May 21, 2010

ஜாதகம்..!!!

"அம்மா.. ஏன் இப்படி பேசுற? என்ன சொல்றோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா?"

ஆத்திரத்தோடு கத்திய பிரபுவை அம்மா சுகுமாரி நிதானமாக நிமிர்ந்து பார்த்தாள்.

"தெரியும்டா.. நல்லா யோசிச்சுதான் சொல்றேன்.. அந்தப் பொண்ண மறந்திடு.."

"நான் எனக்கு விருப்பம்னு சொன்னப்போ நீயும் அவளைப் பார்த்திட்டு பிடிச்சு இருக்குன்னுதானே சொன்ன.. அப்புறம் ஏன் இப்படி மாத்திப் பேசுறம்மா?"

"அப்போ நான் அவளோட ஜாதகத்தைப் பார்க்கல.. ஆனா இப்போ பார்த்துட்டேன்.. உனக்கும் அவளுக்கும் பொருத்தம் இல்ல.. அவள விட்டிரு.."

"அப்படி ஜாதகத்துல என்னதான்மா பிரச்சினை?"

"ரஜ்ஜு பொருத்தம் இல்லடா.. நட்சத்திரம் பொருந்தல.. உங்களுக்கு கல்யாணம் பண்ணினா கொழந்த பொறக்காதாம்.. வம்சவிருத்தி இல்லாத கல்யாணம் எதுக்குடா.. அதனாலத்தான் சொல்றேன்.. அவ உனக்கு வேண்டாம்.. மறந்துடு.."

"ஐயோ அம்மா.. இதுக்குத்தான் இவ்ளோ பயந்தியா.."

சிரித்தபடியே தன் அருகே வந்து உட்கார்ந்த மகனைப் பார்க்க சுகுமாரிக்கு வியப்பாக இருந்தது.

"தப்பா எடுத்துக்காதம்மா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அத்தை வீட்டு விசேஷத்துக்கு விழுப்புரம் போயிருந்தீங்கள்ள.. அப்போ மீனா இங்க வந்திருந்தா.. அந்த சமயத்துல ரெண்டு பேரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு.. இப்போ உன் மருமக முழுகாம இருக்கா.."

அடுத்த இரண்டாவது வாரம் மீனா மற்றும் பிரபு கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.

இந்தக் கதையை இங்கே முடித்தால் அது ஒரு பக்கக் கதையாக குமுதத்தில் வரக்கூடும்.

முதலிரவு அறை. அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த மீனாவைத் தேற்றிக் கொண்டிருந்தான் பிரபு.

"ஏங்க உங்க அம்மாக்கிட்ட அப்படி ஒரு பொய் சொன்னீங்க?"

"என்னம்மா பண்ண சொல்ற? அம்மாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை அதிகம்னு உனக்குத் தெரியும்.. அவங்கள சரி பண்ண எனக்கு வேற வழி தெரியல.. அதனாலத்தான் நீ கர்ப்பம்னு ஒரு பொய்ய சொன்னேன்.. நம்ம சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்ட எங்க குடும்ப டாக்டரும் நமக்கு உதவ ஒத்துக்கிட்டு அதே பொய்ய அழுத்தமா சொன்னாரு.. எனக்கு நீ வேணும்மா.. உனக்காக என்னன்னாலும் செய்வேன்மா.." சொல்லும்போதே பிரபுவின் கண்கள் ஈரமாகி விட்டன.

"எனக்காக? ரொம்ப நன்றிங்க.." ஆதரவாக அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் மீனா. "ஆனா இந்த பத்து மாசத்துக்குள்ள புள்ள பொறக்கலைன்னு உங்கம்மா சந்தேகப்பட்டா?"

"அது உங்க கைலதான் இருக்கு.. கூச்சம் அது இதுன்னு சொல்லாம இப்படி பக்கத்தில வந்தீங்கன்னா, அதற்கு உண்டான முயற்சிய ஆரம்பிச்சுடலாம்.." பேசிக்கொண்டே மீனாவை அணைத்தான் பிரபு. அவள் "ச்சீ" என்று சிணுங்கியவாறே அவன் தோள்களில் சாய்ந்தாள்.

கதையை இங்கே முடித்தால் அது குடும்பக்கதையாக தேவியிலோ, குடும்பமலரிலோ ஒன்றரை பக்கத்துக்கு வரக்கூடும்.

விளக்கை அணைத்துவிட்டு மீனாவை நெருங்கினான் பிரபு. பிறகு..

இதற்கு மேல் கதை வளர்த்துக் கொண்டு போனால் அது சரோஜா தேவி புத்தகத்திலோ, மஜா மல்லிகா கதையாகவோ மாறி விடக்கூடிய அபாயம் இருப்பதால்.. இத்தோடு கதைய முடிச்சுக்கிறேன் சாமியோவ்...

23 comments:

vasu balaji said...

லொள்ளுன்னு லேபில் போடறதுக்கா அந்த கொசுறு. ஒரு நல்ல கதையைப் போயி....grrrrrrrr

ஜெய்சக்திராமன் said...

தல ... இததான் இன்னைக்கு பரிட்சை ஹால்ல உக்காந்து யோசிச்சிட்டு இருந்தீங்களா? சூப்பர்!!!

Anonymous said...

analum unga lollukku alavae illaiya ah? seri ithukku thaan ellarom sollarum mathiri ungalukku kalyanam pannanumnu sollarathu................

க.பாலாசி said...

//இப்போ உன் மருமக முழுகாம இருக்கா.."//

அட... சூப்பர் டெக்னிக்குங்க... குமுதத்துக்கான கதையே குட்.... அடுத்தது...கொஞ்சம் பெட்டர்... அடுத்தது...எல்லாத்துக்கும்மேல பெஸ்ட்....

Anonymous said...

கானா பானா இப்படியெல்லாம் கதை எழுதினாலும் வீட்டில் ஜாதகத்தை எடுப்பனான்னு சொல்ராங்களா? :)

மேவி... said...

"இதற்கு மேல் கதை வளர்த்துக் கொண்டு போனால் அது சரோஜா தேவி புத்தகத்திலோ, மஜா மல்லிகா கதையாகவோ மாறி விடக்கூடிய அபாயம் இருப்பதால்.. இத்தோடு கதைய முடிச்சுக்கிறேன் சாமியோவ்..."


சரோஜா தேவியை படித்ததே இல்லையா ???? அதுல முதல் பக்கத்திலையே மஜா விஷயங்கள் வந்து விடுமே...

மேவி... said...

"மயில் said...
கானா பானா இப்படியெல்லாம் கதை எழுதினாலும் வீட்டில் ஜாதகத்தை எடுப்பனான்னு சொல்ராங்களா? :)"



இருந்தாலும் இருக்கும் ...... கார்த்தி எதையோ எதிர்ப்பார்த்து கல்யாணம் கட்டிகாதீங்க .......கல்யாணம் என்பது சேர்ந்து வாழ்வதற்கு ..... புரிந்ததா

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
லொள்ளுன்னு லேபில் போடறதுக்கா அந்த கொசுறு. ஒரு நல்ல கதையைப் போயி....grrrrrrrr//

ரிலாக்ஸ் பாலா சார்.. வழக்கமான கதைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுல.. அதுதான் ஹி ஹி ஹி

//ஜெய்சக்திராமன் said...
தல ... இததான் இன்னைக்கு பரிட்சை ஹால்ல உக்காந்து யோசிச்சிட்டு இருந்தீங்களா? சூப்பர்!//

அடப்பாவிகளா.. காலேஜ்ல நடக்குறத எல்லாம் வெளில சொல்லப்பிடாது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
analum unga lollukku alavae illaiya ah? seri ithukku thaan ellarom sollarum mathiri ungalukku kalyanam pannanumnu sollarathu...........//

ஏய் யாருப்பா.. புதுசா ஒரு குரூப்பாத்தான் கிளம்பி இருக்கீங்க போல

//க.பாலாசி said...
அட... சூப்பர் டெக்னிக்குங்க... குமுதத்துக்கான கதையே குட்.... அடுத்தது...கொஞ்சம் பெட்டர்... அடுத்தது...எல்லாத்துக்கும்மேல பெஸ்ட்....//

எல்லாம் உங்கள மாதிரி யூத் யூஸ் பண்றதுக்கான ஐடியா நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//மயில் said...
கானா பானா இப்படியெல்லாம் கதை எழுதினாலும் வீட்டில் ஜாதகத்தை எடுப்பனான்னு சொல்ராங்களா? :)//

அவ்வ்வ்வ்வ்.. எங்க.. தலைகீழா நின்னாலும் கண்டுக்க மாட்டேங்குறாங்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
சரோஜா தேவியை படித்ததே இல்லையா ???? அதுல முதல் பக்கத்திலையே மஜா விஷயங்கள் வந்து விடுமே...//

சொல்லக் கேள்வி.. படிச்சது கிடையாதுன்னு சொன்னா நம்புவீங்களா மேவீ?

//டம்பி மேவீ said...
இருந்தாலும் இருக்கும் ...... கார்த்தி எதையோ எதிர்ப்பார்த்து கல்யாணம் கட்டிகாதீங்க .......கல்யாணம் என்பது சேர்ந்து வாழ்வதற்கு ..... புரிந்ததா//

யோவ்.. எனக்கு புது பட்டமே கொடுத்துருவ போல.. நான் நல்லவனப்பா..

பனித்துளி சங்கர் said...

///////////"ரஜ்ஜு பொருத்தம் இல்லடா.. நட்சத்திரம் பொருந்தல.. உங்களுக்கு கல்யாணம் பண்ணினா கொழந்த பொறக்காதாம்.. வம்சவிருத்தி இல்லாத கல்யாணம் எதுக்குடா.. அதனாலத்தான் சொல்றேன்.. அவ உனக்கு வேண்டாம்.. மறந்துடு.."
//////////////

இன்னும் கண்கள் மூடிய நிலையில் பலரின் பயணங்கள் தொடரத்தான் செய்கிறது .

நசரேயன் said...

சகல பத்திரிக்கைக்கும் கதை எழுதும் எங்க வாத்தியார் வாழ்க

மேவி... said...

"ஜெய்சக்திராமன் said...
தல ... இததான் இன்னைக்கு பரிட்சை ஹால்ல உக்காந்து யோசிச்சிட்டு இருந்தீங்களா? சூப்பர்!!!"



பாஸ் இதை பற்றி இன்னும் கொஞ்சம் நீங்க சொன்ன ...ஓர் இலக்கிய விவாதம் செய்ய நல்ல இருக்கும்

அத்திரி said...

ஏகப்பட்ட வழிகள்ல உங்க கல்யாண ஆசைய சொல்லிட்டீங்க...ஆனா யாரும் புரிஞ்சிக்கலையே..அய்யகோ........டக்ளஸ் ராஜு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

அத்திரி said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இன்னும் கண்கள் மூடிய நிலையில் பலரின் பயணங்கள் தொடரத்தான் செய்கிறது .//

ha ha repeattttu

அத்திரி said...

இந்த கதையில!!!!!!??? வர்ற மாதிரி ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களா புரொபசர்??

Anonymous said...

yaarukavathu karthi veedu therincha avunga ammakitta sollunga.......pls

Anonymous said...

yaarukavathu karthi veedu therincha avunga ammakitta sollunga.......pls

Rajesh Ramraj said...

டேய், இந்த கதைக்கும் உன்னகும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி தோணுதே ??? some thing wrong....

Asir said...

Good One..

COngrats

Unknown said...

மதுரைக்கு வரும்போது முடிஞ்சா உங்கம்மாவைப் பாத்து காதுல போட்டுட்டுப் போறேன் கார்த்தி.

kunthavai said...

ரசித்தேன். வித்தியாசமான கற்பனை கார்த்திக், வாழ்த்துக்கள்.