March 3, 2009

"கடி"க்க வாங்க..!!!

கொஞ்ச நாளா ஒரே சீரியஸ் பதிவா போய்க்கிட்டு இருக்கே.. மொக்க போட்டு ரொம்ப நாள் ஆச்சேன்னு நினச்சப்போ டக்குன்னு வந்துச்சு இந்த பதிவுக்கான ஐடியா.. எங்க உக்கார்ந்து யோசிச்சன்னு கேக்காதீங்க.. அது சீக்ரட்.. நான் என்னோட காலேஜ் நாட்கள்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்தப்போ (நம்புங்கப்பா).. ஒரு கலாட்டா போட்டி நடத்துனோம்.. அதுல கேட்ட கேள்விகள்தான் இதெல்லாம்.. இங்க கேட்டு இருக்குற கடிக்கு எல்லாம் பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க. யார் அதிக கேள்விக்கு சரியா பதில் சொல்றாங்களோ.. அவங்களுக்கு.. "கடி"கர் திலகம் என்னும் பட்டம் வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்..

 1. பல்லவனுக்கு எத்தனை பல் இருக்கும்?
 2. ஒருவர் வங்கிக்குள் நுழைந்தவுடன் கீழே விழுந்து விட்டார்.. ஏன்?
 3. செஸ் விளையாட வேண்டுமானால் ஜிம்முக்கு போக வேண்டும்.. ஏன்?
 4. ஆடவர் - எதிர்ப்பதம் என்ன?
 5. வாய்மை எனப்படுவது யாதெனில் ________
 6. டைட்டன் கம்பெனியில் எப்போதும் திருடு போகாது.. ஏன்?
 7. ஆண்களுக்கு மரியாதை தராத ஊர் எது?
 8. பெண்களுக்கு மரியாதை தராத ஊர்கள்?
 9. மன்மோகன் சிங் மாலையில் மட்டும்தான் வாக்கிங் போவாராம்.. ஏன்?
 10. நாய், பூனை,யானை, ________
 11. எதையுமே போட முடியாத பை எது?
 12. உக்கார முடியாத தரை எது?
 13. இந்த பரிசை ரொம்ப வயசானவங்களுக்குத்தான் கொடுப்பாங்களாம்.. என்ன பரிசு?
 14. கண்தானம் தராத ஊர் எது?
 15. நடிகை ரம்பாவுக்கு பிடித்த தமிழ் மாதம் என்ன?
 16. இனிஷியலுடன் கூடிய மிருகம் எது?
 17. ஒருவர் பீர் குடிக்கும்போது கையில் சேவாக் படத்தை வைத்து இருந்தார்.. ஏன்?
 18. இந்தியாவின் இனிஷியல் என்ன?
 19. GTTTT - _______
 20. ஒன்பது நாய்கள்.. எட்டு கொட்டடிகள்.. ஒரு கொட்டடிக்கு ஒரு நாயை மட்டும்தான் அடைக்க வேண்டும்.. எப்படி எல்லா நாய்களையும் அடைப்பீர்கள்?
 21. கல்யாணம் ஆன நாடு எது?

விடைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே..

நண்பர்களே.. கடி தெய்வங்களே.. விடை சொல்ற நேரம் வந்தாச்சு.. ஆர்வமா பதில் சொன்ன எல்லாருக்கும் நன்றி..

 1. பல்(லெ)வன் - பதினோரு பல் இருக்கும்
 2. ஏன்னா.. அவருக்கு பாங்க்ல பாலன்சே இல்ல..
 3. யானை, குதிரை எல்லாம் தூக்க வேண்டி இருக்கும்ல..
 4. ஆடாதவர்..
 5. லிப்ஸ்டிக்
 6. அங்கதான் எப்பவுமே "வாட்ச்" பண்ணிக்கிட்டு இருப்பாங்கல்ல..
 7. விஜயவாடா
 8. போடி, கன்னிவாடி, வாடிப்பட்டி..
 9. ஏன்னா.. அவர் PM
 10. இது சும்மா. என்ன வேணும்னாலும் எழுதலாம்.. குறிப்பா உங்களோட பேர்..
 11. தொப்பை
 12. புளியோதரை
 13. நோ"பல்" பரிசு
 14. "ஐ""தரா"பாத்
 15. தை (thigh)
 16. O நாய்
 17. ஏன்னா அவர் ஓப்பனர்
 18. M - மஹாத்மா காந்தி
 19. ஒரு G நாலு T - ஒரிஜினாலிட்டி
 20. மொத்தம் எட்டு கொட்டடி.. இப்போ ஆங்கிலத்துல nine dogs னு எழுதி ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு கொட்டடில அடைச்சா. சரியாப் போச்சு..
 21. இத்"தாலி"

சரியா பதில் சொன்னது நையாண்டி நைனா.. உருப்புடாதது_அணிமா.. கூட்ஸ் வண்டி.. நிலாவன்.. நாலு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா கடிச்சு, அடிச்சு இருக்காங்க.. அதனால பட்டத்த பகிர்ந்து கொடுக்கிறேன்.. கடிகர் திலகங்களே.. மிக்க நன்றி.. (யப்பா... மத்தவங்க எல்லாம் கொவிச்சுக்காதீங்கபா.. உங்கள எல்லாம் தனியா கவனிக்கிறேன்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

74 comments:

RAD MADHAV said...

First Kadi from Madurai

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி மாதவ்.. முதல் கடிக்கு.. அப்படியே ஏதாவது கடிக்கு விடைய சொல்லுங்க..

RAD MADHAV said...

1. 1
4. aadavi
5. poi solvathu
6. poottu tight aa irukkum
7. Vijayawada
8. podi, yervaadi, thoothukudi, saayalkudi, niraya irukku
10. paanai
11. good bye
12. therai
15. thai
(full answerum theriyum)
Thalaiva, yellaththayum naane sollitta appuram matha oorukkangarangellam kovichukuvaanga?

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. இதுல மூணே மூணுதான் சரி.. விடுங்க.. பார்த்துக்கலாம்..

நாமக்கல் சிபி said...

# டைட்டன் கம்பெனியில் எப்போதும் திருடு போகாது.. ஏன்?

டைட் செக்யூரிட்டி இருக்கும்!

# ஆண்களுக்கு மரியாதை தராத ஊர் எது?
விஜயவாடா

# பெண்களுக்கு மரியாதை தராத ஊர்கள்?
போடி

நாமக்கல் சிபி said...

//ஒருவர் பீர் குடிக்கும்போது கையில் சேவாக் படத்தை வைத்து இருந்தார்.. ஏன்? //

சேவாக் தான் ஓப்பனர்!

நாமக்கல் சிபி said...

/கண்தானம் தராத ஊர் எது? //

ஐதராபாத்!

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி அவர்களே.. டைட்டன் கம்பெனி கேள்விக்கு மட்டும் பதில் தப்பு.. மத்தது எல்லாம் கரெக்ட்..

வணங்காமுடி...! said...

எல்லாம் சரி ஐயா

விடைகளை நீங்க எப்போ தரப் போறீங்க? சீக்கிரம் கொடுக்கலன்னா, எல்லாரோட சார்பா உங்களுக்கு "கடிப்பாண்டியன்" னு பேரு வச்சுருவோம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணா.. அப்படி எல்லாம் ஏதும் செஞ்சுராதீங்க.. விடை எல்லாம் நாளைக்கு ஒரு பதிவாகவே போட்டுடுறேன்..

நையாண்டி நைனா said...

பல்லவனுக்கு எத்தனை பல் இருக்கும்? 1

நையாண்டி நைனா said...

ஒருவர் வங்கிக்குள் நுழைந்தவுடன் கீழே விழுந்து விட்டார்.. ஏன்? அவரு செக் "ட்ரோப்" பண்ணுறாராம்.

நையாண்டி நைனா said...

செஸ் விளையாட வேண்டுமானால் ஜிம்முக்கு போக வேண்டும்.. ஏன்? அதுலே, யானை குதிரை எல்லாத்தையும் தூக்கி அடிக்கணுமே.

நையாண்டி நைனா said...

ஆடவர் - எதிர்ப்பதம் என்ன? ஆடவரி

நையாண்டி நைனா said...

வாய்மை எனப்படுவது யாதெனில் _லிப்ஸ்டிக்

நையாண்டி நைனா said...

டைட்டன் கம்பெனியில் எப்போதும் திருடு போகாது.. ஏன்?

அங்கே தான் எப்போதும் வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பாங்களே.

நையாண்டி நைனா said...

ஆண்களுக்கு மரியாதை தராத ஊர் எது? விஜயவாடா

நையாண்டி நைனா said...

பெண்களுக்கு மரியாதை தராத ஊர்கள்? போடி

நையாண்டி நைனா said...

மன்மோகன் சிங் மாலையில் மட்டும்தான் வாக்கிங் போவாராம்.. ஏன்? அவர்தான் PM ஆச்சே

நையாண்டி நைனா said...

எதையுமே போட முடியாத பை எது? தொப்பை

நையாண்டி நைனா said...

உக்கார முடியாத தரை எது? பத்தரை

நையாண்டி நைனா said...

இந்த பரிசை ரொம்ப வயசானவங்களுக்குத்தான் கொடுப்பாங்களாம்.. என்ன பரிசு? நோ 'பல்' பரிசு

நையாண்டி நைனா said...

கண்தானம் தராத ஊர் எது? 'ஐ' தரா பாத்

நையாண்டி நைனா said...

ஒருவர் பீர் குடிக்கும்போது கையில் சேவாக் படத்தை வைத்து இருந்தார்.. ஏன்? அவர்தான் ஒபெனர்

நையாண்டி நைனா said...

GTTTT - _______ ஒருஜி னாளிட்டி

கார்த்திகைப் பாண்டியன் said...

நையாண்டி நைனா.. பத்து கேள்விக்கு சரியான பதில்.. கலக்கிட்டீங்க போங்க..

நையாண்டி நைனா said...

ஒன்பது நாய்கள்.. எட்டு கொட்டடிகள்.. ஒரு கொட்டடிக்கு ஒரு நாயை மட்டும்தான் அடைக்க வேண்டும்.. எப்படி எல்லா நாய்களையும் அடைப்பீர்கள்?

எட்டை அடைத்து விட்டு, கடைசி ஒன்னை காவலுக்கு வைக்கணும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இது தப்பு.. கொஞ்சம் கிருத்துவமா சிந்திங்க நண்பா..

நையாண்டி நைனா said...

நண்பா... இப்ப சொல்லு எத்தினி கரீட்டுன்னு.

கார்த்திகைப் பாண்டியன் said...

மொத்தம் பதினோரு கடிக்கு சரியான விடை.. பிச்சு உதறிட்டீங்க.. இப்போதைக்கு நீங்கதான் போட்டில முதல் இடம்.. பார்ப்போம்.. வேற யாராவது இதை முந்துராங்கலான்னு

நையாண்டி நைனா said...

இனிஷியலுடன் கூடிய மிருகம் எது? ஒ-நாய்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அடி தூளு.. பனிரெண்டு.. நீங்க நடத்துங்க..

ஷாஜி said...

//இந்தியாவின் இனிஷியல் என்ன? //

-M for Mahatma Gandhi : இந்தியாவின் தந்தை.

Anbu said...

1.பல்லவனுக்கு எத்தனை பல் இருக்கும்? 1

2.ஒருவர் வங்கிக்குள் நுழைந்தவுடன் கீழே விழுந்து விட்டார்.. ஏன்? அவரு செக் "Drop" பண்ணுறாராம்.

3.செஸ் விளையாட வேண்டுமானால் ஜிம்முக்கு போக வேண்டும்.. ஏன்?-தெரியவில்லை

4.ஆடவர் - எதிர்ப்பதம் என்ன? ஆடவரி

5.வாய்மை எனப்படுவது யாதெனில் _லிப்ஸ்டிக்

6.டைட்டன் கம்பெனியில் எப்போதும் திருடு போகாது.. ஏன்? அங்கே தான் எப்போதும் வாட்ச் இருக்குமே

7.ஆண்களுக்கு மரியாதை தராத ஊர் எது? விஜயவாடா

8.பெண்களுக்கு மரியாதை தராத ஊர்கள்? போடி

9.மன்மோகன் சிங் மாலையில் மட்டும்தான் வாக்கிங் போவாராம்.. ஏன்?-அவர்தான் PM ஆச்சே

10.நாய், பூனை,யானை, ________

11.எதையுமே போட முடியாத பை எது? தொப்பை

12. உக்கார முடியாத தரை எது? பத்தரை

13.இந்த பரிசை ரொம்ப வயசானவங்களுக்குத்தான் கொடுப்பாங்களாம்.. என்ன பரிசு? நோ 'பல்' பரிசு

15கண்தானம் தராத ஊர் எது? 'ஐ' தரா பாத்

21.கல்யாணம் ஆன நாடு எது? திருமங்கலம்

Iyarkai said...

GTTTT - _______ originality:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷாஜி said..
//இந்தியாவின் இனிஷியல் என்ன? //
-M for Mahatma Gandhi : இந்தியாவின் தந்தை.//

ஒண்ணு சொன்னாலும் சரியா சொன்னீங்க நண்பா.. //

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu..//
மொத்தம் எட்டு கேள்விக்கு சரியான பதில் சொல்லி இருக்க anbu....

கார்த்திகைப் பாண்டியன் said...

//iyarkai said..
GTTTT - _______ originality:-)//

மிகச்சரி தோழி..

உருப்புடாதது_அணிமா said...

1.பல்லவனுக்கு எத்தனை பல் இருக்கும்?
ஒரு பல்...

2.ஒருவர் வங்கிக்குள் நுழைந்தவுடன் கீழே விழுந்து விட்டார்.. ஏன்?
ஏன்னா அவரு cash Drop போனாரு...


3.செஸ் விளையாட வேண்டுமானால் ஜிம்முக்கு போக வேண்டும்..
அப்பொ தானே எதிரிகளை தூக்கி அடிக்க முடியும்.


4. ஆடவர் - எதிர்ப்பதம் என்ன?
ஆடாதவர்...

5.வாய்மை எனப்படுவது யாதெனில் ________?
Lipstick ??


6.டைட்டன் கம்பெனியில் எப்போதும் திருடு போகாது.. ஏன்?
அங்க தானே எப்பவும் வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பாங்க..

7.ஆண்களுக்கு மரியாதை தராத ஊர் எது?
VIJAYA வாடா...

8.பெண்களுக்கு மரியாதை தராத ஊர்கள்?
போடி...


9.மன்மோகன் சிங் மாலையில் மட்டும்தான் வாக்கிங் போவாராம்.. ஏன்?
அவரு தான் PM ஆச்சே..


10. நாய், பூனை,யானை, ________
யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்..

11.எதையுமே போட முடியாத பை எது?
தொப்பை/....

12.உக்கார முடியாத தரை எது?
தெரில்ல.... ( பத்தரை ??)13.இந்த பரிசை ரொம்ப வயசானவங்களுக்குத்தான் கொடுப்பாங்களாம்.. என்ன பரிசு?
NO பல் ( நோபல்)


14. கண்தானம் தராத ஊர் எது?
ஐ” தரா ‘ பாத்..

15.நடிகை ரம்பாவுக்கு பிடித்த தமிழ் மாதம் என்ன?

”கார்திக்” கை


16.இனிஷியலுடன் கூடிய மிருகம் எது?
"O" நாய் ( ஒனாய்)

17.ஒருவர் பீர் குடிக்கும்போது கையில் சேவாக் படத்தை வைத்து இருந்தார்.. ஏன்?
அவருதான் opener ஆச்சே..

18.இந்தியாவின் இனிஷியல் என்ன?
M. ( Mahatma gandi) ஏன்னா அவருதான் father of our Nation ஆச்சே...

19. GTTTT - _______
ஒருG நாலு T = Originality


20.ஒன்பது நாய்கள்.. எட்டு கொட்டடிகள்.. ஒரு கொட்டடிக்கு ஒரு நாயை மட்டும்தான் அடைக்க வேண்டும்.. எப்படி எல்லா நாய்களையும் அடைப்பீர்கள்?

ஒரு கொட்டடிக்கு ஒரு நாயை மட்டும்தான் அடைக்க வேண்டும்..அதனால அந்த ஒரு கொட்டடியில ஒரு நாய மட்டும் அடைச்சிட்டு மத்ததுல நம்ம சவுரியத்துக்கு அடைக்க வேண்டியது தான்..


21.கல்யாணம் ஆன நாடு எது?

இத்”தாலி”

உருப்புடாதது_அணிமா said...

என்னங்க?
என்னோடது எத்தினி கரிக்கிட்டு?

உருப்புடாதது_அணிமா said...

நானும் எவ்வளவோ கடிய கடிச்சிருக்கேன்..

இந்த மாதிரி கடி அம்மாடியோ தாங்காதுப்பா..

உருப்புடாதது_அணிமா said...

ஒழுங்கா எனக்கு அந்த "கடி"கர் திலகம் பட்டத்தை குடுங்க...

அத வைச்சு தான் நான் பட்டம் விட்டு பழகனும்...

ஆதவா said...

ஏன்.??என்னாச்சு??/


எதுக்காக???/


நான் இல்லாத நேரமா பாத்து கடி'த்த கார்த்திகையாருக்கு கண்டனங்கள்..
எல்லாவற்றையும் கடித்து உள்வாங்கிய, உருப்புடாதது அணிமாவுக்கு அதைவிட அதிக கண்டனங்கள்..

(கார்த்திகை சார், நான் இப்போத்தான் வீட்டுக்கு வந்தேன்,. இப்போதான் உங்க SMS பார்த்தேன்.....)

ஆதவா said...

////உருப்புடாதது_அணிமா கூறியது...
ஒழுங்கா எனக்கு அந்த "கடி"கர் திலகம் பட்டத்தை குடுங்க...
அத வைச்சு தான் நான் பட்டம் விட்டு பழகனும்...///////////


அந்த பட்டத்தை நீங்க பறக்க விடமுடியாது ஏன் தெரியுமா??

அதைத்தான் கடிச்சு வெச்சிருப்பீங்களே!!! ஹி ஹி ஹி

MayVee said...

"RAD MADHAV கூறியது...
1. 1
4. aadavi
5. poi solvathu
6. poottu tight aa irukkum
7. Vijayawada
8. podi, yervaadi, thoothukudi, saayalkudi, niraya irukku
10. paanai
11. good bye
12. therai
15. thai
(full answerum theriyum)
Thalaiva, yellaththayum naane sollitta appuram matha oorukkangarangellam kovichukuvaanga?"

periye repeat......

MayVee said...

sami mudiyale....
kadi super

கார்த்திகைப் பாண்டியன் said...

//உருப்புடாதது_அணிமா said..
என்னங்க?என்னோடது எத்தினி கரிக்கிட்டு?//

தெய்வமே.. பதினாலு கரீட்டு.. பிசிறு கிளப்பிட்டீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//உருப்புடாதது_அணிமா said..
ஒழுங்கா எனக்கு அந்த "கடி"கர் திலகம் பட்டத்தை குடுங்க...
அத வைச்சு தான் நான் பட்டம் விட்டு பழகனும்...//

வருகைக்கு ரொம்ப நன்றி.. பட்டம் இப்போதைக்கு உங்களுக்கு தான்னு நினைக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆதவா said..
நான் இல்லாத நேரமா பாத்து கடி'த்த கார்த்திகையாருக்கு கண்டனங்கள்..
எல்லாவற்றையும் கடித்து உள்வாங்கிய, உருப்புடாதது அணிமாவுக்கு அதைவிட அதிக கண்டனங்கள்..(கார்த்திகை சார், நான் இப்போத்தான் வீட்டுக்கு வந்தேன்,. இப்போதான் உங்க SMS பார்த்தேன்.....)//

பரவா இல்லை நண்பா.. நாம இன்னைக்கு பேசி தீர்த்துக்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆதவா said..
அந்த பட்டத்தை நீங்க பறக்க விடமுடியாது ஏன் தெரியுமா??
அதைத்தான் கடிச்சு வெச்சிருப்பீங்களே!!! ஹி ஹி ஹி//

இது என்னோட கடிய விட பெரிய கடி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
sami mudiyale....
kadi super//

வருகைக்கு நன்றி mayvee.. உங்களால தாங்க முடியல இல்ல.. அப்பாடா.. நினச்சது நடந்துருச்சு..

ராம்.CM said...

கார்த்திகைப்பாண்டியன்!... உங்கள் மேல் வருத்தம்...எனக்கு தெரியாமலே போட்டி நடந்து முடிந்துவிட்டது. நான் இப்பதான் டூட்டி முடிந்து வீட்டிற்கு வந்தேன். நான் கலந்துகொள்வதற்குள் நண்பர்கள் அனைத்தையும் முடித்துவிட்டனர். சரி.பரவாயில்லை.. என் பங்கிற்கு மறக்காமல் ஓட்டு குத்தியாட்சுங்கோ!..

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி ராம்.. நீங்கள் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கும் வருத்தமே.. விடுங்க.. உங்களுக்கு ஒண்ணு தனியா நடத்திருவோம்..

கூட்ஸ் வண்டி said...

1.பல்லவனுக்கு எத்தனை பல் இருக்கும்?
"பல்லவன்" என்று இல்லை எல்லாருக்கும் 32 பல் இருக்கும், பொக்கையா இல்லாத பட்சத்தில்.

2.ஒருவர் வங்கிக்குள் நுழைந்தவுடன் கீழே விழுந்து விட்டார்.. ஏன்?
ஆல் கஸ்டமர்ஸ் பால்(FALL) இன் லைன் அப்படின்னு அறிவிப்பு செய்திருந்தாங்க.


3.செஸ் விளையாட வேண்டுமானால் ஜிம்முக்கு போக வேண்டும்..
குதிரை, யானை போன்றவற்றை தூக்கி எதிரியை தாக்கனும் அல்லவா

4. ஆடவர் - எதிர்ப்பதம் என்ன?
ஆடாதவர்.

5.வாய்மை எனப்படுவது யாதெனில் ________?
லிப்ச்டிக் (Lipstick)


6.டைட்டன் கம்பெனியில் எப்போதும் திருடு போகாது.. ஏன்?
அங்க எப்பவும் "வாட்ச்" பண்ணிட்டு இருப்பாங்க..

7.ஆண்களுக்கு மரியாதை தராத ஊர் எது?
விசயவாடா

8.பெண்களுக்கு மரியாதை தராத ஊர்கள்?
போடி.

9.மன்மோகன் சிங் மாலையில் மட்டும்தான் வாக்கிங் போவாராம்.. ஏன்?
அவரு PM-லோ அதான் .

10. நாய், பூனை,யானை, ________
No Idea


11.எதையுமே போட முடியாத பை எது?
தொப்பை / சப்பை

12.உக்கார முடியாத தரை எது?
பத்தரை

13.இந்த பரிசை ரொம்ப வயசானவங்களுக்குத்தான் கொடுப்பாங்களாம்.. என்ன பரிசு?
"நோ" "பல்" பரிசு

14. கண்தானம் தராத ஊர் எது?
"ஐ” தரா பாத்

15.நடிகை ரம்பாவுக்கு பிடித்த தமிழ் மாதம் என்ன?
கார்திக்-கை

16.இனிஷியலுடன் கூடிய மிருகம் எது?
O.நாய் / ஒநாய்

17.ஒருவர் பீர் குடிக்கும்போது கையில் சேவாக் படத்தை வைத்து இருந்தார்.. ஏன்?
அவருதானே "ஒபனர்"

18.இந்தியாவின் இனிஷியல் என்ன?
M / MGG / or simply G. Mohandaas Garamchand Ghandi, is the father of INDIA.

19. GTTTT - _______
ஒரு ஜி நாலு டி

20.ஒன்பது நாய்கள்.. எட்டு கொட்டடிகள்.. ஒரு கொட்டடிக்கு ஒரு நாயை மட்டும்தான் அடைக்க வேண்டும்.. எப்படி எல்லா நாய்களையும் அடைப்பீர்கள்?
No Idea


21.கல்யாணம் ஆன நாடு எது?

இத்-தாலி

* * * * * * * * * * *
நம்ம இஸ்கோர் என்ன?
எப்படியும் புட்டுக்கும். அதனாலே
எனக்கு டாக்டர் பட்டம் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க கூட்ஸ்வண்டி.. நீங்களும் பதினாலு சரியா சொல்லி இருக்கீங்க.. நண்பா.. இதுக்கு கண்டிப்பா என்னால கொடுக்க முடிஞ்சா பட்டத்த தரேன்.. டாக்டர் பட்டம் வாங்குவது பத்தி நீங்க இளைய தறுதலை விஜயை தான் தொடர்பு கொள்ளனும்

உருப்புடாதது_அணிமா said...

எது எது ( எந்த எந்த பதில்) தப்புன்னு சொன்னா தானே , அடுத்து ட்ரை பண்ண முடியும்??

உருப்புடாதது_அணிமா said...

ஆமாம்.. பதிலை என்னிக்கு சொல்றதா உத்தேசம் ???

உருப்புடாதது_அணிமா said...

சீக்கிரம் சொல்லுங்க...

நிலாவன் said...

1.ஒரு பல்
2.CASH WIDRAW
3.யானை ,குதிரை எல்லாம் சமாளிக்கனுமில்ல
4.பெண்டிர்
5.லிப்ஸ்டிக்
6.அங்கதான் எப்பவும் வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பாங்க
7.விஜய வாடா
8.போடி
9.அவருதான் PM ஆச்சே
10.நான்
11.தொப்பை
12.பத்தரை
13.நோ பல்
14.ஐதராபாத்
15.கார்த்திகை
16.ஓநாய்
17.அவர்தான் OPENER ஆச்சே
18.ஒரு ஜி நாலு டி
19ஒரு கொட்டடில ஒரு நாய் மத்த நாயை எப்படினாலும் அடைசுக்க வேண்டியதுதான்

ச் ஸ்ஸ்ஸ் முடியலா இப்பவே கண்ணக்கட்டுதே

நிலாவன் said...

ஒழுங்கா பட்டத்தை தரள ஆட்டைய கலச்சுபோடுவேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//உருப்புடாதது_அணிமா said..
ஆமாம்.. பதிலை என்னிக்கு சொல்றதா உத்தேசம் ???//

நாளைக்கு காலையில விடைகள் வெளியிடப்படும்... டும்.. டும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
ஒழுங்கா பட்டத்தை தரள ஆட்டைய கலச்சுபோடுவேன்//

உங்களுக்கு இல்லாமலா நண்பா..

சொல்லரசன் said...

ஆனா"தல"இததெல்லாம் ரொம்ப ஒவர். ஆதவா,ராம் இல்லாத போது கடிகர் திலகம் பட்டம் கொடுக்க கடித்தது.

netmp said...

பல்லவனுக்கு 11 பல் இல்லயா?
பல் 11
:)

netmp said...

பல்லவனுக்கு 11 பல் இல்லயா?
பல் 11
:)

netmp said...

பல்லவனுக்கு 11 பல் இல்லயா?
பல் 11
:)

ராம்.CM said...

//ஆனா"தல"இததெல்லாம் ரொம்ப ஒவர். ஆதவா,ராம் இல்லாத போது கடிகர் திலகம் பட்டம் கொடுக்க கடித்தது.///-சொல்லரசன்


இதை நான் ஆமோதிக்கிறேன்.!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
ஆனா"தல"இததெல்லாம் ரொம்ப ஒவர். ஆதவா,ராம் இல்லாத போது கடிகர் திலகம் பட்டம் கொடுக்க கடித்தது.//
தலைவரே.. வேண்டாம்...வம்பு இழுத்து விடாதீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//netmp said..
பல்லவனுக்கு 11 பல் இல்லயா?
பல் 11
:)//

அப்பாடா.. முதல் கேள்விக்கு இப்போத்தான் சரியான பதில் வந்து இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
ஆனா"தல"இததெல்லாம் ரொம்ப ஒவர். ஆதவா,ராம் இல்லாத போது கடிகர் திலகம் பட்டம் கொடுக்க கடித்தது.///-சொல்லரசன்
இதை நான் ஆமோதிக்கிறேன்.!//

இதுல நீங்க வேற கூட்டணியா.. வேணாம்.. அழுதுருவேன்.. அவ்வ்வ்வ்..

R.Gopi said...

குடிசைகளே இல்லாத நாடு எது

பங்களாதேஷ்

(இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்)

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி தோழா.. சேர்த்துக்கலாம்..

Anonymous said...

நல்லா கடிக்கிறாங்கபா????
என்னாலைதான் கலந்துக்க முடியல்லை

கார்த்திகைப் பாண்டியன் said...

விடுங்க கவின்.. உங்களுக்கு தனியா ஒரு போட்டியே வச்சிடலாம்..