நான் இணையத்துல எழுத ஆரம்பிச்சதே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்னும் நம்பிக்கையில்தான். உலகத்திலயே ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது இரட்டிப்பாகும்.. அது சந்தோசம்.. மகிழ்ச்சி. நாம சந்தோஷமா இருந்தா போதாது, நம்மள சுத்தி இருக்குற மக்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு ஒரு தத்துவமே இருக்கு. நேற்றைக்கு என் வாழ்வில் அப்படி ஒரு சந்தோஷமான நாள்.
பெரிய பதிவர்கள் சந்திப்பு நடத்தும் போதெல்லாம் நம்மளால கலந்துக்க முடியலயேன்னு ஆதங்கம் இருக்கும். கொஞ்ச நாளா நம்ம கூட சில நண்பர்கள் தொடர்ச்சியா அலைபேசி மூலமா தொடர்புலையே இருந்தபோதுதான் எனக்கு தோணுச்சு... நமக்கு உள்ளேயே ஏன் ஒரு பதிவர் சந்திப்பு மாதிரி நடத்தக் கூடாது? அருகில் இருக்கக் கூடிய நண்பர்கள நாம போய் பார்க்கலாமேன்னு தோணின உடனே இரண்டு நண்பர்கள்ட்ட போன் பண்ணிக் கேட்டேன்.. அவர்கள்.. சொல்லரசன் மற்றும் ஆதவா. அவங்க ரொம்ப மகிழ்ச்சியோட ஒத்துக்கிட்டாங்க.. திருப்பூர்ல சந்திக்கிறதுன்னு முடிவாச்சு.
திருப்பூரில் நான் போய் இறங்கிய ஐந்தாவது நிமிடம் நண்பர் சொல்லரசன் வந்து சேர்ந்தார். ஆடை வடிவமைக்கும் கம்பெனி ஒன்றில் மானேஜராக பணிபுரிகிறார். புதிதாக எழுத ஆரம்பித்து இருப்பவர். சமூக சிந்தனை கொண்டவர். (வீட்டுக்குப் போகும் ஞாயிற்றுக்கிழமையை எனக்காக தியாகம் செய்து இருந்தார். அவருக்கு நன்றி... ) என்னை சரியாக அடையாளம் கண்டு கொண்டு விட்டார். ஒரு டீயைக் குடித்து விட்டு அவரது அலுவலகத்தை அடைந்தோம்.
கொஞ்ச நேரத்தில் நண்பர் ஆதவாவும் வந்து சேர்ந்தார். அவருடைய எழுத்துக்களை படித்து மிகவும் பெரிய ஆள் ஒருவரை எதிர்பார்த்துக் காத்து இருந்தால், குழந்தை முகத்தோடு வந்து நின்றார் ஆதவா. வீட்டில் இருக்கும் ஒரு நாளை நான் அபகரித்துக் கொண்டேனா என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்.. "வீட்ல சும்மாத்தான் இருந்திருப்பேன்.. உங்கள எல்லாம் பார்த்ததால இந்த நாள் எனக்கு உபயோகமான நாள் நண்பா.."
மூவரும் அமர்ந்து பேசத் தொடங்கினோம். பரஸ்பர அறிமுகம், விருப்பங்கள், அனுபவங்கள், புத்தகங்கள், பதிவர்கள் என எல்லா விசயங்களையும் கலந்து கட்டி அடித்தோம். நேரம் போனதே தெரியவில்லை. நடுவில் என்னுடைய பதிவில் வேத்தியன் தனது பக்கத்தை வந்து பார்க்கும்படி அழைத்து இருந்தார். போய் பார்த்தால் ஒரே குஷியாகி விட்டது. ஆதவாவிற்கு ஹரிணி அம்மாவும், எனக்கு வேத்தியனும் பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருந்தார்கள். இந்தக் கொஞ்ச நாட்களில் நம்மை மதித்து நண்பர்கள் விருது கொடுத்தது எங்கள் இருவருக்குமே சந்தோஷம். எங்களோடு விருது வாங்கிய நண்பர்கள் கமல், ஷீ-நிஷி, அன்புமணி.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கொஞ்ச நேரத்திலேயே நண்பர் அகநாழிகை போன் செய்து விருது பெற்றதுக்கு வாழ்த்தினார். நண்பர்கள் எல்லாருமே அவரிடம் பேசினோம். கூடிய சீக்கிரம் பெரிய அளவில் பதிவர் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார். அவரை அடுத்து கவிதைகளில் கலக்கி வரும் நண்பர் ஷீ-நிஷி பேசினார். அவருடைய அறிமுகமும் கிடைத்து விட்டது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்கள். கடைசியாக ஆதவாவின் அம்மா போன் செய்து அவரை சாப்பிட கூப்பிட்ட போதுதான் எங்களுக்கு நேரமே உரைத்தது. அடுத்த முறை வீட்டுக்கு வர வேண்டும் என்ற அழைப்போடு நண்பர் ஆதவா விடை பெற்றுக் கொண்டார்.
நண்பர் சொல்லரசன் புண்ணியத்தில் பிரியாணி, சிக்கன் என்று மதிய உணவு அமர்க்களப் பட்டது. அதன் பின்னர் கொஞ்ச நேரம் பேசி விட்டு மாலை ஆறு மணி போல் கிளம்பினேன். பஸ்ஸில் வரும்போது ஆதவா போன் செய்து காணாமல் போன பாலோயர்ஸ் விட்ஜெட்டை கண்டுபிடிப்பது பற்றி வேத்தியன் ஒரு பதிவு போட்டிருப்பதாக சொன்னார். பெருந்துறை வந்து இறங்கின மறு வினாடி பிரௌசிங் சென்டருக்கு போனேன். வேத்தியன் சொன்னபடி செய்து பார்த்தால்.. ஒங்கக்காமக்கா.. காணாம போன நம்ம தங்கங்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தனர். வேத்தியன்.. உங்களுக்கு இரட்டை நன்றி.. அட போங்கப்பா.. ஒரே நாள்ல எத்தன சந்தோஷம்..
ஆக மொத்தத்தில் ஒரு நாள் முழுக்க பயன் உள்ளதாக கழிந்த நிம்மதி.அருமையான நினைவுகள். காலங்கள் கடந்த பின்னும் நம்மை வழி நடத்திச் செல்வது இந்த சந்தோஷமான நினைவுகள் தான்.. இல்லையா?
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
101 comments:
வாழ்த்துக்கள்..
கார்த்தி, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நானும் உங்களோடு கலந்து கொண்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். அதனாலென்ன உங்களுடைய பதிவு நேரடியாக பங்கேற்ற அனுபவத்தை தருகிறது. வாழ்த்துக்கள்.
- பொன்.வாசுதேவன்
//நான் இணையத்துல எழுத ஆரம்பிச்சதே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்னும் நம்பிக்கையில்தான்.//
உங்க நம்பிக்கை வீண்போகலதானே, கார்த்தி.
- பொன்.வாசுதேவன்
//உலகத்திலயே ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது இரட்டிப்பாகும்.. அது சந்தோசம்.. மகிழ்ச்சி. நாம சந்தோஷமா இருந்தா போதாது, நம்மள சுத்தி இருக்குற மக்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு ஒரு தத்துவமே இருக்கு. //
கண்டிப்பா பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் சந்தோஷமும் அன்பும்தான், வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்...
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது இரட்டிப்பாகும்.. அது சந்தோசம்..(நல்ல நண்பர்கள் )
பதிவை வாசித்து முடிக்கும்போது
நிரம்பியிருக்கிறது மனம் சந்தோசத்தால்...
வாழ்த்துக்கள்...
//பெரிய பதிவர்கள் சந்திப்பு நடத்தும் போதெல்லாம் நம்மளால கலந்துக்க முடியலயேன்னு ஆதங்கம் இருக்கும். //
‘பெரிய பதிவர்கள்‘
அவங்கல்லாம் யாரு நண்பா. (உருவத்த சொல்றீங்களா ?)
அப்ப நீங்க..
நண்பா நடத்துங்க.... நடத்துங்க....
சந்தோசமா இருக்கு.
ஆனா என்னாலே இப்படி எதுவுமே உர்ப்படியா செய்ய முடியலியே என்று நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கு.
இங்கே மும்பையிலே இருந்து எழுதுறவங்க ரொம்ப, ரொம்ப கொஞ்சமா இருக்காங்க.
//vinoth gowtham said..
வாழ்த்துக்கள்..//
நன்றி வினோத்..
/*இங்கே மும்பையிலே இருந்து எழுதுறவங்க ரொம்ப, ரொம்ப கொஞ்சமா இருக்காங்க.*/
"ஐயோ கொடுமையே நீ எழுதுறதெல்லாம் ஒரு ............."
என்று யாரும் சொல்லவேண்டாம்.
அதெல்லாம் எனக்கே தெரியும்.
//அகநாழிகை said....
உங்க நம்பிக்கை வீண்போகலதானே, கார்த்தி.
- பொன்.வாசுதேவன்//
கண்டிப்பாக என் நம்பிக்கை பொய்க்கவில்லை நண்பா.. அருமையான நட்புகள் கிடைத்து இருக்கிறீர்கள்.. உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்..
//தங்கராசா ஜீவராஜ் said..
பதிவை வாசித்து முடிக்கும்போது
நிரம்பியிருக்கிறது மனம் சந்தோசத்தால்...
வாழ்த்துக்கள்...//
நண்பர்களுடைய சந்தோஷம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொல்லும் நல்ல உள்ளம் உங்களுக்கு என்றெண்ணும்போது பெருமையாக உள்ளது நண்பரே.. நன்றி..
////அகநாழிகை said....
‘பெரிய பதிவர்கள்‘அவங்கல்லாம் யாரு நண்பா. (உருவத்த சொல்றீங்களா ?)அப்ப நீங்க..//
கிண்டல் பண்ணாதீங்க நண்பா.. நாம எல்லாம் இப்போத்தான எழுதவே ஆரம்பிச்சு இருக்கோம்..
//நையாண்டி நைனா said..
நண்பா நடத்துங்க.... நடத்துங்க....
சந்தோசமா இருக்கு.ஆனா என்னாலே இப்படி எதுவுமே உர்ப்படியா செய்ய முடியலியே என்று நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கு.//
விடுங்க நைனா.. எப்பவாவது ஊரு பக்கம் வந்தா சொல்லுங்க.. பட்டய கிளப்பிடுவோம்ல..
//நையாண்டி நைனா said..
"ஐயோ கொடுமையே நீ எழுதுறதெல்லாம் ஒரு ............."
என்று யாரும் சொல்லவேண்டாம்.
அதெல்லாம் எனக்கே தெரியும்.//
ஏன்.. நீங்க நல்லாத்தானே எழுதுறீங்க.. நாங்க எல்லாம் சொந்த அனுபவத்த சொல்றோம்.. ஆனா நீங்க கற்பனை, கிண்டல்னு எல்லாம் கலக்குறீங்க நண்பா..
/*விடுங்க நைனா.. எப்பவாவது ஊரு பக்கம் வந்தா சொல்லுங்க.. பட்டய கிளப்பிடுவோம்ல..*/
அன்பிற்கு நன்றி நண்பா... ஆனா நான் பட்டை அடிக்கிறதெல்லாம் கல்லூரியோட விட்டுட்டேன். இப்ப இங்கே "லாடு லபக்குதாசு" (என்னோட டாமஜெறு தான்) கூட சேர்ந்து கிரீன் லேபிளும், ப்ளாக் லேபிளும் அடிக்கிறேன்.
முன்னே உள்ள பின்னூட்டத்தில் சிரிப்பான் விட்டு போச்சி....ஹி ஹி ஹி :)
நண்பா
மகேஷ் பத்தி டைம் கிடைக்கிறப்ப விசாரிங்க போதும்.
நான் இருப்பது துபாயில் நண்பா.
நானும் திருப்பூரில் தான் இருக்கேன்.. என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்க அண்ணா..
//குழந்தை முகத்தோடு வந்து நின்றார் ஆதவா. //
ஆதவா முகத்துல
பால் வடிஞ்சதா,
கார்த்தி.
////நையாண்டி நைனா said.. அன்பிற்கு நன்றி நண்பா... ஆனா நான் பட்டை அடிக்கிறதெல்லாம் கல்லூரியோட விட்டுட்டேன். இப்ப இங்கே "லாடு லபக்குதாசு" (என்னோட டாமஜெறு தான்) கூட சேர்ந்து கிரீன் லேபிளும், ப்ளாக் லேபிளும் அடிக்கிறேன்.//
பராக்கிரமத்த வெளில சொன்னதோட நிக்காம சிரிப்பான் விட்டுப்போச்சுன்னு இன்னொரு பின்னூட்டம்.. நைனா.. என்ன ஒரு வில்லத்தனம்..
//vinoth gowtham said..
மகேஷ் பத்தி டைம் கிடைக்கிறப்ப விசாரிங்க போதும்.
நான் இருப்பது துபாயில் நண்பா.//
கண்டிப்பா கேட்டுப் பாக்குறேன்.. ரொம்ப சந்தோஷம் வினோத்..
//லோகு said..
நானும் திருப்பூரில் தான் இருக்கேன்.. என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்க அண்ணா..//
உங்கள் தளத்தை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் நண்பா.. கூடிய சீக்கிரம் போனில் அழைக்கிறேன்..
//அகநாழிகை said..
ஆதவா முகத்துல பால் வடிஞ்சதா,
கார்த்தி...//
அது ஒன்னு மட்டும் தான் பாக்கி நண்பா.. ஆனா இந்த சின்ன வயசுலேயே ரொம்ப பொறுப்பு.. கூடவே நிறைய அனுபவங்களும்..
ம்ம்ம்...நடக்கட்டும்..நடக்கட்டும்
கவலை வேண்டாம் அன்பு.. மதுரை வந்த பின்பு அங்கயும் கலக்கலாம்
கார்த்தி அண்ணா, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நானும் உங்களோடு கலந்து கொண்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். இருந்தாலும் உங்கள் பதிவினை படிக்கும்போதே அந்த நிகழ்ச்சி என் கண்முன்னே ஓடியது அண்ணா!!
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் அண்ணா...
நன்றி அன்பு.. அடுத்த சந்திப்பில் உங்களையும் இணைக்க முயற்சிக்கிறேன்..
\\கார்த்திகைப் பாண்டியன் said...
நன்றி அன்பு.. அடுத்த சந்திப்பில் உங்களையும் இணைக்க முயற்சிக்கிறேன்..\\
நன்றி அண்ணா
விருது வாழ்த்துக்கள் நண்பா ..
வாழ்த்துக்கள்..
என்னை ௬ப்பிடாம தனியா போய்டீங்களா?
:)
போன் நம்பரெல்லாம் கொடுத்து இருக்கீங்க.. ஒரு ஆள் கிடைச்சிருக்கு...ரொம்ப நல்ல ஆளா இருக்கும் போலன்னு கலாய்ச்சிடுவோமே... ;-)))
அட...
எல்லோரும் ஒன்னா சந்திச்சிருக்கீங்க...
சந்தோஷத்துக்கு குறைவே இருந்திருக்காது...
வாழ்த்துகள்...
இலங்கையில இருந்துகிட்டு நான் என்ன பண்றது???
:-(
//kishore said..
விருது வாழ்த்துக்கள் நண்பா ..//
ரொம்ப நன்றி நண்பரே.. முதல் வருகைன்னு நினைக்கிறேன்.. அப்பப்போ வாங்க..
//நசரேயன் said..
என்னை ௬ப்பிடாம தனியா போய்டீங்களா?//
மன்னிச்சுக்கோங்க நண்பா.. அடுத்த முறைல இருந்து அறிவிச்சுட்டு பதிவர் சந்திப்புகள நடத்தலாம்..
//தமிழ் பிரியன் said..
போன் நம்பரெல்லாம் கொடுத்து இருக்கீங்க.. ஒரு ஆள் கிடைச்சிருக்கு...ரொம்ப நல்ல ஆளா இருக்கும் போலன்னு கலாய்ச்சிடுவோமே... ;-)))//
எல்லாம் நம்ம பதிவுலக நண்பர்கள் மேல இருக்குற ஒரு நம்பிக்கை தான் நண்பா.. வருகைக்கு நன்றி..
பதிவர் சந்திப்பு அறிந்து மிக்க மகிழ்ச்சி. விரைவில் நாமும் சந்திப்போம்.
virithukkum, muthal santhippukkum vaalthukkal thola..
//வேத்தியன் said..
அட...
எல்லோரும் ஒன்னா சந்திச்சிருக்கீங்க...
சந்தோஷத்துக்கு குறைவே இருந்திருக்காது...
வாழ்த்துகள்...
இலங்கையில இருந்துகிட்டு நான் என்ன பண்றது???:-(//
அப்படி எல்லாம் தனிமையா உணராதீங்க நண்பா.. நேத்து நாங்க சந்தோஷமா இருந்தோம்னா அதுக்கு நீங்களும் காரணம்.. நாங்க உங்க கூடவே இருக்கோம்.. நன்றி நண்பா..
//முரளிகண்ணன் said..
பதிவர் சந்திப்பு அறிந்து மிக்க மகிழ்ச்சி. விரைவில் நாமும் சந்திப்போம்.//
வாங்க முரளி.. கண்டிப்பா நாம சந்திக்கிறோம்..
//ஒங்கக்காமக்கா.. காணாம போன நம்ம தங்கங்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தனர். //
எனக்கும்தான் நண்பா ...... வேத்தியனுக்கு நன்றிகள்.......
//இயற்கை said..
virithukkum, muthal santhippukkum vaalthukkal thola..//
நன்றி தோழி..
//அத்திரி said..
எனக்கும்தான் நண்பா ...... வேத்தியனுக்கு நன்றிகள்.......//
வாங்க நண்பா.. உங்களோட நண்பர்கள் பட்டியலும் கிடைச்சாச்சா.. சந்தோஷம்..
போட்டாச்சா!! போட்டாச்சா!!! போட்டாச்சா!!! (உது எக்கோ)
என்னைப் போய்..... என்னைப் போய்.... பால்வடியற முகம்னு சொல்லிப்புட்டீங்களே!!! தல... அந்த பால் ஒழுகி என் தாடியிலெல்லாம் தாண்டவமாடாதா என்ன...
எங்களுக்காக நீங்கள் பெருந்துறையிலிருந்து பயணித்து வந்து சந்தித்து, ஒருநாளையே தியாகம் பண்ணியிருக்கீங்க.... !!! கிரேட்.....
உங்க கிட்ட நான் கவனிச்ச விஷயம்,, விஷயத்தை லாவகமாக எடுக்கும் பக்குவம், தோழமை ஏற்கும் நற்குணம், அனுபவங்கள் செதுக்கி வளர்ந்த வாழ்க்கை,...
எந்த ஒரு விஷயத்தையும் சாவகாசமாக எடுத்து ஏற்கும் மனம் யாருக்கும் வாய்க்காது!! அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது!!!!
(விருதுக்கு வாழ்த்துக்கள், அந்த படத்தை வலையில் ஏற்றுவது மட்டும் தெரிகிறது.. நன்றி போட எப்படி என்று தெரியவில்லை!!!)
வாழ்த்துகள் நண்பருக்கு
ம்ம்ம் .... கலக்குங்க...
விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா
பதிவ படித்ததும் நானும் உங்களோடு இருந்தது போல் சந்தோசம் அடைந்தேன் நண்பா ...
நல்ல சந்திப்பு, பதிவில் அழைப்பு விடுத்திருந்தால் பலர் கலந்து கொண்டிருப்பார்கள். திருப்பூரில் தான் 10க்கும் மேற்பட்ட பதிவர்கள் இருக்கிறார்களே, ஞாயிற்றுக் கிழமை வால்பையனுக்கு தெரிந்திருந்தால் புட்டியுடன் வந்திறங்கி இருப்பார்.
பதிவர் அண்பர்கள் மூவருக்கும் வாழ்த்துகள், உங்களின் நட்பு மென்மேலும் மேன்மையடையட்டும்
சந்தோஷமான பதிவுதான் கார்த்தி!
என்ன ஒரே வருத்தம்.... பிரியாணி, சிக்கன்னு இப்படி எழுதி எங்களையெல்லாம் எச்சில் ஊற வச்சிருக்கவேண்டாம் :)
விரு(ந்)துக்கும் வாழ்த்துக்கள்! :)
///ஆதவா....
என்னைப் போய்..... என்னைப் போய்.... பால்வடியற முகம்னு சொல்லிப்புட்டீங்களே!!! தல... அந்த பால் ஒழுகி என் தாடியிலெல்லாம் தாண்டவமாடாதா என்ன...////
சரி சரி! உனக்கு தாடியிருக்கு! ஒத்துக்கறேன் ஆதவா! :)
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பா...
நானும் இந்தியா வருகிறேன்...
வெகு விரைவில் நாங்களும் ஒரு பதிவர் சந்திப்பு வைப்போமா??? ஆதவாவிடம் இது சம்பந்தமாகப் பேசவுள்ளேன்....
தொடருங்கோ கார்த்திகைப் பாண்டியரே...
தொடர்ந்தும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துகிறேன்..!
//ஆதவா said..
எங்களுக்காக நீங்கள் பெருந்துறையிலிருந்து பயணித்து வந்து சந்தித்து, ஒருநாளையே தியாகம் பண்ணியிருக்கீங்க.... !!! கிரேட்..... //
ரொம்ப நன்றி நண்பா.. ரொம்ப புகழாதீங்க.. ஆக நம் அனைவருக்குமே ஒரு நல்ல அனுபவம் தானே.. அப்புறம் உங்களுக்கு தாடி இருக்குன்னு பில்ட்டப்பெல்லாம் கொடுத்தாலும் நீங்க குட்டிப்பையன் தான்..
//அறிவே தெய்வம் said..
வாழ்த்துகள் நண்பருக்கு//
நன்றி நண்பரே..
//சம்பத் said..
ம்ம்ம் .... கலக்குங்க...//
வாங்க நண்பா.. நன்றி..
//நிலாவன் said..
விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா
பதிவ படித்ததும் நானும் உங்களோடு இருந்தது போல் சந்தோசம் அடைந்தேன் நண்பா ...//
ரொம்ப சந்தோஷம் நண்பா. உங்களையும் என்னைக்காவது சந்திக்கணும்.. பார்க்கலாம்..
//கோவி. கண்ணன் said..
நல்ல சந்திப்பு, பதிவில் அழைப்பு விடுத்திருந்தால் பலர் கலந்து கொண்டிருப்பார்கள். திருப்பூரில் தான் 10க்கும் மேற்பட்ட பதிவர்கள் இருக்கிறார்களே, //
நன்றி கண்ணன்.. சூது தெரியாமப் போச்சு.. அடுத்த முறை அறிவிசச்சிட்டு பண்ணனும்.. உங்க மாதிரி பெரிய பதிவர்கள் ஆதரவு தரது சந்தோஷமா இருக்கு..
//ஷீ-நிஷி said..
சந்தோஷமான பதிவுதான் கார்த்தி!
என்ன ஒரே வருத்தம்.... பிரியாணி, சிக்கன்னு இப்படி எழுதி எங்களையெல்லாம் எச்சில் ஊற வச்சிருக்கவேண்டாம் :)
விரு(ந்)துக்கும் வாழ்த்துக்கள்! :)//
நன்றி நண்பா.. நீங்க வரும்போது இன்னும் அசத்திடலாம்..
//கமல் said..
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பா...
நானும் இந்தியா வருகிறேன்...வெகு விரைவில் நாங்களும் ஒரு பதிவர் சந்திப்பு வைப்போமா???ஆதவாவிடம் இது சம்பந்தமாகப் பேசவுள்ளேன்..//
வாங்க நண்பா.. நன்றி.. ஆதவாவும் சொன்னாரு.. நாம கண்டிப்பா சந்திக்கிறோம்..
அடுத்த பதிவர் சந்திப்பு ஹைதையில் நடக்க வேண்டும் என்று இறைவனையும்,கார்த்திகை பாண்டியனையும் வேண்டிக்கொள்கிறேன்.
இப்படிவேற கிளம்பிட்டீங்களா... ஜமாய்ங்க! பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!
கார்த்திகைப் பாண்டியன் said...
//வேத்தியன் said..
அட...
எல்லோரும் ஒன்னா சந்திச்சிருக்கீங்க...
சந்தோஷத்துக்கு குறைவே இருந்திருக்காது...
வாழ்த்துகள்...
இலங்கையில இருந்துகிட்டு நான் என்ன பண்றது???:-(//
அப்படி எல்லாம் தனிமையா உணராதீங்க நண்பா.. நேத்து நாங்க சந்தோஷமா இருந்தோம்னா அதுக்கு நீங்களும் காரணம்.. நாங்க உங்க கூடவே இருக்கோம்.. நன்றி நண்பா..
//
அடடா...
நன்றி நன்றி...
சும்மா தான் சொன்னேன்...
கூடிய சீக்கிரமே இந்தியா வருவேன்..
அப்போ சந்திக்கலாம்...
:-)
//பொன். பாரதிராஜா said..
அடுத்த பதிவர் சந்திப்பு ஹைதையில் நடக்க வேண்டும் என்று இறைவனையும்,கார்த்திகை பாண்டியனையும் வேண்டிக்கொள்கிறேன்.//
வா நண்பா.. உன் ஆசை நிறைவேற நானும் ஆசைப்படுறேன்.. பார்க்கலாம்..
//குடந்தைஅன்புமணி said..
இப்படிவேற கிளம்பிட்டீங்களா... ஜமாய்ங்க! பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!//
நன்றி நண்பா.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
//வேத்தியன் said..
அடடா...நன்றி நன்றி...சும்மா தான் சொன்னேன்...
கூடிய சீக்கிரமே இந்தியா வருவேன்..
அப்போ சந்திக்கலாம்...:-)//
அடேங்கப்பா.. கேக்கவே சந்தோஷமா இருக்கே.. சீக்கிரம் வாங்க.. தூள் கிளப்புவோம்..
கார்த்திகை பண்டியன்!!!
பதிவு படிக்க சந்தோசமாக இருந்தது!
உங்க சந்தோசத்தில் எனக்கும் பங்கு உண்டு!! புரியலியா?
தேவா..
ரொம்ப சந்தோசம் நண்பா.. எங்க சந்தோஷத்தில் நீங்களும் பங்கு கொண்டதற்கு.. ஆனா நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தான் புரியல..
ஆரோக்கியமான சந்திப்பு. மகிழ்ச்சி
நட்பு பரந்து விரிய வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..
neega santhosama iruntha naagalum santhosama irntha mathiri thananna
me they 70
போனதுக்கு புண்ணியமா பொலோவர்ச புடுச்சிட்டீங்க... நானும் உங்கள துரத்த ஆரம்பிச்சிட்டேன் ... :)
ஆனா உந்த பெரிய இந்தியாவில மூணு பேர் சந்திக்கிற தெல்லாத்தயும் பதிவர் சந்திப்புன்னு சொல்லிக்கிறது கொஞ்சம் ஓவர் :) இத்துனூண்டு சிங்கப்புர்லயே இருபததஞ்சு பேர் சந்திக்கிறாங்க...நீங்க என்னடான்னா :) ஹிஹிஹி
வாழ்த்துக்கள் அண்ணா...
//gayathri said..
neega santhosama iruntha naagalum santhosama irntha mathiri thananna//
நன்றி சகோதரி.. உங்கள ரொம்ப நாளா ஆளக் காணோம்? அடிக்கடி வாங்க..
//புல்லட் பாண்டி said..
போனதுக்கு புண்ணியமா பொலோவர்ச புடுச்சிட்டீங்க... நானும் உங்கள துரத்த ஆரம்பிச்சிட்டேன் ... :)//
நன்றி நண்பா..
//புல்லட் பாண்டி said..
ஆனா உந்த பெரிய இந்தியாவில மூணு பேர் சந்திக்கிற தெல்லாத்தயும் பதிவர் சந்திப்புன்னு சொல்லிக்கிறது கொஞ்சம் ஓவர் :) இத்துனூண்டு சிங்கப்புர்லயே இருபததஞ்சு பேர் சந்திக்கிறாங்க...நீங்க என்னடான்னா :) ஹிஹிஹி//
இது ஆரம்பம் தானே நண்பா.. வெளிநாட்டுல நம்ம மக்கள்னு ஆசைப்பட்டு தேடி போய் பாக்குறாங்க.. இங்க அப்படி இல்லையே.. நமக்கு தெரிஞ்ச நண்பர்களைப் போய் பார்த்துட்டு வந்தேன்.. அடுத்த தடவை பெரிசா செய்யணும்னு ஆசை இருக்குப்பா.. முயற்சி பண்றோம்..
//மகா said...
வாழ்த்துக்கள் அண்ணா...//
நன்றி சகோதரி..
"ஆக மொத்தத்தில் ஒரு நாள் முழுக்க பயன் உள்ளதாக கழிந்த நிம்மதி.அருமையான நினைவுகள். காலங்கள் கடந்த பின்னும் நம்மை வழி நடத்திச் செல்வது இந்த சந்தோஷமான நினைவுகள் தான்.. இல்லையா? "
AMANGA....
SARI....
chicken piriyani yaa???
illa piriyani thani.... chicken thaniyaa???
"நையாண்டி நைனா said...
/*இங்கே மும்பையிலே இருந்து எழுதுறவங்க ரொம்ப, ரொம்ப கொஞ்சமா இருக்காங்க.*/
"ஐயோ கொடுமையே நீ எழுதுறதெல்லாம் ஒரு ............."
என்று யாரும் சொல்லவேண்டாம்.
அதெல்லாம் எனக்கே தெரியும்."
amanga...
innum naan eluthuvathu mokkaiya irukka... ilaa nalla irukkane theriyala...
innum koNJAM DETAil ya eluthi iruntha nalla irukkum...
ok
padivu nalla irukku
//வீட்டுக்குப் போகும் ஞாயிற்றுக்கிழமையை எனக்காக தியாகம் செய்து இருந்தார். //
வத்தி வைச்சிடிங்களே தல, முக்கியமான வேலையின் வீட்டில் சொல்லிருந்தேன்
அடுத்த வாரம் போனால் கஞ்சி கிடைக்காது.
நன்றிங்க உங்கள் நண்பர்களிடை அறிமுகம் செய்துவைத்தற்கு.இருந்தாலும் புல்லட் சொன்னமாதிரி இது கொஞ்சம் ஒவர்தானுங்கோ
//mayvee said..
amanga...innum naan eluthuvathu mokkaiya irukka... ilaa nalla irukkane theriyala...//
நாம் இன்னும் தமிழில் எழுதுகிறோம் என்பதே சந்தோஷம் நண்பா.. இதில் என்ன நல்லது கேட்டது.. நம் எண்ணங்களை எழுத என்ன தடை?
//mayvee said..
innum koNJAM DETAil ya eluthi iruntha nalla irukkum...ok..
padivu nalla irukku//
இன்னும் அதிகமாவா..? இதுவே பெரிய பதிவுன்னு சொல்றாங்க நண்பா..
//சொல்லரசன் said..
வத்தி வைச்சிடிங்களே தல, முக்கியமான வேலையின் வீட்டில் சொல்லிருந்தேன் அடுத்த வாரம் போனால் கஞ்சி கிடைக்காது.//
இதெல்லாம் பார்த்தா முடியுமா நண்பா.. அதெல்லாம் நீங்க நல்லா பேசி அண்ணிய கவுத்திருவீங்க.. உங்களுக்கு கஞ்சி க்யாரெந்தி.. கவலை வேண்டாம்
//சொல்லரசன் said..
நன்றிங்க உங்கள் நண்பர்களிடை அறிமுகம் செய்து வைத்தற்கு.இருந்தாலும் புல்லட் சொன்னமாதிரி இது கொஞ்சம் ஒவர்தானுங்கோ//
அட.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா..
நண்பர்கள் சேரும்போது எவ்வளவு பேசியிருப்பீர்கள்.எவ்வளவு சந்தோஷ்மாக பல பதிவுகளைப் பற்றிப் பகிர்ந்திருப்பீர்கள்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டீங்களா.. ரொம்ப நன்றி தோழி..
வாழ்த்துக்கள்!!! மூவர் சந்திப்பானாலும் மகிழ்வுடன் இருந்ததாக நினைக்கின்றேன்... என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லையே...... வாழ்த்துகள் நண்பர்களே...
உங்களை பின் தொடர்வதில் மகிழ்ச்சி
வாங்க ஞானசேகரன்.. ரொம்ப நன்றி..
ரொம்ப சந்தோசம் நண்பா.. எங்க சந்தோஷத்தில் நீங்களும் பங்கு கொண்டதற்கு.. ஆனா நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தான் புரியல..///
வேத்தியனிடம் கேளுங்கள் சொல்லுவார்!
உண்மையில் ஒரு மகிழ்னான பதிவு!!
சந்தோசம்,அன்பு. வாழ்க்கை அவ்வளவுதானங்க...
பதிவு நல்லாயிருந்தது.
//thevanmayam said..
வேத்தியனிடம் கேளுங்கள் சொல்லுவார்!//
ஓஓ...ஒரு வேளை வேத்தியனிடம் என்னைப் பற்றி சொன்னதே நீங்கள்தானா நண்பா.. ரொம்ப நன்றி தேவா..
//ராம்.CM said..
சந்தோசம்,அன்பு. வாழ்க்கை அவ்வளவுதானங்க...
பதிவு நல்லாயிருந்தது.//
ரொம்ப மகிழ்ச்சி ராம்.. அடுத்து உங்களையும் சந்திக்கணும்னு ஆசையா இருக்கு..பார்க்கலாம்..
97
99
ஓசியில ஒரு சென்சுரி!!!
101 ஆ மொய்யும் எழுதியாச்சு!!
வரட்டா?
101 வரைக்கும் மொய் எழுதிய அண்ணன் தேவன்மாயம் வாழ்க வாழ்க..
Post a Comment