April 5, 2011

2011 தேர்தலும் தரங்கெட்ட ஊடகங்களும்

இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி இருந்தது.

"தேங்காய் உடைத்து கருணாநிதி பயணம்"

திராவிடம், கடவுள் மறுப்பு எனச் சொல்லும் கருணாவும் சகுனம் பார்க்கிறார் என நிறுவுகிறார்களாம். அதே இதழில் வெளியாகி இருந்த இன்னும் சில தலைப்புகள்..

"அதிருப்தி.. கோஷ்டி சண்டை காரணமாக சோனியா வருத்தம்.."

"புதுவையில் உடைகிறது தி.மு. அணி.."

"பாமகவுக்கு ஆதரவாக குஷ்பூ? எப்படி ஆகிப்போச்சு நிலைமை.. திமுகவினர் கவலை.."

இது எல்லாமே சாம்பிள்தான். திமுகவை திட்டி எழுதுவது தவிர்த்து எத்தனை செய்திகள் தினமலரில் வருகிறது எனப் பார்த்தால் இரண்டு பக்கம் கூட தேறாது போல. அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனியம் சார்ந்து இயங்கக் கூடிய பத்திரிக்கை, இவர்களுக்கும் திமுகவுக்கும் ஆகாது என எல்லாருக்கும் தெரிந்தாலும் இந்தத் தேர்தலில் எல்லா எல்லைகளையும் மீறிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டபோது இவர்கள் எழுதியது..

“ஜெ.க்கு தெரியாமலே பட்டியல் வெளியானதா?”

ஜெவை நல்லவர் என நிறுவ முயலும் இவர்கள், மன்னார்குடி கும்பல்தான் அவரைச் சீரழிக்கிறது எனச் சொல்லும் இவர்கள், அவர்களை விட்டு வெளியே வாருங்கள் என எழுதாது ஏன்? திராவிடம் புண்ணாக்கு என்றெல்லாம் சொல்லி விட்டு கோவில் கோவிலாக ஜெ போகும்போது இவர்களுக்கு கசப்பதில்லையே. லூசுத்தனமாக அவர் காரியம் செய்தால் கூட ஜெ அப்பாவி, கருணாநிதி அதையே செய்தால் அடப்பாவியா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்?

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை தினமலர் வைகோவை சீண்டிய விதம். தேர்தல் புறக்கணிப்பு என்றதும் “ஓட்டம்” எனக் கார்ட்டூன், ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள் தினம் என்பதாக வைகோ மீண்டும் ஜெவைச் சந்தித்தார் எனச் செய்தி போட்டு அசிங்கப்படுத்தியது. இதையெல்லாம் வெளிப்படையாக ஒரு கட்சிக்கு ஆதரவு சொல்லி விட்டு செய்யலாமே.. இதுதான் எங்கள் அரசியல் நிலைப்பாடு என முடிவு செய்கிறீர்களா.. தைரியமாக அறிவித்து விட்டு மோதலாமே.. ஏன் நடுநிலை நாளிதழ் என்கிற பெயரில் செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி.

அடுத்ததாக விகடன் குழுமம். தங்கள் வீட்டில் ஒரு அங்கம் எனத் தமிழக மக்கள் பலரும் நம்பும் பத்திரிக்கை. அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மதுரையில் ஜூ.வி நிருபருக்கு அடி விழுந்த நேரத்தில்தான் இது ஆரம்பித்தது என நினைக்கிறேன். முதலில் நன்றாக விஜயகாந்துக்கு விளம்பரம் கொடுத்து சுதி ஏற்றினார்கள். அதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிமுக ஏன் தேமுதிகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றும் விளக்கினார்கள்.

இப்போது தேர்தல் நேரத்திலோ நேரடியாக களத்திலேயே இறங்கி விட்டார்கள். தொடர்ச்சியாக கருத்து கணிப்புகள், அத்தனையும் மு.க மற்றும் அவர் குடும்பத்தைத் தாக்கி. மறைமுக எண்ணம் என்றெல்லாம் இல்லாமல் நேரடித் தாக்குதல்தான். மறக்க முடியுமா என்று தலையங்கம், துறை வல்லுனர்களின் குற்றச்சாட்டு, அரசாங்கம் நிகழ்த்தும் அராஜகம் என்று பயங்கரமான ஒரு ஊடகத் தாக்குதலை விகடன் இன்றைய அரசு மீது நிகழ்த்தி வருகிறது. அதிலும் விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை அடித்ததை சப்பைக்கட்டு கட்டி ஜூ.வியில் வெளியான கட்டுரை அத்தனை பெரிய கேவலம்.

கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிக்கைகளுமே இந்தத் தேர்தலில் ஏதாவொரு நிலையெடுத்து இயங்குவதாக தெரிகிறது. நக்கீரனைப் பொறுத்தவரை அது அறிவிக்கப்படாத முரசொலி மாதிரி. ஊரில் எல்லாப்பயலும் திமுக ஜெயிப்பது கஷ்டம் என்றால் இவர்களுக்கு மட்டும் எல்லா இடங்களிலும் அதாவது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி என்பார்கள். ஜிங்க்சாக் அடிங்கையா.. ஆனா கொஞ்சமாவது மனசாட்சியோட அடிங்க.

தினத்தந்தியைப் பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சாதகம். அரசியல் விசயங்ளைப் பொறுத்தவரை ஹிந்து என்பது நம்மைப் பிடித்து இருக்கும் ஒரு கெரகம். ஆ.விக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதாலேயே குமுதம் திமுக பக்கம். துக்ளக் - சொல்லவே வேண்டாம். ஏதோ தமிழக அரசியல் (யார் பத்திரிக்கை என்று தெரியவில்லை) என்கிற ஒரு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் தொலைக்காட்சிகள் எல்லாமே கட்சிசார் நிறுவனங்கள் என்றாகி விட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் உண்மையான செய்திகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் இவர்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து எழுத்தொடங்கினால் பொதுஜனம் என்ன செய்வது? எங்களுடைய கருத்துதான் உங்களுடையதாகவும் இருக்க முடியும் என மக்கள் மீது திணிப்பது எத்தனை பெரிய அராஜகம்? நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் எழுத்துத் துறை இந்த லட்சணத்தில் இருந்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது?

பீப்ளி லைவில் ஒரு காட்சி வரும். பல ஆண்டுகளாக உழைத்த ஒருவன் அதே கிணறுக்குள் விழுந்து செத்துப் போயிருப்பான். ஆனால் ஊடகங்களோ சர்ச்சைக்குரிய மனிதன் மலம் கழித்த இடத்தை தேடிக் கொண்டிருப்பர்கள். இங்கே எது விற்குமோ அதைத் தருவதுதான் ஊடகங்களின் கடமை என்பதாக ஒரு நிருபர் சொல்லுவார். இதுதான் நிதர்சனம். உண்மைக்கு இங்கே மதிப்பு இல்லை. விக்கிலீக்ஸுக்கு கேபிள்கள் அனுப்பி உதவிய வீரரொருவர் இருபதாண்டு தனிமைச் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு இன்னும் சிறிது நாட்களில் பைத்தியம் ஆகும் சூழலில் இருக்கிறார். இதை நேர்மையாக எந்த பத்திரிக்கையாவது வெளியிட்டதா? இல்லையே.. எல்லாமே வியாபாரம்னு ஆகிப் போச்சு.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சின்னு எந்த பேதமும் இல்லாம உண்மையா செய்திகள் சொல்ற பத்திரிக்கையோ, டிவியோ இனிமேல் வாய்ப்பே இல்லைன்னுதான் தோணுது. இதே லட்சணத்துல போனா பி.எஸ்.வீரப்பா டயலாக்க சொல்லித்தான் முடிக்கணும்.. “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..”

17 comments:

மேவி said...

:)

தமிழ்வாசி - Prakash said...

எல்லா ஊடகங்களுமே மாயை தான்...உண்மை இல்லை. என்ன செய்வது, அவர்களுக்கு யாரையாவது அண்டி நடந்தால்தான் பிழைப்பு ஓடும போல....

ttpian said...

அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன்:
கடைசி பாப்பானும்,பாப்பாத்த்யும் இருக்கும் வரை எந்த இனமும்
மானத்துடனும், பொருளாதார வளத்துடனும் வாழ முடியாது!
என்ன செய்வது?
இதற்காக போராட,இதை மாற்ற யார் உள்ளார்கள்?

அத்திரி said...

நல்ல அலசல் புரொபசர்........... நடுநிலை என்றால் எத்தனை கிலோ என்று கேட்கும் அளவுக்கு இருக்கு விகடனின் ஜிங்சாக்க்................................... என்னத்த சொல்ல...................

ஆதவா said...

ஹாஹாஹா.... என்ன சார்.... இவங்கள இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க...??

என்னோட நண்பர் சொல்வார்... இப்படி ஒருசார்பா இருக்கிற சமயங்கள்ல, இரண்டு சார்பு வாதங்களையும் எடுத்து, நீதிபதி மாதிரி நாமளே எது நல்லதுன்னு எடைபோட்டு தீர்ப்பு சொல்லணும்.... அதிலயும் தமிழ்நாடு அரசியல், ஊடகங்கள்ல நடக்கிற கொடுமை வேறங்கயும் இருக்காது. இப்ப போய் சட்டுனு ஜெயா டிவியோ சண்டிவியோ கலைஞ்சர் டிவியோ போட்டு பாருங்க.. ஒருத்தன் இன்னொருத்தனை அடிச்சுட்டு இருப்பான். எவன் வேட்பாளர், தேர்தல் அறிக்கை என்ன? அடுத்து தமிழ்நாட்டுக்கு என்னல்லாம் செய்வோம்.... ம்ஹும்... இதெல்லாம் எப்பவாச்சும்தான் வரும். இங்கே வடிவேலு விஜயகாந்தை குடிகாரன்னு சொல்றதும், அங்கே வடிவேலு 11 ,மணிக்கு என்ன பண்ணுவார்னு எனக்குத் தெரியும்னு சொல்றதும்.... இதெல்லாம் அரசியல் பேச்சா???

வெட்கக்கேடு!! இந்ததடவை ஓட்டு போடலாம்னா யாருக்குப் போடறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்.

Elayaraja Sambasivam said...

என்னோட மனசுல இருந்தது எழுத்தா பார்க்கிறேன் ....

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவி
இப்படி சிரிப்பான் போடுறதுக்கே மூக்குல குத்தப் போறேன் பாரு..

தமிழ்வாசி
வாஸ்தவம்தான் தல..

ttpian
நான் இதை வர்ணம் சார்ந்து பார்க்கலைங்க.. ஆதாயத்துக்காக ஊடகங்கள் செய்ற அராஜகம்தான் என்னோட வருத்தம்

கார்த்திகைப் பாண்டியன் said...

அத்திரி
அண்ணே.. உங்க அரசியல் அறிவு அளவுக்கு நமக்கு வராதுண்ணே.. உங்க ஸ்டைல்ல ஒரு கட்டுரையை சிக்கிரம் எழுதுங்கப்பு..:-))

இளையராஜா
ரொம்ப நன்றிங்க..:-))

மேவி said...

{"தினத்தந்தியைப் பொறுத்தவரை எந்த பேதமும் இல்லாம உண்மையா செய்திகள் சொல்ற பத்திரிக்கை"


"வைகோவை மூக்குல குத்தப் போறேன் பாரு"


"ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள் தினம் மதுரையில் ஜூ.வி நிருபருக்கு அடி விழுந்த நேரத்தில்தான் இது ஆரம்பித்தது என நினைக்கிறேன்"


"திமுகவை தவிர்த்து எத்தனை செய்திகள் தினமலரில் வருகிறது எனப் பார்த்தால் இரண்டு பக்கம் கூட தேறாது போல"

“ஜெ.க்கு தெரியாமலே ஸ்டைல் வெளியானதா?”}

எல்லாம் நீங்க எழுதியது காபா ...இடையில் நான் ஒரு வார்த்தை கூட புதுசாய் எழுதவில்லை

Mahi_Granny said...

இது அசல் கா. பா. ஸ்டைலாக இருக்கு. உங்கள் ஆதங்கம் எல்லோருக்கும் வேணுமே.

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவி
அடி வாங்கப் போறீங்க

மகி_கிரானி
நன்றிங்க மேடம்..:-))

ஆளவந்தான் said...

அதென்ன.. நக்கீரனுக்கு ஒரு சப்பைக்கட்டு..

தினமணியும் தான் - இதே மாதிரி, தலையங்கம், கட்டுரை, கேலிச்சித்திரம் போடுறாங்க.. அதைப் பத்தி லாவகமா மறந்தாச்சா.. இல்ல அப்படி ஒரு பத்திரிக்கை இருக்கிறது தெரியாதா?

கருணாநிதிக்கு இந்த பத்திரிக்கைகள் ஆதரவா இல்லேங்கிறது தான் உங்க ஆதங்கமா இருக்கு.

நடுநிலை என்பது என்ன? ரெண்டு பேருமே நல்லவங்க’னு சொல்றதா..

இது நல்லா இருக்கு. இவங்க நல்லவங்க’னு சொல்றது தான் நடு நிலைமையா..?

karthickeyan said...

கார்த்திகைப் பாண்டியன் வாழ்க
'2011 தேர்தலும் தரங்கெட்ட ஊடகங்களும்' என்ற தலைப்பில் கார்த்திகைப் பாண்டியன் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை நிச்சயம் பாராட்டுக்குரியதே.
நடுநிலையாக சிந்திக்கின்ற ஊடகப் பார்வையாளர்களும் படிப்பாளர்களும் பலர் இருக்கிறார்கள் என்பதை பல காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் மறந்து வருகின்றன,
இந்த உண்மையை
இந்தத் தேர்தல் தெளிவாக உணர்த்தி வருகிறது.
. ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் குறித்து தி. க. தலைவர் வீரமணி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அண்மைக்காலங்களில்
வெளிவந்த ஆ. வி., ஜு. வி.இதழ்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன.
'மறக்க முடியுமா?' என்று ஜெயலலிதாவின் தவறுகளையும்
சுட்டிக்காட்டித் தலையங்கம் எழுதியிருந்தால்
ஆனந்த விகடன் மீது நம்மைப் போன்ற நெடுநாள் வாசகர்களுக்கு
சந்தேகம் வந்திருக்காது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய பல செய்திகள் கடந்தகால தமிழ் இதழ்கள் பலவற்றில் வெளிவந்திருக்கின்றன. சிலவற்றையாவது எடுத்துப் போட்டிருக்கலாமே! எங்கிருந்தோ வந்த உறவு சசிகலா.
என்ன உறவு என்று யாருக்கும் இதுவரை தெரியாது. வந்த உறவின் மீது ஜெயலலிதாவுக்கு இவ்வளவு பாசம் இருக்கும்போது, சொந்த உறவுகள் மீது கலைஞருக்கு அவ்வளவு பாசம் இருக்காதா?
பிறரை அடக்கி ஆள அழகிரி நினைத்தால் அதற்குப் பெயர் அடாவடித்தனம் அல்லது ரவுடித்தனம் அதையே ஜெயலலிதா செய்தால் அதற்குப்பெயர்
துணிச்சல்.
எஸ். டி. சோமசுந்தரம் என்ற மூத்த தலைவர் ஒருவர் ஜெயலலிதாவின பிரச்ச்சார வண்டியில் தொங்கிக்கொண்டே
வந்தாரே, மறக்க முடியுமா?
தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டதை நினைவுபடுத்தும் விகடன் தருமபுரி
பேருந்து எரிப்பை மறக்கலாமா?
இன்றைக்கும் தன கட்சித் தலைவர்களும் பிற கட்சித் தலைவர்களும் தன் காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்து ஜெயலலிதா உள்ளம் மகிழ்கிறாரே, அதற்க்குக் காரணம் என்ன?
வயதில் பல
ஆண்டுகள் மூத்தவரான கலைஞரை ஒருமையில் அழைத்து இழிவாகப் பேசி அகமகிழ்ச்சி அடைகிறாரே, என்ன காரணம்?.
சோ. இராமசாமி தனக்கு முனனால் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததை சகித்துக்கொண்ட ஜெயலலிதா தன் கட்சியில் உள்ள மூத்த தலைவர் ஒருவரை அப்படி அமர அனு மதிப்பாரா ?. மனிதன நேயச் சிந்தனையாளர்களுக்கும் . சமூகநீதி உணர்வுள்ளவர்களுக்கும்தான் இந்தக் கொடுமை களுக்கான காரணம் புரியும்.
.
கடந்த இரண்டு தேர்தல்களில் பல ஊடகங்கள்
திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என கணித்தன.
ஆனால், நக்கீரன்
திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்தது. அதுதான் நடந்தது.
இப்போதும் நக்கீரன் திமுக கூட்டணி 140 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்று கணித்திருப்பதாக அறிகிறேன், இதுவும் உண்மையானால் வியப்பதற்கில்லை .
- நம்பிஆறூர் நம்பி

யோஹன்னா யாழினி said...

உண்மை...தினமலர் ஒரு குப்பை பத்திரிகை..!

paravu said...

தினமலர் என்ற பெயரை மாற்றி காலைக் கடன் என்று வைத்தால் பொருத்தமாக இருக்குமோ?

viswabalaa.ms said...

ellalm sonninga tholar........ yan kadaisiya veerappa dilag sonninga
entha nattu makka mela ungalukku akkakrai ellaiya?

Kamil said...

En manasula patathellam neenga solli irukenga. mikka santhosam. Dinamlarai patriya ungal kuripu migavum arumai.arumai mattum alla unmaiyum kuda..!!