January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் -திரைப்பார்வை..!!!

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு பரபரப்பாக வெளியாகி உள்ளது "ஆயிரத்தில் ஒருவன்".

--> பருத்தி வீரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வரும் கார்த்தியின் படம்

--> புதுப்பேட்டைக்குப் பின் காணாமல் போன செல்வராகவனின் படம்

--> 32 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டுகளாக எடுக்கப்பட்ட படம்

--> சரித்திரம் + சாகசம் என்று வெகு நாட்களுக்குப் பிறகு வெளியாகும் தமிழ்ப்படம்முதலில் செல்வராகவனுக்கு ஒரு ராயல் சல்யூட். இப்படி ஒரு கதையை யோசிப்பதற்கே ஒரு கெத்து வேண்டும். சாதித்துக் காட்டி இருக்கிறார். தமிழில் இதுவரைக்கும் இப்படி ஒரு படம் வந்தது கிடையாது என்று அடித்துச் சொல்லலாம்.

( படத்தோட கதை எனக்குத் தெரிய வேணாம்னு நினைக்கிறவங்க அடுத்த மூணு பத்திய தாண்டிப் படிங்க மக்கா..)

காலம் - கி.பி.1300 . பாண்டிய மன்னனின் படையெடுப்பால் நாட்டை விட்டு ஓடுகிறார்கள் சோழர்கள். போகும்போது பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையையும் அபகரித்துச் செல்கிறார்கள். வியட்நாமுக்கு அருகே இருக்கும் ஒரு தீவுக்கு தப்பிச் செல்லும் அவர்களை துரத்திக் கொண்டு போன பாண்டிய தளபதி, போகும் வழியை ஒரு ஓலையில் பதிவு செய்கிறான். அதன் பிறகு அந்த சோழவம்சம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இன்று, கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஓலைச்சுவடி ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் (பிரதாப் போத்தன்) கிடைக்கிறது. காணாமல் போன சோழ வம்சத்தை தேடும் முயற்சியில் ஆராய்ச்சியாளரும் காணாமல் போகிறார். அவரைத் தேடி அரசாங்கம் ஒரு குழுவை அனுப்புகிறது. போலிஸ் ஆபிசர் ரீமா, பிரதாப்பின் மகள் ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவின் போர்ட்டராக கார்த்தி. கடல், பாம்புகள், காட்டுவாசிகள், புதைகுழி என்று பல ஆபத்துகளைக் கடந்து தொலைந்து போன சோழ மக்களின் நகரைக் கண்டுபிடிக்கிறார்கள். இங்கே இடைவேளை.

அழிந்து போனதாக நம்பிக் கொண்டிருந்த சோழ வம்சத்தின் மிச்சம் அங்கே குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்கிறார்கள். அவர்களின் அரசன் பார்த்திபன். என்றேனும் தாய் தேசத்தில் இருந்து சேதி வந்து தாங்கள் சோழதேசம் திரும்புவோம் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கூட்டம். தான் சோழ தேசத்தின் பிரதிநிதி என்றும் மூன்று நாட்களில் சொந்த ஊர் திரும்பலாம் என்றும் பார்த்திபனை நம்ப வைக்கிறார் ரீமா. ஆனால் உண்மையில் அவர் காலம் காலமாக சோழர்களை பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர். நேரம் பார்த்து பார்த்திபனின் காலை வாரி விடுகிறார். கடைசியில் என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.சட்டையில்லாத வெறும் உடம்போடு காருக்குள் இருந்து கார்த்தி அறிமுகமாகும் காட்சி அட்டகாசம். எம்ஜியார் பாட்டுக்கு ஆடுகிறார். அதன் பிறகு சொங்கி சோதாவாகிப் போகிறார். முதல் பாதியில் ஊருக்கு நேர்ந்து விட்டார்போல வருவோர் போவோர் எல்லாரும் அவரை அடிக்கிறார்கள். இரண்டாம் பாதியில் உப்புக்கு சப்பாணி போல வந்து போகிறார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் சூர்யாவின் குரல் போலவே கேட்கிறது. உடல்மொழியிலும் முக்கால்வாசி பருத்திவீரன். ரூட்ட மாத்துங்க பாசு.. ஆண்ட்ரியா செல்வராகவனின் அக்மார்க் சோகநாயகி. அவர் கவர்ச்சி காட்டாமல் இருப்பது நமக்கு நல்லது. படத்தின் ஆயிரம்வாலா பட்டாசு.. ரீமாசென். சான்சே இல்லை. ஆட்டம்பாட்டம் என்ன.. கத்திசண்டை என்ன.. கோபம் கொப்பளிக்க கண்களாலேயே வெறுப்பைக் கக்குவது என்ன.. தூள் பரத்தி இருக்கிறார்.ஆரம்ப கட்டத்தில் எரிச்சலைக் கிளப்பினாலும் இரண்டே காட்சிகளில் நம் உள்ளத்தை அள்ளிக் கொள்கிறார் பார்த்திபன். ரீமாவின் துரோகத்தால் தன் மக்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து ஒரு குற்றவுணர்வுடன் கூடிய நடையோடு அழுது கொண்டே வருகிறார் பாருங்கள்.. சூப்பர். இறுதிக் காட்சியில் கண்முன்னே தன் மக்கள் நாசம் செய்யப்படுவதைக் கண்டு துடிப்பதும் நல்ல நடிப்பு. அங்கங்கே வரும் கோண செஷ்டையையும் நடனத்தையும் தவிர்த்து பார்த்திபன்.. அட்டகாசம். அழகம் பெருமாளும் மற்றவர்களும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்து இருக்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் மக்கள் வெள்ளம். முகம், உடம்பு என எல்லாப் பகுதியிலும் கரியைப் பூசிக்கொண்டு சிரமப்பட்டு நடித்து இருக்கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கிறார் செல்வராகவன்.

பின்னணி இசையில் பிசிறு தட்டி இருக்கிறார் பிரகாஷ் குமார். படத்தில் பயன்படுத்தி இருக்கும் பாடல்கள் - கோவிந்தா கோவிந்தா, உன்மேல ஆசைதான், நிலமெங்கே.. எல்லாமே நச். மாலை நேரம் படத்தில் இல்லையென்பது எனக்கு மிகவும் வருத்தம். கலை இயக்குனர் யாரென்று தெரியவில்லை.. கலக்கி இருக்கிறார். நீண்ட கால்களின் நிழல் நடராஜரின் உருவமாக வருவதில் ஆரம்பித்து அடர்ந்த காடுகளின் ஊடே இருக்கும் கோட்டைக் கொத்தளங்கள், சோழ மக்கள் தங்கி இருக்கும் இருண்ட குகைகள் என புகுந்து புறப்பட்டு இருக்கிறார். நேரத்துக்குத் தக்கவாறு கலர் டோன்கள் மாற்றம், அகண்ட கேன்வாஸ் என ராம்ஜியின் காமிரா மாயாஜாலம் செய்கிறது. படத்தில் ஒரே ஒருவர்தான் வேலை பார்க்கவில்லை. அவர் - எடிட்டர் கோலா பாஸ்கர். படம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடுகிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளில் நாம் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதற்கு இந்தப்படம் நல்ல எடுத்துக்காட்டு.எல்லா செல்வராகவன் படங்கள் போலவே இந்தப் படத்திலும் செக்ஸ், மனித உணர்வுகளைச் சொல்லும் பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. இத்தனை நல்ல விஷயங்கள், வித்தியாசமான கதை.. பிறகு என்ன சூது என்கிறீர்களா? அது - திரைக்கதை. முதல் பாதியோடு படம் முடிந்திருந்தால் ஒரு அட்டகாசமான அட்வென்ச்சர் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும். இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறார் செல்வா. எந்த ஆங்கிலப்படத்தின் சாயலும் இந்தப் படத்தில் இருக்காது என்றெல்லாம் பேட்டி தந்திருக்கிறார் செல்வா. ஆனால் படத்தின் டைட்டில் போடுவதே மம்மியின் உல்டா. கிங் சாலமன் மைன்ஸ், மெக்கென்னாஸ் கோல்டு, சீன சண்டைப் படங்கள், கிளாடியேட்டர் என்று நாம் பார்த்து ரசித்த பல படங்களின் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

இப்போ என்னதான் பண்ண.. படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு வார்த்தையில் சொல்லு என்பவர்களுக்கு.. வித்தியாசமான கதைக்களன் மற்றும் தமிழில்இனிமேலும் இப்படிப்பட்ட முயற்சிகள் வரவேண்டும் என்பதற்காகவே கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படம்.

35 comments:

அத்திரி said...

புரொபசர் உங்க கடமை உணர்வுக்கு ஒரு அளவு கிடையாதா........

பொங்கல் வாழ்த்துக்கள்

Kamal said...

2nd half enakku appadi onnum bore adikkala boss ...appuram graphics..32cr budgetla ivlo than boss mudiyum..indha kaasukkku ivlo pannedhe jasthi :):):)

தருமி said...

கா.பா + கமல் (முந்திய பின்னூட்டாளர்) = நல்ல படம் மாதிரி "சத்தம்" வருதே!

நல்லதுதான் ........

வினோத்கெளதம் said...

எது எப்படி இருந்தாலும் பார்ப்போம்ல..

ஊர்ல தான் இருக்கிங்களா..ஆளையே காணோம்..
பொங்கல் வாழ்த்துக்கள் தல..

தர்ஷன் said...

அட எனக்கும் இதே உணர்வுதான்
நேரமிருந்தால் இதையும் வாசித்துப் பாருங்கள்
படம் நிச்சயம் ஆதரிக்கப் பட வேண்டியதுதான்

http://sridharshan.blogspot.com/2010/01/blog-post_2761.html

குசும்பன் said...

தெரியா தனமா உங்க விமர்சனத்தை படிச்சிட்டேன்:(

இப்படியா கதையை அப்படியே சொல்லுவீங்க, அட்லீஸ்ட் மேல ஒரு டிஸ்கியாவது போட்டு இருக்கலாம். பாதியோட நிறுத்திட்டேன்:(

வானம்பாடிகள் said...

:))

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! நியாயமான விமர்சணம். அருமை.

தருமி said...

//அட்லீஸ்ட் மேல ஒரு டிஸ்கியாவது போட்டு இருக்கலாம். பாதியோட நிறுத்திட்டேன்:( //

குசும்பன்,
அதெல்லாத்தையும் அப்டியே தாண்டி வரத் தெரியலையா? என்னங்க நீங்க!!

நேசன்..., said...

நம்மூர்ல என்ன ரிசல்ட் சகா?.......எந்தத் தியேட்டர்லப் போட்ருக்காய்ங்கே!

ஜெட்லி said...

//ரீமாவின் துரோகத்தால் தன் மக்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து ஒரு குற்றவுணர்வுடன் கூடிய நடையோடு அழுது கொண்டே வருகிறார் பாருங்கள்..///


நான் இந்த காட்சியை மிகவும் ரசித்தேன் அண்ணே..

அண்ணாமலையான் said...

உங்க விமர்சனத்திற்கு நன்றி...

||| Romeo ||| said...

பின்பாதி மிக நீளமாக இருக்கிறது என்பது தான் மைனஸ் , கலை இயக்குனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. விமர்சனம் அருமை

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல விமர்சனம். நன்றி

பிள்ளையாண்டான் said...

32 கோடியை கொட்டி, 3 வருஷம் படம் எடுத்ததுக்கு, இப்படி ஆளாளுக்கு மொத்த கதையும் போட்டிருக்கீகளே! இது உங்களுக்கே அடுக்குமா?

விமர்சனம் பண்ணுங்க! ஆனா மொத்த கதையும் சொல்லாதீங்க!

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
புரொபசர் உங்க கடமை உணர்வுக்கு ஒரு அளவு கிடையாதா........ பொங்கல் வாழ்த்துக்கள்//

ஹி ஹி.. ரொம்பப் புகழாதீங்க அண்ணே.. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..

// Kamal said...
2nd half enakku appadi onnum bore adikkala boss ...appuram graphics..32cr budgetla ivlo than boss mudiyum..indha kaasukkku ivlo pannedhe jasthi :):):)//

நியாயம்தான்.. இன்னும் கொஞ்சம் நன்றாகப் பண்ணியிருக்கலாம் என்பதற்காக சொன்னேன் நண்பா

//தருமி said...
கா.பா + கமல் (முந்திய பின்னூட்டாளர்) = நல்ல படம் மாதிரி "சத்தம்" வருதே!நல்லதுதான் //

நல்லது நடந்தா சந்தோஷமே ஐயா..

//வினோத்கெளதம் said...
எது எப்படி இருந்தாலும் பார்ப்போம்ல.. ஊர்ல தான் இருக்கிங்களா..ஆளையே காணோம்..
பொங்கல் வாழ்த்துக்கள் தல..//

வாழ்த்துகள் வினோத்.. கண்டிப்பா பாருங்க.. பத்து நாளா நெல்லைல கேம்ப்.. நேத்துத்தானம்பா திரும்பி வந்தேன்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//தர்ஷன் said...
அட எனக்கும் இதே உணர்வுதான்
நேரமிருந்தால் இதையும் வாசித்துப் பாருங்கள் படம் நிச்சயம் ஆதரிக்கப் பட வேண்டியதுதான் //

ரைட்டு நண்பா.. கண்டிப்பா படிக்கிறேன்

//குசும்பன் said...
தெரியா தனமா உங்க விமர்சனத்தை படிச்சிட்டேன்:(இப்படியா கதையை அப்படியே சொல்லுவீங்க, அட்லீஸ்ட் மேல ஒரு டிஸ்கியாவது போட்டு இருக்கலாம். பாதியோட நிறுத்திட்டேன்:(//

தப்புத்தான் தலைவரே.. கொஞ்சம் ஆர்வக்கோளாறு..முழுக்கதையையும் சொல்லி இருக்கக் கூடாது..

//வானம்பாடிகள் said...
:))//

ரைட்டு பாலா சார்..:-))

//இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! நியாயமான விமர்சணம். அருமை.//

நன்றிங்க நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
குசும்பன், அதெல்லாத்தையும் அப்டியே தாண்டி வரத் தெரியலையா? என்னங்க நீங்க!!//

அவ்வவ்வ்வ்வ்.. ஒருத்தன் ஒன்றரை மணி நேரம் உக்கார்ந்து எழுதினா.. அதை அப்படியே தாண்டி வரணுமா? ஐயா.. இது நியாயமா?

//நேசன்..., said...
நம்மூர்ல என்ன ரிசல்ட் சகா?.......எந்தத் தியேட்டர்லப் போட்ருக்காய்ங்கே!//

செகண்ட் ஹாப் கொஞ்சம் ட்ரிம் பண்ணனும் தல.. படம் ஓடும்.. ஓடணும்.. மதுரைல மாணிக்க விநாயகர், ஜாஸ் (சுந்தரம்), தங்கரீகல், அபிராமில போட்டிருக்காங்க

//ஜெட்லி said...
நான் இந்த காட்சியை மிகவும் ரசித்தேன் அண்ணே..//

அது..:-)))

//அண்ணாமலையான் said...
உங்க விமர்சனத்திற்கு நன்றி...//

நன்றி நண்பா

தருமி said...

//ஒருத்தன் ஒன்றரை மணி நேரம் உக்கார்ந்து எழுதினா.. அதை அப்படியே தாண்டி வரணுமா?//

இப்படி எழுதினா அப்படித்தான்.

இன்னொரு பதிவிலும் இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளேன்.

வேணாங்க இது. விமர்சனம் எழுதுங்க - கதைச் சுருக்கம் வேணம். படம் பார்க்கிற த்ரில்லை உடைச்சிடுறீங்களே!
:(

கார்த்திகைப் பாண்டியன் said...

// ||| Romeo ||| said...
பின்பாதி மிக நீளமாக இருக்கிறது என்பது தான் மைனஸ் , கலை இயக்குனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. விமர்சனம் அருமை//

ஆமாங்க.. ஆடை வடிவமைப்பு பத்தி சொல்ல மறந்துட்டேன்.. நன்றி..

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல விமர்சனம். நன்றி//

நன்றிங்க..

//பிள்ளையாண்டான் said...
32 கோடியை கொட்டி, 3 வருஷம் படம் எடுத்ததுக்கு, இப்படி ஆளாளுக்கு மொத்த கதையும் போட்டிருக்கீகளே! இது உங்களுக்கே அடுக்குமா?விமர்சனம் பண்ணுங்க! ஆனா மொத்த கதையும் சொல்லாதீங்க!//

எப்பவும் சொல்ல மாட்டேன் நண்பா.. ஆனா இந்தப் படம் என்னை அந்தளவுக்கு பாதிச்சு இருக்கு.. எல்லார்கிட்டயும் சொல்லனும்னு ஆர்வம்.. அதான் .. திருத்திக்கிறேன்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
இப்படி எழுதினா அப்படித்தான். இன்னொரு பதிவிலும் இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளேன். வேணாங்க இது. விமர்சனம் எழுதுங்க - கதைச் சுருக்கம் வேணம். படம் பார்க்கிற த்ரில்லை உடைச்சிடுறீங்களே//

ஹ்ம்ம்ம்.. ஒத்துக்கிறேன்.. மறுமுறை நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா..:-)))

Anonymous said...

குசும்பனை வரிக்கு வரி வழிமொழிகிறேன். கொஞ்சம் இலை மறை காய் மறையா விமர்சனம் எழுதியிருக்கலாம். எல்லோருக்கும் முன்னாடி விமர்சனம் எழுதணும்கிற அவசரத்துல எழுதுன மாதிரி இருக்குது.

முட்டை இடுற கோழிக்குதான் பிட்டி வலிக்கும். ஆம்லேட் சாப்பிடுற ஆளு ஹாய்யா சாப்பிட்டுட்டு போயிடலாம்.

32 கோடி,3 வருஷ உழைப்பு எல்லாத்தையும் நக்கலா எழுதியிருப்பது கொடுமை.

//முதலில் செல்வராகவனுக்கு ஒரு ராயல் சல்யூட். இப்படி ஒரு கதையை யோசிப்பதற்கே ஒரு கெத்து வேண்டும். சாதித்துக் காட்டி இருக்கிறார். தமிழில் இதுவரைக்கும் இப்படி ஒரு படம் வந்தது கிடையாது என்று அடித்துச் சொல்லலாம்.//

ஸ்டார்ட்டிங் நல்லாத்தான் இருக்குது. சல்யூட் அடிக்கிறேன்னு சப்புன்னு மரண அடி அடிச்சுட்டிங்க.

//நிற்க.. //

ரொம்ப நேரம் நின்னு கால் மட்டுமல்ல எல்லாமே வலிக்குது.

//அப்படியானால் படம் சூப்பரா என்று கேட்கிறீர்களா? அங்கதான் இருக்கு சூதே..//

உங்க சூதை விடவா பெரிய சூது....

//இப்போ என்னதான் பண்ண.. //

இந்த பதிவை மேலும் பலர் படிக்கும் முன் திருத்தி விடுங்கள்.

//படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு வார்த்தையில் சொல்லு என்பவர்களுக்கு....//

தயவுசெய்து இனிமேல் தமிழ்படம் பார்க்காதீங்க.அப்படியே பார்த்தாலும் விமர்சனம் எழுதாதீங்க வாத்தியாரே..

// இது அத்தனை நல்ல படம் கிடையாது.. //

படம் பார்க்க போனீங்கன்னா அனுபவியுங்க. இதை மாதிரி ஆராய்ச்சி விமர்சனம் எழுதி அதிர்ச்சி ஆக்காதீங்க..

//ஆனாலும் வித்தியாசமான கதைக்களன் மற்றும் தமிழில் இனிமேலும் இப்படிப்பட்ட முயற்சிகள் வரவேண்டும் என்பதற்காகவே கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படம்.//

மரண அடி அடிச்சுட்டு மருந்து தடவறீங்களா...

//ஆயிரத்தில் ஒருவன் - பாதிக்கிணறு//

சன் டிவி ரொம்ப பார்க்காதீங்க...

விமர்சனப்பதிவோட விமர்சனம் பார்த்து கோபம் வருதா சார்...

வெட்டியா எழுதுற நம்ம பதிவோட விமர்சனத்தையே நம்மளால தாங்க முடியலைன்னா.... இம்புட்டு பேரோட இத்தனை பேரோட உழைப்பையும் விமர்சிக்கிற இந்த பதிவை சம்பந்தப்பட்டவங்க படிச்சாங்கன்னா எவ்வளவு கோபமும், வருத்தமும் படுவாங்க.

லாஸ்ட் பட் லீஸ்ட் : சோழ வம்சத்தை பத்தி படம் எடுத்த செல்வாவை பழிவாங்குற பாண்டிய நாட்டு ஆளு தானே நீங்க....

Anonymous said...

Over all this movie is treat to watch. Only the ending should have been positive. But still 3.20 hours went like an hour.
Lots of hard work.
Brilliant acting by Parthiban and reema.

Really every one needs to see this film.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Anonymous

ரசிச்சு எழுதி இருக்கீங்க..

//விமர்சனப்பதிவோட விமர்சனம் பார்த்து கோபம் வருதா சார்...//

கோபம் எல்லாம் இல்லேங்க.. உங்களுக்குத் தோணுறத நீங்க சொல்லுறீங்க.. என்ன.. உங்க பேரை போட்டே எழுதி இருக்கலாம்..

ச.செந்தில்வேலன் said...

நல்ல முயற்சி போல் தெரிகிறது படம்.

crazy said...

சரியான விமர்சனம் ... இலங்கை தமிழர்களின் அவலங்களை மறைமுகமாக காட்டி இருக்கிறார் செல்வராகவன் ... படம் முடிந்த பிறகும் கண்களில் கண்ணீர் தரும் வித்தை செல்வராகவனுக்கு உண்டு..... (7 /g , காதல் கொண்டேன்) நிருபித்து விட்டார்..... பார்த்திபன் அறிமுக காட்சியில் ஒரு தாய் உணவு வாங்கும் காட்சி மெய்சிலிர்த்தது...அருமையான விமர்சனம் அண்ணனே........

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.செந்தில்வேலன் said...
நல்ல முயற்சி போல் தெரிகிறது படம்//

ஆமாம் நண்பா.. தமிழில் ஒரு புதிய முயற்சி

// crazy said...
சரியான விமர்சனம் ... இலங்கை தமிழர்களின் அவலங்களை மறைமுகமாக காட்டி இருக்கிறார் செல்வராகவன் ... படம் முடிந்த பிறகும் கண்களில் கண்ணீர் தரும் வித்தை செல்வராகவனுக்கு உண்டு..... (7 /g , காதல் கொண்டேன்) நிருபித்து விட்டார்..... பார்த்திபன் அறிமுக காட்சியில் ஒரு தாய் உணவு வாங்கும் காட்சி மெய்சிலிர்த்தது... அருமையான விமர்சனம் அண்ணனே........//

நன்றிங்க

செந்தில் நாதன் said...

எல்லாரும் சொல்ல்றதயே நானும் சொல்லறேன்.. கதைய சொல்லாதிங்க பாஸ்...அதுவும் கண்டிப்பா படத்த பாருங்க-னு சொல்றப்பவாது, கதை சொல்லாதிங்க..மொக்க படம்னா வசனத்தையே எழுதுங்க...யார் வேண்டாம்னா...

சரி, இப்பவாது ஒரு முன் குறிப்பு போடுங்களேன்..ப்ளீஸ்..

கார்த்திகைப் பாண்டியன் said...

@ செந்தில் நாதன்

முதல் தடவையா படத்தோட கதைய எழுதுனதுக்கு இத்தனை கண்டனங்கள்.. ஹ்ம்ம்.. சரிங்க.. செஞ்சிடலாம்..

சொல்லரசன் said...

உங்க விமர்சனத்தில் உங்களின் அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றபட்டது போல் தெரிகிறது.எதிர்பார்ப்புடன் படம் பார்க்கபோகதீங்க கா.பா.

இனிய பொங்கல் வாழ்த்துகள்

Anonymous said...

நடுநிலையான விமர்சனம் பாண்டியன். அருமை.

ஆ.ஞானசேகரன் said...

//இப்போ என்னதான் பண்ண.. படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு வார்த்தையில் சொல்லு என்பவர்களுக்கு.. வித்தியாசமான கதைக்களன் மற்றும் தமிழில்இனிமேலும் இப்படிப்பட்ட முயற்சிகள் வரவேண்டும் என்பதற்காகவே கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படம்.//

பார்த்துடுவோம்...
பொங்கல் வாழ்த்துகள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
உங்க விமர்சனத்தில் உங்களின் அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றபட்டது போல் தெரிகிறது.எதிர்பார்ப்புடன் படம் பார்க்கபோகதீங்க கா.பா. இனிய பொங்கல் வாழ்த்துகள்//

உண்மைதான் தலைவரே.. கொஞ்சம் எதிர்பார்ப்புகளை கம்மி பண்ணிப் பழகிக்கணும்.. இல்லைனா மண்டை காயுது.. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்..

//கடையம் ஆனந்த் said...
நடுநிலையான விமர்சனம் பாண்டியன். அருமை.//

நன்றி நண்பா.. தலைப்பொங்கல் வாழ்த்துகள்.. :-))))

//ஆ.ஞானசேகரன் said...
பார்த்துடுவோம்... பொங்கல் வாழ்த்துகள் நண்பா//

வாழ்த்துகள் தலைவரே.. இப்போ உடம்புக்கு கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்னு நம்புறேன்..:-)))

" உழவன் " " Uzhavan " said...

சோழர்கால வரலாற்றை செல்வராகவன் திரித்துவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்களே நண்பா.. அதுபற்றி தங்களின் கருத்து?

EEE student-2 yr said...

"malaikkathalan" nalla irunthathu sir.ore oru request "kulanthaigal ulagam" ennacchu sir?