June 29, 2010

உக்கார்ந்து யோசிச்சது(29-6-10)..!!!

உங்களோட பைக்க ஜம்முனு ஓட்டிக்கிட்டு, நீங்க பாட்டுக்கு ரோட்டில ஜாலியா போய்க்கிட்டு இருக்கீங்கன்னு வச்சுக்கோங்க.. திடீர்னு உங்க பக்கத்துல வந்த ஒருத்தன், உங்களுக்கு யாருன்னே தெரியாத ஆளு.. "ஏண்டா டேய்.. உனக்கெல்லாம் அறிவே கிடையாதா"ன்னு சம்பந்தமே இல்லாம திட்டினா எப்படி இருக்கும்? ரெண்டு நாளைக்கு முன்னாடி இதேதான் எனக்கு நடந்துச்சு. சாயங்கால நேரம். கல்லூரி முடிஞ்சு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேன். மேலமாசி வீதி. செமையான டிராபிக். சர்க்கஸ் மாதிரி வண்டி ஓட்டிக்கிட்டு இருக்குறப்ப திடீர்னு எனக்கு இடது பக்கத்துல இருந்து அந்தக் குரல் வந்தது.

"நீயெல்லாம் சோத்துல உப்பு போட்டுத்தானடா தின்ற?"

எவன்டா அவன்னு திரும்பிப் பார்த்தா.. புல்லட்டுல கெடா மாடு மாதிரி ஒருத்தன். சட்ட பேண்ட் எல்லாம் போட்டு நல்லா டீசண்டா இருக்கான். எனக்கு ஒரே குழப்பம். நமக்கு இவன யாருன்னே தெரியலையே.. எதுக்கு நம்மளத் திட்டுறான்? அவன் மறுபடி திட்டுனான்..

"நான் சொல்ல சொல்ல கேக்காம திரும்பத் திரும்ப பேசாதடா.. அறிவு கெட்ட நாயே.. வகுந்துபுடுவேன்.."

எனக்கு வவுத்துல புளியைக் கரைக்குது.. யேண்டா.. நான் எங்கடா பேசுனேன்? அப்போத்தான் திடீர்னு அது தோணுச்சு. ஒருவேளை அப்படி இருக்குமோ? மெதுவா வண்டிய சுலோ பண்ணி அவனுக்கு இடது பக்கம் வந்தா.. நான் எதிர்பார்த்த மாதிரியே.. அவன் காதுல ப்ளூடூத் இயர்போன். அட நாசமாப் போறவனே.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா? இந்த மொபைல வச்சுக்கிட்டு இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலடாயப்பா..

***************

ராவணன் வெளியான தினம். மதியம் மூன்று மணி போல "indiaglitz" இணையதளத்தில் படத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாகி இருந்தது. எப்போதும் ஈத்தரைப் படத்தைக் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்பவர்கள், ஈவு இரக்கமே இல்லாமல் இந்தப் படத்தை அடித்துக் கிழித்துக் காயப் போட்டிருந்தார்கள். திரை அரங்குக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டாம், வீட்டில் டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதி விட்டு "பத்து தலை கருமாந்திரம்" (Ten headed downer) என்கிற அர்த்தத்தில் பன்ச் வேறு கொடுத்து இருந்தார்கள். ஆனால் அன்றைக்கு இரவே அந்த விமர்சனம் மாற்றப்பட்டது. படத்தை பற்றிய பல நெகட்டிவான விஷயங்கள் மாயமாக மறைந்து போயின. கடைசி வரிகள் மாற்றப்பட்டு, பன்ச்சும் "பத்து வித குணாதிசயங்கள்" (Ten headed personna) என்கிற ரீதியில் மாற்றப்பட்டது. எப்படி இது சாத்தியம்? பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ?

***************

ஞாயிற்றுக்கிழமை நண்பரை பார்ப்பதற்காக அவருடைய நெட் சென்டருக்குப் போயிருந்தேன். வாசலில் இரண்டு பெண் பிள்ளைகள். அதிகபட்சம் போனால் ஏழாவது இல்லை எட்டாவது படித்துக் கொண்டிருக்கலாம். பதட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இங்க பாருடி.. அவனுக்காகத்தான் வீட்டுல பொய் சொல்லிட்டு வந்தேன்.. அவன் வரலைன்னா எப்படி.. கண்டிப்பா வரச் சொல்லுடி.."

"சரிடி.. சொல்றேன்.. பொறுமையா இரு.."

அடுத்தவள் மொபைலை எடுத்து பேசத் தொடங்கினாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மண்டை காய்ந்து போனது. இந்த சின்ன வயசில் இப்படியா? இவர்கள் பெற்றோர்கள் இவர்கள் மேல் எத்தனை நம்பிக்கை வைத்து இருப்பார்கள்? சின்னப் பிள்ளைகள் இப்படி சீரழிவதற்கு யாரைக் குற்றம் சொல்வது? ஒண்ணுமே புரியல போங்க..

***************

சம்பத்தின் "இடைவெளி" நாவலை அனுப்பித் தந்த நண்பர்கள் சென்ஷி, அகநாழிகை பொன்.வாசுதேவன் மற்றும் யாத்ரா ஆகியோருக்கு நன்றி. போனசாக நண்பர் யாத்ரா நவீன விருட்சத்தில் வெளியாகி இருந்த "பிரிவு" என்கிற சம்பத்தின் சிறுகதைக்கான லிங்கையும் அனுப்பி இருந்தார். கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்..

***************

கவுதம் சசிதரன் - எனது பிரியத்துக்கு உரிய மாணவன். கொங்கு கல்லூரியில் என்னிடம் பயின்றவன். தற்போது மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் பொறுப்புள்ள பணியில் இருக்கிறான். எழுதும் மற்றும் படிக்கும் ஆர்வம் நிறையவே உண்டு. வெகு சமீபமாக தன்னுடைய எண்ணங்களை ஆங்கிலத்தில் "gauss' boulevard" என்கிற தளத்தில் எழுதி வருகிறான். கோடைக்கால மழையை அவன் அழகாக விவரிக்கும் இந்த இடுகையை வாசித்துப் பாருங்கள்.. நாமும் மழையில் நனைந்த உணர்வு ஏற்படுகிறது..

***************

அழிந்து வரும் அரிய கலையான "தோல் பாவைக் கூத்து" பற்றிய இந்த இடுகை கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று..

***************

காதல் சொல்ல வந்தேன் - பூபதிபாண்டியன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம். இசையில் யுவன் பேக் டூ பார்ம். பாடல்கள் எல்லாமே பிஸ்து கிளப்புகின்றன. "ஓ ஷலா " காதல் கிடைக்கப்பெற்றவன் சந்தோஷமாகப் பாடுவதாக வரும் வழக்கமான யுவன் பாடல். உதித் நாராயண் பாடும் "ஒரு வானவில்லின்" பாட்டு, தன காதலியின் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததை காதலன் கொண்டாடுவதைப் போல அமைந்திருக்கிறது. "என்ன என்ன ஆகிறேன்" விஜய் யேசுதாசின் குரலில் அருமையான மெலடி. பிட்சா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நடுவே சுள்ளென்று வெங்காயத்தைக் கடித்தது போல கிராமத்து பாட்டாக வருகிறது "சாமி வருகுது" பாடல். கடைசியாக வரும் "அன்புள்ள சந்தியா" பாடல்தான் பிக் ஆப் தி ஆல்பம். உள்ளம் கேட்குமே படத்தின் ஓ மனமே பாட்டு ஞாபகம் வந்தாலும், கார்த்திக்கின் மயக்கும் குரலில் ரொம்பவே அருமையான மென்சோகப் பாடல். மொத்தத்தில் ஒரு ஜிலீர் காதல் ஆல்பம்.

(ஹி ஹி ஹி.. ஒரு ஆனந்த விகடன் ஸ்டைல் முயற்சி..)

***************

சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்..

--> டெஸ்ட்க்கும்(Test ), குயிஸ்சுக்கும் (Quiz) என்ன வித்தியாசம்?

டெஸ்ட்ல விடை தெரிஞ்சா பாஸ்..(Pass)

குயிஸ்ல விடை தெரியலைனா பாஸ்.. (Pass)

--> அக்கா பிரண்ட அக்காவா நினைக்கலாம்.. தங்கச்சி பிரண்ட தங்கச்சியா நினைக்கலாம்.. அதுக்காக பொண்டாட்டி பிரண்ட பொண்டாட்டிய நினக்க முடியுமா?

--> ஜனவரி 14க்கும் பிப்ரவரி 14க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14

அதே பொண்ணு ஒரு பையனுக்கு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

34 comments:

முரளிகண்ணன் said...

உட்கார்ந்து படிக்க வைக்குது

கார்த்திகைப் பாண்டியன் said...

@ முரளிகண்ணன்

நன்றிண்ணே.. மறுபடி தீவிரமா களத்துல இறங்கிட்டீங்க போல? வருக வருக..

Joe said...

//
இந்த சின்ன வயசில் இப்படியா? இவர்கள் பெற்றோர்கள் இவர்கள் மேல் எத்தனை நம்பிக்கை வைத்து இருப்பார்கள்? சின்னப் பிள்ளைகள் இப்படி சீரழிவதற்கு யாரைக் குற்றம் சொல்வது? ஒண்ணுமே புரியல போங்க..
//
சிறுசுகள் ரொம்ப வேகமாத் தான் போயிட்டு இருக்காங்க, தொழில் நுட்ப உபகரணங்கள் உதவியுடன்!
ஒரு கட்டத்தில் படிப்பு, வேலைன்னு தீவிரமாயிடுவாங்க, விடுங்க!

வால்பையன் said...

//இந்த சின்ன வயசில் இப்படியா? இவர்கள் பெற்றோர்கள் இவர்கள் மேல் எத்தனை நம்பிக்கை வைத்து இருப்பார்கள்? சின்னப் பிள்ளைகள் இப்படி சீரழிவதற்கு யாரைக் குற்றம் சொல்வது? ஒண்ணுமே புரியல போங்க..//

சின்ன வயசு, பெரிய வயசெல்லாம் இதுக்கு கிடையாது, பாதிப்பில்லாமல் பிரச்சனையை சமாளிக்க கூடிய மெச்சூரிடி இருக்கான்னு தான் பார்க்கனும்! நட்பாக இருப்பது தவறில்லை தான், உடல் ரீதியான தொடர்பு அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படுத்தலாம் என சொல்ல வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கடமை, அதுக்கு தான் செக்ஸ் கல்வி பள்ளிகளில் ஆரம்பிக்கனும்னு குரல் கொடுக்குறாங்க!

13 வயசோ, 14 வயசோ அந்த பெண் வயசுக்கு வந்துட்டாலே அவளுக்கு எதிர்பால் கவர்ச்சியும், சில எல்லை மீறுதல்களை தொட்டு பார்க்கும் ஆவலும் வந்துரும், 21 வயதில் திருமணம் என்பது உடல் மற்றும் மனரீதியாக முழு பக்குவம் அடைந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான், ஆனா அப்போதும் அவர்கள் அதில் முழுமையடைவதில்லை, காரணம் செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லை!

அதைவிடுங்க, நீங்க இதை எழுதியதற்கு உளவியல் ரீதியான காரணம் சொல்லட்டுமா!?




உங்களுக்கு பொறாமை!
:) :) :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு கார்த்திக்.. எல்லாமே சிந்திக்கவேண்டியவை.

Anbu said...

நல்லா இருக்கு அண்ணே...

காதல் சொல்ல வந்தேன் போலவே..பாணா காத்தாடியிலும் கார்த்திக் ஒரு பாட்டு பாடி இருக்கிறார்...கேட்டுப்பாருங்கள் கண்டிப்பாக "பைத்தியம் பிடிக்கும்"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

Ganesan said...

புளூ டூத் சென்னையில் சர்வசாதாரணம்.

ராவணன் , பத்து செஞ்சா என்ன, படம் தான் புட்டுகிச்சே,
எதோ சென்னையில ஒட்டிகிட்றாய்ங்க..

ஜோதிஜி said...

உங்களுக்கு பொறாமை!
:) :) :)

அருண் நீங்க நல்லவரா கெட்டவரா?

(தொவச்சு காயப் போட்டுடாதீங்க)

ரெண்டாம் வகுப்பு போற புள்ள கையில கட்டிக்க கடிகாரம் கேட்குது. ஏன்னு கேட்டா ரெண்டுமூணு புள்ளைங்க வகுப்ல கட்டிக்கிட்டி வார்றாங்கலாம்.

இருக்ற வேலையெல்லாம் விட்டுட்டு பொறுமையா கடிகாரம் ஏன்? எப்ப கட்டனும்ன்னு பொறுமையா சொல்லிக் கொடுத்து சமாளிச்சு அனுப்புன்னா மறுநாள் வேறொரு வெடிகுண்டு வீட்டுக்கு வருது.

புள்ள போயி சொன்ன போது கடிகாரம் கட்டியிருந்த புள்ள சொல்லுது?

எங்கப்பா எது கேட்டாலும் வாங்கிக்கொடுப்பாரு. அதே மாதிரி உங்கப்பாவையும் மாத்திரு

வயசு என்ன? ஏழு?

இப்ப ஈர்ப்பு என்பது கெட்டது மட்டுமே?
செல்லுல தொங்கிட்டுருக்க பொண்ணு அதில படமா மாறுன பெறவு மத்தவங்களுக்கு பாடமா மாறும்.

விடுங்க பாண்டியன்.

வால்பையன் said...

@ ஜோதி ஜி!

அந்த குழந்தைகளுக்கு மணி பார்க்கக்கூட தெரியாது, அவர்களுக்கு கடிகாரம் ஒரு விளையாட்டு பொருள், விளையாட்டு பருவ குழந்தைகளை விளையாட விடுங்கள்! நான் அவர்களை இங்கே இழுக்கவில்லையே!

ஜோதிஜி said...

இல்ல அருண்.

நானும் அப்டித்தான் குழந்தை மனம், குழந்தைகள் உலகம்ன்னு பல வித கற்பனைகளில் இருந்தேன். குழந்தைகளிடம் முழுமையான சுதந்திரம் கொடுத்து அவர்களை பேச வைக்கும் போது பள்ளியில் மற்ற குழந்தைகளின் குணாசியங்கள், அந்த குழந்தைகளின் குடும்பங்களில் நடந்த விசயங்களை பெரிய மனிதர்கள் போல் பகிர்ந்த கொண்டதையெல்லாம் வீட்டில் இரவு நேரங்களில் பேச விட்டு வேடிக்கைப் பார்க்கும் போது எனக்கே சற்று பயமாக இருக்கிறது.

நாற்பது வயதில் நெகடிவ் பார்வை சமூகத்தின் மேல் வந்ததை விட ஏழு எட்டு வயதிற்குள் முன்னேற என்ன வேண்டிமானாலும் செய்யலாம் என்பதாக அவர்கள் மனதில் விதைக்கப்படுவதற்கு யார் காரணம்?

எனக்கு தினந்தோறும முக்கிய வேலையே குழந்தைகள் மனதில் உருவாகி உள்ள சாக்கடையை நீக்குவது தான்.

பேசப் பேச புதுசு புதுசா ஒவ்வொன்னா மொளச்சுக்கிட்டே இருக்கு.

என்ன செய்யச் சொல்றீங்க?

க.பாலாசி said...

வால்பையன் said...
//உங்களுக்கு பொறாமை!
:) :) :) //

எய்யா... இவ்ளோநேரம் நல்லாதானய்யா போயிட்டிருந்துச்சு...அவ்வ்வ்வ்.....

யோசிச்சிகிட்டு உட்காந்திருக்கேன்...

sudharsan said...

நன்றி பாண்டியரே நல்ல பகிர்வு. "பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு...! படிக்க படிக்க சுவாரசியம்...! படித்துவிடிர்களா MKP blog " இது எப்படி இருக்கு?

நேசமித்ரன் said...

கா.பா.

ஆ.வி ஸ்டைல் ரசித்தேன் :)

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு கா.பா

உங்கள் மாணவருக்கு வாழ்த்துகள்.

சம்பத்தின் சிறுகதையையும் தோல்பாவை கூத்து பற்றிய பதிவின் சுட்டிக்கும் நன்றி நண்பரே.

Jackiesekar said...

நல்ல பகிர்வு கார்த்தி...

வால்பையன் said...

//எனக்கு தினந்தோறும முக்கிய வேலையே குழந்தைகள் மனதில் உருவாகி உள்ள சாக்கடையை நீக்குவது தான்.//

அதிகபடியான பெர்ஃபெக்‌ஷன் மனப்பான்மை மனநோய்க்கு ஆட்படுத்தலாம் என்பது உளவியல் கருத்து!

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அதெல்லாம் பெரிவங்க சமாச்சாரம் என்று மழுப்புவதால் அவர்கள் வேறு எங்கும் கற்று கொள்ள மாட்டார்கள் என அர்த்தம் ஆகிவிடாது, அவர்கள் ஆர்வம் அதிகமாகி எங்கேயேனும் கற்று கொள்வார்கள்!, பின் சந்தர்ப்பம் வாய்க்கும் நேரத்தில் உங்களிடமே போட்டு தாக்கி எனக்கும் தெரியுமில்ல என்பார்கள், அதை தான் நீங்கள் பெரியமனுஷ தனம் என்கிறீர்கள்!

அவர்கள் எதை வேண்டுமானாலும் கற்று கொள்ளட்டும், அது என்ன என்று தெரிந்து கொள்வதில் மட்டும் கவனம் இருந்தால் சிக்கலான நேரத்தில் உங்களது அனுபவமும், முதிர்ச்சியும் பிரச்சனையை தீர்க்க உதவும், இதை செய்யாதே, அதை செய்யாதே என்றால் அவர்கள் செய்து விட்டு உங்களிடம் மறைப்பார்கள்!

always be friendship with others, whoever!

வால்பையன் said...

@ பாலாஜி!

மனித மனநிலை அது தானே!

உண்மைய சொல்லுங்க, உங்ககூட வண்டியில வரும் போது நான் என் கேர்ள்ஃப்ரெண்டுகிட்ட பேசிகிட்டு வந்தது உங்களக்கு பொறாமையா தானே இருந்துச்சு!

ஆ.ஞானசேகரன் said...

//இந்த மொபைல வச்சுக்கிட்டு இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலடாயப்பா..//

ஆமா ஆமா...

க.பாலாசி said...

//வால்பையன் said...
@ பாலாஜி!
மனித மனநிலை அது தானே!
உண்மைய சொல்லுங்க, உங்ககூட வண்டியில வரும் போது நான் என் கேர்ள்ஃப்ரெண்டுகிட்ட பேசிகிட்டு வந்தது உங்களக்கு பொறாமையா தானே இருந்துச்சு! //

அட நீங்கவேற...அவனவன் ஒண்ண வச்சிகிட்டே தவுடு தின்னுகிட்டு இருக்காய்ங்க... இதுல இந்த மனுஷன் இத்தனைய எப்டிதான் சமாளிக்கிறாரோன்னு நினைச்சேன்...

வால்பையன் said...

//அவனவன் ஒண்ண வச்சிகிட்டே தவுடு தின்னுகிட்டு இருக்காய்ங்க... இதுல இந்த மனுஷன் இத்தனைய எப்டிதான் சமாளிக்கிறாரோன்னு நினைச்சேன்...//


பப்ளிக், பப்ளிக்!

Karthik said...

கவுதம் சசிதரனை வாசிக்கிறேங்ணா..

நசரேயன் said...

//உங்களுக்கு பொறாமை!
:) :) :)
//

இருக்கும் .. இருக்கும்

ஜோதிஜி said...

அதிகபடியான பெர்ஃபெக்‌ஷன் மனப்பான்மை மனநோய்க்கு ஆட்படுத்தலாம் என்பது உளவியல் கருத்து!

மறுக்கமுடியா உண்மையும் கூட


always be friendship with others, whoever!

மனம் தவிக்கத்தான் செய்கிறது. அந்த ஆளுமையைத் தான் உருவாக்க முயற்சித்துக் கொண்டே இருக்கின்றேன்.

ஜோதிஜி said...

அதிகபடியான பெர்ஃபெக்‌ஷன் மனப்பான்மை மனநோய்க்கு ஆட்படுத்தலாம் என்பது உளவியல் கருத்து!

மறுக்கமுடியா உண்மையும் கூட


always be friendship with others, whoever!

மனம் தவிக்கத்தான் செய்கிறது. அந்த ஆளுமையைத் தான் உருவாக்க முயற்சித்துக் கொண்டே இருக்கின்றேன்.

ஜெய்சக்திராமன் said...

//அக்கா பிரண்ட அக்காவா நினைக்கலாம்.. தங்கச்சி பிரண்ட தங்கச்சியா நினைக்கலாம்.. அதுக்காக பொண்டாட்டி பிரண்ட பொண்டாட்டிய நினக்க முடியுமா?//

அட ஆனின்னா என்ன? ஆவணின்னா என்ன? கண்ணாலத்த முடிச்சு போட வேண்டியது தானங்க?

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு சார்.

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு. உங்களுக்கு எந்த பதினான்கு ... ரகசியமாக சொல்லவும். மதுரையில இந்த புளுடூத் தொல்லை தாங்கமுடியல... வாழ்த்துக்கள்

மேவி... said...

"இங்க பாருடி.. அவனுக்காகத்தான் வீட்டுல பொய் சொல்லிட்டு வந்தேன்.. அவன் வரலைன்னா எப்படி.. கண்டிப்பா வரச் சொல்லுடி.."


கார்த்தி ...பொய் சொல்லாம சொல்லுங்க ...அந்த பையன் நீங்க தானே ....ஹீ ஹீ

இதையெல்லாம் கடந்து தான் எல்லோரும் வந்து இருப்பாங்க ...என்ன ஒன்னு சில பேருக்கு அந்த வயசுல அரிப்பு ஜாஸ்தியா இருக்கும்

ஆதவா said...

கலக்கலுங்க, இன்னும் ஜுரம் மாறாமல் எழுதிறீங்க. வாழ்த்துகள்.

அத்திரி said...

நல்லாயிருக்கு புரொபசர்

கருடன் said...

// வாசலில் இரண்டு பெண் பிள்ளைகள். அதிகபட்சம் போனால் ஏழாவது இல்லை எட்டாவது படித்துக் கொண்டிருக்கலாம். //

Enna kodumainga sir iduuuu....

குந்தவை said...

:)
very interesting .

Ravichandran Somu said...

நல்ல பகிர்வு.

//அவன் காதுல ப்ளூடூத் இயர்போன். அட நாசமாப் போறவனே.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா? இந்த மொபைல வச்சுக்கிட்டு இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலடாயப்பா..//

மிகவும் ரசித்தேன்:)

அன்புடன்,
-ரவிச்சந்திரன்