June 21, 2010

பரீட்சைன்னா.. பெரிய பருப்பா?!!!

அது என்னமோ பாருங்க.. சின்ன வயசுல இருந்து நமக்கு இந்தப் பரீட்சைன்னாலே அவ்வளவா ஒண்ணும் பெரிய பயமெல்லாம் கிடையாதுங்க.. ஏன்னு கேட்டீங்கன்னா.. அதுக்குக் காரணம் எங்கம்மா. அவங்க தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த மொத வாத்தியாரு. அவங்க நமக்கு சொன்னதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.. "மகனே.. படிக்கிறது அறிவ வளர்க்கத்தான்.. வெறுமன புத்தகத்துல இருக்குறத படிச்சிட்டுப் போய் பேப்பர்ல வாந்தி எடுக்கிறதால நாம பெரிசா எதையும் சாதிச்சிட முடியாது.. அதனால எதப் படிச்சாலும் புரிஞ்சு படி.. ஏன் எதுக்குப் படிக்கிறோம்னு தெரிஞ்சு படி.. அது போதும்.. பரீட்சைல நீ மார்க்கு வாங்கலை, அது இதுன்னு நான் கவலைப்படவே மாட்டேன்.. சரியா?" அவங்க சொன்னதுல நம்ம மண்டைல எது ஏறுச்சோ இல்லையோ.. அந்தக் கடைசி வரி.. பரீட்சைன்னா பயப்பட வேண்டியது கிடையாதுங்கிறது மட்டும் தெளிவா பதிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன கவலை சொல்லுங்க?

நல்லா படிச்சா நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும். இதுதான் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தது. பொதுவாவே எனக்கும் படிக்க பிடிக்கும். சோ நமக்கு படிப்பு நோ ப்ராப்ளம்தான். நாம இருந்த வீட்டுல இருந்து பத்து வீடு தாண்டி பள்ளிக்கூடம். நாங்கதான் எங்க ஸ்கூலோட மொத செட்டும் கூட. அதனால வாத்தியாருங்க எல்லாரையும் நல்லாத் தெரியும். நல்ல ஜாலியா பொழுது போகும். பக்கத்து வீட்டுக்காரர்தான் ப்ரின்சி. அதனால பரீட்சை மார்க் எல்லாம் நான் பாக்குறதுக்கு முன்னாடியே அம்மா பார்த்திடுவாங்க. பெரும்பாலும் மூணு ரேன்குக்குள்ள வந்திருவேன். யாரு பர்ஸ்ட் வரதுன்னு பசங்களுக்கு உள்ள போட்டி, அப்படி இப்படின்னு பரீட்சைய எதிர்பார்த்துக் கிடந்த கோஷ்டி நம்மது. (அடிக்க வராதீங்கப்பா..)

அஞ்சாவது வரைக்கும் பரீட்சை எழுதினது எல்லாம் அவ்வளவா ஞாபகம் இல்லை. அதுக்கு அப்புறமும் சாதாரணமாத்தான் இருந்தது. சுத்தி இருந்த மக்கள் எல்லாம் ஓவரா பில்டப்பா கொடுத்தது பத்தாவது பரீட்சையப்பத்தான். "இதுதான் உன் லைப்பு.. பார்த்து.. ஆ.. ஊன்னு.." அடப் போங்கப்பா.. திமிருக்குன்னே அடுத்த நாள் பயாலஜி எக்ஸாம் வச்சிக்கிட்டு நம்ம பசங்க கூட படத்துக்குப் போனேன். "பூச்சூடவா" - அந்தக் கொடுமைய பார்த்ததுக்கு ஒழுங்கா உக்கார்ந்து படிச்சிருந்தாலாவது புண்ணியம். கடைசியா +2 . மொதல்லேயே வீட்டுல சொல்லியாச்சு. இவ்வளவு மார்க்குதான் வாங்குவேன்... இதுக்குத்தான் படிக்கப் போறேன்னு. அவங்களும் ஒண்ணும் கண்டுக்கல. கடைசியா சொல்லி வச்சி மாதிரித்தான் மார்க்கும் வந்தது. அதுக்குப் பொறவு நான் பொறியியல் சேர்ந்ததும், இன்னைக்கு வாத்தியாரா வந்து நாலு பேருக்கு நாம பரீட்சை வச்சுக் கொலையா கொல்றதும்.. விடுங்கப்பா.. அதெல்லாம் அவனவன் செய்த வினைப்பயன்..

சம்பவம் 1

என்னடா இவன் ஓவராப் பேசுறான்.. பரீட்சைன்னா நீ பயந்ததே கிடையாதா? நீ பெரிய *****யோ? இப்படி எல்ல்லாம் திட்டணும்னு தோணுதா? பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. நம்ம அம்மாவுக்கு நம்ம மேல நம்பிக்கை ஜாஸ்தி. பிள்ளைய ஒரு பெரிய படிப்பாளின்னு நெனச்சுக்கிட்டு மூணாவது படிக்கும்போதே ஹிந்தி படிக்கக் கொண்டு போய் விட்டாங்க. அவனும் அஞ்சு பரீட்சைய ஒழுங்கா எழுதிட்டான். ஆனா பாருங்க.. இந்த விஷாரத் உத்தரார்த் வந்தப்பதான் புடிச்சது சனி. ஏழாங்கிளாஸ்னு நினைக்கிறேன். அப்பத்தான் நமக்கு கோலிகுண்டு, சீட்டு, உருட்டுக்கட்டை, புது நண்பர்கள் எல்லாம் அறிமுகம் ஆன நேரம். எல்லா கிளாசும் கட்டு. நேரா பரீட்சைக்கு போய் நின்னா..? ஒண்ணுமே தெரியல. என்ன பண்ண.. வேற வழி இல்லாம கைடத் தூக்கிட்டு உள்ள நொழஞ்சாச்சு.

லட்சுமி ஸ்கூல்தான் செண்டர். பரீட்சை ஆரம்பிச்சா.. சும்மா குண்டு குண்டுன்னு ஒரு அம்மாதான் சூப்பர்வைசர். சுத்தி சுத்தி வருது. காலுக்கு கீழ கைடு. பார்த்து பார்த்து அடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படியே வேர்த்து வழியுது. பயம். முன்ன பின்ன செத்தாத்தான சுடுகாடு தெரியும்? கடைசில நம்ம மூஞ்சியே காட்டிக் கொடுத்துருச்சு. அந்த அம்மா நேரா வந்து கைட எடுத்துருச்சு. சுமார் ஒரு மணி நேரம் நின்னுக்கிட்டே இருக்கேன். அப்புறம் என்ன நினச்சாங்கன்னு தெரியல.. பாவம்னு என்கிட்டே வந்து.."இனிமேல் இப்படி பண்ணாதப்பா"னு சொல்லிட்டு அது வரைக்கும் எழுதி இருந்த எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் காமெடி. நான் மறுபடி அடிச்சத பார்த்தே எழுத ஆரம்பிக்க, அந்தம்மாவுக்கு வந்துச்சு பாருங்க ஒரு கோபம்... குடுகுடுன்னு ஓடி வந்து பேப்பர புடுங்கிட்டாங்க. "நீ எழுதிக் கிழிச்சது போதும்.. கிளம்புப்பா".. நாம வாழ்க்கைல வாங்குன மொதக் கப்பு.. அதுதான். அப்புறமேட்டிக்கு நான் ஹிந்தில எம்.ஏ வரைக்கும் படிச்ச கொடுமைலாம் நடந்தது தனிக்கதை.. (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தானே..)

சம்பவம் 2

வெற்றிகரமா +2 எழுதியாச்சு. அடுத்து என்ன? முட்டி மோதியும் மூணே மார்க்குல மெடிக்கல் சீட் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அப்ப வேற வழியே கிடையாது.. பொறியியல்தான். ஆனாலும் கடைசி முயற்சியா.. ஒரு தடவை கேரளாவுல போய் பரீட்சை எழுதிப் பார்க்கலாமேன்னு ஒரு ஆசை. அங்க நடக்குற மெடிக்கல் மற்றும் பொறியியல் தேர்வுக்கான பரீட்சை. போய் உக்கார்ந்து கேள்வித்தாள வாங்கி பார்த்தா கண்ணக் கட்டுது. 120 கேள்விகள். சரி.. மொதல்ல நமக்குத் தெரிஞ்சத எல்லாம் எழுதுவோம். அதுக்கு அப்புறம் தெரியாததைப் பத்தி யோசிப்போம்னு எழுதி முடிச்சுட்டு பார்த்தா.. மொத்தம் மூணே கேள்விதான் எழுதி இருக்கேன். அவ்வ்வ்வவ்.. ரைட்டு வேற வழியே இல்லை.. பாண்டியா.. உருட்டுடா பகடையன்னு எல்லாக் கேள்விக்கும் டாஸ் போட்டு பதில் எழுதி முடிச்சுட்டு வெளில வரேன்.. வந்து பார்த்தா, அங்க பயபுள்ளைங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்குதுங்க..

"நீ எத்தனைடா எழுதுன?"

"24 .. நீ?"

"நான் 28ப்பா .."

டேய்.. என்னடா சொல்றீங்க.. நான் இப்போத்தாண்டா 120 கேள்விக்கு பதில் எழுதிட்டு வரேன்? அப்புறம் விசாரிச்ச்சத்தான் தெரிஞ்சது.. அங்க எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கிறது கட்டாயம் இல்லையாம். ஏன்னா.. சரியான விடைக்கு நாலு மார்க்கு.. அதே மாதிரி தப்பான விடைக்கு ஒரு மார்க்கு மைனஸ். வெளங்கிடும். அங்க ரிசல்ட் வந்தப்ப என்னோட ரேன்க் பத்தாயிரத்து சொச்சம். அங்கயும் பொறியியல்தான் கிடைக்கும்னு சொன்னங்க. வேற வழி இல்லாம தமில்நாட்டுலையே சேர்ந்து படிச்சு.. கஷ்டப்பட்டு முன்னேறி.. விடுங்கப்பா.. அதெல்லாம் நாளைய வரலாறு கூறட்டும். (ஒரு விண்ணப்பம்.. துப்புரவங்க பப்ளிக்ல துப்பாதீங்கப்பா.. தனியா மின்னஞ்சல் அனுப்பி உங்க கடமைய செய்யலாம் )

ஆக.. இப்படியாக பரீட்சைக்கும் நமக்கும் இருக்குற உறவு மாமன் மச்சான் உறவு மாதிரிதான். ரொம்ப பயந்தது எல்லாம் கிடையாது. அது பாட்டுக்கு நடக்கும். கடமையைச் செய்.. பலனை எதிர்பார்க்காதே.. நம்ம கைல என்ன இருக்கு.. சொல்லுங்க? இந்த சங்கிலிப்பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட தோழி "இயற்கை ராஜி"க்கு நன்றிகள் பல.. வேறு யாரும் எழுத விருப்பட்டால் தொடரலாம்..

19 comments:

M.G.ரவிக்குமார்™..., said...

\லட்சுமி ஸ்கூல்தான் செண்டர்./இது எந்த ஸ்கூல்ங்க.....TVSஆ?....

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆமா நண்பா.. TVS லட்சுமியே தான்..:-)))

Karthick Chidambaram said...

hmmm .... good experience :-)

Balakumaran Lenin said...

enna padicheengalo illayo.. engaluku paritchai mela irundha konja nanja bayamum poiduchu idha padichadhuku apram!!!!!!

அமுதா கிருஷ்ணா said...

டாக்டர் ஆகாததால் நிறைய பேர் தப்பிச்சோம்..ஹிந்தி என்ன தப்பு செய்தது..

kunthavai said...

//பரீட்சைன்னா பயப்பட வேண்டியது கிடையாதுங்கிறது மட்டும் தெளிவா பதிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன கவலை சொல்லுங்க?

அதானே..
நல்ல பதிவு. ரசித்தேன்.
எனக்கும் ரெம்ப பயம் கிடையாது. கண்டிப்பா கல்யாணம் முடிந்த பிறகு படிச்சாலும்.. படிக்காட்டியும் ஒரு வேலை கிடைக்கும் என்று ஒரு Job security இருந்ததால். :)

ஜெய்சக்திராமன் said...

neenga keralaku poi edhuku enterance ezhuthuneengannu romba nalla theriyuthu sir...

கார்த்திகைப் பாண்டியன் said...

// Karthick Chidambaram said...
hmmm .... good experience :-)//

நன்றி நண்பரே

//பாலகுமாரன் said...
enna padicheengalo illayo.. engaluku paritchai mela irundha konja nanja bayamum poiduchu idha padichadhuku apram!!!!!!//

அப்படி எல்லாம் சொல்லப்புடாது தம்பி

//அமுதா கிருஷ்ணா said...
டாக்டர் ஆகாததால் நிறைய பேர் தப்பிச்சோம்..ஹிந்தி என்ன தப்பு செய்தது..//

விடுங்க தெய்வமே.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தானே..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//kunthavai said...
அதானே..நல்ல பதிவு. ரசித்தேன்.
எனக்கும் ரெம்ப பயம் கிடையாது. கண்டிப்பா கல்யாணம் முடிந்த பிறகு படிச்சாலும்.. படிக்காட்டியும் ஒரு வேலை கிடைக்கும் என்று ஒரு Job security இருந்ததால். :)//

ஆகா.. நமக்கு இப்படி ஒரு ஆப்ஷன் இல்லாமப் போச்சே..

//ஜெய்சக்திராமன் said...
neenga keralaku poi edhuku enterance ezhuthuneengannu romba nalla theriyuthu sir...//

டாய்.. இப்படி எல்லாம் வதந்தி பரப்பக் கூடாது..:-)))

Riyas said...

நல்லா சொன்னிங்க...

இங்க பாருங்க ஒருத்தர்ர ஆன்சர் சீட்..

http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_18.html

*இயற்கை ராஜி* said...

இந்தப் பதிவு உங்க ஸ்டூடன்ஸ் படிப்பாங்கதானே?ஹ்ம்ம்.. இனிமேல் கிளாஸ்ல டெஸ்ட்ன்னு சொல்லிப்பாருங்க.. உங்க வ்ழியே அவங்களும் பின்பற்றுவாங்க‌:-)

பனித்துளி சங்கர் said...

நீங்க நல்ல படித்தது உண்மைதானே ?
அதுதான் இன்று ஆசிரியர் !

sathishsangkavi.blogspot.com said...

நல்லாச் சொன்னீங்க வாத்தியாரே...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Riyas said...
நல்லா சொன்னிங்க...இங்க பாருங்க ஒருத்தர்ர ஆன்சர் சீட்..//

நானும் பார்த்தேன் நண்பா.. இன்னும் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்..:-)))

// *இயற்கை ராஜி* said...
இந்தப் பதிவு உங்க ஸ்டூடன்ஸ் படிப்பாங்கதானே?ஹ்ம்ம்.. இனிமேல் கிளாஸ்ல டெஸ்ட்ன்னு சொல்லிப்பாருங்க.. உங்க வ்ழியே அவங்களும் பின்பற்றுவாங்க‌:-)//

அதுதான் பயமாயிருக்கு தோழி..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... நீங்க நல்ல படித்தது உண்மைதானே?அதுதான் இன்று ஆசிரியர் !//

நீங்க ரொம்ப நல்லவருண்ணே..

//Sangkavi said...
நல்லாச் சொன்னீங்க வாத்தியாரே...//

வாங்க நண்பா.. நன்றி

SUDHARSAN said...

NENGA ORU STUDENT AH..! PANNA "ATTAKASATHA" SONINGA. ROMBA NALA ERUNTHUCHU. ORU VATHIYARA ERUNTHU PANNA "AMMARKALATHA" SOLUNGA SIR ATHEA EXAM TOPIC LA!

Maria Mcclain said...

nice post, i think u must try this website to increase traffic. have a nice day !!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//SUDHARSAN said...
NENGA ORU STUDENT AH..! PANNA "ATTAKASATHA" SONINGA. ROMBA NALA ERUNTHUCHU. ORU VATHIYARA ERUNTHU PANNA "AMMARKALATHA" SOLUNGA SIR ATHEA EXAM TOPIC LA!//

அதெல்லாம் உனக்குத்தான் தெரியுமே சூச..:-)))

//Maria Mcclain said...
nice post, i think u must try this website to increase traffic. have a nice day !!!//

thanks..

ILA (a) இளா said...

<a href="http://vivasaayi.blogspot.com/2010/06/june-28-2010.html>போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில்(சிபஎபா)</a>, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.