April 28, 2011

கவிதைகளின் கவிதை


அந்தி நேர மஞ்சள் வானம்
தனித்திருக்கும் நிழல்
செடியில் பூத்த ஒற்றை ரோஜா
தொலைந்து போன காடு
குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு
சாம்பல் நிறமான இரவு
பவுர்ணமி நிலவில் கடலலைகள்
நியாயம் தவறிய தண்டனைகள்
கூண்டுக்குள் சிறகடிக்கும் காதல் பறவைகள்
கடவுளும் சைத்தானும்
உனக்கான என் பிரியம்
ஆசையைத் தொலைத்தவனா புத்தன்
நீ விட்டுச் சென்ற கைக்குட்டை
அர்த்தஜாம மோகினி
அறையில் மீதமிருக்கும் உன் வாசம்
இரண்டு தலைகளையுடைய பூனை
உதட்டோரச் சிரிப்பு
படமெடுக்கும் சர்ப்பம்
வில்லென உயரும் புருவங்கள்
அர்ஜுனனின் காண்டீபம்
முதல் முத்தம்
மரணத்தை முழுதாய் உணர்ந்தவன்
அபாய வளைவுகள்
எனக்கான ஒரு நதி
தியேட்டர் பொழுதுகள்
சொல்லவொண்ணா சூன்யம்
மறக்கவியலா அந்த இரவு
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை
கருணையின் கண்கள்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
நான்கும் ஒன்றான கால்கள்
ததும்பும் மதுக்கோப்பைகள்
நான் உன்னை மறப்பதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை
கொலையும் தற்கொலையும் மட்டுமே
நினைவில் கொண்ட
கனவுகளில் தொலைந்து போனவனின்
கவிதை இதுவென கொள்

11 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதைகளின் கவிதை..
நன்றாகவுள்ளது நண்பா..

வி.பாலகுமார் said...

இதே மாதிரி ஒரு லிஸ்ட் நானும் பண்ண ஆரம்பிச்சேன், பாதில தூங்குது.

(ஒவ்வொரு வரியையும் தனித்தனி தலைப்பாக்கி கவிதை கொ'ல்'வோமா? :) )

ஆதவா said...

என்னாச்சுங்க பாஸ்!@!!
கவிதை நல்லாத்தேன் இருக்கு!!

தொகுப்பு கவிதைன்னு சொல்லலாம்!!

இந்திரா said...

//செடியில் பூத்த ஒற்றை ரோஜா//

//குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு//

//பவுர்ணமி நிலவில் கடலலைகள்//

//நீ விட்டுச் சென்ற கைக்குட்டை//

//அறையில் மீதமிருக்கும் உன் வாசம்//

//எனக்கான ஒரு நதி//


//நான்கும் ஒன்றான கால்கள்//

//கொலையும் தற்கொலையும் மட்டுமே
நினைவில் கொண்ட
கனவுகளில் தொலைந்து போனவனின்
கவிதை இதுவென கொள்//


இவை மறுபடியும் படிக்கத் தூண்டிய வரிகள்..

புரியலனு சொல்லலங்க..
நல்லா இருந்துச்சுனு சொல்ல வரேன்..

வாழ்த்துக்கள்.

sakthi said...

கா பா தி கிரேட்

sakthi said...

வில்லென உயரும் புருவங்கள்

நம்ம கோ ஹீரோயின் கார்த்திகா மாதிரின்னு சொல்லுங்க

sakthi said...

நான் உன்னை மறப்பதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை

அட பைபிள் வாசகம்

கார்த்திகைப் பாண்டியன் said...

குணசீலன்
ரொம்ப நன்றி தலைவரே

பாலா
இதுல ஒரு விளையாட்டு ஆடி இருக்கேன்.. முதல், மூன்றாம், ஐந்தாம் வரிகள்னு வரிசையாப் பாருங்க.. அதே மாதிரி 2, 4, 6 முதலான வரிகள்.. மொத்தமாவும் தனித்தனியாவும்.. எப்படி இருக்குன்னு பாருங்க.. அதோட உங்க லிஸ்டையும் போடுங்க மக்கா

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்திரா
பிடிச்சிருக்குன்னா சந்தோசம் மேடம்.. இது கொஞ்சம் காண்டுலயும் நக்கலாவும் எழுதினதுங்க..

சக்தி.. நன்றி தோழி. உங்க தயவால் ராகவன்கிட்ட இன்னைக்குப் பேசினேன்.
//
நம்ம கோ ஹீரோயின் கார்த்திகா மாதிரின்னு சொல்லுங்க//

அதேதானுங்க.. பிள்ள நம்மள கவுத்திட்டா..:-)

வி.பாலகுமார் said...

//அதோட உங்க லிஸ்டையும் போடுங்க மக்கா//

கார்த்தி , தூசு தட்டி போட்டாச்சு :)
http://solaiazhagupuram.blogspot.com/2011/04/blog-post_29.html

ஆ.ஞானசேகரன் said...

அருமை