October 30, 2009

கண்டேன் காதலை - திரைப்பார்வை..!!!


ஹிந்தியில் சக்கை போடு போட்ட"Jab We Met" படத்தின் தமிழ் ரீமேக் தான் "கண்டேன் காதலை". ஆறுமுகம் என்னும் டப்பாப்படத்துக்குப் பிறகு இந்தப் படத்தைத்தான் சின்ன தளபதி(?!) பரத் பெரிதும் நம்பியிருக்கிறார். "ஜெயம்கொண்டான்" என்ற படத்தை இயக்கிய ஆர்.கண்ணனின் இரண்டாவது படம். மோசர்பியர் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்திருக்கிறார்கள்.

வியாபாரத்திலும், காதலிலும் பெற்ற தோல்விகளால் மனம் உடைந்து கிடைக்கிறார் பரத். சாவைத் தேடித் போகும் வழியில் துறுதுறு பெண்ணான தமன்னாவை சந்திக்கிறார். அவர்களுக்குள் இனம் புரியாத ஒரு நட்பு உருவாகிறது. தமன்னாவுடன் தேனியில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போகிறார். அங்கே தமன்னாவுக்கும் அவருடைய மாமனான சந்தானத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஏற்கனவே தமன்னா முன்னாவைக் காதலிப்பதால் பரத்துடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார்.

ஊட்டியில் தமன்னாவை விட்டு சென்னை திரும்பும் பரத் வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையோடு போராடி முன்னேறுகிறார்.ஆனால் தமன்னாவின் வீட்டார் பரத் தான் தமன்னாவை ஏதோ செய்து விட்டதாக அவரை மிரட்டுகிறார்கள். காதலனைத் தேடி ஊட்டிக்குப் போன தமன்னா என்ன ஆனார்? அவருடைய காதல் என்ன ஆனது? கடைசியில் அவர் யாரைக் கைபிடிக்கிறார்? இதுதான் "கண்டேன் காதலை".

இது முழுக்க முழுக்க தமன்னாவுக்கான படம். அழகாக இருக்கிறார். ஹிந்தியில் கரீனா செய்ததை அப்படியே செய்ய முயற்சிக்கிறார். முதல் பாதியில் அடாவடியாகவும், இரண்டாம் பாதியில் அமைதியாகவும் மனதை அள்ளுகிறார். ஆனால் அவருடைய குழந்தைத்தனமான பேச்சு ஒரு சிலருக்கு எரிச்சலைக் கிளப்பக் கூடும். ஷாகிதின் பாத்திரத்துக்கு பரத் அவ்வளவு நன்றாகப் பொருந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஒரு சில இடங்களில் அவர் பேசுவதும் நாடகத்தனமாக இருக்கிறது.

படத்தில் கைதட்டல்களை அள்ளுபவர் தமன்னாவின் மாமனாக வரும் சந்தானம். கிராமத்து மனிதராக பட்டாசு கிளப்புகிறார். சிங்கமுத்துவோடு சேர்ந்து கொண்டு அவர் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி, அழகம்பெருமாள், மனோபாலா, சுதா, முன்னா, ஜீவா என்று ஒரு பெரிய கூட்டமே படத்தில் இருக்கிறது. எல்லோருமே அவரவருடைய பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஹிந்தி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் பெரிதும் துணைபுரிந்தன. ஆனால் இங்கே வித்யாசாகர் சொதப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்தப் பாடல்களுமே இல்லை. "காற்று புதிதாய்", "ஓடோடிப் போறேன்" ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே தேறுகின்றன. பாடல்களிலும், ஊட்டிக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா நன்றாகச் செய்திருக்கிறார். ரேம்போனின் கலை இயக்கம் படத்துக்கான ரிச் லுக்குக்கு பெரிதும் உதவுகிறது.

இம்தியாஸ் அலியின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கண்ணன். தமிழ்ச் சூழலுக்கு இந்தக் கதை சரிவருமா எனத் தெரியவில்லை. தமிழுக்குத் தேவையான மாற்றங்கள் செய்வதிலும், நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவதிலும் இயக்குனர் காட்டிய கவனத்தை கொஞ்சம் திரைக்கதையை விறுவிறுப்பாக்குவதில் காட்டி இருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும். இரண்டாம் பாதி ரொம்பவே நீளம். போதாக்குறைக்கு அடிக்கடி வரும் பாட்டுகள் வேறு படத்தின் வேகத்தை குறைக்கின்றன. என்றாலும் எந்த விதமான இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமோ இல்லாமல் ஒரு நீட்டான காதல கதையை படமாக்கி இருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

கண்டேன் காதலை - கண்ணியம்

29 comments:

அத்திரி said...

புரொபசர் இன்னைக்கு காலேஜுக்கு போகலியா?????????

கார்த்திகைப் பாண்டியன் said...

@அத்திரி

தேவர் ஜெயந்திக்காக காலேஜ் லீவுண்ணே..:-)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வலையுலகத்துக்கு இன்னுமொரு வேலைவெட்டியில்லா வாலிபர் கிடைச்சுட்டாரு..!

பர்ஸ்ட் ஷோவே பார்த்துட்டு எம்புட்டு பொறுப்பா பதிவு போட்டிருக்காரு பாருங்க..

கார்த்திகையண்ணே ஒரு சல்யூட்..!

க.பாலாசி said...

விமர்சன பார்வை நன்று....

தீப்பெட்டி said...

பொறுப்பான விமர்சனம்..

ஹேமா said...

கார்த்திக்,படம் நல்லாயிருக்கோ இல்லையோ விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுது.

பிரபாகர் said...

விமர்சித்த விதம் மிக அருமை. பார்க்கலாம் போலிருக்கு...

பிரபாகர்.

நேசன்..., said...

மதுரக்காரேங்குறத கர்ரெக்ட்டாக் காட்டுறீங்க பாஸு!....கலக்குங்க!.....இந்தப் படத்தை ஆர்யாவோ இல்ல ப்ரசன்னாவோ பண்ணீருக்கணும்!.....

மண்குதிரை said...

jab we met paththirukkiren

athoda remake thaana ithu. parppom.

pakirvukku nanri

செந்தழல் ரவி said...

நல்ல தரமான விமர்சனம்.

நல்ல கதை போலிருக்கிறதே ?

கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன். ஜப் வி மெட்.

நகைச்சுவை காட்சிகளை டிவியில் பார்த்துக்கொள்கிறேன்.

சின்னத்தளபதி என்று கலாய்த்தது அருமை.

ஓட்டுகளை போட்டுட்டேன்.

பீர் | Peer said...

இவ்வளவு பொறுப்பா இருக்கீங்களே கார்த்திக்.

டம்பி மேவீ said...

"ஹேமா said...
கார்த்திக்,படம் நல்லாயிருக்கோ இல்லையோ விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுது."


repeatu........

arumaiyana review boss

வால்பையன் said...

காலையிலதான் இந்த படத்துக்கு போனதா கேள்விப்பட்டேன்!

இவ்வளவு அவசரமா இந்த விமர்சனம் எழுதலைனா சன் டீவீ உங்களை கோவிச்சுகுமா!?

வால்பையன் said...

//வலையுலகத்துக்கு இன்னுமொரு வேலைவெட்டியில்லா வாலிபர் கிடைச்சுட்டாரு..!//

இதுக்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!?

வானம்பாடிகள் said...

/ஊட்டிக்குப் போன தமன்னா என்ன ஆனார்? அவருடைய காதல் என்ன ஆனது? கடைசியில் அவர் யாரைக் கைபிடிக்கிறார்? /

இவ்வளவு சொன்னவங்களுக்கு இது சொல்ல என்ன கஷ்டம். சொல்லியிருந்தா நாங்களும் கண்டிருப்போம்ல காதலை.:))

செல்வேந்திரன் said...

ஒரிஜினல் வெர்ஷன் பார்க்காதவர்களுக்கு பிடிக்குமோ என்னவோ...

வெண்ணிற இரவுகள்....! said...

அற்புதமான திரை விமர்சனம்

kanavugalkalam said...

என்ன தான் படத்தை பத்தி நல்ல சொன்னாலும்
"sun picturs" படத்துக்கு நான் போக மாட்டேன்.

Kiruthikan Kumarasamy said...

/////ஊட்டிக்குப் போன தமன்னா என்ன ஆனார்? அவருடைய காதல் என்ன ஆனது? கடைசியில் அவர் யாரைக் கைபிடிக்கிறார்? /

இவ்வளவு சொன்னவங்களுக்கு இது சொல்ல என்ன கஷ்டம். சொல்லியிருந்தா நாங்களும் கண்டிருப்போம்ல காதலை.:))////

ரிப்பீட்டு... (நன்றி பாலா)

ஜெட்லி said...

நான் ஹிந்தியில் பார்த்து வீட்டேன் அதனால்
தமிழ்லில் பார்க்க மாட்டேன்......
சின்ன தளபதி என்று பெயரை பார்த்தாலே
வாந்தி வருகிறது.......
ஆனா சந்தானம் தான் என்னை யோசிக்க
வைக்கிறார்....

பிரியமுடன்...வசந்த் said...

தேனின்னு இருக்குற மைல் கல் மதுரைல இருக்குறதுதான தல..

Cable Sankar said...

/வலையுலகத்துக்கு இன்னுமொரு வேலைவெட்டியில்லா வாலிபர் கிடைச்சுட்டாரு..!
//

வந்திட்டாருய்யா ஆபீசரு..!!!!!

addboxdinesh said...

தமிழ் சினிமாவின் நீட்டான இயக்குனராகிட்டாரோ? கண்ணன்.. 2வது படத்திலும் ஆபாசமேயில்லை..விமர்சனம் நன்று

pappu said...

வாத்தியார் விமர்சகர் ஆகிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீராம். said...

பரத்'தைப் பொறுத்துக் கொள்ள தைரியம் இல்லை...படம் பார்க்கும் எண்ணம் இல்லை!

Karthik said...

ரைட்டுங்ணா.. :)

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல உங்களின் விமர்சனம்....

Karthik Lollu said...

Thala.. Ennapaa oru padathaiyum vidradillaiya?? Class collegeleya illa theaterleya?? Sandegama irukke!!

Karthik Lollu said...

Sambaadikira mothamum cinemakke thanduduveengala??