April 27, 2009

காமத்தின் நீண்ட நிழல்..!!!

மழையின் முதல் துளி மண்ணில் விழுந்த போது அவன் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். நான்கு வருட வாழ்க்கையில் நகரத்தின் சந்துகள் அவனுக்கு பழக்கமாகி விட்டன. சிறு தெருக்களின் ஊடாக வேகமாக நடக்கத் தொடங்கினான். சிறுமி ஒருத்தி வேக வேகமாக சைக்கிள் ஒன்றை மிதித்துக் கொண்டு அவனை கடந்து சென்றாள். வீடுகள் எல்லாம் அமைதியில் உறைந்து கிடந்தன. பெருநகரங்களின் தெருக்களில் இப்போதெல்லாம் யாரையும் வெளியே பார்க்கவே முடிவதில்லை. நிமிர்ந்து வானத்தை பார்த்தான். பறவைகளே இல்லாத வானத்தில் மேகங்கள் குழுமி இருந்தன. பெருமழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தது.



ஒரு வளைவில் திரும்பியபோது நாய் ஒன்று ஒன்று விருட்டென்று அவனை தாண்டிப் போனது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நிலைகுலைந்தவன், சமாளித்துக் கொண்டு நடையை எட்டி போட்டான். பேருந்து நிலையத்தில் கூட்டம் பெரிதாக இல்லை. அவன் ஊருக்கு செல்லும் பஸ் ஓரமாக நின்று கொண்டிருந்தது. போய் ஏறிக் கொண்டான். ஜன்னல் அருகே இருந்த இடத்தில் போய் அமர்ந்தான்.

காலையில் மாமா போனில் பேசியது ஞாபகம் வந்தது.

"அப்பா இப்பவோ அப்பவோன்னு இருக்காரு.. உன்னை பார்க்கனும்னு ரொம்ப ஆசைப்படுறாரு.. உடனே கிளம்பி வா.."



சிறு கிராமம் ஒன்றில் பிறந்து, தங்களை வளர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்? நினைக்கும்போதே அவனுக்கு கண்கள் கலங்கின. படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் நகரத்திற்கு வந்து எத்தனை நாட்கள் ஆகி விட்டன? இன்னும் ஒரு நிலையான இடத்துக்கு வர முடியவில்லை. அக்கா ரெண்டு பேரையும் கட்டிக் கொடுத்தது கூட அப்பாதான். நம்மளால ஒண்ணும் செய்ய முடியலையே..? இயலாமையின் நிதர்சனம் அவனை சுட்டது... போன முறை வீட்டுக்குப் போனபோது அவர் சொன்னது..

"உன்னை நீ நல்லா பார்த்துக்கிட்டா போதும்யா.. பத்திரமா இரு.."



வேலை பார்க்கும் இடத்தில் மானேஜரிடம் பதட்டத்தோடு சொன்னபோது அவர் சுவாரசியமாக காது குடைந்து கொண்டிருந்தார். இவனுடைய வார்த்தைகளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. கடைசியில், இன்றைய வேலையை முடித்து விட்டுத்தான் போக வேண்டும் என்றும், இரண்டு நாள் மட்டுமே விடுப்பு தர முடியும் என்றார். இப்போதெல்லாம் மனிதர்களை விட இயந்திரங்கள் தான் உலகில் அதிகமாக உலாவுகின்றனவோ என்னவோ? வெளியே வந்தபோது அவன் நண்பன் கேட்டான்.."தப்பா எடுத்துக்காத.. ரெண்டு நாள்தான் லீவ் தருவேன்னு சொல்றான்.. அதுக்குள்ளே அப்பாவுக்கு எதுவும் ஆகலைன்னா..?" அவனிடம் பதில் இல்லை. மௌனமாக இருந்தான்.



பேருந்து கிளம்பி விட்டிருந்தது. மழை சற்று வழுவாகப் பெய்ய தொடங்கியது. நாசியில் மண்வாசத்தை உணர முடிந்தது. அவனுடைய கவனம் சற்றே மாறி வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். வழியில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது அவள் உள்ளே ஏறினாள்.கூட்டம் கொஞ்சம் ஏறி விட்டிருந்த காரணத்தால் இடம் இல்லாமல் அவனுக்கு வலப்பக்கம் நின்று கொண்டாள். தன்னையும் அறியாமல் அவன் அவளை பார்க்கத் தொடங்கினான்.



அவளிடம் ஒரு சொல்ல முடியாத வசீகரம் இருந்தது. கருப்பு என்றும் சிவப்பு என்றும் சொல்ல முடியாத நிறம். கண்களில் ஒரு கனிவு. மூக்கு நல்ல கூர்மையாக இருந்தது. சின்ன உதடுகள். சரேலென்று இறங்கிய கழுத்தில் சின்னதாய் இரு மச்சங்கள். சேலையை இறுக்கமாக உடுத்தி இருந்ததால் மழையில் நனைந்து அவளின் வளைவுகளை நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. வீசிய காற்றில் சற்றே சேலை பறக்கும்போது தெரிந்த நாபியும் பூனை முடிகளும் அவனை என்னவோ செய்தன. நிமிர்ந்து முகத்தை பார்த்தபோது அவள் இவனையே பார்ப்பதுபோல் இருந்தது. சட்டென்று கண்களை மூடிக் கொண்டான்.



அவன் இறங்குமிடத்தில்தான் அவளும் இறங்கினாள். இவனைத் தாண்டி போகும்போது ஒரு சின்ன காகிதத்தை வீசிச் சென்றாள். அதில் அவளுடைய போன் நம்பர் இருந்தது. பேசியபோது கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகச் சொன்னாள். நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். மறுநாள் காலை அவன் அவள் வீட்டுக்கு போனான். யாருமில்லாத வீட்டில் அவள் அவனை உற்சாகமாக வரவேற்றாள். குடிப்பதற்கு ஏதேனும் கொண்டு வருகிறேன் என்று சொல்லி உள்ளே போனவளைத் தொடர்ந்து அவன் உள்ளே போனான். பிரிட்ஜை மூடி அவள் திரும்பியபோது அவனின் சூடான வெப்ப மூச்சு அவள் முகத்தின் மீது விழுந்தது. அவள் ஏதும் பேசாமல் அவனுடைய கண்களை ஆழ்ந்து நோக்கினாள். அவன் மெதுவாக அவளுடைய தோளைத் தொட்டான். அவள் மறுப்பேதும் சொல்ல வில்லை. குனிந்து அவள் ஈர உதடுகளை முத்தமிட்டான். அவள் அவனை தன்னோடு இறுகிக் கொண்டாள். சிறு குழந்தை போல அவளைத் தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் கிடத்தினான். ஒரு மிருகத்தின் வெறியோடு அவளை நெருங்கியபோது..



தடக்கென்று பஸ் ஒரு மேட்டில் ஏறி இறங்கியதில் அவன் விழித்துக் கொண்டான். கண்டது எல்லாம் கனவா? மழை நின்று போய் இருந்தது. அருகில் பார்த்தான். அந்தப் பெண் எப்போதோ இறங்கிப் போய் விட்டிருந்தாள். அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட ஒரு பெண்ணை புணருவதாக தனக்கு வந்த கனவை எண்ணி அவன் வெட்கம் கொண்டான். காமம் ஒரு கொடிய மிருகம் போல் மனிதனை எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது. உடம்பில் ஓடித் திரியும் பச்சை நரம்புகளைப் போல் அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது. அவனுக்கு அவன் மீதே வெறுப்புத் தோன்றியது. அவனுடைய ஊர் வந்ததும் இறங்கினான். புலம்பிக் கொண்டே இருளின் உள்ளே நடந்து மறைந்து போனான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

68 comments:

Anbu said...

me the first

Anbu said...

இதைப் படித்தபின் சிரிக்கவா அல்லது சிந்திக்கவா அண்ணா..கலக்கல் கதை..

ஆ.சுதா said...

அப்புறம் வந்து படிக்கிறேன் நண்பா
இப்ப வேலை இருக்கு, ஓட்டு மட்டும் போட்டுவிடுகிறேன்.....

ஆ.ஞானசேகரன் said...

என்னங்க சார் கதை அப்படியே கனவோடு போகின்றது. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிவிடும் நண்பரே... கதைஓட்டம் நல்லா இருக்கு... கனவேல்லாம் காணாதீங்க சரியா!!!!

ச.பிரேம்குமார் said...

என்னடா பேரா ஒரு மார்க்கமா கெளம்பிட்டாருன்னு யோசிச்சேன். ஆனா மனிதர்களின் மனங்கள் கொள்ளும் விகாரங்களை படம் பிடித்துக்காட்டிவிட்டீர்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கருப்பு என்றும் சிவப்பு என்றும் சொல்ல முடியாத நிறம். //


நீங்க தமிழ்தானே.....

Anonymous said...

"காமம் ஒரு கொடிய மிருகம் போல் மனிதனை எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது. உடம்பில் ஓடித் திரியும் பச்சை நரம்புகளைப் போல் அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது."

S.Ra style here!!!. I don't mean the actual text but the manner in which it has been presented. "எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது" and "அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது" seem to be phrases from S.Ra.


Reminds me of Gandhi's similar experience when his mother (or father?) was ill.

ஆதவா said...

என்னங்க..... கனவு எப்பவுமே இப்படித்தானா... சரியான நேரத்தில கட் ஆயிடறது...
கதை நல்லா இருக்குங்க. ஏற்கனவே ஒரு பேருந்து நினைவுகளை எழுதினீங்க. இப்போ பேருந்து கனவுகளா?

கதையைவிட, காமத்தைப் பற்றிய உங்கள் சிறுகுறிப்பு என் கவனத்தைக் கவர்ந்தது. அந்த இடத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளர் மிளிர்ந்தார்.

ஒரு அக்மார்க் காமத்தில் கதை ஒன்று என்னிடம் இருக்கிறது.,. ஆனால் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!!!

ஆதவா said...

Reminds me of Gandhi's similar experience when his mother (or father?) was ill.

என்னைப் பொறுத்தவரை அது தப்பில்லை.... சிரிப்பு, அழுகை, உணர்ச்சி, இவைகளைப் போன்றது காமம்...

காமம் அன்பின் அடுத்த நிலை.. எங்கேயும் நினைப்பதில் தவறில்லை..

ஆதவா said...

Reminds me of Gandhi's similar experience when his mother (or father?) was ill.

அது அவரோட அப்பாதான்.. அம்மா இல்லை./

Suresh said...

வந்தாச்சு படிச்சிட்டு வரேன், தல கார்னர் சூப்பர்

வினோத் கெளதம் said...

கார்த்தி அருமையாக இருக்கிறது..

லோகு said...

//காமம் ஒரு கொடிய மிருகம் போல் மனிதனை எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது. உடம்பில் ஓடித் திரியும் பச்சை நரம்புகளைப் போல் அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது. அவனுக்கு அவன் மீதே வெறுப்புத் தோன்றியது. அவனுடைய ஊர் வந்ததும் இறங்கினான். புலம்பிக் கொண்டே இருளின் உள்ளே நடந்து மறைந்து போனான்.//


உங்களுக்குள் பெரிய எழுத்தாளர் ஒழிந்து கொண்டிருக்கிறார் பேராசிரியரே..

எப்பொழுது நாவல் எழுத போகிறீர்கள்..

Raju said...

நைனா பாணியில் "சும்மா" சொல்லக் கூடாது..! பூந்து விளையாடிருக்கீங்க பேராசிரியரே...!
ஆனா ஒரு மார்க்கமாத்தான் இருக்கு..!

Joe said...

அருமையான கதை.
//
இப்போதெல்லாம் மனிதர்களை விட இயந்திரங்கள் தான் உலகில் அதிகமாக உலாவுகின்றனவோ என்னவோ?
//
அதிலென்ன சந்தேகம்?

Unknown said...

கதை நல்லா இருக்கு.சொல்லும் விதமும் யதார்ததமா இருக்கு.கதையினுள் மெலிதான சோகம் ஓடுகிறது.

இன்னும் கூட கதையை மெருகேத்தலாம். எப்படி?

தயவு செய்து ஆக்கபூர்வமாக் எடுத்துக்கொள்ளுங்கள்.

சில் யோசனைகள்:-
//அந்தப் பெண் எப்போதோ இறங்கிப் போய் விட்டிருந்தாள்.//

அடுதத பாரா....

“அப்பாவைப் பற்றி மீண்டும் கவலை ஆரம்பித்தது”என்று முடித்திருந்தால்
கதை யதார்ததமா எங்கேயே போயிருக்கும்.


ஆனால் “அப்பா உயிருக்கு போராடிக் புலம்பிக் கொண்டே இருளின் உள்ளே நடந்து மறைந்து போனான்” என்று பெரிய பாரா போட்டு கதைக்குள்ளே நீங்கள் வந்து மைக் பிடித்து ”யாராவது நம்பள் தப்பா நெனச்சுடுவாங்ளோன்னு”
பெரிய பிரசங்கம் செய்து கதையின் போக்கை மாற்றி விட்டீர்கள்.

நண்பரே சொல்லுங்கள் நான் சொன்ன முடிவு எப்படி?

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

தல கதை சொல்லி கலக்கிடீங்க..!ஒவ்
ஒரு மனிதன் மனத்துள்ளும் மிருகம் ஒன்று உறங்கி கொண்டுதான் உள்ளது....!

ஆ.சுதா said...

நல்லா எழுதியிருக்கீங்க ,
கதை ரொம்ப நால்லா இருக்குங்க.

|நம்மளால ஒண்ணும் செய்ய முடியலையே..?|

|உன்னை நீ நல்லா பார்த்துக்கிட்டா போதும்யா.. பத்திரமா இரு.." |

இவ்வரிகள் என்னை மிகவும் பாதித்தன.

காமம் நம் நிழல் போல் நம்மோடே வருவதை சித்தரித்திருக்கின்றீர்கள்.
அருமையான எழுத்து,

Suresh said...

பாதி படித்த் போது மணம் கண்த்தது..

மீதி படித்த போது சீ என்ன இவன் என்று தோன்றியது... அப்பாவை பற்றி நினைக்காமல் ..

ஆனா அது உண்மை ... மனிதனின் மிருகம் எட்டி பார்பது என்னவோ தப்பு தான் அதுவும் அந்த நேரத்தில்..

புதியவன் said...

யாதார்த்தமான கதை...தேர்ந்த கதாசிரியரின் நடை தெரிகிறது...வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...

kavitha said...

romba romba practical... marukka mudiyathu. but konjam aazhama yosicha kaamam koda cinna pulla thanam. But yosikkaarathu than romba kastam illa ?

பீர் | Peer said...

//இப்போதெல்லாம் மனிதர்களை விட இயந்திரங்கள் தான் உலகில் அதிகமாக உலாவுகின்றனவோ என்னவோ?//

இல்லை நண்பா, இயந்திரங்கள் கனவு காண்பதில்லை.

//அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட ஒரு பெண்ணை புணருவதாக தனக்கு வந்த கனவை எண்ணி அவன் வெட்கம் கொண்டான்.//

இவனைப்போல அனைவருக்கும் அவர் அவர் கனவு, மானேஜர் சுவாரசியமாக காது குடைந்துவாறே கனவு கண்டுகொண்டிருந்தாரோ, என்னவோ?

கதைச்சொல்லும் விதம் யதார்த்தம்... கார்த்திக். வாழ்த்துகள்.

சொல்லரசன் said...

//அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட ஒரு பெண்ணை..//
காமம் எப்போதும் எந்த நிலையிலும் வரலாம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் நம் நிலையை என்னி சரியாக எழுதியிருக்கிறீர்கள் கா.பா.

இதில் ஒருவித காப்பி தெரிகிறதே புரிந்தால் சரி......

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
இதைப் படித்தபின் சிரிக்கவா அல்லது சிந்திக்கவா அண்ணா..கலக்கல் கதை..//

அடப்பாவி.. சிரிப்பு வருதா? பீல் பண்ணி படிப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. முத்துராமலிங்கம்..//

நன்றி நண்பா

//ஆ. ஞானசேகரன் said..
என்னங்க சார் கதை அப்படியே கனவோடு போகின்றது. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிவிடும் நண்பரே... கதைஓட்டம் நல்லா இருக்கு... கனவேல்லாம் காணாதீங்க சரியா!!!!//

இது என் சொந்தக்கதைனு முடிவே கட்டியாச்சா? புனைவுதான் நண்பா.. ஆனாலும் நீங்க சொல்ற விஷயமும் நல்லாத்தான் இருக்கு.. ஹி ஹி ஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said...
என்னடா பேரா ஒரு மார்க்கமா கெளம்பிட்டாருன்னு யோசிச்சேன். ஆனா மனிதர்களின் மனங்கள் கொள்ளும் விகாரங்களை படம் பிடித்துக்காட்டிவிட்டீர்கள்..//

சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றி பிரேம்... நான் சொல்ல விரும்பியதும் அதுதான்.. மனதின் உள்ளே ஒளிந்து கிடக்கும் விகாரம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//SUREஷ் said...
நீங்க தமிழ்தானே.....//

சத்தியமான தமிழன் நண்பரே..

//Anonymous said...
S.Ra style here!!!. I don't mean the actual text but the manner in which it has been presented. "எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது" and "அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது" seem to be phrases from S.Ra.//

ஆகா.. நம்ம நண்பர் மீண்டும் சரியா சொல்லிட்டார்.. நான் எழுதும்போது எனக்குள் அந்த நடை தானாகவே வந்து விடுகிறது.. இந்தக் கதை முழுவதும் அதை தவிர்க்க முயற்சி செய்துள்ளேன்.. ஆனால் கடைசியில் மாட்டிக் கொண்டு விட்டேன்...:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
தையைவிட, காமத்தைப் பற்றிய உங்கள் சிறுகுறிப்பு என் கவனத்தைக் கவர்ந்தது. அந்த இடத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளர் மிளிர்ந்தார்.//

நன்றி ஆதவா..

//ஒரு அக்மார்க் காமத்தில் கதை ஒன்று என்னிடம் இருக்கிறது.,. ஆனால் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!!!//

எழுதுங்கள்.. இதல் என்ன தயக்கம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

////ஆதவா said...
என்னைப் பொறுத்தவரை அது தப்பில்லை.... சிரிப்பு, அழுகை, உணர்ச்சி, இவைகளைப் போன்றது காமம்... காமம் அன்பின் அடுத்த நிலை.. எங்கேயும் நினைப்பதில் தவறில்லை..//

நம் சமுதாயம் இதை வேறு கண்ணோட்டத்தில்தான் பார்க்கும்..

//Reminds me of Gandhi's similar experience when his mother (or father?) was ill.

அது அவரோட அப்பாதான்.. அம்மா இல்லை.//

சத்திய சோதனை.. சீக்கிரமே படிக்க வேண்டும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
கார்த்தி அருமையாக இருக்கிறது..//

நன்றி வினோத்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said...
ங்களுக்குள் பெரிய எழுத்தாளர் ஒழிந்து கொண்டிருக்கிறார் பேராசிரியரே.. எப்பொழுது நாவல் எழுத போகிறீர்கள்..//

பெரிய வார்த்தைகள் லோகு.. நான் சிறுவன்.. எனினும் நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
நைனா பாணியில் "சும்மா" சொல்லக் கூடாது..! பூந்து விளையாடிருக்கீங்க பேராசிரியரே...!ஆனா ஒரு மார்க்கமாத்தான் இருக்கு..!//

அப்பப்ப.. தோணுறதை அப்படியே எழுதனும்ல டக்கு.. நான் கதைய சொன்னேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Joe said..
அருமையான கதை. //

வருகைக்கு நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//கே.ரவிஷங்கர் said...
தயவு செய்து ஆக்கபூர்வமாக் எடுத்துக்கொள்ளுங்கள்.//

கண்டிப்பா நண்பா.. இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? உங்கள் நேரத்தை செலவழித்து எனக்காக சொல்வதை நான் எப்படி தப்பு சொல்ல முடியும்.. ரொம்ப நன்றின்னுதான் சொல்லணும்

//நண்பரே சொல்லுங்கள் நான் சொன்ன முடிவு எப்படி?//

இதுவும் நல்லாத்தான் நண்பா இருக்கு...

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ் வெங்கட் said...
தல கதை சொல்லி கலக்கிடீங்க..!ஒவ்
ஒரு மனிதன் மனத்துள்ளும் மிருகம் ஒன்று உறங்கி கொண்டுதான் உள்ளது....!//

பெயரிலேயே தமிழைத் தாங்கி நிற்கும் நண்பருக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நல்லா எழுதியிருக்கீங்க ,கதை ரொம்ப நால்லா இருக்குங்க.
|நம்மளால ஒண்ணும் செய்ய முடியலையே..?|
|உன்னை நீ நல்லா பார்த்துக்கிட்டா போதும்யா.. பத்திரமா இரு.." |
இவ்வரிகள் என்னை மிகவும் பாதித்தன.காமம் நம் நிழல் போல் நம்மோடே வருவதை சித்தரித்திருக்கின்றீர்கள்.
அருமையான எழுத்து,//

நான் சொல்ல வந்ததை தெளிவா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க.. ரொம்ப நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said...
பாதி படித்த் போது மணம் கண்த்தது..
மீதி படித்த போது சீ என்ன இவன் என்று தோன்றியது... அப்பாவை பற்றி நினைக்காமல் ..ஆனா அது உண்மை ... மனிதனின் மிருகம் எட்டி பார்பது என்னவோ தப்பு தான் அதுவும் அந்த நேரத்தில்..//

மாப்பு.. ரொம்ப நன்றி.. உனக்கு ஒரு விஷயம் புடிச்சதுன்னு போன்ல கூப்பிட்டு பாராட்டி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை எனக்கு அறிமுகம் செஞ்ச இணையத்துக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
யாதார்த்தமான கதை...தேர்ந்த கதாசிரியரின் நடை தெரிகிறது... வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...//

ரொம்ப நன்றி கவிஞர்..

//kavi said...
romba romba practical... marukka mudiyathu. but konjam aazhama yosicha kaamam koda cinna pulla thanam. But yosikkaarathu than romba kastam illa ?//

அழுது அடம் பிடிக்கும் குழந்தைபோல தன எண்ணம் ஈடேறும் வரை காமம் நம்மை விடுவது இல்லை.. நல்லா சொன்னீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-peer said..
கதைச்சொல்லும் விதம் யதார்த்தம்... கார்த்திக். வாழ்த்துகள்.//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
காமம் எப்போதும் எந்த நிலையிலும் வரலாம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் நம் நிலையை என்னி சரியாக எழுதியிருக்கிறீர்கள் கா.பா.//

நன்றி தோழர்..

//இதில் ஒருவித காப்பி தெரிகிறதே புரிந்தால் சரி......//

உங்க திட்டம் பலிக்காது.. நாங்க கோபப்பட மாட்டோம்ல..:-)

குமரை நிலாவன் said...

கதை நல்லா இருக்கு நண்பா


காமம் ஒரு கொடிய மிருகம் போல் மனிதனை எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது. உடம்பில் ஓடித் திரியும் பச்சை நரம்புகளைப் போல் அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது.



உங்களுக்குள் பெரிய எழுத்தாளர் ஒழிந்து கொண்டிருக்கிறார் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நிலாவன்..

வழிப்போக்கன் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை...
கதை "ர்ர்ரொம்ப" உணர்ச்சி பூர்வமா இருந்திச்சு...
:)))
நெகிழவும் வைத்தது...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க வழிப்போக்கன்.. கருத்து சொன்னதுக்கு நன்றி.. உணர்ச்சி அதிகமாகிடாம பார்த்துக்கோங்க..

Anbu said...

பீல் பண்ணி படித்தேன் அண்ணா..ஆனால் என்னுள்ளே ஒரு சிரிப்பு அதான் சொன்னேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

ஹே.. அன்பு.. விளையாட்டா சொன்னேன்ப்பா.. சீரியசா எடுத்துக்காதே..

Anbu said...

ச்சே அப்படியெல்லாம் இல்லை அண்ணா

அத்திரி said...

கதை நல்லாத்தான் இருக்கு.. ஆனால் அப்பா சீரியஸ் என்ற நிலையில் ஒருத்தன் இந்த மனநிலையில் கண்டிப்பாக இருக்கமுடியாது......ஆங்....

Karthik said...

வாவ், நிஜமாவே அட்டகாசம்..!

Karthik said...

me the 50!

sarathy said...

தலைப்பை பார்த்ததும் வாத்தியார் கூடவா இப்படி எழுத ஆரம்பிச்சுட்டாருனு நினைச்சேன்..
உள்ள வந்து பார்த்தா
கடைசியில் "நல்ல பாடம்" தான் எடுத்து இருக்காரு..

ஷண்முகப்ரியன் said...

காமம், இயற்கை தந்தது.கனவு மனிதன், படைத்துக் கொண்டது.ஒன்றை மாற்ற முடியாது.மற்றது மாறிக் கொண்டே இருக்கும்.இரண்டும் சந்திக்கும் போது உங்கள் கதையில் வரும் கேரக்டரைப் போல தப்பு,சரி என்ற moral debate ல் இறங்கி விடுவோம்.
நல்ல முயற்சி.வாழ்த்துகள்,கார்த்திகைப் பாண்டியன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
கதை நல்லாத்தான் இருக்கு.. ஆனால் அப்பா சீரியஸ் என்ற நிலையில் ஒருத்தன் இந்த மனநிலையில் கண்டிப்பாக இருக்கமுடியாது......ஆங்....//

நன்றி நண்பா..நான் குருட்டாம்போக்குல எழுதினேன்.. ஆனா மேல நண்பர் ஒருத்தர் சொல்லி இருக்கார் பாருங்க.. காந்திக்கே இந்த மாதிரி ஒரு தடவை நடந்து இருக்காம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
வாவ், நிஜமாவே அட்டகாசம்..!//

thanks bro..!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//sarathy said...
தலைப்பை பார்த்ததும் வாத்தியார் கூடவா இப்படி எழுத ஆரம்பிச்சுட்டாருனு நினைச்சேன்..
உள்ள வந்து பார்த்தா
கடைசியில் "நல்ல பாடம்" தான் எடுத்து இருக்காரு..//

நம்புங்கப்பா.. பாண்டியன் நல்லவந்தான்யா.. நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஷண்முகப்ரியன் said...
காமம், இயற்கை தந்தது.கனவு மனிதன், படைத்துக் கொண்டது. ஒன்றை மாற்ற முடியாது.மற்றது மாறிக் கொண்டே இருக்கும்.இரண்டும் சந்திக்கும் போது உங்கள் கதையில் வரும் கேரக்டரைப் போல தப்பு,சரி என்ற moral debate ல் இறங்கி விடுவோம்.நல்லயற்சி.வாழ்த்துகள், கார்த்திகைப் பாண்டியன்.//

ரொம்ப நன்றி இயக்குனர் சார்.. முதல் முறையா வந்து வாழ்த்தி இருக்கீங்க.. மகிழ்ச்சி..

வேத்தியன் said...

ஆஹா கார்த்தி...

வித்தியாசமான கற்பனை...
நல்லா இருக்கு...

சொல்லிய விடயம் அருமை..
கவனமாக இருக்க வேண்டும்...

கலக்கலா இருந்துச்சு...

வோட்டியாச்சு...

:-)

sakthi said...

மழையின் முதல் துளி மண்ணில் விழுந்த போது அவன் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். நான்கு வருட வாழ்க்கையில் நகரத்தின் சந்துகள் அவனுக்கு பழக்கமாகி விட்டன.

ada arampame alagu pa

nice post keep it up

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன்..//

நன்றி நண்பா.. கவனமா சொல்லனும்னுதான் முயற்சி பண்ணினேன்.. கொஞ்சமா வொர்க்கவுட் ஆகிருச்சு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//sakthi said...
ada arampame alagu pa
nice post keep it up//

முதல் வருகைக்கு.. வாழ்த்துக்கு.. என்னை தொடர்வதற்கு.. நன்றி..

அகநாழிகை said...

கார்த்தி,
கதையை வாசித்தேன். விவரிப்பு நன்றாக உள்ளது. எஸ்.ரா. எழுத்துக்களின் அதீத பாதிப்பு உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை உணரச் செய்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி வாசு... முடிந்த அளவுக்கு எஸ்ராவின் பாதிப்பு இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்..

Venkatesh Kumaravel said...

அட்டகாசமான புனைவு! எதிர்பார்த்த காட்சியை சேர்த்து ஜோதி கொழுந்து விட்டு எரிகையில் கட் செய்து மீண்டும் நிதர்சனத்துக்கு வந்திருந்தால் அனேகம் பேரை திருப்தி செய்திருக்க முடியும்...:P

//romba romba practical... marukka mudiyathu. but konjam aazhama yosicha kaamam koda cinna pulla thanam. But yosikkaarathu than romba kastam illa ?//
தாறுமாறு பின்னூட்டம்! வாழ்க வாழ்க...

கார்த்திகைப் பாண்டியன் said...

மக்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு எழுதினால் கஷ்டம் நண்பா..நம் மனதில் பட்டதை எந்த விரசமுமில்லாமல் பதிவு செய்ய முற்பட்டு இருக்கிறேன்..

"உழவன்" "Uzhavan" said...

சராசரி மனிதனின் அலைபாயும் மனதை இயல்பாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே. வாழ்த்துக்கள்!
நண்பா.. ஒரு பெண்ணைப் பார்த்தவுடனேயே இப்படி கனவு வருவதெல்லாம் கொஞ்சம் ஓவருதான் :-) ஆனால் இப்படி இருக்கலாம். அவளைப் பார்த்துக்கொண்டே, கற்பனையில் அவளோடு சில நிமிடங்கள் வாழ்ந்து பார்த்திருக்கலாம். கதையைச் சொல்லியுள்ள விதம் நன்று தலைவா..

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி நண்பா..

Dhavappudhalvan said...

என்ன சொல்ல? அத்தனையும் சொல்லி விட்டங்களே. பட் பட்.. பட்... பட்.......

Dhavappudhalvan said...

பட் பட்.. அது தாங்க, கை தட்டல்