August 4, 2009

உக்கார்ந்து யோசிச்சது ( 04-08-09)..!!!

ஞாயிற்றுக்கிழமை - நண்பர்கள் தினத்தன்று கொங்கு கல்லூரி மாணவர்கள் போன் பண்ணி இருந்தார்கள். சனிக்கிழமை மாலையே கிளாசில் கேக் எல்லாம் வெட்டிக் கொண்டாடியதாகச் சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மாணவ மாணவிகளிடையே இருந்த பிரச்சினைகளை விலக்கி ஒற்றுமையைக் கொண்டு வருவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் பழக்கத்தை - ஏதேனும் பிறந்த நாளோ இல்லை விசேஷ நாட்களோ வந்தால் எல்லோரும் இணைந்து கொண்டாடுவதை அறிமுகம் செய்து இருந்தேன். நான் கல்லூரியை விட்டு நீங்கி வந்த பின்னும் அந்த நல்ல வழக்கம் தொடர்கிறது என்பதை அறிந்த போது உள்ளம் நெகிழ்ந்து போனேன். எல்லோரும் கடைசியாக சொன்னது.."thanks a lot sir.. we miss you..". பெருமையாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாண்டியா?
***************
நல்லது செய்ய வேண்டும் என்று வாய் வார்த்தையாக மட்டுமே பேசிக் கொண்டிராமல் அதை செயலிலும் காட்டத் தொடங்கி விட்டார்கள் நம் பதிவுலக நண்பர்கள். நண்பர் நர்சிம் விடியலைப் பற்றி எழுதியவுடன் அவர்களுக்கு பல நண்பர்கள் உதவி செய்து உள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதே போல இன்னொரு முயற்சியில் நண்பர் ஜோ (joe) ஈடுபட்டு இருக்கிறார். அவருடைய இந்த இடுகையைப் படியுங்கள். சின்னபள்ளிக்குப்பம் என்னும் கிராமத்தில் நூலகம் ஒன்றை அமைப்பதில் உதவி வருகிறார். இதற்காக புத்தகங்கள் வாங்கி தரும்படி நண்பர்களிடம் கேட்டு இருந்தார். நிறைய பேர் தங்களால் இயன்றதை செய்து இருக்கிறார்கள். மேலும் பல நல்ல விஷயங்களை செய்ய அவருக்கும் என் வாழ்த்துகள்.
***************
F1 மோட்டார் போட்டிகளை பார்த்து வரும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து இருக்கும். ஹங்கேரியில் நடைபெற்ற போட்டியில் பெர்ராரி அணியைச் சேர்ந்த பெலிப்பே மாசாவிற்கு பயங்கரமான விபத்து நடந்தது. இடது கண்ணின் அருகே பலத்த அடிபட்டு கோமாவில் இருந்தவர், இப்போது உடல்நலம் தேறி நன்றாகி விட்டார். கெட்டதில் ஒரு நல்லது என்று சொல்வார்களே, அதுபோல மாசா மீண்டும் ரேஸ் ஓட்ட முடியும் வரை அவருக்கு பதிலாக முன்னால் உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் பங்கேற்க இருக்கிறார். நான் அவருடைய தீவிர ரசிகன் என்பதால் அவரை மீண்டும் போட்டிக்களத்தில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். "Welcome Back Schumi.."
***************
சமீபத்தில் தான் கௌதம சித்தார்த்தனின் "பொம்மக்கா" என்னும் சிறுகதைத் தொகுப்பை படித்தேன். அருமை. கொங்கு மண்ணின் கதைகளை அதன் வாசம் மாறாமல் அப்படியே தந்துள்ளார். சிறு தெய்வங்களின் கதைகளான பொம்மக்கா, ஒண்டி முனியப்பன், பாட்டப்பன் மூன்றும் மனதை கனமாக்கி விட்டன. தொகுப்பில் கடைசியாக இருக்கும் "மண்" என்னும் கதை பெண்கள் மீதான அடக்குமுறையை தெளிவாக விவரிக்கிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
***************
மலேஷியாவில் இருந்து எழுதி வரும் பதிவுலக நண்பர் குமாரைநிலாவனை போன வாரம் மதுரையில் சந்தித்தேன். எளிமையான மனிதர். உறவினர்களைப் பார்க்க தஞ்சைக்கு போய் விட்டு வரும் வழியில் மதுரையில் இறங்கினார். நானும் ஸ்ரீயும் பார்க்க வருவதாக சொன்னவுடன் ரூம் போட்டே தங்கி விட்டார்.நிலாரசிகனின் "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்" என்னும் கவிதைப் புத்தகத்தை எனக்காக தேடிப்பிடித்து வாங்கி வந்து பரிசாக அளித்தார். இரவு பனிரெண்டு மணி வரை அவரோடு கதை பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம். நிலாரசிகனின் வலைப்பூவை நான் வாசித்து இருக்கிறேன். ஆனால் அவர் புத்தகம் வெளியிட்டு இருப்பது தெரியாது. ரொம்ப எளிமையான கவிதைகள். உணர்வுப்பூர்வமாக எழுதி உள்ளார். அதில் எனக்குப் பிடித்த கவிதை...
"என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்து வைத்துக்
கட்டும்போது தெரிகிறது..
அம்மாவின் முகத்தில்
வலி..!!!"

***************

கடைசியாக எஸ்.எம்.எஸில் வந்த ஜோக் ஒன்று...

போலிஸ்: உன் பேர் என்ன?

அவன்: குப்புசாமி...

போலிஸ்: என்ன தொழில்?

அவன்: உப்பு சாமி..

போலிஸ்: ஏண்டா தள்ளாடுற?

அவன்: மப்பு சாமி..

போலிஸ்: சரி சரி.. மாமூல் எடு..

அவன்: தப்பு சாமி..

போலிஸ்: ?!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

30 comments:

ஜெட்லி said...

//சின்னபள்ளிக்குப்பம் என்னும் கிராமத்தில் நூலகம் ஒன்றை அமைப்பதில் உதவி வருகிறார்.//
நானும் கண்டிப்பா என்னால முடிஞ்சத பண்றேன்....
தகவலுக்கு நன்றி சார்.

Anbu said...

கலக்கல் பதிவு அண்ணா..

தேவன் மாயம் said...

மதுரையில் எனக்குத்தெரியாமல் நிறைய வேலை நடக்குது...................................கண்டனத்தைத் த்ரிவிக்கிறேன்!!

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

எஸ்.எம்.எஸ். ஜோக் கலக்கல்.

டக்ளஸ்... said...

raittu

நையாண்டி நைனா said...

ok nanbaa...
but
ரொம்ப நேரம் உக்காந்து யோசிக்காதீங்க...

லோகு said...

நல்லதொரு கதம்பம்..
எல்லாமே புதிய தகவல்கள்..

நாஞ்சில் நாதம் said...

நீங்களும் கொங்கு தயாரிப்பா?

குடந்தை அன்புமணி said...

நல்ல தகவல்களை அறிய முடிந்தது நண்பா.

Karthik said...

உண்மையிலேயே கலக்கல். :)

Karthik said...

//"thanks a lot sir.. we miss you.."

hats off!!

ஆ.ஞானசேகரன் said...

எல்லாம் நல்லாவே இருக்கு... அமைதியான சந்திப்பும் நன்றாக இருக்கு வாழ்த்துகள் நண்பா

" உழவன் " " Uzhavan " said...

எஸ்.எம்.எஸில் வந்த ஜோக் முதலிடம் பெறுகிறது :-)

வேந்தன் said...

SMS ஜோக் நல்லா இருக்கு... :)

வழிப்போக்கன் said...

போலிஸ்: உன் பேர் என்ன?

அவன்: குப்புசாமி...

போலிஸ்: என்ன தொழில்?

அவன்: உப்பு சாமி..

போலிஸ்: ஏண்டா தள்ளாடுற?

அவன்: மப்பு சாமி..

போலிஸ்: சரி சரி.. மாமூல் எடு..

அவன்: தப்பு சாமி..//

டீ.ஆர் தான் நினைவுக்கு வருகிறது..
:)))
சூப்பர்

Anonymous said...

நல்லதொரு பகிர்வு.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கும்மாச்சி said...

நல்லாத்தான் யோசிக்கிராய்ங்கப்பு.

ச.பிரேம்குமார் said...

உங்க மாணவர்கள் எல்லாமே குடுத்துவச்சவுங்கன்னு சொல்லுங்க :)

ஹேமா said...

கார்த்திக்,உட்கார்ந்து யோசிச்சிருந்தாலும் உருப்படியான விசயங்கள்.

கலையரசன் said...

நீங்க உட்கார்ந்து யோசிச்சி பதிவை போட்டால்...
நாங்க பின்னாடி படுத்துகிட்டே பின்னூட்டம் போடுவோம்முல்ல..

கதம்ப தகவல்கள் அருமைய்ணே!

சொல்லரசன் said...

நல்லதொரு பகிர்வு.

pappu said...

இந்த ஜோக் 1970s ஆ.வி.ல படிச்சிருக்கேன். இந்த ஜோக் பல காலமா புழக்கத்துல இருந்திருக்கு!

தருமி said...

//.......இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாண்டியா?//

"வாத்தியார் புத்தி".

அ.மு.செய்யது said...

நானும் மைக்கேல் ஷீமேக்கரின் தீவிர ரசிகன்.ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அடுத்த கிராண்ட் பிரீயை.

ஃபிலிபி மாஸா விபத்து, ஆர்யடன் சேனா போல ஆகிவிடுமோ என்று பயந்தேன்.நல்ல வேளை.

பீர் | Peer said...

நல்ல யோசிப்பு, இனி அடிக்கடி உட்காரவும்.

பிரியமுடன்.........வசந்த் said...

நல்ல தொகுப்புகள் நண்பா....

வால்பையன் said...

ஈரோடு வாங்க தல!

ஸ்ரீ said...

//முன்னால் உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் //
எதுக்கு முன்னால?

jackiesekar said...

thank you sir ///we miss you///இந்த இரண்டு வார்த்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....
நல்ல நினைவுகள்