February 6, 2011

யுத்தம் செய் மிஷ்கின்

தமிழ் சினிமா உலகில் தங்களுக்கென பிரத்தியேக அடையாளங்களை உருவாகிக் கொண்ட இயக்குனர்கள் என்றால் வெகு சிலரை மட்டுமே சொல்ல முடியும். அவர்களில் முக்கியமானவர்கள்... மனித மன உணர்வுகளை துல்லியமாக படம் பிடித்த மகேந்திரன், கிராமப்புறம் சார்ந்த படங்கள் என்றால் பாரதிராஜா, சிக்கலான உறவுமுறைகள் சார்ந்து இயங்கிய பாலச்சந்தர், படத்துக்கு சம்பந்தமே இல்லாத பிரம்மாண்டப் (என்று நம்பப்படுகிற) படங்களை எடுத்த ஷங்கர், இருண்மையும் மூர்க்கனத்தனமும் நிரம்பிய பாத்திரங்களை அச்சு அசலாக உலவவிட்ட பாலா. இவர்கள் எல்லாருமே தாங்கள் உண்டாக்கிய புறச்சூழல் மூலமாகவும் தாங்கள் காட்டிய மனிதர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த உலகம் காரணமாகவும் தனித்துத் தெரிபவர்கள்.

ஆனால், இதிலிருந்து விலகி, கதை சொல்லும் உத்தியிலும் தங்களுக்கான பிரத்தியேகமானதொரு திரை மொழியை உருவாக்குவதிலும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் என்னால் மூன்று பேரை சொல்ல முடியும். குற்றவுணர்வு இல்லாத காமத்தை திரையில் காட்சிப்படுத்திய பாலு மகேந்திரா அதில் முதன்மையானவர். அவர் படங்களில் நாயகனுக்கு இடுப்புக்கு மேலேயும் நாயகிக்கு இடுப்புக்குக் கீழேயும் உடையிருக்காது என்பது எழுதப்படாத விதி. அடுத்ததாக மணிரத்னம். படம் இருட்டுக்குள் நடக்கிறது என்றால் சிறு குழந்தை கூட அது மணியின் படம் என சொல்லிச் செல்லும். அதே போல அவர் படத்தின் பாத்திரங்கள் பேசும் ஒற்றை வார்த்தை வசனங்களைத் தனது அடையாளமாக மாற்றிக் கொண்டவர். அந்த வரிசையில் அடுத்தவராக என்னால் இப்போது மிஷ்கின் என்றே சொல்ல முடிகிறது.

காமிரா ஒரு இடத்தில் அசையாமல் நிற்கிறது. அதன் கோணத்தில் ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்பாரா ஒரு தருணத்தில் காமிரா திடீரென பயணிக்கத் தொடங்க நாமும் அதன் கூட சேர்ந்து ஓடுகிறோம். டாப் ஆங்கிளில் காட்டப்படும் வைட் ஆங்கிள் ஷாட்டுகள். கால்களின் வழி கதை சொல்லும் உத்தி. ஒரு காட்சி முடியுமிடத்தில் சடாரென ஆரம்பிக்கும் அதிரடிக் காட்சி. சுவர் இருக்குமிடம் மூலமாக இரண்டு அறைகளுக்கும் நடுவே பயணிக்கும் காமிரா. சொல்லிக் கொண்டே போகலாம். கண்டிப்பாக சில வருடங்களுக்குப் பிறகு பெயர் சொல்லாமல் வெறும் காட்சிகளை மட்டும் போட்டுக் காட்டினால் கூட இது மிஷ்கின் படம் என நம்மால் சொல்ல முடியும். தமிழில் அப்படியானதொரு திரை மொழியை உருவாக்கி இருப்பதுதான் மிஷ்கினின் வெற்றி என நான் தீவிரமாக நம்புகிறேன்.

கோபம் வரும்போது பதட்டம் அதிகமாக இருக்கும். பதறிய காரியம் சிதறும் என்று சொல்வார்கள். ஆனால் மிஷ்கினைப் பொறுத்தவரை இது அப்படியே உல்டா. சித்திரம் பேசுதடி முடிந்து நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்தும் படம் கிடைக்காத காரணத்தால் வெந்துபோய் செய்ததுதான் அஞ்சாதே. அதேபோல மிகப்பெரிய நம்பிக்கையுடன் எடுத்த நந்தலாலா இரண்டு வருடங்களாக வெளியாகாமல் பெட்டியில் இருந்ததன் கோபமே அவரை “யுத்தம் செய்”யத் தூண்டியிருக்கிறது. இந்தப்படத்தை அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் எனப் பலரும் சொன்னார்கள். ஆனால் சத்தியமாக இதற்கும் அஞ்சாதேக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. போலிஸ் பின்புலம் சார்ந்து இரண்டு நண்பர்களின் கதையைப் பேசியது “அஞ்சாதே”. ஆனால் முழுக்க முழுக்க நகரில் நடக்கும் தொடர்கொலைகளையும் அது பற்றிய போலிஸ் விசாரணையையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் “யுத்தம் செய்” தமிழின் முதல் முழுமையான இன்வெஸ்டிகேட்டிவ் படம் என்று சொல்லலாம்.



“கிகுஜிரோ”வை உருவி நந்தலாலா செய்து விட்டு “tribute,tribute" என்று சொல்லிக் கொண்டிருந்த மிஷ்கின் இந்தப் படத்தில் உண்மையாகவே ஒரு அற்புதமான சமர்ப்பணத்தை செய்திருக்கிறார். கதையின் கடைசிக் காட்சியில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் "மகேஷ் முத்துசாமி". தன்னுடைய முதல் மூன்று படங்களிலும் தனக்குக் கண்ணாக விளங்கிய நண்பருக்கு இதைவிட அழகாக யாரும் "tribute" செய்துவிட முடியாது. அதேபோல இந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் - படத்தில் எந்த இடத்திலும் மிஷ்கினின் பெயர் வரவேயில்லை.

இசையமைப்பாளர் கே பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். இசையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதைக் காட்டிலும் எங்கெல்லாம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை இந்த இளைஞர் கூர்ந்து கவனத்தில் கொண்டு மிக அருமையாக செய்திருக்கிறார். படத்தின் பின்னணியில் ஒலிக்கும் இசைக்கோர்வைகள் அட்டகாசம். பேண்டோரா பாக்ஸ் என்கிற பெயரில் வரும் இசைத்துணுக்கு கிகுஜிரோவின் “சம்மரை” நினைவுபடுத்துவதை மட்டும் சற்றே தவிர்த்திருக்கலாம். முக்கியமான இன்னொருவர் அறிமுக ஒளிப்பதிவாளர் சத்யா. மகேஷ் முத்துசாமி என்கிற மனிதர் இந்தப் படத்தில் இல்லை என்பதான குறை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

காணாமல் போகும் சேரனின் தங்கை, தொடர்ச்சியாக நகரின் முக்கிய இடங்களில் கண்டெடுக்கப்படும் வெட்டுப்பட்ட கைகள், தற்கொலை செய்து கொண்ட ஒரு குடும்பம், காணாமல் போகும் பெண்கள் என தொடர்ச்சியாக கேள்விகள் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. முதல் பாதி முழுதுமே ரொம்பக் குழப்பமாக ஏன் இவை எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு புதிர்ப்பயணமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கண்ணியாக விடுவிக்கப்பட்டு காரண காரியங்களை நாம் கண்டு கொள்ளும் இடத்தில் திகைத்துப் போகிறோம். படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் சற்றே நாடகத்தனமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக அந்த நாடகத்தனம்தான் இந்தப்படத்தின் பலமே.

மாயக்கண்ணாடி, பொக்கிஷம் என்றெல்லாம் சுழன்று சுழன்று நம்மை கொலையாய்க் கொன்ற சேரனுக்கு இந்தப்படம் ஒரு லைஃப்லைன். இறுக்கமான முகத்தோடு சுற்றும்போதும் சரி, தங்கையின் குரலைக் கேட்டு பதட்டம் கொள்ளும்போதும் சரி.. பாத்திரம் உணர்ந்து அளவாக நடித்து இருக்கிறார். இடைவேளைக்கு முன்பு நெயில்கட்டரோடு அவர் போடும் சண்டைக்கு தியேட்டரில் விசில் கிழிகிறது . படத்தின் அடுத்த முக்கிய நடிகர் ஜெயப்பிரகாஷ். பிணங்களைக் கூறு போடும் டாக்டராக அவர் வரும்போது நல்ல நடிகரை வீணடிக்கிறார்களே என்று மண்டை காய்ந்தது. ஆனால் கதையின் போக்கை மாற்றும் பாத்திரமாக அவர் மாறும் இடம் பளிச். “ஓடிக்கிட்டே இருந்தோம்.. அவனுங்க தொரத்துனானுங்க.. முடியல.. எவ்ளோ தூரம் ஓட.. அதான் இப்ப நாம தொரத்துறோம். அவனுங்க ஓடுறானுங்க..” சாகும் தறுவாயில் அவர் பேசும் வசனங்கள் பட்டாசு. ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் லக்ஷ்மி நரசிம்மனின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் விதம் ரொம்பவே தீவிரம்.

படத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அந்தக் கருமம் பிடிச்ச “கன்னித்தீவு பொண்ணா” பாட்டு. வால மீனுக்கும் பாட்டுக்கும், கத்தாழ கண்ணால பாட்டுக்கும் ஏணி வச்சாக்கூட இந்தப் பாட்டால எட்ட முடியாது. மாளவிகாவோட கிரேஸ் என்ன, ஸ்நிக்தாவோட டான்ஸ் என்ன.. இங்க நீத்து சந்திரா வெறும் பம்மாத்து. அதை விடக் கொடுமை சாருவோட நிலமை. நாலு செகண்டு மேனிக்க ரெண்டு தடவை ஆளக் காட்டுறாங்க. அதுபோக பாட்டு பூராவும் அவரொட விரல்கள். ஆர்மோனியம் மேல நளினமா நடனம் ஆடுதாம். அந்தாளு தலையில இடி விழ.. தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கிட்டாரு மனுஷன். படத்துல ஒட்டவே செய்யாத இந்தப்பாட்ட மிஷ்கின் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்ல.

ஆக மொத்தத்தில் அதகளம் பண்ணும் மிஷ்கினின் இன்னொரு படம்தான் “யுத்தம் செய்”. ஒரே மாதிரியாப் படம் எடுக்கிறார். கொஞ்சம் அலுப்பா இருக்குன்னு எல்லாம் ஒரு சில நண்பர்கள் சொல்றாங்க. எனக்கு அப்படி எதுவும் தெரியல. கடந்த பத்தாண்டுகளில் உருவான தமிழ் இயக்குனர்கள்ல ரொம்ப முக்கியமானவர்கள்னு நாம பேசணும்னா அதுல நம்மால மிஷ்கினை நிராகரிக்கவே முடியாது.

ஏ மிஷ்கின்.. ஐயாம் லவ் யூ..:-))))

23 comments:

Anonymous said...

//நான் என் நண்பரிடம் இவர் தான் 'சாரு' என்றேன் அவர் 'யாரு' என்றார்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறந்த விமர்சனம் நண்பரே..

விமர்சனத்தை நகர்த்திச் சென்ற விதம் அழகு.

சாரு.. ஹிஹிஹி.. ;)

தமிழ்வாசி பிரகாஷ் said...

very good comments
*******
மனைவியும் ஆம்லெட்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

scribleinside
தெரியாதவங்க பத்தி கவலையில்லை நண்பா.. தெரிஞ்சவங்கதான் பாவம்..

செந்தில்வேலன்
ரொம்ப நன்றி நண்பா

தமிழ்வாசி
சீக்கிரம் படத்த பாருங்கப்பா

வினோத் கெளதம் said...

விமர்சனம் அழகு.
திங்கள்க்கிழமை தான் போஸ்ட் பண்ணனுமா.! :)

ஆதவா said...

நல்லதுங்க... கதையைப் போடமாட்டீங்கன்னு எதிர்பார்த்தமாதிரியே எழுதலை,... இல்லாட்டி தனித்து இருக்காது. இதுவரை நான் படித்த யுத்தம் செய் விமர்சனங்களில் உங்களுடையது சிறப்ப்பாக இருக்கிறது.

இருந்தாலும் நீங்கள் வெற்றிமாறனை உங்கள் லிஸ்டில் சேர்க்காதது ஏன்?
விவரம் தெரியாத காலத்தில் மணிரத்னம் படங்கள் என்றால் அதுதான் இந்தியாவின் உலகசினிமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்(தோம்) ஆனால் மணிரத்னம் ஒரு மிஷ்கின் மாதிரியான திரைமொழியை தன் சொந்த மொழியால் தந்தவரல்ல.. கிரியேட்டிவ் டைரக்டர் என்று அவரைச் சொல்லிவிடமுடியாது. மிஷ்கின் தனது முதல் படத்திலிருந்தே காட்சிகளின் மூலம் கதை நகர்த்தும் பாணியைத் துவக்கிவிட்டார். தவிர அவரது படங்களில் இருக்கும் நுணுக்கம் மணி படங்களில் கிடையாது.

குத்துப்ப்பாட்டு எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். சாதாரண மக்களிடையே கத்தாழ கண்ணால பேசப்பட்ட அளவுக்கு அஞ்சாதேயின் மேக்கிங் பேசப்பட்டிருந்ததா? இல்லையே.... அது மக்களை வரவழைக்கும் ஒரு உத்தி... அவ்வள்வே, அது மிஷ்கினுக்கும் தெரியும், ஆடுகளம் எடுத்த வெற்றிமாறனுக்கும் படத்தில் காதல் கதை தேவையற்றது என்று நன்றாகவே தெரியும், இங்கே இறுக்கமாக கதை கேட்டு மக்களிடம் பழக்கமில்லை... மிஷ்கின் கூறுவது போல, ஒரு வருடம் கஷ்டப்பட்டு படமெடுப்பதை மக்கள் 2 மணிநேரம் கஷ்டப்பட்டு அறிந்து கொள்ளவேண்டும்.. கஷ்டம் என்பது படத்தில் நாம் பங்கெடுத்துக் கொள்வது.....

Unknown said...

விமர்சனம் அருமை சார் ,சாரு தலைல இடி விழ ஹி ஹி ஹி ,

Ganesan said...

அருமையான விமர்சனம்.

இன்று மாலை சேரனுடன் பார்க்க இருக்கிறேன்.

குமரை நிலாவன் said...

நல்ல விமர்சனம் .

விவரம் தெரியாத காலத்தில் மணிரத்னம் படங்கள் என்றால் அதுதான் இந்தியாவின் உலகசினிமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்(தோம்)

உண்மைதான் ஆதவா சார் .

sathish said...

nalla

sathish said...

அருமையான விமர்சனம் கா.பா .. ஆறு பாட்டு, ஏழு ஃபைட்டு இல்லாத நல்ல தமிழ் படம். விஜய் ,அஜித் இந்த படத்த பார்த்தாவது திருந்தனும். .

மேவி... said...

"ஏ மிஷ்கின்.. ஐயாம் லவ் யூ..:-))))"

நீங்க சொன்ன dress யை ப்ரீத்தி போட்டுக்கிட்டு வரல ங்கிறதுக்காக இப்படி நீங்க அவங்களுக்கு துரோகம் பண்ண கூடாது

இலக்கியமா யோசிக்கலாம் ...அதுக்குன்னு இப்படி பின்நவீனமா பேச கூடாது

டிஸ்கி - உங்களை தனுஷாகவும் ... மிஷ்கினை தப்ஸீயாகவும் நினைத்து பார்த்தேன் .... ஒரே குஜால்ஸ் ஆ இருந்துச்சு

நானும் படம் பார்த்தேன் வியந்தேன்

மேவி... said...

நன்றி காபா ...இலக்கிய பாஷாவின் அடுத்த பகுதிக்கான கரு கிடைத்து விட்டது

கார்த்திகைப் பாண்டியன் said...

வினோத் கெளதம்
நல்ல பாருப்பா.. ஞாயிறு நைட் போஸ்ட் பண்ணது..:-))

//ஆதவா said...
இருந்தாலும் நீங்கள் வெற்றிமாறனை உங்கள் லிஸ்டில் சேர்க்காதது ஏன்?//

ஆதவ்.. நன்றி.. நல்லா கவனிங்க.. இங்க இருக்குறவங்க எல்லாம் நல்ல இயக்குனர்னு சொல்லல.. தனக்குன்னு ஒரு பாணியை உருவாக்குனவங்க.. அந்த வகையில பார்க்கும்போது வெற்றிமாறன் இன்னும் தனக்குன்னு ஒரு திரைமொழியை உண்டாக்கலைன்னு நினைக்கிறேன்.. மற்றபடி அவர் ஒரு அட்டகாசமான இயக்குனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது..

நா.மணிவண்ணன்
உங்க ஆசை பலிக்க வாழ்த்துகள் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

காவேரி கணேஷ்
படம் பார்த்தாச்சா? உங்க விமர்சனத்த எழுதுங்க நண்பா..

குமாரை நிலாவன்
நன்றி தலைவரே

sathish
கண்டிப்பா.. அது நடந்தாத்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது

மேவி
நீ நடத்து மகனே..:-))

Annamalai Swamy said...

அருமையான விமர்சனம் நண்பரே!

//மாயக்கண்ணாடி, பொக்கிஷம் என்றெல்லாம் சுழன்று சுழன்று நம்மை கொலையாய்க் கொன்ற சேரனுக்கு இந்தப்படம் ஒரு லைஃப்லைன்.// :)

சக்தி கல்வி மையம் said...

விமர்சனம் அருமை.,

King Viswa said...

//“கிகுஜிரோ”வை உருவி நந்தலாலா செய்து விட்டு “tribute,tribute" என்று சொல்லிக் கொண்டிருந்த மிஷ்கின் இந்தப் படத்தில் உண்மையாகவே ஒரு அற்புதமான சமர்ப்பணத்தை செய்திருக்கிறார்.//

சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். நம்ம ஊருல எல்லாம் அற்பணிப்பு என்று போட்டால் தான் (இந்த கோவில் விளக்குல அன்பளிப்பு என்று எழுதுவது போல) இருந்தால் தான் அது ட்ரிபியூட் என்றொரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. நன்றி கார்டோ, அர்பணிப்போ செய்ய முடியாத ஒன்றை அந்த படத்தில் அவர் செய்திருக்கிறார்.

அந்த படத்தின் இரண்டு சீன்களை அப்படியே கொண்டுவந்து அந்த இயக்குனருக்கு செய்த அற்பணிப்பு அது. என் சார், இவ்வளு தெளிவா சிந்திக்கிற மனுஷன் அந்த ரெண்டு சீனை மாற்றாமல் விடுவாரா, காபி அடிக்கும்.உருவும் எண்ணம் இருந்தால்? அவர் அந்த ரெண்டு சீனை வைத்ததால் தானே அப்படியே எடுத்து இருக்கிறார் என்று பேச்சு வந்தது?

// அதேபோல இந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் - படத்தில் எந்த இடத்திலும் மிஷ்கினின் பெயர் வரவேயில்லை.// டைட்டில் கார்ட்ஸ் போடும்போது பாருங்கள், கடைசி பெயர் அவருடையது தான்.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

கார்த்திகைப் பாண்டியன் said...

Annamalai swamy
thanks bro..;-))

sakthistudycentre
நன்றிங்க..


//King Viswa said...
சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். நம்ம ஊருல எல்லாம் அற்பணிப்பு என்று போட்டால் தான் (இந்த கோவில் விளக்குல அன்பளிப்பு என்று எழுதுவது போல) இருந்தால் தான் அது ட்ரிபியூட் என்றொரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. நன்றி கார்டோ, அர்பணிப்போ செய்ய முடியாத ஒன்றை அந்த படத்தில் அவர் செய்திருக்கிறார். //

விஸ்வா.. எனக்கு இன்னமும் மிஷ்கின் மேல கோபம் இருக்கு.. நீங்க நல்லா கவனிச்சா தெரியும்.. படம்வெளிவரதுக்கு முன்னாடி அவர் கொடுத்த பேட்டிகள்ள எங்கயுமே கிகுஜிரோ பத்தி பேசவே இல்ல.. குறிப்பா பூஜை போட்டப்போ ராஜ் டிவி ல தந்த பேட்டில இது என்னோட கதை.. என் வாழ்க்கை என்கிற ரீதியில வார்த்தைகள் விட்டார்.. படம் வெளியான பின்னும் ஒத்துக்கவே இல்ல.. tribute னு சொன்னது எப்போன்னா, சேரன் ஒரு பேட்டில உலக சினிமா படங்களைத் தமிழ்ல தர்றது தப்பில்லன்னு கருத்து சொன்ன ஒரு நேரத்துல இந்த வார்த்தைகளை அள்ளி விட்டாரு.. எனக்கு மிஷ்கினப் பிடிக்கலன்னு சொல்லல.. அவர் நேர்மையா இல்லைங்கிறது என் கவலை.. நீங்க சொல்ற மாதிரி ஒண்ணு ரெண்டு காட்சி எல்லாம் வைக்கல, எக்கச்சக்கமா சுட்டு இருந்தாரு.. இது என்னோட கருத்து மட்டுமே.. அப்புறம் தலைவரே.. லயன் ஆபிஸ்ல இருந்து ஏதாவது தகவல் உண்டா? புது புத்தகங்கள் பத்தி?

King Viswa said...

//எனக்கு மிஷ்கினப் பிடிக்கலன்னு சொல்லல.. அவர் நேர்மையா இல்லைங்கிறது என் கவ// நண்பரே, அடுத்த வாரம் மதுரை வர்றேன் - நேரமிருந்தால் சந்திப்போம். அப்போ சொல்றேன் மிஸ்கின் உணமையிலேயே எப்படிப்பட்டவர் என்று. நான் கடந்த பத்தாண்டுகளில் பல சினிமாக்காரர்களை நேரில் சந்தித்து இருக்கிறேன் (நேற்று கூட நடுநிசி நாய்கள் டீமுடன் ஒரு சந்திப்பு எங்கள் அலுவலகத்தில் நடந்தது) ஆனால் அதில் நேர்மையானவர்கள் என்பது குறைவே. அதில் மிக ஒழுக்கமானவர்களில் மிஷ்கின் ஒருவர். அவருடைய அண்ணனை ஒரு முறை பாருங்கள் தெரியும், அந்த பிச்சு மணி கேரக்டர் எங்கிருந்து வந்தது என்று.

//அப்புறம் தலைவரே.. லயன் ஆபிஸ்ல இருந்து ஏதாவது தகவல் உண்டா? புது புத்தகங்கள் பத்தி?//

மூன்று புத்தகங்கள் ரெடி. ஒரு லயன் காமிக்ஸ் (சிக் பில் - வெள்ளையாய் ஒரு வேதாளம்), ஒரு காமிக்ஸ் கிளாசிக்ஸ் (இரும்புக்கை மாயாவி - களிமண் மனிதர்கள்) மற்றும் ஒரு முத்து காமிக்ஸ் (ஜானி ஹஜார்ட் - விண்ணில் ஒரு குள்ள நரி) என்று இந்த புத்தகங்கள் மூன்றுமே அடுத்த வாரம் உங்கள் கைகளில் இருக்கும். உடனடியாக வேண்டுமெனில் அலுவலகம் சென்று வாங்கி விடுங்கள்.

விண்ணில் ஒரு குள்ள நரி பற்றிய முன்னோட்ட பதிவிற்கு இங்கே கிளிக் செய்யவும்:விண்ணில் ஒரு குள்ள நரி


கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

King Viswa said...

//அப்புறம் தலைவரே.. லயன் ஆபிஸ்ல இருந்து ஏதாவது தகவல் உண்டா? புது புத்தகங்கள் பத்தி//

இன்று ரிலீஸ் ஆன இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்'கள் பற்றிய தகவல்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில்.
இரும்புக் கை மாயாவி தோன்றும் - களிமண் மனிதர்கள் - காமிக்ஸ் கிளாசிக்ஸ்
சிக்பில் குழுவினர் தோன்றும் - வெள்ளையாய் ஒரு வேதாளம் - லயன் காமிக்ஸ்



கிங் விஸ்வா
இன்று ரிலீஸ் ஆன இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

king viswa
நண்பா.. XIII வாங்கிட்டு மொத்தம் ஏழு புத்தகத்துக்கு பணம் கட்டிட்டு வந்தேன்.. பொறுமையாய் இருந்துதான் வாங்கணுமா? ஏழும் ஒண்ணா வர்றலையா? உங்க அலைபேசி எண் இருந்தா என் மின்மடலுக்கு அனுப்புங்களேன்.. பேசுவோம்..
karthickpandian@gmail.com

kumar said...

In this Film Copy of "Mission of Murders".
Another Tribute Of Mishkin.