நான் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது நடந்த சம்பவமிது. என்னுடைய நண்பனொருவன், திருநெல்வேலியைச் சேர்ந்தவன், இயல்பிலேயே வெகு தைரியமானவன். அதாவது அப்படியே எனக்கு நேரெதிர் குணம் கொண்டவன். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் விடுதியிலிருந்து கல்லூரிக்கு போய் வருவோம்.
அப்போதெல்லாம் ராக்கிங் கொடுமை சற்று ஜாஸ்தியாகவே இருக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் போய் வர வேண்டும். சீனியர்களிடம் மாட்டினால் ஒன்று காசு கொடு என்று மாட்டடி அடிப்பார்கள், இல்லையென்றால் ஏதாவது ரணகளமாகப் பண்ணிச் சொல்லி கொன்று எடுத்து விடுவார்கள்.
ஜாக்கிரதையாக இருந்தும் ஒரு நாள் மாலை சீனியர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டோம். உள்ளாடை உட்பட எல்லா இடத்தில் தேடியும் எங்களிடம் காசு இல்லை என்றானவுடன் கடுப்பாகி விட்டார்கள். என்னை கெட்ட வார்த்தை வாய்ப்பாடு சொல்லச் சொன்னார்கள். "அப்பாடா தெரிஞ்ச ஒண்ணாப் போச்சுன்னு" நான் பாட்டுக்கு சொல்லத் தொடங்கி விட்டேன்.
நண்பனை அருகிலிருந்த மரத்தோடு காதல் செய்யச் சொன்னார்கள். அவனும் போய் மரத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு வந்தான். "என்னடா மரம் என்ன சொல்லுது" என்று அவர்கள் சிரித்துக் கொண்டே கேட்டதற்கு நண்பன் சொன்ன பதில்தான் செருப்படி.
"கண்ட கண்ட ******** பயலுக சொல்றாய்ங்கன்னு எல்லாம் எனக்கு முத்தம் கொடுக்காதன்னு சொல்லுச்சு.."
சீனியர்களின் முகம் செத்துப் போனது. அடுத்து அவனை அடி பின்னி எடுத்து விட்டார்கள் என்றாலும், அவனுடைய தைரியத்தை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அதுதான் நெல்லை மண்ணின் வீரமோ என்னவோ? (சரி, சரி.. நெல்லை மக்கள் எல்லாம் கொஞ்சம் ஏத்தி விட்ட காலரைகீழே எறக்கி விடுங்கப்பா..)
@@@@@@@@@@
சென்ற ஞாயிறன்று பதிவுலகத் தோழி விக்னேஸ்வரி மதுரைக்கு வந்திருந்தார். அவருடைய சகோதரி, இரண்டு தோழிகள், நண்பர் நேசமித்திரன் மற்றும் மதுரை பதிவுலக நண்பர்கள் என அண்ணா நகர் காபி டேயில் ஒரு பெரும் கூட்டமே கூடி விட்டது. புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் என நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. நண்பர்கள் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தபோது பொறுமையாக கேட்டுக் கொண்டார். அவருடன் வந்திருந்த தோழிகளில் ஒருவர் எஸ்ராவின் தீவிர வாசகியாம். (அய்ய்.. நம்ம செட்டு..) மாலையில் அவரை சீக்கிரம் கிளம்ப விடாமல் தடுத்து நிப்பாட்டிய மழைக்கு நன்றி.
அதே போல சிங்கையிலிருந்து வந்திருக்கும் நண்பர் ரோஸ்விக்கை சீனா ஐயாவின் வீட்டில் செவ்வாயன்று மாலை சந்தித்தோம். ரொம்பவே இயல்பான கிராமத்து வெள்ளந்தி மனிதர் என்பது அவருடைய பேச்சில் இருந்து புரிந்தது. ரொம்ப நாட்கள் பழகிய நண்பர் ஒருவரோடு இரண்டு மணி நேரங்கள் பொழுதுபோக்கியது போன்றதொரு உணர்வு. தன்னுடைய அப்பா, அம்மாவை சிங்கப்பூருக்கு கூட்டிப்போனதைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கும்போது என்னுடைய மனது ரொம்பவே நெகிழ்ந்து போனது. என்னுடைய பெற்றோரை ஒரு முறையாவது விமானத்தில் கூட்டிச் செல்ல வேண்டுமென்பது என்னுடைய வெகுநாள் ஆசை. கூடிய சீக்கிரம் நிறைவேறும் என நம்புகிறேன். பார்க்கலாம்.
@@@@@@@@@@
என்னுடைய கல்லூரியில் படிக்கும் மாணவன் அவன். எப்போதும் கல்லூரிக்கு பங்கரையாகத்தான் வருவான். உடுத்தும் உடைகள் மற்றும் காலணிகளில் எந்தக் கவனமும் செலுத்த மாட்டான். "ஏண்டாடிரெஸ்ஸ அயன் பண்ணி, அந்த ஷூவைப் பாலிஷ் பண்ணி போட்டுட்டு வரக் கூடாதா" என நான் பலமுறை அவனைத் திட்டி இருக்கிறேன். ஆனால் சமீப காலமாக அவனுடைய நடவடிக்கைகளில் ஒரு சின்ன மாற்றம். உடைகள் அப்படியே பக்கி மாதிரிதான் அணிகிறான் என்றாலும் தினமும் ஷூ மட்டும் ரொம்ப அழகாக பாலிஷ் செய்து போட்டுக் கொண்டு வந்தான். என்னவென்று விசாரித்தபோது அவன் சொன்ன பதிலைக் கேட்டு நான் மயக்கம் போடாத குறைதான்.
"அப்பா ரிட்டையர் ஆகிட்டார் சார்.."
அடப்பாவிகளா? என்ன கொடுமை சார் இது..
@@@@@@@@@@
ரொம்ப நாட்களாக எழுத நினைத்துக் கொண்டிருந்த விஷயம். அது விஜய.டீயார் நடித்த படம். என்ன படமென்று தெரியவில்லை. டீயாரின் தங்கையை அவளுடைய கணவனே வில்லனிடம் கொண்டு வந்து விட்டு விடுகிறான். இதுதான் சிச்சுவேஷன். இப்போது நான் சொல்வதை அப்படியே படமாக உங்கள் கண்முன்னால் ஓட விடுங்கள்.
அது ஒரு கிளப்பில் ஒதுக்குப்புறமாக இருக்கும் ரூம். உள்ளே ஒரு பெரிய கட்டில். அதன் ஒரு பக்கம் வில்லன். இன்னொரு பக்கம் டீயாரின் தங்கை. அவளுடைய சேலையின் முந்தானை வில்லனின் கையில் இருக்கிறது. அவள் கதறுகிறாள். "ப்ளீஸ் என்னை விட்டுடு.. ஐயோ.." ஆபத்பாந்தவனாக கண்ணாடியை பொத்துக்கொண்டு கிளப்புக்குள் குதிக்கிறார் டீயார். ஐயையா அம்மா.. ஐயையா அம்மா.. ஜிகு ஜிகு ஜிகு.. புளு புளு.. இதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் இசைக்குறிப்புகள். டீயார் பறக்கிறார். பாய்கிறார். பயங்கரமான சண்டை.
நடுநடுவே ரேப் சீனை ஒரு குறியீடாக காட்டுகிறார்கள். ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முனையில் தீ. அருகில் இருக்கும் ரோஜாவை அந்தக் கயிறு கருக்கிக் கொண்டிருக்கிறது. பின்னணியில் தங்கையின் தீனக்குரல். "ப்ளீஸ்.. வேண்டாம்.. ஐயோ.." அதாவது வில்லன் தீக்கயிறு. தங்கை ரோஜாப்பூ. எனக்கு ஒரே பதட்டம். ஆகா டீயார் எப்போது தங்கையைக் காப்பாற்றுவார்? இல்லை ஏதாவது எசகு பிசகாக நடந்து விடுமா? கிட்டத்தட்ட இருபது நிமிட சண்டைக்குப் பிறகு டீயார் பாய்ந்து போய் அந்த ரூமின் கதவை உடைக்கிறார். அங்கே..
உள்ளே ஒரு பெரிய கட்டில். அதன் ஒரு பக்கம் வில்லன். இன்னொரு பக்கம் டீயாரின் தங்கை. அவளுடைய சேலையின் முந்தானை வில்லனின் கையில் இருக்கிறது. அவள் கதறுகிறாள். "ப்ளீஸ் என்னை விட்டுடு.. ஐயோ.."
டேய்.. இருபது நிமிஷமா இதைத்தான் செஞ்சுக்கிட்டு இருந்தியா? அடப்போங்கடா..
@@@@@@@@@@
பொதுவாக மொழிப்பிரச்சினை இருப்பதால் நான் தமிழ், ஹிந்தி தவிர மற்ற மொழிப் பாடல்களைக் கேட்பதில்லை. இருந்தாலும் ரகுமானுக்காக "கோமரம் புலி" படப்பாடல்களைக் கேட்டேன் (தெலுங்கு). ரெண்டு பாட்டு.. மகமாக மாயே மற்றும் ஒரு பிரார்த்தனைப் பாடல்.. மனுஷன் பின்னி இருக்கிறார். எங்கே போனாலும் மாயே பாட்டைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன். மற்ற பாடல்களும் கேட்க கேட்க நன்றாக இருக்கின்றன. நம்ம எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்வா சாவா மாதிரியான படம். எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்.படம் ஓட வேண்டும். ஆனால் ஓடுமா? பார்ப்போம்.
@@@@@@@@@@
சின்னதொரு கவிதை முயற்சி..
எத்தனை தடவைதான்
போட்ட படத்தையே போடுவீங்க
சலித்துக் கொள்ளும் பயணியிடம்
சிரித்து மழுப்பியபடியே நகர்கிறார்
432 ஆவது தடவையாக அதே
படத்தைப் பார்க்கப்போகும் நடத்துனர்
@@@@@@@@@@
முடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் மொக்கை.. எஸ்.எம்.எஸ் ல வந்தது..
பரீட்சைல ரஜினி ஸ்டைல்ல சொன்னா எப்படி இருக்கும்?
பாட்ஷா - நான் ஒரு சப்ஜக்ட் படிச்சா எல்லா சப்ஜெக்டும் படிச்ச மாதிரி
படையப்பா - அதிகமா படிக்கிற பொம்பளையும் அதிகமா பிட் அடிக்கிற ஆம்பிளையும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்ல
பாபா - படிச்சது கையளவு, படிக்காதது உலகளவு
சிவாஜி - கண்ணா!! பன்னிங்கதான் டெய்லி படிக்கும், சிங்கம் பரீட்சை அன்னைக்கு மட்டும்தான் படிக்கும்
சரி சரி... நோ டென்ஷன் ரிலாக்ஸ்.. இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் மீட் பண்றேன்..:-)))))

23 comments:
Me The First
எனக்கு அந்த காலேஜ் ராகிங் ரொம்ப புடிச்சுது.... உங்க நண்பனின் தைரியமும்....
//"அப்பா ரிட்டையர் ஆகிட்டார் சார்.."//
அவனை எல்லாம் அதுலயே அடிச்சாதான் என்ன?
உங்களுடைய ஆசை விரையில் நிறைவேறட்டும்...
மற்றதெல்லாம் காமடி கலாட்டா...
//"அப்பா ரிட்டையர் ஆகிட்டார் சார்.."
அடப்பாவிகளா? என்ன கொடுமை சார் இது..//
இது ஒரு நல்ல சிறுகதை பாண்டி.
என் அப்பா ரிட்டையர்ட் ஆனப்பவும் இதையே செய்தார். ஆட்சேபித்ததற்கு “போடா உனக்கு எல்.கே.ஜி.யில் பாலிஷ் போட்டதுக்கு அப்புறம், இப்போதான் போட வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்றார்.
மகன்களுக்கு எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று அப்பாக்களுக்கு வேண்டுதல். நாமென்ன செய்யமுடியும்?
எனக்கு ராகிங் அனுபவம் கிடையாது. இருந்தாலும் இவ்வளவு பயப்படுவீங்களா சீனியர்கிட்ட?
ரிட்டையர் ஆனா இப்படி எல்லாம் பிள்ளைங்களுக்கு செய்துகொடுப்பார்களா? நானென்றால் ரெண்டு அடி தான் கொடுத்திருப்பேன் அந்த பையனுக்கு.
அவரு யாரு
டீ ஆரு
கேள்வி கேட்க நீங்க யாரு?
(நோ நோ அழக்கூடாது.. இது டீ ஆரு effect.)
//திருநெல்வேலியைச் சேர்ந்தவன், இயல்பிலேயே வெகு தைரியமானவன். அதாவது அப்படியே எனக்கு நேரெதிர் குணம் கொண்டவன். //
ippadi solli solliyee ...............avvvvvvvvvvvvv
அனைத்தும் ரசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ஸாரே, எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தைகளையும் நீங்க ஸ்டார் மார்க் போட்ட இடத்துல நிரப்பிப் பார்த்துட்டேன்!
ஒன்னு கூட மேட்ச் ஆகா மாட்டேங்குது. ஸ்டார்ஸோட எண்ணிக்கையை சரி பண்ணுங்க. இல்லைன்னா அது என்ன வார்த்தைன்னு தனிமடல் அனுப்புங்க.
மண்டை காய்கின்றது.
:-(
ஹிஹிஹி.....
டீஆரு சூப்பரு....
//“போடா உனக்கு எல்.கே.ஜி.யில் பாலிஷ் போட்டதுக்கு அப்புறம், இப்போதான் போட வாய்ப்பு கிடைச்சிருக்கு”//
இதுகூட யோசிக்க வைக்குது....
A Godly Gift...
:)))
//தினமும் ஷூ மட்டும் ரொம்ப அழகாக பாலிஷ் செய்து போட்டுக் கொண்டு வந்தான். என்னவென்று விசாரித்தபோது அவன் சொன்ன பதிலைக் கேட்டு நான் மயக்கம் போடாத குறைதான்.
"அப்பா ரிட்டையர் ஆகிட்டார் சார்.."
அடப்பாவிகளா? என்ன கொடுமை சார் இது..//
மனதை தொட்டது :)
//"அப்பா ரிட்டையர் ஆகிட்டார் சார்.."
அடப்பாவிகளா? என்ன கொடுமை சார் இது..//
உங்ககிட்ட ரொம்பபிடிச்சது இதுதாங்க, உங்களுக்கு நடப்பதையை அடுத்தவர்களுக்கு நடப்பதாக புனைத்து எழுதி மற்றவர்களை நம்பவைப்பது.
அண்ணே இது உக்காந்து யோசிச்ச மாதிரியில்லே, ரூம் போட்டு நெடு நாள் தங்கி யோசிச்சா மாதிரி இருக்கு.
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
//
அண்ணா நகர் காபி டேயில் ஒரு பெரும் கூட்டமே கூடி விட்டது.
//
அந்த இடத்தை அறிமுகம் செய்தது யாரு? ;-)
//
(அய்ய்.. நம்ம செட்டு..)
//
என்ன பெரிய ஷேவிங் செட்டு?!?
தல ...முத வருஷத்துல இப்படி தான் ...கூட படிச்ச பையனே என்கிட்டே ரொம்ப வம்பு பண்ணினான். நான் அவனை தனிய கூப்பிட்டு ஒரு பத்து நிமிஷம் பேசினேன் ..... அதுக்கு அப்பரும் காலேஜ் முடிக்கிற வரைக்கும் என்னை எங்க பார்த்தாலும் அவன் வேற பக்கம் திரும்பி போயிருவான் .... அந்தளவுக்கு நமக்கு பேச தெரியும் :
நேசமித்திரன் மேல என்ன கோவம் ....அவர் பதிவிற்கு லிங்க் தரவில்லையே ???
மாற்று கருத்திற்கு இங்கு இடமில்லையா ??? ஐயகோ என்ன கொடுமை
"சிவாஜி - கண்ணா!! பன்னிங்கதான் டெய்லி படிக்கும், சிங்கம் பரீட்சை அன்னைக்கு மட்டும்தான் படிக்கும்"
சார் ... நாங்க எல்லாம் சிறுத்த மாதிரி ..கதை கேட்டு தான் பரீட்சையே எழுதுவோம் . படிக்கிறதெல்லாம் தைரியம் இல்லாத பசங்க செய்யுறது.
///மகமாக மாயே மற்றும் ஒரு பிரார்த்தனைப் பாடல்.///
பாடலில் வரு, "அளக்கி ஹாய் அளக்கி ஹாய் " எனும் வரிகளை கேட்டு பாருங்கள் . superb ... சுசித்ராவின் குரல் அருமை... "கோட்சே.. கோட்சே..." பாடலும் அதன் ஆரம்ப ராப்'ம அருமை...
எப்போது இருந்து மதுரை முத்து மாதிரி ஆனீர்கள்............
என் அப்பாவை நினைத்து பார்க்கின்றேன்.. எந்த இடத்திலும் தன் பாசத்தை வெளிக்காட்டிக்கொள்ளாதவர்
நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க...
//எஸ்.ஜே.சூர்யா... எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்//
அவரு நடிக்க ஆரம்பிச்ச பிறகுமா... ?
Post a Comment