June 8, 2010

திருமண வாழ்த்துகள் - பிரதாப் பெஸ்கி..!!!

"எவனோ ஒருவன்" என்கிற பெயரில் பதிவுலகில் இயங்கி வரும் அன்புக்குரிய நண்பர் பிரதாப் பெஸ்கியின் திருமணம் நேற்று மதுரையில் (07-06-2010) இனிதே நடைபெற்றது. ஞாயிறுக்கிழமை இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர் முரளிக்கண்ணன் கலந்து கொண்டார். நேற்று காலை நடைபெற்ற மணவிழாவுக்கு தருமி ஐயாவையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். மணமக்களுக்கு நம் பதிவுலக நண்பர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லி வந்தோம். திருமண விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

மண்டபம் - அலங்காரங்களுடன் மணமேடை


வெள்ளை சட்டை அணிந்து வந்த நாதஸ்வரம் - பெஸ்கி..ஐயா.. டை எல்லாம் கட்டி போஸ் கொடுக்குறேன்.. கொஞ்சம் நல்லா போட்டோ புடிங்க சாமிமாப்பிள்ளை பெஸ்கியும் சகோதரி ஜெனிபரும்..பயபுள்ளைய பத்திரமா வச்சு காப்பாத்துவேணுங்க..:-)))எடுடா மேளம்.. அடிடா தாளம்.. கட்டுறா தாலியமாப்ள கொஞ்சம் நல்லாத்தான் சிரிச்சா என்னவாம்..மாலை மாத்துறாங்கோவ்..கொஞ்சம் குனிப்பா.. எட்ட மாட்டேங்குது..கல்யாணத்துக்குப் போன நாட்டாமைங்க.. (கா.பா, கிறுக்கல் கிறுக்கன், தருமி)

பின்குறிப்பு 1: கடைசிப்படம் முழுக்க முழுக்க விளம்பரத்துக்காக மட்டுமே டுக்கப்பட்டது.

பின்குறிப்பு 2: ஏன் கமெண்ட் எல்லாம் சிகப்புல இருக்கு..? அது ஆபத்தின் நிறமாச்சே.. கல்யாணத்துக்கும் இதுக்கும் ஏதோ உள்குத்து இருக்கானு குறியீடு தேடும் மக்களின் வீட்டுக்கு ஸ்பெஷலாக ஆட்டோ அனுப்பப்படும்..:-)))

பின்குறிப்பு 3: எல்லார் கல்யாணத்துக்கும் போற.. உனக்கு எப்போன்னு கேட்க தடை விதிக்கப்படுகிறது.. (யாராவது வீட்டுல வந்து பேசுங்கப்பா.. அவ்வவ்வ்வ்வ்)

உங்களுடைய வாழ்த்துகளையும் சொல்லுங்க நண்பர்களே..:-))))

32 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அடப்பாவி பெஸ்கி..!

கல்யாணத்துக்கு அழைப்பிதழ் கூட அனுப்பாம பண்ணிப்புட்டானே..?

சரி.. சரி.. எனது வாழ்த்துக்களை நம்ம பயபுள்ளைகிட்ட சொல்லிருங்க கா.பா.

எங்களுக்கும் சேர்த்து விருந்து சாப்பிட்ட உங்கள் மூவருக்கும் எனது ???????????????????????????

மோகன் குமார் said...

அன்பு நண்பர் பெஸ்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Karthik said...

வாழ்த்துக்கள். :)

சிவப்பு ரொமான்ஸின் நிறம்னுல்ல நினைச்சிட்டு இருக்கேன். ;)

♠ ராஜு ♠ said...

தம்பதிகளிருவருக்கும் வாழ்த்துக்கள்.

@karthik
சிவப்பு அபாய நிறம்தான் தோழர்!

Karthik said...

//சிவப்பு அபாய நிறம்தான் தோழர்!

நன்றி தோழர். புரட்சியின் நிறம் கூட. அது! :))

Anonymous said...

முதல்ல வாழ்த்துக்கள் பெஸ்கி :))

அப்பறம் அந்த வீட்டுல வந்து பேசற மேட்டர் :)) நல்லாருக்கு.. கோவைபதிவர் பேரவைக்கு கோவை டூ மதுடை கிங்பிஷர் பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தா எல்லாரும் வந்து பத்த வச்சுட்டு வரோம் :)))

Anonymous said...

எல்லார் கல்யாணத்துக்கும் போற உனக்கு (உங்களுக்கு) எப்போ கல்யாணம்???

Mythili said...

Best wishes to newly married couple and our advance wishes to you.

கார்த்திகைப் பாண்டியன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... அடப்பாவி பெஸ்கி..!
கல்யாணத்துக்கு அழைப்பிதழ் கூட அனுப்பாம பண்ணிப்புட்டானே..? சரி.. சரி.. எனது வாழ்த்துக்களை நம்ம பயபுள்ளைகிட்ட சொல்லிருங்க கா.பா.எங்களுக்கும் சேர்த்து விருந்து சாப்பிட்ட உங்கள் மூவருக்கும் எனது ???????????????????????????//

வாழ்த்தியாச்சு அண்ணே.. தனியா சாப்பிட்டோமுன்னு திட்டக் கூடாது.. சொல்லிப்புட்டேன்..

//மோகன் குமார் said...
அன்பு நண்பர் பெஸ்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா

//Karthik said...
வாழ்த்துக்கள். :)சிவப்பு ரொமான்ஸின் நிறம்னுல்ல நினைச்சிட்டு இருக்கேன். ;)//

இது வேறவா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
தம்பதிகளிருவருக்கும் வாழ்த்துக்கள்.
@karthik சிவப்பு அபாய நிறம்தான் தோழர்!//

தோழரா? டக்கு.. நீ பாட்டுக்கு எதையாவது புதுசா கொளுத்திப் போட்டுட்டு போயிடாத சாமி.. ரொம்பப் பயமாயிருக்கு

// மயில் said...
முதல்ல வாழ்த்துக்கள் பெஸ்கி :))//

//அப்பறம் அந்த வீட்டுல வந்து பேசற மேட்டர் :)) நல்லாருக்கு.. கோவைபதிவர் பேரவைக்கு கோவை டூ மதுடை கிங்பிஷர் பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தா எல்லாரும் வந்து பத்த வச்சுட்டு வரோம் :)))//

அக்கா.. ஒரு தம்பியா.. நீங்க என்கிட்டே பிளைட்ல வர டிக்கட் கேக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனா.. உங்களுக்கு ஒரு சவ்வு மிட்டாய் வாங்கிதரக் கூட என்கிட்டே காசு இல்லைன்னு நினைக்கும்போதுதான்.. அக்கா.. என்கிட்டே இருக்குறது வெறும் அன்பு.. என்கூட பண்ணாதீங்க நீங்க வம்பு.. (டீயார் மாதிரி படிங்க தாயி..)

கார்த்திகைப் பாண்டியன் said...

//அனாமிகா துவாரகன் said...
எல்லார் கல்யாணத்துக்கும் போற உனக்கு (உங்களுக்கு) எப்போ கல்யாணம்???//

பரவாயில்லைங்க.. உனக்குன்னே சொல்லுங்க.. நான் சின்னப்பையன் தான்..(ஹி ஹி ஹி).. நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.. மக்களாப் பார்த்து செஞ்சு வச்சா எப்ப வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே..:-)))

// Mythili said...
Best wishes to newly married couple and our advance wishes to you.//

நன்றிங்கோவ்..:-))

Anonymous said...

பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

குமரை நிலாவன் said...

அன்பு நண்பர் பெஸ்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

madurai kaaran ennaiyum appa appak kuuppitungkal thalaivaa...ungkalukkum viraivil thirumanam aaka vaalththukkal. oru velai tharumi ayyavudan selvathaal ungkalaiyum oldnnu ninaikkiraangkalaa illa tharumi ponra ilangarkal munnaal ungkal alaku edupadavillaiyaa..? aduththamurai nammalaiyum alaiththu sellungkal.

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
அன்பு நண்பர் பெஸ்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

:-))))

// மதுரை சரவணன் said...
madurai kaaran ennaiyum appa appak kuuppitungkal thalaivaa... ungkalukkum viraivil thirumanam aaka vaalththukkal. oru velai tharumi ayyavudan selvathaal ungkalaiyum oldnnu ninaikkiraangkalaa illa tharumi ponra ilangarkal munnaal ungkal alaku edupadavillaiyaa..? aduththamurai nammalaiyum alaiththu sellungkal.//

சாரி நண்பா.. அவசர அழைப்பு.. நீங்க பள்ளிக்கு போயிருப்பீங்கன்னுதான் கூப்பிடல.. தப்பா எடுத்துக்காதீங்க.. அதுக்காக இப்படி நம்மள கால வாருறீங்களே தலைவா? அவ்வ்வ்வ்..

ஜெரி ஈசானந்தன். said...

வாழ்த்துகள் பிரதாப்,"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க."கார்த்தி அழைத்திருந்தார்,பள்ளியில் மாணவர் சேர்க்கையில் பயங்கர கடி...சோ.ப்ளீஸ் .....பிறகென்ன ...நீங்க தான் மதுரை மாப்பிள்ளைஆயிட்டீங்கள்ள.....அடிக்கடி ...மீட் பண்ணுவோம்ல..பிச்சு உதறுவோம்.

தேவன் மாயம் said...

பெஸ்கிக்கு வாழ்த்துக்கள் கார்த்தி!!

செ.சரவணக்குமார் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

கமென்ட் கலக்கல் கா.பா சார்.

ஆமா, உங்களுக்கு எப்ப நாங்க வாழ்த்து சொல்றது வாத்யாரே....

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் பெஸ்கி!

சௌரியமா இருகீகளா கா.பா சார் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
வாழ்த்துகள் பிரதாப்,"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க."கார்த்தி அழைத்திருந்தார்,பள்ளியில் மாணவர் சேர்க்கையில் பயங்கர கடி... சோ.ப்ளீஸ் ..... பிறகென்ன ...நீங்க தான் மதுரை மாப்பிள்ளை ஆயிட்டீங்கள்ள..... அடிக்கடி ...மீட் பண்ணுவோம்ல..பிச்சு உதறுவோம். //

அதேதான்.. சொல்லிட்டு வந்திருக்கேன் ஜெரி..

//தேவன் மாயம் said...
பெஸ்கிக்கு வாழ்த்துக்கள் கார்த்தி!!//

நன்றி தேவா சார்.. நேரம் இருக்கும்போது அலைபெசில கூப்பிடுங்களேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

// செ.சரவணக்குமார் said...
மணமக்களுக்கு வாழ்த்துகள். கமென்ட் கலக்கல் கா.பா சார்.
ஆமா, உங்களுக்கு எப்ப நாங்க வாழ்த்து சொல்றது வாத்யாரே..//

நன்றி நண்பா.. கூடிய சீக்கிரம் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்னு பட்சி சொல்லுது..

//நேசமித்ரன் said...
வாழ்த்துகள் பெஸ்கி! சௌரியமா இருகீகளா கா.பா சார் :)//

ரொம்பவே நல்லாயிருக்கேன் தலைவரே.. நேத்து கூட பஸ்ல உங்க பின்னாடி சுத்துக்கிட்டு இருந்தேனே..:-))

வால்பையன் said...

கடைசி நிமிடத்தில் வர முடியாமல் போய்விட்டது!
அனைவரையும் சந்திக்கும் ஆவலில் இருந்தேன்!

அண்ணன் பெஸ்கிக்கு வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

@வால்பையன்

தல... வாழ்த்து சொன்னதெல்லாம் சரி.. சைக்கிள் கேப்ல அடிச்சு விட்டீங்க பாருங்க.. பெஸ்கி உங்களுக்கு அண்ணனா? அவ்வ்வ்..

வால்பையன் said...

//பெஸ்கி உங்களுக்கு அண்ணனா?//

நீங்க பெரியண்ணா
அவரு சின்னண்ணா!

அத்திரி said...

//ஏன் கமெண்ட் எல்லாம் சிகப்புல இருக்கு..? அது ஆபத்தின் நிறமாச்சே.. //

:))))))))))))

அத்திரி said...

பெஸ்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
நீங்க பெரியண்ணா அவரு சின்னண்ணா//

கெடாவெட்டுல நானுமா? ரைட்டு..

//அத்திரி said...
//ஏன் கமெண்ட் எல்லாம் சிகப்புல இருக்கு..? அது ஆபத்தின் நிறமாச்சே.. //
:))))))))))))//

அனுபவம்? இருங்கப்பு.. வீட்டுல வரட்டும்..சொல்றேன்..

malarvizhi said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// malarvizhi said...
வாழ்த்துக்கள்.//

நன்றிங்க,,

//கடையம் ஆனந்த் said...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

வாங்க தல.. அநியாயத்துக்கு அமைதி ஆகிட்டிங்களே..

அதி பிரதாபன் said...

Valthukalukku nanri.
:)

kunthavai said...

Wishes for the newly married couple.

//எல்லார் கல்யாணத்துக்கும் போற.. உனக்கு எப்போன்னு கேட்க தடை விதிக்கப்படுகிறது..//

யாருக்கும் இதை பற்றி கேட்கவே தோணியிருக்காது.. இதை படிக்கிற வரைக்கும்.

இதை மாதிரி எதையாச்சும் பண்ணி வீட்டுல அலாரம் வைங்க தம்பி....