March 2, 2009

வழக்கொழிந்த தமிழ் வார்த்தைகள்...!!!

சிலபல நாட்களுக்கு முன்பாக நண்பர் பிரேம்குமார் சண்முகமணி என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார். (ஆரம்பித்து வைத்தது வானவில் வீதி கார்த்தி... பிறகு mayvee.. பின் பிரேம்...) வழக்கொழிந்த தமிழ் வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் தேடிப்பிடித்து எழுத வேண்டும் என்பதாலேயே தாமதம் செய்து வந்தேன். இந்நிலையில் நேற்று தோழி இயற்கை வேறு இதே தலைப்பில் நான் எழுத வேண்டும் என்று சொல்லி விட்டதால்... இதோ பதிவு. முடிந்தவரை எளிய வார்த்தைகளைத்தான் தந்து உள்ளேன்.
முதலில் உயிரெழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளில் தொடங்குவோம்..
அங்கதம் - மரபுகளை, பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தல்
அஞ்சனம் - கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
ஆதனம் - சொத்து
ஆரம் - மாலை
ஆலிங்கனம் - தழுவுதல்
இடாப்பு - பதிவேடு
இரண்டகம் - நம்பிக்கைத் துரோகம்
ஈடாட்டம் - உறுதி குலைதல்
ஈனம் - இழிவு, கேவலம்
உத்தரீயம் - மேலாடை
உற்பாதம் - தீய விளைவு
ஊடு - பொய்க்கோபம் கொள்ளுதல்
ஊசு - பதம் கெட்டுப்போதல்
எத்தனம் - முயற்சி
எதேஷ்டம் - தேவைக்கு அதிகம்
ஏகாலி - சலவைத் தொழிலாளி
ஏனம் - பாத்திரம்
ஐது - அடர்த்திக்குறைவு
ஐமிச்சம் - சந்தேகம்
ஒக்கிடு - பழுது பார்த்தால்
ஒழுகலாறு - பழக்க வழக்கம்
ஓந்தி - ஓணான்
ஓம்பு - பேணுதல்
ஔஷதம் - மருந்து
இனி உயிர்மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்..
கச்சு - பெண்கள் மார்பில் அணியும் துணி
கபோலம் - கன்னம்
சண்டமாருதம் - பெரும் காற்று, சூறாவளி
சதிபதி - தம்பதி
ஞாலம் - பூமி
டாம்பீகம் - ஆடம்பரம்
தசம் - பத்து
தந்துகி - மிக நுண்ணிய ரத்தக்குழாய்
நயனம்- கண்
நிகண்டு - அகராதி நூல்
பத்தாயம் - எலிப்பொறி
பரதவர் - மீனவர்
மதலை - குழந்தை
மாச்சரியம் - பகைமை
யாக்கை - உடல்
ரோகம் - நோய்
லோபி - கருமி
வயணம் - சரியான விவரம்
விகசித்தல் - மலர்தல்
வைரி - எதிரி
இதுவரை தூய தமிழில் உள்ள சில வார்த்தைகளை பற்றி எழுதினேன்.. இனி.. ஒரு சில வார்த்தைகள்.. மதுரை வட்டார வழக்கில்..
சூதானம் - பத்திரம்
வெஞ்சனம் - சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு - தெரு முடியும் இடம்
வெங்கப்பய - உருப்படாதவன்
சொளகு - முறம்
சோப்ளாங்கி - சோர்ந்து போனவன்
மெனா - பைத்தியம் போல் இருப்பவன்
(இப்போதைக்கு இது போதும்.. )
தமிழில் இன்று பயன்படுத்தப் பட்டாலும் நாம் சரியாக புரிந்து கொள்ளாத வார்த்தைகளும் உள்ளன. அவற்றில் சில..

தியாகம் - எத்தனையோ பேர் செய்த தியாகத்தின் பலன்தான் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம்.. இது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா..?

மரியாதை - பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் நம் வீட்டில் கொடுக்கிறோமா?

மனிதநேயம் - சக மனிதனின் வேதனை கண்டு உள்ளம் நோகும் மனிதநேயம் இன்னும் நம் எத்தனை பேரில் மீதம் இருக்கிறது..?

இந்த சூழ்நிலைகள் எல்லாம் மாறினால்தாம் உண்மையிலேயே உலகில் மகிழ்ச்சி பிறக்கும்.. அது நடக்கும் என நம்புவோம்..
( இந்த பதிவில் எங்கேனும் தூய தமிழ் அல்லாத சில வார்த்தைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.. சுட்டிக் காட்டுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்.. )
இந்த தொடர்பதிவுக்கு நான் அடுத்து அழைக்க விரும்பும் நண்பர்கள்..
சொல்லரசன்...
கவின்..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

42 comments:

குமரை நிலாவன் said...

ஹைய்யா நான்தான் முதல்ல

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையா முதல் ஆளா வந்த நிலாவனுக்கு ஒரு ஓஓஓஒ..

*இயற்கை ராஜி* said...

ஆஹா ...இவ்ளோ வார்த்தைக‌ளா...மிக‌ ந‌ன்று.
அழைப்பை ஏற்ற‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி தோழா:-)

*இயற்கை ராஜி* said...

நீங்க‌ என்ன‌ டிபார்ட்மெண்ட்ங்க‌? எந்த‌ காலேஜ்?:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//iyarkai said...
ஆஹா ...இவ்ளோ வார்த்தைக‌ளா...மிக‌ ந‌ன்று.
அழைப்பை ஏற்ற‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி தோழா:-)//

நன்றி தோழி.. ஏற்கனவே நண்பர் பிரேம்குமார் வேற கூப்பிட்டு இருந்தார்.. நண்பர்கள் சொல்லி செய்யலைன்னா எப்படி?

கார்த்திகைப் பாண்டியன் said...

//iyarkai said..
நீங்க‌ என்ன‌ டிபார்ட்மெண்ட்ங்க‌? எந்த‌ காலேஜ்?:-)//

கல்லூரி - கொங்கு பொறியியல் கல்லூரி.. துறை - கருவியியல் (instrumentation)..

Anonymous said...

இடாப்பு தூய தமிழா????!
முடிவிலை... வார்தைகளுக்கு வசனமா கொடுத்தது கலக்கல!

Anonymous said...

என்ன கொடுமை இது! என்னையும் கோத்து விட்டு புட்டீங்களே... கதைக்கிற டமிலே சிங்கியடிக்குது... இதிலை வழக்கொழிந்த வார்த்தைகளா????!

Anonymous said...

இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கன் தல (ஆணி நிறஞ்சிருச்சு...) கொஞ்சம் லேட்டதான்(2014 வாக்கிலை) பதிவு வரும் கோச்சுக்காதிங்க தல!

*இயற்கை ராஜி* said...

wow...nerungeetinga..:-)..
mail to iyarkai09@gmail.com when u find time:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said...
வார்தைகளுக்கு வசனமா கொடுத்தது கலக்கல..இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கன் தல (ஆணி நிறஞ்சிருச்சு...) கொஞ்சம் லேட்டதான்(2014 வாக்கிலை) பதிவு வரும் கோச்சுக்காதிங்க தல!//

நன்றி நண்பா.. அழுகுணி ஆட்டம் ஆடக் கூடாது.. கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்க எழுதலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//iyarkai said..
wow...nerungeetinga..:-)..
mail to iyarkai09@gmail.com when u find time:-)//

கண்டிப்பாக எழுதுகிறேன் தோழி..

Anonymous said...

niraya tamil allaatha sorkal ullana.
meendum sari paarkavum.

கார்த்திகைப் பாண்டியன் said...

கிடைத்த வார்த்தைகளைக் கொண்டு எழுதினேன் நண்பா.. சரிபார்க்கிறேன்..

Suresh said...

உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

Suresh said...

@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி பாண்டியன்!

நம்ம மாதிரி எல்லாரும் முயற்சி செய்வோம் கண்டிப்பாக தமிழ்நாடு மோசமான அரசியல்வாதிகள் இல்லாம புணர்ச்சி பெரும்

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் வருகைக்கு நன்றி சுரேஷ்..

சம்பத் said...

தற்போதுள்ள தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் தேவையானதொரு பதிவு... தொடரட்டும் உங்கள் சேவை...

ஆதவா said...

சதிபதி, தசம், மாச்சரியம், ரோகம், லோபி, எதேஷ்டம் போன்ற வார்த்தைகள் தமிழல்ல... இன்னும் இருக்கிறதா தெரியவில்லை...

பல வார்த்தைகள் புதியவை (எங்கேயிருந்துங்க புடிக்கிறீங்க???)

அங்கதம் - கிண்டல் செய்வதல்ல... திட்டுவது...
அங்கதச் செய்யுள் அல்லது அங்கதப்பா - ஒருவரைத் திட்டி பாடுவது!!!

ஊடு.... வினைச்சொல்.. ஊடல் என்பதற்கு நீங்கள் சொன்னது சரியாகலம்..

ஆனால் ஒரு கலக்கு கலக்கீட்டீங்க....  உயிர் கலந்து மெய் வந்து ஒரு தமிழ் உடலை பெற்றெடுத்துவிட்டீர்கள்...
வாழ்த்துகள்>!!!

மேவி... said...

kalakkal padivu.....

niraiya words தெரிந்து கொண்டேன்

arumai

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
//iyarkai said..
நீங்க‌ என்ன‌ டிபார்ட்மெண்ட்ங்க‌? எந்த‌ காலேஜ்?:-)//

கல்லூரி - கொங்கு பொறியியல் கல்லூரி.. துறை - கருவியியல் (instrumentation).."


அட அந்த department ஆ .......
ennakku ரொம்ப தெரிஞ்சவங்க எல்லாம் அந்த department ல படிக்கிறாங்க.....

Anonymous said...

uththareeyam - mEl Thundu enbathu vazakkatthil ullathuthane!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
தற்போதுள்ள தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் தேவையானதொரு பதிவு... தொடரட்டும் உங்கள் சேவை...//

வாழ்த்துக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
சதிபதி, தசம், மாச்சரியம், ரோகம், லோபி, எதேஷ்டம் போன்ற வார்த்தைகள் தமிழல்ல... இன்னும் இருக்கிறதா தெரியவில்லை... பல வார்த்தைகள் புதியவை (எங்கேயிருந்துங்க புடிக்கிறீங்க???)//

நினைத்தேன் ஆதவா.. அவை வடமொழிச் சொற்கள் போல் தெரிந்தன.. எங்க இருந்து எடுத்தேங்குறது ரகசியம் நண்பா.. அலைபேசியில சொல்றேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
kalakkal padivu..niraiya words தெரிந்து கொண்டேன் arumai
அட அந்த department ஆ .......
ennakku ரொம்ப தெரிஞ்சவங்க எல்லாம் அந்த department ல படிக்கிறாங்க.....//

சந்தோசம் நண்பா.. நேரம் கிடைக்குக்போது தொடர்பு கொள்ளுங்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//பெயரில்லா கூறியது...
uththareeyam - mEl Thundu enbathu vazakkatthil ullathuthane!//

சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பரே..

Anbu said...

நிறைய வார்த்தைகள் பழகிவிட்டேன் அண்ணா

ராம்.CM said...

நல்லாயிருந்தது..!கலக்கிட்டீங்க கார்த்திகைப்பாண்டியன்! என்னையும் ப்ரேம் அழைத்திருந்தார். தாங்கள் மற்றும் அதிக நண்பர்கள் எழதிவிட்டதால் "வார்த்தைகள் கிடைக்க வில்லை" என்றுகூறி நான் நலுவிவிடலாம் என நினைக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said.
நிறைய வார்த்தைகள் பழகிவிட்டேன் அண்ணா//
ரொம்ப சந்தோசம் அன்பு.. நீங்கள் கூட எழுத முயற்சி செய்யலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
நல்லாயிருந்தது..!கலக்கிட்டீங்க கார்த்திகைப்பாண்டியன்! என்னையும் ப்ரேம் அழைத்திருந்தார். தாங்கள் மற்றும் அதிக நண்பர்கள் எழதிவிட்டதால் "வார்த்தைகள் கிடைக்க வில்லை" என்றுகூறி நான் நலுவிவிடலாம் என நினைக்கிறேன்//

நன்றி ராம்.. இப்படி எல்லாம் நீங்க சொல்லக்கூடாது.. நீங்களும் எழுதுங்க.. நாங்க கொஞ்சம் புது வார்த்தைகள் தெரிந்து கொள்கிறோம்..

Anonymous said...

இவ்ளோ வார்த்தைகளா, பேஸ் பிரமாதம். கலக்குறீங்க பொன்னி. திரும்ப யாராவது அழைத்தால் என்ன செய்வீங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

மறுபடியும் கண்டிப்பாக எழுதுவேன்.. வருகைக்கு நன்றி..

உங்கள் ராட் மாதவ் said...

//தியாகம் - எத்தனையோ பேர் செய்த தியாகத்தின் பலன்தான் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம்.. இது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா..?

மரியாதை - பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் நம் வீட்டில் கொடுக்கிறோமா?

மனிதநேயம் - சக மனிதனின் வேதனை கண்டு உள்ளம் நோகும் மனிதநேயம் இன்னும் நம் எத்தனை பேரில் மீதம் இருக்கிறது..?//

Really touching... Nice... Best Wishes...

உங்கள் ராட் மாதவ் said...

ஆலிங்கனம், உத்தரீயம், எதேஷ்டம், ஔஷதம், சதிபதி , தசம் , ரோகம்

ivai yaavum vada mozhi sorkal.

கார்த்திகைப் பாண்டியன் said...

//RAD MADHAV said..
Really touching... Nice... Best Wishes....//

நன்றி மாதவ்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//RAD MADHAV said..
ஆலிங்கனம், உத்தரீயம், எதேஷ்டம், ஔஷதம், சதிபதி , தசம் , ரோகம் ivai yaavum vada mozhi sorkal.//

சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா..

சொல்லரசன் said...

//மனிதநேயம் - சக மனிதனின் வேதனை கண்டு உள்ளம் நோகும் மனிதநேயம் இன்னும் நம் எத்தனை பேரில் மீதம் இருக்கிறது..?//

இதுதான் தற்போது வழக்கொழிந்த சொல்லாக ஆகிவருகிறது.

உயிரெழுத்து,உயிர்மெய் வழக்கொழிந்த சொற்களை உங்கள் தமிழ் துறையில்
கேட்டு எமுதியதுதானே.வட்டார சொற்கள் அருமையான பதிவு.

கடைசியில் என்னை சிக்க வைச்சிட்டேயே தல.

உங்கள் கட்டளை ஏற்று தெரிந்ததை எமுதுகிறேன்(உங்க ரேஞ்க்கு முடியாதுங்கோ)

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
கடைசியில் என்னை சிக்க வைச்சிட்டேயே தல.உங்கள் கட்டளை ஏற்று தெரிந்ததை எமுதுகிறேன்(உங்க ரேஞ்க்கு முடியாதுங்கோ)//

நன்றி நண்பா.. சீக்கிரம் எழுதுங்கோ..

ச.பிரேம்குமார் said...

அசத்தலான பதிவு பாண்டியன்.வாழ்த்துகள்

குறிப்பாக புரிந்த கொள்ளாத வார்த்தைகளும், மதுரை வட்டார சொற்களும் மிகவும் அருமை. மவராசனா இருங்கப்பு :)

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி நண்பா..

Anonymous said...

theivama yenkayo poyitheenga...1977 padam vimarsanam super........unga suthanthira katuraikal peramaatham........
by
alwa pangali groups (theivathin seseyarkal)

Unknown said...

பொறிஞர் - பொறியாளர் , அது சரியான தமிழ் சொல்?