January 30, 2010

மழைக்காதலன்..!!!


மழையைப் பற்றிய கவிதையொன்றை
படித்த நாள் முதலாய்
பெரும் ரசிகனாகிப் போனேன்
மழைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும்

ஜன்னலின் பின்னே ஓரமாய் நின்று
ரசிக்க மட்டுமே பழகி இருந்த எனக்கு

மழையின் உன்னதத்தையும்
நனைவதின் ஆனந்தத்தையும் சொல்லி
சக்கரவாகமாய் மாறிப்போகும் ஆசையை
உள்ளே விதைத்து சென்றது அந்தக் கவிதை

அரும்பாடு பட்டு எங்கெங்கோ தேடி
அதை எழுதியவரின்
முகவரியைக் கண்டுபிடித்து
சந்திப்புக்கான நாளும் குறிக்கப்பட்டது

ஆசிர்வதிக்கப்பட்டதாய்
நான் நம்பிக் கொண்டிருந்த
அந்த நாளில் - கிளம்பும் வேளையில்
கூட வரும் நண்பனாய்
மழையும் சேர்ந்து கொள்ள
உற்சாகப் பந்தாய் மாறிப் போனது மனது

உள்ளம் நனைத்த மழையின் ஊடாக
ஆனந்தக் கூத்தாடியபடி
அவரின் வீட்டை அடைய

சின்னதொரு புன்முறுவலோடு
வாசல் வந்து வரவேற்றவர்
அலுத்துக் கொண்டே சொன்னார்

"ச்சே.. நாசமாப் போன மழை..
எல்லார் பொழப்பையும் கெடுக்குது..
இல்லீங்க?"

அதன் பிறகு அவரிடம்
என்ன பேசுவதெனத் தெரியாமல்
மௌனமாகத் திரும்பி விட்டேன்..!!!

21 comments:

வானம்பாடிகள் said...

mmm.அருமை கார்த்திக். டெம்ப்ளேட் அல்ல. யதார்த்தம் உணர்ந்து சொன்னேன்.

அகல்விளக்கு said...

அருமை அண்ணா...

எழுத்துக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் என்று கதிர் அண்ணா சொன்னது ஞாபகம் வருகிறது...

:-)

தருமி said...

//ச்சே.. நாசமாப் போன மழை..//

கற்க .. கற்றபின் நிற்க ...

லோகு said...

அவர் மேல் பிழை இல்லை. கவிதைக்கு பொய் அழகு.

நல்ல கவிதை அண்ணா.. இந்த கோணத்திலும் கவிதை எழுத முடியுமா என திகைக்க வைக்கிறீர்கள்.

க.பாலாசி said...

கவிதைகள் பொய்யென்பது... நிஜமானது...

நல்ல கவிதை...

சொல்லரசன் said...

எழுத்துக்கும் செயலுக்கும் வித்தியாசம் உள்ளவர்கள் அதிகம்.எழுத்தை ரசிப்பதோடு நின்றுவிடவேண்டும் தரிசிக்க நினைக்ககூடாது

மழைக்காதலன் said...

ஹா ஹா ஹா... இப்படி சொல்லிப்புட்டீகளே

vellinila said...

வாழ்த்துக்கள

Karthik said...

:) good one..

அன்புடன் அருணா said...

அடடா...அழகான மழை!

மாதேவி said...

"மழைக்காதலன்" நனைய வைக்கிறது.

அ.மு.செய்யது said...

வெகு அழகு கா.பா...!!!! சில்லுனு ஒரு கவிதை !!!

கடைசி வரிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.பரவாயில்லை இதுவும் நன்றாகத்தானிருக்கிறது.

கவிதைகளுக்கு காதலை விட மழை தான் அழகு இல்ல ???

அத்திரி said...

கவிதை அழகோ அழகு........நான் சொன்ன மாதிரியே எழுதியிருக்க

malarvizhi said...

very nice

பிரியமுடன்...வசந்த் said...

கிளம்பும் வேளையில்
கூட வரும் நண்பனாய்
மழையும் சேர்ந்து கொள்ள
உற்சாகப் பந்தாய் மாறிப் போனது மனது
//


இங்கே கவிதையோட கரு... ரசிச்சு எழுதியிருக்கீக...

ஹேமா said...

கார்த்தி கவிதைகள் பொய்யல்ல.உண்மை கலந்ததுதான்.

மழைக்காதலன்.யார் கையிலும் அகப்படாத கள்வன்.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் இதுதான் எதார்த்தம்.... கவிதைக்கு பொய் அழகுதான் இருந்தாலும் பொய்யே அழகாகுமா?

நன்று கார்த்திகைப் பாண்டியன்

செ.சரவணக்குமார் said...

மிகப் பிடித்திருக்கிறது நண்பா.

டம்பி மேவீ said...

nalla irukku nne

டம்பி மேவீ said...

உங்களுக்கும் அந்த எழுத்தாளருக்கும் நடந்த சந்திப்பை பற்றி சொல்லுரிங்கன்னு நல்லாவே புரியுது

குமரை நிலாவன் said...

இதுதான் எதார்த்தம் நண்பா

கவிதை அருமை

மழை ரசித்தவர்கள்
மழை பிடிக்கும் என்றீர்கள்
மழையுடன் தேநீர் அருந்துவது
சொர்க்கம் என்றுரைத்தீர்கள்
மழைக்கென கவிதைகள்
ஆயிரம்எழுதிக் கிழித்தீர்கள்.
வெள்ள நீரில் மிதக்கும்
குடிசைகளை உங்களது
இறுக மூடிய பங்களாக்களிலிருந்து
பார்த்தபடி
மற்றோர் கவிதை எழுத துவங்குகிறீர்கள்.
உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்

இது நிலாரசிகன் அவர்கள் எழுதிய கவிதை