March 19, 2009

எல்லாப் புகழும் வில்லுக்கே...(2)!!!

கடந்த ரெண்டு மூணு நாளாவே நம்ம பதிவர்கள் எல்லாம் விஜயையும் அவரோட திருச்சி பிரஸ் மீட் பத்தியும் எழுதி கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க. இத்தனை நாளா நான் ரொம்ப அடக்கம்னா அப்படின்னு சீன் போட்டுக்கிட்டு இருந்த அவரோட உண்மையான முகம் இப்போ வெளிப்பட்டிருக்கு. எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்துற கடமை நமக்கு இருக்குங்கறதால இந்தப் பதிவு...

இருக்குறதுலேயே பெரிய லூசு யாரு?

* கதையே தெரியாம நடிச்சுட்டு, வில்லு படம் என்னோட அம்பதாவது படமா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்னு காமடி பண்ண விஜயா?

* ஜெம்ஸ் பாண்டு, எம்ஜியார் படம் பார்த்த பீல் வரும்னு சானல் சானலா போய் உளருன பிரபுதேவாவா..?

* இந்த படாமாவது நல்லா இருக்கும்னு நம்பி பார்த்த விஜய் ரசிகர்களா..?

* அத ஒரு படமா மதிச்சி பிரஸ் மீட்டுக்கு வந்த நிருபர்களா...?

* ரசிகர்கள விஜய் என்ன லட்சணத்துல மதிக்கிறாருன்னு பார்த்த பிறகும், விஜய் மாதிரி வருமான்னு இந்தப் பதிவ படிச்சிட்டு என்ன திட்டப் போற விஜய் ஆதரவு பதிவர்களா?

நீங்களே சொல்லுங்கப்பா..

***************

க்ரைம் ஸ்டோரி புத்தகத்தில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்....

கேள்வி: உங்களைக் கவர்ந்த சினிமா இயக்குனர்கள் பற்றி..?

பதில்: தங்கர் பச்சானையும், ராதாமோகனையும் ரொம்ப பிடிக்கும். அழகியும், அபியும் நானும் படங்கள் என்னை பாதித்தவை. இவர்கள் படங்களுக்கு நம்பி போகலாம். சமீபத்தில் எனக்கு ஒரு கலா விபத்தும் நிகழ்ந்தது. என்னை விபத்துக்கு உள்ளாக்கியவர் விஜய்... படம் வில்லு. இதற்கு முன்பே குருவி என்ற பெயரில் கழுகாக வந்து கொத்திக் குதறி இருந்தவர் இந்த முறை வில்லை விட்டு ரணகளப் படுத்தி விட்டார். இனி விஜய் படத்தை டிவியில் பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன்.

(மைன்ட் வாய்ஸ்: என்னால அவர் படத்த டிவியில கூட பார்க்க முடியாதுங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்.... )

***************

உலகத்திலேயே அதிகம் கிண்டல் செய்யப் படுவது சர்தார்கள்தான் என்பதை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப் போன சர்தார்கள் கோபமாக வெளியே வந்து கத்தத் தொடங்கினார்கள்..

"யாருடா அவன்? எங்கள விட பெரிய லூசா? யாருடா அந்த விஜய்? குருவி, வில்லுங்கர படத்துல எல்லாம் நடிச்சு இருக்கானாமே.....?"

***************

போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?

கைதி : படம் பார்க்கணும்...

போலீஸ் : சரி வில்லு போகலாமா ?

கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

***************

குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...

"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."

(மைன்ட் வாய்ஸ்: ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன..?)

***************

ஒருவர் :அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர் :யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

***************

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் "அஜய்" என்ற படத்தை பார்க்கிறார் விஜய்.

விஜய்: அப்பா அப்பா.. இந்த படம் சூப்பரா இருக்கு.. சீக்ரமா இந்த படத்தோட ரைட்ச வாங்கு.. நாம ரீமேக்கு பண்ணலாம்..

எஸ். எ. சி. : அட பக்கி.. நல்லா பாரு.. இது நீ நடிச்ச கில்லி படத்தோட உல்டா.. அதுவே ஒக்கடு தெலுங்க படத்தோட உல்டா.. உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு.. அடச்சே.. என்ன கொடுமடா சாமி?

(நன்றி - பதிவர் விஷ்வா... முதல் வில்லு பதிவில் அவர் பின்னூட்டத்தில் போட்ட சில ஜோக்குகளை இங்கே பயன்படுத்தி உள்ளேன்...)

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

98 comments:

நையாண்டி நைனா said...

ஏன் இந்த கொலைவெறி????

நையாண்டி நைனா said...

என்ன திடீர்னு கமண்டு மாடுரேசன்?

உங்களை திட்டி எழுதிருவாங்கன்னு பயமா?

அதெற்கெல்லாம் அஞ்சாதே.... நண்பா....

அப்படி வந்திருந்தா. பிற்பாடு கூட நீக்கி கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

Unknown said...

விஜய் மேட்டரு வீடியோ உருவில் பதிவு உலகில் கலக்க நம்ம‌ கா.பா காணவில்லையேன் பார்த்தேன்.

Anonymous said...

ventha punnile kuruviya vittu kothi,villala nalla kilari irukkinga!!

வேத்தியன் said...

நாந்தே ரெண்டாவது...

வேத்தியன் said...

// இத்தனை நாளா நான் ரொம்ப அடக்கம்னா அப்படின்னு சீன் போட்டுக்கிட்டு இருந்த அவரோட உண்மையான முகம் இப்போ வெளிப்பட்டிருக்கு. //

ஆமாங்க...

வேத்தியன் said...

// எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்துற கடமை நமக்கு இருக்குங்கறதால இந்தப் பதிவு... //

கலக்குங்க கலக்குங்க...

கார்த்திகைப் பாண்டியன் said...

நையாண்டி நைனா..
//ஏன் இந்த கொலைவெறி????//

இது நம்ம கடமை நண்பா.. ஹி ஹி ஹி..

//என்ன திடீர்னு கமண்டு மாடுரேசன்?
உங்களை திட்டி எழுதிருவாங்கன்னு பயமா?அதெற்கெல்லாம் அஞ்சாதே.... நண்பா.... //

போன பதிவுல ரொம்ப பட்டுட்டே நண்பா.. அதனால்தான்.. வரப் போற பொண்டாட்டியக் கூட விடாம திட்டுறாங்க.. இந்த ஒரு பதிவு மட்டும் அஜ்ஜிஸ் பண்ணிக்கப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
விஜய் மேட்டரு வீடியோ உருவில் பதிவு உலகில் கலக்க நம்ம‌ கா.பா காணவில்லையேன் பார்த்தேன்.//

அதான் வந்துட்டோம்ல.. எல்லாரும் வீடியோ மேட்டர போடுறப்போ நாம ஏதாவது திருகுநித்தனம் பன்னனும்லப்பா..

குடந்தை அன்புமணி said...

பாவம்பா... விட்டிருங்க....

லோகு said...

ஐயோ பாவம் விஜய்... அஜித்துக்கு போட்டியா இருந்தவர மூணு நாள்ல டி.ஆர் க்கு போட்டி ஆக்கிட்டோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Dr Senthil கூறியது...
ventha punnile kuruviya vittu kothi,villala nalla kilari irukkinga!!//

ஏதோ நம்மளால முடிஞ்சது நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
கலக்குங்க கலக்குங்க...//

வருகைக்கு நன்றி வேத்தியன்..

Anonymous said...

உங்க எழுத்து நடை அருமை நண்பா. பதிவும் விறுவிறு, சுறு சுறு தான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said..
பாவம்பா... விட்டிருங்க....//

வாங்க நண்பா.. அப்படி எல்லாம் விட முடியுமா.. அவர்தான அடுத்த முதல்வர்.. அவரு லட்சணம் இதுதான்னு மக்களுக்கு சொல்லனும்ல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
ஐயோ பாவம் விஜய்... அஜித்துக்கு போட்டியா இருந்தவர மூணு நாள்ல டி.ஆர் க்கு போட்டி ஆக்கிட்டோம்..//

இது டீயாருக்கு தெரிஞ்சா கொதிச்சு போய்டுவாரு நண்பா.. அவரு ரேஞ்சே வேற..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
உங்க எழுத்து நடை அருமை நண்பா. பதிவும் விறுவிறு, சுறு சுறு தான்.//

ரொம்ப நன்றி நண்பா.. போன பதிவுல நூறடிக்க உதவி இருக்கீங்க.. சந்தோஷம்...

Anbu said...

அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவரு!!

பார்ப்போம் அண்ணா "அசல்" எப்படி இருக்கும் என்று!!

புல்லட் said...

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? நம்மூர்லசினிமா டிக்கட்டு 200 ரூவா...
ஆனா விசயோட வில்லு படத்துக்கு படம் வந்து அடுத்த நாளே தியேட்டர் வாசலில
”உள்ளே வாங்க! டிக்கட் ப்ரீ ” ன்னு போட்டிருந்துச்சு..

சனமும் ப்ரீதானேன்னு அடிச்சு புடிச்சு உள்ளாற பூந்துட்டாய்ங்க..படந்தொடங்கி ஒரு பத்து நிமிசத்துல சனமெல்லாம் தலையப்பிச்சுக்கொண்டு வெளிய ஓடப்போறச்சே வாசலில ரெண்டு தடியங்க நின்னுட்டு சொன்னாங்க...
” ஐயா படம் முடிய முன்ன வெளில போறதுன்னா 500 ரூவா”..

அன்னிக்கு தியேட்டர் முதலாளிக்குவரலாறு காணாத கலக்சன்...
உள்ளபோனவனெல்லாம் கூட ஒரு 100 ரூவா குடுத்துட்டு ஓடினான்...
இப்ப முதலாளி விசயோட அடுத்த படம் என்னிக்கு வரும்னு காத்துக்கிட்டு கிடக்கார்....
தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.. :)

Anbu said...

விஜயை பற்றி தவறாக பேசிய உங்களை கி.பி.304 சட்டத்தின்படி கைது செய்ய ஆணை இடுகிறேன்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
பார்ப்போம் அண்ணா "அசல்" எப்படி இருக்கும் என்று!!//

நல்லா இருக்கும்னு நம்பிக்கிட்டு இருக்கேன் அன்பு.. வாய வச்சுறாதீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி... //

கொன்னுட்டீங்க நண்பா.. இதையே ஒரு பதிவா போட்டு இருக்கலாம்.. மிஸ் பண்ணிட்டேனே..

Anonymous said...

கலக்கலண்னே...! பாவம் விட்டிருங்க
அதுவும்... தூக்கு தண்டனை இருக்கே.. ஹாஹாஹா
வேட்டைகாரன் சூப்பர்ப் ஹிஹிஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
விஜயை பற்றி தவறாக பேசிய உங்களை கி.பி.304 சட்டத்தின்படி கைது செய்ய ஆணை இடுகிறேன்!!//

எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம் அன்பு..-:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த்..//

நண்பா.. உங்க கருத்துரை எப்படியோ வெளியாகல.. இருந்தாலும்.. உங்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள்..

Anonymous said...

புல்லட் பாண்டி கூறியது...
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? நம்மூர்லசினிமா டிக்கட்டு 200 ரூவா...
ஆனா விசயோட வில்லு படத்துக்கு படம் வந்து அடுத்த நாளே தியேட்டர் வாசலில
”உள்ளே வாங்க! டிக்கட் ப்ரீ ” ன்னு போட்டிருந்துச்சு..

சனமும் ப்ரீதானேன்னு அடிச்சு புடிச்சு உள்ளாற பூந்துட்டாய்ங்க..படந்தொடங்கி ஒரு பத்து நிமிசத்துல சனமெல்லாம் தலையப்பிச்சுக்கொண்டு வெளிய ஓடப்போறச்சே வாசலில ரெண்டு தடியங்க நின்னுட்டு சொன்னாங்க...
” ஐயா படம் முடிய முன்ன வெளில போறதுன்னா 500 ரூவா”..

அன்னிக்கு தியேட்டர் முதலாளிக்குவரலாறு காணாத கலக்சன்...
உள்ளபோனவனெல்லாம் கூட ஒரு 100 ரூவா குடுத்துட்டு ஓடினான்...
இப்ப முதலாளி விசயோட அடுத்த படம் என்னிக்கு வரும்னு காத்துக்கிட்டு கிடக்கார்....
தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.. :)

March 19, 2009 6:56 PM
****************************
பாண்டியன்னோய்....! புல்லட் மாதிரி நச்...! ஹாஹாஹாஹா
ரண்டு பாண்டியும் காக்கிறாங்க

Anonymous said...

நையாண்டி நைனா கூறியது...
என்ன திடீர்னு கமண்டு மாடுரேசன்?

உங்களை திட்டி எழுதிருவாங்கன்னு பயமா?

அதெற்கெல்லாம் அஞ்சாதே.... நண்பா....

அப்படி வந்திருந்தா. பிற்பாடு கூட நீக்கி கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

March 19, 2009 5:54 PM

*****************
ரிப்பிட்டிகிறன்!

Anbu said...

http://anbu-openheart.blogspot.com/2009/03/blog-post_19.html

அண்ணா பதிவினை போட்டுவிட்டேன்!!

சின்னப் பையன் said...

:-)))))))))))))

அத்திரி said...

எப்படியோ பதிவு ஹிட் ஆகனும்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்.........

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
கலக்கலண்னே...! பாவம் விட்டிருங்க
அதுவும்... தூக்கு தண்டனை இருக்கே.. ஹாஹாஹா
வேட்டைகாரன் சூப்பர்ப் ஹிஹிஹி//

வாங்க கவின்.. இன்னைக்கு உங்களோட பேச முடியாம போனதுல ரொம்ப வருத்தம்.. ஏதோ தொடர்பு சாதனப் பிரச்சினை போல.. உங்களுடைய அலைபேசி என்னை என்னோட மின்னஞ்சலுக்கு அனுப்பினா நான் கூப்பிடுவேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
அண்ணா பதிவினை போட்டுவிட்டேன்!!//

கண்டிப்பா பாக்குறேன் அன்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said.. பாண்டியன்னோய்....! புல்லட் மாதிரி நச்...! ஹாஹாஹாஹா
ரண்டு பாண்டியும் காக்கிறாங்க//

புல்லட் மற்றும் என் சார்பாக.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச்சின்னப்பையன் said..
:-)))))))))))))//

வருகைக்கு நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
எப்படியோ பதிவு ஹிட் ஆகனும்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்.........//

என்ன நண்பா.. இப்படி சொல்லிட்டீங்க.. மனசுக்கு கஷ்டமா இருக்கு.. ஹிட் ஆகனும்கரதேல்லாம் கர்ரெக்ட் தான்.. ஆனா அதுக்காக மட்டுமா எழுதுறோம்? நமக்கு பிடிச்சது தான.. அதுவும் உங்க மாதிரி நண்பர்கள நம்பித்தானே.. எல்லாரும் விஜய ஓட்டும்போது நாம மட்டும் சும்மா இருக்க முடியுமா..அதனால தான் இந்தப் பதிவு.. ஏதோ மனசுல பட்டத சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க..

Vidhya Chandrasekaran said...

ROTFL:))

கார்த்திகைப் பாண்டியன் said...

//வித்யா said..
ROTFL:))//

என்ன சொல்றீங்கன்னு தெரியல.. smiley எல்லாம் போட்டு இருக்கீங்க.. இருந்தாலும்.. வருகைக்கு நன்றி..

shabi said...

கார்க்கின்னு ஒரு விஜய் வெறியர் எங்கே பதிவும் இல்ல பின்னூட்டமும் இல்ல ரூம் போட்டு உக்காந்து அழுகிறாரா

பெங்களுர்காரன் said...

பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது..நன்றி...

நீங்க சொல்றது போல விஜய் படத்தை தொ.கா. யில் கூடப் பார்க்க முடியாது...

நேரத்துக்கும் பணத்துக்கும் பிடித்த கேடு!

சபரிநாதன்
பெங்களூரு

கார்த்திகைப் பாண்டியன் said...

//sahbi said..
கார்க்கின்னு ஒரு விஜய் வெறியர் எங்கே பதிவும் இல்ல பின்னூட்டமும் இல்ல ரூம் போட்டு உக்காந்து அழுகிறாரா//

ஏன் நண்பா.. கார்க்கிய வம்புக்கு இழுக்குறீங்க.. அவர்பாட்டுக்கு சிவனேன்னு எங்கயோ இருக்காரு.. விடுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வலையேறி மூக்கன் said..
பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது..நன்றி...நீங்க சொல்றது போல விஜய் படத்தை தொ.கா. யில் கூடப் பார்க்க முடியாது.நேரத்துக்கும் பணத்துக்கும் பிடித்த கேடு!//

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பா..

பாலா said...

ஹா..ஹா. ஹா..! சூப்பரப்பு..

திட்டுறதுகெல்லாம் பயப்படாதீங்க.

வேணும்னா.. யாருக்கும் புரியாம, என்னோட இந்த பதிவு மாதிரி எழுதிடுங்க.

http://hollywoodbala.blogspot.com/2009/02/chronicles-of-bow-2009.html

கார்த்திகைப் பாண்டியன் said...

தைரியத்துக்கு நன்றி பாலா.. முதல் வருகை வேற.. சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹாலிவுட் பாலா //

போங்க நண்பா.. உங்க பேர்ல hollywoodனு வரதால காலேஜ்ல ப்ளாக் பண்ணி இருக்காங்க.. நான் வெளியில நெட்ல இருக்கும்போது படிக்கிறேன்..

Prabhu said...

எந்த காலேஜ் சார் நீங்க?

ஆனா விஜய் கிடைச்சா, காச்சு காச்சுன்னு காச்சுறீங்களே?

சம்பத் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.பின்ன நீங்கதானே ஜோசப் ச்சேண்டரா (பார்க்க ஹாலிவுட் பாலா பதிவு - நல்ல பதிவு ) வின் படங்களை நாறடிக்கிரீர்.....தொடரட்டும் உங்கள் பணி..உங்கள் கடைசி பதிவுக்கு பின்னோட்டமிடவில்லை...வருந்துகிறேன் நண்பா..

பாலா said...

அட... அதெல்லாம்.. பண்ணுறாங்களா.. காலேஜ்ல..?! ஒரு ஸ்ரைக் பண்ணுங்க. அது எப்படி... இந்த காலேஜ்.. ஆளுங்க.. வில்லு என்கிற.. ஹாலிவுட் படத்தின் பதிவை படிக்க விடுறப்ப.....???? ம்ம்ம்ம்.. உள்நாட்டு சதி..!

நோ.. ப்ராப்ளம்..! அப்பாலிக்கா வந்து படிங்க..! :-)

ஆதவா said...

விஜய் ஜோக்ஸ் பிரமாதம். அசத்திப்புட்டேள்...

கடைசியா பார்த்த விஜய் படம் குருவி.... முதல்நாள் முதல் ஷோ!!.. தரணிக்காகப் போனேன்.. வெளியே வந்த பிறகுதான் தெரிஞ்சது..நரகம்னா எப்படி இருக்கும்னு!!!

நல்லவேளை.. வில்லு பார்க்கலை. பார்த்திருந்தா, எங்க ஊர்ல இருக்கற ஆஸ்பத்திரியில நான் ஒருமூலையிலதான் இருந்திருக்கணும்!!!

தாக்குங்க தலைவா...

ஆதவா said...

விஜய் ஜோக்ஸ் பிரமாதம். அசத்திப்புட்டேள்...

கடைசியா பார்த்த விஜய் படம் குருவி.... முதல்நாள் முதல் ஷோ!!.. தரணிக்காகப் போனேன்.. வெளியே வந்த பிறகுதான் தெரிஞ்சது..நரகம்னா எப்படி இருக்கும்னு!!!

நல்லவேளை.. வில்லு பார்க்கலை. பார்த்திருந்தா, எங்க ஊர்ல இருக்கற ஆஸ்பத்திரியில நான் ஒருமூலையிலதான் இருந்திருக்கணும்!!!

தாக்குங்க தலைவா...

மேவி... said...

nalla irukku....
sema nakkal boss....
pavam vijay...
avarai kanja karuppukku pottiya akkitingala boss....
pavam avaru.....

villu padathai neenga oru kalai kan oda parkka vendum....
(mukkiyama nayan taravai).....

ama appadi enna vijay enga ur press meet la sonnaru....
yethavathu link give boss....
me too will know la ....

villu padam "terminator:judgement day" madiri irukkum la...
en action ppa...
he he he


nadigar vijay matum ethai padicha eppadi irukkum

மேவி... said...

wy approval suddenly boss....
any ICU problem???

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
எந்த காலேஜ் சார் நீங்க?//

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப்பா.. கூடிய சீக்கிரம் மதுரைக்கு வரேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.பின்ன நீங்கதானே ஜோசப் ச்சேண்டரா (பார்க்க ஹாலிவுட் பாலா பதிவு - நல்ல பதிவு ) வின் படங்களை நாறடிக்கிரீர்.....தொடரட்டும் உங்கள் பணி..உங்கள் கடைசி பதிவுக்கு பின்னோட்டமிடவில்லை...வருந்துகிறேன் நண்பா..//

பரவா இல்லை நண்பா.. இதுல என்ன இருக்கு.. நீங்க நம்ம எழுத்த தொடர்ந்து படிக்கிறதே எனக்கு சந்தோஷம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹாலிவுட் பாலா said..
ம்ம்ம்ம்.. உள்நாட்டு சதி..!
நோ.. ப்ராப்ளம்..! அப்பாலிக்கா வந்து படிங்க..! :-)//

ஆமா நண்பா.. சதியே தான்.. அப்புறமா கண்டிப்பா படிக்கிறேன் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
நல்லவேளை.. வில்லு பார்க்கலை. பார்த்திருந்தா, எங்க ஊர்ல இருக்கற ஆஸ்பத்திரியில நான் ஒரு மூலையிலதான் இருந்திருக்கணும்!!!
தாக்குங்க தலைவா...//

என்ன ஆதவா..வேல பிசியா.. நீங்க கொஞ்சம் லேட்.. நன்றிப்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
wy approval suddenly boss....
any ICU problem???//

வாங்க mayvee.. ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கை நண்பா.. போன தடவ கெட்ட வார்த்தைல திட்டிப்புட்டாங்க.. நம்மளோட போனா பரவாயில்ல.. நம்ம நண்பர்களும் அத படிச்சு சங்கடப் படக் கூடாதில்லையா... அதுதான் இந்த ஒரு பதிவு மட்டும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
ama appadi enna vijay enga ur press meet la sonnaru....
yethavathu link give boss....//

http://www.youtube.com/watch?v=bDvrNczAQnU

இதையும் படிங்க..

http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_17.html

பொன்.பாரதிராஜா said...

இதனால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நான் சொல்வது என்னவென்றால் விஜயோட அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு நம்ம கார்த்திகை பாண்டியனுக்குப் போகுதுங்கோ...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயோ சாமி.. அதுக்கு பதிலா நான் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிக்கு ஓடிப் போயிடுவேன் பாரதி...

butterfly Surya said...

எல்லா புகழும் இண்டர்நெட்டுக்கே...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க சூர்யா.. வருகைக்கு நன்றி..

குமரை நிலாவன் said...

உங்களை திட்டி எழுதிருவாங்கன்னு பயமா?

அதெற்கெல்லாம் அஞ்சாதே.... நண்பா....

அப்படி வந்திருந்தா. பிற்பாடு கூட நீக்கி கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

ரீப்பிட்டு....

கார்த்திகைப் பாண்டியன் said...

சரி நண்பா.. அதுதான் மறுபடி பழைய மாதிரியே மாத்தியாச்சு..

ny said...

kelappureenga baasu!!!
i hav to follow u!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி கார்த்தி.. தொடருங்க.. நானும் என்னால முடிஞ்சத எழுத முயற்சி பண்றேன்

வேத்தியன் said...

சூப்பர் தல...
கலக்கிப்புட்டேள் போங்கோ...
:-)

*இயற்கை ராஜி* said...

aha..soopper...pavam Dr.vijay...aal aalukku ippidi kalaikaareengale..avar vadivel rangekku ahidivaar pola:-))

*இயற்கை ராஜி* said...

yen blog la antha anany comment pathi sonnathukku romba nandri tholaa:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன்..//

மறுவருகைக்கு நன்றி நண்பா....

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
aha..soopper...pavam Dr.vijay...aal aalukku ippidi kalaikaareengale..avar vadivel rangekku ahidivaar pola:-))//

விடுங்க தோழி.. அவருக்கு இது தேவைதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
yen blog la antha anany comment pathi sonnathukku romba nandri tholaa:-)//

பரவா இல்லைங்க.. நமக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிறது தானே..

வேத்தியன் said...

வந்து பார்க்கவும்...

கார்த்திகைப் பாண்டியன் said...

பார்த்துட்டேன் அண்ணே.. ஓட்டு குத்தியாச்சு.. இன்னைல இருந்து உங்கள பலொவ் பண்றோம்ல..

Dhavappudhalvan said...

கலாக்கிறத்துக்கும் தெரியனும்

அசோசியேட் said...

// எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்துற கடமை நமக்கு இருக்குங்கறதால இந்தப் பதிவு... //

எண்ணெய் ஊத்தியாச்சுள்ள ! பாவம் விட்டுருங்க பாஸ்.

Unknown said...

சூப்பர் காமெடி

ரசினி , விஜை ரசிகர்களெல்லாம் திருந்தவே மாட்டார்கள்

Unknown said...

ஹ் ஹ ஹஹ

ஹேமா said...

கா.பாண்டியன்,நல்லா வில்லைக் கடிச்சுத் துப்பிட்டீங்க.பாவம்.

வேத்தியன் said...

உடனே வந்து பாருங்க...

அகநாழிகை said...

கார்த்தி, பதிவு நகைச்சுவையாக இருக்கிறது. உங்கள் பொன்னான நேரத்தை பயன்படுத்தி இதை எழுதிய நேரம் வேறு ஏதாவது பதிவிட்டிருக்கலாம் என்பது என் அன்பான கருத்து.
அப்புறம் ‘பட்டர்பிளை‘ விருது வாங்கியதற்கு அன்பான வாழ்த்துகள்.
அதைக் கொடுத்த வேத்தியனுக்கும் நல்வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//dhavapudhalvan said..
கலாக்கிறத்துக்கும் தெரியனும்//

வருகைக்கு நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அசோசியேட் said..
எண்ணெய் ஊத்தியாச்சுள்ள ! பாவம் விட்டுருங்க பாஸ்.//

சரி நண்பா.. இத்தோட நிறுத்திக்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன் பிரபு said..
ஹ் ஹ ஹஹ/
வருகைக்கு ரொம்ப நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
கா.பாண்டியன்,நல்லா வில்லைக் கடிச்சுத் துப்பிட்டீங்க.பாவம்.//

எல்லாம் ஒரு நகைச்சுவைக்குத்தான் தோழி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
கார்த்தி, பதிவு நகைச்சுவையாக இருக்கிறது. உங்கள் பொன்னான நேரத்தை பயன்படுத்தி இதை எழுதிய நேரம் வேறு ஏதாவது பதிவிட்டிருக்கலாம் என்பது என் அன்பான கருத்து.//

சரி நண்பா.. நீங்க சொல்றதும் கர்ரக்ட் தான்... மாத்திக்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன்..//

நானே எதிர்பார்க்கவில்லை..விருதுக்கு நன்றி வேத்தியன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

////அகநாழிகை said..
அப்புறம் ‘பட்டர்பிளை‘ விருது வாங்கியதற்கு அன்பான வாழ்த்துகள்.
அதைக் கொடுத்த வேத்தியனுக்கும் நல்வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றி நண்பா..

வேத்தியன் said...

ஏங்க ஃபாலோவர்ஸ்ல எல்லாரும் நல்லா தானே தெரியுறாங்க..
பின்ன என்ன பிரச்சனை???

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. இப்போத்தான் எனக்கு தெரியறாங்க.. ரொம்ப ரொம்ப நன்றி.. வேத்தியன் வாழ்க..

சொல்லரசன் said...

வேத்தியன் said...

//ஏங்க ஃபாலோவர்ஸ்ல எல்லாரும் நல்லா தானே தெரியுறாங்க..
பின்ன என்ன பிரச்சனை???//

ஒரு வேளை இது வில்லு சாபமாக இருக்குமோ,

தெரியறது எல்லாம் தெளிவானது இல்லை,
தெளிவானது எல்லாம் தெரியறதும் இல்லை.

விட்டுறுங்க கா.பா பாவம் வில்லு

லோகு said...

அட்டகாசம் தல..
இந்த பதிவ, விஜய் வெறியர்களுக்கு உங்க சார்பா நான் டெடிகேட் செய்யற..

Prabhu said...

நான் சிறுகதை எழுதிருகேன். வந்து திட்டிட்டாவது போங்க!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
தெரியறது எல்லாம் தெளிவானது இல்லை,தெளிவானது எல்லாம் தெரியறதும் இல்லை.//

நண்பா.. அதுதான் எல்லா மக்களையும் தேடிக் கண்டு பிடிச்சாச்சே.. ஆனாலும் நாங்க விஜய விட மாட்டோம்ல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
அட்டகாசம் தல..இந்த பதிவ, விஜய் வெறியர்களுக்கு உங்க சார்பா நான் டெடிகேட் செய்யற..//

நாம என்ன சொன்னாலும் அவங்க திருந்த மாட்டாங்கப்பா.. பரவா இல்ல.. நீங்க டெடிகேட் பண்ணுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu...//

படிச்சுட்டேன் பப்பு.. உங்க தளத்துல கமென்ட் போட்டு ஓட்டும் குத்தியாச்சு..

ராம்.CM said...

மறந்துபோன அந்த வில்லு கொடுமையை ஏன் மறுபடி ஞாபக படுத்துகிறீர்கள் கார்த்திகை பாண்டியன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

சாரி நண்பா.. நீங்க பட்ட பாட்டை நான் மறந்து போனேன்.. விடுங்க.. போதும் போதுங்கற அளவு ஓட்டியாச்சு.. அவ்வளவுதான்..

ப்ரியமுடன் வசந்த் said...

”பொதுவா நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். ஆனா ஆட்டம், போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்போம் கில்லி கில்லி மாதிரி”
என்ற எங்கள் தளபதியின் வசனத்துடன் தொடங்குகிறோம்,. அவரின் புகழ் பரப்ப வந்திருக்கிற எங்களிடம் தேவையில்லாமல் மோத வேண்டாம். எங்களையும், தளபதியையும் சீண்டாத வரை நல்லது.