June 4, 2010

அட நாதாரிப் பயபுள்ளைகளா..!!!!

மதுரையில் இருக்கும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை அது. சிறுநீரகக் கோளாறின் காரணமாக அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்த நண்பரின் தந்தையைக் காண்பதற்காக சமீபத்தில் அங்கே போக நேர்ந்தது. உள்ளே நுழைந்தபோது நான் நிறையவே ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குள் நுழைவதைப் போன்றதொரு உணர்வு. பார்க்கும் இடமெல்லாம் அழகழான கண்ணாடிகள், மரச் சிலைகள் என்று பயங்கர படோடபம் வேறு. அங்கே ஒரு நாள் தங்குவதற்கான அறை வாடகை பற்றி நண்பர் சொன்னபோது தலையே சுத்தியது. பத்து நாள் இருந்தா என்னுடைய ஒரு மாத சம்பளம்.. ஸ்வாஹா. எக்காரணம் கொண்டும் இங்கெல்லாம் வர வேண்டிய சூழல் வந்து விடக்கூடாது என்று யோசித்தவாறே நண்பரின் அப்பாவைப் பார்க்கப் போனேன்.

நண்பரின் அப்பா குளிரூட்டப்பட்ட விசாலமான அறையில் சவுகரியமாக படுக்க வைக்கப்பட்டு இருந்தார். உடல்நிலை முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்று சொன்னவரிடம் பொறுமையாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நண்பரின் அப்பா தூங்கி விட, நண்பர் வீட்டுக்கு சென்று குளித்து விட்டு வருவதாக சொல்லி கிளம்பி விட்டார். பொழுது போவதற்காக அங்கே கிடந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். சற்று நேரம் கழித்து, அருகில் இருந்த அறையில் இருந்து தொடர்ச்சியாக ஏதேதோ சத்தங்கள் வரத் தொடங்கின. என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் உந்தித் தள்ள, அங்கே இருந்த மருத்துவ உதவியாளரிடம் சென்று விசாரித்தேன்.

அந்த அறையில் இருந்தவர் மதுரையின் மிகப் பெரிய நகைக்கடை அதிபரின் மனைவியாம். முக்கியமான ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தவர். அதற்காக அவருக்கு மூன்று யூனிட்டுகள் ரத்தம் தேவைப்பட்டு இருக்கிறது. அவருடைய ரத்தம் மிக அரிதான வகையை சேர்ந்ததாம். அதை யார் கொடுப்பது என்பதில்தான் பிரச்சினை.

"ஏன்.. அவங்க குடும்பத்துல யாருக்கும் அந்த ப்ளெட் குரூப் இல்லையா? அவங்க பசங்க.. யாராவது தர முடியுமா?" உதவியாளரிடம் கேட்டேன்.

"ரெண்டு பசங்க சார்.. ரெண்டு பேருக்குமே இந்த அம்மாவோட குரூப் தான்.. ஆனா அவங்க பண்றதுதான் பெரிய கூத்து.. மொதப் பய பயங்கர குடிகாரன் போல.. அதனால அவனோட ரத்தம் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.."

"அய்யய்யோ.. அப்ப ரெண்டாவது பையன்..?"

"அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க? அந்தப் பையனுக்கு ரத்தம் தரதுக்கு விருப்பம் இல்ல போலீங்க.. ரொம்ப பயந்து போய் இருந்தான்.. கொஞ்ச நேரம் முன்னாடிதான் டாக்டர் ஏதோ டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு அவன்கிட்ட இருந்து ரத்தம் எடுக்க முடியாதுன்னு சொன்னாரு.. கேட்டவுடனே அவனுக்கு அவ்வளவு சந்தோசம்.. துள்ளிக் குதிக்காத குறைதான்"

"வெளங்கிடும்.. உண்மையிலேயே அந்த அம்மா பாவம்தான் போல.. ரெண்டு பிள்ளைங்களும் இப்படி சொன்னா என்ன பண்றது.."

"அட நீங்க வேற.. இவங்கள கூட ஒரு கணக்குல சேர்த்துடலாம்.. அந்த அம்மா எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டிரும் போல.."

"ஏம்ப்பா.. அவங்க என்ன பண்ணினாங்க.."

"சொல்றதக் கேளுங்க.. பையனுங்க ரெண்டு பேருமே ரத்தம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வேற வழியே இல்லையேன்னு டாக்டர் சார் ரத்த வங்கிக்கு போன் பண்ணிட்டாரு.. அவங்க எங்க எங்கயோ அலைஞ்சு ஒரு காலேஜ் ஸ்டுடண்ட கண்டுபிடிச்சு கூப்பிட்டு வந்துட்டாங்க.."

"சரி... அதுதான் ரத்தம் கொடுக்க ஆள் கிடைச்சாச்சே.. அப்புறம் என்ன?"

"இப்போத்தான் அந்த அம்மா சீனுக்குள்ள வருது.. நான் ரத்தம் ஏத்திக்க மாட்டேன்னு அடம் பிடிக்குது.."

"அடப்பாவி.. ஏன்.."

அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு வெறியே வந்து விட்டது.

"அந்தப் பையன் எந்த ஜாதின்னு தெரியலையாம்.. அதனால் ஏத்திக்க மாட்டங்களாம்.. அவங்க ஜாதிப் பையனா இருந்தா சரியாம்.. இல்லைனா அவங்களுக்கு அது வரைக்கும் அறுவை சிகிச்சையே பண்ண வேண்டாமாம்.."

அடக் கருமமே... எனக்கு ஓடிப்போய் அந்த அம்மாவை ஓங்கி வெட்டினால் என்ன என்று தோன்றியது. இது எல்லாம் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

மெதுவாக அறைக்குள் எட்டிப் பார்த்தேன். டாக்டர் அந்த அம்மாவை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். அறையின் ஓரமாக இருந்த நாற்காலியில் ஒரு பையன் அமைதியாக அமர்ந்து இருந்தான். இருபது வயதிருக்கலாம். ரத்தம் தர வந்த கல்லூரி மாணவனாக இருக்கக் கூடும். அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. நேராக டாக்டரின் அருகில் சென்றேன்.

"நீங்கள் தவறாக நினைக்க வில்லை என்றால் இந்த அம்மாவிடம் இரண்டொரு வார்த்தை பேசிக் கொள்ளலாமா?"

டாக்டர் குழப்பமாக என்னைப் பார்த்து சரி என்றார். அந்த பெண்ணிடம் திரும்பினேன். பொறுமையாக சொன்னேன்.

"பெற்ற பிள்ளைகளே உங்களை காப்பாற்ற முன்வராத நிலையில், தன் வேலைகளை விட்டு உங்களைக் காப்பாற்ற வந்த அந்தப் பையனிடம் போய் ஜாதியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே.. ஷேம் ஆன் யூ.. நீங்க ஒரு ஒண்ணாம் நம்பர் லூசு.."

நான் அப்படிப் பேசுவேன் என எதிர்பார்த்து இருக்காத டாக்டர் திகைத்துப் போனார். "சார்.. என்ன சார்.. நீங்க பாட்டுக்கு.. மொதல்ல வெளில போங்க சார்.." கூடவே அந்த அம்மாவும் கண்டமேனிக்கு கத்த ஆரம்பித்தது.

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்தப் பையனிடம் போனேன். "சின்ன வயசுன்னாலும் அடுத்தவங்களுக்கு உதவணும் என்கிற எண்ணம் இருக்கே.. சந்தோசம் தம்பி.." சொல்லி விட்டு வெளியேறினேன்.

கண்டிப்பாக என்னைக் காட்டான் என்று எண்ணி இருப்பார்கள். இருக்கட்டும். பரவாயில்லை. அதனால் நான் ஒன்றும் குறைந்து போய் விடப் போவதில்லை. பெத்த தாய் சாகக் கிடக்கும்போது, தான் ரத்தம் தர வேண்டியதில்லை என சந்தோஷப்படும் பிள்ளைகள்.. உயிரே போனால் கூட ஜாதி மசிருதான் முக்கியம் என சொல்லும் பெண்.. இவர்கள் எல்லாம் நாகரீகம் கொண்டவர்களாக இருக்கும் இடத்தில்.. நான் காட்டானாகவே இருந்து விட்டுப் போகிறேன். இருக்கிற இடம் பகட்டாக, அணியும் உடைகள் விலை உயர்ந்ததாக இருந்து என்ன பிரயோஜனம்? மனிதர்களை மதிக்காத ஜென்மங்களைப் பற்றி வேறென்ன சொல்ல முடியும்?

இப்படியும் சில மனிதர்கள்.. ச்சே..!!!

51 comments:

Unknown said...

ரத்தம் கொடுக்க வந்த அந்த பையனையும் கையேடு கூட்டி வந்திருக்கணும்..?

துளசி கோபால் said...

அந்தப் பையனை மனமார வாழ்த்துகின்றேன்.

அந்தம்மாவை........... ப்ச்

MINNAL said...

நீங்க இன்னும் கொஞ்சம் அதிகப் படியாக திட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

Anonymous said...

you did the right thing.......india has lots of good and bad hearts.....Pandian

கண்ணா.. said...

//கண்டிப்பாக என்னைக் காட்டான் என்று எண்ணி இருப்பார்கள். இருக்கட்டும். பரவாயில்லை. அதனால் நான் ஒன்றும் குறைந்து போய் விடப் போவதில்லை. பெத்த தாய் சாகக் கிடக்கும்போது, தான் ரத்தம் தர வேண்டியதில்லை என சந்தோஷப்படும் பிள்ளைகள்.. உயிரே போனால் கூட ஜாதி மசிருதான் முக்கியம் என சொல்லும் பெண்.. இவர்கள் எல்லாம் நாகரீகம் கொண்டவர்களாக இருக்கும் இடத்தில்.. நான் காட்டானாகவே இருந்து விட்டுப் போகிறேன். இருக்கிற இடம் பகட்டாக, அணியும் உடைகள் விலை உயர்ந்ததாக இருந்து என்ன பிரயோஜனம்? மனிதர்களை மதிக்காத ஜென்மங்களைப் பற்றி வேறென்ன சொல்ல முடியும்?
//

true.....

neengal seithathuthan sari...

குடுகுடுப்பை said...

என்னக்கொடுமை ராமசாமி இது

sathishsangkavi.blogspot.com said...

வாத்தியாரே....

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.....

MAGI said...

Enna Kodumai Sir Idthu..

Ippadikku,

Maanavan Magudesh...

vinthaimanithan said...

//ரத்தம் கொடுக்க வந்த அந்த பையனையும் கையேடு கூட்டி வந்திருக்கணும்..//
ஆமோதிக்கிறேன்

Karthik Vasudevan said...

இந்த மாதிரி ஜாதி வெறியர்களை யாராலும் திருத்த முடியாது. அவர்களின் ஜாதி வெறிக்கான தண்டனை "மரணம்" தான்.

Anonymous said...

//
அடக் கருமமே... எனக்கு ஓடிப்போய் அந்த அம்மாவை ஓங்கி வெட்டினால் என்ன என்று தோன்றியது. இது எல்லாம் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?
//
couldn't agree more.
she is a mean, stupid bitch.

க.பாலாசி said...

இந்த மாதிரியும் நடக்கத்தாங்க செய்யுது.... ச்ச்ச்சே....

Anonymous said...

//ஷேம் ஆன் யூ.. நீங்க ஒரு ஒண்ணாம் நம்பர் லூசு.."
//

well said. hats off to your courage. nothing very offensive, yet sharp remark by you. even if this make her think atleast for a second, thats a success.

(someone's gotta do it - well, you did it sir)

க.பாலாசி said...

நீங்க பேசிகிட்டிருந்த நேரத்துக்கு ஓங்கி அந்தம்மா மூஞ்சியிலேயே குத்தியிருக்கணும்... சான்ச மிஸ் பண்ணிட்டீங்க....

Anonymous said...

//க.பாலாசி said...
நீங்க பேசிகிட்டிருந்த நேரத்துக்கு ஓங்கி அந்தம்மா மூஞ்சியிலேயே குத்தியிருக்கணும்... சான்ச மிஸ் பண்ணிட்டீங்க//

என்னா ஒரு கொலவெறி :P

vasu balaji said...

//இப்படியும் சில மனிதர்கள்.. ச்சே..!!!//

இப்படித்தான் மனிதர்கள் கார்த்தி

vasu balaji said...

க.பாலாசி said...

//நீங்க பேசிகிட்டிருந்த நேரத்துக்கு ஓங்கி அந்தம்மா மூஞ்சியிலேயே குத்தியிருக்கணும்... சான்ச மிஸ் பண்ணிட்டீங்க....//

அப்புடி பண்ணி அதுல போன ரத்தத்துக்கு அதுக்கு வேற ஜாதி ரத்தம் தேடணுமோ. அகுடியா குடுக்குறாரு அகுடியா:))

Balakumar Vijayaraman said...

:(

Karthik said...

இப்படிக்கூடலாமா நடக்குது? கொடுமை!

Sabarinathan Arthanari said...

//ஷேம் ஆன் யூ.. நீங்க ஒரு ஒண்ணாம் நம்பர் லூசு.."//

நல்ல காரியம் செய்திங்க.

மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

Anonymous said...

அண்ணே, நீங்க குமுதம் ஒரு பக்க கதை நெறைய படிப்பீங்க போல. விசாவுக்கு போட்டியா இன்னும் ஒரு எழுத்தாளர்.

குடந்தை அன்புமணி said...

கலிகாலத்திலும் இந்தக் கண்றாவி பிடித்த சாதி... ப்ச்...

எல் கே said...

shame on that lady

u have did the correct thing

Jey said...

இப்படியெல்லாம் ஜென்மங்கள் இருக்காங்கலா?. அதிர்ச்சியாக இருக்கிறது.

மின்னுது மின்னல் said...

::((((((((

இராகவன் நைஜிரியா said...

வெட்கக் கேடு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்தப் பையனை மனமார வாழ்த்துகின்றேன்.அந்தம்மா உயிரோட இருந்து என்னத்தை கிழிக்கப் போகுது. விட்டுடுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அவர்களின் ஜாதி வெறிக்கான தண்டனை "மரணம்" தான்//
நச் கார்த்திகேயன். சரியான தண்டனை

மதார் said...

//"அந்தப் பையன் எந்த ஜாதின்னு தெரியலையாம்.. அதனால் ஏத்திக்க மாட்டங்களாம்.. அவங்க ஜாதிப் பையனா இருந்தாசரியாம்.. இல்லைனா அவங்களுக்கு அது வரைக்கும் அறுவை சிகிச்சையே பண்ண வேண்டாமாம்.."

அடக் கருமமே... எனக்கு ஓடிப்போய் அந்த அம்மாவை ஓங்கி வெட்டினால் என்ன என்று தோன்றியது. இது எல்லாம்இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?//

கத்திஎதும் கைல கிடைக்கல ? இலவசமா நீங்களே அறுவை சிகிச்சை செஞ்சிருக்கணும் . இவங்கல்லாம் பூமிக்கே பாரம் .

//

"பெற்ற பிள்ளைகளே உங்களை காப்பாற்ற முன்வராத நிலையில், தன் வேலைகளை விட்டு உங்களைக் காப்பாற்றவந்த அந்தப் பையனிடம் போய் ஜாதியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே.. ஷேம் ஆன் யூ.. நீங்க ஒரு ஒண்ணாம்நம்பர் லூசு.."//

லூசு மட்டும்தான் சொன்னீங்களா ? கூட நாலு வார்த்தை சேர்த்து சொல்லிருக்கணும் .

//பெத்த தாய் சாகக் கிடக்கும்போது, தான் ரத்தம் தர வேண்டியதில்லை எனசந்தோஷப்படும் பிள்ளைகள்.. உயிரே போனால் கூட ஜாதி மசிருதான் முக்கியம் என சொல்லும் பெண்.. இவர்கள்எல்லாம் நாகரீகம் கொண்டவர்களாக இருக்கும் இடத்தில்.. நான் காட்டானாகவே இருந்து விட்டுப் போகிறேன்.இருக்கிற இடம் பகட்டாக, அணியும் உடைகள் விலை உயர்ந்ததாக இருந்து என்ன பிரயோஜனம்? மனிதர்களைமதிக்காத ஜென்மங்களைப் பற்றி வேறென்ன சொல்ல முடியும்?

இது மட்டும் இல்ல , எத்தனையோ இடங்களில் மனிதர்கள் ஜாதி , பணம் , படிப்பு , வேலை என்று ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு மற்றவர்களை படுத்தி எடுக்குரதப் பார்த்தா கோவம் எல்லை மீறி வருது . மனசுக்குள்ளே திட்ட மட்டும்தான் முடியும் . பரவா இல்ல நீங்க லூசு என்று ஒருவார்த்தையாவது சொல்லிட்டீங்க .

கார்த்திகைப் பாண்டியன் said...

// Anonymous said...
அண்ணே, நீங்க குமுதம் ஒரு பக்க கதை நெறைய படிப்பீங்க போல. விசாவுக்கு போட்டியா இன்னும் ஒரு எழுத்தாளர்.//

நீங்க நினைக்கிற மாதிரி இது புனைவு இல்லண்ணே.. நெஜமா நடந்ததுதான்..

ஹேமா said...

கார்த்தி...இதுதான் சரி.முந்தி ஒரு பதிவில் கண்ட அநியாத்தைக் கேட்காமல் வந்தேன் என்றீர்கள்.
நல்லது செய்தீர்கள்.

எங்கே ரொம்ப நாளா நம்ம பக்கம் காணல.பொண்ணு தேடுற படலம் நடக்குறதா ராக்கோழி சொல்லிச்சு !

உடன்பிறப்பு said...

ஜாதி என்பது அந்த அளவுக்கு ரத்தத்தில் ஊறி இருக்குன்னு ரொம்ப நன்றாக தெரிகிறது

மாயாவி said...

அப்டியே சாக்கடைய அந்த அம்மா உடம்புல ஏத்தனும்... கொஞ்சம் கூட மனுஷ தன்மையே இல்லைங்க ....

ராஜவம்சம் said...

இதில் அந்த அம்மாவை எந்தவகையில் குற்றம் சொல்கிறீர்கள் என்று எனக்குப்புரியவில்லை

இதில் அவர்களுக்கு தெலிவு இல்லாதது அவர்கள் குற்றமா?
சமூகத்தின் குற்றமா?

அந்த இடத்தில் நீங்கள் கோபப்பட்டது தவறு

கோபம் வரும்போது கொள்கை அடிப்பட்டு விடும்

எடுத்துறைத்திற்க்கவேண்டும் ஜாதிப்பார்ப்பது தவறு என்று அவர்கள் உணரும் வரை

மருத்துவர் அந்த வேலையைதான் முயற்ச்சிறுந்துருபார்
உள்ளே புகுந்து கெடுத்துவிட்டீர்கள்

பனித்துளி சங்கர் said...

/////"அந்தப் பையன் எந்த ஜாதின்னு தெரியலையாம்.. அதனால் ஏத்திக்க மாட்டங்களாம்.. அவங்க ஜாதிப் பையனா இருந்தா சரியாம்.. இல்லைனா அவங்களுக்கு அது வரைக்கும் அறுவை சிகிச்சையே பண்ண வேண்டாமாம்.."
///////

இந்த மாதிரி எண்ணம் உள்ள அந்த பெண் இருந்தால்தான் என்ன ....... என்ன !

"உழவன்" "Uzhavan" said...

உங்க தலைப்புதான் நண்பா நம்ம கமெண்டும்..

தருமி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
ரத்தம் கொடுக்க வந்த அந்த பையனையும் கையோடு கூட்டி வந்திருக்கணும்..?
---------
விந்தைமனிதன் said...
//ரத்தம் கொடுக்க வந்த அந்த பையனையும் கையோடு கூட்டி வந்திருக்கணும்..//
ஆமோதிக்கிறேன்
-----
ஆமோதிப்பதை ஆமோதிக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராஜவம்சம் said...
இதில் அந்த அம்மாவை எந்தவகையில் குற்றம் சொல்கிறீர்கள் என்று எனக்குப்புரியவில்லை இதில் அவர்களுக்கு தெலிவு இல்லாதது அவர்கள் குற்றமா?சமூகத்தின் குற்றம//

இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா? எனக்குப் புரியலைங்க.. நல்லா வளர்ந்த ஒரு அம்பது வயசு பெண்மணிக்கு சுய அறிவுங்கிறது கொஞ்சம் கூட இல்லைன்னா எப்படிங்க?

வால்பையன் said...

நீ மனிதன் சகோதரா!

Prabhu said...

உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குதே. நானும் ஒரு 20 வருசமா அங்கதான் இருந்தேன். என் கண்ணு முன்ன இந்தக் கொடுமையெல்லாம் நடக்கல.

அத்திரி said...

என்னமோ போங்க புரொபசர்.கலி முத்திடிச்சி

Joe said...

கலக்கிட்டீங்க நண்பா!

சாகப் போற நிலைமையிலும் ஜாதி தான் முக்கியம்னு நினைச்சா அந்தம்மா சாகுறதே மேல். எப்போ தான் திருந்துவார்கள் நம் மக்கள்?

அந்தம்மா ஜாதி பார்த்தது, மனசுக்கு கஷ்டமா இருந்தாலும், செய்ய வந்த கடமையை செய்வோம்னு நின்ன அந்த பையனுக்கு பாராட்டுக்கள்!

Anonymous said...

//கண்டிப்பாக என்னைக் காட்டான் என்று எண்ணி இருப்பார்கள். இருக்கட்டும். பரவாயில்லை. அதனால் நான் ஒன்றும் குறைந்து போய் விடப் போவதில்லை. பெத்த தாய் சாகக் கிடக்கும்போது, தான் ரத்தம் தர வேண்டியதில்லை என சந்தோஷப்படும் பிள்ளைகள்.. உயிரே போனால் கூட ஜாதி மசிருதான் முக்கியம் என சொல்லும் பெண்.. இவர்கள் எல்லாம் நாகரீகம் கொண்டவர்களாக இருக்கும் இடத்தில்.. நான் காட்டானாகவே இருந்து விட்டுப் போகிறேன். இருக்கிற இடம் பகட்டாக, அணியும் உடைகள் விலை உயர்ந்ததாக இருந்து என்ன பிரயோஜனம்? மனிதர்களை மதிக்காத ஜென்மங்களைப் பற்றி வேறென்ன சொல்ல முடியும்?//

Well said.

அந்த அம்மாவை லூசுன்னு திட்டி இருக்கக்கூடாது. வேற எப்படியாவது திட்டி இருக்கணும். நானாக இருந்தா ஏதாவது கல்லைத் தூக்கி அவங்க தலையில் போட்டிருப்பேன். சை. அவங்க வளர்ப்பில தான் தவறுங்க. அது தான் அவங்க இரண்டு பசங்களும் அப்டி இருக்காங்க.

அந்த பையன் சரி தான் போவியான்னு சொல்லிட்டு வந்திருக்கணும். நானாக இருந்தால் கடைசி வரை அவங்களுக்கு ரத்தம் கொடுத்திருக்க மாட்டேன். உயிரோட விலை என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். யெட், ரத்தம் தேவைப்படுறது அவங்களுக்கு. எதுக்காக நான் காத்திட்டு இருக்கணும் என்று போயிட்டே இருந்திருப்பேன். இத்தனைக்கும் மூன்று மாதத்துக்கொரு தடவை ரத்தம் கொடுத்திட்டு வருகிறேன். இப்படி ஆனவர்களு என் ரத்தம் போகக்கூடாது என்று இனிமேல் ரொம்ப ஸ்ராங்கா வேண்டிட்டு கொடுக்கிறேன். சை.

ILA (a) இளா said...

//ரத்தம் கொடுக்க வந்த அந்த பையனையும் கையேடு கூட்டி வந்திருக்கணும்/
செஞ்சிருக்கலாம்

மேவி... said...

கார்த்தி ..... நானாக இருந்தால் இன்னும் மோசமாக அந்த அம்மாவை திட்டிருப்பேன் ....

மனுஷ பயபுள்ளைங்க அரிப்புக்கு மட்டும் தான் ஜாதி மதம் பார்க்க மாட்டாங்க போல் இருக்கு .....

இதே மாதிரி தான் 35 years back எங்க அப்பா ஒரு ஐயர் பொண்ணுக்கு ரத்தம் குடுக்க போன போது "நீங்க மீன் சாப்பிடு விங்களா ??" ன்னு அந்த பொண்ணு ஓட அம்மா கேட்டங்கலாம் ......

priyamudanprabu said...

இப்படியும் சில மனிதர்கள்.. ச்சே..!!!

வினோத் கெளதம் said...

suParu thala..:)

ILLUMINATI said...

//இல்லைனா அவங்களுக்கு அது வரைக்கும் அறுவை சிகிச்சையே பண்ண வேண்டாமாம்.."//

விட்டுடுங்கங்கறேன் .... இந்த மாதிரி ஜந்துக்கள் இருக்குறத விட சாகலாம்....

சாந்தி மாரியப்பன் said...

இப்படியும் சில ஜென்மங்கள் :-((.

கார்த்திகைப் பாண்டியன் said...

உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

Anonymous said...

மனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com/