மதுரையில் இந்த மாத இறுதியில் புத்தகத் திருவிழா நடக்க இருக்கிறது. இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருவது மனதுக்கு வருத்தம் தரும் விஷயமாக இருக்கிற சூழலில், இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது என்பது மிகவும் நல்ல விஷயம். என்னுடைய மாணவர்களுக்கு நான் அடிக்கடி சொல்வது, புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான். மதுரையில் புத்தகத் திருவிழா நடைபெறுவது இது நான்காவது முறை. களை கட்டும் என நம்புகிறேன். பதிவுலக நண்பர்களும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
இது பற்றிய நண்பர் ஸ்ரீதரின் இடுகை இங்கே..
***************
ஆதிகாலம் முதலாய் வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றாக இயைந்து வாழ்ந்து வருவது பழங்குடி இன மக்களே. இன்றைய நாகரீகத்தின் முன்னோடிகளாக பல விஷயங்களில் இருந்து வரும் இம்மக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், சரித்தரத்தில் மிக முக்கியமாக பதியப்பட வேண்டியவை. இந்தத் துறையில் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கி வருபவர் பேரா.காந்திராஜன். மதுரை புத்தகத் திருவிழாவில் "நான்மாடக் கூடல்" என்னும் அரங்கில் இவருடைய ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நண்பர்கள் இந்த முயற்சியை பெருமளவில் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இது பற்றிய நண்பர், கவிஞர் நரனின் இடுகை இங்கே..
***************
சிங்கை பதிவர் செந்தில்நாதனுக்கு உதவிய, உதவி வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வெறும் வாய்ப்பேச்சோடு நின்று விடாமல் நம்மால் இயலும் என்பதை பதிவுலக நண்பர்கள் சாதித்துக் காட்டி இருக்கிறோம். அவருடைய அறுவை சிகிச்சைக்கான நாள் முடிவு செய்யப்பட்டு விட்டது. வரும் வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு தொடங்குகிறது. அவர் நல்ல முறையில் குணமாகி வீடு திரும்ப அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.
இது தொடர்பான நண்பர் ராஜாவின் இடுகை இங்கே..
***************
பதிவுலக நண்பர் தேவன்மாயம் - காரைக்குடியில் மருத்துவராகப் பணிபுரிகிறார். பன்றிக் காய்ச்சல் பரவிய போது பல பயனுள்ள இடுகைகளை எழுதி வந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது அவருடைய பேட்டி குமுதம் ரிப்போர்டரில் வந்து இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து பதிவுலகை கவனித்து வருகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. அண்ணன் தேவன்மாயத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இதுபற்றி அவரின் இடுகை இங்கே..
***************
சிங்கை பதிவர்கள் எல்லோரும் இனைந்து நடத்தும் மணற்கேணி போட்டி பற்றி அறிந்து இருப்பீர்கள். மூன்று வகைப் போட்டிகள். ஒவ்வொன்றிலும் தனித்தனிக் கட்டுரைத் தலைப்புகள். இது பற்றி என்னுடைய மாணவர்களிடம் சொல்லி இருந்தேன். இப்போது இரண்டு பேர் இதற்காக ஆர்வமாக கட்டுரை எழுதி வருகிறார்கள். நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி போட்டியின் முடிவு தேதி ஆகஸ்ட் 15-லிருந்து பின்னொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது நம் திறமையை வெளிக்காட்ட ஒரு அருமையான வாய்ப்பு. பதிவுலக நண்பர்கள் இதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பான விவரங்கள் அறிய இங்கே க்ளிக்குங்கள்..
***************
கடந்த சனிக்கிழமை அன்று மாணவர்களோடு கோவைக்கு இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு போயிருந்தேன். மதியம் ஒன்று முதல் மூன்று மணி வரை காந்திபுரத்தில் இருப்பதாக முடிவானது. நம்ம சுழிதான் சும்மா இருக்காதே.. கோவையில் எனக்குத் தெரிந்த ஒரே பதிவுலக நண்பரான இரா.சிவக்குமரனுக்கு போன் போட்டேன். ஆனால் அவரோ பனி நிமித்தமாக சேலம் சென்று இருந்தார். என்னை வடகரை வேலன் அண்ணாச்சிக்கு போன் பண்ண சொல்லி நம்பர் தந்தார்.
எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.. என்னை அவருக்குத் தெரியாதே என்றேன். அதெல்லாம் தெரியும், நீங்கள் அழைத்துப் பேசுங்கள் என்றார். கூப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அண்ணாச்சி வந்து சேர்ந்தார். சற்று நேரத்தில் செல்வேந்திரனும் வந்து சேர்ந்தார். அன்றைய மதிய உணவு நேரம் அவர்களோடு கழிந்தது. கொஞ்ச நேரம்தான் என்பதால் அதிகமாக பேச முடியவில்லை. நன்றி கூறி விடைபெற்றேன். அன்போடு கவனித்துக் கொண்ட அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
இதுபற்றிய தகவல்களுக்கு.. சாரி.. பழக்க தோஷம்.. அந்த இடுகையத்தான் நீங்க படிச்சுக்கிட்டு இருக்கீங்க..
ரைட்டு.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
21 comments:
I don't think reading habit reduced.
Now u see lot of frustrated with TV and coming back to the books.
நான் மதுரை வரும் திட்டம் உண்டு.பார்ப்போம்
Dear Pandian,
Good info , i didt know about the book fair. i am from tirunelveli pls give the dates. we will meet at madurai.
மதுரைக்கு வருகிறோம்...
பேச்சாளர்கள் பட்டியல் இருந்தால் அனுப்புங்கள் கார்த்திகை பாண்டியன்
மதுரையில் மீட்டிங் எப்போன்னு சொல்லவேயில்ல!
மதுரை வருகிறேன்.. உங்கள் பாராட்டுக்கு நன்றி!!! கார்த்தி!!!
மிக சுவையாக அழகாக நல்ல பதிவுகளுக்கு அறிமுகம் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
வடகரை வேலன் அண்ணாச்சிக்கு பதிவுலகத்துல தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க. எல்லா பதிவுகளையும் படிக்கிறவரு. அதிகம் படிக்கிறவருங்கிறதால நிறையப் பதிவர்களத் தெரியும்.
சிங்கை பதிவர் செந்தில் நாதன் அண்ணண் மற்றும் மணற்கேணி 2009 போட்டி குறித்தும் எழுதியமைக்கு எங்கள் அனைவரின் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
unga speciality missing karthigai ...
matter kidaikka villaiyaa?????
சுவைத்தேன்.
அன்பின் mayvee,
இது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சில விஷயங்களை பதிவுலக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக எழுதியது.. நீங்க கொஞ்சம் மசாலா கம்மின்னு பீல் பண்ணி இருக்கீங்க... ரைட்டு... விடுங்க..அடுத்த முறை ஜமாய்ச்சுடலாம்..
மதுரை டூ கோவை.. ஒரு அழகான கோர்வை...
நல்ல பகிர்வு தோழா..
வாழ்த்துகள் தேவன் சார்
நிறைய படத்துக்கு ட்ரெய்லர் பார்த்த மாதிரி இருக்கு. நிறைய தகவல்கள். :))
என்னை பொறுத்த மட்டில் தொலைக்காட்சி,திரைப்படம் இவைகளை விட நல்ல தமிழ் இலக்கியங்களை சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம்,நம்மிடையே கிரியேட்டிவிட்டியை உருவாக்கும்.
ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும் போது,காட்சிகள் விரிவடைவதை போல,நமக்குள் இருக்கும் சிந்தனை
சிறகடிக்க ஆரம்பிக்கிறது.
அதற்கு புத்தக சந்தைகள் அவசியப்படுகிறது.
நல்ல சுவரசியமாக எழுதியுள்ளீர்கள் தலைவரே!... செந்தில் நாதன் மற்றும் மணற்கேணி 2009 குறித்து எழுதியமைக்கு சிங்கை தமிழ் பதிவர் குழுமம் சார்பாக நன்றிபா
//K.S.Muthubalakrishnan said...
Dear Pandian,Good info , i didt know about the book fair. i am from tirunelveli pls give the dates. we will meet at madurai.//
நண்பா.. august 29 to september 08.. please do inform when u come to mdu.. would love to meet you..;-)))
எனது நண்பர், மதுரைக்கு அழைத்திருந்தார். புத்தகத் திருவிழாவிற்கு... கண்டிப்பாக என்று சொல்லி இழுத்தேன்..... இழுத்தேன்.... ம்ம்ஹூம்... ஒரே பிஸிப்பா... மதுரைக்கு அடுத்த வருஷம் பார்ப்போம்.... (சொல்ல முடியாது, முடிந்தால் வருவேன். அது இன்னொருவரின் சூழ்நிலையைப் பொறுத்தது..)
See U some day.
Aadav///
நிறைய தகவல்கள் கொடுக்கிறீங்களே!
//See U some day.
Aadav///
வரும்பொழுது கண்டிப்பாக சொல்லுங்கள் ஆதவா..
நானும் "மதுரக்காரந்தான்",என்னையும் ஆட்டையில சேர்த்துக்கங்க.
//பதிவுலக நண்பர்களும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.//
ஆசைதான், பார்க்கலாம்
Post a Comment