கடந்த வார இறுதியில் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவுக்கு நண்பர் ஸ்ரீதருடன் போயிருந்தேன். சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு நாங்கள் போய் சேர்ந்தபோதே ரூம் எல்லாம் ரெடி பண்ணி வைத்து இருந்தார் நம்ம வால்பையன். ஈரோட்டை சேர்ந்த பதிவுலக நண்பர்களும் வந்து சேர்ந்து கொள்ள களைகட்டியது. கதிர் - ஈரோடு என்னும் பெயரில் எழுதி வரும் நண்பர் கதிர், பாலாஜி, வெகு நாட்களாக பதிவுகளைப் படித்து வரும் அன்பர் ஜாபர் ஆகியோர் வந்து இருந்தார்கள். சமுதாயம், பதிவுலகம் எனப் பல விவாதங்கள் நடைபெற்றன. இரவு ஒரு மணி வரை நானும் வாலும் பேசிக் கொண்டிருந்தோம். தன்னைப் பற்றிய தனிப்பட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய நல்ல மனதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை. வாலின் புண்ணியத்தில் எழுத்தாளர் வாமு கோமுவின் அறிமுகம் கிடைத்தது. நான் இதற்கு முன்னர் அவருடைய ஒரே ஒரு சிறுகதையை மட்டுமே வாசித்து இருக்கிறேன். எளிமையாகப் பழகும் மனிதர். எந்த பந்தாவும் இல்லை. புத்தகத் திருவிழாவுக்கு என்னுடன் வந்து புத்தகங்களை சகாயமாக வாங்கித் தந்தார். நான் வாங்கிய புத்தகங்களின் விவரம் இங்கே..
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
ஆழிசூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ்
ஜெ.ஜெ சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
உறுமீன்கள் அடர்ந்த நதி - இசை
கடவுளுடன் பிரார்த்தித்தல் - மனுஷ்யபுத்திரன்
கள்ளி - வாமு கோமு
மண்பூதம் - வாமு கோமு
ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது - முகுந்த் நாகராஜன்
இத்தனை வாங்கிட்டு நம்ம தலைவர் இல்லாமலா? அதனால..
எஸ். ராமகிருஷ்ணனின் "காற்றில் யாரோ நடக்கிறார்கள்.."
நடுவில் என்னுடைய பழைய மாணவர்களும் வந்து சந்தித்தார்கள். இரண்டு நாட்களை பயனுள்ளதாக கழிக்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.
***************
உரையாடல் போட்டியின் முடிவுகள் வெளிவந்து விட்டன. வெற்றி பெற்ற இருபது நண்பர்களுக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற மக்களில் அகநாழிகை பொன்.வாசுதேவனைத் தவிர மற்றவர்களின் பதிவை நான் படித்தது இல்லை. இனிமேல்தான் படிக்க வேண்டும். பல சிரமங்களுக்கு இடையே இதனை சிறப்பாக நடத்திய நண்பர்கள் பைத்தியக்காரனுக்கும், ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் நன்றி. அடுத்ததாக சிறுகதை எழுதுவதற்கான ஒரு பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நானும் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். சீக்கிரமா தேதிகளை சொல்லுங்கப்பா..!!!
***************
சமீபத்தில் அழகர்மலை என்னும் அடாசுப்படம் ஒன்று வந்து இருக்கிறது. இசை - இளையராஜா. படத்தில் ஒரு பாடலைப் பாடி நடித்தும் இருக்கிறார். அதன் வரிகள் இப்படிப் போகின்றன.."உலகம் இப்போ எங்கோ போகுது.. எனக்கிந்த அன்னை பூமி போதும்.. இங்கே பிறந்தவரும் எங்கோ போகிறார்.. எனக்கிந்த அன்னை பூமி போதும்.." பாட்டைக் கேட்கும் யாருமே இந்தப் பாடல் யாரைப் பற்றியது என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம். ஏற்கனவே ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தபோது ராஜா வெளிப்படையாக பாராட்டவில்லை என்று குற்றம் சொன்னார்கள். இந்த சூழ்நிலையில் இந்தப் பாட்டு இசைஞானிக்கு தேவைதானா?
***************
இது கவிதை இல்லை.. ஒரு கதறல்..(சிட்டிசன் அஜித் மாதிரி படிங்கப்பா..)
சாலைகளில், கோவில்களில்,
பூங்காக்களில், திரை அரங்கங்களில்..
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்து இருப்பவர்களாய்..
கைகோர்த்து சுற்றித் திரியும்
காதல் உள்ளங்களை
பார்க்கும் போதெல்லாம்
இறைஞ்சுகிறது என் ஆழ்மனது..
"சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.."
***************
வழக்கம் போல.. முடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜோக்ஸ்..
-->உங்களுக்கு தண்ணியடிக்கிற பழக்கம் இருக்கா? அதை குறைக்கணும்னு நினைக்கிறீங்களா? ரொம்ப ஈசி.. கல்யாணத்துக்கு முன்னாடி எப்பவெல்லாம் சோகமா இருக்கீங்களோ, அப்ப மட்டும் குடிங்க. கல்யாணத்துக்கு அப்புறம் எப்பவெல்லாம் சந்தோஷமா இருக்கீங்களோ, அப்ப குடிங்க. இதை பாலோ பண்ணினா நீங்க சீக்கிரமே குடிய விட்டுடலாம்.
-->ஆள் 1: என்னய்யா நாலு கால் பேசிட்டு ஒரு காலுக்கு காசு தரீங்க?
ஆள் 2: நாலு கால் ஒண்ணுதான்யா..
ஆள் 1: ?!!!
-->சல சலன்னு பேசிக்கிட்டே இருக்கிற பொண்ணை அமைதியாக்க என்ன பண்ணலாம்? ஒரு முட்டாள் அவக்கிட்ட நேரடியாப் போய் வாய மூடுன்னு சொல்லுவான். அதே ஒரு அறிவாளின்னா, உங்களோட உதடுகள் மூடி இருக்கும்போதுதான் நீங்க இன்னும் அழகா இருக்கீங்கன்னு சொல்வான்.
போதும்.. இத்தோட நிறுத்திக்குவோம்.. :-)))
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
32 comments:
// ஒரு அறிவாளின்னா, உங்களோட உதடுகள் மூடி இருக்கும்போதுதான் நீங்க இன்னும் அழகா இருக்கீங்கன்னு சொல்வான்.//
கிரேட்...எப்படி கார்த்தி இப்படியெல்லாம்?
கார்த்திகை ஸார்..
நான் முணுமுணுத்துக்கிட்டிருக்கிற கவிதையை நீங்க எப்படி போடலாம்..?
ஒழுங்கா ராயல்டி கொடுங்க.. இல்லேன்னா மானநஷ்ட கேஸ் போடுவேன்..!
மிகவும் அருமை
கவிதையோட மீதிப்பாதி எங்க..?
அப்பறம் உண்மைத்தமிழன் முனும்னுத்தால ஒரு நாலு பக்கத்துக்காவது இருக்க வேணாம்.
என்னாது, மறுபடியும் வால்பையனும், ஸ்ரீயுமா...?
மீ த எஸ்கேப்பு..!
:)
நல்ல கதம்ப பதிவு..
//நானும் வாலும் பேசிக் கொண்டிருந்தோம். தன்னைப் பற்றிய தனிப்பட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய நல்ல மனதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.//
நல்லமனசு, கெட்டமனசு என்றெல்லாம் தனியாக எதுவும் கிடையாது நண்பரே!
எல்லோரும் நல்லவர்கள் தான் இந்த மண்ணில்! சந்தர்ப்பமும்,சூழ்நிலையும் அவர்களை சிற்சில தவறுகள் செய்ய வைக்கிறது!
உரையாடல் போட்டில் வெற்றி பெற்ற இரா.வசந்தகுமாரை சந்தித்தோம்! ஆனால் உரையாடத்தான் நேரமில்லை!
ok.. righttu...
கார்த்தி,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நீங்கள் வாங்கியிருக்கும் வாமு கோமுவின் கள்ளி தவிர மற்றெல்லாம் என்னிடம் உள்ளது. வாசித்தும் இருக்கிறேன்.
வாங்கிய புத்தகங்கள் அருமையான தேர்வு. தேடலின் ஊடாக வாசிப்பின் அடுத்த தளத்திற்கு நகரும் உங்கள் ஆர்வம் நல்ல விஷயம்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//இந்த சூழ்நிலையில் இந்தப் பாட்டு இசைஞானிக்கு தேவைதானா?
//
நீங்க சொல்றது சரிதான்...
//"சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.." //
//. ஒரு கதறல்..(சிட்டிசன் அஜித் மாதிரி படிங்கப்பா..)//
ஏன் கார்த்தி, காதல் கோட்டை அஜித் மாதிரி wait பண்றதா நினைச்சுக்கோங்க :)
கார்த்திகை பாண்டியன்..
ஈரோட்டில் உங்களோடு கழிந்த அந்த சில மணி நேரம் அற்புதமான ஒன்று
//இசைஞானிக்கு தேவைதானா? //
அந்த நடிப்பும், உதட்டோடு ஒட்டாத பாட்டும்
நன்றாக இல்லை
//சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.." //
அப்பா, அம்மாட்ட சொல்லி ஒரு பொண்ணப் பார்க்க சொல்லுங்க
நல்ல பல்சுவைப் பதிவு
நல்லா யோசித்து நல்லாவே எழுதியிருக்கிங்க நண்பா,,,,.
முதல் ஜோக்ஸ் நல்லா இருக்கு
நல்ல பதிவுங்ணா!!
//"சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.."
நீங்க எனக்கு கிளாஸ் எடுக்கலையேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கு. :))
அருமையாக தேர்ந்தெடுக்கப் பட்ட புத்தகங்கள். வாசிப்பனுபவம் நன்றாக இருக்கும்.
சீக்கிரம் பொண்ணு பார்க்கச் சொல்லுங்கப்பு... விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள்.
// ஒரு அறிவாளின்னா, உங்களோட உதடுகள் மூடி இருக்கும்போதுதான் நீங்க இன்னும் அழகா இருக்கீங்கன்னு சொல்வான்.//
நீங்க அறிவாளி என்று எனக்குத் தெரியும்.
அருமை
வாத்தியாரே கதறல் நல்லா இருந்துச்சு
கலக்கல்
நல்ல பதிவர் கூட்டம் ஒன்று இருக்கிறது பொலும் .. நல்ல மிக்சர் பதிவு..
//சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.."//
நண்பா ரொம்பத்தான் அவசரப்படுறீயே?
நல்ல வாசிப்புத்தளத்திற்குள் செல்கிறீர்கள்!! உங்கள் அடுத்த பரிமாணம் கவிதைகளா?
இல்லை கதைகளா?
பார்ப்போம்!!
நிறைய புத்தகம் வாங்கிருக்கீங்க.....
ஹேப்பி ரீடிங் டூ யூ...
சினிமா விமர்சனங்களோடு, இனி நிறைய புத்தக விமர்சனமும் எழுதுங்கள் கார்த்திக்...
//..சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.." ..//
ஒரே பீலிங்..
நீங்கள் அடுத்த முறை ஈரோடு வரும்போது கண்டிப்பாக சந்திக்கிறேன்..
கார்த்திக் அசத்துங்க... அடுத்த தளத்திற்கு மீண்டும் வாழ்த்துக்கள்...
//Blogger டக்ளஸ்... said...
... என்னாது, மறுபடியும் வால்பையனும், ஸ்ரீயுமா...?
மீ த எஸ்கேப்பு..!:)//
மவனே உனக்கு இருக்குடீ...
எல்லா வேலையும் பண்ணிபுட்டு ஒண்ணுந்தெரியாத மாதிரி புள்ளி வச்சுட்டு வரீயா? அங்க ரத்தக்களரியாகிக்கெடக்கு..
பகிர்வு நன்றி
//இரவு ஒரு மணி வரை நானும் வாலும் பேசிக் கொண்டிருந்தோம்.//
வெறும் பேச்சுமட்டும்தானா?
//"சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.."//
காதலிக்க கற்றுகொள்ளவும் யோசனைகளை அன்புமதியிடம் பெற்றுகொள்ளவும்,தேவதையை தேடி போகவும்
//ஒரு முட்டாள் அவக்கிட்ட நேரடியாப் போய் வாய மூடுன்னு சொல்லுவான். அதே ஒரு அறிவாளின்னா, உங்களோட உதடுகள் மூடி இருக்கும்போதுதான் நீங்க இன்னும் அழகா இருக்கீங்கன்னு சொல்வான்// ? புத்திசாலி ன்னா, முள்ளை முள்ளால் எடுக்கிற மாதிரி , உதடுகளை , உதடுகளால் மூடி விடுவாராம் . நம்ம எந்த ரகம் னு, சொல்லலேயே
\\\சொல்லரசன் said...
//"சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.."//
காதலிக்க கற்றுகொள்ளவும் யோசனைகளை அன்புமதியிடம் பெற்றுகொள்ளவும்,தேவதையை தேடி போகவும்\\\\
அனுமதி இலவசம் அண்ணா..
கண்டிப்பாக வரவும்..
:))
Each part was interesting boss...
Then... am very sorry for not reaching you when I was there...
Some unexpected sad things happened during my Madurai visit this time thats why couldnt meet any of my friends... Hope very soon I'll quit this job and be back to the pavilion... so will meet you soon friend.....
Post a Comment