September 12, 2009

ஈரம் - திரைவிமர்சனம்..!!!


வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு மிரட்டலான த்ரில்லர் கம் பேய்ப்படம். ஷங்கரின் தயாரிப்பு என்றால் ஏதோ ஒன்று வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது ஈரம். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரை அரங்கில் பார்க்கவும். அருமையான அனுபவமாக இருக்கும்.

கதாநாயகி ரம்யா (சிந்து) பாத்டப்பில் பிணமாக கிடப்பதாக ஆரம்பிக்கிறது படம். போலிஸ் தற்கொலை என்று சொல்ல அதை நம்ப மறுக்கிறார் சிந்துவின் முன்னாள் காதலனான அசிஸ்டன்ட் கமிஷனர் வாசுதேவன்( ஆதி). சிந்துவின் கணவர் பாலா (நந்தா) மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்கி இருந்த அபார்ட்மென்டில் தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்கின்றன. இவைகளை செய்வது மனிதனா இல்லை வேறு ஏதேனும் சக்தியா? உண்மையில் சிந்துவைக் கொன்றது யார்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தருகிறது ஈரம்.


மிருகம் படத்தில் கரடி தாடியும், கிழிந்து போன கைலியுமாக சுற்றி வந்த ஆதிதான் இவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சிந்துவின் பிரிவை எண்ணி வருந்தும் காட்சிகளிலும் அருமையாக நடித்து இருக்கிறார். சிந்து மேனனுக்கு இந்தப் படம் தமிழில் ரீ என்ட்ரி. பாந்தமாக இருக்கிறார். ஆனால் கல்லூரிக்கு போகும் பெண் வேடத்தில் சற்று முதிர்ச்சியாகத் தெரிகிறார். கணவன் சந்தேகப்படுவதை அறிந்து கலங்கும் காட்சிகளில் மனதை கனமாக்குகிறார்.


"எனக்கு எல்லாமே புதுசாத்தான் இருக்கணும்.." என்று பேசும் நந்தா புரியாத புதிர் ரகுவரனை ஞாபகப்படுத்துகிறார். தன்னுடைய கேரக்டர் என்ன என்பதை உணர்ந்து அருமையாக அண்டெர்பிளே செய்து இருக்கிறார். படத்தில் மொத்தமாக வெஸ்ட் செய்யப்பட்டு இருக்கும் ஒரே ஜீவன் சரண்யா மோகன். சிந்துவின் தங்கையாக வந்து போகிறார். நந்தாவின் நண்பராக வரும் ஸ்ரீநாத்தும் அருமையாக நடித்து இருக்கிறார்.


படம் பார்க்கும் மக்களை "அட" போட வைக்கும் காட்சிகள்..


* புதுவை சாலையில் அபார்ட்மென்ட் பெரியவரை குடையால் கொலை செய்வது..

* திரை அரங்கின் கழிவறையில் முதல் முறையாக ஆதி பேயை சந்திக்கும் காட்சி..


* இடைவேளையில் கண்ணாடியின் ஊடாக வரும் சிந்துவின் முகம்..


* பேய் முகமூடி அணிந்து ஸ்ரீநாத்தை அவருடைய மகள் பயமுறுத்தும் காட்சி..

* புத்திசாலித்தனமான கிளைமாக்ஸ்..


தமனின் இசையும், மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம். தமனின் இசையில் யுவன் மற்றும் ரகுமானின் சாயல் தெரிந்தாலும் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ஆதி முதல் முதலாக சிந்துவை பார்க்கும் காட்சியில் பின்னணி இசை பரவசம். வித்தியாசமான, அசாதாரண கோணங்களில் திகைக்க வைக்கிறார் மனோஜ். நிகழ்கால படம் முழுவதும் நீரின் நீல நிற பேக்ட்ராப், பிளாஷ்பேக் காட்சிகளில் வண்ணமயம் என்று பொளந்து கட்டி இருக்கிறார். ரெம்போனின் கலை இயக்கம் படத்துக்குத் தேவையானதை மிகை இல்லாமல் தருகிறது.


எழுதி இயக்கி இருப்பவர் அறிவழகன். சின்ன சின்ன விஷயங்களில் அசத்தி இருக்கிறார். படம் பார்க்கும் நமக்குள் எழும் கேள்விகளை திரையிலே கூற வைத்து பதிலும் சொல்லி விடுவது கலக்கல். ஆனால் படத்தின் நீளத்தை கொஞ்சம் கவனித்து இருக்கலாம். இரண்டாம் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. படத்தின் சஸ்பென்ஸ் இடைவேளையிலேயே தெரிந்து போவதால், படம் இப்படித்தான் போகப் போகிறது என்பதை நாம் கொஞ்சம் கணிக்க முடிகிறது. இருந்தாலும் இத்தனை முயற்சி எடுத்து ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக அறிவு மற்று ஷங்கர் இருவருக்கும் ஒரு பூங்கொத்து.


ஈரம் - மிரட்டல்

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

27 comments:

ஜெட்லி... said...

செம படம் சார்....

ஊர்சுற்றி said...

பார்க்கணுமே!

மேவி... said...

hmmmm......... arumaiyaai eluthi irukkinga boss....


ticket kku neenga kasu thanthaal parkkiren naan intha padathai

ஈரோடு கதிர் said...

போய் பார்க்கிறேன்

தீப்பெட்டி said...

அப்போ படம் பாக்கணும்..

பாஸ் உங்க mail ID என்ன?

Anonymous said...

அருமையான விமர்சனம் கார்த்தி. அழகா எழுதுறீங்க...உங்க விமர்சனம் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கு நண்பா. படம் பர்க்கல... பர்க்கணும். அது எப்டி கார்த்தி உடனே உடனே படம் பார்த்துரிங்க...

அகல்விளக்கு said...

எல்லாரும் சொல்றாங்க நல்லாருக்குனு...

நாளைக்குத்தான் போகப்போறேன்...

நன்றி மாப்பி..
சர்விட்கேட்டுக்கு...

thiyaa said...

நான் இன்னும் பார்க்கலை பார்க்கவேணும் போல் இருக்கு

குமரை நிலாவன் said...

அப்போ படம் பாக்கணும்..

நாடோடி இலக்கியன் said...

சொல்லிட்டீங்கல்ல பார்த்திடுவோம்.

குப்பன்.யாஹூ said...

nice review, thanks

சொல்லரசன் said...

கடையம் ஆனந்த் said...
அது எப்ப‌டி கார்த்தி உடனே உடனே படம் பார்த்துரிங்க...


எனக்கு அதே சந்தேகம்தான்

ப்ரியமுடன் வசந்த் said...

அப்போ சங்கர் உண்மையிலே கொடுத்து வச்ச சீவன் தான்....

kanagu said...

kandipaaga poi paakanum :))

கார்த்திகைப் பாண்டியன் said...

// தீப்பெட்டி said...
அப்போ படம் பாக்கணும்..
பாஸ் உங்க mail ID என்ன?//

karthickpandian@gmail.com

வழிப்போக்கன் said...

அப்ப பாக்கலாம்....

அ.மு.செய்யது said...

நோடிங் இட் டவுன் !!! சென்னை போனதும் பாக்கணும்ங்க !!

ச.பிரேம்குமார் said...

பேரா ஒரு படத்தையும் விட்டு வைக்கிறது இல்ல போல.....

நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க.. சீக்கிரமே பாத்துட வேண்டியது தான் :)

Karthik said...

ஹை, நல்லாருக்கா? :))

(Mis)Chief Editor said...

உங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் ஒத்துமை இருக்கு பாஸ்!
எப்படியா? படிங்க இதை!

==========================
எவ்ளோ நாளாச்சு தரமான தமிழ் த்ரில்லர்/க்ரைம் படம் பார்த்து?

நகர குடியிருப்பு ஒன்றில் கொலையான ரம்யா (சிந்து மேனன்) வழக்கில், முன்னாள் காதலர் என்கிற முறையில் அழைக்கப்படுகிறார் ஏஸிபி வாசுதேவன்(ஆதி). பிரிவைத் தாங்க முடியாத துயரத்தில் தகப்பன் (ராஜசேகர்), தங்கை திவ்யா (சரண்யா மோகன்), கணவன் பாலா (நந்தா); நிச்சயம் தற்கொலையாயிருக்க முடியாது என்கிற ஒரே காரணத்தில் வாசு, வழக்கை தூசி தட்டத் துவங்க, அடுக்கடுக்காய் அதே குடியிருப்பில் மரணங்கள் விழத் துவங்குகின்றன. எல்லாவற்றிலும் 'தண்ணீரும் ஈரமும்' பிரதானமாய் இருக்கிறது! யார்தான் செய்திருப்பார்கள்?!

நிச்சயம் இது ஒரு இயக்குனர் படம் என்பதை முதல் பாதியில் அவ்வப்போது பின்னோக்கிப் போகும் 'ரம்யா-வாசு' காதல் காட்சிகளும், பின் பாதியில் ஒரேடியாய்க் காண்பிக்கப்படும் 'ரம்யா-பாலா' தாம்பத்யக் காட்சிகளும் நிரூபணம் செய்கின்றன. 'சென்னையில் ஒரு மழைக்காலம்' சரி, படத்தில் 'சென்னையில் ஒரே மழைக்காலம்' எப்படி ஸார்?! எல்லாக் காட்சிகளிலும் ஈரத்துடன் தொடர்பேற்படுத்த ப்ரயத்தனப்படுவதும் சுவாரஸ்யமே.

ஆதி இயல்பான காவல் அதிகாரியாய் மனதைத் தொடுவதென்னவோ சத்தியமான நிஜம். அதே போல, 'புரியாத புதிர்' ரகுவரனுக்குப் பின், சந்தேகப்படும் கணவன் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்புகிறார் நந்தா!

படத்தின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். த்ரில்லர் படங்களில் வரும் இசையைப் போல அல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல். எடிட்டரும் கொஞ்சம் வேலை பண்ணியிருந்தால் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க முடியும்.

காதல்/வெயில்/இம்சை அரசன்/அறை எண்/கல்லூரி என்கிற 'வெற்றி' வரிசையில் 'ஈரம்' சேரும்போது நமக்கு "தன்னால் எடுக்கப்பட முடியாத படங்களை வேறு இயக்குநர்(கள்) வைத்து திரு ஷங்கர் எடுக்கிறாரோ?!" என்கிற சந்தேகம் வலுக்கத்தான் செய்கிறது!

எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி! ஷங்கர் பட்டறையிலிருந்து மற்றுமொரு பட்டை தீட்டப்பட்ட வைரத்திற்கு வழி விடவும்!

===============================

http://apdipodu.blogspot.com/2009/09/blog-post_13.html

ஹேமா said...

கார்த்திக்,விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தருகிறது.பார்ப்போம்.

வால்பையன் said...

இந்த கலைச்சேவையை எப்போ நிறுத்துவிங்க கார்த்திகை!

வால்பையன் said...

இந்த கலைச்சேவையை எப்போ நிறுத்துவிங்க கார்த்திகை!

சுந்தர் said...

இந்த கலைச்சேவையை எப்போ நிறுத்துவிங்க கார்த்திகை!

குடந்தை அன்புமணி said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கு.http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_14.html#links

"உழவன்" "Uzhavan" said...

ஓ.. நல்லாருக்கா.. குட்

Deepan Mahendran said...

பாக்கணுங்கற ஆவல தூண்டி விட்டுட்டிங்களே !!!!