January 9, 2010

குழப்பக் கவிதைகள் - 2



நான்
நானாக
இருக்கும்
என்னை
உங்களுக்கு
பிடிக்காமல்
போகிறது


உங்களுக்குப்
பிடித்திருக்கும்
என்னை
என்னால்
அங்கீகரிக்க
முடிவதில்லை


யாரென
அறிந்திராத
உங்களுக்கான நான்
அல்லது
எனக்கான நான்


விடைகளைத் தேடி


முடிவில்லா
மாயவெளியில்
சுழன்று
திரிகிறது
நான்...!!!



குறிப்பு 1 : அன்பின் நண்பர்களே.. கல்லூரிப் பணி காரணமாக கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலியில் தங்கி இருப்பதால் அடிக்கடி வலைப்பக்கம் வர முடிவதில்லை.. ஆளை எங்கே காணோம் என்று போன் செய்து விசாரித்த நண்பர்களுக்கும், விசாரிக்க நினைத்து போன் செய்யாமல் போன நண்பர்களுக்கும் நன்றி.. அப்பாடா ஒரு வாரம் நிம்மதியா இருந்தோம்னு நினைக்கிற மக்களுக்கு.. அடியே.. கூடிய சீக்கிரம் திரும்பி வருவோம்ல..:-))))))

குறிப்பு 2:நெல்லையில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள விரும்பினால்.. 98421 71138..

21 comments:

vasu balaji said...

வாத்தியே விடைய தேடுறாராம்ல. :)).

நல்லாவே குழப்பி இருக்கீங்க. நல்லா இருக்கு.

லோகு said...

நீங்கள்
நீங்களாக
இருந்தால் தான்
நீங்கள்.

நீங்கள்
நீங்கலாக
நீங்கள்
இருப்பதை
நாங்கள்
விரும்பவில்லை..

யாரென
தெரிந்திறாத
நீங்கள் தான்
நாங்கள் விரும்பும்
நீங்கள்

நீங்கள்
நீங்களாகவே
இருங்கள்

நாங்கள்
உங்களை
நீங்காமல்
இருப்போம்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல குழப்பம்...

நீங்க வரவில்லை என்னறாலும் நாங்க விடமாட்டமில்ல..

Karthik said...

என்னங்ணா அசல் வர நேரத்தில் பிஸிங்கிறீங்க? எப்படி ஜமாய்க்கிறது? :)

கவிதையை சத்தியமா படிச்சேன். நல்லா இருக்கு. :)

Balakumar Vijayaraman said...

"என்னை நினைக்கும் போதெல்லாம், என்னில் உங்களுக்குப் பிடித்ததை மட்டும் நினைக்கிறீர்கள். நான் நானாக வெளிப்படும் போது, நான் மாறி விட்டதாய் சொல்கிறீர்கள்"

சரி தானே :)

//விசாரிக்க நினைத்து போன் செய்யாமல் போன நண்பர்களுக்கும் நன்றி.. //

நானும்.

Prabhu said...

கிருஷ்ணமூர்த்தி மாதிரி கெளம்பிட்டீங்க!

சங்கர் said...

தலைவரே, இந்தக் குழப்பம், எங்க ஊருக்குப் போனதினால இல்லையே :))

சங்கர் said...
This comment has been removed by the author.
பீர் | Peer said...

ஓ.. நீங்கதானா நெல்லை..ல???

Anonymous said...

counting levela குழப்பமா? என்ன ஆச்சி பாண்டியன்?

S.A. நவாஸுதீன் said...

சரி சரி. ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்.

ஆரூரன் விசுவநாதன் said...

முகமூடிகளோடு வாழப் பழகிவிட்டதால், சுயம் செத்துப் போனது நண்பரே.....

தேடிக்கொண்டே இருக்கின்றோம், நமக்கான நல்ல ஒரு முகமூடியை....

வேடதாரிகளோடு வாழும்போது, ஆளுக்கொரு முகமூடி அவசியமாகிறது...


அன்புடன்
ஆரூரன்

மணிஜி said...

நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்

மாதேவி said...

குழப்பலுடன் நல்ல கவிதை.

அத்திரி said...

//உங்களுக்குப்
பிடித்திருக்கும்
என்னை
என்னால்
அங்கீகரிக்க
முடிவதில்லை //

எங்க ஊர்ல போய் உங்களுக்கு என்ன குழப்பம் புரொபசர்?

தருமி said...

உங்கள் பதிவின் பக்கவாட்டில் ..
//..என்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..//அப்டின்னு போட்டுருக்கீங்க.

ஓ! இப்படி ஒண்ணா? அப்ப நாங்கல்லாம் நல்ல உள்ளங்கள் இல்லீங்களா???

குமரை நிலாவன் said...

நீங்கள்
நீங்களாகவே
இருங்கள்

நாங்கள்
உங்களை
நீங்காமல்
இருப்போம்


REPEATTUU

வால்பையன் said...

எனக்காக எழுதியதா!?

PNA Prasanna said...

http://pnapenglish.blogspot.com

PNA Prasanna said...

நல்ல பதிவு

நசரேயன் said...

வெயில் அதிகமாகிப் போச்சி