March 11, 2009

கடிதங்கள்..!!!


தொலைந்து போன பொருள் ஒன்றைத்
தேடி கொண்டு இருக்கையில்..
என்றோ நான் எழுதிய கடிதமொன்று
என் கைகளில் சிக்கியது.. !!
கடைசியாக நான் கடிதம் எழுதியது
எப்போது..? என் நினைவில் இல்லை.. !!
அலைபேசி வந்த பின்னர்
கடிதம் எழுதும் பழக்கம் இன்னும்
மக்களிடம் உள்ளதா..? தெரியவில்லை.. !!
நமக்கென கடிதம் ஏதும் வந்து
இருக்கிறதா என தபால்காரருக்காக
காத்து நின்ற நாட்கள்..
காணாமல் போய் விட்டன..!!
எழுதவதற்கு ஒன்றும் இல்லாத
போதும் நம் நேசங்களுக்காக எழுதிய
கடிதங்கள்.. மறக்க முடியாதவை..!!
அவை வெறும் காகிதங்கள் அல்ல..
தந்தையாக, தாயாக, மகனாக, மகளாக,
உடன்பிறப்பாக, நட்பாக, காதலாக..
கடிதங்கள் நமக்கு எல்லாமுமாக
இருந்து இருக்கின்றன..!!
பிடித்தவர்கள் கடிதத்தை தன்னுடன்
வைத்து கொண்டே அலைந்த
நாட்களும், தனிமையைத் தவிர்க்க
தலையணைக்கு அடியில் கடிதங்கள்
வைத்துக்கொண்டு தூங்கிய நாட்களும்..
மீண்டும் கிடைக்குமா எனத் தெரியவில்லை..!!
அன்பு, சந்தோஷம், ஆசை, துக்கம், கோபம்
என நாம் கடந்து வந்த உணர்வுகளை
நாம் திரும்பி பார்க்க உதவும்
காலக் கண்ணாடிதான்.. கடிதங்கள்.. !!
என்னவென்று தெரியாத ஏதோ ஒன்றைத்
தேடி அலைந்து நாம் களைத்துப் போய்
அமரும் நேரத்தில் - கடந்து வந்த வாழ்க்கையை
திரும்பி பார்க்கவேனும் வேண்டும்.. கடிதங்கள்..!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

65 comments:

Anbu said...

அண்ணா நான்தான் முதலில்

Anbu said...

படித்துவிட்டு வருகிறேன் அண்ணா

சொல்லரசன் said...

//பிடித்தவர்கள் கடிதத்தை தன்னுடன்
வைத்து கொண்டே அலைந்த
நாட்களும், தனிமையைத் தவிர்க்க
தலையணைக்கு அடியில் கடிதங்கள்
வைத்துக்கொண்டு தூங்கிய நாட்களும்//

அனுபவம் பேசுகிறது.
கடிதங்கள் ஒரு காலகண்ணாடி தான்.

Anbu said...

மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா!!

குடந்தை அன்புமணி said...

என் காதலி எனக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் நான் வைத்திருக்கிறேன்.(அந்த காதலிதான் இப்ப மனைவி... அதனால பிரச்சனை இல்ல... )

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா!!//

ரொம்ப நன்றி அன்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
அனுபவம் பேசுகிறது.
கடிதங்கள் ஒரு காலகண்ணாடி தான்.//

ஏன் நண்பா.. உங்களுக்கு அந்த அனுபவங்கள் இல்லையா என்ன?

கார்த்திகைப் பாண்டியன் said...

//அன்புமணி said..
என் காதலி எனக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் நான் வைத்திருக்கிறேன்.(அந்த காதலிதான் இப்ப மனைவி... அதனால பிரச்சனை இல்ல... )//

நண்பரே.. கொடுத்து வைத்த மனிதர் நீங்கள்..

குமரை நிலாவன் said...

என்னவென்று தெரியாத ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து நாம் களைத்துப் போய் அமரும் நேரத்தில் - கடந்து வந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கவேனும் வேண்டும்.. கடிதங்கள்..!!


அப்படி மூன்று கடிதங்களை
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்
1.நான் காலேஜ் முடித்தவுடன்
என் நண்பன் சுரேஷ் அனுப்பிய பொங்கல் வாழ்த்து
2.எனது மாமா அனுப்பிய ஒரு கடிதம்
3.நான் மலேசியா வந்தவுடன் அப்பா எழுதிய கடிதம்
ஒன்று

இன்று மீண்டும் படிக்க தூண்டிய உங்களுக்கு
நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் //
உங்களுடைய பழைய நினைவுகளை தூண்டி விட்டேனா? அது போதும் நண்பா.. நானும் நேற்று சில கடிதங்களை படித்தபோது தான் இந்த பதிவு போட வேண்டும் என்றே தோன்றியது..

ஆதவா said...

அநேகமா நான் படிக்குகம்ம் உங்களுடைய முதல் கவிதைன்னு நினைக்கிறெஎன்...

பொறுங்க வாரென்..

Prabhu said...

கடிதம் பற்றி உங்களைப் போன்றோர் சொல்லித்தான் எங்கள் தலைமுரையினருக்கு புரிகிறது. அது போய் உடனடி தகவல் தொடர்பு சாதனமாக வந்துள்ள செல்பேசி லாபமா இல்ல நஷ்டமானு தெரியல!

ஆதவா said...

கடிதங்கள் பற்றிய கவிதை... கலக்கல்.

அலைபேசிகளின் ஆதிக்கத்தில் கடிதங்கள் நசுக்கப்பட்டன என்பது மறுக்கமாட்டாத உண்மை. பரவலாகவே நலவிசாரிப்புகள் ஏதுமில்லாத கடிதப் போக்குவரத்துகள் பெருகிவிட்டன. அதாவது பணி சம்பந்தமான, அல்லது உறவு சம்பந்தமில்லாத.

//////உணர்வுகளை நாம் திரும்பி பார்க்க உதவும் காலக் கண்ணாடிதான்.. கடிதங்கள்.. !!/////

நிச்சயமாய்... அலைபேசிகளும் SMS களும் எக்காலத்திலும் நினைவுகளைத் தரும் ஊடகங்களாக மக்கள் மனதில் இருக்காது.

நான் கடிதங்கள் எழுதிய காலம் உண்டு!!! இப்பொழுதெல்லாம் கடிதங்கள் இணையத்தின் வழியேதான்....

நல்ல கவிதை.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
அநேகமா நான் படிக்குகம்ம் உங்களுடைய முதல் கவிதைன்னு நினைக்கிறெஎன்...//

ஐயோ நண்பா.. ஏற்கனவே ஒண்ணு ரெண்டு கவிதை எழுதி அதை நீங்களும் பாராட்டி இருக்கீங்க.. அவ்வ்வ்வ்....

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
நிச்சயமாய்... அலைபேசிகளும் SMS களும் எக்காலத்திலும் நினைவுகளைத் தரும் ஊடகங்களாக மக்கள் மனதில் இருக்காது.நான் கடிதங்கள் எழுதிய காலம் உண்டு!!! இப்பொழுதெல்லாம் கடிதங்கள் இணையத்தின் வழியேதான்....நல்ல கவிதை.//

அப்பாடா.. கவிஞர் பாராட்டிட்டாரு.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
கடிதம் பற்றி உங்களைப் போன்றோர் சொல்லித்தான் எங்கள் தலைமுரையினருக்கு புரிகிறது. அது போய் உடனடி தகவல் தொடர்பு சாதனமாக வந்துள்ள செல்பேசி லாபமா இல்ல நஷ்டமானு தெரியல!//

எப்பா.. நானும் கிட்டத்தட்ட உங்க தலைமுறைதான்ப்பா.. என்ன ஒரு பத்து வருஷம் முன்னாடி பொறந்துட்டேன்.. ஹி ஹி ஹி.. அலைபேசி நல்ல விஷயம் தான்.. அது சரியாக பயன்படுத்தப்படும் வரை..

ராமலக்ஷ்மி said...

என்னிடமும் இருக்கின்றன கடிதக் கலெக்‌ஷன்கள். கடிதம் எழுதுவதே ஒரு கலை. அது இப்போது அழிந்தே விட்டது. எல்லாம் மெயிலிலும் அலைபேசியிலும்...:(!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க மேடம்.. எனக்கும் அதே ஆதங்கம்தான்.. மறுபடி எழுத ஆரம்பிக்கணும்னு தோணுது.. பார்ப்போம்..

Anonymous said...

ம்ம்.. அது ஒரு காலம்ணே... இப்பெல்லாம் யாரு எழுதுராங்க! எல்லாம் மெயிலுராங்க
யதார்தமான கவிதை

Anonymous said...

அன்புமணி கூறியது...
என் காதலி எனக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் வைத்திருக்கிறேன்.(அந்த காதலிதான் இப்ப மனைவி... அதனால பிரச்சனை இல்ல... )
*******************
ரொம்ப புண்ணியவான் இருக்காத காதலிச்சங்களையே கரம் புடுச்சிடீடாங்க

உமா said...

பழைய கடிதங்கள் பற்றி எழுதி எங்கள் கடந்த கால சந்தோஷங்களை நினைவு படுத்திவிட்டீர்கள்.என் திருமணத்தின் போது என் தம்பி எழுதிய கடிதம் என்னை தன் இரண்டாவது அம்மா என்று சொல்லி எழுதியது.உமாவிற்கு கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுங்கள்,பணத்தை பற்றி கவலைப்படவேண்டாம் [அப்பொழுதான் வேலையில் சேர தில்லி போயிருந்தான்] என்றெல்லாம் எழுதியிருந்தான். i love him a lot.அற்புதமான நினைவுகளை ஞாபகபடுத்தி விட்டீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

//கடந்து வந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கவேனும் வேண்டும்.. கடிதங்கள்..!!//

உண்மை

ராம்.CM said...

கடிதம் எழுதிய காலத்தை என்னாலும் இன்னும் மறக்க முடியவில்லை!

Anonymous said...

உண்மைதான், கடிதங்கள் என்றுமே மறக்கமுடியாதவை... ஒரு கடிதத்தை எத்தனை முறை பிரித்து பிரித்து படித்திருப்போம்.. கடிதங்கள் போல் அல்ல இமெயில்கள்...

நினைவுகளை ஒருமுறை திரும்பிபார்க்க வைத்த பதிவு.

வாழ்த்துக்கள் நண்பரே!

மேவி... said...

"தொலைந்து போன பொருள் ஒன்றைத்
தேடி கொண்டு இருக்கையில்..
என்றோ நான் எழுதிய கடிதமொன்று
என் கைகளில் சிக்கியது.. !!"
நீங்க எழுதிய கடிதம் எப்படி உங்களிடம் இருக்கும் ....
நீங்க யாருக்கு அனுபின்களோ அவங்க கிட்ட தானே இருக்கும்

"கடைசியாக நான் கடிதம் எழுதியது
எப்போது..? என் நினைவில் இல்லை.. !!"
ஆமாங்க ......
அப்ப இருந்த மதிப்பு இப்போ உறவுகளுக்கு இல்லை

"அலைபேசி வந்த பின்னர்
கடிதம் எழுதும் பழக்கம் இன்னும்
மக்களிடம் உள்ளதா..? தெரியவில்லை.. !!"
இல்லைங்க..... அப்படியே லெட்டர் வந்தாலும் அது bank statement அஹ தான் இருக்கும்

"நமக்கென கடிதம் ஏதும் வந்து
இருக்கிறதா என தபால்காரருக்காக
காத்து நின்ற நாட்கள்.. "
அது எல்லாம் சுகமான நினைவுகளுங்க

"காணாமல் போய் விட்டன..!!"
அது போகவில்லை ...... நாம் தான் தொலைத்து விட்டோம்

"எழுதவதற்கு ஒன்றும் இல்லாத
போதும் நம் நேசங்களுக்காக எழுதிய
கடிதங்கள்.. மறக்க முடியாதவை..!!"
ஆமாம் ...... ஆனா வார்த்தைகள் அருவியாய் வரும் எழுத துடங்கிய உடன்

"அவை வெறும் காகிதங்கள் அல்ல..
தந்தையாக, தாயாக, மகனாக, மகளாக,
உடன்பிறப்பாக, நட்பாக, காதலாக..
கடிதங்கள் நமக்கு எல்லாமுமாக
இருந்து இருக்கின்றன..!! "
ஆமாம்..... கடிதமும் ஒரு உறவினனாய் இருந்திற்க்கிறது

"பிடித்தவர்கள் கடிதத்தை தன்னுடன்
வைத்து கொண்டே அலைந்த
நாட்களும், தனிமையைத் தவிர்க்க
தலையணைக்கு அடியில் கடிதங்கள்
வைத்துக்கொண்டு தூங்கிய நாட்களும்..
மீண்டும் கிடைக்குமா எனத் தெரியவில்லை..!!"
வாழ்க்கை ஓட்டத்தில் தொலைத்து விட்டோம் அவையை எல்லாம் தோழரே

"அன்பு, சந்தோஷம், ஆசை, துக்கம், கோபம்
என நாம் கடந்து வந்த உணர்வுகளை
நாம் திரும்பி பார்க்க உதவும்
காலக் கண்ணாடிதான்.. கடிதங்கள்.. !!"
இப்ப எங்க விட்டுல இருக்கிற லெட்டர் எல்லாம் பார்க்கும் போது பொறாமையாய் இருக்குங்க

"என்னவென்று தெரியாத ஏதோ ஒன்றைத்
தேடி அலைந்து நாம் களைத்துப் போய்
அமரும் நேரத்தில் - கடந்து வந்த வாழ்க்கையை
திரும்பி பார்க்கவேனும் வேண்டும்.. கடிதங்கள்..!!"
ஒருவன் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் கடிதம்கள்

Anonymous said...

//"அலைபேசி வந்த பின்னர்
கடிதம் எழுதும் பழக்கம் இன்னும்
மக்களிடம் உள்ளதா..? தெரியவில்லை.. !!"//

உண்டு.
உங்களுக்கே தெரியும். இன்னும் கடிதம் என்பது as i am suffering from fever என்று பள்ளிகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது.

March 12, 2009 8:32 AM

Anonymous said...

நானும் சில கடிதங்களை பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். அது என் பாட்டி எனக்கு நான் சிறுவதில் இருக்கும் போது அனுப்பிய வாழ்த்து அட்டை. அவர்கள் இறந்த பின்னும் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது அவரது நினைவுகள். (வாழ்த்துஅட்டை வழியாக.) அவங்க நியாபகம் வரும்போதெல்லாம் எடுத்துப் பார்ப்பேன்.

அத்திரி said...

ம்ம்ம்ம்... பழைய ஞாபகங்களை கிளறி விட்டுட்டியே நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
ம்ம்.. அது ஒரு காலம்ணே... இப்பெல்லாம் யாரு எழுதுராங்க! எல்லாம் மெயிலுராங்க
யதார்தமான கவிதை//

வாங்க கவின்.. என்ன பண்ண.. நாமளும் அதைத்தானே செஞ்சிக்கிட்டு இருக்கோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//உமா said...
அற்புதமான நினைவுகளை ஞாபகபடுத்தி விட்டீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.//

சந்தோஷம் தோழி.. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
உண்மை//

நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
கடிதம் எழுதிய காலத்தை என்னாலும் இன்னும் மறக்க முடியவில்லை!//

வாங்க ராம்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷீ-நிஷி said..
நினைவுகளை ஒருமுறை திரும்பிபார்க்க வைத்த பதிவு.
வாழ்த்துக்கள் நண்பரே!//

ரொம்ப நன்றி நண்பா.. எழுதியது உங்களின் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது என்பதைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
நீங்க எழுதிய கடிதம் எப்படி உங்களிடம் இருக்கும் ....
நீங்க யாருக்கு அனுபின்களோ அவங்க கிட்ட தானே இருக்கும் //

கல்லூரியில் படிக்கும்போது அம்மாவுக்கு நான் எழுதிய கடிதங்கள் இப்போது என்னிடம் தான் உள்ளது நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee//

அடேங்கப்பா.. வார்த்தைக்கு வார்த்தை அலசி இருக்கீங்க.. நன்றி mayvee...

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
உங்களுக்கே தெரியும். இன்னும் கடிதம் என்பது as i am suffering from fever என்று பள்ளிகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது.//

ஆசிரியர் அப்படீங்கறதை நிரூபிச்சுட்டீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

////மகா said..
நானும் சில கடிதங்களை பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். அது என் பாட்டி எனக்கு நான் சிறுவதில் இருக்கும் போது அனுப்பிய வாழ்த்து அட்டை. அவர்கள் இறந்த பின்னும் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது அவரது நினைவுகள். (வாழ்த்துஅட்டை வழியாக.) அவங்க நியாபகம் வரும்போதெல்லாம் எடுத்துப் பார்ப்பேன்.//

அதெல்லாம் பொக்கிஷம் தோழி.. பத்திரம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
ம்ம்ம்ம்... பழைய ஞாபகங்களை கிளறி விட்டுட்டியே நண்பா..//

அதுக்காகத்தானே நண்பா எழுதுனதே..

வால்பையன் said...

நான் கூட எனக்கு வந்த கடிதங்களை பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்!

ஆனால் நான் எழுதிய கடிதங்கள் பத்திரமா இருக்கான்னு தெரியலையே!

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி நண்பா.. நீங்க எப்படி முக்கியமா நினைக்குறவங்க கடிதங்கள பத்திரப்படுத்தி வச்சு இருக்கீங்களோ.. அதே மாதிரி உங்களை நேசிக்கிறவங்களும் பத்திரமா வச்சி இருப்பாங்க..

புல்லட் said...

முதல்ல தலைப்புக்கு பிடிங்க ஒரு பாராட்டு... உதை நானும் யொசிசிருக்கன்.. ஆனா அதைப்பற்றி எழுதின உங்களை என்னசால்லி வாழ்த்துறது... கருத்து சூப்பர்...

இப்பெல்லாம்கடிதங்களை கண்டா பயமாக்கிடக்கு..

ஏன்னா அதில வாரது செல்போன் பில்லொ அல்லது கிரடிட் காட் அறிக்கையோ மட்டும் தான்....

:(

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க புல்லட்.. பில்லப் பத்தி.. உங்க கவலை உங்களுக்கு.. வருகைக்கு நன்றி..

Suresh said...

votta pottachu :-) enga pathivum pidicha podunga votta

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்...

Anonymous said...

ஐயா
தங்களின் கடிதம் பற்றிய பதிவை பார்த்தேன். என்னுடைய பள்ளிக்கால விடுதி வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது . எங்கள் விடுதியில் ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு உண்டு (மூன்று பேசிகளுடன்) வீட்டிலோ நண்பர்களுடனோ பேச அனுமதிக்கப்படும் நேரம் சனி ஞாயிறுகளில் மாலை நான்கிலிருந்து ஆறு வரை அதிலும் நமக்கான ரகசியங்களை பேச முடியாது ஏனென்றால் நாம் பேசும்போது இன்னொரு பேசியில் வார்டன் கேட்டு கொண்டிருப்பார். அந்த சமயங்களில் மனம் விட்டு நான் பேச உதவுவது கடிதங்கள் மட்டுமே. தங்கள் கவிதை போன்றே என் கடிதத்தை எச்சில் தடவி ஒட்டி தபால் பெட்டியில் சேர்த்த நாளில் இருந்து பதில் கடிதம் வரும் வரையான நாட்களின் உணர்வுகள் விளக்கமுடியாதவை. அதிலும் கடிதம் கிடைத்தவுடன் அவசரத்தில் முதல் முறை படிப்பதை விட செய்தியை தெரிந்து கொண்ட பின் சற்று ஓய்வாக இருக்கையில் மறுபடியும் படிக்கும்போது வரும் மன நிறைவு அளவில்லாதது.அருமை ஐயா.ஆனால் வரும் காலங்களில் கடிதப்பரிமாற்றம் என்பது உணர்வுப்பூர்வமாக அல்லாமல் வெறும் விண்ணப்பங்கள் மற்றும் வேலை சார்ந்தவைகளோடு முடிந்து விடும். ஏன்? அடுத்த தலைமுறையில் கடிதம் என்பது ஒரு காட்சிப்பொருளாகவும் மாறிவிடும் என்ற உணர்வு சற்று வருத்தமளிக்கிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

இவ்வளவு விரிவாக உன்னுடைய உணர்வுகளை சொன்னதற்கு நன்றி கார்த்தி..

நையாண்டி நைனா said...

நண்பா.... உண்மையில் கடிதங்கள், ஆழ்மனதில் என்றும் இருக்கும்.

அருமையான ஆக்கம் நண்பா...

நவநீதன் said...

ஒரு காலத்தில் எனக்கும் சில பொங்கல் வாழ்த்து கடிதங்கள் வந்திருக்கின்றன...! அதை இப்போது பத்திரமாய் வைத்திருக்கிறேன். நானும் சிலருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பியிருக்கிறேன்....! மற்றபடி நான் கடிதம் எழுதியதெல்லாம் தமிழ் மற்றும் ஆங்கில பாட தேர்வுகளில் தான்...!

பழசை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி...!

Anonymous said...

கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் தரும் உணர்ச்சிகளை இன்றைய செல் போன் தருவதில்லை.என்னிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் "நான் யாருக்காவது கடிதம் எழுதும் பொது எனக்கொரு பிரதியை வைத்துக்கொள்வது தான் ".கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு சென்று , அங்கிருந்து அப்பாவுக்கு எழுதிய கடிதம் என பல நூறு கடிதம் என்னிடம் இருக்கின்றன.கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை...அந்த கலை அடுத்த தலைமுறையை சென்றடையுமா என்பது கேள்விக் குறிதான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
நண்பா.... உண்மையில் கடிதங்கள், ஆழ்மனதில் என்றும் இருக்கும்.
அருமையான ஆக்கம் நண்பா...//

ரொம்ப நன்றி நண்பா... இன்னைக்கு உங்க குசும்பு பதிவு நல்லா இருந்தது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நவநீதன் said..
ஒரு காலத்தில் எனக்கும் சில பொங்கல் வாழ்த்து கடிதங்கள் வந்திருக்கின்றன...! அதை இப்போது பத்திரமாய் வைத்திருக்கிறேன். நானும் சிலருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பியிருக்கிறேன்....! மற்றபடி நான் கடிதம் எழுதியதெல்லாம் தமிழ் மற்றும் ஆங்கில பாட தேர்வுகளில் தான்...!பழசை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி...!//

வருகைக்கு நன்றி தோழரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுபாங்கி கூறியது...
கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் தரும் உணர்ச்சிகளை இன்றைய செல் போன் தருவதில்லை.என்னிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் "நான் யாருக்காவது கடிதம் எழுதும் பொது எனக்கொரு பிரதியை வைத்துக்கொள்வது தான் ".கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு சென்று , அங்கிருந்து அப்பாவுக்கு எழுதிய கடிதம் என பல நூறு கடிதம் என்னிடம் இருக்கின்றன.கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை...அந்த கலை அடுத்த தலைமுறையை சென்றடையுமா என்பது கேள்விக் குறிதான்.//

நமக்கு ஒரு பிரதி வைத்துக் கொள்வது.. ரொம்ப நல்ல விஷயங்க.. உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.. நம்ம எல்லாருமே முயன்றால் மறுபடி கடிதம் எழுதும் பழக்கம் துளிர்த்திடலாம்..

ஹேமா said...

கார்த்திகைப் பாண்டியன் நான் மனதுக்குள் புலம்பித் தவிக்கும் விஷயங்களுக்குள் இதுவும் ஒன்று.நீங்கள் சொன்ன அத்தனையும் பொன்போல உண்மை.நான் என் அப்பாவிடம் போன ஒரு மாதத்திற்கு முன் கேட்டே விட்டேன் "அப்பா உங்கள் கையால் ஒரு கடிதம் எழுதிப் போடுங்கோ"என்று.அப்பா ,அம்மாவின் பழைய கடிதங்கள் கட்டுக் கட்டாக இன்னும் என்னிடம் இருக்கிறது.
ஆனால் 15 வருடங்களுக்கு மேலானவை.இப்போதைக்கு இல்லவே இல்லை.தொலைந்த உறவுகளின் ஞாபக இருப்பிடங்கள் கடிதங்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மை தோழி... நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் அருகில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவது கடிதங்கள்.. இன்று நாம் அவற்றை புறக்கணிப்பது வேதனை தரக் கூடிய விஷயம்...

தமிழ் மதுரம் said...

அலைபேசி வந்த பின்னர்
கடிதம் எழுதும் பழக்கம் இன்னும்
மக்களிடம் உள்ளதா..? தெரியவில்லை.. !!
நமக்கென கடிதம் ஏதும் வந்து
இருக்கிறதா என தபால்காரருக்காக
காத்து நின்ற நாட்கள்..
காணாமல் போய் விட்டன..!!//


கவிதை யதார்த்த கலந்த நினைவு மீட்டல்..

இன்றைய தொழில் நுட்ப விருத்தியால் நாம் எம்மை அறியாமலே எமது பாரம்பரியங்கள் பலவற்றை இழக்கிறோம் என்பது உண்மை.

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி கமல்.. யதார்த்தத்தை எழுதி இருக்கிறேன்..

narsim said...

மிக அருமையான பதிவு.. தாமதமாக உங்கள் பதிவு பக்கம் வருவதை நினைத்து வருந்துகிறேன்.( நம்ம ஊரு ஆளுவேற..)

தொடருங்கள்..தொடர்வேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அடேங்கப்பா.. நர்சிம்.. நீங்க நம்ம ஊருக்காரரா.. ரொம்ப சந்தோஷம்... வருகைக்கு நன்றி..

சாந்தி நேசக்கரம் said...

கடைசியாக நான் கடிதம் எழுதியது
எப்போது..? என் நினைவில் இல்லை.. !!
அலைபேசி வந்த பின்னர்
கடிதம் எழுதும் பழக்கம் இன்னும்
மக்களிடம் உள்ளதா..? தெரியவில்லை.. !!

கணணியில் தட்டத் தொடங்கிய பின்னர் கையெழுத்தெல்லாம் மறந்து ஈமெயிலில் தான் எல்லோரது கடிதங்களும் எழுதப்படுகின்றன.

கடிதங்கள் நினைவு கொள்ளும் கவிதைக்கு பாராட்டுக்கள்.

சாந்தி

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி நண்பரே..

அமுதா said...

அருமை...

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் வருகைக்கு நன்றி அமுதா..

யாழினி said...

கடிதங்கள் உண்மையிலே மறக்க முடியாதவை,
சில கடிதங்கள் பொக்கிஷங்கள்.

உங்களது கவிதை மிக நன்றாக உள்ளது கார்த்திகைப் பாண்டியன்!

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி யாழினி... தொடர்ந்து வாருங்கள்..

Anonymous said...

நல்ல கருத்து
மெயில் வந்த
பிறகு கடிதங்களே இல்லை
கருத்தை கூறின நீங்களே எப்பொழுதொ எழுதியது என்று கூறி இருக்குறீர்கள்.
நம் கை கொண்டு எழுதுவதே சுகம் தான்
தொடருங்களேன்......
உங்கள் வாயிலாகவே கூறுகிறேன்
......
தந்தையாக, தாயாக, மகனாக, மகளாக,
உடன்பிறப்பாக, நட்பாக, காதலாக
........