மதுரை ரயில் நிலையம். ஈரோடு வழியாக பெங்களூர் வரை செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். பிளாட்பாரம் எங்கும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனர். வண்டி அரை மணி நேரம் தாமதமாக வந்தது. வண்டியின் உள்ளேயும் பயங்கர ஜனத்திரள். எல்லோருக்கும் பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு அடித்து பிடித்து ரயிலில் ஏறினால் நிற்கக் கூட இடம் இல்லை. என்னருகில்.. ஒரு பாட்டி கையோடு ஒரு சிறு குழந்தையையும் கூட்டி வந்து இருந்தார்கள்.
"தம்பி.. கொஞ்சம் இடம் விட்டீங்கன்னா வயசானவ உக்காந்துக்குவேன்.."
"பரவா இல்லை பாட்டி.. இப்படி கீழ உக்காருங்க.."
மெதுவாக கீழே அமர்ந்தவர் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். அவர் மடியில் அந்தக் குழந்தை படுத்துக் கொண்டது. சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கொண்டார். பக்கத்தில் நடந்து போன ஒருவர் தெரியாமல் அவரை இடித்தபோது காச்மூச்சென்று கத்தத் தொடங்கி விட்டார். எனக்கு எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லும் விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடி கேட்பார்கள்.." சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து கதவை ஒட்டி நின்று கொண்டேன். ரயில் நகரத் தொடங்கி இருந்தது. காற்று மிதமாக என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. இரவின் குளிர் காற்றில் எங்கும் பாவி இருந்தது.
தரையில் நிறைய பேர் உட்கார்ந்து இருந்தார்கள். என்னை ஒட்டி நின்று இருந்த சிலர் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். வடமாநிலத்தவர் போல.. வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? எதை தேடி பயணம் செய்கிறார்கள்? இவர்களுடைய குடும்பத்தினர் இவர்களைப் பற்றி கவலைப் படுவார்களா? எனக்குள் நிறைய கேள்விகள். வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் இருள் படர்ந்து இருந்தது. மரங்களும் விளக்குக் கம்பங்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.
வாசற்படியில் அமர்ந்து இருந்த ஒரு ஹிந்தி இளைஞன் காதில் செல்போனை மாட்டிக் கொண்டு சத்தமாக பாடி கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். " பாகோ மே சலே ஆ..." நானும் மெதுவாக அந்தப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். நான் பாடுவதை அவன் கவனித்து விட்டான். சட்டென்று நின்று போன பெருமழை போல, நத்தை தனது கூட்டுக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது. எதற்காக அவன் பாடலை நிறுத்தினான்? நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம். அவனுடைய சந்தோஷத்தை பறித்துக் கொண்டதுபோல் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. மெதுவாக ரயிலின் உள்ளே திரும்பி நின்று கொண்டேன். சற்று நேரம் கழித்து அவன் மீண்டும் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.
ரயிலின் உள்ளே கலைத்துப் போட்ட சீட்டுக்களாய் மக்கள் எல்லா இடங்களிலும் உக்கார்ந்து இருந்தார்கள். கதவை ஒட்டிய முதல் கூபெவில் ஒரு குடும்பம் பொறுமையாக தாங்கள் கொண்டு வந்த புளிச்சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலை ஒட்டி ஒரு ஜோடி அமர்ந்து இருந்தது. புதுமணத் தம்பதி என்பது பார்த்தவுடன் புரிந்தது. பெண் ரொம்ப சின்னவராக இருந்தார். நிறைய பேசிக்கொண்டே வந்தார். அவள் கணவரோ அதில் சுவாரசியம் இல்லாமல் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் பேச்சை நிறுத்தி விட்டு ஜன்னலின் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அந்தக் கண்களில் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம் தேங்கி நின்றது . இதற்குள் ரயில் திண்டுக்கல்லை அடைந்து விட்டு இருந்தது.
ரயிலுக்குள் இரண்டு குறவர்கள் ஏறினார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையை துவைத்து பல மாதங்கள் இருக்கும். ரயிலில் நின்றவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து முகம் சுளித்தார்கள். ஒருவர் அவர்களிடம்.."டேய்.. இங்க எல்லாம் நிக்கக் கூடாது.. போ.. போய் கக்கூஸ் பக்கத்துல உக்காரு.." அவர்கள் எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? எனக்குப் புரியவில்லை. ரயிலுக்குள் பார்த்தேன். அந்தப் பெண்ணின் கணவர் அவள் தோளின் மீது சாய்ந்து தூங்கி விட்டிருந்தார். நான் கையோடு எடுத்துப் போயிருந்த "பதினெட்டாம் நூற்றாண்டின் மழை"யில் ஆழ்ந்து போனேன். கரூர் வந்தபின்தான் உட்கார இடம் கிடைத்தது.

சிறிது நேரத்திற்குப் பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. ஏதாவது கிராசிங்கா இருக்கும் என்றார்கள். வெகு நேரமாக வண்டியின் உள்ளேயே இருந்ததால் மூச்சு முட்டுவது போல் இருந்தது. கொஞ்ச நேரம் கீழே நிற்கலாம் என்று இறங்கினேன். ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு மனிதர் "கடலை சார், டைம்பாஸ் கடலை சார்.." என்று கத்தியவாறே கடலை விற்றுக் கொண்டிருந்தார். அருகில் கிடந்த சிமென்ட் பெஞ்சின் மீது படுத்துக் கொண்டேன். விரித்து வைத்த கறுப்புப் போர்வையாய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெளிச்ச பொட்டுக்களாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது. பொதுவாக எனக்கு தனிமை பிடிப்பதில்லை. எனினும் அந்த இரவின் ஏகாந்தம் ரொம்ப ரம்மியமானதாக இருந்தது.
திடீரென.. யாரோ என்னை பார்ப்பதுபோல் ஒரு குறுகுறுப்பு. அந்த பெண்ணும் ஜன்னல் வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தவள், என்னை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இனம் புரியாத ஒரு ஆர்வமும் சிநேக பாவமும் இருந்தன. அவளும் வானத்தை ரசித்து கொண்டு இருந்திருக்கிறாள். எனக்கு அவளைப் பார்க்கையில் சொல்லவொண்ணாத உணர்வுகள் தோன்றின. முக்கால் மணி நேரம் கழித்து ரயில் கிளம்பியபோது நான் அவளை எனக்கு மிகவும் நெருக்கமானவளாக உணர்ந்தேன்.
ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது மணி ஒன்றாகி இருந்தது. அந்தத் தம்பதியும் ஈரோடுதான் போல.. இறங்கி எனக்கு எதிர் திசையில் நடக்கத் தொடங்கினர். அந்தப் பெண்ணின் முகமும் அவள் உதடுகளில் தேங்கி நின்ற சிரிப்பும் எனக்குள் நன்றாக பதிந்து விட்டிருந்தது. நான் ரயிலை பிரிந்து நடந்தேன். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
67 comments:
me the first
படித்துவிட்டு வருகிறேன் அண்ணா
ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்
நான் ரசித்த வ்ரிகள் அண்ணா
ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!
ரொம்ப நேர்த்தியா எழுதி இருக்கீங்க கார்த்தி..
ரொம்ப நாள் ஆச்சு நான் இதே மாதிரி ஆர்வமாய் ஒரு பயண கட்டுரை படித்து..
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு அனுபவம் தான் இல்ல.
அதுவும் ரயில் பயணங்கள் சொல்லவே வேண்டாம் அவ்வளவு சுவரஸ்யமாக இருக்கும்..
எதிரில் தெரியாத ஒரு இளம்பெண் அமர்ந்து இருந்தால் நம்மையும் மீறி ஒரு குறுகுறுப்பு தோற்றி கொள்ளும்..
//எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.//
//நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம். அவனுடைய சந்தோஷத்தை பறித்துக் கொண்டதுபோல் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது.//
ராமகிருஷ்ணன் அவர்களை நியாபகப்படுத்தும் வரிகள்.
ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க.
Excellent..
அனுபவமா?? கதையா??? பொறுங்க படிச்சுட்டு வாரேன்!!!
உங்களுக்குள் ஒரு வித்தியாசத்தை இந்த பதிவு கொடுத்திருக்கிறது கார்த்திகைப் பாண்டியன். நன்கு தெளிந்த நடை, சுற்றி வளைக்காமல் அழகாக கொடுத்திருக்கிறீர்கள். பயணங்களை பதிவு செய்வதிலும் ஒரு நேர்த்தி இருக்கிறது.. இதற்கு முன்பு நான் படித்ததில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பயணங்களில் ஒருமாதிரியான நேர்த்தியும், தரமும் இருந்தது (இருக்கிறது) உங்களது நடையிலும் அப்படியானதொரு தரம் இருப்பதாகவே உணருகிறேன்.
அருமையான பதிவுக்கு வாழ்த்துகள்!!!
ச்சே.... என்னா ஃபீலிங். அப்புறம்...
அந்த பொண்ணோட ஃபோன் நம்பர்...ஹி..ஹி..
சும்மா தமாசு (:-)
vinoth gowtham said...
ராமகிருஷ்ணன் அவர்களை நியாபகப்படுத்தும் வரிகள்.
ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க.
என்ன கொடுமை!!! நானும் இதையே எண்ணினேன்.. நீங்களும்!!!
ஒரு சாதாரண ரயில் பயணத்தை, படிப்பவர்களை சொக்க வைக்கும் அளவுக்கு எழுதும் உங்களது அபார திறமை தெரிகிறது..
//
ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா.?//
நான் மிகவும் விரும்பி படித்த வரிகள்..
வாழ்த்துக்கள்.
:-)))..hmm..nadakkattum...:-))
//anbu said..
ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்//
நன்றி அன்பு..
//vinoth gowtham said..
ரொம்ப நேர்த்தியா எழுதி இருக்கீங்க கார்த்தி..
ரொம்ப நாள் ஆச்சு நான் இதே மாதிரி ஆர்வமாய் ஒரு பயண கட்டுரை படித்து..
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு அனுபவம் தான் இல்ல.
அதுவும் ரயில் பயணங்கள் சொல்லவே வேண்டாம் அவ்வளவு சுவரஸ்யமாக இருக்கும்..
எதிரில் தெரியாத ஒரு இளம்பெண் அமர்ந்து இருந்தால் நம்மையும் மீறி ஒரு குறுகுறுப்பு தோற்றி கொள்ளும்..//
ரொம்ப நன்றி நண்பா.. ஒரு பயத்தோட தான் எழுதினேன்.. உங்க ஊக்கம் சந்தோஷத்தை தருது..
@Aadavaa..
என்ன கொடுமை!!! நானும் இதையே எண்ணினேன்.. நீங்களும்!!!
Same Feelings..
////vinoth gowtham said.. ராமகிருஷ்ணன் அவர்களை நியாபகப்படுத்தும் வரிகள்.
ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க.
Excellent..//
உண்மையச் சொன்னா.. நான் அவர் நடையைத்தான் இந்தக் கதையில் முயற்சி செய்துள்ளேன் வினோத்.. எங்கேனும் உங்களுக்கு எஸ்ராவின் ஞாபகம் வந்தால் அதுவே எனக்கு பெரிதுதான்..
//ஆதவா said..
உங்களுக்குள் ஒரு வித்தியாசத்தை இந்த பதிவு கொடுத்திருக்கிறது கார்த்திகைப் பாண்டியன். நன்கு தெளிந்த நடை, சுற்றி வளைக்காமல் அழகாக கொடுத்திருக்கிறீர்கள். பயணங்களை பதிவு செய்வதிலும் ஒரு நேர்த்தி இருக்கிறது.. இதற்கு முன்பு நான் படித்ததில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பயணங்களில் ஒருமாதிரியான நேர்த்தியும், தரமும் இருந்தது (இருக்கிறது) உங்களது நடையிலும் அப்படியானதொரு தரம் இருப்பதாகவே உணருகிறேன்.//
உங்களை மாதிரி எழுதக் கூடியவங்க உற்சாகப் படுத்தும்போது ரொம்ப நெகிழ்வா இருக்கு நண்பா.. இந்தப் பதிவு நான் எஸ்ராவை பின்பற்றி எழுதியதே.. ரொம்ப நன்றி..
//pappu said..
ச்சே.... என்னா ஃபீலிங். அப்புறம்...
அந்த பொண்ணோட ஃபோன் நம்பர்...ஹி..ஹி..
சும்மா தமாசு (:-)//
எனக்கே கிடைக்கலியே பப்பு.. சாமி நடந்து போறப்ப பூசாரி புல்லட் கேட்டா எப்படி..
//லோகு said..
ஒரு சாதாரண ரயில் பயணத்தை, படிப்பவர்களை சொக்க வைக்கும் அளவுக்கு எழுதும் உங்களது அபார திறமை தெரிகிறது..//
ரொம்ப நன்றி நண்பரே..
//இளமாயா said..
நான் மிகவும் விரும்பி படித்த வரிகள்..வாழ்த்துக்கள்.//
முதல் முறையா வந்து இருக்கீங்க.. ரொம்ப நன்றிங்க..
//இயற்கை said..
:-)))..hmm..nadakkattum...:-))//
நன்றி தோழி ..
பயணக்கட்டுரை அருமை நண்பா! ஆதவா, கெளதம் கருத்துக்களையே நானும் சொல்லத்தான் வேண்டும் போலிருக்கிறது. தொடர்க! வாழ்த்துகள்!
ரொம்ப நன்றி நண்பா.. உங்களின் தொடர்ந்த ஊக்கம் தானே நமக்கு தைரியத்தை தருகிறது..
நல்ல எழுத்து நடை..!
பயனங்கள் ஒவ்வொண்றும் ஒரு புதிய அனுபவங்களே! அதனை... நன்றாக பதிந்திருக்கிறீர்கள்!
வாங்க கவின்.. ரொம்ப நன்றி நண்பா..
பயண அனுபவம் உங்கள் எழுத்துநடையில் இருந்து சற்று மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது. நன்றாக உள்ளது தொடருங்கள்.
ஒரு பயண கட்டுரை.... ம்ம்ம்ம் படிக்கும்பொழுது நாமும் பயணிப்பது போல ஒரு நல்ல நடை... நன்றாக இருக்கின்றது நண்பரே... பாராட்டுகள்
//உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? எனக்குப் புரியவில்லை.//
போகும் வழியில் சில சமுக சிந்தனைகளையும் தெளித்தது இன்னும் ஒரு சிறப்பு.... இப்படிதான் வேண்டும்,
//எனக்கு அவளைப் பார்க்கையில் சொல்லவொண்ணாத உணர்வுகள் தோன்றின. முக்கால் மணி நேரம் கழித்து ரயில் கிளம்பியபோது நான் அவளை எனக்கு மிகவும் நெருக்கமானவளாக உணர்ந்தேன்.//
பார்த்துங்கோ பாண்டியன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டுவிட போகிறது
முதல் 3 பாராவைப் படித்த உடனேயே தெரிந்து விட்டது.யாருடைய நடையைப் பின்பற்றி இருக்குறாய் என்று.ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
இன்னும் கொஞ்சம் ஆழமாய் சென்றிருந்தால் துணைஎழுத்தின் ஒரு எழுத்தாய் வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.ஆனால் வந்துவிடுவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வாழ்த்துக்கள் நண்பா...
நிச்சயமாக எந்தவொருவரும் இந்த பயணத்தை தவிர்க்க முடியாது...
//சொல்லரசன் said..
பயண அனுபவம் உங்கள் எழுத்துநடையில் இருந்து சற்று மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது. நன்றாக உள்ளது தொடருங்கள்.//
வாங்க நண்பா.. கொஞ்சம் மாத்தி எழுதறோமே.. மக்களுக்கு பிடிக்குமான்னு யோசிச்சேன்.. பரவா இல்லை.. ஒத்துக்கிட்டாங்க..
//ஆ. ஞானசேகரன் said..
போகும் வழியில் சில சமுக சிந்தனைகளையும் தெளித்தது இன்னும் ஒரு சிறப்பு.... இப்படிதான் வேண்டும்,//
நன்றி நண்பா.. தொடர்ந்து இதைபோல் முயற்சிக்கிறேன்..
//சொல்லரசன் said..
பார்த்துங்கோ பாண்டியன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டுவிட போகிறது//
அதெல்லாம் நாங்க ஸ்டேடில நண்பா..
//பொன். பாரதிராஜா said..
முதல் 3 பாராவைப் படித்த உடனேயே தெரிந்து விட்டது.யாருடைய நடையைப் பின்பற்றி இருக்குறாய் என்று.ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
இன்னும் கொஞ்சம் ஆழமாய் சென்றிருந்தால் துணைஎழுத்தின் ஒரு எழுத்தாய் வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.ஆனால் வந்துவிடுவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வாழ்த்துக்கள் நண்பா...//
ரொம்ப நன்றி பாரதி.. இது ஒரு சின்ன முயற்சி.. உனக்கு பிடித்ததில் சந்தோஷமே..
//செ.பொ.கோபிநாத் said..
நிச்சயமாக எந்தவொருவரும் இந்த பயணத்தை தவிர்க்க முடியாது...//
முதல் வருகைக்கு ரொம்ப நன்றி நண்பா..
நாள் ஆக ஆக மெருகேறிக்கிட்டே வர்றீங்க!
அடிச்சு ஆடுங்க தல!
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பா...
உங்கள் எழுத்துக்களில் S.Ramakrishnan சாயல் தெரிகிறது... உங்களுக்கென்று ஒரு style follow பண்ணுங்க
கார்த்திகைப்பாண்டியன் உங்கள் நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய எழுதுங்கள்
நன்றிங்க.. நான் எப்பவும் என்னோட நடையில்தான் எழுதுவேன்.. இது எஸ்ராவின் பாதிப்பினால் என் அனுபவத்தை அவரைப்போல் எழுத முயன்ற ஒரு சிறு முயற்சி.. அவ்ளோதாங்க..
//கும்மாச்சி said..
கார்த்திகைப்பாண்டியன் உங்கள் நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய எழுதுங்கள்//
ரொம்ப நன்றிங்க நண்பா..
வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? எதை தேடி பயணம் செய்கிறார்கள்? இவர்களுடைய குடும்பத்தினர் இவர்களைப் பற்றி கவலைப் படுவார்களா? எனக்குள் நிறைய கேள்விகள்.
எங்களை மாதிரி ஏதோ ஒரு நம்பிக்கையில் .
//எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.//
//ரயிலின் உள்ளே கலைத்துப் போட்ட சீட்டுக்களாய் மக்கள் எல்லா இடங்களிலும் உக்கார்ந்து இருந்தார்கள்//
//உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா?
இந்த கேள்வி எனக்குள்ளும் //
//விரித்து வைத்த கறுப்புப் போர்வையாய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெளிச்ச பொட்டுக்களாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது. //
//ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!//
பயணக்கட்டுரை நன்றாக இருந்தது நண்பா
நான் இதற்குமுன் பயணக்கட்டுரை படித்த ஞாபகம் இல்லை
ஆனால்
இதைப்படித்ததும் நிலாரசிகன் அவர்களின் " யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் "
என்ற சிறுகதை ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அது பயணக்கட்டுரை அல்ல
சிறுகதை
உங்களுக்கு இத்தனை விஷயம் பிடித்து, இன்னொரு கதையையும் ஞாபகப் படுத்தியதே எனக்கு போதும் நண்பா..
ரயில் பயணம் போல் கதையும் இயல்பாக மெதுவாக சென்றது..
ரசித்தேன்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..
Very good. I search the words to wish.
கார்த்தி, அப்படியே வாங்க வழிக்கு, பதிவு அருமையாக இருக்கிறது.
இந்த பதிவை படிக்காமலே ‘கல்கி‘க்கு உங்களை அறிமுகம் செஞ்சு கட்டுரை தந்துட்டனேன்னு வருத்தமா இருக்கு. இதையும் சேர்த்து எழுதியிருப்பேன். நான் கொஞ்சம் தாமதமா வர நேரிட்டதுதான் காரணம். பதிவு அருமை, வேறென்ன சொல்ல எல்லாரும் சொல்லிட்டாங்களே, தொடருங்கள்.
- பொன்.வாசுதேவன்
//Dhavappudhalvan said..
Very good. I search the words to wish.//
ரொம்ப நன்றி தவப்புதல்வன் சார்..
//அகநாழிகை said..
கார்த்தி, அப்படியே வாங்க வழிக்கு, பதிவு அருமையாக இருக்கிறது.
இந்த பதிவை படிக்காமலே ‘கல்கி‘க்கு உங்களை அறிமுகம் செஞ்சு கட்டுரை தந்துட்டனேன்னு வருத்தமா இருக்கு. இதையும் சேர்த்து எழுதியிருப்பேன். நான் கொஞ்சம் தாமதமா வர நேரிட்டதுதான் காரணம். பதிவு அருமை, வேறென்ன சொல்ல எல்லாரும் சொல்லிட்டாங்களே, தொடருங்கள்.//
எல்லாம் உங்களுடைய வழிகாட்டுதல் தான் நண்பா.. என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி..
பாண்டியன் ஏதொ சொல்ல முயற்சித்து சொல்லாமலே போய்ட்டீங்க.வாழ்வின் அனுபவப் பயணங்களின் பார்வைகள் பதிந்திருக்கும்.மறக்கமுடிவதில்லை.
தீபாவளி பாண்டியன் பின்னிட்டீங்க...
வளரட்டும் படைப்புகள்..
//உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? //
அவர்களும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்
நல்ல எழுத்துநடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துகள்
எந்த பெண் உங்களை பார்த்து கொண்டே இருந்தார்? அந்த புது மணப்பெண்ணா??? என்னய்யா கதை இது??? :-))))))))))
நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம்.///////
நிஜமான வரிகள் கா.பா....
எழுத்து நடை ரொம்ப அழகு! கையோடு எடுத்துச்சென்ற ”18-ஆம் நூற்றாண்டின் மழை” யில் ஆழ்ந்து போனேன் என்றதற்கு பதிலாய் நனைந்து போனேன் என்று வந்திருந்தால் கவித்துவமாய் இருந்திருக்கும்!
யோவ்! அந்த பொன்னும் வானத்தைப் பார்த்தா நெருக்கமானவளாகிட்டாளோ?! இதெல்லாம் ஓவர் குசும்பு மாப்ள... நீ கவனிச்சிருக்கமாட்ட பக்கத்துல இருந்த அந்த நரிக்குறத்தி கூட அந்த வானத்த பார்த்திட்டு இருந்ததா நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க! :)
சரி! சரி! ஓகே! ஓகே! இரயில் பயணம்னா இதெல்லாம் சகஜம்தான்! :)
அந்தப் பெண் யார்? வேறு புதுப் பெண்ணா? இல்லை புதுமணத் தம்பதியப் பெண்ணா?
அதில் தான் எனக்கு குழப்பம்.
எழுத்து நடை நன்றாக உள்ளது.
//ஹேமா said..
பாண்டியன் ஏதொ சொல்ல முயற்சித்து சொல்லாமலே போய்ட்டீங்க.வாழ்வின் அனுபவப் பயணங்களின் பார்வைகள் பதிந்திருக்கும்.மறக்கமுடிவதில்லை.//
சில விஷயங்கள் உணர மட்டும்தான் முடியும் தோழி.. நேரடியாக சொன்னால் விகாரமாகத் தெரியலாம்.. எனவேதான் இப்படி முடித்து விட்டேன்..
//Sarathy said..
தீபாவளி பாண்டியன் பின்னிட்டீங்க...
வளரட்டும் படைப்புகள்..//
கொஞ்ச நாளாவே படிச்சிக்கிட்டு இருக்கீங்க போல.. நன்றிங்க..
//பிரேம்குமார் said..
எந்த பெண் உங்களை பார்த்து கொண்டே இருந்தார்? அந்த புது மணப்பெண்ணா??? என்னய்யா கதை இது??? :-))))))))))//
சில நேரங்களில் சில மனிதர்கள்.. என்ன நண்பா பண்ண.. நமக்கு அப்படி நடக்குது..
//பிரேம்குமார் said..
நல்ல எழுத்துநடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துகள்//
ரொம்ப நன்றி நண்பா..
//நசரேயன் said..
அசத்தல்..//
நன்றி தோழரே..
//ஷீ - நிசி said..
யோவ்! அந்த பொன்னும் வானத்தைப் பார்த்தா நெருக்கமானவளாகிட்டாளோ?! இதெல்லாம் ஓவர் குசும்பு மாப்ள... நீ கவனிச்சிருக்கமாட்ட பக்கத்துல இருந்த அந்த நரிக்குறத்தி கூட அந்த வானத்த பார்த்திட்டு இருந்ததா நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க! :)//
நமக்கு பிடித்தமான ஒன்னு இன்னொருத்தருக்கும் பிடிச்சிருக்கேன்னு வர நெருக்கம்தான் மாமா.. வேற ஏதும் தப்பா எல்லாம் இல்லை.. அப்புறம்.. அங்க குறவங்க மட்டும்தான் இருந்தாங்க.. குறத்தி எல்லாம் இல்லையே..
//ஷீ - நிசி said..
கையோடு எடுத்துச்சென்ற ”18-ஆம் நூற்றாண்டின் மழை” யில் ஆழ்ந்து போனேன் என்றதற்கு பதிலாய் நனைந்து போனேன் என்று வந்திருந்தால் கவித்துவமாய் இருந்திருக்கும்!//
பார்த்தீங்களா.. அதுதான் கவிஞர்னு சொல்றது.. நன்றி நண்பா..
//மகா said..
அந்தப் பெண் யார்? வேறு புதுப் பெண்ணா? இல்லை புதுமணத் தம்பதியப் பெண்ணா?
அதில் தான் எனக்கு குழப்பம்.
எழுத்து நடை நன்றாக உள்ளது.//
அதே புது மணப்பெண் தான் தோழி.. நன்றி..
நல்ல எழுத்து நடை.
ரொம்ப ரசிச்சு அழகா எழுதியிருக்கீங்க.
ரொம்ப நன்றி நண்பா..
Post a Comment