May 31, 2010

கற்றது களவு - திரைப்பார்வை..!!!

ஏம்ப்பா... இந்த டக்ளஸ் பய கூட சேர்ந்து "கற்றது களவு" படம் பார்க்க போனியே? யாரு படம்? எப்படிப்பா இருந்துச்சு?

சும்மா பந்தயக்குதிரை கணக்கா வேகமா ஆரம்பிக்கிற படம் கொஞ்சம் கொஞ்சமா நொண்டியடிக்க ஆரம்பிச்சு, வெற்றிக்கோட்டை தொடுறதுக்கு முன்னாடியே சொங்கிப் போய் விழுந்தா எப்படி இருக்கும்? "கற்றது களவு" பார்த்தப்போ அப்படித்தான் இருந்துச்சு."அலிபாபா"வுக்குப் பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தனோட தம்பி கிருஷ்ணா ஹீரோவா நடிச்சு இருக்கிற படம். அவங்கப்பா சேகர்தான் தயாரிப்பாளர். (வேற யாரும் எடுக்க மாட்டேனுட்டானுங்களோ?)



அது சரி.. படத்தோட கதை இன்னாபா?

ஒரு ஊருல.. சரி சரி... ஹீரோ கிருஷ்ணா மாணவர்களுக்கான ஒரு வங்கி பத்தின நல்ல திட்டத்தோட அமைச்சரை சந்திக்கிறாரு. ஆனா அவர ஏமாத்தி எல்லாப் பேரையும் அமைச்சரு தட்டிக்கிட்டு போயிடுறாரு. தன்ன ஏமாத்துன இந்த சமுதாயத்த தான் ஏமாத்தி சம்பாதிக்க முடிவு பண்றாரு ஹீரோ. அவருக்கு துணையா நாயகி விஜயலட்சுமி வராங்க. சின்ன சின்ன தப்புகளத் தாண்டி, ஒரு தாட்டிக்கு, இவங்க கைல மத்திய அமைச்சர் பத்தின ஒரு வீடியோ கிடைக்குது. அதனால மத்திய அமைச்சரு இவங்கள கொல்ல ஆளு அனுப்புறாரு. நல்ல போலீசான ஒருத்தர் இவங்கள காப்பாத்துறாரு. வில்லன் கிட்ட இருந்து தப்பிச்சு கடைசில இவங்க திருந்தி வந்தாங்களான்னு சொல்றதுதான்ப்பா படத்தோட கதை...



இந்த நடிக மக்கள் எல்லாம் எப்புடி நடிச்சு இருக்காக?

கிருஷ்ணா நல்லா நடிச்சு இருக்குறாப்ல.. ஆளும் பாக்குறதுக்கு ஆரம்ப கால எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்குறாப்டி.. டான்ஸ் எல்லாம் எதோ தினுசு தினுசா பறந்து பறந்து ஆடுறாரு.. பேசுறதுதான் மணிரத்னம் படம் மாதிரி புரியாமப் பேசுறாரு.. விசயலட்சுமி தான் கதாநாயகி.. குச்சி கணக்கா இருக்கு.. என்னமோ நடிக்குது.. பெரிசா வேலை ஒண்ணும் இல்ல.. நல்ல போலீசா கெத்தா நடிச்சு இருக்கிறது நம்ம சம்பத் தான்.. மனுஷன் மெரட்டி இருக்காரு.. டான்ஸ் மாஸ்டர் கல்யாண்தான் படத்தோட காமெடி பீஸ்.. ஏதோ பெரிசா பண்ணப்போற மாதிரி பில்டப் கொடுத்து கடைசில சப்பையா போறாரு.. கஞ்சா கருப்பு லொள்ளு சபா டீமோட வந்து மொக்க போட்டு மனுஷன கொலையாக் கொல்றாரு.. எதுக்குன்னே தெரியாம முமைத்கான் ஒரு பாட்டுக்கு ஆடுது... அது போக சந்தானபாரதி, மறைந்த நடிகர் நம்ம ஹனீபா, சின்னி ஜெயந்த் எல்லாம் வந்து போறாங்கப்பா..


மீஜிக், போட்டோ புடிச்சதெல்லாம் நல்லா இருக்கா?

தலைமகன்னு சரத்தோட நூறாவது படத்துக்கு இசை அமைச்ச புண்ணியவான் பால்.ஜே தான் இந்தப் படத்துக்கும்.. இன்னுமா இந்த மனுஷன ஊரு நம்புது? தம்மு அடிக்காதவன் கூட பாட்டு வந்தா வெளில தலைதெறிக்க ஓடுறான்.. ஒரு பாட்ட கூட வெளங்கல.. அதுலயும் "கற்றது களவு"ன்னு ஒரு ராப் பாட்டு வேற.. தமிழ்தானான்னு சந்தேகம்.. முடியலைடா சாமி.. பின்னணி இசை போட்டிருக்கிற சபேஷ்-முரளி கொஞ்சம் நல்லா பண்ணி இருக்காங்க.. இந்தப் படத்துக்கு எல்லாம் நீரவ் ஷா தன்னோட உழைப்பை வீணடிக்கனுமா? மொதப்பாதி கொஞ்ச நேரத்துக்கு அவரும் கேமராவத் தூக்கிட்டு லொங்கு லொங்குன்னு சுத்துறாரு.. பார்ஸ்ட் சீன்.. ஒரு சேஸ்.. அட்டகாசம்.. அதுக்கு அப்புறம் அவரும் ஓஞ்சு போயி அக்கடான்னு உக்கார்ந்துட்டார் போல.. ரெண்டாம் பாதில பாதிபடத்துக்கு மேல வெறும் இருட்டுத்தான்..



கடைசியா இயக்கத்த பத்தி சொல்லுப்பா?

பாலாஜி தேவி பிரசாத்... இவருதான்ப்பா இயக்குனரு.. இவரோட பெரிய கொழப்பமே.. இத சீரியஸ் த்ரில்லர் படமா எடுக்குறதா இல்ல காமெடி படமா எடுக்குறதான்னுதான் நினைக்கிறேன்.. ஹீரோவும் ஹீரோயினியும் கல்யாணம் பண்ணிக்கிற மொத செஸ்ல எல்லோரும் மிருந்து உக்காருறோம்.. அவங்களக் காப்பாத்துனது ஒரு போலிஸ் ஆபிசரான்னு ஆச்சரியப்படுற நேரத்துல.. அடுத்து வர காட்சி எல்லாம் புஸ்ஸ்ஸ்... அதுவும் ஹீரோ எப்படி எல்லோரையும் ஏமாத்தி சம்பாதிக்கிறாருன்னு காட்டுறாங்க பாரு.. கவுண்டமணி மாதிரி நம்ம காதுல வாழைப்பூவையே கூடை கூடையா சொருகுறாங்க.. அது சரி.. காசு குடுத்து போற நம்மள சொல்லணும்.. ரெண்டாம் பாதில போடுறாரு பாரு ஒரு பிளேடு.. போகுது போகுது போய்க்கிட்டே இருக்கு ஜில்லட்டு கணக்கா.. அம்மாம்பெரிசு பிளேடு.. நல்ல கதைக்கான பிளாட்ட திரைக்கதைல கலக்குறேன் மகனேன்னு மொத்தமா காலி பண்ணிட்டாரு.. அம்புட்டுத்தா...

படத்தப் பத்தி ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தைல சொல்லு பார்ப்போம்..

கற்றது களவு - கருமம் பிடிச்ச எழவு (நன்றி - டக்ளஸ்)

14 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யகோ.. என்ன இது கொடுமை? பதிவு போட்டு ரெண்டு மணி நேரமாகியும் ஒரு பின்னூட்டம் கூட இல்லையா? சரி.. ”நமக்கு நாமே” திட்டம் வாழ்க..

(நன்றி - அண்ணன் மணிஜி)

ஜெட்லி... said...

நன்றி...போலாம்னு நினைச்சேன்...
சரி நான் பிரின்ஸ் ஆப் பெர்சியாக்கு கிளம்புறேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

தம்பி ஜெட்லி.. நீங்களாவது அண்ணன மதிச்சு பின்னூட்டம் போட்டீங்களே.. நல்லா இருங்க..:-)))

M.G.ரவிக்குமார்™..., said...

இது யாரு எழுதுனது?.....நீங்களா? டக்ளஸா?...

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசன்..., said...
இது யாரு எழுதுனது?.....நீங்களா? டக்ளஸா?...//
ஐய்யையொ..சத்தியமா நான் எழுதுனது தான் நண்பா.. கடைசியா இருக்குற படத்தப் பத்தின பன்ச் மட்டும் நம்ம டக்கு சொன்னது..

மேவி... said...

"விசயலட்சுமி தான் கதாநாயகி.. குச்சி கணக்கா இருக்கு.. "

இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ...உங்களுக்கு அழகை ரசிக்க தெரியல .....செம பிகர் ங்க அவங்க .....படம் பார்க்கல. முமைத் கான் க்காக ஒரு தடவை பார்க்கலாம் ன்னு இருக்கேன் (அவங்க இருந்தால் தானே கந்தசாமி ஏதோ கொஞ்சம் ஓடுச்சு)


பஞ்ச் நல்ல இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

@டம்பி மேவீ

எதிர்ப்பு வேறயா? போப்பா.. போயி புள்ள குட்டிங்கள படிக்க வைப்பா..

பனித்துளி சங்கர் said...

படம் வெளியாகிவிட்டதா ?

கார்த்திகைப் பாண்டியன் said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...படம் வெளியாகிவிட்டதா ?//

என்னது.. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா?

Anonymous said...

காசு கொடுத்தா ? ஓசி டிக்கெட்டா? :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// மயில் said...
காசு கொடுத்தா ? ஓசி டிக்கெட்டா? :)))//

காசு கொடுத்து டிக்கட் வாங்கிய அண்ணன் டக்ளஸ்.. வாழ்க வாழ்க

Anonymous said...

எல்லா படத்தையும் இப்புடி கமெண்ட் அடிகுரிங்கலே ..... நீங்க ஒரு படம் தான் டைரக்ட் பண்ணி தான் காட்டுங்களேன் நாங்களும் தான் பாக்குறோம் எப்புடி இருக்குனு.... ( பின் குறிப்பு : இது என் சொந்த கருது அல்ல ஒட்டு மொத்த கொங்கு மக்கள் கருத்து)

Anonymous said...

எல்லா படத்தையும் இப்புடி கமெண்ட் அடிகுரிங்கலே ..... நீங்க ஒரு படம் தான் டைரக்ட் பண்ணி தான் காட்டுங்களேன் நாங்களும் தான் பாக்குறோம் எப்புடி இருக்குனு.... ( பின் குறிப்பு : இது என் சொந்த கருது அல்ல ஒட்டு மொத்த கொங்கு eie க்கள் கருத்து)

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
எல்லா படத்தையும் இப்புடி கமெண்ட் அடிகுரிங்கலே ..... நீங்க ஒரு படம் தான் டைரக்ட் பண்ணி தான் காட்டுங்களேன் நாங்களும் தான் பாக்குறோம் எப்புடி இருக்குனு.... ( பின் குறிப்பு : இது என் சொந்த கருது அல்ல ஒட்டு மொத்த கொங்கு eie க்கள் கருத்து)//

நம்மள கால வாருரதுல உங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு சந்தோஷம்.. என்னடா?