May 21, 2009

மே 24 - மதுரையில் பதிவர் சந்திப்பு..!!!

அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களே...

வெகு சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். சந்தோஷமான தருணங்கள். எழுத்துகளின் மூலமாக மட்டுமே அறிமுகம் ஆகி இருந்த நண்பர்களை எல்லாம் நேரில் சந்தித்து உரையாட முடிந்தது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.

அந்த சந்தோஷத்துடனும், அதே ஆர்வத்துடனும்.. இதோ.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.

தருமி ஐயா...

டாக்டர் தேவன்மாயம்...

மதுரையில் இருந்து எழுதி வரும் மூத்த பதிவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும், புதிதாக எழுத ஆரம்பித்து இருக்கும் நண்பர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் கண்டிப்பாக இந்த சந்திப்பு உதவும்.

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...


தருமி ஐயா - 99521 16112

சீனா ஐயா - 98406 24293
வால்பையன் - 99945 00540

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

85 comments:

சுந்தர் said...

ஓட்டு போட்டாச்சு தல.

ஆ.ஞானசேகரன் said...

பட்டய கிளப்புங்க கார்த்திகை பாண்டியன்..

ஆ.ஞானசேகரன் said...

கலந்துகொள்ளும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை சொல்லிருங்க நண்பா...

நர்சிம் said...

இப்பத்தான் அ(ந)ம்ம ஊருக்கு வந்துட்டு வந்தேன்.. ஒரு வாரத்துக்கு முன்னால போட்டிருக்கக் கூடாதா?? ஹும்ம்ம்ம்ம்

யூர்கன் க்ருகியர் said...

நன்று

CHAKKRAWARTHY said...

கலந்து கொள்ள முடிய வில்லை என வருத்தம்தான்.நல்லபடியாக நடைபெற நல வாழ்த்துக்கள் .
ஜீவா ப்ளோரா.

இராம்/Raam said...

ஹீம்ம்ம்ம்ம்ம்.....

குடந்தை அன்புமணி said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேனீ - சுந்தர் said...
ஓட்டு போட்டாச்சு தல.//

நன்றி நண்பா.. ரெண்டே நாள்ல சந்திப்போம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
பட்டய கிளப்புங்க கார்த்திகை பாண்டியன்..கலந்துகொள்ளும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை சொல்லிருங்க நண்பா...//

கண்டிப்பா சொல்றேன் நண்பா.. ரொம்ப நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
இப்பத்தான் அ(ந)ம்ம ஊருக்கு வந்துட்டு வந்தேன்.. ஒரு வாரத்துக்கு முன்னால போட்டிருக்கக் கூடாதா?? ஹும்ம்ம்ம்ம்//

ஆகா.. மிஸ் பண்ணிட்டேனே தல.. கூடிய சீக்கிரம் உங்ககிட்ட பேசுறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஜுர்கேன் க்ருகேர்..... said...
நன்று//

நன்றி தோழரே

நையாண்டி நைனா said...

மிக மகிழ்ச்சி நண்பா.....

எனக்கு மிகுதியாக சந்தேகங்கள் உள்ளது.

அந்த கேள்விகளை பின்வரும் பின்னூட்டங்களில் கேட்கிறேன். உரியவர்களிடம் கேட்டு சொல்லவும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//CHAKKRAWARTHY said...
கலந்து கொள்ள முடிய வில்லை என வருத்தம்தான்.நல்லபடியாக நடைபெற நல வாழ்த்துக்கள் .
ஜீவா ப்ளோரா.//

நீங்களும் மதுரைதானா? ரொம்ப நன்றி..

நையாண்டி நைனா said...

என்ன நண்பா கேள்விகளை நான் கேட்கட்டுமா..?

சாரி... சாரி...

நான் மட்டும் தான் கேட்பேன். மதிப்பிற்குரிய தருமி அய்யா எல்லாம் கேட்கப்புடாது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//இராம்/Raam said...
ஹீம்ம்ம்ம்ம்ம்.....//

தலைவா.. நீங்க மதுர.. ஆனா வெளிநாட்டுல இருக்கீங்க இல்லையா? நீங்க எல்லாம் வந்த இன்னும் நல்லா இருக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்!//

றி நண்பா.. போட்டோ எல்லாம் போட்டுட்டீங்க போல.. நன்று

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
மிக மகிழ்ச்சி நண்பா.....
எனக்கு மிகுதியாக சந்தேகங்கள் உள்ளது.அந்த கேள்விகளை பின்வரும் பின்னூட்டங்களில் கேட்கிறேன். உரியவர்களிடம் கேட்டு சொல்லவும்//

அடடா.. நைனா காலத்துல இறங்கிட்டாரா? நடத்துங்க நண்பா.. கேட்டு சொல்றேன்

நையாண்டி நைனா said...

சம்பந்த பட்டவர்கள் மனம் நோக கேள்விகள் கேட்கும் நோக்கம் இல்லை. என்னையும் மீறி அப்படி ஏதேனும் கேள்விகள் வந்து விட்டால், பிழை பொறுத்து அருள்க.

முடிந்தால் விடை தருக.

கார்த்திகைப் பாண்டியன் said...

நைனா.. எதுக்கு இவ்வளவு பில்டப்..சும்மா கேளுங்க

நையாண்டி நைனா said...

தருமி ஐயாவிடம் :

திருவிளையாடல் காலத்தில் பிறந்தபோது இறையனார் சரியாக பாட்டெழுதி பரிசு வாங்கி தராததால் தான் இந்த பிறவியில் இறை மறுப்பாளராக இருக்கிறாரோ?

போன பிறவியில் கேள்வி கேட்டும் சரியாக பதில் கிடைக்காததால் தான் இந்த பிறவியில் சொல்லி கொடுத்து கேள்வி கேட்கும் ஆசிரியராக வந்தாரோ?

இப்போவாவது சொல்லுங்கள் பெண்ணின் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா?

இப்போ எழுதுற பதிவுகளும் அவரா எழுதுறது தானா...??? இல்லை கோவில் மண்டபத்திலே......

Rajeswari said...

நான் சென்னையில் இருக்கற நேரமா பார்த்து எங்க ஊருல சந்திப்பு வச்சிருக்கீங்கலே...சரி பரவாயில்ல என்ஜாய் பண்ணுங்க...வாழ்த்துக்கள்

நையாண்டி நைனா said...

cheena (சீனா) ஐயாவிடம் :

"சீனா" என்று பெயர் வைத்திருக்கிறார். "சீனா"விற்கும் இவர்க்கும் என்ன சம்பந்தம்? ( பம்மல் K.சம்பந்தம் என்ற பதிலை தவிர வேறு பதில் தேவை.)

பதிவெழுதி பெயர்வாங்கும் பதிவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டு பிடித்தே பெயர்வாங்கும் பதிவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பிற பதிவர்களை வைத்து பதிவு எழுதவைத்து பெயர்வாங்கும் / பெயர்வாங்கி கொடுக்கும் ஐடியா எப்படி வந்தது?

சீனா அவர்கள், வீணா இருக்கிற வீணாவோடு சீனாவுக்கு போனா வீணா கிடக்கிற மீனா சாப்பிடுவாரா, வேணா வீணா நம்ம பேரு கேட்டுபோயிரும் என்று தானா சமச்சி சாப்பிட மீனாவையும் கூட்டிகிட்டு போவாரா?

நையாண்டி நைனா said...

வால் பையனிடம்:

அவரது பதிவில், வால் பையனுக்கு பெரிய கொம்புதான் இருக்கிறது... பின்னே அவர் எப்படி, எதற்கு வால் பையன் என்றானார்? கொம்பு பையன் என்று ஏன் வைக்க வில்லை?

வால் முளைக்கவேண்டும் என்று நினைத்து வால்பையன் என்று பெயர் வைத்தாரா? இல்லை வளர்ந்த வாலை வெட்டி விட்டு அடையாளத்திற்காக வால் பையன் என்று பெயர் வைத்தாரா?

அவருக்கு வால் தேவை என்றால் எந்த மாதிரி வால் வேண்டும்? அணில் வால் மாதிரி பஞ்சு போல வேண்டுமா ? சிங்க வால் போல தூரிகை போல வேண்டுமா? இல்லை நாய் வால், குரங்கு வால் போல மொட்டை மொளுக்கடி என்று வேண்டுமா? இல்லை ரிசசனை சமாளிக்க, முடியை விற்று சமாளிக்க யானைவால் போன்று வேண்டுமா? ( எது எப்படியோ? வாலை பற்றி ஆராய்ச்சி செய்ய தூண்டியதற்கு நன்றி)

கணேஷ் said...

நம்மூருல நடந்தும் கலந்து கொள்ள முடிய வில்லை. நல்லபடியாக நடைபெற நல வாழ்த்துக்கள்.

அண்ணன் அழைக்கிறார்... மருத மக்களே அலை கடலென திரண்டு வாரீர்...

நையாண்டி நைனா said...

/*அண்ணன் அழைக்கிறார்... மருத மக்களே அலை கடலென திரண்டு வாரீர்...*/

ஒரு ஆளுக்கு எவ்வளவு தருவீங்க? நாங்க மொக்கை பதிவர்கள் ஒரு நாலாயிரம் பேரு இருக்கோம், அனானிகள் ஒரு லட்சம் பேரு இருக்கோம். கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க.

புதியவன் said...

சந்திப்பு முடிந்ததும் வழக்கம் போல் பதிவிடுங்கள் நாங்களும் படித்து மகிழ்கிறோம்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajeswari said...
நான் சென்னையில் இருக்கற நேரமா பார்த்து எங்க ஊருல சந்திப்பு வச்சிருக்கீங்கலே...சரி பரவாயில்ல என்ஜாய் பண்ணுங்க...வாழ்த்துக்கள்//

நம்ம ஊருலன்னு சொல்லுங்க தோழி.. நீங்கள் வரப்ப சொல்லுங்க.. இன்னொரு மீட் வைக்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//கணேஷ் said...
நம்மூருல நடந்தும் கலந்து கொள்ள முடிய வில்லை. நல்லபடியாக நடைபெற நல வாழ்த்துக்கள். //

ரொம்ப நன்றி கணேஷ்.. தொடர்வதற்கும் நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
ஒரு ஆளுக்கு எவ்வளவு தருவீங்க? நாங்க மொக்கை பதிவர்கள் ஒரு நாலாயிரம் பேரு இருக்கோம், அனானிகள் ஒரு லட்சம் பேரு இருக்கோம். கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க.//

நைனா புல் பார்ம்ல இருக்கீங்க.. நடத்துங்க..

வேத்தியன் said...

சந்திப்பு இனிதாக அமைய வாழ்த்துகள்...

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள்..

நானும் இங்க ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம்னு நினைச்சு இருந்தேன் என் பதிவையே தூக்கிடனுங்க..

இனிமே வாய்ப்பு இல்லை..

கண்ணா.. said...

மதுரை பதிவர் சந்திப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Anbu said...

கண்டிப்பாக கலந்துகொள்கிறேன் அண்ணா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
சந்திப்பு இனிதாக அமைய வாழ்த்துகள்...//

நன்றி நண்பா.. சீக்கிரம் ஊருப்பக்கமா வாங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
வாழ்த்துக்கள்..நானும் இங்க ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம்னு நினைச்சு இருந்தேன் என் பதிவையே தூக்கிடனுங்க..இனிமே வாய்ப்பு இல்லை..//

மனசு வருத்தப்படாதீங்க வினோத்.. உங்களை எல்லாருக்கும் தெரியும்.. புது ப்ளாக் கூட ஆரம்பிச்சுக்கலாம்.. சங்கடம் வேண்டாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Kanna said...
மதுரை பதிவர் சந்திப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....//

ரொம்ப நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
கண்டிப்பாக கலந்துகொள்கிறேன் அண்ணா..//

சந்திப்பில் உங்களை கட்டாயம் எதிர்பார்க்கிறேன் அன்பு..:-)

SK said...

கலக்குங்க தோழரே..

நையாண்டி நைனா said...

வோய் காத்திகை பாண்டி அம்பி.... கேள்வியை நன்னா படிச்சுன்டியா வோய்....?
குறிப்பெடுத்து வச்சுகினியா?
பதிலு கெடைக்கலைன்னு சொல்லிபுடாதீங்கோ.

நையாண்டி நைனா said...

//vinoth gowtham said...
வாழ்த்துக்கள்..நானும் இங்க ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம்னு நினைச்சு இருந்தேன் என் பதிவையே தூக்கிடனுங்க..இனிமே வாய்ப்பு இல்லை..//

இதுக்கு தான் என்னை மாதிரி மொக்கை டெர்ரர் பதிவுகள் எழுதனும், சும்மா பார்த்தாலே வைரசு கூட பம்மும்.

சொல்லரசன் said...

பதிவர் சந்திப்பு பட்டையக் கிளப்ப வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//SK said...
கலக்குங்க தோழரே..//

வாழ்த்துக்கு நன்றி குமார்

சொல்லரசன் said...

//சீனா அவர்கள், வீணா இருக்கிற வீணாவோடு சீனாவுக்கு போனா வீணா கிடக்கிற மீனா சாப்பிடுவாரா, வேணா வீணா நம்ம பேரு கேட்டுபோயிரும் என்று தானா சமச்சி சாப்பிட மீனாவையும் கூட்டிகிட்டு போவாரா?//

நைனா வீணா பகைச்சுக்காதீங்க,நாளைக்கு வீணாஇருக்கும் போது லோன் கொடுப்பதை கெடுத்துக்காதீங்கோ

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
வோய் காத்திகை பாண்டி அம்பி.... கேள்வியை நன்னா படிச்சுன்டியா வோய்..?குறிப்பெடுத்து வச்சுகினியா? பதிலு கெடைக்கலைன்னு சொல்லி புடாதீங்கோ.//

என்னைய மாட்டி விடணும்னு தீர்மானத்தோட இருக்காப்ள.. ரைட்டு..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
பதிவர் சந்திப்பு பட்டையக் கிளப்ப வாழ்த்துகள்//

நன்றி தலைவரே

Jackiesekar said...

சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள், பாண்டியன்

கார்த்திகைப் பாண்டியன் said...

தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜாக்கி..

நையாண்டி நைனா said...

ஐயா.... தயவு செய்து பட்டைய கெளப்பு, பட்டைய கெளப்பு சொல்லாதீங்க...

இப்படி நீங்க சொல்லி சொல்லி நம்ம பய கார்த்திகை பாண்டி, பல பாண்டியன் பஸ்சு பட்டைய கெளப்பிகிட்டு போயிருச்சு.... அதனாலே அதெல்லாம் இப்ப கட்ட வண்டிகனக்கா தான் ஓடுது... இதுக்கு மேலையும் அங்கே பட்டைய கெளப்ப பட்டை இல்லை... இனி டயரதான் கெளப்பனும்.

நையாண்டி நைனா said...

ஹையா நான்தான் ஐம்பதாவது ஆளு.

நையாண்டி நைனா said...

நண்பா இன்னும் பல கேள்விகள் இருக்கு..... இப்ப கேட்கட்டுமா அப்புறமா கேட்கட்டுமா???

மேவி... said...

அன்று மதுரை வந்தாலும் வருவேன் ......
வந்தால் கண்டிப்பான முறையில் அங்கே வந்து மொக்கை போடுகிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
நண்பா இன்னும் பல கேள்விகள் இருக்கு..... இப்ப கேட்கட்டுமா அப்புறமா கேட்கட்டுமா???//

நைனா..கேக்குறதுன்னு ஆகிப்போச்சு.. இன்னும் என்ன யோசனை.. அந்தக் கேள்விகளை எல்லாம் அவுத்து விடுங்க.. (கேள்விகளை மட்டும்.. )

கார்த்திகைப் பாண்டியன் said...

// MayVee said...
அன்று மதுரை வந்தாலும் வருவேன் ......வந்தால் கண்டிப்பான முறையில் அங்கே வந்து மொக்கை போடுகிறேன்//

நீங்க வந்தா ரொம்ப சந்தோஷம்.. வர முயற்சி பண்ணுங்க..

நையாண்டி நைனா said...

/*
சொல்லரசன் said...
//சீனா அவர்கள், வீணா இருக்கிற வீணாவோடு சீனாவுக்கு போனா வீணா கிடக்கிற மீனா சாப்பிடுவாரா, வேணா வீணா நம்ம பேரு கேட்டுபோயிரும் என்று தானா சமச்சி சாப்பிட மீனாவையும் கூட்டிகிட்டு போவாரா?//

நைனா வீணா பகைச்சுக்காதீங்க,நாளைக்கு வீணாஇருக்கும் போது லோன் கொடுப்பதை கெடுத்துக்காதீங்கோ
*/

அடப்பாவி.. இப்படி என்னை மாட்டி விட்டுடீங்களே!!!
கொஞ்சம் முன்னாடியே சொல்லபுடாதா????

(இப்ப என்ன? செய்யுறது???)

சரி... சரி... சரி... சார் இந்த கேள்வியை எல்லாம் எழுதி கொடுத்து கேட்க சொன்னது நம்ம சொல்லரசன் சாருதான்... இங்கே சாரு என்பது "சாரு"வை குறிக்காது.
(எப்படி உங்களை மாட்டி விட்டேன் பார்த்தீங்களா????)

Suresh said...

வாழ்த்துகள் மச்சான் .. நான் திருச்சி வருகிறேன் ஜீன் 6 யாராச்சும் இருந்தா மீட் பண்ணலாம்

அப்துல்மாலிக் said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

ஆ.சுதா said...

வாழ்த்துகள் நண்பா இந்த சந்திப்பையும் சிறப்புப் படுத்துங்க.

(ஆனா ஒன்னு சந்திப்பு முடிந்ததும் படங்களோட பதிவப் போட்டுரனும் ஆமா!!)

Maduraikkarathambi said...

நான் மதுரைக்காரன் தான். ஆனா இப்ப மதுரையில் இல்லை. பதிவர் கூட்டம் வெற்றிபெற எல்லாம் வல்ல ஸ்ரீ மீனாக்ஷி அம்மனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் - மதுரைக்காரத்தம்பி

குமரை நிலாவன் said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்


அப்புறம் vinoth gowtham, ஆ.முத்துராமலிங்கம் இந்த ரெண்டு பேரோட பிளாக்கை காணவில்லை
என்னாச்சின்னு கேட்டு சொல்லுங்க

Prabhu said...

நானும் வர்றேன்னு வாலுகிட்ட சொன்னேனே. நீங்க எப்படி என் பேர போடாம போச்சு. எங்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கலைல. ஆமா.......போட்டாலும் காட்டுறதுக்கு என் ப்ளாக் இல்லையே:( (வயலின் பேக்ரவுண்டு கொடுப்பா, சோகமா இருக்கோம்ல!)

தருமி said...

நையாண்டி நைனா

உங்களைப் பத்தி அங்க போட்டுருக்கோம்ல ...

தருமி said...

பப்பு
உங்களையும் அங்கன சேத்துட்டோடோம்ல

நசரேயன் said...

சந்திப்பு இனிதாய் நடை பெற வாழ்த்துக்கள்

தருமி said...

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆதவா said...

உள்ளேன் ஐயா!!!!

நல்லபடியா சந்திச்சு ஒரு பதிவைப் போடுங்க!!!

வயித்தெரிச்சலுடன்
ஆதவா

குப்பன்.யாஹூ said...

அரவம் கக்கிய ஆலகால விடத்தை கூட அமிழ்து போல ஆக்கிடும் அருளும் வலிமையும் கொண்ட சொக்கநாதர் திருக்கோயில் அமைந்து உள்ள

நான் மாடக் கூடல் நகரில் நெற்றிக் கண்ணை திறப்பினும் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உரைத்த தன்மான தகை சால் புலவன் நக்கீரன் உலவிய மதுரை மாநகரில் நடக்க இருக்கும் பதிவர்கள் சந்திப்பு நானிலம் போற்றும் அளவிற்கு சிறப்பாக நடக்க மனதார வாழ்த்துகிறேன்.

குப்பன்_யாஹூ

அடுத்த பதிவை மேல மாசி வீதி முக்கு அல்லது பொற்றாமரை குள படிக்கட்டில் வைக்கலாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said...
வாழ்த்துகள் மச்சான் .. நான் திருச்சி வருகிறேன் ஜீன் 6 யாராச்சும் இருந்தா மீட் பண்ணலாம்//

ட்ரை பண்ணலாம் மாப்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

//அபுஅஃப்ஸர் said...
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
வாழ்த்துகள் நண்பா இந்த சந்திப்பையும் சிறப்புப் படுத்துங்க.
(ஆனா ஒன்னு சந்திப்பு முடிந்ததும் படங்களோட பதிவப் போட்டுரனும் ஆமா!!)//

நன்றி முத்து.. படங்கள் போட முயற்சி பண்ணுறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

// Maduraikkarathambi said...
நான் மதுரைக்காரன் தான். ஆனா இப்ப மதுரையில் இல்லை. பதிவர் கூட்டம் வெற்றிபெற எல்லாம் வல்ல ஸ்ரீ மீனாக்ஷி அம்மனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் - மதுரைக்காரத்தம்பி//

ஊருப்பாசத்தோட வாழ்த்தி இருக்கீங்க.. நன்றி அண்ணே

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அப்புறம் vinoth gowtham, ஆ.முத்துராமலிங்கம் இந்த ரெண்டு பேரோட பிளாக்கை காணவில்லை என்னாச்சின்னு கேட்டு சொல்லுங்க//

ஏதோ வைருஸ் பிரச்சினை நண்பா.. நாலஞ்சு பேரோட ப்ளாகை காணோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
நானும் வர்றேன்னு வாலுகிட்ட சொன்னேனே. நீங்க எப்படி என் பேர போடாம போச்சு. எங்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கலைல. ஆமா.......போட்டாலும் காட்டுறதுக்கு என் ப்ளாக் இல்லையே:( (வயலின் பேக்ரவுண்டு கொடுப்பா, சோகமா இருக்கோம்ல!)//

சாரி பப்பு.. உங்க பேரு விட்டு போச்சு.. தருமி ஐயா பதிவுல எல்லார் பேரும் இருக்கு.. உங்க ப்ளாகும் காலியா? நேரக்கொடுமை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
சந்திப்பு இனிதாய் நடை பெற வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said... //

ஐயா.. பதிவுல மாத்திட்டேன்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆதவா said...
உள்ளேன் ஐயா!!!!நல்லபடியா சந்திச்சு ஒரு பதிவைப் போடுங்க!!!
வயித்தெரிச்சலுடன் ஆதவா//

உங்க மனசறிஞ்சு நீங்க சாபம் தர மாட்டீங்கன்னு தெரியும் ஆதவா.. உங்க நேரத்துக்கு பதிவர் சந்திப்புகள் சரியா வர மாட்டீங்குது.. என்ன பண்ண.. உங்களுக்காகவே ஒன்னு நடத்தலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//குப்பன்_யாஹூ said...
அரவம் கக்கிய ஆலகால விடத்தை கூட அமிழ்து போல ஆக்கிடும் அருளும் வலிமையும் கொண்ட சொக்கநாதர் திருக்கோயில் அமைந்து உள்ள

நான் மாடக் கூடல் நகரில் நெற்றிக் கண்ணை திறப்பினும் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உரைத்த தன்மான தகை சால் புலவன் நக்கீரன் உலவிய மதுரை மாநகரில் நடக்க இருக்கும் பதிவர்கள் சந்திப்பு நானிலம் போற்றும் அளவிற்கு சிறப்பாக நடக்க மனதார வாழ்த்துகிறேன்.

குப்பன்_யாஹூ//

எங்க ஊர் பெருமையை அழகாக சொல்லி சந்திப்பு நல்லா நடக்கனும்னு வாழ்த்திய உங்களுக்கு ரொம்ப நன்றி

நையாண்டி நைனா said...

/* நான் மாடக் கூடல் நகரில் நெற்றிக் கண்ணை திறப்பினும் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உரைத்த தன்மான தகை சால் புலவன் நக்கீரன் உலவிய மதுரை */

ஒரு வேளை ரூபாய் ஐயாயிரம் இருக்கிற கவரை திறந்து காமிச்சி இருந்தா மாறி இருப்பாரோ என்னவோ?

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா! சந்திப்பு இனிதாய் அமைந்திட மீண்டும் வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷீ-நிசி said...
வாழ்த்துக்கள் நண்பா! சந்திப்பு இனிதாய் அமைந்திட மீண்டும் வாழ்த்துக்கள்!//

நன்றி ஷீ.. அப்புறமா அலைபேசுகிறேன்

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள்.....
கலக்குங்க....
:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

வழிப்போக்கன்.. நன்றி நண்பா

கிராமத்து பயல் said...

மிகவும் நல்ல செய்தியாக இருக்கிறது .......
இலங்கையிலும் நல்ல பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்களும் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது ஆவல் ஆசை

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்கள் முயற்சி செய்து நடத்துங்கள் நண்பா.. வாழ்த்துகள்

Anonymous said...

பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி