பண்டிகைகள் கொண்டப்படுவதன் அடிப்படை அர்த்தம் என்ன? வேலையின் பொருட்டோ, வேறு ஏதேனும் காரணங்களை முன்னிட்டோ திசைக்கொன்றாய் சிதறிக் கிடக்கும் உறவினர்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்காகத்தான். நம் தமிழ்நாட்டில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடுகிறோம். பொங்கலைத்தான் தமிழர் திருநாள் என்றும் சொல்கிறோம். இருந்தாலும் தீபாவளி நம் வீட்டுக்கு கொண்டு வரும் மகிழ்ச்சிக்கும் சந்தோசத்துக்கும் அளவே கிடையாது.
என்னைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவுகள் எப்போதுமே விசேஷமானவை. என்னுடைய ரயில்வே காலனி நண்பர்கள் எல்லோரோடும் சேர்ந்து கொண்டு மதுரையின் கடைவீதிகளில் விடிய விடிய சுத்துவேன். இரவு ஒன்பது மணிக்கு உள்ளே நுழைந்தால் எப்படியும் வீடு திரும்ப காலை நான்கு மணியாகிவிடும். ரயில்வே காலனியில் எங்கள் குழுவுக்கு "குழாயடி க்ரூப்ஸ்" என்று பெயர். தெருமுக்கில் இருக்கும் குழாயடியில் தான் எங்கள் டாப்பு என்பதால் இந்தக் காரணப்பெயர். குழுவில் மொத்தம் ஐந்து உறுப்பினர்கள். (அதில் மூவருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் இந்த வருடம் அவர்களால் இரவு வெகுநேரம் வரை சுத்த முடியாத நிலை வந்து விட்டது. அடுத்த வருடம் என் கதை என்னவாகுமோ... ஹ்ம்ம்ம்ம்.)
ராத்திரி ஒன்பது மணிக்கு முன்பாகவே நண்பர்கள் அனைவரும் பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள சர்ச்சின் வாசலில் கூடி விடுவோம். அங்கிருந்து டவுன் ஹால் ரோட்டின் வழியாக உள்ளே நுழைந்து, ஏதாவதொரு புரோட்டாக் கடையில் செட்டில் ஆகிவிடுவோம். முதலில் ஆர்டர் செய்வது ஒரு முழு பொறித்த கோழியாக இருக்கும். (ஆளுக்கு ஒண்ணெல்லாம் கிடையாதப்பா.. மொத்த க்ரூப்புக்கும் சேர்த்துத்தான் ஒண்ணு..) அதன் பின்னர் செட்டு, புரோட்டா, தோசை என அவரவருக்கு வேண்டியதை வாங்கி அமுக்கி விட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.
கட்டபொம்மன் சிலை அருகே போய் நின்றாலே போதும். நாம் நடந்தெல்லாம் போக வேண்டாம். அங்கிருக்கும் மக்கள் கூட்டம் நம்மைத் தானாகவே நகர்த்தத் தொடங்கி விடும். நடைபாதை எங்கும் கடைகள். தீபாவளிக்காகவே முளைத்தவை. நமக்குப் பண்டிகை. ஒரு சிலருக்கோ அதுவே வாழ்வின் ஆதாரம். எல்லாவிதமான கடைகளும் இருக்கும். அறுபது ரூபாய்க்கு விற்கும் குடைகள், டார்ச்சுகள், மிதியடிகள், பனியன் ஜட்டி, பிளாஸ்டிக் பொருட்கள், பட்டாசுகள், பழங்கள், தட்டுமுட்டு சாமான்கள் என அந்தக் கடைகளில் கிடைக்காத பொருட்களே இருக்காது என சொல்லாம்.
திருப்பூரில் மொத்த லாட்டில் வாங்கிய டீஷர்ட், சட்டைகளை கட்டில்களின் மீது போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். ஷோரூமில் "peter england, derby" என்றால் நடைபாதைகளில் அவற்றுக்குப் பெயர் "peter english, derchy" என்றிருக்கும். விலையும் ஐம்பது ரூபாயோ அல்லது நூறு ரூபாயாகவோ தான் இருக்கும். கடை போட்டிருப்பவர்கள் எல்லோரும் அதிகாலை நேரங்களில் தான் தங்களுடைய குடும்பத்துக்கு தேவையானதை வாங்கத் தொடங்குவார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக சிலமுறை தமுக்கம் வரை நடந்தே போக வேண்டியிருக்கும்.
நண்பர்கள் யாருக்கேனும் உடை வாங்க வேண்டி இருந்தால் வாங்கிக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் நடுஇரவில் மழை பெய்யாமல் இருக்காது. நடைபாதை வியாபாரிகள் எல்லோரும் மழை பெய்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு தங்களுடைய கடைகளை தார்ப்பாயினால் மூடி விடுவார்கள். மழை விட்டபின்பு மீண்டும் கடைகள் திறக்கப்படும். எங்காவது ஒதுங்கி இருந்து விட்டு மழை நின்றவுடன் மீண்டும் நடக்கத் தொடங்குவோம். அதிகாலை நெருங்கும்போது ஒரு டீயைப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.
இரண்டு மணிநேரம் தான் தூக்கம். சரியாக ஆறு மணிக்கு அம்மா எழுப்பி விட்டு விடுவார்கள். குளித்து விட்டு வந்தால் சுட சுட இட்டிலியும் கறிக்குழம்பும் ரெடியாக இருக்கும். ஒரு கட்டு கட்டிவிட்டு ஊர் சுற்றக் கிளம்பலாம். ஒவ்வொரு உறவினர் வீடாகப் போய் ஆசிர்வாதம் வாங்கி விட்டு கலெக்ஷனைப் போட்டால் அன்றைய பொழுதுக்கான செலவுக்கு காசு கிடைத்துவிடும். போகிற இடங்களில் எல்லாம் வடை, ஸ்வீட், காரம் வேறு பட்டையைக் கிளப்பும். நடுவில் போனில் பலரிடம் இருந்தும் வாழ்த்துகள் வந்து சேரும்.
மத்தியானம் வீட்டுக்கு வந்து ஒரு சின்ன தூக்கம். சாயங்காலம் பசங்களோட சேர்ந்து ஒரு படம். பட்டாசு வெடிச்ச காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்படியே வெடி போடனும்னு ஆசைப்பட்டாலும், கரிமேடு மார்கெட்டுக்குப் போய் கொஞ்சம் வெங்காய வெடிய வாங்கிக்க வேண்டியது. யார் யாரை எல்லாம் பிடிக்காதோ, அவங்க வீட்டு சுவத்துல அடிச்சி வெடிக்க வேண்டியது. அம்புட்டுத்தான்.
வீட்டாரோடு கழிக்கும் சந்தோஷமான பொழுதுகள், நண்பர்களோடு கொண்டாட்டம் என எப்பவுமே "தீபாவளி தீபாவளிதான்". நண்பர்கள், சகோதர சகோதரிகள் , இணைய வாசகர்கள் - அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீப ஒளி பெருகி எல்லோரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!!
31 comments:
//எல்லோரோடும் சேர்ந்து கொண்டு மதுரையின் கடைவீதிகளில் விடிய விடிய சுத்துவேன்//
நானும் அப்படித்தான் பாஸ் ரெண்டுவருசத்துக்கு முன்னாடி வரைக்கும் மதுரையில டவுன் ஹால் ரோடே கல கலன்னு சிரிச்சுட்டு தீபாவளிக்கு முந்தின இரவு ஷாப்பிங் செய்றது ஃப்ரண்ட்ஸோட...ரொம்ப சந்தோசமா இருக்கும் அவ்ளோ கூட்டத்தை பார்க்கும் பொழுது...ஆனா இப்போ இங்க கிர்ர்ர்ர்.....
இப்படி எனக்கு வேலை மேல வேலை கொடுக்கும் உங்கள் அன்பு என்னை திக்கு முக்காட வைக்கிறது...
நான் சுத்துனது எல்லாம் திருச்சி மெயின் கார்டு கேட் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ரோடு...
//ஒவ்வொரு உறவினர் வீடாகப் போய் ஆசிர்வாதம் வாங்கி விட்டு கலெக்ஷனைப் போட்டால் அன்றைய பொழுதுக்கான செலவுக்கு காசு கிடைத்துவிடும். //
நமக்கு அதிலயும் போட்டி இருக்கு.
கஷ்டப்பட்டு குனிஞ்சு கால்ல விழுறது நான், ஒரு நூறு ரூவாய கொடுத்து அக்காவுக்கும் சேர்த்துன்னு சொல்லுவாங்க பாருங்க...
அதுவும் தீபாவளிதான்
வேண்டாம் நான் ஒன்னும் பண்ணலை இந்த பதிவை...
//நையாண்டி நைனா said...
வேண்டாம் நான் ஒன்னும் பண்ணலை இந்த பதிவை...//
சங்கடப்படாம பதிவப் போடுங்க நண்பா.. உங்களோட திருச்சி அனுபவத்த கேக்க ஆசையா இருக்கு..
//ஒரு கட்டு கட்டிவிட்டு ஊர் சுற்றக் கிளம்பலாம். ஒவ்வொரு உறவினர் வீடாகப் போய் ஆசிர்வாதம் வாங்கி விட்டு கலெக்ஷனைப் போட்டால் அன்றைய பொழுதுக்கான செலவுக்கு காசு கிடைத்துவிடும்.//
நீங்கள்லாம் தீபாவளிக்கா? எங்க ஊருல எல்லாரும் பொங்கலுக்குத்தான் இப்படி வசூல் பண்ணுவோம்....
அனுபவமும் பதிவும் நன்று....
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே...
நல்லா இருக்கு அனுபவம். தீபாவளி வாழ்த்துகள்.
vanakkam nanbare
ungkal pazhaiya pathivukalaiyum inRuthaan vaasiththen
enakku romba pitichchirukku
evvalavu nal ungkalaith thavaravittuvitteen
ini ungkalaip pinthodarkiren
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
நல்லதொரு நினைவலைகள். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
தீபாவளி வாழ்த்துக்கள்...
//அடுத்த வருடம் என் கதை என்னவாகுமோ...//
அடுத்த வருடமும் சுத்தலாம், கார்த்திக் கவலைப்படாதீங்க...
(என்ன.. ஒரு சேஞ்சுக்கு சுத்தற இடம் வேறையா இருக்கும்)
mm..retelecast maari erukea..:-)
happy diwali in advance!
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
//நையாண்டி நைனா said...
வேண்டாம் நான் ஒன்னும் பண்ணலை இந்த பதிவை...//
சங்கடப்படாம பதிவப் போடுங்க நண்பா.. உங்களோட திருச்சி அனுபவத்த கேக்க ஆசையா இருக்கு.
ஆமாங்க மைக்கேல்ஸ் ஜஸ்கிரீம் கடைமுன் நடந்த சம்பவத்தை எழுதுங்கள் நீங்க வாங்கியதை அவர் வாங்காமல் தப்பிக்க வசதியாக இருக்கும் நைனா.
//கட்டபொம்மன் சிலை அருகே போய் நின்றாலே போதும். நாம் நடந்தெல்லாம் போக வேண்டாம். அங்கிருக்கும் மக்கள் கூட்டம் நம்மைத் தானாகவே நகர்த்தத் தொடங்கி விடும்.//
மறக்கவே முடியாத நாட்கள் தல அது.
தீபாவளி வாழ்த்துக்கள்.
ரொம்ப அருமை!!! நாங்கெல்லாம் மாசி வீதி, விளக்குத்தூண் ஏரியால சில வருசங்களுக்கு முன்னாடி சுத்திக்கிட்டு இருந்தோம்....
///குளித்து விட்டு வந்தால் சுட சுட இட்டிலியும் கறிக்குழம்பும் ரெடியாக இருக்கும்.// ;;))
தீபாவளி வாழ்த்துகள்.
அருமை பாஸ்.. தீபாவளி வாழ்த்துக்கள்... :)
எனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லை!
தீபாவளின்னாலே எனக்கு அலர்ஜி!
காரணம் எனக்கு சவுண்ட் அலர்ஜி!
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் எல்லோரும்.இங்கே கடும் குளிர் தொடங்கியாச்சு.நேற்றுத்தான் அறிந்தேன் நாளை தீபாவளியாம் என்று.இனிய மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அருமையான இடுகை - அடுத்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட நல்வாழ்த்த்துகள் -அனைத்து நன்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
தீபாவளி பற்ரிய பதிவு :
http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.html
//வீட்டாரோடு கழிக்கும் சந்தோஷமான பொழுதுகள், நண்பர்களோடு கொண்டாட்டம் என எப்பவுமே "தீபாவளி தீபாவளிதான்". நண்பர்கள், சகோதர சகோதரிகள் , இணைய வாசகர்கள் - அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீப ஒளி பெருகி எல்லோரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!!..
இனிய தீபாவளி வாழ்த்துகள் நண்பா
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மதுரை தீபாவளி!
வயசு பசங்களோட டிபிக்கல் தீபாவளி மதுரைல!
வணக்கம், உங்களின் இந்த பதிவு பதினாறு வருடங்களுக்கு முன்பு உங்களைபோலவே விடிய விடிய சுற்றிய நாட்களை மீண்டும் நினைவூட்டுகிறது. (வெங்காய வெடி எறிந்ததையும்!). தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
மதுரை தீபாவளி பத்தி கேட்டப்ப சொல்லியிருக்கலாமே? பதிவே எழுதிட்டேன்னு.. கலக்கல்ஸ்.. :)
தீபாவளி வாழ்த்துக்கள்! :)
நல்ல அனுபவம்..தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
விடிய விடிய சுற்றி விட்டு பேருந்து கிடைக்காமல், நண்பர்களின் இரு சக்கர வாகனத்தில் அதிகாலை ஊர் சென்றடைந்திருக்கிறேன்.
தீபாவளிக்கு முந்தைய தினம் தான் மதுரைக்கு தீபாவளி!
நல்லா எழுதியிருக்கீங்க பாண்டியன்.
எணபதுகள்ல பத்து ரூபாய்க்கு சட்டை டவுன் ஹால் ரோட்ல வாங்கி இருக்கேன். அப்போ எனக்கு ரேஸ் கோர்ஸ்ல வீடு!
Post a Comment