்களின் படைப்புகளுக்காக, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா

//செ.சரவணக்குமார் said...
குழந்தைகள் மனநலம் பற்றிய நிகழ்வும், அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கான வலைப்பூ அறிமுகமும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றி நண்பா

//மதுரைக்காரர்கள் அசத்திக்கொண்டிருப்பது உண்மையிலேயே மிக மிக சந்தோஷமாக உள்ளது. ஊருக்கு வந்தா சந்திக்கலாம்ல?//

என்ன இப்படி சொல்லிட்டீங்க? ஊருக்கு வந்தா கண்டிப்பா எங்கள எல்லாம் பார்க்காம போகக் கூடாதுண்ணே ..:-)))

//காவேரி கணேஷ் said...
மதுரை பதிவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது பாராட்டதக்கது.அறிமுக பதிவர் பட்டறை பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்களின் எழுத்துக்கள் புத்தக வடிவில் வந்தற்கு வாழ்த்துக்கள், மென்மேலும் எழுதுங்கள்.//

நன்றி நண்பா.. ஞாயிறு அன்று உங்களை சந்திக்க முடியும் என நம்புகிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// Joe said...
சரணிடம் அசலை எதிர்பார்த்தது உங்கள் தவறு! அவர் முதல் படம் எடுக்க ஆரம்பித்தலிருந்து, இன்று வரை ஒரு படமும் காப்பியடிக்காமல் இருந்தது இல்லை.//

:-((((((((

//SK said...
மதுரை நிகழ்ச்சிகள், வாழ்த்துக்கள் + கலக்குங்கப்பு ..குடியரசு தினம் .. ம்ம்ம்அசல், :) புத்தகம், வாழ்த்துக்கள்.//

எல்லாம் உங்க வழிக்காட்டுதல் தான் தல..:-)

குடந்தை அன்புமணி said...

டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி,மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் பயிலரங்கம், குடியரசு நிகழ்ச்சிக்காக இல்லையென்றாலும் அந்த முதியவருக்காகவாவது கொடியை குத்திக் கொண்டு அவருக்கு மகிழ்வை தந்தது, ஒளிப்பதிவாளருடன் உரையாடிய மகிழ்ச்சி,புத்தகத்தில் பெயர் வந்தது,விருப்பமான நடிகரின் படம் என்றாலும் அதன் நிறை குறைகளை கூறியது, ஆணி ஜாஸ்தி என்று எஸ்கேப் ஆகாதது,நையாண்டியை சந்தித்த அனுபவம், ராஜ லீலை குறும்பு என்று கலக்கி விட்டீர்கள். அனைத்துக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்கள்.

அ.மு.செய்யது said...

டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி !!! உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

நீங்கள் சொன்ன அதே பரவசம்,நம் எழுத்துக்களை அச்சில் பார்க்கும் போது எனக்கும் ஏற்பட்டது.இன்னும் நிறைய எழுத உத்வேகமளிக்கிறது.

நையாண்டி நைனாவ பார்த்துட்டு வந்தும் இவ்வளவு தெளிவா பதிவு எழுதியிருக்கீங்களே..பொய் தான சொல்றீங்க.

☼ வெயிலான் said...

கதை வெளியீட்டிற்கும்,
கருத்தரங்குக்கும் வாழ்த்துக்கள்!!!!

ராம்ஜி சந்திப்பு பற்றி இன்னும் விரிவாக ஒரு பதிவெழுதுங்கள்.

நையாண்டி நைனா?
இன்னுமா உலகம் நம்புது....... :)

sathishsangkavi.blogspot.com said...

//அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் மூலமாக நம் பதிவுலகம் பற்றிய ஒரு அறிமுகப் பயிலரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.//

வாழ்த்துக்கள் வாத்தியாரே.......கலக்குங்க... மதுரை 31ந்தேதி குளுங்கப்போவுது....

கார்த்திகைப் பாண்டியன் said...

@ குடந்தை அன்புமணி

நன்றி தலைவரே

@ அ.மு.செய்யது

நாம எல்லாம் எப்பவும் ஸ்டேடில நண்பா..

@ வெயிலான்

நன்றி தல.. நையாண்டி நைனாவ எப்படி தல நம்பாம இருக்குறது..
நம்ம ஜிகிரி தோச்துல..

@ Sangkavi

நன்றி நண்பரே.. நல்லா நடக்கும்னு நம்புறோம்..