
என் கனவுகளின் வனாந்திரங்களில்
அலைந்து திரிகிறதுன் நினைவுகள்
வன்மம் கொண்ட மிருகமென
இருள் சூழ்ந்த பாதைகளில்
இலக்கற்று சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இ(எ)ன்றேனும் மழை வரக்கூடுமென
காத்திருக்கிறது நிலம்
ரகசியமாய் காற்றுடன் உரையாடும்
மரங்களின் வேர்களில் வழிந்தோடுகிறது
தொலைந்துபோன காதலின் ஸ்பரிசங்கள்
தோல்வியின் வேதனைகளை தாங்கியபடி
கருமேகங்களென சிறகடித்துப் பறக்கும்
கறுப்பு நிறக் கொக்குகள் வானில்
குருதியின் ருசியறிந்த ஓநாய்கள்
காத்திருக்கின்றன தருணத்தை எதிர்நோக்கி
எங்கிருந்தோ கசியத்தொடங்குகிறது
துரோகத்தின் கொடிய நெடி
மாயமானின் நாபியில் இருந்து
பெருகிப்பெருகி மூச்சடைக்கும்
அந்நெடியில் இருந்து வெகுண்டோடி
கனவுகள் கிழித்து கண்விழித்தவன்
என் படுக்கையில் கிடந்தேன்
இருந்தும் அதிகாலைப் பனியென
உடம்பின் மீது உறைந்து போயிருந்தது
துரோகத்தின் தீரா நெடி
10 comments:
எதோ ஒரு மூலையில் சிறு வலி தாக்குகிறது...
நேற்றுதான் ஒரு தூக்குமாட்டிக்கொண்ட ஒருவனது மரணத்தை நேரடியா சந்தித்தேன். அந்த வலி மறைவதற்குள்.. இதோ இன்னொரு வலியை உங்கள் கவிதை ஏற்படுத்தி போயிருக்கிறது
ஓவரா தமன்னாவை நெனச்சுக்கிட்டே நைட் தூங்கினா இப்படித்தாங்க இருக்கும்.
கவிதைகளில் நல்ல முன்னேற்றம்!!
ஏதாவது இதழுக்கு அனுப்பி வைக்கலாமே?
கவிதைகளில் நல்ல முன்னேற்றம்
?????????????????
ஜெய்சக்திராமன்
காதலிக்குற எல்லாருக்குமே அந்த வலி இருக்கும்டா..
கவிதை காதலன்
ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு வலிய ஞாபகப்படுத்தினா சரிங்க..
ஆதவா..
நன்றி நண்பா.. முயற்சிக்கிறேன்..
தமிழ்வாசி
உனக்கு இருக்குடி..
குமாரை நிலாவன்
ரைட்டு தலைவரே
அத்திரி
பேசுவோம்ணே
ஸ்ரீ
கெட்ட வார்த்தைல திட்டுவீங்கன்னு நினச்சேன் அண்ணே..
///தமிழ்வாசி
உனக்கு இருக்குடி..///
அண்ணே எதுனாலும் தனியா பேசி தீர்த்துக்கலாம்.
ean eallarum elutha ninaikkiranga vera eathavathu seialame. (Thanks to asokamithran). By Thirusenthalai.
இதுவும் கடந்து போகும்!
Post a Comment