பொக்கிஷம் - சேரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஒன்பதாவது படம். ஒரு சில படங்களை பார்க்கும்போது இது என்ன மாதிரியான படம், நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை நம்மாலேயே அனுமானிக்க முடியாது. இது அந்த வகைப்படம். அருமையான சிறுகதைக்கான கரு. ஆனால் அதை மூன்று மணி நேரப் படமாக எடுத்து நம் பொறுமையைச் சோதித்து இருக்கிறார் சேரன்.
அப்பாவின் டைரியையும், அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் கடிதங்களையும் மகன் படிப்பதாக ஆரம்பிக்கிறது படம். கதைக்களம் 1970ஆம் வருடம். கல்கத்தாவில் துறைமுகத்தில் வேலை பார்க்கும் இந்து இளைஞன் லெனின்(சேரன்). நாகூரில் தமிழ் இலக்கியம் படிக்கும் இஸ்லாமியப் பெண் நதீரா(பத்மப்பிரியா). சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சந்திக்கும் இவர்களுக்குள் நட்பு மலர்ந்து பின்பு காதலாகிறது. சேரனின் அப்பா திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார். தானும் ஒத்துக் கொள்வதாக சேரனை நம்ப வைக்கும் பத்மப்பிரியாவின் அப்பா, சூழ்ச்சியாக அவரை எங்கோ மறைவாக கூட்டிச் சென்று விடுகிறார். வேறொரு கல்யாணம் செய்து கொள்ளும் சேரன் கடைசி வரை பத்மப்பிரியா எங்கிருக்கிறார் எனத் தெரியாமலே இறந்தும் போகிறார். தன காதலிக்காக அவர் எழுதி, அனுப்பாத கடிதங்களை அவருடைய மகன் பத்மப்பிரியாவை தேடிக் கண்டுபிடித்து சேர்க்கிறார். இதுதான் பொக்கிஷம்.
ஆட்டோகிராப் முதல் தவமாய் தவமிருந்து வரை பார்த்த அதே சேரன். மெல்லிய உணர்வுகள் கொண்ட மனிதனாக வருகிறார். செதுக்கிய மீசையும், கன்னங்களில் அப்பிய பவுடருமாக அவர் அழும்போது திரை அரங்கில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். குறிப்பாக பத்மப்பிரியா தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொள்ளும் தருணத்தில் ஒரு உணர்வினை வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.. அவ்வ்வ்வ்.. முடியலை. திருத்தமாக வரையப்பட்ட ஒரு ஓவியம் போல அழகாக இருக்கிறார் பத்மப்பிரியா. கண்கள் பேசுகின்றன. கடைசிக் காட்சிகளில் வயதான பெண்ணாக அருமையாக நடித்து இருக்கிறார். ஆனால் ஒப்பனை சரியில்லை. (அவருக்கு குரல் கொடுத்து இருப்பது சேரனின் அதிர்ஷ்ட தேவதை மீனாவா?)
சேரனின் அப்பாவாக வரும் விஜயகுமாரும், பத்மப்பிரியாவின் அப்பாவாக வரும் பெரியவரும் நன்றாக நடித்து உள்ளார்கள். சேரனின் மகனாக வருபவருக்கு பிரசன்னா குரல் கொடுத்து இருக்கிறார். கடிதங்கள் கொண்டு வரும் போஸ்ட்மேன், சிலை வடிக்கும் இளவரசுவின் குடும்பம், கல்கத்தாவில் சேரன் குடியிருக்கும் இடத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டு வங்காளப் பெண், பத்மப்பிரியாவின் தோழியாக வரும் புவனா, சேரனின் மகனோடு எப்போதும் சண்டை போடும் காதலி என்று துணை கதாப்பாத்திரங்களை அழகாக செதுக்கி உள்ளார் சேரன்.
இதுவரை சேரன் எடுத்த படங்களிலேயே டெக்னிக்கலாக மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு அபாரம். நாகூரின் கடற்கரையில் கிடக்கும் ஒற்றைப்படகு, ட்ராம் வண்டிகள் ஓடும் கல்கத்தா நகரின் வீதிகள், முப்பது வருடங்களுக்கும் முன்பு பயன்பாட்டில் இருந்த மோட்டார் வாகனங்கள் என்று கலை இயக்குனர் மெனக்கெட்டு இருக்கிறார். ஆனால் அதற்காக சேரன் கடிதம் எழுதும்போது கூட அருகில் பழைய காலத்து குமுதம் கிடப்பது வலிந்து திணிக்கப்பட்டு உள்ளதாகத் தோன்றுகிறது.
இசை ஆச்சரியம் - சபேஷ் முரளி. பாடல்கள் எல்லாமே அருமை. படத்தோடு பார்ப்பதை விட தனியாக கேட்கும்போது இன்னும் நன்றாக இருக்கும் என்று போலத் தெரிகிறது. இவ்வளவு செய்தவர்கள் பின்னணி இசையில் சொதப்பி விட்டார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் இலக்கிய நயம் நிறைந்த வசனங்கள். ஆனால் படத்தில் நடித்து இருக்கும் அனைவருமே படம் பார்ப்பவருக்கு புரிந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசியது போல இருக்கிறது(மணிரத்னம் எபெக்ட்). முதல் பாதி முழுதும் சேரனும் பத்மப்பிரியாவும் கடிதங்கள் மூலம் பேசிக்கொள்வதுதான் பொறுமையைச் சோதிக்கிறது. இரண்டாம் பாதியிலும், வயதான தோற்றத்தில் பத்மப்பிரியா வரும் இறுதிக்காட்சிகளிலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஒரு சில வசனங்களிலும், சேரனின் காதலை இந்துப் பெரியவர் ஒப்புக் கொள்வதாகவும் இஸ்லாமிய பெண்ணின் தந்தை சூது செய்வதாகவும் காட்டும் இடங்களில் தேவை இல்லாத உள்குத்து எதுவும் இருக்கிறதோ எனத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.
"இலக்கிய வடிவில் ஒரு இயல்பான சினிமா" என்கிறார் சேரன். காணாமல்போன தன அப்பாவின் காதலியை, நாற்பது வருடங்கள் கழித்து கண்டுபிடித்து, கடிதங்களைக் கொண்டு போய் சேர்ப்பது என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் சேரன். நீங்கள் காதலைப் பற்றி படம் எடுத்தால் ஆட்டோகிராபோடு ஒப்பிடப்படும் என்பது நிச்சயம். படம் பார்க்கும் எல்லோரும் தங்களை ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்திப் பார்க்க முடிந்ததுதான் ஆட்டோகிராப்பின் வெற்றி. ஆனால் பொக்கிஷத்தில் அது சாத்தியமாக வில்லை. எந்த ஒரு காட்சியிலும் அழுத்தம் இல்லாததுதான் படத்தின் பலவீனம்.
காதலைப் பற்றி படம் எடுக்க ஆயிரம் பேர் உண்டு. ஆனால் எல்லாப்படத்திலும் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று எடுக்க உங்களைப் போல ஒரு சிலரால் தான் முடியும்.வெற்றிக் கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம் என்று சமுதாயம் மீது அக்கறை கொண்ட சேரன் என்னும் சமூகப் போராளியை மீட்டு எடுங்கள். அது போன்ற படங்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான பொக்கிஷங்களாக இருக்கும்.
சேரனுக்கு (மட்டுமே) பொக்கிஷம்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
37 comments:
சேரனுக்கு (மட்டுமே) பொக்கிஷம்..!!!
//
சூப்பர் பன்ஞ் :)
//வெற்றிக் கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம் என்று சமுதாயம் மீது அக்கறை கொண்ட சேரன் என்னும் சமூகப் போராளியை மீட்டு எடுங்கள். அது போன்ற படங்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான பொக்கிஷங்களாக இருக்கும்.//
இதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறோம்.
padichitten nanba.
நல்ல ஒரு தரமான வீமர்சனம்.
appada... 120Rs micham... avvvu...
அரசியல்வாதிகளும் சரி, சினிமாக்காரர்களும் சரி தங்கள் இமேஜ் குறையும் போது எடுக்கும் அவதாரம் தான் மத அடிப்படையிலான சமூக சிந்தனைகள்.இதில் சேரனும் விதிவிலக்கல்ல.இதில் சேரன் காதலையும் வாழவைக்கவில்லை.மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. ஒன்று செய்திருக்கலாம். இந்த படப்பெட்டியையும் பொக்கிஷமாக நினைத்து மூடியே வைத்து சென்றுவிட்டால் 40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் இந்த படம் வருங்கால காமடியாக அமைந்திருக்கும்.
நல்லதொரு விமர்சனம். சேரன் புரிந்துக்கொண்டு இனி இயக்குனராக செயல்பட்டால் மட்டுமே அவரால் வெற்றியடைய இயலும்.
விமர்சனம் படித்ததே போதும்பா!!!
கார்த்தி,அப்போ நல்ல ஒரு படம் தமிழ்ல வந்திருக்குன்னு சொல்றீங்க.நன்றி.
பாக்கணும் கண்டிப்பா.
சேரன் எப்படிப்பட்ட படங்கள் எடுக்க வேண்டும் என்று அழகா சொல்லியிருக்கீங்க!!!
மாயக்கண்ணாடியில் ஒரு விசயம் சொல்லியிருப்பார் சேரன் “அவனவனுக்கு வருவது தான் செய்யனும். தெரியாதத செய்து வாங்கி கட்டிக்க கூடாது”ன்னு. இது அவருக்கே பொருந்தும். நல்லா தெரிஞ்ச டைரக்ஷன் தொழிலையே ஒழுங்கா பார்க்கலாம். நடிப்பை விட்டுட்டு...
"சேரனுக்கு (மட்டுமே) பொக்கிஷம்..!!!"
ithu thaan top
"இலக்கிய வடிவில் ஒரு இயல்பான சினிமா" என்கிறார் சேரன். காணாமல்போன தன அப்பாவின் காதலியை, நாற்பது வருடங்கள் கழித்து கண்டுபிடித்து, கடிதங்களைக் கொண்டு போய் சேர்ப்பது என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் சேரன்.---///
வாத்தியாரே விமர்சனத்தில் எந்த குறையும் இல்லை ஆனால் மேலுள்ள வரிகளில்தான் சின்ன குறை... ஒரு கதை என்பது எல்லோருக்கும் நடக்காத ஒன்று... யாரோ ஒருவருக்கு.. நடக்கும் போது அது கதையாகின்றது...
ஸ்பீல் பெர்க் இயக்கிய் டெர்மினல் படத்தின் கதை இதுதான்... கருக்கோஷீயா இளைஞனின் அப்பா ஒருவர் ஜாஸ் இசையில் அதிக ஈடுபாடு.... இறப்பதற்க்கு முன் பல ஜாஸ் கலைஞர்களிடம் கையெழுத்து வாங்கினாலும் ...அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஜாஸ் கலைஞனிடம் மட்டும் கையெழுத்து வாங்காமல் இறக்க..... மகன் அந்த அமெரிக்க ஜாஸ் கலைஞனிடம் கையெழுத்தை வாங்க அவன் அலைவதே படத்தின் மீதி கதை....
மற்றபடி விமர்சனம் அருமை..மற்றும் நேர்த்தி....
மற்றபடி தவறாய் சொல்லி இருந்தால் வாத்தியாரே மன்னிக்கவும்....
முடிந்தால் டெர்மினல் பாருங்கள்....
//...40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில்...//
ஆஹா .. அப்படி ஒரு காலம் வந்துவிடுமா, ஷாஜகான்.
நல்லது .. வரட்டும்
ஒரு விமான நிலையத்திற்குள்ளெயே முழுக்கதையும் எடுக்க்பட்ட மிகச்சிறந்த படமான டெர்மினல் படம் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். வாய்ப்பு கிடைத்தால் பார்க்க தவறாதீர்கள்.
நேரம் இருப்பின் எனது டெர்மினல் படத்தின் விமர்சன பார்வையை,இங்கே போய் பார்க்கவும்....http://jackiesekar.blogspot.com/2008/11/5_9687.html
PAdam Trailor parthaudane parka thundiyathu autograph ... Athae mathiri pokkisham parka thona after seeing the trailer
Thx..
இன்னும் படத்தைப் பார்க்கல பாஸ்... "சேரன் படம்" இல்லையா... ஸோ கொஞ்சம் ஃப்ரெஷா பார்க்கணும்னு ஆசை!!... படம் பாத்துட்டு உங்க விமர்சனம் படிக்கிறேன்... :)
மீண்டும் என்னை காபாற்றிய நண்பா நின் சேவை வாழ்க
விமர்சனம் மிக அருமை. இப்படத்தை எடுக்க சேரன் இரு வருடங்களை வீணடித்திருப்பதற்குப்பதில் பொக்கிஷத்தை ஒரு சிறுகதையாக வெளியிட்டிருந்தால் இன்னும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.
நல்ல விமர்சனம் கார்த்திக்,
கடைசி பத்தி சேரனுக்கு நல்ல அட்வைஸ்.
இதுவரை நான் பார்த்த விமர்சனங்கள் டோட்டலி நெகடிவ்.கொஞ்சம் நல்ல விஷயங்களையும் சொல்லிருக்கீங்க..
சென்னை வந்ததும் பாக்கணும்.
//சேரனுக்கு (மட்டுமே) பொக்கிஷம்..!!!//
அப்படியா!!
முடிந்தால் மட்டுமே பார்க்கலாம்
ஹ்ம்ம்....
நன்றாக விமர்சனம் செய்து உள்ளீர்கள் அண்ணா.....
அப்ப இதுவும் ப்ளாப்பா???
:)))
நல்ல விமர்சனம்.. :)))
சேரன் மறுபடியும் இப்படி பண்ணிட்டாரே :(((
நல்ல இயக்குநர் :)
hai friends,
hollywoodla 'the notebook' nu vantha padamthan 70% entha padam.
அலசி ஆராய்ந்து விமர்சனம் எழுதியிருகீங்க நண்பா.
சேரனிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை தெளிவாச் சொல்லியிருக்கீங்க. இன்னும் அவர்மேல் உள்ள நம்பிக்கை குறையவில்லை ரூட்டை மாற்றுவாரா சேரன்?.
ஒன்லைல் தான் கதை போல!
நல்ல விமர்சனம்
//அப்பிய பவுடருமாக அவர் அழும்போது திரை அரங்கில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்//
எனக்கும்தான்...
நல்ல விமர்சனம்.
அடேங்கப்பா என்னா மாதிரியான டீடெய்லு விமர்சனம்... சூப்பர் பா....
நான் எப்பொழுதுமே சேரனுடய படங்களின் ரசிகன்.... சமூக படங்கள் எடுப்பதில் சேரனுக்கு நிகர் சேரன் தான்... அவருடைய காதல் படங்கள் என்னைப்பொருத்தவரை இப்பொழுது வருகிற காதல் படங்களுக்கு எத்தனையோ சதவிகிதம் பரவாயில்லை என்றே என்ன தோன்றுகிறது.. பொக்கிஷம் நான் இன்னும் பார்க்கவில்லை... ஆனால் சேரனில் திரைக்கதை ஸ்டைல் என்னை எப்பொழுதுமே ஏமாற்றியதில்லை....
அழகிய விமர்சனம் நண்பா!
//.. நம் பொறுமையைச் சோதித்து இருக்கிறார் சேரன். ..//
ரசித்தேன்.. தெளிந்தேன்..
அட ஆமா பாஸ்... நம்ம ரெண்டுபேரும் ஒரே மாதிரி ஃபீல் பண்ணியிருக்கோம்...
உங்க விமர்சனம் ரொம்ப தெளிவா அருமையா நேர்த்தியா வந்திருக்கு...
முதல்லயே படிச்சிருந்தா நான் எழுதியிருக்க மாட்டேன்... :)
நேர்த்தியான விமர்சனம். அழகான எழுத்து நண்பா. வாழ்த்துக்கள்!
The story line is very beautiful, it is a poetry. The problem is we are unable to travel back to even 70s and 80s. Why always should say muslims are great. There are people who act like padma priya's father. He wants to show an incident not a documentary to say all Muslims are great. Is a slow moving but this movie would have been a hit if there is reinforcement of storyline.
The story line is very beautiful, it is a poetry. The problem is we are unable to travel back to even 70s and 80s. Why always should say muslims are great. There are people who act like padma priya's father. He wants to show an incident not a documentary to say all Muslims are great. Is a slow moving but this movie would have been a hit if there is reinforcement of storyline.
Post a Comment