
கனவுகளில்
எத்தனையோ லட்சம் மனிதர்களால்
எத்தனையோ கோடி முறை
விதவிதமாய்
புணரப்பட்ட அவ்வுடல்
உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது
லாரியின் முன்தொங்கும்
கறுப்புக்கயிற்றின் வெண்சங்கு
அல்லது
அறுந்து தொங்கும்
சிலந்தி வலையின்
ஒற்றையிழையில்
ஊசலாடிக் கொண்டிருக்கும்
பூச்சியொன்றை நினைவுறுத்தியபடி
காதல் தோல்வியென சிலரும்
தீராத நோயென சிலரும்
நம்பிக்கைத் துரோகமென சிலரும்
படங்களின் தோல்வியே காரணமென சிலரும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏதும் தெரியாதவன் போல்
கூட்டத்தில் ஒருவனாய் நின்றிருந்தேன்
அன்றிரவென் சம்போகத்தில்
தொடர்ச்சியாய் வந்து போன
முகங்களின் ஊடே
திடீரெனத் தோன்றிய அவள் முகத்தில்
கண்கள் இருக்குமிடத்தில் வெற்றுக்குழிகளும்
வாயில் இரு கோரைப்பற்களும் - அதில்
உறைந்து போனதொரு சிரிப்பும்
இருந்தன
(புகைப்படம் - auniakahn.com)
15 comments:
அருமை.. உங்கள் எழுத்து மனதை ஏதோ செய்கிறது..
இப்படியெல்லாம் எழுதி எங்கள பயமுறுத்தலாமா????
அந்த முகத்தை நெனச்சுப் பாக்கவே திகிலா இருக்குது..
நெகிழ வைக்கும் கவிதை..
கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..
அழகான நெகிழ வைக்கும் வரிகள் .. நல்ல படைப்பு வாழ்த்துக்கள் .:)
சம்திங் மிஸ்.
கவின்ஜர் காபா வால்க வால்க
Excellent as usual...
மனதை தொடுகிறது நண்பரே..
i like it...superbbbb
eppadi ippadi... super.. vaalththukkal
கவிதை அருமை நண்பரே
முதல் பகுதிக்கும் கடைசி பகுதிக்கும் தொடர்பில்லாதது போலுள்ளது
ஒரு நடிகையின் தற்கொலைக்கும் உங்களது பயதிற்க்குமான முடிச்சு சரியாயில்லை வாத்தியாரே
கொண்டு சென்ற கிளாஸ்
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.. ஏதோ ஒன்று குறைகிறதென சொன்ன நண்பர்களுக்கு ரொம்ப நன்றி.. முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மக்களே..
"முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மக்களே."
ஒடுங்க ஒடுங்க ...அது நம்மள நோக்கி தான் வருது
Post a Comment