August 3, 2009

உயிரோடைக்கு ஓர் எதிர்வினை..!!!

சில தினங்களுக்கு முன்பு உயிரோடை வலைத்தளத்தில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்துவதாக அறிவித்து இருந்தார்கள். "தூறல் கவிதை" ச.முத்துவேலின் கவிதையை கருவாகக் கொண்டு கதை எழுத வேண்டும் என்று சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 32 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். முடிவுகள் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டு உள்ளன. வெற்றி பெற்றவர்களைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
போன வாரம் பதிவுல நண்பர் தண்டோராவை சந்தித்த போதுதான் முடிவுகள் வெளியாகி விட்டதை சொன்னார். பணியின் காரணமாக என்னால் அவற்றை இரண்டு நாட்களுக்கு முன்புதான் பார்க்க முடிந்தது. சரி.. இதில் பிரச்சினை எங்கே இருந்து வந்தது?
போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் இடுகையில் உயிரோடை பயன்படுத்தி இருக்கும் சில வார்த்தைகள் மனதைக் காயப்படுத்துவதாக உள்ளன. போட்டிக்கு வந்த கதைகளைப் பற்றி சொல்லும்போது அவர் உதிர்த்து இருக்கும் தத்துவ முத்துக்களை கவனியுங்கள்.
//சில கதைகள் தவிர இந்த கருவை ஒட்டியே எல்லோரும் கதை எழுதியிருந்தார்கள். பலரது கதைகளில் இதுதான் சாக்கென்று பாலியல் தொழிலாளியை அதீதமாக வர்ணித்தும், பிரிந்துபோன மனைவியை (என்ன காரணம் என தாங்களாகவே யூகித்துக் கொண்டு) கொச்சைப்படுத்தியும், கணவன் கதாபாத்திரத்தின் ஆண்மையை ஏளனம் செய்தும் அவரவர் பார்வையில் எழுதியிருந்தார்கள். பெரும்பான்மையினர் கதையில் விரசமே அதிகமாக காண முடிந்தது.//
நீங்கள் கொடுத்த கருவை ஒட்டித்தான் எல்லோரும் கதைகள் எழுதினோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கலாம். அதை நீங்கள் பொதுவில் விமர்சிப்பது அவசியம்தானா? இப்படித்தான் கதைகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? கதைகளில் தரம் இல்லை என்று சொல்வதை விட இவர்களால் இதுதான் எழுத முடியும், எல்லோரும் வக்கிரம் படைத்தவர்கள் என்று எள்ளி நகையாடும் பாங்குதான் இந்த வார்த்தைகளில் தொனிக்கிறது. உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை உயிரோடை. உங்களின் கவிதைகளை பெரிதும் ரசித்து இருக்கிறேன். ஆனால் தங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை நான் ரசிக்க வில்லை.
உயிரோடையின் இடுகையில் நண்பர் கே.ரவிஷங்கரின் பின்னூட்டம் இது..
////வெற்றிப்பெற்ற போட்டியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்!நடுவர்கள் முடிவுதான் இறுதி.அதில் எந்த மாற்றமும் இல்லை.என் கருத்துக்கள் சில:-கிரிதரன் மற்றும் ரெஜொவாசன் கதையை ரசித்தேன்.
//பலரது கதைகளில் இதுதான் சாக்கென்று பாலியல் தொழிலாளியை அதீதமாக வர்ணித்தும், பிரிந்துபோன மனைவியை (என்ன காரணம் என தாங்களாகவே யூகித்துக் கொண்டு) கொச்சைப்படுத்தியும், கணவன் கதாபாத்திரத்தின் ஆண்மையை ஏளனம் செய்தும் அவரவர் பார்வையில் எழுதியிருந்தார்கள். பெரும்பான்மையினர் கதையில் விரசமே அதிகமாக காண முடிந்தது. //
உங்கள் சொந்த கருத்து இங்கு ஏன் வருகிறது? அந்த நாலு நடுவரின் கருத்தா? இல்லாவிட்டால் நீஙகளும் ஒரு் நடுவரா? எங்கோ நெருடுகிறதே?
//தன் மனைவியின் புடவை, நகைகளை அணிவித்துப் பார்க்கிறான். அப்பெண்ணை அவனது நண்பனிடமே ”அனுப்பி விடுகிறான்.” //
க்விதையில் ”விருந்தாக்குகிறான்”அதுவும் தன் மனைவியின் ஒப்பனையோடு. இது விரசமில்லையா? காவியமா?////
இதற்கு பதில் கூறும் சாக்கில் நடுவர்களையும் வம்புக்கு இழுத்து இருக்கிறார் உயிரோடை.
//போட்டிக் க‌தைக‌ளை அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரிக‌ளாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌வ‌ர்க‌ள் ந‌ட்புக்காக‌ என் ப‌ணியை ப‌கிர்ந்து கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே. க‌தைக‌ளைப் ப‌ற்றி எழுதி இருந்த‌ விம‌ர்ச‌ன‌ம் ந‌டுவ‌ர்க‌ளாலும் உண‌ர‌ப்ப‌ட்ட‌ ஒரு க‌ருத்தாகும்.//
எனக்குத் தெரிந்து இந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்த நண்பர்கள் நர்சிம், பொன்.வாசுதேவன், யாத்ரா, முத்துவேல் ஆகியோர் இப்படி சொல்லக் கூடியவர்கள் அல்ல. தான் சொன்ன வார்த்தைகளை மெய்யாக்க இவர்களையும் துணைக்கு கூப்பிடுவது எந்த வகையில் நியாயம்?
இதை நண்பர்களிடம் சொன்னபொழுது நீ இதை எழுதினால் பரிசு கிடைக்காத கோபத்தில் எழுதுவதாக சொல்வார்கள் என்றார்கள். பரவாயில்லை. கடந்த எட்டு மாதங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன். இதுவரை எந்தப் பிரச்சினைக்கும் போனதில்லை. கண்டிப்பாக நான் சொல்ல வருவதில் இருக்கும் நியாயத்தை நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையில் எழுதுறேன்.
எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு.. "விருந்துக்கு கூப்பிட்டு நல்லா கவனிச்சு ஓரமா கொஞ்சம் நரகலையும் வச்ச மாதிரி.." போட்டி ஒன்றை அறிவித்து பதிவுலக மக்களை ஊக்குவித்து, எல்லாம் செய்து விட்டு கடைசியில் உங்கள் வார்த்தைகளாலேயே எங்கள் நெஞ்சை குத்திக் கிழித்து விட்டீர்கள் உயிரோடை. இந்த எதிர்வினை கூட உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அல்ல.. உங்கள் தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.. நான் ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

28 comments:

KarthigaVasudevan said...

நானும் உயிரோடைக்கு போட்டிக்கு சிறுகதை அனுப்பி இருந்தேன் ,என் சிறுகதையில் எங்கே என்ன தவறு என்று புரியவில்லை!?வாசித்தவர்கள் பரிசுக்குரிய கதை என்று தான் சொன்னார்கள் ...ஆனாலும் தேர்வாகவில்லை. சக பதிவர்கள் நேரமிருக்கையில் வாசித்து விட்டு சொல்லலாம் திருத்தங்களை.

Raju said...

வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.

லோகு said...

வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.. சொல்லுங்க இதை கண்டுச்சு, எங்க பொது செயலாளர் சொல்லரசன் அவர்கள் தலைமையில இங்க ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், இல்லைன்னா மனித சங்கிலி நடத்திடுறோம்..

நையாண்டி நைனா said...

Cool Nanba. Cool.

குடந்தை அன்புமணி said...

கார்த்தி... விட்டுடுங்க... எழுதறதா இருந்தா நானும் அப்பவே எழுதியிருப்பேன். அவங்க நடத்திய போட்டியால எனக்கு ஒரு கதை கிடைச்சதுங்கிற திருப்தியோட அதை மறந்துட்டேன்.

புல்லட் said...

உப்பிடியான பிரச்சனை வருமெண்டு தெரிஞ்சுதான் நாம கன்னிப் போட்டிளில் பங்கேற்கிறதில்ல.. முதலில ஒண்ணு ரெண்டு போட்டிய நடத்தி அவரகள் முடிவுகளை அறிவக்கும் போது ஏதாவது கோக்கு மாக்கு கொத்தல் பிடுங்கல் இருக்கான்னு பாத்து , இல்லை அவங்க நியாயமாத்தான் பண்றாங்க... போட்டி வைக்கிற தகுதி இரக்குன்னு தெரிஞ்சாப்புறம் நம்ம திறமைய அவங்களுக்கு காட்டுறதில அர்த்தம் இருக்கு... இல்லாட்டி உந்த மாதிரித்தான் ரணத்தில முடியும்...
உங்களின் ஆதங்கம் புரிகிறது ...

இனி வரும் காலங்களில் உங்கள் திறமையான எழுத்துக்களை பாத்திரமறிந்து போடுங்கள் கேபி...

வருத்தங்கள்

மணிஜி said...

கார்த்திக்..நேற்று வாசு,முத்துவேலுடன் சந்திப்பு..ஸ்ரீயும் உடன் இருந்தார்..இதை பற்றிய கடுமையான விவாதம்..ஆனால் அவர்களுக்கும் இதில் உடன்பாடில்லை(முடிவுகளில்)இனி நாம் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும்..

Anbu said...

வருத்தத்திற்குரிய விஷயம் அண்ணா..

சிநேகிதன் அக்பர் said...

நானும் போட்டியில் பங்கேற்று இருந்தேன். நீங்கள் குறிப்பிட விசயங்கள்தான் என் மனதையும் புண்படுத்தியது. எழுதுற எல்லோரும் தன் கதை சிறந்தது என்று தான் நினைப்பார்கள். ஆனால் பரிசுக்கதையை படித்தவுடன் இந்த கதை நாம் எழுதியதைவிட சிறப்பா இருக்கு பரிசு கொடுத்தது சரிதாங்கிற நினைப்பை உண்டாக்க வேண்டியது நடுவர்களின் கடமை. பரிசு பெற்ற கதைகளை படித்த போது எனக்கு அந்த நினைப்பு வரவில்லை.

மற்றபடி உயிரோடையின் முயற்சி பாராட்டுக்குரியது. இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் ஏற்படாமல் பார்த்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

சுந்தர் said...

இதுக்குதான் நாங்க எழுதுறது இல்லை, என்ன ஸ்ரீ ! ஓகே வா !

நர்சிம் said...

நான் ஆரம்பத்திலேயே இதில் இருந்து விலகிக்கொண்டேன்..மிக அதிக பணிநிமித்தம் நண்பா.அதை அவர் குறிப்பிட்டிருந்தார் என்றே நினைக்கிறேன்.இல்லாத பட்சத்தில் இங்கே குறிப்பிடுகிறேன்.

அகநாழிகை said...

கார்த்தி,
உயிரோடை போட்டி முடிவு குறித்தும், நீங்கள் குறிப்பிட்ட வரிகள் குறித்தும் எனக்கும் மாற்றுக் கருத்து இருந்தது. இதனை உயிரோடைக்கு மின்னஞ்சலில் தெரிவித்தும் இருக்கிறேன். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. எப்படி நமக்கு ஒரு கருத்து ஒவ்வாததாக ஆகிறதோ அதே போல, அவருக்கும் இருக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
000
உயிரோடை போட்டியை பொறுத்தவரை முத்துவேல், நர்சிம், நான், யாத்ரா ஆகிய நால்வரும் நடுவர்கள் அல்ல. உயிரோடை எங்களை கேட்டுக் கொண்டபோது எங்கள் இயலாமையைத் தெரிவித்து, ஒருங்கிணைப்பாளர்கள் என்ற அளவிலே (நர்சிம் தவிர்த்து) எங்கள் பங்கேற்பு இருந்தது.
000
//எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு.. "விருந்துக்கு கூப்பிட்டு நல்லா கவனிச்சு ஓரமா கொஞ்சம் நரகலையும் வச்ச மாதிரி.." போட்டி ஒன்றை அறிவித்து பதிவுலக மக்களை ஊக்குவித்து, எல்லாம் செய்து விட்டு கடைசியில் உங்கள் வார்த்தைகளாலேயே எங்கள் நெஞ்சை குத்திக் கிழித்து விட்டீர்கள் உயிரோடை. இந்த எதிர்வினை கூட உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அல்ல.. உங்கள் தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.. நான் ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள்..!!!//

இதை நீங்கள் எழுதியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து.
தனி நபர் ஒருவரின் முயற்சியை இதைவிட கொச்சைப்படுத்தி எழுதிவிட முடியாது.
000
ஒருவர் தன் கருத்துக்களை வெளியிட எந்த அளவிற்கு சுதந்திரம் இருக்கிறதோ அதே அளவு சுதந்திரம் எதிராளிக்கும் இருக்கிறது. இதை நீங்கள் தனி மடலில் தெரிவித்து பதிலில்லை என்றால் உங்கள் கருத்தை பதிவாக வெளியிட்டிருக்கலாம்.
பெரிய வணிகப் பத்திரிகை நிறுவனங்களிடம் நம்மால் இது போல கேள்வி கேட்க முடியுமா, கேட்டிருக்கிறோமா என்று யோசித்துப் பாருங்கள்.
000
சரியான புரிதலை தங்கள் பின்னூட்டமாக பதிவிட்ட தண்டாரோ மற்றும் நர்சிம்மிற்கு நன்றி.
000

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நிலாரசிகன் said...

//உயிரோடை போட்டியை பொறுத்தவரை முத்துவேல், நர்சிம், நான், யாத்ரா ஆகிய நால்வரும் நடுவர்கள் அல்ல. உயிரோடை எங்களை கேட்டுக் கொண்டபோது எங்கள் இயலாமையைத் தெரிவித்து, ஒருங்கிணைப்பாளர்கள் என்ற அளவிலே (நர்சிம் தவிர்த்து) எங்கள் பங்கேற்பு இருந்தது.//

இதை லாவண்யா சொல்லி இருக்கலாம். நடுவர்கள் யாரென்ற குழப்பம் எல்லோருக்கும் இருந்தது.
ஆனாலும் இது ஒரு மிகச்சிறந்த முயற்சி என்பதால்(பலரை எழுத தூண்டியதால்)
Take it easy dude :)

உயிரோடை said...

//போட்டிக்கு வந்த கதைகளைப் பற்றி சொல்லும்போது அவர் உதிர்த்து இருக்கும் தத்துவ முத்துக்களை கவனியுங்கள்//

ந‌ண்ப‌ரே... இந்த‌ வார்த்தைக‌ளை விட‌வா நான் சொன்ன‌தாக‌ நீங்க‌ள் சுட்டி இருக்கும் வார்த்தைக‌ள் க‌டுமையாக‌ இருந்த‌ன‌.

//அதை நீங்கள் பொதுவில் விமர்சிப்பது அவசியம்தானா? இப்படித்தான் கதைகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்?//

//கதைகளில் தரம் இல்லை என்று சொல்வதை விட இவர்களால் இதுதான் எழுத முடியும், எல்லோரும் வக்கிரம் படைத்தவர்கள் என்று எள்ளி நகையாடும் பாங்குதான் இந்த வார்த்தைகளில் தொனிக்கிறது//

என் நினைவுக்கு எட்டிய‌வ‌ரை நான் யார் பெய‌ரையும் குறிப்பிட்டு இப்படி எழுதியிருக்கிறார்களே என்று சொல்ல‌வோ அல்ல‌து இவ‌ர் இப்ப‌டி எழுத‌லாமா என்றோ குறிப்பிட‌வில்லை. க‌தை ப‌டிக்கும் போது பொதுவாக‌ ஏன் ந‌டுவ‌ர்க‌ளுக்கு தோன்றிய‌ க‌ருத்தைத் தான் நான் வெளியிட்டு இருந்தேன்.

//இதற்கு பதில் கூறும் சாக்கில் நடுவர்களையும் வம்புக்கு இழுத்து இருக்கிறார் உயிரோடை. //

இல்லை ந‌ண்ப‌ரே, கே.ர‌விச‌ங்க‌ர் இது ந‌டுவ‌ர்க‌ளின் க‌ருத்தா உங்க‌ள் ஒருவ‌ரின் க‌ருத்தா என்று கேட்ட‌த‌ற்கு சொன்ன‌ ப‌திலே அது.

//எனக்குத் தெரிந்து இந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்த நண்பர்கள் நர்சிம், பொன்.வாசுதேவன், யாத்ரா, முத்துவேல் ஆகியோர் இப்படி சொல்லக் கூடியவர்கள் அல்ல.//

பதிவுலகிற்கு பரிச்சயமில்லாதவர்களே நடுவர்களாக இருந்தனர். நீங்க‌ சொல்லி இருக்கும் யாருமே ந‌டுவ‌ர்க‌ள் அல்ல‌ர். இது போன்ற‌ உங்கள் எதிர்வினையால் வ‌ருங்காலத்தில் இவ‌ர்க‌ள்கூட‌ என‌க்கு உத‌வ‌ த‌ய‌ங்குவார்க‌ள்.

இனி இது போன்ற‌ போட்டி ந‌ட‌த்துவ‌த‌ற்கு ந‌ல்ல‌ ஊக்க‌ம் அளித்திருக்கின்றீர்க‌ள். என‌து நேர‌ம் ம‌ற்றும் கொஞ்ச‌ம் ப‌ண‌ம் இர‌ண்டும் செல‌வ‌ழித்து இந்த‌ போட்டியை ந‌ட‌த்திய‌த‌ற்கு ந‌ல்ல‌ ப‌ல‌ன் கிட்டியுள்ள‌து. அடுத்து க‌விதைப் போட்டி பெரிய‌ அள‌வில் ந‌ட‌த்த‌ வேண்டுமென்று நினைத்திருந்தேன். இப்போது தேவையா என்றே நினைக்கிறேன்.

இதே க‌விதைக்கு ந‌ல்ல‌ க‌தையும் எழுதி இருக்கின்றார்க‌ள். முக‌ம் சுளிக்கும்ப‌டியான‌ வாச‌க‌ங்க‌ள் சில‌ க‌தைக‌ளில் இருந்த‌ன‌ என்ப‌தை நீங்க‌ ம‌றுக்க‌ இய‌லுமா? இந்த‌ போட்டிக்கு அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் வ‌ந்த‌ போது எத்த‌னையோ நாள் போட்டியை நிறுத்திவிட‌லாம் என்று யோசித்தேன். ஆயினும் பிற‌ர் ப‌டிப்பார்வ‌ம் எழுத்தார்வ‌ம் வ‌ள‌ர‌ ந‌ம்மால் இய‌ன்ற‌து செய்ய‌லாம் என்று நினைத்தே போட்டியை தொட‌ர்ந்தேன்.

//எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு.. "விருந்துக்கு கூப்பிட்டு நல்லா கவனிச்சு ஓரமா கொஞ்சம் நரகலையும் வச்ச மாதிரி.." போட்டி ஒன்றை அறிவித்து பதிவுலக மக்களை ஊக்குவித்து, எல்லாம் செய்து விட்டு கடைசியில் உங்கள் வார்த்தைகளாலேயே எங்கள் நெஞ்சை குத்திக் கிழித்து விட்டீர்கள் உயிரோடை//

மிக்க‌ ந‌ன்று ந‌ண்ப‌ரே. என்னுடைய‌ வார்த்தைக‌ளை எவ்வ‌ள‌வு மென்மையாக‌ உப‌யோகித்திருந்தேன் என்று உங்க‌ள் ப‌திவிலும் ப‌டியுங்க‌ள் தெரியும். இதில் இதில் நெஞ்சைக் குத்தி கிழிக்கும் அள‌விற்கு என்ன‌ இருக்கின்ற‌து என்று என் சின்ன‌ அறிவிற்கு விள‌ங்க‌வில்லை.

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்

ஆ.ஞானசேகரன் said...

ஏதோ தவறுகள் நடந்து இருக்கலாம்.. அதை இந்த அளவிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தோன்றுகின்றது. படைப்பாளிக்கு ஊக்கங்கள் மட்டுமே நல்ல பரிசு என்பது என் எண்ணங்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

// "அகநாழிகை" said...
இதை நீங்கள் எழுதியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து.
தனி நபர் ஒருவரின் முயற்சியை இதைவிட கொச்சைப்படுத்தி எழுதிவிட முடியாது. //

வாசு.. தங்களின் விரிவான விளக்கத்துக்கு நன்றி.. நான் உயிரோடையின் முயற்சியைக் களங்கப்படுத்த முயலவில்லை.. மாறாக அவர் தவறாக பயன்படுத்தி இருந்த வார்த்தைகளை சுட்டிக் காட்டவே விரும்பினேன்.. அவர் தன்னுடைய வார்த்தைகளை பொதுவில் வைத்ததாலேயே நானும் பதிவிட நேர்ந்தது.. எங்கேனும் என்னுடைய வார்த்தைகள் தவறாக இருப்பதாக உணர்ந்தீர்கள் என்றால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//உயிரோடை said...
ந‌ண்ப‌ரே... இந்த‌ வார்த்தைக‌ளை விட‌வா நான் சொன்ன‌தாக‌ நீங்க‌ள் சுட்டி இருக்கும் வார்த்தைக‌ள் க‌டுமையாக‌ இருந்த‌ன‌.//

ஆத்திரத்தில் வந்து விட்ட வார்த்தைகள் ..என் தவறு.. ஒத்துக் கொள்கிறேன்.. ஆனால் இப்போதும் எம் மீது குற்றம் கண்டுபிடிக்க முயலுகிறீர்களே தவிர உங்கள் பதிவில் இருக்கும் தவறை ஒத்துக் கொள்ள மறுப்பது ஏன்?

//பதிவுலகிற்கு பரிச்சயமில்லாதவர்களே நடுவர்களாக இருந்தனர். நீங்க‌ சொல்லி இருக்கும் யாருமே ந‌டுவ‌ர்க‌ள் அல்ல‌ர். இது போன்ற‌ உங்கள் எதிர்வினையால் வ‌ருங்காலத்தில் இவ‌ர்க‌ள்கூட‌ என‌க்கு உத‌வ‌ த‌ய‌ங்குவார்க‌ள்.//

நீங்கள் போட்டியை அறிவிக்கும்போது இவர்களைப் பற்றி சொல்லி இருந்ததால் மட்டுமே குறிப்பிட்டேன் தோழி..

//இனி இது போன்ற‌ போட்டி ந‌ட‌த்துவ‌த‌ற்கு ந‌ல்ல‌ ஊக்க‌ம் அளித்திருக்கின்றீர்க‌ள். என‌து நேர‌ம் ம‌ற்றும் கொஞ்ச‌ம் ப‌ண‌ம் இர‌ண்டும் செல‌வ‌ழித்து இந்த‌ போட்டியை ந‌ட‌த்திய‌த‌ற்கு ந‌ல்ல‌ ப‌ல‌ன் கிட்டியுள்ள‌து. அடுத்து க‌விதைப் போட்டி பெரிய‌ அள‌வில் ந‌ட‌த்த‌ வேண்டுமென்று நினைத்திருந்தேன். இப்போது தேவையா என்றே நினைக்கிறேன்.//

தயவு செய்து இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.. ஒரு நல்ல விஷயத்தை இது போன்ற எதிர்வினைகளுக்காக நிறுத்தினால் அது மாபெரும் தவறு.. இப்போதும் சொல்கிறேன்.. உங்களுடைய முயற்சியை நான் பாராட்டுகிறேன்.. உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய பெரிய மனசு வேண்டும்.. ஆனால் ஒரு சில வார்த்தைகள் எனக்கு சரியாகப் படாததாலேயே அதை பதிவு செய்தேன்.. உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்..

//இதே க‌விதைக்கு ந‌ல்ல‌ க‌தையும் எழுதி இருக்கின்றார்க‌ள். முக‌ம் சுளிக்கும்ப‌டியான‌ வாச‌க‌ங்க‌ள் சில‌ க‌தைக‌ளில் இருந்த‌ன‌ என்ப‌தை நீங்க‌ ம‌றுக்க‌ இய‌லுமா? இந்த‌ போட்டிக்கு அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் வ‌ந்த‌ போது எத்த‌னையோ நாள் போட்டியை நிறுத்திவிட‌லாம் என்று யோசித்தேன். ஆயினும் பிற‌ர் ப‌டிப்பார்வ‌ம் எழுத்தார்வ‌ம் வ‌ள‌ர‌ ந‌ம்மால் இய‌ன்ற‌து செய்ய‌லாம் என்று நினைத்தே போட்டியை தொட‌ர்ந்தேன்.//

ஒரு சிலர் எழுதிய முகம் சுழிக்கும்படியான கதைகளுக்காக ஒட்டுமொத்தமாக எல்லோரையும் பொதுவில் பேசியது ஏன் என்பதே என்னுடைய மனக்கஷ்டம்..

//மிக்க‌ ந‌ன்று ந‌ண்ப‌ரே. என்னுடைய‌ வார்த்தைக‌ளை எவ்வ‌ள‌வு மென்மையாக‌ உப‌யோகித்திருந்தேன் என்று உங்க‌ள் ப‌திவிலும் ப‌டியுங்க‌ள் தெரியும். இதில் இதில் நெஞ்சைக் குத்தி கிழிக்கும் அள‌விற்கு என்ன‌ இருக்கின்ற‌து என்று என் சின்ன‌ அறிவிற்கு விள‌ங்க‌வில்லை.//

ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம்.. ஏன் பார்வையில் அது தப்பாக தோன்றியது.. ஏன்.. உங்கள் இடுகையிலேயே சிலர் இதே கருத்தை சொல்லி இருக்கிறார்களே..

உயிரோடை.. பார்க்கும் பார்வையில் தான் எல்லாமே.. உங்களுக்கு சரி என்று பட்டதை நீங்கள் சொன்னிர்கள்.. எனக்கு அது தவறாகத் தோன்றியது.. சொல்லி இருக்கிறேன்.. உங்களுக்கு அதில் ஒப்புதல் இல்லை என்றால் ஒதுக்கி விட்டு முன்னே செல்லுங்கள்.. இதற்காக உங்களுடைய மற்ற நிகழ்வுகளைப் புறம் தள்ளாதீர்கள்.. எந்த வகையிலும் உங்களை நான் புண்படுத்த விரும்பவில்லை.. இத்துடன் முடித்துக் கொள்வோம்..

அத்திரி said...

நண்பா உன் கோபம் நியாயமானதே

பீர் | Peer said...

கருத்துச் சுதந்திரம் ;)

Karthik said...

:(

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இந்த பதிவு தேவையா கார்த்தி? ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும்.நடந்து முடிந்து விட்ட ஒரு விஷயத்தில் சர்ச்சை வேண்டாமே.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சகோதர சண்டை வேண்டாமே...!

Radhakrishnan said...

நீங்களும் ஒரு போட்டியை நடத்திக் காட்டுங்கள் :)

தவறு செய்துவிட்டார்கள் எனச் சுட்டிக்காட்டுவதை விட தவறே இல்லாமல் இதோ நடத்திக் காட்டுகிறேன் என நீங்கள் எதிர்வினை செய்திருந்தால் அதைப் பாராட்டியிருப்பேன். இப்போது உங்கள் மனநிலைக்குக் காரணமான அந்த நிகழ்வை எண்ணி வருத்தம் மட்டுமே கொள்கிறேன். ஏனெனில் உங்கள் இடுகையில் சில வரிகள் அவசியமற்றது என நான் கருதுகிறேன், நீங்கள் கருதியிருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பது சரியல்லதான்.

நானும் ஒரு கதை அனுப்பி இருந்தேன். என்னைப் பொருத்தவரை எனது கதையின் தரம் எனக்குத் தெரியும் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உண்டு. ஆனால் பிறரது பார்வையில் தரமானதாக இருக்க வேண்டுமென நான் நினைப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீ said...
இந்த பதிவு தேவையா கார்த்தி? ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும்.நடந்து முடிந்து விட்ட ஒரு விஷயத்தில் சர்ச்சை வேண்டாமே.//

உண்மைதான் நண்பா.. கோபத்தில் எழுதி விட்டேன்.. திருத்திக் கொள்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ் வெங்கட் said...
சகோதர சண்டை வேண்டாமே...!//

நியாயம் தான் நண்பா.. தங்கள் அக்கறைக்கு நன்றி.. இனிமேல் இதுபோல நேராமல் பார்த்துக் கொள்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
நீங்களும் ஒரு போட்டியை நடத்திக் காட்டுங்கள் :)தவறு செய்துவிட்டார்கள் எனச் சுட்டிக்காட்டுவதை விட தவறே இல்லாமல் இதோ நடத்திக் காட்டுகிறேன் என நீங்கள் எதிர்வினை செய்திருந்தால் அதைப் பாராட்டியிருப்பேன். இப்போது உங்கள் மனநிலைக்குக் காரணமான அந்த நிகழ்வை எண்ணி வருத்தம் மட்டுமே கொள்கிறேன். ஏனெனில் உங்கள் இடுகையில் சில வரிகள் அவசியமற்றது என நான் கருதுகிறேன், நீங்கள் கருதியிருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பது சரியல்லதான்.//

உன்னால் முடியும் போது என்னால் முடியாதா என்று போட்டி போட வேண்டுமா நண்பா.. ? இப்போதும் நான் உயிரோடையின் முயற்சியையோ, அவர்கள் பரிசுக் கதைகளை தேர்ந்து எடுத்த விதத்தையோ குறை கூற விலை.. மாறாக போட்டிக்கு வந்த கதைகளைப் பற்றி அவர் சொன்ன வார்த்தைகளை மட்டுமே தவறு என்று சொன்னேன்.. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே.. நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் தவறோ என எனக்கும் தோன்றுகிறது.. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.. இது மீண்டும் நடக்காது என்றும் சொல்லிக் கொள்ளுகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி..;-))))

Anonymous said...

வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.