May 30, 2009

தோரணை - திரை விமர்சனம்..!!!


சத்யம் என்னும் சூப்பர் டூப்பர் பிளாப்பிற்கு பிறகு வந்திருக்கும் விஷாலின் படம். விஜய் ஆகத் துடிக்கும் விஷால் அவரைப் போலவே (சிவகாசி) ஒத்தக்காலில் போஸ் கொடுத்து நிற்கிறார். வில்லனை தந்திரமாக ஏமாற்றி தப்பும் நாயகன் என விஷாலின் முந்தைய படங்களான திமிரு, மலைக்கோட்டை, சண்டக்கோழி ஆகியவற்றையே கலக்கி மீண்டும் கொடுத்து உள்ளார்கள். காமெடியும் ஆக்ஷனும் கலந்த படமாக இருக்கும் என்று பார்த்தால்..?!!!


சின்ன வயதில் தொலைந்து போன அண்ணனைத் தேடி சென்னைக்கு வருகிறார் விஷால். துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் போதை மருந்து கடத்தும் கெட்டவன் பிரகாஷ்ராஜ். கட்டப்பஞ்சாயத்து செய்யும் இன்னொரு தாதா கிஷோர். இந்த இரண்டு ரவுடிகளுக்கும் தீராத பகை. ஒரு கட்டத்தில் விஷாலின் அண்ணனை கொலை செய்ய பிரகாஷ்ராஜ் முயலுகிறார். விஷாலின் அண்ணன் யார்.. அவரை விஷாலால் காப்பாற்ற முடிந்ததா?..இதுதான் தோரணை.


ஏதோ ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த நோயாளி மாதிரி இருக்கிறார் விஷால். பக்கம் பக்கமாய் பன்ச் டயலாக் பேசிக் கொல்கிறார். சண்டை காட்சிகள் மட்டுமே ஓகே. காமெடி பண்ணுவதாக நம்ம கழுத்தை அறுக்கிறார். நெஞ்சினிலே படம் போல கிஷோரின் அடியாட்களை எல்லாம் வசனம் பேசியே திருத்துகிறார். தாங்க முடியலடா சாமி.."திறந்த" மனசோடு ஸ்ரேயா. உடைகளாக உள்ளாடைகளை மட்டும் உடுத்தி உல்லாசமாக பாடல்களுக்கு வந்து போகிறார். பிரகாஷ்ராஜையும் கிஷோரையும் இதுக்கும் மேல யாராலையும் வீணடிச்சு இருக்க முடியாது.


படத்தில் அவ்வப்போது நம்மை ஆறுதல் கொள்ள செய்வது சந்தானத்தின் காமெடியும், எம்.எஸ்.பாஸ்கரின் லொள்ளு வசனங்களும்தான். வழக்கம் போல இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு. அதற்காக ராமர் வேஷம் போட்டுக் கொண்டு சீதா, ங்கோ.... என்றெல்லாம் பேசுவது ஓவர். கண்ணை கசக்கும் அம்மாவாக கீதா இன்னும் எத்தனை படங்களில் நடிப்பாரோ? கெட்ட அரசியல்வாதியாக சாயாஜி ஷிண்டேவும், கமிஷனராக லாலும் தலை காட்டி இருக்கிறார்கள். ஒரே ஒரு பாட்டுக்கு மீனாட்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார்.


இசை - மணிஷர்மா. தன்னுடைய பழைய பாட்டுக்களையே ரீமிக்ஸ் பண்ணி உள்ளார். "வா செல்லம்" பாட்டு தவிர மற்ற எல்லா பாட்டுமே வேஸ்ட். பின்னணி இசைதான் கொஞ்சம் பராவயில்லை. "வா செல்லம்" பாட்டில் ஆர்ட் வொர்க்கும், "தொட்டுக்கோ" பாட்டில் ஒளிப்பதிவும் அம்சம். ராக்கி ராஜேஷின் சண்டைக் காட்சிகளை நன்றாக படமாக்கி உள்ளார்கள்.


முதல் பாதி முழுக்க வெற்று நகைச்சுவைக் காட்சிகளும் பாட்டும் நிறைந்து இருக்கின்றன. விஷாலின் அண்ணன் யார் என்று தெரிய வரும் இடைவேளை பட்டாசு கிளப்புகிறது. சரி, ஏதோ நடக்கப் போகுதுன்னு நிமிர்ந்து உக்கார்ந்தா..புஸ்ஸ்...ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கு நடுவிலும் சம்பந்தமே இல்லாமல் காதல் காட்சிகள். திரைக்கதை படத்தின் பெரிய பலவீனம். தனது முதல் படத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் சபா ஐயப்பன்.


கொஞ்சம் தோரணை.. நிறைய ரோதனை..


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

40 comments:

வேத்தியன் said...

மீ த பர்ஷ்ட்டு...

வேத்தியன் said...

ஆனா அண்ணா உங்களை சொல்லனும்...

இப்பிடி பதிவு எழுதுறதுக்காக இந்தப் படம் எல்லாம் போய் பாக்குறீங்க???
“மரியாதை’ பாத்தும் திருந்தல..
:-))))))

வேத்தியன் said...

இந்தாளோட கடைசியா வந்த எல்லா படங்கள்லயும் நகரத்துல இருந்து கிராமத்துக்கு போயி சண்டை பிடிக்கிறா மாதிரி தான் இருக்கு..

80கள்ல எடுத்திருந்தாலாவது வெற்றி பெற வைத்திருக்கலாம்ல..
:-)

வேத்தியன் said...

வாக்கும் கொடுத்துவிட்டேன்...

அத்திரி said...

//கொஞ்சம் தோரணை.. நிறைய ரோதனை.. //

நல்லது நண்பா........ என் பர்ஸ் கனம் குறையாது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வீணாகாது

அத்திரி said...

தமிழ் சினிமா உலகிற்கு ஒரு விஜய் போதும்பா...........

அகநாழிகை said...

கார்த்தி,
உங்கள் இப்படி கஷ்டப்பட்டு இந்தப்படத்தை பார்த்து, பல சிரமங்களுக்கிடையில் (கணிணியின் அருகில் இருக்க முடியாத நிலையிலும்) விமர்சனம் எழுதியிருக்கும் உங்கள் மனத்துணிவை பாராட்டுகிறேன்.
வேறென்ன சொல்ல.
‘வேலியில போற ஓணான‘ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

எதுக்கு இந்த கொலை வெறி ?

இந்த விமர்சனத்தை அழகாக விவரணை செய்திருக்கிறீர்கள் என்பது உண்மை. அந்த நேரத்தை வேறு கட்டுரைப் பதிவிட செலவிட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தீப்பெட்டி said...

அப்போ படத்துக்கு போகவேணாம்..

பணத்த மிச்சபடுத்திடிங்க கார்த்தி

புல்லட் said...

அப்பாடா பர்சு தப்பிச்சுது பாஸ ... ரொம்ப நன்றி...ஹிஹிஹ!

வினோத் கெளதம் said...

"டேய் நானும் மதுரை தாண்டா.."..அப்படின்னு விஷால் எல்லா படத்திலயும் ஒரு டயலாக் பேசுவாரே இந்த படத்துல அது இருக்கா..

Suresh said...

காப்பாத்திட்ட டா மச்சான்

ஆ.சுதா said...

பாண்டியல் கலக்கிடீங்க (கலங்கிட்டீங்க)... போங்க,
அட்டகாசமான் விமர்ச்சனம்,
அதிலும் விசாலைபற்றி
|ஏதோ ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த நோயாளி மாதிரி இருக்கிறார் விஷால்.| ஆஹா!! என்ன ஒரு தேர்ந்த விவரனை. எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருந்ததுங்க!!!

ஏன் பாண்டியன் இப்படில்லாம்.... சரி சரி இதனாலையும் எங்களுக்கு ஒரு நண்மையுண்டு நீங்க பட்ட கஷ்டத்தை நாங்க படமாட்டோம்ல!!!

ஆர்வா said...

மொக்கை படம் எப்படி எடுக்கறதுன்னு இவனுங்ககிட்ட பாடம் எடுத்துக்கலாம். எப்படி எல்லாம் ஃப்ளாப் கொடுக்கறதுன்னு உட்கார்ந்து
யோசீப்பாய்ங்களோ?

இராகவன் நைஜிரியா said...

கலக்கிட்டீங்க.

உங்களுக்கு பொருமை ஜாஸ்திதாங்க.. இந்த மாதிரி படம் எல்லாம் பார்த்து இருக்கீங்களே..

உங்களது வலைப்பூவில் நான் 99 வது பின் தொடர்பவன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

விரைவில் 100 ஐ தொட வாழ்த்துகள்.

Rajeswari said...

தாங்கஸ்பா..காப்பாத்துனதுக்கு..
ஞாயிற்றுகிழமைய தோரணைய பார்த்து வேஸ்ட் பண்றதுல இருந்து தப்பிச்சேன்

ஜெட்லி... said...

நல்ல விமர்சனம்.

நம்மல்த படிச்சிங்களா?

ராம்.CM said...

காசு கொடுக்காமலே படம் பார்த்தாச்சு...

சொல்லரசன் said...

ஹய்யோ.... ஹய்யோ........

இளைய கவி said...

எனக்கு தெரியும்டீயேய் மக்கா நீ படத்துக்கு போறேன்னு சொன்னப்பவே உன்னை தடுத்திருக்கனும் .. விதி யார விட்டது லே.இந்த இழவுக்குதாம் லே நான் இந்த கண்றாவி தமிழ் படம் எல்லாம் பாக்குறது இல்ல.

மேவி... said...

தோரணை ஒரே ரோதனை

ஆ.ஞானசேகரன் said...

ஓஒ படம் பார்த்தாச்சா? கால்கட்டு போட்டாதன் நல்லது என்று நினைக்கின்றேன் நண்பா... அப்பறம் பணிமாற்றம் எப்படி?

ஆ.ஞானசேகரன் said...

வாசு சொல்வதையும் கொஞ்சம் பாருங்கோ கார்த்திகைப் பண்டியன்

Anonymous said...

அப்போ இதும் சொ.செ.சூ (ம்) தானா??

சொல்லரசன் said...

இந்த பதிவில் ஓட்டுகேட்பது பதிவிற்கா? அல்லது படத்திற்கா?

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

விமர்சனம் அருமை - ஆய்ந்த அறிவுடன் எழுதப்பட்ட அருமையான விமர்சனம் - நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

கார்த்தி!!
தேர்ந்த விமர்சனம்!!

தேவன் மாயம் said...

ஓட்டும் போட்டாச்சு!!

தேவன் மாயம் said...

நிறையப் பேரைக் காப்பாத்த தன்னையே பணயம் வைத்த ....நாயகன்...நீர்.!!

நாடோடி இலக்கியன் said...

தாமிரபரணியில் இவர் காமெடி என்ற பெயரில் போட்ட மொக்கையை பார்த்து அதன் பின் விஷால் படமென்றாலே உஷார்தான்.

விமர்சனம் நல்லா வந்திருக்கிறது நன்பரே.

ஆதவா said...

எனக்கு முன்னமே தெரியும்..... அதான்.... படத்தோட ஸ்டில் கூட நான் இன்னும் பார்க்கலை!! (தமன்னாவாக இருந்தால் படம் நல்லா வந்திருக்குM!!!!!!)

அ.மு.செய்யது said...

விஷால் படங்கள்ல இந்த பஞ்ச் டயலாக்குள் கொஞ்சம் ஓவரு...அவரும் நம்ம விசய் அண்ணன் மாதிரி டிரெண்ட மாத்தவே மாட்டேங்குறார்.

தோரணை ரோதனை // ரசித்தேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

தலைவா நல்லாத்தானே போய்ட்டுருந்துச்சு

ஏன் தலைவர இழுக்குறீங்க

அவர இழுக்கலின்னா உங்களுக்கு தூக்கம் வராதே

Anonymous said...

நல்லா திரைவிமர்சனம் எழுதறீங்க அண்ணா.

Anonymous said...

ஓட்டும் போட்டாச்சு!!

முரளிகண்ணன் said...

கார்த்திகைப் பாண்டியன், நல்லா நடு நிலைமையா விமர்சனம் எழுதுறீங்க.


உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சுருக்கேன்.

நன்றி

Iyarkai said...

//ஏதோ ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த நோயாளி மாதிரி இருக்கிறார் விஷால்//

Ithu onne pothum...padathai pathi solla....:-))))))))

வழிப்போக்கன் said...

சத்யம் என்னும் சூப்பர் டூப்பர் பிளாப்பிற்கு பிறகு வந்திருக்கும் விஷாலின் படம்//

ஆரம்பமே கலக்கல்!!!

வழிப்போக்கன் said...

முதல் 2 பந்தியயும் 5 தடைவை வாசிச்சுட்டன்..கதை ஏதாவது இருக்கான்னு புரியல..
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கண்ணா....
:)))

"உழவன்" "Uzhavan" said...

இந்த படத்தைப் பற்றி பெரிசா சொல்வதற்கொன்றுமில்லை. நேற்றுதான் நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன். பெரும்பாலான காட்சிகள் எல்லாமே திருப்பாச்சி, சிவகாசி, ஏடிஎம் போன்ற படங்களையே ஞாபகப்படுத்துகிறது.
அண்ணன் விஷாலுக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து இனிமே காமடி பண்ண முயற்சிக்காதீர்கள். அப்புறம் உங்க படமே காமடியாயிடும்.

வால்பையன் said...

நேரமிருந்தா ,கையில காசிருந்தா உடனே சினிமாவுக்கு போயிரனுமா?

உடம்ப பார்த்துகோங்க பாஸு!
இப்பெல்லாம் சினிமா பார்த்தாலே பல வியாதிகள் வருதாம்!